Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Thursday, June 11, 2015

‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையும்’ - இயக்குநர் மணிகண்டன் பேட்டி

கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காக்கா முட்டை’ தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ‘இவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக்கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டுத் தயாரிப்பில் விரைவில் தமிழகத்திலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து...
திரைப்பட விழாக்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கினீர்களா?
பொழுதுபோக்குக்காக மட்டும் பாடல்கள் வச்சுட்டு டான்ஸ் பண்ற படங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது. தமிழ் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கினேன்.
பாடல்கள், நடனம் பிடிக்காது என்று சொல்ல என்ன காரணம்?
பாடல் இருந்தால்தான் படம் பார்ப்போம் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறது இல்ல. அவங்களுக்கு பாட்டுல கதைய நகத்திட்டுப்போனா ரொம்பப் பிடிக்கும்.
சில கதைகளுக்குப் பாடல்களே மைனஸாக இருக்கும். கதையோட ஓட்டத்தைத் தடுக்கும். பாடல்களே தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ‘காக்கா முட்டை’யில்கூட 4 பாடல்கள் இருக்கிறது. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். நல்ல ஒரு கதையில், பாடல்கள் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த மாதிரிப் படங்களில் ரொம்ப அப்பட்டமாவே தப்பா தெரியும்.
வெற்றி மாறன், தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது எப்படி?
என்னுடைய ‘விண்ட் (WIND), என்ற குறும்படத்தை ஒரு படவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டார். நான் எழுதி வைச்சுருந்த ‘காக்கா முட்டை’ கதையைச் சொன்னேன். வெற்றி மாறன் கதையைக் கேட்ட உடனே, ஓ.கே. பண்ணிட்டார். தனுஷும் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு உடனே ஓ.கே. சொல்ல உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்துல சிம்பு நடிச்சிருக்காராமே?
ஆமா! அவர் நடிகர் சிம்புவாகவே இரண்டு காட்சிகளில் வருவார். நான் முதலில் கதையை எழுதும்போதே, இந்த கேரக்டர் சிம்புதான் என்று எழுதிவைத்தேன். வெற்றி மாறன் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்றவுடன், வெற்றி சாரிடம் கேட்டேன். ‘சிம்புனு எழுதி வைத்திருக்கேனே சார்’னு சொன்னேன்.
தனுஷ் படிச்சுப் பார்த்துட்டு, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்ல. நானே சிம்புகிட்ட பேசுறேன்னு அவரே போன் பண்ணிப் பேசினார். தனுஷ் பேசிய அடுத்த நிமிடமே, ‘நான் பண்றேன்’னு சிம்புவும் சொல்லிட்டார். அரை நாளில் சிம்புவை வைத்துப் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.
கமர்ஷியல், காமெடி, யதார்த்தம் - இதில் உங்க ஏரியா எது?
எதற்குள்ளும் நான் என்னை பிக்ஸ் பண்ணிக்க விரும்பல. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்.
தரமான படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட விழாக்கள் மூலம் வருவாய் உண்டா?
இங்கு இருக்கிற மார்க்கெட்டைவிட, திரைப்பட விழா மார்க்கெட் என்பது பெரிது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று யோசிப்பார்கள். அதை நாம் திரும்ப எடுத்துக் கொடுக்கணும். தயாரிப்பாளருக்குத் திரைப்பட விழாக்கள் மூலமாகவே போட்ட பணம் வருகிறது என்றால் அவங்க நம்மகிட்ட எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் பண்ற ரெண்டு படங்களிலுமே மினிமம் கியாரண்டி இருக்கிறது. திரைப்பட விழாக்களில் இருக்கும் மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு படம் எடுத்தால், இன்னும் நிறைய உலக சினிமாக்களைத் தமிழில் உருவாக்கலாம்.
உங்களது அடுத்த படம்?
படத்துக்கு ‘குற்றமும் தண்டனையும்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறேன். இதே தலைப்பில் ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது. அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விதார்த் நாயகன், நாடக நடிகை பூஜா நாயகி. முக்கியமான பாத்திரங்களில் நாசர், குரு சோமசுந்தரம் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை. பின்னணி இசை மட்டும்தான். பாடல்கள் கிடையாது.



நன்றி -த இந்து

Sunday, June 07, 2015

அதிரி புதிரி ஹிட் ஆன காக்கா முட்டை' உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்!

