Showing posts with label சயின்ஸ் ஃபிக்‌ஷன். Show all posts
Showing posts with label சயின்ஸ் ஃபிக்‌ஷன். Show all posts

Tuesday, July 10, 2012

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்



மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..



பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..






3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்




ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .



பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே.



 விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..





Friday, July 06, 2012

நான் ஈ - சினிமா விமர்சனம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicbTwGjbUg2D7WYHIjjqek07tgMrfCxRvmZKukYZP2ZVvvj7Z0jRuRHFsZL1zdTg3hSDW7pObppWNnaxyBhXpN37eOKawEDZ4Wg8yLW3PhHtIAch88bvN70NwpDNtpX3ngsSYTqQScYdU3/s1600/Naan+Ee.jpgசயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/naan-ee-movie-stills.jpg



 ஹீரோயின் ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..


 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..


 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..


படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..


வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..


 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..



http://g.ahan.in/tamil/NAAN%20EE%20photos/naan%20ee%20(7).JPG

மனம் கவர்ந்த வசனங்கள் ( கிரேசி மோகன்)


1. வில்லனிடம்- ஹாய், நீங்க டெயிலி இங்கே வருவீங்களா?

 யா..

 விச் டைம்?

 நீங்க வர்ற டைம்.. ஹி ஹி



2. நம்ம தொழிலுக்கு போட்டியா இருக்கானே அவனை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு நாங்க எல்லாம் யோசிச்சுட்டு இருக்கோம், நீ என்னடான்னா அவன் சம்சாரத்தையே கரெக்ட் பண்ணிட்டியே?


3. என் ஒயிஃபை முதன் முதல் காதலியா சந்திச்சப்போ ஒரு டைம் முடிச்சுட்டு கழட்டி விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா அவ கிடே ஏகப்பட்ட சொத்து.. மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ சொத்தை என் பேர்ல எழுதி வைக்க கேட்டேன்.. செத்தாலும் அது நடக்காதுன்னு அடம் பிடிச்சா.. பாவம் அல்பாயுசுல போய்ட்டா..


4. ஹேய்.. நீ பேங்க்ல எவ்ளவ் பணம் வெச்சிருக்கே?

 ரூ 15,860 ஓ டி அமவுண்ட் ( ஓவர் டியூ..  மைனஸ்ல )


5. எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி.. அதனால செக்ல சைன் பண்ணாமயே தர்றேன்.

 டேய் லூசு, செக்ல சைன் பண்ணலைன்னா எப்படி அது பாஸ் ஆகும்?


6. மிஸ்,,, உங்க ஜடை ரொம்ப டைட்டா இருக்கு.. புரிஞ்சுதா?

 எனக்கு லூஸ் தான் பிடிக்கும்


 நீங்க லூஸ்னு தெரியும்..  ஆனா ப்ளீஸ் ட்ரை த டைட்.. ( டபுள் மீனிங்க் )


7. நீ கொடுத்த 15 ரூபா செக்குக்காக அவ அர்ச்சனை செய்ய கோயிலுக்கு வந்திருக்காளே.. அர்ச்சனை சீட்டே 20 ரூபா ஆச்சே?


8. டேய்.. முதல்ல உன்னோட எக்ஸ்பிரஷனை மாத்து.. அவ எல்லாருக்கும் பிரசாதம் குடுத்துட்டு போறா.. ஆனா உன்னை கண்டுக்காம போறா..


 டேய்.. எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு தர்லைன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு நான் ஸ்பெஷல்னு அர்த்தம்


9. டிராஃபிக் சார்ஜெண்ட் - வண்டிக்கு ஆர் சி புக் இருக்கா?  லைசன்ஸ் இருக்கா?


 ஹீரோ - என் ஆள் போறா. அவளை பிடிக்கனும்.. வண்டியே இருக்கு.. நீயே அதை வெச்சுக்கோ


10.  என்னடா அவ கிட்டே இருந்து வெறும் பிளாங்க் மெசேஜ் வந்ததுக்கு இப்படி குதிக்கறே?

