Friday, December 03, 2010

ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinvPayadxDGa7c_tOqOZIJMXn-u6bx9WJGSkh8lBecMkHOl-s8_SRqO6hnMqVYkvHj-hIWhkq_uHA71HitFLVF4VTfNO7DhAIeHq3Qh0h25r0Z7dj5CLBbDOnGQ39eggetNHsGoREx0kw/s1600/raththa_charithram_posters_wallpapers_02.jpgஅட
தொடர்ந்து 5 ஹிட் படங்களையும் ,லேட்டஸ்ட்டாக ஒரு மெகா ஹிட்டையும்
கொடுத்த சூர்யாதான் ஹீரோ -ஹிந்திப்பட உலகின் ஹிட் மேக்கர் என பெயர்
பெற்ற ராம்கோபால் வர்மாதான் டைரக்டர்.பின் புலமும்,அரசியல் செல்வாக்கும்
கொண்ட தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர்.இவர்கள் மூவரும் இணையும்
ஆக்‌ஷன் படம் என்றால் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்?

ஆனால் அதீத எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பெரும்பாலும் பலத்த வெற்றியை
பெற்றதில்லை.படத்தோட கதை என்ன?சினிமாவில் ஹீரோ பிளஸ் அரசியலில் முதல்வர் நாற்காலியை குறி வைப்பவர் (சிரஞ்சீவியை தாக்கறாரோ?) தனது
அரசியல் எதிரிகளை ஸ்கெட்ச் மார்க் பண்ணி தூக்கிக்கொண்டேஇருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை கொலைசெய்து விட கொலை ஆனவரின் மகன் பழிக்குப்பழி வாங்குவதே கதை.

 1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து
வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ?ஆனால் இதில்
வித்தியாசமான 2 அம்சங்கள் உண்டு.1.ஹீரோதான் வில்லனை கொல்ல
ஆசைப்படுகிறான்,வில்லன் ஹீரோவைக்கொல்ல வேண்டாம் என நினைக்கிறான்.அதே போல் வில்லனுக்கு ஜோடியாக வருபவர் ஹீரோவுக்கு சப்போர்ட்டாக பேசும்போது அதில் உள்ள நியாயத்தை வில்லன் ஏற்றுக்கொள்கிறார்.

படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை
வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள்.மிச்சம் மீதி
இருப்பவர்களை ஹீரோ போட்டுத்தள்ளுகிறான்.படம் முழுக்க வன்முறை
கொப்பளிக்கிறது.இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை
போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி
படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.

ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு
மலரனும்.அதுதான் நல்ல சினிமா.ஆனால் இயக்குநருக்கு அதைப்பற்றி எல்லாம்கவலை இருப்பதாக தெரியவில்லை.வன்முறையே இல்லாமல் ஆக்‌ஷன்படங்கள் எடுக்கலாம்.


சூர்யாவின் நடிப்பில் நந்தா பாதிப்பு தெரியாவண்ணம் சமாளிக்கிறார்.
முறுக்கேற்றிய உடலுடன் சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார்.ஒரு
சண்டைக்காட்சியிலும்,சேஸிங்க் சீனிலும் ரிஸ்க் எடுத்து டைவ் அடிக்கிறார்.
ரியாலஸ்டிக் ஜம்ப் பண்ணி கலக்குகிறார்.அவரைப்பொறுத்தவரை ஓக்கே.

பிரியாமணிதான் ஜோடி.பனித்துளிகள்  பூத்த பருத்திப்பூ மாதிரி பளிச்
என இருக்கிறார்.ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசும்போது கடுப்பு....

ஹீரோவின் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு ஹீரோவிடம்
வில்லன் வசனம் (பேரம்) பேசுவது சலிப்பு.படத்தின் டெம்ப்போவை
ஏற்ற படம் முழுக்க தீம் மியூசிக் ஒன்றும் ஒரு பின்னணிப்பாடல்
வரிகளும் வந்து கொண்டே இருப்பது மகா போர்.

