Showing posts with label அரசியல்.ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label அரசியல்.ஆனந்த விகடன். Show all posts

Sunday, March 20, 2011

ஆனந்த விகடன் VS சீமான் பேட்டி - காமெடி கும்மி



காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பட்டியலும் வேட் பாளர் விவரமும் எப்போது வெளியாகும் என தொடை தட்டிக் காத்திருக்கிறார் சீமான். 

''ஒரு நாளைக்கு முன்று தொகுதிகள்...
ஐந்து மணி நேரம் தொண்டை கிழியப் பேச்சு... 20 நாட்களில் 63 தொகுதிகளில் வலம்... காங்கிரஸுக்கு எதிராக இப்போதே களம் இறங்கிவிட்டேன். காங்கிரஸோடு கூட்டுவைத்தால், கருவறுக்கப் படுவோம் என்கிற அச்சம் இங்கே இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பிறக்க வேண்டும். அத்தகைய மரண அடியை இந்த முறை காங்கிரஸுக்குக் கொடுப்பேன். 

இந்த அடிபட்ட புலியின் உறுமலில் காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறது பாருங்கள்!'' - சபதம் போடும் சீமான் கட்சியின் உயர் மட்டக் குழு, ஆன்றோர் பேரவைகளைக் கூட்டி தேர்தல் வியூகங்களில் தீவிரமாக இருக்கிறார். 

 

1. ''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?'' 

சீமான் - ''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். 

அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? 

மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று  குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா?

விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''

சி பி - கலைஞர் ஒரு ராஜ தந்திரி.. .. எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். தமிழ்க்குடும்பத்துக்குத்தான் என்ன செய்வது என அவருக்கு தெரியாதே தவிர.. தன்னோட குடும்பத்துக்கு என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.


2. ''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?'' 

சீமான் - ''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''

சி பி  - கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்... ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை.. அனைவருக்குமே (பங்கு)கொடுத்தார்..


3. ''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?'' 

சீமான் - ''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள்.

இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''

சி பி  - இந்தியாவின் இறையான்மைக்கு எதிரா நீங்க பேசுனீங்க..அவங்க என்ன பண்ணுனாங்க..? பாவம்.. அப்பா சொல்லிக்குடுத்ததை கரெக்ட்டா பண்ணுனாங்க..அவங்க அப்பாவுக்கு எதிராவும் பேசலை.. மீனவர்களுக்கு ஆதரவாவும் எதுவும் செய்யலை...


4. ''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''

சீமான்  - ''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். 

தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 

'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக்  கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்?

ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''

சி பி  - இளைஞன் படம் ஓடுச்சா.. ? செம காமெடி போங்க.. தியேட்டர்ல ஓடுனது 4 காட்சிகள்..ஒரு நாள் மட்டும்தான். இன்னும் கலைஞர் டி வி ல மட்டும் தானே ஓடிட்டு இருக்கு..?விளம்பரமா..?


5. ''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?'' 

சீமான்  - ''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.


இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்...

அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''

சி பி  - தமிழ்நாட்டின் இரண்டு தீய சக்திகளையும் துரத்த ஐடியா இருக்கா? அதை சொல்லுங்க.. மாத்தி மாத்தி 2 கொள்ளைக்காரங்களுமே நாட்டை கொள்ளை அடிக்க விடனுமா?

Saturday, March 19, 2011

ஆனந்த விகடன் VS குஷ்பூ பேட்டி - காமெடி கும்மி

 http://www.anushkapics.com/images/anushka.jpg
 

முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் ஆசி பெற்று கழகத்தின் கிளாமர் பேச்சாளராக குணவதி குஷ்பூ நம் நகரங்களில் வலம் வர இருக்கிறார்..பெண்களின் கற்பு பற்றி உயரிய கருத்துக்களை பகிர்ந்து 87 கோர்ட்களில் பாராட்டு பெற்றவரும்,ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கடவுள் படத்தைபார்த்தாலே பய பக்தியோடு கும்பிட்டு நல்ல பெயர் வாங்கியவரும்,ஜெயா டி வி யில் ஜாக்கெட்பாட் நிகழ்ச்சியின் மூலம் பெண்களுக்கு ஜாக்கெட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டியவரும் ஆகிய தானைத்தலைவி  (அம்மா தொண்டர்கள் மன்னிக்க)குஷ்பூ இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்திருக்கிறார்..

அந்த பேட்டியை அப்படியே தந்தால் சுவராஸ்யம் இருக்காது என்பதால் குஷ்பூவின் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்பதை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்குடன் தந்துள்ளேன்..