 உனக்கு தெரியாதுடா , பிளாங்க் மெசேஜ் = பிளாங்க்செக்.. பவர் ஃபுல்.. இஷ்டபட்ட வங்களுக்குத்தான் பொண்ணுங்க  பிளாங்க் மெசேஜ் அனுப்புவாங்க


11. அழுதா வருத்தம் மறைஞ்சுடும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அழ அழ அது அதிகம் ஆகுது.. பல தடவை அவனை கண்டுக்காத மாதிரி அலைய விட்டிருக்கேன்.. ஹூம்.. இப்போ நான் தான் சிரமப்படறேன்


12.  வில்லன் - என் மனைவி  சாகறப்ப என் கிட்டே என்ன பிராமிஸ் வாங்கினா தெரியுமா? நீங்க என்னை லவ் பண்றது உண்மையா இருந்தா நான் செத்த பிறகு என்னை மறந்துடனும்.. அப்டின்னா.. அதே போல் நீ உன் காதலனை மறந்துடு, ஓக்கே.. ?


14.  வில்லன் - ஏண்டா, அனிமல்ஸ் ரிவஞ்ச் பண்ணுமா? ( பழிக்குப்பழி வாங்குமா? - நன்றி மேஜர் சுந்தர் ராஜன் )


யா யா விட்டலாச்சாரியார் படத்துல எல்லாம்  அப்படித்தான்


15.. நான் கேட்க வர்றது ஒரு ஈ அப்படி பழி வாங்குமா?


 பாம்பு பழி வாங்கறப்போ ஈ பழி வாங்காதா? சின்ன பாம்புன்னா ஓக்கே.. ஈ-ன்னா யோசிக்கனும்


16. நான் சொல்றேனேன்னு கோவிக்காதே.. ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை படிச்சுட்டு அதே ஞாபகமா இருந்திருப்பே..


17. சர்வர் - மேடம், காஃபில ஈ விழுந்துடுச்சு போல ,ஸாரி மேடம்..

 நோ நோ , ஈ காஃபி குடிச்சுட்டு இருக்கு


 18. சந்தானம் - டேய் , எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? ஓவர் ஓவர்..

 நான் இங்கே ஒரு பூட்டுன வீட்டுல குதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்..

 செருப்பால அடிப்பேன், நாயே அது என் வீடு


 19. சந்தானம் ஹீரோயின் வீட்டுக்கு திருட வர்றார்.. அப்போ ஹீரோயின் காதலனான ஈ கிட்டே பேசிட்டு இருக்கார்.. அது தன்னை பார்த்து பேசறதா சந்தானம் நினைக்கறார்

ஹீரோயின் - டேய் , திருட்டுப்பயலே.... வெளீல வா.. ஐ கேன் லெர்ன் யுவர் ஸ்மெல்.. உன்னை லவ்வர்னு வெளீல எப்படி சொல்ல?


20. பூசாரி - உன் சாவுக்கு விதை இங்கே தான் விதைக்கப்பட்டிருக்கு.. புரியலை.. நீ யாரை சாகடிச்சியோ அவன் பிணம் விழுந்த இதே இடத்துல தான்  நீ சாகப்போறே..


21. வில்லன் - பார்ட்னர்ல ஒரு ஆள் செத்துட்டா இந்த டீலிங்க் கேன்சல் ஆகிடும், இன்சூரன்ஸ் தொகை கோடிக்கணக்குல கிடைக்கும்

 அடப்போப்பா.. அதுக்காக  நீ தற்கொலையா பண்ணிடப்போறே?


 நோ நோ..  உன்னை கொலை பண்ணப்போறேன் ..


22. வில்லன் - அடங்கோ.. ஈக்கும், உனக்கும் கம்யூனிகேஷன் கூட நடக்குதா?