காசி தியேட்டர் - இது 'தரை லோக்கல்' நோக்கர்கள் ஆதிக்கம் உள்ள திரையரங்கம் என்பது சென்னையை அறிந்த சினிமா ஆர்வலர்களுக்கு தெளிவாகத் தெரியும். அதுவும், இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சி என்பது 'மாஸ் மசாலா' படங்களுக்கான ரகளையான கொண்டாட்டங்களுக்கு உரியது என்பது மிகவும் தெளிவு.
இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சியில் 'காக்கா முட்டை' படத்தை ரசித்தபோது கிடைத்த அனுபவம், தமிழ் சினிமாவின் 'சாதாரண ரசிகர்கள்' என்று அசாதாரண கலை ஆர்வலர்கள், முக்கிய படைப்பாளிகள் சிலர் சொல்லி வரும் பல 'மித்'துகளைக் கொத்துபரோட்டா போட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு முதல் நாள் காட்சிகளில் கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் 'காக்கா முட்டை'க்கு கிடைத்தது வியப்பை அளித்தது.
பல்வேறு முக்கிய விருதுகளைக் குவித்துவிட்டாலோ, முக்கியப் பட விழாக்காளில் பங்கேற்றுவிட்டாலோ 'இது கலைப் படைப்பு. சாதாரண ரசிகர்களுக்கு பார்க்கப் பொறுமை இருக்காது. சில தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டுமே போதும்' என்றெல்லாம் சினிமா துறையைச் சேர்ந்தவர்களே கருதுவது உண்டு. எல்லா சினிமாவும் கலைப் படைப்புகள்தானே? யார் இப்படி மோசமாகக் கொளுத்திப் போட்டது என்றுதான் இதுவரையிலும் தெரியவில்லை.
இப்படி குருட்டாம்போக்கில் கொளுத்திப் போடுவதன் விளைவுதான், நம் சமூகத்தில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை சினிமா மொழியில் பதிவு செய்யும் நல்ல படைப்புகள், தியேட்டரில் சாதாரண மக்களுக்குக் காணக் கிடைக்காமல் போவதற்கு வழிகுக்கிறது.
சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் சில படைப்புகள் சில நேரங்களில் சினிமா ரசிகர்கள் பலரைக் கவராததும் சாதாரண விஷயம்தான். அத்தகைய படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா மொழியோ, உத்திகளோ ரசிகர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லுவது சுத்த மூடநம்பிக்கை என்பதையே 'காக்கா முட்டை' நிரூபித்திருக்கிறது.
இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகளையும், வசனங்களையும் துல்லியமாக உள்வாங்கி ரசிக்கத்தக்கவர்கள்தான் சில ஜீனியஸ்கள் சொல்லும் சாதாரண ரசிகர்கள் என்பதை காக்கா முட்டையின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு காட்டிக் கொடுத்தது. ரகளையான நகைச்சுவை தருணங்களை ரவுண்டு கட்டி களேபரம் செய்த அதே ரசிகர்கள், நெஞ்சுக்கு பாரத்தைக் கடத்தும் தருணங்களில் பின்-ட்ராப் சைலன்ட் காட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.
இதுபோன்ற சினிமாவைத் தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் லாபம் ஈட்டும் கலைஞர்கள், தங்கள் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதுணைபுரிவது கடமை. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். காக்கா முட்டை முயற்சிக்காக இவர்களைப் பாராட்டினால், கல்லா கட்ட மட்டுமே தமிழ் சினிமாவைப் பயன்படுத்தும் பலரைக் கழுவியூற்ற வேண்டிய சூழல் எழும் என்பதால் இதோடு இந்த மேட்டரை நிறுத்திக்கொள்கிறேன். இந்த இடத்தில், தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அளித்த பங்களிப்பையும் பாராட்டச் சொல்கிறது மனம்.
காக்கா முட்டையில் தனுஷ் - வெற்றிமாறனின் பங்களிப்பில் பாராட்டுக்குரியது என்றால், இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் உத்திகளையும் சொல்லலாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரம்மாண்ட செலவு செய்வது போன்ற நடவடிக்கை மூலம் பிரபலப்படுத்தி, கடைசியில் ரசிகர்களைப் படுத்துவதற்கு பதிலாக, முழுமையாகத் தயாரான நல்ல படைப்புகளைப் பிரபலப்படுத்த மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளும் வரவேற்கத்தக்கதே. இவ்விருவர் வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்றும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மணிகண்டன்கள் பலரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
மிக முக்கியமாகச் சொல்லியே தீர வேண்டிய ஒன்று... தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கச்சிதமாக ஆக்‌ஷன் செய்வதை பெரிய காக்கா முட்டையையும், ரியாக்‌ஷன் செய்வதை சின்ன காக்கா முட்டையையும் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் என்றே கருதவைத்தது இரண்டு சிறுவர்களின் நடிப்பாற்றல்.
