Monday, January 01, 2024

கூஸ் முனுசாமி வீரப்பன் (2023) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா) @ ஜீ 5

 


சமீபத்தில்தானே  நெட்  ஃபிளிக்ஸில்  வீரப்பன்  வெப்சீரிஸ்  பார்த்தோம், அதுக்குள்ள  இன்னொண்றா? இதுல  பெருசா, புதுசா  என்ன இருந்துடப்போகுது? அரைச்ச  மாவையே  அரைச்சிருப்பாங்கனு  அசால்ட்டா  அதை  ஸ்கிப்  பண்ணி  இருந்தேன் , ஆனால் பலரும்  அந்த  வெப்சீரிஸ்  வேற  லெவல்  என  விமர்சித்ததால்  பார்த்தேன்.  பல  புதிய  தகவல்கள்  கிடைத்தன. பார்க்கலாம், சுவராஸ்யமாகத்தான் இருந்தது 


இதில்  ஆறு  எபிசோடுகள் ஒவ்வொன்றும் 45  நிமிடங்கள், ஆக  மொத்தம்    நான்கரை  மணி  நேரம்  ஒதுக்கினால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம். முதல்  3  எபிசோடுகள்  செம  விறுவிறுப்பு , பரபரப்பு , த்ரில்  எல்லாம்  உண்டு . நான்காவது  எபிசோடு  வீரப்பன்  ஏரியாவில்  குடி இருந்த  மக்களை  போலீஸ்   எப்படி  எல்லாம்  டார்ச்சர்  பண்ணியது ? என்பது இதை  பலவீன  இதயம்  கொண்டவர்கள்  ஸ்கிப்  பண்ணி  விடலாம். ஐந்தாவது  எபிசோடு  வீரப்பனைக்காட்டிக்கொடுத்தவர்களை  வீரப்பன்  எப்படி  எல்லாம்  பழி  வாங்கினான்  என்பது. இதிலும்  வன்முறை  அதிகம், எனவே  4 , 5  ஸ்லோ  தான்

நக்கீரன்  கோபால் , சீமான் , இந்து  என்  ரம் , ராகினி ரகுவரன், வீரப்பனின்  மகள்  ஆகியோரின்  பேட்டி  அங்கங்கே  அட்டாச்  பண்ணி  இருந்தது  சுவராஸ்யம். நெட்  ஃபிளிக்ஸ்  வீரப்பன்  வெப்  சீரிஸில்  வீரப்பனின்  மனைவி  பேட்டி இடம்  பெற்றிருந்ததால் இதில்  மகள்  பேட்டி  இடம்  பெற்றது  புத்திசாலித்தனமான  மூவ் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வீரப்பன் 13  வயதிலேயே  வேட்டை  ஆட  துப்பாக்கி  எடுத்து  விட்டான். யானைகளை  முதலில்  வேட்டை  ஆடினான். யானைத்தந்தங்கள்  தான்  டார்கெட். வனத்துறை  அதிகாரிகளுக்கு  லஞ்சம்  கொடுத்து  தந்தங்களை   விற்றான்


வீரப்பனுக்கு  துப்பாக்கி  போன்ற  ஆயுதங்கள்  தேவைப்படுகிறது. ஒரு  புரோக்கரை  நாடுகிறான். அந்த  புரோக்கர்  வீரப்பனைக்காட்டிக்கொடுக்கிறான். ஒரு  ஹோட்டலில்  சாப்பிட  அழைத்துச்சென்று  போலீசில்  மாட்டி  விடுகிறான். அதுதான்  வீரப்பன்  முதலும்  கடைசியுமாக  போலீசில்  (உயிருடன்)மாட்டியது . லாக்கப்பில்  வைத்திருந்திருக்கிறார்கள் . அங்கிருந்து  தப்பி   விடுகிறான்.


வீரப்பனைப்பிடிக்க  சீனிவாஸ் என்னும்  டி எஃப்  ஓ  நியமிக்கப்படுகிறார். பல  கெட்ட  போலீஸ்  ஆஃபீசர்கள் , மோசமான  காட்டிலாகா  அதிகாரிகள்  இடையே   சீனிவாஸ்  நல்லவராக  இருக்கிறார். கிராம  மக்களின்  அன்பைப்பெறுகிறார். கிராம  மக்களின்  உறவினர்  போல  அவர்களுடன்  கலந்து  விடுகிறார்


 வீரப்பனின்  தங்கை  ஒரு  விதவை. குழந்தைகள்  உண்டு . டிஎஃபோ  சீனிவாஸ்க்கும்  , வீரப்பனின்  தங்கைக்கும்  பழக்கம்  உருவாகிறது தன்னைப்பிடிக்க்த்தான்  அவர்  தன்  தங்கையுடன்  பழகுகிறார்  என்ற  எண்ணம்  வீரப்பனுக்கு  ஏற்படுகிறது. வீரப்பனின்  தங்கை  வேறு  இரு  போலீஸ்  ஆஃபீசர்களால்  ரேப்  செய்யப்படுகிறார்..இதனால் வீரப்பனின்  தங்கை  தற்கொலை  செய்து  கொள்கிறார்