23.டேய் , 2 வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக 
எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம 
ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை 
காதலிக்கவேயில்லை 





 இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது 
எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே 
நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம 
போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி 
என்னையும் தூங்கச் சொல்லுறா



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-fcyoor5c-zfCfT6iubF867X8v3Ih_uBY09zBZm8QSNEYvz0e_UQQsvU1WmY89FZnCmu9hXUPsiBH0uKVy2b8x-V7K-pZPblIEg1LYvR_Jy6yst9-ADxhjA_5XaDklXJhzxE0248wmG56/s1600/samanthainbanakathaadi_05.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மரகத மணியின் இசையில் வீசும் வெளிச்சத்திலே .. பாட்டு செம மெலோடி.. ஆல்ரெடி சூப்பர்  ஹிட்.. படமாக்கப்பட்ட விதம் குளுமை..


 2. பின்னணி இசை கன கச்சிதம் , குறிப்பாக ஈ கிட்டத்தட்ட ஹீரோ லெவலில் இருப்பதால் அது பழி வாங்க கிளம்பும்போதெல்லாம் அதற்கு தரப்படும் பில்டப் மியூசிக் ஓக்கே..


3. ஒரு ஷாட்ல ஹீரோ சருகுகளை உதைக்க அது சாலை எங்கும் சிதறும் காட்சி கிளாசிக்


4. வில்லன் கார்ல போய்ட்டிருக்கான்.. ஹீரோயின் ஏர்போர்ட்ல .. அவனை போக விடாம பண்ணனும் .. அதுக்கு ஈ டிராஃபிக் கான்ஸ்டபிள் மூலம் குழப்படி பண்ணி முதல்வன் பட டிராஃபிக் ஜாம் போல் பிரம்மாண்டமாய் பண்ணுவது நல்ல நம்பும்படியான ஐடியா


5. ஈயிடம் இருந்து தப்பிக்க வில்லன் பிணம் போல உடம்பு பூரா பாண்டேஜ் கட்டி படுக்கையில் தூங்கும் சீன்..

6. ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் படம் முழுக்க இயக்குநரின் வெற்றிக்கு உழைத்த விதம்,. 


7. ஹீரோயின் வீட்ல கரெண்ட் போயிடுது,, உடனே ஹீரோ பர பரவென மொட்டை மாடி வந்து  சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து  லைட் கொடுக்கும் ஐடியாவும், அதை புன்முறுவலோடு அங்கீகரிக்கும் சமந்தாவின் முகத்தில் காதல் பொங்கி வழிவதும்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120522171403000000.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன் ரூமுக்குள்ளே ஹீரோயின் கூட தனியா இருக்கார்.. அவர் ஹீரோயினுக்கு 15 லட்சம் செக்  தர்றார்.. 2 பேரும் ஒண்ணா வெளீல வர்றாங்க.. அப்போ பார்டன்ர் வில்லன் கிட்டே ” 15 லட்சம் செக்   தர்ற அளவு அவளை உனக்கு பிடிச்சுடுச்சா? என கேட்கறாரே? எப்படி? செக்கை ஹேண்ட்பேக்ல ஹீரோயின் வெச்சிருக்கா.. வில்லன் எதும் சொல்லலை, எப்படி தொகை பார்ட்னருக்கு தெரியும்?


2. ஹீரோ நண்பர்களிடம் பேசும்போது ஒன்றரை வருஷமா அவ பின்னால அலையறேன்னு ஒரு வசனம், ஹீரோயின் தன் அண்ணி கிட்டே பேசும்போது “ 2 வருஷமா அவன் என் பின்னால சுத்தறான்”ன்னு டயலாக்.. 6 மாசம் என்ன ஆச்சு?