உலக அளவில் மிகப் பெரிய அளவில் லாபமும் புகழும் ஈட்டும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால், அதில் சிறுவர்களுக்கு எழுதுவோர் - படைப்பவர்கள் தான் அதிகம் இடம்பெறுவர். ஆனால், இங்கே தமிழ் இலக்கியச் சூழலில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், சிறுவர் இலக்கியத்தின் மீது ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடும். அப்படி எழுத முற்படுபவர்களை, குழந்தைத்தனமாக பார்க்கும் சக இலக்கியவாதிகளின் பார்வையால் சிறார் இலக்கியம் மீதான ஈடுபாடே எவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.
இதே நிலைதான் தமிழ் சினிமாவிலும். சிறார் சினிமாவைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கான - சிறார் ரசனை உள்ளவர்களுக்கான சினிமா, பெரியவர்களுக்கான - 18 வயதுக்குட்பட்ட மனமுதிர்ச்சி மிக்க சிறுவர்களுக்கான சினிமா, இந்த இரண்டு தரப்பின் தேவையையும் பூர்த்தி செய்யும் சினிமா என மூன்று வகையாக பிரிக்கலாம். காக்கா முட்டை மூன்றாம் ரகம். பெரியவர்களுக்கான சிறார் சினிமா மட்டுமல்ல - சிறுவர்களுக்கான ப்யூர் சினிமாவும்கூட.
மாஸ், மசாலா, காதல், கலாய்ப்பு, அதிரடி சினிமா கூடாது என்பதெல்லாம் இல்லை. சினிமா எந்த வடிவத்திலும் வரலாம். ஆனால், இந்த மாதிரியான ஓவர் சீன் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு படைப்பாளியைச் சுற்றியிருக்கும் கதைகளையும் வாழ்க்கையையும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுவாரசிய சினிமா விருந்தாக அமையக் கூடிய படங்களும் வரவேண்டும் என்பதே விருப்பம்.
மக்களின் ரசனையைக் குறைசொல்லிக் கொண்டே குத்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடுவது இனியும் நீடிக்காது என்பதையே காக்கா முட்டைக்கு நிறையும் அரங்குகள் சொல்லும் சேதி.
மிகச் சிறந்த நகைச்சுவைகள், மனதைத் தைக்கும் நெகிழ்ச்சிகள் என திரையில் எவை வந்தாலும், இழவு வீட்டில் அழாமல் உம்மென்றிருப்பது போன்ற மனநிலையுடன் மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் சோ-கால்டு ஏ சென்டர் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கத் தெரிகிறதா என்பதே இப்போது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
வெற்று கலாய்ப்புகளுக்குக் கூச்சலிடுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட ரசிகர்கள், இந்தியப் பொருளாதார நிலை, ஏழ்மையின் வலி, பிழைப்பு அரசியல், வருவாய் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் சமூகக் கலாய்ப்பு (Social satire) காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரியாக்ட் செய்தபோது, அவர்கள்தான் உண்மை சினிமாவின் ரசிகர்கள் என்று உணர்ந்தேன்.
காக்கா முட்டை படைப்புக் குழுவின் முயற்சிகளைப் பார்த்தாவது, 'தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டதுதான். அவர்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டு இதுவரையில் மேகி செய்து வயிற்றை நிரப்பிவிட்டோம். இனியாவது நல்லிடியாப்ப விருந்து அளிப்போம்' என்று முக்கியப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தமிழ் சினிமா சமூகமும் உணர வேண்டும்.
எனக்குத் தனிப்பட்ட முறையில், காக்கா முட்டை படத்தின் பல காட்சிகள் தியேட்டரில் சிரிப்பை வரவழைத்தன. அதேகாட்சிகளை வீட்டுக்கு வந்து யோசித்தபோது, அவை தந்த வலிகள் சொல்லி மாளாது. இதற்கு, சின்ன காக்கா முட்டை 'சிட்டி சென்டரை'ப் பார்த்து ரியாக்டும் தருணத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
ம்... நீங்கள் கேட்பது என் காதுகளுக்குக் கேட்கிறது. காக்கா முட்டை படத்தின் கதை என்ன? திரைக்கதை என்ன? வசனங்கள் என்ன? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள். தமிழில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடும் சினிமா விமர்சனத்தைப் படியுங்கள். பெரும்பாலான விமர்சனங்களின் முக்கால்வாசி பகுதியைத்தான் நீங்கள் கேட்கும் விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுங்கின்றனவே!
பின் குறிப்பு: இம்மாதம் 19-ம் தேதி வெளியிடும் 'குற்றம் கடிதல்' என்ற படத்தை, கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்பட விழா ஒன்றில் பார்த்தேன். காக்கா முட்டை ரிலீஸாகி சில தினங்களில் அப்படம் வெளிவருவது, தமிழ் சினிமாவின் புத்தெழுச்சி மீதான வியப்பின் கால அளவை மேலும் கூட்டும் என்பது உறுதி. |
சரா - தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