தி மு க வுக்கு குஷ்பூவே தேவை இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்தானே என முணு முணுப்பவர்களுக்கு - சாரி.. இதை நீங்கள் உங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.. ஹி ஹி


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGNL_oAkB5EsAjE_39uJspwn-OtvKno7Rod3kbTuxnYyZ1v6DOpBmiFqcWxC8S3opZ0DKx4k-ZKUSFc5EI496drYlLZqr5f_nkgOmNJefyeyMlf0hEig6bEQ4fQ9rndto1pAcnTljvd0x9/s320/kushbu_3_deviyar.jpg

1. ''முதன்முதலா பிரசாரத்துக்குக் கிளம்புறீங்க. என்ன பேசுவீங்க... பயமா இருக்கா?'' 

''எனக்குப் பயமே கிடையாது. 20 வருஷமா இங்கேதான் இருக்கேன். ரெண்டு பெரிய கட்சிகளைப்பத்தியும் நல்லாவே தெரியும். திராவிட அரசியல் வரலாறு தெரியும். நாட்டு நடப்பு தெரியும். வழக்கமான அரசியல்வாதிங்க மாதிரி நான் பேச மாட்டேன். எதிர்க் கட்சி யைப்பத்தியோ, அதன் தலைவர்களைப்பத்தியோ தப்பா பேச மாட்டேன். தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ், இலவச டி.வி, இலவச நிலம், ஒரு ரூபாய் அரிசின்னு அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்கார். அதைச் சொன்னாலே, கோடிக்கணக்கான மக்களின் ஓட்டு எங்களுக்குத்தான்!''

குஷ்புவின் மனசாட்சி - எனக்கு எதுக்குங்க பயம்? சுந்தர் சி தான் பயப்படனும்..பொதுவா புருஷங்க தான் பொண்டாட்டி என்ன பேசிடுவாளோ.. வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்துடுவாளோன்னு பயப்படுவாங்க..பொண்டாட்டிங்களுக்கு கவலையும் கிடையாது, பயமும் கிடையாது..

2. ''பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ரெண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் உங்களைக் கடுமையா எதிர்த்தாங்க. இப்போ அவங்ககூட இணைந்து பிரசாரம் செய்யும் சந்தர்ப்பம் வந்தால்..?'' 

''கண்டிப்பா இணைந்து பிரசாரம் செய்வேன். இப்போ அவங்க எங்க அணியில்தானே இருக்காங்க. தலைவர் பாலிஸிதான் என் பாலிஸியும். மறப்போம்... மன்னிப்போம்!''


குஷ்புவின் மனசாட்சி -

டைரக்டர் சொல்றபடி கேட்கவேண்டியது ஒரு நடிகையோட வேலை.. ஹீரோ கூட டூயட் பாடச்சொன்னா பாடுவோம்.. வில்லன் கூட டூயட் பாடச்சொன்னாலும் பாடுவோம்..கலைஞர் தி மு க வோட டைரக்டர்...


3. ''ஸ்பெக்ட்ரம் பிரச்னை தி.மு.க-வுக்கு எதிரா இருக்குதே?'' 

''உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை. மீடியாதான் எல்லாத்துக்கும் காரணம். பரபரப்புக்காக, 'அவ்ளோ நஷ்டம்... இவ்ளோ நஷ்டம்’னு கிளப்பிவிடுறாங்க. கடைசியில், இப்போ டயர் பஞ்சர் ஆன மாதிரி புஸ்ஸுனு போயிருச்சு. எதிர்க் கட்சிகளுக்கு தி.மு.க-வைக் குறை சொல்லக் காரணமே இல்லை. அழுத குழந்தை கையில் பொம்மையைக் கொடுத்தா, அதையே வெச்சு விளையாடும். அது மாதிரி எதிர்க் கட்சிகள் ஸ்பெக்ட்ரமைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க!'' 


குஷ்புவின் மனசாட்சி -

அது என்ன ரம்மோ எனக்கு என்ன தெரியும்?ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் குடுத்துடறாங்க.. என்ன பேசனும்னு எழுதிக்குடுத்துடுவாங்க.. போய் ஒப்பிச்சுட்டு வந்துடுவேன்,, தி மு க தோத்தா என்ன?  ஜெயிச்சா என்ன? எனக்கு கல்லா நம்புனா சரி (நிரம்புனா)
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj83a2f1m39wBAQmJp0X0ZwSYDuI8molwihBTspDwz32uU6Vn-UtFlyR0gH0yuCgTvZNXT8eM5a-6wDHsfhEf5ZfXcZrNsnMBQyXFCL0fOiqNi-ue7CPNQUrq2XTei5Eb8WgqIhLjoUZ9yd/s1600/kushboo%5B1%5D.jpg

4. ''கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் என்பது ஒரு முக்கியக் குற்றச்சாட்டு...'' 


''அப்படின்னு மக்களா சொன்னாங்க? எதிர்க் கட்சிகள் புதுசு புதுசா யோசிச்சு காரணம் சொல்றாங்க. 'இவ்வளவு நல்லது பண்ணி இருக்கோம்’னு தைரியமா எங்களால் சொல்ல முடியும். அவங்களால சொல்ல முடியுமா? கலைஞர் ஆட்சியில் தப்பு கண்டுபிடிக்கப் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டு இருக்காங்க!''