 தன்  தங்கையின்  சாவுக்கு  பழி  வாங்க  வீரப்பன்  சீனிவாஸை  தண்டிக்க  நினைக்கிறான். .தன்  தம்பி  மூலம்  தூது  விட்டு  தான்  சரணடையத்தயார், தனியாக  வந்து  தன்னை  சந்திக்க வேண்டும்  என  நிபந்தனை  விதிக்கிறான்  வீரப்பன். டிஎஃப் ஓ  சீனிவாஸ்  வீரப்பனின்  தம்பியுடன்  குறிப்பிட்ட  இடத்துக்கு  வந்ததும்  வீரப்பன்  அவரைப்போட்டுத்தள்ளி  விடுகிறான்


கோபால  கிருஷ்ணன்  என்ற போலீஸ்  ஆஃபீசர்  வீரப்பனைப்பிடிக்க  வருகிறார். அவர்  கெட்டவர்  ஆக  இருக்கிறார். கிராம  மகக்ளின்  ஆடுகளை  ஆட்டையைப்போட்டு  சாப்பிடுகிறார். அவர் , அவரது  சகாக்கள் , உறவினர்  என 1000  ஆடுகள்  திருடி  சாப்பிட்டதாக  சொல்லப்படுகிறது. இவரை  வீரப்பன்  கொடூரமாக  தாக்குகிறான்


யானைத்தந்தங்கள்  ஏற்றுமதிக்கு  தடை  விதிக்கப்பட்ட  பின்  வீரப்பன்  யானைகளைக்கொல்வதை  நிறுத்துகிறான், அடுத்த  டார்கெட்  சந்தன  மரங்களை  வெட்டுவது . அரசியல்வாதிகள் , அதிகாரிகளும்  இவனுக்கு  உடந்தை


ஒரு  கட்டத்தில்  வீரப்பனைப்பிடிக்க  தேவாரம்  நியமிக்கப்படுகிறார், கர்நாடகா  போலீஸ் , தமிழக  போலீஸ்  இருவரும்  ஒன்று  கூடி  ஒரே  அணியாக வீரப்பனைத்தேடும்  படலத்தில்  இறங்குகிறார்கள் 


 வீரப்பனுக்கு  மளிகை  சாமான்கள், அரிசி , உணவுப்பொருட்கள்  சப்ளை  செய்தவர்கள் , செய்ததாக  ச்ந்தேகப்படுபவர்களை  அவர்கள்  குடும்பத்தை  போலீஸ்  ஒர்க் ஷாப்  என்ற  பெயரில்  கொடுமைப்படுத்தி  சித்ரவதை  செய்கிறது


போலீசின்  கொடுமை  தாளாமல்  வீரப்பன்  இருக்கும்  ஏரியாவைக்காட்டிக்கொடுத்தவர்களை  வீரப்பன்  கொடூரமாக  கொலை  செய்கிறான். மத்தளத்துக்கு  இரண்டு  பக்கமும்  இடி  என்பது  போல  கிராம  மக்கள்  போலீசால் , வீரப்பனால்  கொடூர  துன்பத்துக்கு  ஆளாகின்றனர் 


முதல்  பாகம்  இத்துடன்  முடிவடைகிறது . ராஜ்குமார்  கடத்தல்  அடுத்த  பாகத்தில் வரும்  என  ; லீடு  கொடுத்து  முடிக்கிறார்கள் 


சதீஷ்  ரகுநாதனின்  இசை  அருமை . பின்னணி இசையில்  பரபரப்பு  ஊட்டுகிறார்.ராஜ்குமாரின்  ஒளிப்பதிவில்  காடுகளின்  அடர்த்தி , பிரம்மாண்டத்தைக்கண்  முன்  நிறுத்துகிறார்.


சர்த்  ஜோதி  தான்  இயக்கம்.  எங்கே  உண்மை சம்பவங்களைக்காட்ட  வேண்டும்? எந்த  இடத்தில்  பிரபலங்களின்  பேட்டி  இடம்  பெற  வேண்டும்  என்பதை  எல்லாம்  தெளிவாகத்தெரிந்து  வைத்திருக்கிறார்.