  • மலையாளத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் மசாலாப் படங்களில் நடித்தாலும் ஆண்டுக்கு ஓரிரு அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் சீரிய படங்களிலும் நடிக்கிறார்கள் சிறிய மார்கெட்டான கேரளாவில் மலையாள சினிமா உயிர்ப்புடன் இருக்க இதுதான் காரணம்.ஆனால் இதுபோல சேவை செய்ய.(தனுஷ், கமல் தவிர்த்த நமது மசாலா மாஸ் நடிகர்கள் கனவில்கூட சிந்திக்க மாட்டார்கள் !அதுதான் இன்றைய இழிநிலைக்குக் காரணம் .பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகள் தயாரிப்பாளர்களே கிடைக்காமல் அவதிப்பட்டதற் கு இந்த உளுத்துப்போன ஸ்டார் சிஸ்டம்தான் காரணம் .காக்காமுட்டை காக்கா பல முட்டை போட வாழ்த்துக்கள்
    Points
    1240
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Kuppusamyn  
      அன்று மிக பெரிய நடிகர்கள் ஒரு படத்தை பார்த்து அசந்து போய் ஆஹாஇது அல்லவோ நல்லசினிமா என்று வியந்தனர் அந்தப்படம் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நல்ல படம் வர ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சி
      Points
      665
      about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • RAMESH  
        நான் ஒப்புக்கொள்கிறேன் . இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்.அதே சமயம் தொப்புள் தெரியும் கதாநாயகிகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே காதல் அரும்புவதை நவரசம் கலந்து காட்டுவதையும் தயவு செய்து நிறுத்த சொல்லுங்கள். ஆசிரியர்களிடையே இன்று பாடம் சொல்லித்தருவதை விட இது போன்ற அறைவேக்கட்டுத்தனமான நிகழ்வுகளினால் சமூக பாதிப்படைய கூடாதே என்ற கவலையே மேலோங்கி உள்ளது. எந்த கதாநாயகன் இன்று டாஸ்மாக் கடையில் இல்லாமல் இருக்கிறான்? அல்லது மது அருந்தாமல் இருக்கிறான்? இது போன்ற காட்சிகள் இல்லாமல் படம் எடுக்க சொல்லுங்கள் நீங்கள் பாராட்டும் அந்த கதாநாயகர்களை. செய்யமாட்டார்கள். ஏன் தெரியுமா? பணம். பத்து படம் சமூகத்தை சீரழிக்கும். கல்லா கட்டுவார்கள். 11 வது படம் இது போன்று தயாரித்து விருது வாங்குவார்கள். இவர்களுக்கு சமூகத்தின் மீதோ நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல. இவர்களின் தாக்கம் மீடியாவில் வர வேண்டும். அவ்வளவே. பின் புலம் இருப்பதால் நினைத்ததை சாதிக்க முடிகிறது. எது எதற்கோ மேல் நாட்டினரை மேற்கோள் காட்டும் நாம் இந்த விசயத்தில் அவர்களை பின் பற்றியே ஆக வேண்டும்
        about 11 hours ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
        vijai · கதிரவன் · Imran · SankarArumugam · Rahamath  Up Voted
        • Jelson  
          படம் இருக்கட்டும் நீங்க சொல்ல. வந்த விஷத்தை எளிமையாசொளிருகலம்
          about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Sudharsan  
            தமிழ் சினிமா கண்டிப்பாக மாறி வருகிறது என்பதற்கு காக்கா முட்டை எடுத்துகாட்டு மிக சிறப்பான ஒரு திரைப்படம் என்ன மணி சார் இப்பிடி பணிடிங்கலே We salute Brother...
            about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • J.Nagasubramanian  
              என்னய்யா பெரிய காக்கா, என்னய்யா பெரிய முட்டை ...ஒரு பஞ்ச் டியலாக் இருக்கா; ஒரு பத்து பேரை ஒத்தக்கையாலே அடிச்சு நொறுக்கறது இருக்கா; ஒரு முத்தம் இருக்கா; காதலன் காதலி எலும்பு நொறுங்கற மாதிரி அணைச்சுகறது இருக்கா; ஒரு காரு சேசிங் இருக்கா; ஒரு ஸ்டென் கன் வெடிக்கறது இருக்கா ; ஒரு பாம் போட்டு பத்து பேரை கொன்னு ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிகிட்டு போறது இருக்கா .....என்னைய்யா இருக்கு.... வெறும் முட்டைதான் இருக்கு ....ஒரு கண்ட்ராவியும் இல்லே....சரி ..சரி ..அப்படியே பேசிக்கிட்டிருங்க ... நான் அந்த படத்த அதான் காக்கா முட்டைய அஞ்சாவது தடவை பாத்துட்டு வந்துர்றேன் ...படத்த போட்டுருவான் ...நேரமாகுது டைட்டில்லேந்து பாக்கணும்...வரேன்
              Points
              550
              about 16 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
              ?????? · siva · கதிரவன் · Imran  Up Voted
              • Shanmugam  
                சின்ன காக்கா முட்டையின் நடிப்பை பாராட்ட வார்த்தை போதவில்லை . இந்தப்படத்தை எப்படி நம்பிக்கையுடன் தயாரித்து வெற்றியடைந்தார்கள் என்பதுதான் கேள்வி.