குஷ்புவின் மனசாட்சி -

ஆமாங்க.. கலைஞர் வாரிசுலயே பாருங்க ஸ்டாலினுக்கு என்னை பிடிக்கும், அழகிரிக்கு பிடிக்காது.. கனி மொழிக்கு என்னை பிடிக்காது.. கட்சில ஒரு கிளாமரான ஆளு வர்றதை அவங்க விரும்பலை ... இதுவும் குடும்ப ஆதிக்கம் தான்.. ஆனா வெளில சொல்ல முடியுமா?


5. ''கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார்னு உங்க சினிமா நண்பர்கள் எதிர் அணியில் இருக்காங்களே?''

''நான் அவங்களை எதிர்த்துப் பேசறதுக்காகவோ, குறைச்சுப் பேசறதுக்காகவோ அரசியலுக்கு வரலை. ஒருவேளை, அவங்க என்னைத் தாக்கிப் பேசினாலும், நான் அவங்களைத் தாக்கிப் பேச மாட்டேன். எதிர்க் கட்சி என்பதால், அவங்க எனக்கு எதிரிகள் கிடை யாது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆனப்போ, கட்சி வித்தியாசம் இல்லாம எல்லாப் பெண் எம்.பி-க்களும் ஒண்ணா நின்னு கை கொடுத்தாங்களே... அப்படித்தான் நான் அரசியல் பண்ண ஆசைப்படுறேன்!''


குஷ்புவின் மனசாட்சி -

இருந்தா என்ன? என்னமோ அவங்க நாட்டைக்காப்பாத்த வந்த தியாகிங்க மாதிரியும், நான் துரோகி மாதிரியும் பேசறீங்களே.. எல்லாரும் கூத்தாடிங்க தான்.. பணத்துக்காக எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசுவோம்.. கல்லா கட்டற வேலையைத்தான் எல்லாரும் பார்க்கறோம்..?

6. ''விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி...'' 

''நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமா வேற... அரசியல் வேற! சினிமாவில் கை தட்டி, விசில் அடிப்பாங்க. அவங்க அப்படியே நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நம்பி வரக் கூடாது. அரசியல்... சினிமாவைவிடச் சிக்கலான ஏரியா!''


குஷ்புவின் மனசாட்சி -

அவருக்கு படத்துலதான்  நடிப்பு சரியா வர்லைன்னு  பார்த்தா அரசியல்லயும் சரியா நடிக்க வர்லை.. இன்னும் பக்குவப்படனும்.. இப்போ என்னை ஜெவை யும் எடுத்துக்குங்க.. எவ்வளவு திறமையா நடிக்கறோம்..அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் பத்தாது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqS4hYJwnWwJuNydfG72p_Bfbqv_XRXcQ8sliHQw8bTkoVGLV94VejAw4sQO5BB7bUE2IUvX7E11_79HeVlerO6CuHKDuv1VGs71XCGrcK6gfdldbAkkQQ9CYIoAL4cagPUQe2UnGvy4/s1600/kus.jpg
7. ''சரி... சினிமா பத்திப் பேசுவோம். உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் யாரு?'' 

''எனக்கு ஜோதிகாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு கம்ப்ளீட் ஹீரோயின். ரொம்ப வருஷம் கழிச்சு, இப்போ அனுஷ்காவைப் பிடிச்சிருக்கு. 'அருந்ததி’யில் பிரமாதமான பெர்ஃபார்மன்ஸ். நல்ல உயரம், நல்ல அழகு... நம்பர் ஒன் ஹீரோயினுக்கான எல்லா தகுதிகளும் அவங்களுக்கு இருக்கு!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல வேளை பிடிச்ச ஹீரோ யாருன்னு கேட்கலை.. பிரபுன்னு சொன்னா புருஷன் மூடு அவுட் ஆகிடுவாரு,, கார்த்திக்னு சொன்னா பிரபு மூடு அவுட் ஆகிடுவாரு.. இவங்க 3 பேர் கிட்டயும் சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே.. ஹய்யோ ஹய்யோ..


8. ''பலர் உங்களுக்கு ரசிகர்கள். நீங்க யாருக்கு ரசிகை?'' 

''நான் ஸ்கூல் படிக்கும்போது ரவி சாஸ்திரியோட ஃபேன். ஆனா, இதுவரை ஒரு தடவைகூட அவரை நேரில் பார்த்தது இல்லை. அது பெரிய வருத்தம். நடிகர்களில் நான் கார்த்திக் ரசிகை. 23 வருஷமா அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர் ஒரிஜினல் பேரான 'முரளி’ன்னு சொல்லித்தான் இப்பவும் நான் கூப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு அவர் பேரே தெரியாது. 'பெரியப் பா’ன்னு சொன்னாத்தான் தெரியும். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்!''