 சர்த்திரப்புகழ்  பெற்ற  ஒரு  குற்றவாளியின்  வாழ்க்கை  வரலாறைக்கண்  முன்  காண்பது  போல  படம்  ஆக்கி  இருக்கிறார். தாக்குதலை  எப்படி  நடத்தினேன்  என  வீரப்பனே  மோனோ  ஆக்டிங்  செய்து  காட்டும்  காட்சிகள்  எல்லாம்  அபாரம்


  சபாஷ்  டைரக்டர்


1  வீரப்பன்  தரப்பு  நியாயத்தை  அதிகம்  பேசுகிறது  இந்த  வெப்  சீரிஸ். இதற்கு  முன்  வீரப்பன்  கதைகளைப்பேசிய  கேப்டன்  பிரபாகரன் , அசுரன் , நெட் ஃபிளிக்ஸ்  வெப்  சீரிஸ்  எல்லாமே  அரசு  தரப்பு  நியாயத்தை  மட்டுமே  முன்  நிறுத்திப்பெசியது. இதில்  வீரப்பன்  தரப்பு  நியாயத்தைப்பேசுகிறது.


2  வீரப்பன் மோசமான  போலீஸ்காரர்களைத்தான்  கொன்றான், மக்களுக்கு  இடையூறாக  இருந்த  போலீஸ்  ஆஃபீசர்களைத்தான்  கொன்றான்  என்ற்  வாதம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய  அளவில்  வைக்கப்பட்ட  விதம்  குட் 


3  வீரப்பனுக்கு  ஆதரவாக  நக்கீரன்  கோபால்., சீமான், ரோகினி  ஆகியோர்  பேசிய  கருத்துக்கள்  பொதுவான  நல்ல  கருத்துக்களாகவே  தோன்றுகிறது . வீரப்பனுக்கு  எதிராக அல்லது  அரசுக்கு  ஆதரவாகப்பேசிய  இந்து  என்  ராம்  மற்றும்  பத்திரிக்கையாளர்  கருத்துக்களும்  நன்று 


4  டாக்குமெண்ட்ரி  படமாக  இருந்தாலும்  ஆட்டோ  பயோகிராஃபி  த்ரில்லர்  படத்துக்கு  உரிய  விறுவிறுப்புடன்  படம்  ஆக்கிய  விதம்  அருமை 


5  வீரப்பனின்  அம்மா  சீரியசாம  இருக்கும்போது  வீரப்பன்  வந்து  அவரைப்பார்த்து  விட்டு  செல்வதும் , அம்மா  மரணம்  அடைந்த  பின்  இழவுக்கு , சவ  அடக்கத்துக்கு   வீரப்பன்  எப்படியும்  வருவான்  என  போலிஸ்  காத்திருப்பதும், வீரப்பன்  வராமல்  இருப்பதும்  பரப்ரப்பான  காட்சிகள் 


  ரசித்த  வசனங்கள் 


1  நக்கீரன் கோபால் -  ஒரு  கொலை  காரனை  வீரன்னு  சொல்லக்கூடாது , ஆனாலும்  அவன்  வீரன்  தான் 


2  ஃபோட்டோவில்  பார்க்க  காச நோய்  வந்தவன்  மாதிரி  இருக்கான், இவனா  இத்தனை  கொலைகள்  பண்ணி  இருப்பான்னு  முதல்ல  நினைச்சேன், ஆனா  நேரில்  பார்க்கும்போது  துப்பாக்கியுடன்  அவன்  அமர்ந்திருக்கும்  ஆகிருதியைப்பார்த்து  ஒர்த்  தான்  என  நம்பினேன்


3  வீரப்பன் =  நான்  எப்போதும்  பொய்  பேச  மாட்டேன், ஆனா  என்  எதிரிகளை  அழிக்க  மட்டும்  பொய்  பேசுவேன்


4 வீரப்பன் =   இந்த  போலீசுக்கெல்லாம்  யாரு  ட்ரெய்னிங்  கொடுக்கறது? இப்படியா  ஓப்பன்  ப்ளேஸ்ல  நின்னு  மாட்டுவாங்க? சுட்டுடுவாங்கனு  தெரியாதா? பாவம் 


5   வீரப்பன் =  எய்மே  இல்லாம  கண்டமேனிக்கு  சுடறாங்க , கிட்டத்தட்ட  5000  புல்லட்ஸ்  வேஸ்ட்  பண்ணி  இருப்பாங்க , ஆனா  நாங்க  அப்படி  இல்லை, குறி வெச்சு  சுட்டா ஆள்  அவுட் 


6 வீரப்பன் =    கோபாலகிருஷ்ணன்னு  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  அவன்  கதையை  சொல்லியே ஆகனும், வீரப்பனைப்பிடிக்கறேன்னு  சொல்லிட்டு  1000  ஆடுகளை  ஆட்டையைப்போட்டு  வெட்டி  சாப்பிட்டுட்டான்