              Monday, February 16, 2015

              அனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா? - த இந்து விமர்சனம்

              வீடியோ விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் மதுவுக்கு (அமைரா தஸ்தூர்) முந்தைய ஜென்மங்களின் நினைவுகள் அடிக்கடி கிளர்ந்தெழுகின்றன. புதிதாக வேலைக்குச் சேரும் அஸ்வினை (தனுஷ்) பார்த்ததும் மதுவுக்கு முன் ஜென்மத்துக் காதலன் நினைவுக்கு வருகிறான். முந்தைய ஜென்மங்களில் அவர்கள் காதலுக்கு என்ன நடந்தது, இந்த ஜென்மத்தில் என்ன நடக்கிறது, முன் ஜென்மத்தின் தொடர்ச்சி இப்போது எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் அனேகன்.
              முதல் காதல் 60-களில் பர்மா, இரண்டாம் காதல் 80-களில் சென்னை வியாசர்பாடி, மூன்றாம் காதல் தற்காலத்தில் சென்னை. முதலாவதுக்கும் இரண்டாவதுக் கும் முன்னும் பின்னுமாக நிகழ் காலம் காட்டப்படுகிறது. இடை யிடையே கார்ப்பரேட் நிறுவன மர்மங்களும் தலைகாட்டுகின்றன. பர்மாவின் காட்சிகளும் அதற்குப் பின் வரும் நடப்புக் காட்சிகளும் விறுவிறுப்பாக உள்ளன. இடை வேளைக்குப் பின் வரும் வியாசர் பாடி காதல், ரசிகர்களைத் துள்ளிக் குதிக்கவைக்கும் அளவுக்கு மாஸ்.
              வியாசர்பாடி காதல் வெளிப் படும்வரை விறுவிறுப்பாகப் போகும் படம் அதன் பிறகு யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் தடுமாறுகிறது. மறுஜென்மக் கதைக்குள் நடப்புலக நிகழ்வை மர்மக் கதைபோலச் சேர்த்துக்கொண்டு வருவது நல்ல யோசனைதான். ஆனால் அதைக் கையாண்ட விதத்தில் அழுத்தம் இல்லாததால் இதுவே பலவீனமாக மாறுகிறது. ஒரு வழியாக முடிவை நோக்கி வரும்போது நீண்ட வசனங்கள் குறுக்கிட்டு ஆயாசமூட்டுகின்றன.
              திரைக்கதை முடிச்சுகள் பார்வை யாளர்களை உற்சாகப்படுத்து கின்றன. காதலர்கள் திரும்பத் திரும்ப பிறந்து வருவதைப் போலவே பிறரும் திரும்பப் பிறந்து வந்தார்களா இல்லையா என்பதைக் கையாண்ட விதம் ஆர்வமூட்டும் விதத்தில் உள்ளது. யாரெல்லாம் நாயகியைத் திரும்ப அடையாளம் கண்டுகொண்டார்கள், வில்லனால் நாயகியை அடையாளம் காண முடிந்ததா என்பதைப் புதிய வண்ணத்தில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள். வில்லனை யூகிக்க முடியாதபடி நகர்த்திச் சென்றதும் பாராட்டத்தக்கது.
              வெவ்வேறு ஜென்மங்களில் விரி யும் கதையில் கதாபாத்திரங்களும் காலகட்டங்களும் சித்தரிக்கப்பட் டுள்ள விதம் புத்துணர்ச்சி தருகிறது. பர்மா காட்சிகள் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் முடிந்தாலும் அதில் வரும் காதல் ரசனையுடன் காட்டப் படுகிறது. வியாசர்பாடி காட்சிகளில் தனுஷை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
              தனுஷுக்குள் இருக்கும் நடிகனையும் நட்சத்திரத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் இன்னொரு படம் இது. வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு பேச்சு, வெவ்வேறு உடல் மொழி என்று தனுஷ் கலக்கியிருக்கிறார். வியாசர் பாடி காளியாக அவர் அறிமுகமாகும் காட்சியில் விசில், கைத்தட்டல் சத்தங்கள் அடங்க வெகு நேரமாகிறது. காதலில் உருகுவதிலும் நெஞ்சை அள்ளுகிறார். கடைசிக் காட்சியில் கார்த்திக்கின் பாணியிலேயே அவரைக் கலாய்ப்பது ரசிக்கும்படி உள்ளது.
              படத்துக்கு ‘அனேகி’ என்று வைத் திருக்கலாம். அந்த அளவுக்கு அமைரா தஸ்தூர் தன் பாத்திரங் களை நன்கு கையாண்டிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அமைரா காட்டியிருக்கும் வேறுபாடு ஆச்சரியமூட்டுகிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் குறைந்துவரும் நிலையில் அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட அமைராவுக்கு வலுவான வேடம் கொடுத்துள்ள ஆனந்தைப் பாராட்ட வேண்டும்.
              கார்த்திக்குக்கு இதைவிட அழுத்தமான மறு பிரவேசம் அமையுமா என்பது சந்தேகம்தான். மென்மையும் வன்மமும் கொண்ட கலவையை அவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம்.
              வெவ்வேறு இடங்கள், மாறுபட்ட காலகட்டங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பதில் ஒளிப்பதி வாளர் ஓம் பிரகாஷின் பங்களிப்பு அற்புதம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘டங்கா மாரி’க்குத் திரை யரங்கமே கூத்தாடுகிறது. மற்ற பாடல்கள் அந்த அளவுக்குக் கவர வில்லை. பின்னணி இசை பொருத் தம். ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குநர் கிரணின் பங்களிப்பும் படத்துக்குப் பெரும் பலம். குறிப்பாக வியாசர்பாடி சார்ந்த காட்சிகள்.
              மறு ஜென்மத்தின் தொடர்ச்சி யாய் இந்த ஜென்மத்தின் சிக்கல் கள் என்பதே விறுவிறுப்பான திரைக் கதைக்கான பொருத்தமான களம் தான். இதைக் கவனமாக வளர்த் தெடுக்கும் இயக்குநர் நடப்பு கால கட்டத்துக்கான மர்மங்களை ஏன் சேர்க்கிறார் என்று புரியவில்லை. இந்தப் பகுதி நேர்த்தியாகவும் சொல்லப்படவில்லை என்பதால் மதிப்பைக் கூட்டுவதற்குப் பதில் குறைக்கிறது. அகலக் கால் வைக் காமல், எடுத்துக்கொண்ட கதையை வலிமைப்படுத்துவதில் ஆனந்த் கவனம் செலுத்தலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த விமர்சனத் தைச் சேர்க்க முனையும் ஆனந்த் அதை மட்டையடியாகச் சொல்வ தும் நியாயமாகப் படவில்லை.
              கதைக் களம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தமிழ் சினிமா கதாநாயகன் அசாதாரணமான சாகஸங்களைச் செய்வதில் சளைக்காதவன் என்ற செல்லரித்த கோலிவுட் கோட்பாட்டுக்கு இந்தப் படமும் விதிவிலக்கு அல்ல. தனுஷ் தனது எல்லா ஜென்மங்களிலுமே சாகஸக்காரராக இருக்கிறார். ஒரு ஜென்மத்திலாவது ஹீரோயிசத்தின் சுமையைக் குறைத்திருக்கலாம்.