3. ஈயாக மாறும் ஹீரோ வில்லன் கிட்டே நான் உன்னை கொல்லப்போறேன்னு எழுதி காட்டுது.. அதே போல் ஹீரோயின் கிட்ட்டே நான் தான் உன் ஆள், என்னை அவன் கொலை பண்ணிட்டான்னு ஆரம்பத்துலயே எழுதி காட்டி இருந்தா அவ உஷாரா இருந்திருப்பாளே?  ( ஆனா அப்படி ஒரு சீன் வெச்சிருக்காங்க, ரொம்ப லேட்டா )


4. பொதுவா சோகத்துல பொண்ணு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு,  ஜாக்கிரதை உணர்வு பொண்ணுக்கு இருக்கும் , ஆனா ஹீரோயின் கேனம் மாதிரி வில்லன் என்ன செஞ்சாலும் கண்டுக்காமயே இருக்காளே.. வாலி படத்துல வில்லன் அஜித் கொஞ்சம் ட்ராக் மாறூம்போது ஒரு சீற்றம் காண்பிப்பாரே அப்படி ஒரு சீனாவது வெச்சிருக்கனும்..


5. வில்லன் பல டைம் ஹீரோயினை தவறான பார்வை தவறான கோணத்துல பார்க்கறான்.. எல்லாருக்கும் அது தெரியுது, ஆனா ஹீரோயினுக்கு மட்டும் அது தெரியலை..


6. க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?



7. க்ளைமாக்ஸ்ல ஈ ஒரு ஊசியை எடுத்து வில்லனை தாக்க வருது.. வில்லன் ஒரு காந்தத்தை எடுத்து அந்த ஊசியை காந்தத்துல மாட்டி வைக்கறார்.. அப்போ ஆபத்துல இருக்கற ஈ ஊசியை விட்டுட்டு அந்த பக்கம் வந்துடலாமே? ஏன் இறுகி பிடிச்சு மாட்டுது?

8. வில்லன் ஈ வைச்ச பாம்ல காயப்படறான்.. அந்த ரூமே அழியுது, அடியாளுங்க எல்லாம் தெரிச்சு ஓடறாங்க, ஆனா ஹீரோயினுக்கு எதுமே ஆகலை.. ஏன்>


9. காதலன் இறந்த துக்கத்தை ஹீரோயின் முகத்துல நல்லா பதிவு செய்யலை.. ஏனோ தானோன்னு இருக்கார்..



http://i45.servimg.com/u/f45/17/35/15/36/naan-e12.jpg


அனைவரும் பார்க்கும்படி சுவராஸ்யமா தான் படம் போகுது.. ஜூலை 13 ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா -2 விற்கு டஃப் ஃபைட் கொடுக்கும்




 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


 குமுதம் ரேங்க் - ஓக்கே



சி.பி கமெண்ட் - ஃபேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்.. மறுபடி க்ளைமேக்ஸ்ல அதே சீனை எடிட் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க

 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. ஸ்ரீ கிருஷ்ணாவிலும் ரிலீஸ் 

http://123tamilcinema.com/images/2012/05/Naan-E-Movie-Posters-Mycineworld-Com-1.jpg

Friday, March 09, 2012

JOHN CARTER -ஏலியன்ஸ் உடான்ஸ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.disneydreaming.com/wp-content/uploads/2012/01/John-Carter-International-Movie-Poster.jpg 

இந்தக்கதைல மொத்தம் 3 கிரகம் இருக்கு. உதாரணமா அதிமுக கட்சில சசிகலா, நடராஜன்,இளவரசின்னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி.. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ, டாக்டர் மான மிகு ராம்தாஸ்-னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி,நயன் தாராவை சுத்தி சிம்பு, பிரபுதேவா,ஜெயம் ரவின்னு 3 கிரகம் இருக்கே அது மாதிரி ( ஜெயம் ரவி லேட்டஸ்ட் கிரகம் ஹி ஹி ).