குஷ்புவின் மனசாட்சி -

நல்ல அப்பா.., நல்ல பெரியப்பா அமைஞ்சிருக்காங்க என் குழந்தைகளுக்கு.. .ஹி ஹி 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF5j849OuiTd-uJqg5LnuW8BqyJOMgKSIEZ1aD3w0vjeTDZuQ7TGNg-X02sxmqsOKS2jzeRVhFSPiX1idG8ShD3AWuZ3-96gFdTVJobjsIzQ1ZzCfYlFzOIkKewUQEf6-NcToqhFjZNMxJ/s1600/ileana_vedi.jpg
டிஸ்கி -1 : இந்த பேட்டி குஷ்புவைத்தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. ஹி ஹி  

டிஸ்கி 2 : குஷ்பூவின் குலப்பெருமையை கேவலப்படுத்தி விட்டார்..சி பி மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என யாராவது பதிவு போட நினைத்தால்.. வேணாம்ங்க.. ஏன் இந்த சிரமம்.. இங்கேயே இப்பவே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. ஹி ஹி ஈரோட்ல 10 ரூபாவுக்கு 5 மன்னிப்பு...


டிஸ்கி 3. - இலியானா ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்குன்னா ரொம்ப பழசா இருக்கே ஃபோட்டோக்கள் என யாரும் சலித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக..

Friday, March 18, 2011

சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய பெண்ணை செம ஃபிகர்,செம கட்டை என வர்ணிப்பது தவறா?ஆனந்த விகடன் அலசல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXsu1hsF-hokpG9x2WaB0l5102_tzJpThllMvUyxVKpcmzWwx9-N8VkbMioJ3fVJweBgyEQsJXW_d7Q9YWT8RIIMFjVcMvyylTRkn2ESBfLS34fXhhlUY0CyoNBrwoTdLTK6kwfSWXDcE/s400/Kanika-Plain-Silk-Indian-Saree--homelyheroines.blogspot.jpg 

சமீபத்தில் நான் ஒரு சினிமா விமர்சனம் எழுதும்போது ஹீரோயினின் அண்ணியை செம கட்டை என வர்ணித்து விட்டேன். அது பலரது மனங்களை சங்கடப்படுத்தியதாக நண்பரின் பதிவைப்படித்து வருத்தம் அடைந்தேன்.இனி அது போல் தவறு நேராமல் கவனமாக இருக்கிறேன் என பின்னூட்டம் இட்டேன்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரை பெண்களின் வலியையும்,அவர்களது மன நிலையையும் மனதை பாதிக்கும் வண்ணம் எழுதப்பட்டு இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!’ என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்! 

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்’, 'சுமார் ஃபிகர்’, 'சூப்பர் ஃபிகர்’ என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்’ என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா?

அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?’ என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!


யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும்.

அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். 
 http://www.our-kerala.com/newgallery/images/photos/images/Kanika_8608.jpg
ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ...  இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!
பொதுவாகவே, பெண்கள் 'வேண்டாம்’ என்றால், 'வேண்டும்’ என்று சொல்வதாக அர்த்தம் என ஒரு கருத்து நிலவுகிறது. 

எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்துமா? நிச்சயம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள பெண்களிடத்தில் எது கேட்டாலும், மனதில் உள்ளதைப் பட் படாரென்று உடைத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால், கட்டுப்பெட்டியாக, 'வாய்ப் பூட்டு’ சட்டம் இயற்றப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்களால் நினைத்ததை அத்தனை சீக்கிரம் வெளியில் சொல்லிவிட முடிவது இல்லை. அதனாலேயே மென்று விழுங்கி, மனம் 'ஆம்’ என்று சொல்ல, உதடுகள் 'இல்லை’ என்று சொல்லும் விபத்து நேர்கிறது.

என் நெருங்கிய தோழி செல்விக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் விரைவாக நடக்காது என்கிற பயத்தில் இருந்தனர் பெற்றோர். செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளை ஒருவர் வர, அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரமாக மணம் முடித்தனர். அவளோ நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவள். பாட்டு, நடனம் என்று எல்லா திறமைகளும் கொண்டவள்.

ஆளுமைத் திறன் வாய்க்கப்பெற்ற அவள் மட்டும் படிப்பை முடித்திருந்தால், ஒரு திறமையான அதிகாரியாக வலம் வந்திருப்பாள். ஆனால், எல்லாம் இருந்தும் அவளால் அவள் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியவில்லை. திருமணமாகிச் சில நாட்கள் கழித்து நான் அவளைப் பார்க்கச் சென்றபோது, வீட்டுக் கொல்லைப்புறத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்கிக்கொண்டு இருந்தாள். அப்படி அவளைக் காண நேர்ந்த அந்த துரதிஷ்ட கணம் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்.