              நன்றி - த இந்து 

              Friday, February 13, 2015

              அனேகன் - சினிமா விமர்சனம்




              கே வி ஆனந்த்  சாரை 1990 களில்   சூப்பர்  நாவல்  எனும்  பத்திரிக்கையில்  அட்டைப்பட  புகைப்படக்காரராக  இருந்த  காலத்தில்  இருந்தே  எனக்குத்தெரியும் ( அவருக்கு  என்னைத்தெரியாது). கதிரின்  காதல்  தேசம் , ஷங்கரின் சிவாஜி உட்பட 15    படங்களில்  ஒளிப்பதிவாளராக  பணியாற்றி  பின் தேன்மாவின்  கொம்பத்து  எனும்  மலையாளப்படத்தில்  ஒளிப்பதிவாளருக்கான  தேசிய  விருது   பெற்றபோது அகமகிழ்ந்தேன் ( 2005).


              15  வருடங்கள்  தேவைப்பட்டிருக்கு  ஒரு  திறமைசாலிக்கான  அங்கீகாரம்  கிடைக்க . தமிழில்  அவர்  இயக்கிய  முதல்  படமான  கனா கண்டேன்  பிரமாதமான  திரைக்கதை. பிரித்விராஜ்  வில்லனிக்  நடிப்பில்  படம்  செம  ஹிட் ( 2005).பின்  ஏனோ  4  வருடங்கள்  தாமதமாக  அடுத்த  படம்  சூர்யா  வின்  அயன். (2009)இது கமர்ஷியல்  சக்சஸ்  என்றாலும்   முதல்  பட  அளவு  புதுமை  இல்லை

              ஆனால்  3 வது  படமான  கோ  ( 2011)  மாபெரும்  ஹிட்.ஆனால்  அடுத்து  வந்த  மாற்றான்  சுமார்  ரகப்படம் .இவர் இதுவரை  இயக்கிய 4  படங்களில்  எதுவும் அட்டர் ஃபிளாப்  ஆகவில்லை  என்பது  சிறப்பம்சம். இது  இவரது  5 வது  படம்  .நாசரின்  தேவதை    டைப்  முன்  ஜென்மக்காதல்  கதை.இது எந்த  அளவு  ஒர்க் அவுட் ஆகி  இருக்குன்னு பார்ப்போம்.


              படத்தோட   கதைக்குள்ளே  போகும்  முன்  கதையின்  அவுட்  லைனை  எப்டி  சொல்லி  இருக்காங்கன்னு  சொல்லிடறேன்.இந்தப்பட  திரைக்கதை யில்  வரும்  முக்கியக்கேரக்டர் போன  ஜென்மத்தில்  கம்யூனிஸ்ட்  நல்லக்கண்ணு  போல்  நல்லவரா, இந்த  ஜென்மத்தில் கலைஞரா , அடுத்த  ஜென்மத்தில்  அர்விந்த் கேஜ்ரிவாலா , அதுக்கும்  அடுத்த  ஜென்மத்தில்  ஜெ  வா   பிறப்பெடுப்பாங்க. சுருக்கமாச்சொன்னா   ஒரு ஜென்மத்தில்   கெட்டவனா  இருக்கும்  வில்லன்  அடுத்த  ஜென்மத்தில்  நல்லவன் , அதுக்கடுத்த   ஜென்மத்தில்   கெட்டவன்.


              சென்னையில் வாழும்  வெண்ணை  நாயகி.  ஆண் பால் ல  வெண்ணைன்னா  செல்லத்திட்டு  வார்த்தை . அதுவே  பெண்  பால் ல  வெண்ணைன்னா நெகு  நெகுன்னு அர்த்தம் . ஏன்னா தமிழன் பெண் பால் ல  திட்டவே  மாட்டான். 