மார்ஸ்னு ஒரு கிரகம்.. இங்கே தான் ஹீரோயின் கொஞ்சம் முற்றிய முகத்தோட,வற்றாத , 2 கைகளால் அணைத்தால் பற்றாத தேகத்தொட கிட்டத்தட்ட டிம்பிள் கபாடியா இன் விக்ரம் மாதிரியும் தூரத்தட்ட கேத்ரினா கைஃப் மாதிரியும் இருக்காங்க .. பூமியில் இருக்கற ஒரு குதிரைப்படை வீரர் தான் ஹீரோ ஜான் கார்ட்டர்.. வில்லன் வில்லனோட மகன் இருக்கற கிரகம் தான் ஹீலியம் ..

பூமில இருக்கற ஹீரோ ஏதோ ஒரு தங்கப்புதையல் இருக்கற தங்கக்குகையை தேடிப்போறார்.. போற வழில அவருக்கு ஒரு பவர் கிடைக்குது.. அதாவது ஸ்பிரிங்க் மாதிரி ஜம்ப் பண்ற பவர்.. காலை ஒரு உந்து உந்துனாருன்னா ஜொய்ங்க்னு ஆகாசத்துல 2 கி மீ போய்ட்டு வருவார்.. கால் சுளுக்காது.. இதை நம்ப முடியாதவங்க கால் கிலோ மல்லிகைப்பூவை  வாங்கிட்டு தியேட்டருக்கு வரவும் .. அப்பப்ப நம்ம காதுல வெச்சுக்க.. 

மார்ஸ் கிரகத்துல இருக்கற ஜீவராசிகள்க்கு  4 கை, 2 கால்.. மத்ததெல்லாம் எத்தனைன்னு தெரியலை.. என்னமோ ஈரோடு எலிகெண்ட் டெயிலர்ட்ட டிரஸ் தெச்ச மாதிரி அந்த ஏலியன்ஸ்ங்க டிரஸ் போட்டிருக்குங்க.. அவங்க ஹீரோவோட பறக்கும் சக்தியை பார்த்துட்டு வியக்காங்க.. இது எப்படின்னா ஏதோ எதேச்சையா தனுஷ் கொலை வெறி பாட்டை பார்த்து மயங்கி பிரதமரே பார்ட்டிக்கு கூப்பிட்டாரே? கமல் பொண்ணு ஸ்ருதி 3 படத்துல ஷூட்டிங்க் ஸ்பாட்ல தனுஷ் ஐஸ்வர்யா பார்க்க பார்க்க கில்மா பண்ணுச்சே அந்த மாதிரி ஒரு லக்கி பிரைஸ்.. 


http://media1.onsugar.com/files/2012/03/10/2/192/1922283/03ca4b8024337481_FishingThumb.xxxlarge_2/i/John-Carter-Movie-Pictures.jpg

ஹீரோயினை வில்லனோட மகன் கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்.. ஹீரோ அதை தடுத்து  எம் ஜி ஆர் மாதிரி காப்பாத்தி அவன் பண்ணிடறான்.. அதாவது கல்யாணத்தை.. அவ்ளவ் தான் கதை.. 

 செம காமெடியான மேட்டர் என்னான்னா நம்ம ஊர்ல ஜிகிடிங்க எல்லாம் அரைகுறையா ஜின்ஸ், ஸ்லீவ்லெஸ் அப்படி சென்னை பஜார்ல சுத்தும்ங்க.. மேரேஜ் அன்னைக்கு பார்த்தா முக்காடு போட்ட முனிஸ்புரி மாதிரி, சீதா தேவிக்கு அக்கா மாதிரி பாந்தமா பட்டு சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருக்கும்.. ஆனா இந்தப்படத்துல ஹீரோயின் கல்யாண டிரஸ் செம காமெடி..  மேலே ஒரு பிரா , கீழே ஒரு கோவணம் ஹி ஹி அது அவங்க கிரக  வழக்கமாம்.. அடக்கிரகமே..