'சிந்து பைரவி’ படத்தில் பாட்டு கற்றுக்கொள்ளும்போதும் சுலக்‌ஷனா மாடியில் காயப்போட்ட வடாம்பற்றி கவலைப்படுவதுபோல, பணியிடத்திலும் வீட்டைப் பற்றிய நினைவுகளிலேயே நீந்திக்கொண்டு இருப்பார்கள் பெண்கள். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் வரும் நிகழ்ச்சிகளும்கூட, பெண்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே இழுக்கின்றன. ஆனாலும், பொழுதுபோக்க வேறு வழி இல்லாத நிலையில், பெண்களும் சீரியல்களையே பார்க்கத் தலைப்படுகின்றனர். 

எப்படி வீட்டுக்கு வெளியே ஓர் உலகம் உண்டு என்பதைப் பெண் மனது நம்ப மறுக்கிறதோ, அப்படியே சீரியல்களைத் தாண்டிய நிகழ்ச்சிகளைத் தர நம் ஊடகங்களும் மறுக்கின்றன. அப்படியே வந்தாலும், சமையல், அழகுக் குறிப்புகள் என்று மீண்டும் மீண்டும் ஆணுக்காக ஒரு பெண்ணைத் தயார் செய்வதை மட்டுமே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்ன செய்ய... 'ஆணுக்கு உலகம் எல்லாம் வீடு... பெண்ணுக்கு வீடுதான் உலகம்’ என்று பெண்களையே நம்பவைத்த உலகம்! 

சேலை, சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட் என்று சாலைகளில், கோயில்களில், அலுவலகங்களில் எதிர்ப்படும் பெண்கள் விதவிதமானவர்கள். பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவளை எடை போடுவது இன்னமும் சமூக வழக்கமாக இருக்கிறது. பெண்கள் அணியும் உடையே ஈவ் டீஸிங்குக்குக் காரணம் என்று கருதி, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மட்டும் டிரெஸ் கோட் கெடுபிடிகள் அரங்கேறும். ஈவ் டீஸிங்குக்குப் பலியான சரிகா ஷா அணிந்திருந்தது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ்தானே?

பணி நிமித்தம் சொந்த ஊரில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களின் உலகம் பிறர் அறியாதது. இப்படியான ஊர்க் குருவிகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும், அதிகாலையில் எழ வேண்டும். இல்லையென்றால், குளிக்க பாத்ரூம் கிடைப்பதில் துவங்கும் அன்றைய சிக்கல். 

ஒரு சிறிய அறையில் நான்கைந்து கட்டில்கள் ஒட்டி ஒட்டி கிடத்தப்பட்டு இருக்கும். சில ஹாஸ்டல்களில் ரயில் பெர்த்போல படுக்கைகள் மேலும் கீழுமான அடுக்கடுக்காக இருக்கும். தூக்கக் கலக்கத்தில் எழுந்து தலையில் நச்சென்று மோதிக்கொள்வதில் புலரும் பலரின் பொழுதுகள். ஒரு சின்ன ஷெல்ஃபில் அத்தனை பேரின் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கே வாடகை நான்காயிரத்துச் சொச்சமாக இருக்கும். குருவிக் கூடு அறையில், நான்கைந்து பெண்கள் அவரவர் கனவுகள் அனுமதித்த எல்லைக்குள் உலவிக்கொண்டு இருப்பார்கள்.

விடுதி அறைத் தோழி ஒருத்தியின் அப்பா பல வியாதிகளோடு போராடிக்கொண்டு இருக்கிறார். அம்மாவும் அத்தனை சுகம் இல்லை. இவளுடைய சம்பளம்தான் அந்தக் குடும்பத்தின் ஜீவ நாடி. பெற்றோர் மேல் அத்தனை பாசம் இருந்தாலும், மாதம் ஒரு முறைகூட ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து வர மாட்டாள்.

விடுதித் தோழிகள் அவளைத் திட்டித் தீர்க்கவும் அதற்கான காரணத்தைக் கம்மல் குரலில் சொன்னாள் ஒருநாள், 'ஒரு தடவை நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, குறைஞ்சது ஆயிரம் ரூபா ஆகும். அந்தக் காசு மிச்சப்பட்டா, அது அப்பாவுக்கு ஒரு வாரம் மருந்துக்கு ஆகும்ல. நான் அங்கே போய் என்ன அவங்களுக்கு மருத்துவமா பார்க்கப் போறேன்?’

இன்னொரு தோழிக்கு காலை 4 முதல் 9 மணி வரை கால் டாக்ஸி அலுவலகத்தில் பகுதி நேர வேலை. அது முடிந்து அரக்கப் பறக்க ஹாஸ்டலுக்கு வந்து குளித்து அலுவலகம் செல்வாள். மாலை 6 மணிக்குத் திரும்பியதும் மீண்டும் கால் டாக்ஸி அலுவலகத்துக்கு ஓட்டம். இரவு 11 மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டு, எங்களோடு பேசி நாட்டு நிலவரம் அறிந்துகொண்டு, 12 மணிக்கு படுக்கையில் சாய்வாள். 