              நாயகிக்கு  போன  ஜென்ம  நினைவு வருது. பொதுவா  பொண்ணுங்களுக்கு  15  வருசம்  முன்னால  புருசன்  சின்னதா  ஒரு  தப்புப்பண்ணாக்கூட  கரெக்டா  நினைவு  வெச்சுக்குவாங்க .1962ல்  முதல்   காதல்  கதை .வழக்கம்  போல  ஒரு ஆபத்தில்  இருந்து   நாயகியை  நாயகன்  காப்பாத்தறார் (  பொதுவா  பொண்ணுங்கன்னாலே  ஆபத்துதான்.அவங்களுக்கே  ஆபத்துன்னா  பார்த்துட்டு  சும்மா இருக்க  முடியுமா? ) 2  பேருக்கும் லவ்.  நாயகியின்  அப்பா  எதிர்ப்பு . லவ்  ஜோடி  பிரியுது.



              1980 ல அடுத்த  ஜென்மத்துல  ஹீரோயினுக்கு  ஒரு  ட்விஸ்ட். போன  ஜென்மத்துல  அப்பாவா  இருந்தவர்  இந்த  ஜென்மத்துல  மாமா.இதுலயும்   ஹீரோயினை ஹீரோ  காப்பாத்தறார். லவ் வருது. பிரியறாங்க .

              2015  ல   3 வது  ஜென்மம். இவங்க  காதல்  சேர்ந்ததா?  இல்லையா? என்பதே  கதை




              ஹீரோவா  தனுஷ். ரஜினி  ,கமல், அஜித், விஜய் , விக்ரம், சூர்யா வுக்குப்பின்  தமிழ்  சினிமாவின்   மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம்.துள்ளுவதோ  இளமை  ரிலீஸ் ஆன  காலகட்டத்தில்   தமிழின் நெ1  இதழ்  இவர்  எல்லாம்  நடிக்க  வந்துட்டாரா?  என  கிண்டல்  செய்தது. ஆனா  இப்போ  அவர்  கலக்கிட்டு  வர்றார். ஷமிதாப் விருதுப்படம்  எனில்  வேலை  இல்லாப்பட்டதாரிக்குப்பின்  கமர்ஷியல்  ஹிட். பல  கெட்ட்பகளில்  கலக்கறார். ஸ்கூல்  பையனா  நடிச்சாக்கூட   நம்பற அளவு  உடல்  அமைப்பு . டங்கா மாரி  பாட்டு  டான்சில்  அரங்கம்  அதிருது



              வில்லனா  நவரச  நாயகன்  கார்த்திக் . அசால்ட்டான  நடிப்பு


               நாயகியா  அமைரா. 3    ஜென்மங்களிலும்  வித்தியாசம்  காட்டும்  கெட்டப். அழகு  தேவதை , காதல்  தேவதை  நாயகி இஷா  கோபிகர்  முகச்சாயல்.புருவம் , உதடு  எல்லாம்  ரொம்ப  சன்னம் . நடையில்  அன்னம்.  அடிக்கடி   குளிக்கும் நல்ல  மனசு. தமிழில்  ஒரு  ரவுண்ட்  வருவார்


              ஆஷிஷ்  வித்யார்த்தி   கம்பீரமான  நடிப்பு   ஹீரோ  நண்பரா  ஜெகன் .அதிகம்  மொக்கை போடாமல்    காப்பாற்றுகிறார்


              ஹாரீசின்  இசையில்  எல்லாப்பாடல்களும்  ஹிட் , பிஜி எம்மில்   நல்லா  ஸ்கோர் பண்றார்




              மனதைக் கவர்ந்த  வசனங்கள்


              1  ஏன் என் முகத்தைப்பார்த்துப்பேசமாட்டேங்கறே?
              அழகான பொண்ணு முகத்தைப்பார்த்தாலே பிரச்னைதான்.ஆனா உன்னை எத்தனை டைம் வேணா பார்க்கலாம் #,அ

              2 வில்லன் = ஒழுங்கா இல்லைன்னா நீ உங்க வீட்டுக்கு பிள்ளையா இருக்க மாட்டே!
              ஹீரோ = பின்ன உன் வீட்டுக்கு மாப்ளையா வருவனா? # அ

              3 உன் சைஸ் எல்லாம் எப்டி அவளுக்கு கரெக்ட்டா தெரியுது?
              அதான் டெய்லி பார்க்கறாளே?சர்ட் தானே? நோ.ஜட்டி கிfப்ட் #,அ




              4 இந்த பாழாப்போன காதலோட தலை எழுத்து என்ன தெரியுமா? பிரிஞ்சு இருக்கும்போதுதான் அதன் அருமை தெரியும். # அ


              5 ஹீரோ = அய்யோ கண்ணைக்கட்டுதுடா சாமி # குறியீடு





               படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

              1  வித்தியாசமான முன்ஜென்மத்துக்காதல் கதை + த்ரில்லர் மூவி திரைக்கதை எழுதிய kvஆனந்த்+சுபா டீம், 5 கெட்டப்களில் அசத்தி இருக்கும் தனுஷ்-wish