7  வீரப்பன் =    கோபாலகிருஷ்ணனை  கோபப்படுத்துனா  கோபமா  என்னைத்தேடிட்டு வருவான்னு  எனக்குத்தெரியும், 14  இடத்துல  கண்ணி  வெடி  வெச்சிருந்தேன். வந்து  மாட்டிக்கிட்டான், பஸ்  பீஸ்  பீஸா  வெடிச்சு  சிதறிடுச்சு, இனி  அவனால  ஆடு  திருட  முடியாது 


8   எப்பவுமே  போலீஸ்  தன்னைப்பாதுக்காத்துக்கிட்டு  மத்தவங்களை  முன்னிலைப்படுத்திதான்  வியூகம்  வகுக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வீரப்பன்  உயிருடன்  இருந்தவரை  வீரப்பனை  மரியாதையாகப்பேசிய  நக்கீரன்  கோபால்  வீரப்பன்  இறந்த  பின் இப்போது  அவன்  இவன்  எனறு  பேசுவதைப்பார்க்கும்போது  ஓபிஎஸ்   ஜெயலலிதா  உயிருடன்  இருக்கும்போது  அம்மா  என  ஓவராக  பம்மி  விட்டு  ஜெ  இறந்த  பின்  அவரைப்பெயர்  சொல்லியே  குறிப்பிடுவது  போல  உறுத்துகிறது 


2   வீரப்பன்  மீடியா  அடிக்ட்  ஆகி  இருக்கிறான், புகழ்  போதை  தேவைப்படுகிறது  என்பதை  தெரிந்து  கொண்ட  பின்பும்  போலீஸ்  வீரப்பனைப்பிடிக்க  பத்திரிக்கையாளர்  கெட்டப்பில்  போய்ப்பிடிக்க  முயலவில்லை . அது  ஏன் ? ஒரு முறை  அந்த  முயற்சி  எடுத்த  போது  கேமரா  கூட  இல்லாமல்  வெறும்  கையுடன்  போய்  வீரப்பனிடம்  மாட்டிக்கொள்வது  ஏன்?  அந்த  அடிப்படை  அறிவு  கூடவா  போலீசுக்கு  இல்லை ? 


3  வீரப்பன்  தன்  அரசியல்  நிலைப்பாடுகளை  ஜாதி  சார்ந்துதான்  எடுத்து  இருக்கிறான்  என்பது  தெரிகிறது .தான்  ஒரு  வன்னியர்  என்பதை  ஓப்பனாக  சொல்பவன்  டாக்டர்  ராம்தாசை  ஆதரிப்பதாக  சொல்கிறான். பாமக  உடன்  கூட்டணிக்கட்சி  என்பதால்  திமுக  வை  ஆதரிப்பது  ஓக்கே , ஆனால்  அதிமுக  வை , ஜெ  வை  ஏன்  எதிர்க்கிறான்  என்பதற்கு  பதில்  இல்லை 


4  வீரப்பன் ரஜினி  ரசிகனாக  இருந்திருக்கிறான். ரஜினி  அரசியலுக்கு  வருவதை  ஆதரிக்கிறான். ஆனால்  விஜயகாந்த்  அரசியல் பிரவேசம்  குறித்து  கருத்து  எதுவும்  தெரிவிக்க  வில்லை 

5  கிராம  மக்களை , பெண்களை  ரேப்  செய்து  கொலை  செய்த  போலீசார்  வீரப்பனின்  மனைவியை , மகளை  எப்படி  விட்டு  வைத்தார்கள் ?  என்ற  கேள்விக்கும்  பதில்  இல்லை 

6  நக்கீரன்  கோபால் தன்  பேட்டியில்  போலீஸ்  ஆஃபீசர்களை  மரியாதை  இல்லாமல்  அவன் , இவன்  என்று  அழைப்பது  ஏன் எனத்தெரியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கொடூர  சித்ரவதைக்காட்சிகள்  உண்டு . இதய  பலகீனம் உள்ளவர்கள்  4 ம்  எபிசோடை  ஸ்கிப்  செய்யவும் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    அவசியம்  காணவேண்டிய  ஒரு  க்ரைம்  டாக்குமெண்ட்ரி  டிராமா . ரேட்டிங்  3.25 / 5 



Koose Munisamy Veerappan
Official Poster
GenreTrue crime docuseries
Created byJeyachandra Hashmi, Prabbhavathi RV, Vasanth Balakrishnan
Based onVeerappan
Written byJeyachandra Hashmi, Sharath Jothi, Vasanth Balakrishnan
Directed bySharath Jothi
Music bySatish Raghunathan
Country of originIndia
Original languageTamil
No. of episodes6
Production
ProducerPrabbhavathi RV
CinematographyRaj Kumar PM
EditorRam Pandian
Running time256 mins
Production companyDheeran Productions
Original release
NetworkZEE5
Release14 December 2023