அடுத்த நாள் மீண்டும் 4 மணிக்கு அலாரம் அடிப்பதற்கு முன்னரே துடித்தெழுந்து ஓடிக்கொண்டு இருப்பாள். ஒரு முறை, மாதக் கடைசியில் ஹாஸ்டல் வார்டனிடம் விடுதிக் கட்டணத்தை எண்ணிக்கொடுத்துவிட்டு, கையில் மிச்சம் இருந்த பணத்தை வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள். தோள் தொட்டு உலுக்கியதும், ''இந்த ரூவா நோட்டு அத்தனையும் என் வேர்வைப்பா!'' என்றவளின் குரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!


நட்பும் காதலும்தான் பெரும்பாலான பெண்களை உற்சாகமுடன் இயக்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் நடந்துகொண்டே இயர்போனில் பேசியபடி செல்லும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். சிலர் திட்டியும் இருப்பீர்கள். கொஞ்சம் அவர்கள் அருகில் சென்று கேட்டுப் பாருங்கள். எவ்வளவுதான் நெருங்கிச் சென்று கேட்டாலும், அவர்கள் பேசுவது உங்கள் காதில் விழாது. அவ்வளவு மெல்லிய குரலில் பேசுவார்கள். 

பெற்றோருடன் வாழும் பெண்ணாக இருந்தாலும், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்ணாக இருந்தாலும், தனியாகப் பேசுவதற்கென பெண்களுக்கு சுதந்திரப் பிரதேசமே கிடையாது. ஆகவே, பலர் அருகில் இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை யாரும் அறியாதவாறு பேச நிர்பந்திக்கப்பட்டு, பரிணாம வளர்ச்சியாக அந்த மென் குரல் உரையாடல் கலையைக் கற்றுக்கொண்டது பெண்ணினம்.

ஓர் ஆண், பலர் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு போனில் 'ஐ லவ் யூ’ சொல்வது இங்கே ஃபேஷன். ஆனால், தன் நெருங்கிய தோழியாக இருந்தாலும்கூட, அவள் முன்னே அந்த மூன்று வார்த்தைகளை ஒரு பெண் சொல்ல முடியாத சூழல்!

நெருங்கிய தோழிகளாய் இருந்த எத்தனையோ பெண்கள் திருமணம் முடித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பறுந்து புகுந்த வீட்டில் ஒரு மெஷினாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கைச் சூழலின் வேதனையை ஒரு நாளேனும் உணர்ந்து இருக்கிறீர்களா? என்றேனும், எங்கேனும், உருவம் மாறி பருமனாகி, கையில் குழந்தையுடன், கவலை ரேகைகள் படர்ந்த முகத்துடன் சந்திக்க நேரும்போது, தோழியைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியைவிட, அவள் உருவம் அளிக்கும் உணர்வு மனதைப் பிசையும். 

'எப்படி இருக்கே?’ என்ற கேள்விக்கு, 'நல்லா இருக்கேன்!’ என்று சம்பிரதாயமாக உதடுகள் சொன்னாலும், காட்டிக்கொடுக்கும் கண்களை என்ன செய்ய முடியும்?

கிண்டி தொழிற்பேட்டை அருகே, ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை, மாலைகளில் சென்னையில் எங்குமே காணக் கிடைக்காத தாவணி அணிந்த பெண்களைக் காண முடியும். எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பலர் 9 மணிக்குள் அலுவலகத்தினுள் இருக்க வேண்டும். 

10 நிமிடங்கள் தாமதமானாலும்கூட அரை நாள் விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அற்ப சொற்ப சம்பளத்தில் அதுவும் பிடித்தம் செய்யப்படும். அந்த அயோக்கியத்தனத்துக்குப் பயந்து, அந்தப் பெண்கள் காலையில் பேருந்து ஒவ்வொரு ஸ்டேஜைக் கடக்கும்போதும் மணி பார்த்துப் பார்த்து நகத்தைக் கடிக்கும் தவிப்பு நமக்கே பதற்றத்தை உண்டாக்கும். 

ஸ்டேஜ் க்ளோஸிங் என்று பேருந்து ஓரங்கட்டி நிற்க, அழாக்குறையாக அந்தப் பெண்கள், 'அண்ணே... அண்ணே வண்டிய எடுங்கண்ணே! வெளில நிக்க வச்சுருவாங்கண்ணே!’ என்று கெஞ்சிய முகங்களைப் பார்த்தால் எவருக்கும் மனம் கலங்கும். தங்களுக்கு பவுடர், பொட்டு வாங்குவதற்கோ... ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற நவநாகரிக ஆடைகள் வாங்குவதற்கோ அந்தப் பெண்கள் தங்கள் ஆயுளைத் தேய்த்துத் தீய்த்து உழைப்பதில்லை. குடும்பத்தினரின் மூன்று வேளை உணவுக்காகத்தான் இந்தப் பாடு!

பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் இல்லாத பணியிடங்கள் வாய்ப்பது இல்லை. பேருந்தில் உரசும் வக்கிரத்தில் இருந்து அலுவலக ஃபைலுக்கு அடியில் விரல் தடவும் எதேச்சதிகாரம் வரை அனைத்தையும் கடந்துதான் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண்.