              2 ஓப்பனிங் சீன்ல தோள் ல் பல கட்டைகளை தூக்கிட்டு வர்றார் ஹீரோ.குறியீடு. #,அனேகன்


              3 ஹீரொயின் அமைரா கஸ்தூரி ரொம்ப சுத்த பத்தமான பொண்ணு போல.ஓப்பனிங் சாங் லயே குளிக்குது


              4 மணிரத்னம் ,ஷங்கர் படஙளுக்கு இணையான பாடல் காட்சி படமாக்கம்
              .ஆத்தாடி செம்பருத்தி


              5 ஒவ்வொரு முன் ஜென்மக்கதைக்கு முன்னாடியும் ஹீரோயின் குளிக்குதுஅ.டடே


              6 ஸ்கூல் பாய் ,காலேஜ் பாய் ,லவ் பெய்லியர் என 3,கெட்டப்களில் கலக்க சூர்யா ,தனுஷ் இவர்களால் மட்டுமே முடியும்



              7 பாய்ஸ் படத்துல வரும் பாட்டு மெட்டை ஹாரீஸ் அட்டகாசமா சுட்டுட்டார்

              8 த்ரில்லர் நாவல்களில் கலக்கிய ரைட்டர் சுபா ஒரு பட வசனகர்த்தாவாக பட்டையக்கிளப்பவில்லை. #,ஐ ,அனேகன்


              9 திரைக்கதையில் மகதீரா வாசம் வீசுது


              10 நாயகி அமைரா வின் அழகு ,தனுஷ் ,கார்த்திக் அசால்ட் நடிப்பில் போர் அடிக்காத சைக்கலாஜிக்கல் த்ரில்லர் -இடைவேளை #,அ

              11 டங்கா மாரி  பாட்டு  டான்ஸ் கலக்கல் ஹிட்டு , தனுஷ்  பேய்  ஹிட்  மூவ்மெண்ட் ., திருடா திருடி   மன்மத ராசா போல்





              இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

              1   தமிழில்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  வந்திருக்கும்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  மூவி . , ஒரு  ச முழுக்க சஸ்பென்ஸ்   நாவல்   படிப்பது போல் திரைக்கதை  அமைத்த  விதம்


              2   நாயகியைச்சுற்றியே   கதை  செல்வதால்  நாயகிக்கு காட்சிகள்  நாயகனை  விட அதிகமாக  வைத்த  துணிச்சல்


              3   ஹாரீசின்  இசையில்   பாடலகள்  ஹிட் ஆக்கியது  ஒளிப்பதிவு  , பிஜி எம்  எல்லாம் பக்கா 




              இயக்குநரிடம்  சில கேள்விகள்


              1   ஜெயிலில்   இருந்து   தனுஷ்  தப்பும்  காட்சி  நம்பகத்தன்மை இல்லை. ஜெட்லீ  கணக்கா  பாயறார், முடியல

              2   கதையி  ல்  3  ஜென்மக்கதைகளிலும்  பலரும்  ரிப்பீட்  ஆகறாங்க, ஆனா   ஹீரோயினுக்கு மட்டும்  அது  நினைவுக்கு  வருது  அது  ஏன்? (  சஸ்பென்ஸ்  கருதி சிலதை சொல்ல  முடியலைன்னாலும்  ஹீரோயின்க்கு  அந்த டவுட் ஏன் வர்லை?  நம்மைத்தவிர  ஏன் யாருக்கும்  முன் ஜென்ம  நினைவு வர்லைன்னு )


              3  ஹீரோயின்   தோழியை   ரேப்  பண்ண  வரும்  தீய  சக்திக்ளைக்கண்டு  அது மாயத்தோற்றமோ  கற்பனையோ  ஏன்  அவர்  ஜன்னல்  வழியா  குதிச்சு  சாகறார்? திரும்பி  வாசல்  பக் கம்  ஓடலாமே ?  திறந்து தானே   இருக்கு ?


              4   வில்லன்  கார்த்திக்  க்ளைமாக்சில்  ஏன்   அவசரப்பட்டு   நாயகியை  ஹிப்னாடிக்ஸ்  தூக்கத்தில்  இருந்து  எழுப்பறார்?


              5   வில்லன்  தேவை  இல்லாமல்   ஏன்  அவர்   அசிஸ்டெண்ட்   லேடி  டாக்டரை  விட்டுட்டுப்போறார்? பெரிய  எதிர்  சாட்சி ஆச்சே?


              6  பின் பாதி   திரைக்கதை  பி  சி  செண்ட்டர்   ரசிகர்களுக்குப்புரியும் படி இன்னும் எளிமையாக  சொல்லி   இருக்கலாமே?


              7   க்ளைமாக்ஸ்    காட்சி  சொதப்பல்




              சி  பி  கமெண்ட்  - அனேகன் - வித்தியாசமான   சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  மூவி -ஏ, பி  செண்ட்டர்களில்  ஹிட் ஆகும் -  விகடன்  மார்க் = 43 . ரேட்டிங்  3.25 / 5



              ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  43



              குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  ஓக்கே



               ரேட்டிங்  =  3.25 / 5