 டைரக்டருக்கு ஃபோன் போட்டு கேட்டப்ப ( ஏன்? அவர் மட்டும் தான் படத்துல ரீல் விடனுமா? நாம விடக்கூடாதா? ஹி ஹி ) அவர் சொல்றாரு. கோடிக்கணக்குல சம்பளம் தர்றோம்.. முடிஞ்சவரை உரிச்சுக்காட்டிடனும் அப்டிங்கறார்.. நம்ம ஊரா இருந்தா டூயட் சீன்ல சீன் காட்ட வைக்கலாம்.. அவங்க நாட்டுல இந்த மாதிரி பாரம்பரிய உடை அப்டினு ஏதாவது சொல்லி ஏமாத்தனும் போல.. 


http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

ஓக்கே .. இப்போ நடிப்பை பார்க்கலாம்.. ( நல்லா கேட்டுக்குங்க.. நான் நடிப்பை மட்டும் தான் பார்த்தேன்) ஹீரோ ஆள் ஜெகஜோதியா இருக்கார் ( சரவணா ஸ்டோர் அண்னாச்சி கணக்குப்பண்ணி குடித்தனம் வெச்சாரே அந்த ஜீவஜோதி மாதிரி ஹி ஹி )அவர் எக்சைஸ் எல்லாம் நல்லா பண்ணி பாடியை கட்டு மச்தா வெச்சிருக்காரு.. மிச்ச வேலை எல்லாம் கிராஃபிக்ஸ் பார்த்துக்குது. பாதி நேரம் அண்ணன் ஆகாயத்துல பறக்கறாரு.. மீதி நேரம் ஹீரோயின் கையை  அணடர் லைன் கையை மட்டும் தடவிட்டு இருக்காரு .. 

ஹீரோயின் இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி முக அமைப்பு.. தமிழர்களுக்கு பிடித்தமாதிரி குஷ்பூ, ஹன்சிகா உடற்கட்டு ( சுந்தர் சி, பிரபு, கார்த்திக் மன்னிக்க , மற்றும் பிரபுதேவா மன்னிக்க ஹி ஹி )

இந்தப்படத்துல ஒரு சீன்ல லிப் டூ லிப் சீன் இருந்ததா பக்கத்து சீட் ஆள் சொன்னாரு.. எனக்கு ஏன் தெரியலைன்னா நான் தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி /. சின்னகுழந்தைங்க பார்க்கக்கூடாத மாதிரி சீன் வந்தா நானே எட்டனாவை கீழே போட்டு பொறுக்கிட்டு இருப்பேன் ( பொறுக்கிப்பய ஹி ஹி )

கேப்டன் எல்லாம் என்னய்யா ஆள்? நரசிம்மாவுல 86 பேரைத்தானே அடிச்சார்? இதுல ஹீரோ 1876 பேரை ஒரே ஒரு வாளை வெச்சு அடிச்சு தள்ளறாரு  



 அடங்கப்பா சாமி .. ஒளிப்பதிவு  ஓக்கே .. லொக்கேஷன்கள் நல்லாருக்கு //ஹீரோயின் கூட நிக்கற 5 ஜிகிடிங்க நல்லாருக்காங்க ஹி ஹி 

http://static.moviefanatic.com/images/gallery/lynn-collins-and-taylor-kitsch-in-john-carter_433x278.jpg

  மனதில் நின்ற வசனங்கள்

1.  சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்.. நடக்காத விஷயத்தை நடத்திக்காட்டறேன். முடிச்சுக்காட்டறேன்னு சொல்றவ. முற்போக்கு எண்ணம் உள்ளவ,.. 

2. ஹீரோ - நான் தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா நியாயமா பார்த்தா நான் தான் ஒதுங்கி நிக்கனும் போல.. 

 ஹீரோயின் - ஆமா.. ஏதாவது டேஞ்சர்னா என்னை கூப்பிடு.. நான் பார்த்துக்கறேன்.. 