ஓர் ஆண் தன் பணியில் முன்னேறி மேலே சென்றால், அவனது திறமை காரணம் என்று புகழும் உலகம், அதையே ஒரு பெண் சாதித்தால், 'வேறு வழி’யில் சாதித்தாள் என்று புறம் பேசும். தன் உழைப்பில் தன்னைச் சார்ந்தவர்களை வாழவைக்கும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற, ஒரு பெண் கடக்க வேண்டிய பாடுகள் சொல்லி மாளாது.

எது எப்படியோ, பெண்களின் வியர்வையும் கண்ணீரும் சமமாகக் கலந்திருக்கும் சமுத்திரத்தின் நீர்தான் ஆவியாகி ஆண்களின் உலகில் மழையாய்ப் பெய்து வளமாக்குகிறது!

Saturday, March 05, 2011

கூட்டு களவாணிகள் ரெண்டு பட்டதால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/Specials/athiradi%20saravedi/thamizharuvi-manian.jpg
டாக்டர் கலைஞர் சிறந்த ராஜ தந்திரி தான். ஆனால் இலங்கைத்தமிழர்களின் சாபமும்,மீனவர்களின் கண்ணீரும்  அவரை துரத்துகிறது.இப்போ இல்லாட்டி எப்போ என காங்கிரஸ் நினைக்கிறது.பாலைவன ஒட்டகத்துக்கு கூடாரத்தை கொடுத்த கதை ஆகி விடக்கூடாது என தி மு க நினைக்கிறது.

இந்த சமயத்தில் தமிழருவி மணியன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.இது விகடனில் வந்தது.



கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

karunaanithi தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.


காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!


ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது – உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!


ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 

‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.


‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?


‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்?

சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!


அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை.

‘அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?


‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?


‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி – 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).


நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர்.


‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! ‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே?

‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!


கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். 

அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள்.

இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!


‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! 

அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்;

சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூ​னிஸ்ட்’ என்று ‘நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! 

நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். 

இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!


ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா?

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?


ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?

நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!


இப்படிக்கு,
ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,
தமிழருவி மணியன்

Monday, February 14, 2011

அடுத்த வாரம் ஆனந்த விகடன்-ல் வரப்போகும் காதலர் தினம் ட்வீட்ஸ்


http://chabrieres.pagesperso-orange.fr/paintings/magritte_lovers_1928.jpg
1. ஆஃபீஸ்ல யாருக்கும் இனைக்கு லீவ் இல்லைன்னு மேனேஜர் சொல்லீட்டாரு.. 8 மணி நேரம் பர்மிஷன் மட்டும் கேட்டுப்பாக்கலாமா? #முயற்சி

----------------------------------------------
2. லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா

-----------------------------------------

 3. காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு

--------------------------

4. பிட்டுப்படம் ஓடற தியேட்டர் எல்லாம் இனைக்கு காத்து வாங்கும்.பீச்ல, பார்க்ல லைவ் ஷோ பார்க்க லைன் நிக்குது.நான் ரெடி.. நீங்க?

------------------------------------------

5. கள்ளக்காதல் ஜோடியை எப்படி அடையாளம் காண்கறது?துப்பட்டாவால முகத்தை மட்டும் மூடி இருப்பாங்க #உல்லாசங்கோ,உற்சாகங்கோ.

--------------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPcw8W3LP-oojjN0l1srZzjoP_09FSRZXVGBI5xdj2dBbxp7VWlOFjH73nGkH3UoqrfVJu7UngKMQnBB_76SiyB80ob-uDzXLB5epzg6pzcpLp42byRQbl8VhmI4rRdnEyc24qFmd1bBA/s640/south-indian-aunty-at-chennai-marina-beach-600x450.jpg


 6.  காதலர் தினம்னு ஏன் பேரு? காதலி தினம் ஏன் இல்லை? பொண்ணுங்க தான் ஆள் மாத்துவாங்க#ஆணாதிக்கம் வாழ்க

-----------------------------------------------------


 7. ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14

------------------------------------------------

 8.  பீச்ல ஒரு பொண்ணும், 2 பசங்களும் ஜோடியா போனா  அது த்ரீ வே லவ்.ஒருதலைக்காதல் அல்லது தறுதலைக்காதல்#கலியுகம்

---------------------------------------------------

9.  இன்னைக்கு மட்டும் லேட்டா வீட்டுக்கு வந்தா சந்தேகப்படுவேன் - மனைவி.

நேரத்துலயே வந்தா?   ஹி ஹி சந்தோஷத்துல மேல படுவேன்.

-------------------------------------------
10. காதலி உள்ளவன் ஒரே ஒரு ஃபிகரை தள்ளீட்டு போறான்.இல்லாதவன் பல ஃபிகருங்களை கண்ணால அள்ளீட்டு போவான்.