பிரியாமணி குழந்தையுடன் தப்பிக்கும் சீன் இன்னும் லெங்க்த்தி ஷாட்டாக
எடுக்கப்பட்டிருக்கவேண்டும்,மிஸ்ஆச்சா?எடிட்டிங்க்கில்போச்சா?டைரக்டருக்கே வெளிச்சம்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும்
இடம் செம திரில்லிங்க்.அப்போது சூர்யா ஒரு ஸ்டைல் டைவ் ஒன்று அடிக்கிறார்பாருங்கள்.அடடா..

ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் ஹீரோவை கலவரம் ஏற்படுத்தி
போட்டுத்தள்ள வகுக்கப்படும் திட்டம் மகா பழசு.மகாநதி உட்பட பல படங்களில் வந்தாகி விட்டது.



 http://www.cineglits.com/wp-content/gallery/ratha%20charithram/ratha-sarithiram17.jpg

இது வில்லனுக்கு ஜோடியக வரும் பார்ட்டி ஆனா வில்லி இல்ல.

மற்றபடி ஹீரோ பழி வாங்கும் படலங்களில் வரும் சீன்கள் விருமாண்டி
படத்திலும்,ஹீரோயின் தேர்தலில் நிற்கும் காட்சிகள் சிவகாசி படத்திலும்
ஏற்கனவே வந்தாகி விட்டது.

இந்த மாதிரி ஆக்‌ஷன் அல்லது வன்முறை படங்களில் படத்தின் ரிலாக்சேஷனுக்காக காதல் காட்சிகள் ரசிக்கும்படி வைத்து சமன் செய்வார்கள்.ஆனால் ராம்கோபால் வர்மா முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார் போலும்.படம் முழுக்க சண்டை,ரத்தம்தான்.

படத்தில் வசனகர்த்தாவுக்கு வேலை கம்மி.மொத்த பட வசன ஸ்கிரிப்டே ஏ4 ஷீட்டில் 4 பக்கங்கள்தான் வரும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf7I5D6h8KxekrDonKfF_afJ-S4aCfViCTu53edxCDcRP0SryGFJKrpQ3J3zZdNQO35ey3NAE1xrg4MZ2lCPSd7LE0PdR78O8wkdziPR5emT_QsXhyFpeHh7H2Sh6SQKZGpvfNLb_L-Gql/s1600/Ratha_Sarithiram_Movie_Stills_01.jpg

அதில் கவனிக்க வைத்த வசனங்கள் .


1.நான் அவனை பழி வாங்கறேன்.

நீ உன் லைஃப்ல ஒரு தடவையாவது கன் (GUN) எடுத்து இருக்கியா?

இல்லை,ஆனா உடம்போட ஒவ்வொரு அணுவிலும் ஆவேசம் இருக்கு.

2.  தப்பிச்சுட்டான்...தோத்துட்டேன்.

டோண்ட் ஒர்ரி,இன்னொரு வாய்ப்பு வரும்.

வராது.     வாய்ப்புங்கறது  தானா வராது,நாமே உருவாக்கனும்.

3.நான் சாவைக்கண்டு பயப்படலை,அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

4.பொண்டாட்டியை வெச்சு மிரட்டுனா நீ சரண்டர் ஆகிடுவேன்னு நான் நினைக்கவே இல்லை,நானா இருந்தா இப்படி சரண்டர் ஆகி இருக்க மாட்டேன்.
ஏன்னா எனக்கு பல பொண்டாட்டி.

5. டியர்,நீ தள்ளியே இரு.என் கூடவே இருந்தா உனக்குத்தான் ஆபத்து.

நானே எப்படி என்னை விட்டு விலகி இருக்க முடியும்?



http://cinema.dinakaran.com/images/shooting-spot/rattha-charithram-location/rattha-charithram-location-02.jpg

6. உனக்கு பயமா இல்லையா?