3.  யுத்தம் அவமானச்சின்னம்

 ஆனா நல்ல விஷயத்துக்கு நடந்தா அது மக்களைக்காக்கற கலங்கரை விளக்கம் ( ஆனா இந்தியாவுல மட்டும் 2 நாள் கூட தாங்காதாம் அவ்வ்வ் )


4.  நீ சொல்றதை உண்மைன்னு எப்படி நம்பறது?

 ஏன்? நீ சொல்றதை நான் நம்பலையா? என்னை நம்பித்தான் ஆகனும் ( பாப்பா அவன் ஆம்பளை, நம்பலாம்.. நீ பொம்பளை எப்படி நம்பறது?)

5.  ஏய்.. கை கொடுன்னா வெறும் விரலை மட்டும் தர்றே.. இதை எப்படி குலுக்க?

இதே போதும் ..... 

6.  மூளை இல்லாதவன் போல் நடிக்கறது கஷ்டம் , அது எல்லாருக்கும் வராது.. 

7. எந்த ஒரு ராஜ்யத்தையும் ஆள மக்கள் ஆதரவு ரொம்ப முக்கியம் 

 புரியலை 

 உனக்குப்புரியலைன்னா  அதை புரிஞ்சவனை வாரிசா தேர்ந்தெடுக்க வேண்டி வரும்..   ( மக்கள் ஆதரவு கிடைக்க எளிய வழி.. எதையாவது இலவசமா தர்றதா சொல்லி ஏமாத்தறதுதான் )

http://www.ropeofsilicon.com/Images/stories/2012/mar/collins-interview-john-carter_0352012_020045.jpg


8.  வில்லன் - எனக்கு மனசாட்சி இருக்கு

 ஹீரோயின் - மனசே இல்லாத உனக்கு மனசாட்சி இருக்குறது எப்படி?

9. இந்த கிரஹத்துல ஆண்கள் உப்பை விட சப்பை.. பெண்கள் பாறையை விட கடினமானவங்க  ( அடப்பாவமே அப்போ எதுக்கும் யூஸ் ஆக மாட்டாங்களா?)

10. ஒரு வீரன் ஆயுதத்தை மாத்துவான் , ஆனா மனசை மாத்த மட்டான்

11.  சாகா வரம் பெற்றவர்களால மட்டும் தான் மரண பயம் இல்லாம வாழ முடியும்

12.. நான் இருக்கறவரை இந்த கிரகத்தை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது.. 

 உயிர் போற நேரத்துலயும் ஊக்கம் குடுக்கறியா?

13. சில நேரங்கள்ல நமக்கு விருப்பப்படாததை விரும்பித்தான் ஆகனும்


http://spinoff.comicbookresources.com/wp-content/uploads/2012/03/john-carter-collins4-570x380.jpg

 படம் பார்க்கற யாரும் இந்தக்கதையை நம்பவே முடியலையே அப்படின்னு சொல்லிடக்கூடாதுன்னு ஒரு முக்கியமான டயலாக்கை 7 இடத்துல ரிப்பீட்டறாங்க

 அந்த டயலாக் “ என்னால நம்பவே முடியல “ - இந்த டயலாக்கை ஹீரோ 4 தடவை, ஹீரோயின்  3 தடவை சொல்றாங்க.

 சி.பி கமெண்ட் - ஸ்கூல் பசங்க, பொழுது போகாதவங்க மட்டும் இந்தப்படத்தை பார்க்க்கலாம் மோசம் இல்லை.. கொஞ்சம் டகால்டி .... 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEa41mGxPvazWehVrqt4CowXkSaeJ53LmVY3N7zDgOEeaNdOuhJbmrd5St7Dy3Xht3momS5CrflyJYrT1fiJaUUsh_CJNFlFiZP3JlXn7l7_hYTvNR_qMVnoCkLgmt9leRWjCtp-I9zE/s1600/2207220-dejahthoris_lynn_collins.jpg