-----------------------------------------------

 டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.இந்த ட்வீட்ஸ் எல்லாமே நான் எழுதுனதுதான். நான் எழுதுனதை நானே ரசிக்கலைன்னா எப்படி?இதுல எல்லாத்தையும் விகடன்ல செலக்ட் பண்ணாட்டியும் ஒண்ணாவது தேறும்னு நினைக்கறேன்.

டிஸ்கி 2 - மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல. 2வது ஸ்டில்லுல இருக்கற ஆண்ட்டி ( நான் கரெக்டாதானே சொன்னேன்?- சங்கிலி முருகன்)
யாருன்னும் எனக்கு தெரியாது.. ஹி ஹி

Thursday, February 03, 2011

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள் -ஆனந்த விகடன் வலைபாயுதே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi86qDxL5w9mVT_zvgvziIPmlGSs6zbcY_i5F7dmk7nRDKm2oL0-cbT1PQAnxo6Zu-kDIQ6Dz6W2P-R665jSvOoWeOHuWHnvv6KsQDH6997la1UJw4Dsh2tDrWUooWbA_S2E5FHuJFaaXQ/s1600/karunanidhi_kanimozhi_maran_20090608.jpg
நேற்று ஆ ராசா அரெஸ்ட் நியூஸ் வந்ததும் ட்விட்டர் பக்கம் போனா நம்ம ஆளுங்க தி மு க வை பொளந்து கட்டிட்டு இருந்தாங்க.. அப்போதான் ஒரு ஐடியா தோணுச்சு.. வழக்கமா மொக்கை படத்தை பார்த்து இதுக்கு எத்தனை மார்க் விகடன்ல போடுவாங்கன்னு கேவலமா ஒரு கணிப்பு போடுவமே.. அதே மாதிரி அடுத்த வார விகடன்ல எந்தெந்த ட்வீட் செலக்ட் ஆகும்னு பாக்கலாம்னு  உக்காந்தேன்.


சும்மா சொல்லக்கூடாது.. 3 மணி நேரத்துல நம்மாளுங்க 1438 ட்வீட்  ட்வீட்டீட்டாங்க..அதுல எதெல்லாம் அடுத்த வார விகடன்ல செலக்ட் ஆகும்னு  ஒரு கெஸ் பண்ணி இருக்கேன். வழக்கம் போல இதுவும் சொதப்புனா யாரும் என்னை திட்டக்கூடாது..

»1.
gulf- tamilan

RT @: @ ஒருவரை கைது செய்து நீதிமன்றம் தண்டித்தாலேயே அவர் குற்றவாளி என்றில்லை. இப்படிக்கு கலைஞர்

----------------------------------------------------------
2.
gulf- tamilan

RT @: நெஞ்சுவலி நாடகம் எப்போது? #ராசா #கைது. .


_--------------------------------------------------------------------

 3
ராஜன்

ஆ ராசா அரெஸ்ட்டு! தாத்தா 80 சீட்டு குடுக்காத்தால் சொக்கத்தங்கம் சோனியா செருப்படி!
4 minutes ago Favorite Retweet Reply 

-----------------------------------------------------------------------
4  
Sangkavi

ராஜா ஜாமீனில் விடுதலை இது நாளைய தலைப்பு செய்தி? #டவுட்டு

-----------------------------------------------------------
5.
Saravanan

இதனால் தாத்தா-ஆத்தா கூட்டணியில் தற்போதைக்கு ஆத்தாவின் கை ஓங்கியிருக்கிறது. கூடுதல் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்..!

---------------------------------------------------------
 http://new.vikatan.com/news/images/dec18.jpg
6.
ராஜன்

RT @: அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்?

-----------------------------------------------
7.
Santhappanசாந்தப்பன்

RT @: இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா?

---------------------------------------------------
8.
ராஜன்

RT @: ஊழலுக்காக, திமுகவை ஆரம்பித்த அண்ணா ஃபீல் பண்ணுனாருன்னா, காந்தி, அன்னிபெசன்ட், நேரு-லாம் ரத்த கண்ணீர் வடிக்கனும்!

--------------------------------------------
c.p.senthilkumar

போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே.
3 minutes ago Favorite Reply Delete 

------------------------------------------------------------
10
c.p.senthilkumar

நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்

---------------------------------------------------
11
ராஜன்

கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே’’

-------------------------------------------
12  .RAHEEM  GAZALI:  புள்ளிராஜாவுக்கு  எய்ட்ஸ் வருமா?
ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு பெயில்வருமா?


---------------------

டிஸ்கி - இதுல 9வதும், பத்தாவதும் என்னுடையது..இவை விகடன்ல செலக்ட் ஆகும்னு சொல்ல முடியாது.. இருந்தாலும் நம்ம சரக்கு கொஞ்சமாவது இருக்கனுமேன்னு போட்டிருக்கேன்..சுய தம்பட்டம்னு யாரும் நினைச்சுக்க வேணாம்.