இல்லை,சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும்.இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

7. எனக்கு இப்போ 2 முகம்.நான் யாருன்னு உன் கிட்டே சொல்ல முடியும்,அவங்க கிட்டே சொல்ல முடியாது.ஒரு தலைவனா அவங்க பின்னால நான் நின்னே ஆகனும்.

8. வில்லன் - என்னைக்கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம்.ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன்.

9. பலம்கறது  நட்பால மட்டும்தான் முடியும்,விரோதத்தால முடியாது.

10. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு,அது நிக்காது,அதுதான் ரத்தத்தோட குணம்.

11. வில்லன் - நான் என் வழில போறேன்,நீ உன் வழில போ.

ஹீரோ - என் வழியே உனக்கு வழியே இல்லாம பண்ணறதுதான்.

12.யார் வேணாலும் என்ன வேணாலும் நினைக்கலாம்,ஆனா நினைச்சது எல்லாத்தையும் எல்லாராலயும் செய்ய முடியாது.

13.  இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு,என்னை உன்னால கொல்ல முடியாது

அப்படியா?முடிஞ்சா நீ தூங்கு. பார்ப்போம்.

14.சிங்கத்தைக்கண்டு எதிர்க்கற மனோதைரியம் இருக்கறவனாலதான் காட்டுக்கு ராஜா ஆக முடியும்.

15. வில்லனைக்கொன்ன பிறகு அவனோட பாடிகார்ட்சை எப்படி சமாளிக்கறது?

பாடிகார்டோட வேலை உயிரை காப்பாத்தறது,அவனையே நாம கொன்னுட்டா அவங்களோட விசுவாசத்தை பார்க்க யார் இருக்கபோறா?அப்படின்னு அவஙக யோசிப்பாங்களே?

16.வாழ்க்கைல யாராலயும் ,எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

வில்லனை ஹீரோ கொன்ற பின் படம் முடிந்து விடுகிறது,ஆனால் அதற்குப்பிறகும் 15 நிமிடம் இழுப்பது தேவை இல்லாதது.கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம்  வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.

அப்படி ஒரு வெற்றியை இந்தப்படம் பெற்று விடக்கூடாது என நல்ல சினிமாவை வரவேற்பவர்கள் சார்பாக நாம் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

ஏ செண்ட்டரில் 50 நாட்கள் பி செண்ட்டரில் 30 நாட்கள்  சி செண்ட்டரில் 20 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் மார்க் 40 (எதிர்பார்ப்பு)

குமுதம் ரேங்கிங் - ஓக்கே

இந்தப்படத்தை குழந்தைகள்,பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள்,இளகிய மனம் படைத்தோர்,சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.

ஆ ராசாவை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்குகள்

http://2.bp.blogspot.com/_W_s0JWyyUZE/TPCHI1SQpLI/AAAAAAAAAj8/9UCUKXOGvvA/s1600/a.raja_5.jpg
1.இந்தியாவுல 1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை

ஆங்கிலேயர்கள் ரூ 900 கோடிகள் மட்டுமே சுருட்டினார்கள்.ஆனா

ஆ ராசா ஒரே ஒரு    கையெழுத்துல ரூ 1,76,379 கோடிகள் சுருட்டிட்டாரு.

நீதி - இந்த மாதிரி ஃபிராடுகளுக்கு மறுபடி ஓட்டு போட்டு ஏமாறாதீங்க.


2.நம்ம நாட்டோட மொத்த மக்கள் தொகை 110 கோடி.ராசா சுருட்டுன
 பணத்தோட மதிப்பு  ரூ 1,76.000 கோடி (தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.


3. 1,76,60,00,00,000 - என்ன லுக்கு? எண்ணிப்பார்க்கவே

உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே...அபேஸ் பண்ணுன

எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? -  ஆ ராசா


4.  நடிகர் பிரபு நடிச்ச பழைய டப்பா படத்தை ஏன் அடிக்கடி சன் டி வி லயும்

கலைஞர் டி வி லயும் போட்டுட்டே இருக்காங்க?

