Thursday, July 29, 2010

ராகுல்காந்தி கலைஞருக்கு வைத்த முதல் செக்

கோவை செம்மொழி மாநாடு நடத்தி காங்கிரசை வியக்க வைத்து கூட்டணிக்கு மாற்று யோசனை இல்லாமல் பண்ண வேண்டும் என கலைஞர் நினைத்தார்.ஆனால் ஜெ அதிரடியாக அதே கோவையில் அதே அளவு கூட்டத்தை கூட்டி தி.மு.க வின் வயிற்றில் புளியை கரைத்தார்.
பதிபக்தி இல்லாதவர் என ஜெ சோனியாவை விமர்சித்ததை காங்கிரசார் மறந்துவிடக்கூடாது என கலைஞர் புலம்பும் அளவுக்கு ஜெவின் கோவைக்கூட்டம் அபரிதமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
கவர்னரை மாற்றுவது என.தேர்தல் சமயத்தில் தி.மு.க கள்ள ஓட்டு தில்லுமுல்லுகள் செய்துவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை அதிகாரப்பூர்வமாகவும்,ஒரு முறை ரகசிய விசிட்டாகவும் ராகுல் தமிழகத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகக்கூட கலைஞரை சந்திக்காமல் சென்றது பரப்ரப்பாக பேசப்பட்டது.கலைஞரை,அவர் கூட்டணியை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.விஜய் தானாக முன் வந்து இளைஞர் காங்கிரசில் இணைவதாக சொன்னபோது கூட அவர் மறுத்தது
தமிழகத்தில் அவர் தனித்து கோலோச்ச விரும்புகிறார் என்றே நினைக்க வைக்கிறது.
விஜய்காந்துக்கு 12% ஓட்டு பரவலாக தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் இருப்பது அவர் கவனத்துக்குகொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ராகுல் விஜய்காந்த் கூடவோ ஜெ கூடவோ ,அல்லது இருவருடனும் ஒரே கூட்டணி ஏற்படுத்த விரும்புகிறார் என்றே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது்
ஜூனியர் விகடனில் வெளியான “அரசியல் எனக்கு சலித்து விட்ட்து,ஆளை விடுங்க” என கலைஞர் சலித்துகொண்டது ராகுலின் இந்த கவர்னர் மாற்றம் ஐடியாவின் அடிப்படையில் தான்.
கூட்டணியை தொடர விரும்புவர்கள் ஏன் கவர்னரை மாற்ற வேண்டும் என கலைஞர் அன்பழகனிடம் புலம்பியதாகதெரிகிறது.
ஆ.ராசாவின் அபாரமான ஊழலும் ராகுலின் அதிருப்திக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.

22 comments:

Admin said...

என்ன சொல்வது.... அரசியலில் எல்லாமே சகஜமப்பா...

Unknown said...

கலைஞர் தேர்ந்த அரசியல் புலி... ராகுல் புதிய ஆடு...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சந்துரு வருகைக்கும் கருத்துக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

k r p சார்,நீங்க சொல்றது மெத்த சரி.அவ்ரது அனுபவ ஆண்டுகள் கூட ராகுலின் வயது இருக்காது

Robin said...

//யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை. // இந்தியாவின் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் நன்றாகத்தான் இருக்கிறது, குறைபாடுகள் இருந்தாலும்.

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ராபின் சார்.பீகாரோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ தேவலை.நிஜம்தான்

R.Gopi said...

என்ன தான் ராகுல் ஆயிரம் ஐடியா பண்ணினாலும், நம்ம “தல”யோட நுண்ணரசியலுக்கு முன்னாடி ஒண்ணும் செல்லாதுன்னே தோணுது...

என்னமோ திட்டம் இருக்கு....

raja said...

எப்படி எந்த நேரத்துல ஆப்பு வைக்கிறதுன்னு பெரிசுக்கு ரொம்ப நல்ல தெரியும்.... ராகுல் ஜஸ்ட் கான்வென்ட் பாய்.... அவ்வளவே... மண்டை அடிமட்டத்து வரை இன்னும் தொடர்புலயே இருக்கும்..

Robin said...

//முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ராபின் சார்.பீகாரோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ தேவலை.நிஜம்தான்// புள்ளி விவரங்களை தெரிந்துகொண்டு பேசுங்கள். தமிழகத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை என்ன, மற்ற மாநிலங்களில் எவ்வளவு? எப்போதும் தமிழகத்தைப் பற்றி நெகட்டிவாக பேசுவதே பதிவுலகில் வாடிக்கையாகிவிட்டது. வட இந்தியர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழர்களின் வளர்ச்சி இருக்கிறது என்பதுதான் உண்மை.

Robin said...

குற்றங்குறைகளை சொல்வது நல்லதுதான். ஆனால் எப்போதும் எதிர்மறையான விடயங்களைப் பேசியே புலம்பிக்கொண்டிருந்தால் சோர்வுதான் ஏற்படும், தன்னம்பிக்கை ஏற்படாது.

Robin said...

முன்பெல்லாம் தமிழர்கள்தான் வட இந்தியாவுக்கு சென்று வேலை பார்த்தனர். இன்று நிலைமை என்ன, வட இந்தியர்கள் பலர் வேலைக்காக தென்னகம் நோக்கி வருவதை பார்க்க முடிகிறதல்லவா?

Anonymous said...

//யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை. //

எங்கே செல்லும் இந்த பாதை.... ன்னு பாடிக்கிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் நண்பரே...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

Chitra said...

எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.


....... ம்ஹூம்... அதானே!

சி.பி.செந்தில்குமார் said...

கோபி சார்,உங்க வாக்கு பலிக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜா,கலக்க்றீங்களே கமெண்ட்ல

சி.பி.செந்தில்குமார் said...

ராபின் சார் சரண்டர்.விஸ்வநாதன் ஆனந்த் உட்பட தமிழர்களை தலை நிமிரச்செய்தவர்கள் பலர் உண்டு.நான் குறைத்து மதிப்பிடவே இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

தருமி அண்ணே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சித்ரா மேடம்,அரசியல் பதிவைக்கூட ஆர்வமா படிச்சதுக்கும்.க்மெண்ட்டுக்கும் நன்றி

Ramesh said...

ஆமாம்..யார் வந்தாலும் எதுவும் மாறப்போவது இல்லைன்ங்கறதுதான் நிஜம்..நல்ல பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ரமேஷ்

முத்து said...

எது எப்படியோ தமிழக அரசியல் வானில் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யார் வந்தாலும் தமிழனின் த்லை எழுத்து மாறப்போவதில்லை.


இது தான் உண்மை

சி.பி.செந்தில்குமார் said...

thanx muthu,