படத்தோட டைட்டில் உத்தம ராசா ஆச்சே,மக்கள் மனசுல ராசா

உத்தமமானவர்னு பதிய வைக்கத்தான்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmRLrmVKW7fGyEHvWj83xxkOfaB7z3gfem6QWLKwFZlNTVXIkIM31RzEuOEExRlcf6Ye_-EDIkTmVnFsGOk_QM8D9C-5pQf007eynNnk0iNfXVDv0ilHPVDDdvFv-wY-7pBmEjY3amFz3h/s1600/30A864D47BD40E5D421851_Large.jpg
5. ஜட்ஜ் - ஊழல் செஞ்சதை ஒத்துக்கறீங்களா?

ராசா - ஓ எஸ் யுவர் ஆனர்,ஆனா அந்தப்பணத்தை திருப்பி மட்டும்
 கேட்டுடாதீங்க...

6.  முதலை வாயில போன பொருள் வெளில வருமா?

வராது.

அதே மாதிரிதான்,அரசியல்வாதிங்க பண்ணுன ஊழல்ல

சம்பாதிச்ச பணமும்,அவங்க உள்ளே போனாலும்,அவங்க

சம்பாதிச்ச பணம் வெளில வராது.

7. இந்தியா முன்னேறாத நாடுன்னு இனி யாரும் சொல்லாதீங்க.ஏன்னா

ஊழல்ல உலகத்துக்கே முன்னோடியா இருக்கே..?

8. தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்னு எப்படி சொல்றே?

கிளவுஸ் போட்டுட்டுத்தான் லஞ்சம் வாங்குனாராம்.

9. ஏண்டா ஆ-ன்னு வாயைப்பிளக்குறே?

ஆ.ராசா செஞ்ச ஊழலை நினைச்சுத்தான்

10. ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.

டிஸ்கி - என்னை வழக்கமாக மிரட்ட வரும் நண்பர்கள் மாலை 7 மணிக்கு வரவும்.மேனேஜர் இதற்கெல்லாம் பர்மிஷன் தர முடியாது என்று கறாராக கூறி விட்டார்.

Thursday, December 02, 2010

ஈரோடு ஹாஸ்பிடலில் நடந்த நூதன மோசடி

http://www.aintreehospitals.nhs.uk/Library/2008_images/Operation%20taking%20place.jpg 
20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.சேலம் நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் சப் எடிட்டர் திரு வேல்முருகன் அவர்களிடமிருந்து எனக்கு
 ஒரு ஃபோன் வந்தது.”செந்தில்,திருச்சில இருந்து நம்ம நண்பர் ஒருத்தர்
ஒரு மேரேஜ் அட்டெண்ட் பண்ண ஈரோடு வந்திருக்கார்.அவரும்,அவரது
மனைவியும்,மேரேஜ் முடிஞ்சி திருச்சி திரும்பறப்ப அவருக்கு திடீர்னு
ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு,இப்போ அவங்க ஈரோடு மூலப்பாளையம்
பக்கத்துலதான் இருக்காங்க,உடனே போய் பாருங்க,அவங்களுக்கு ஹெல்ப்
பண்ணுங்க” என்றார்.

நான் உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தேன்.108க்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள்.எங்கேஜ்டு டோனாக தொடர்ந்து வரவே  வேறு பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவு செய்தோம்.அருகில் சவீதா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப் அருகே செங்குந்தர் ஸ்கூல் பக்கத்தில்
விஜயா ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு
யுனிவர்சல் ஹாஸ்பிடல் என ஒரு ஹாஸ்பிடல் அருகில் இருப்பதாகவும் அங்கே சேர்க்கும்படியும்அறிவுறுத்தினார்.அதன்படியே செய்தோம்.பேஷண்ட் திருச்சி நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் எடிட்டர்.அவரது மனைவி திருமணத்துக்கு வந்ததால் கழுத்து நிறைய நகையுடன் இருந்தார்.அவரது பகட்டான தோற்றத்தை பார்த்து டாக்டர் என்ன நினைத்தாரோ? (வேற என்ன நினைத்திருப்பார் ,கறந்துடலாம்னு நினைச்சிருப்பாரு). என்னை தனி அறைக்கு அழைத்தார்.

“ சார்,பேஷண்ட்டுக்கு மைல்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கு,இதுக்கு உடனே ட்ரீட்மெண்ட் பண்ணனும்.ரூ 3000 க்கு ஒரு ஊசி போடனும்.இன்னொண்ணு ரூ 8000க்கு இருக்கு,லாஸ்ட்டா ரூ 25,000 க்கு ஒரு ஊசி இருக்கு.இதுதான் சேஃப்.நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க.என்றார்.நான் நண்பரின் மனைவியிடம் போய் நிலைமையை சொன்னேன்.அவர் அழுதுகொண்டே
இருந்தார்.எதுவும் பேசக்கூடிய நிலையிலோ,முடிவு எடுக்கும் சூழ்நிலையிலோ அவர் இல்லை.இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் என்ன செய்வது என்று எனக்கும் தோன்றவில்லை.அவர் பணம் ஏதும் எடுத்து வரவில்லை
நண்பரின் பர்சில் ஏ டி எம் கார்டு எதுவும் இல்லை.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து

நான் டாக்டரிடம் “சார் ,அவரது சொந்தக்காரங்க எல்லோரும் திருச்சியில்தான் இருக்காங்க.எனவே இப்போதைக்கு ரூ 3000 ஊசியே போடுங்க..ஓரளவு நிலைமை சரி ஆனதும் அவங்க திருச்சி போய்ட்ரீட்மெண்ட் பார்த்துக்குவாங்க.” என்றேன்.

உடனே டாக்டருக்கு கோபம் வந்து விட்டது”.எனக்கென்ன?நீங்க சொல்ற ஊசி போடறேன்.”என்று சொல்லி விட்டு ஐசி யூனிட்டுக்கு சென்று விட்டார்.அரை மணி நேரம் கழித்து பேஷண்ட்டை போய் பார்த்தோம்.ஸ்லீப்பிங்க் டோஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் அவர் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அவருக்கு வயது 47.இதற்கு முன் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையாம்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் அழைத்தார்,” சார்,கே எம் சி ஹெச் (கோவை மெடிக்கல் செண்ட்டர்) கொண்டுபோயிடுங்க.அதான் பெஸ்ட்.இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க ,அந்தம்மா கிட்டேயும் சைன் வங்கனும் என்றார்.

அவர் இன்னும் அழுது கொண்டே இருந்தார்.எனக்கு டாக்டரின் நோக்கம் தெளிவாக விளங்கி விட்டது. ஹாஸ்பிடல்களுக்குள் ஒரு லிங்க் இருக்கிறது.ஒரு டாக்டர் இந்த ஹாச்பிடலில் சேர்த்த் விடுங்கள் என்றால் அவருக்கு ஒரு கமிஷன் உண்டு.இப்படி மாற்றி விடுவதால் நமக்கு டாக்டர் மேல் நம்பிக்கை வரும்.மெண்ட்டல் டென்ஷன் ஜாஸ்தி ஆகும்மேட்டர் சீரியஸ் என செலவு செய்ய தயார் ஆகி விடுவோம். நான் சார் பேஷண்ட் கண் விழிக்கட்டும் ,அது வரை இங்கேயே இருக்கொம் “என்றேன்.

3 மணி நேரம் கழித்து பேஷண்ட் கண் விழித்தார்.நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து விட்டர்ர், இப்போதான் அவரது மனைவிக்கு திருப்தியே,அழுகையை நிறுத்தி சகஜ நிலைக்கு வந்தார். டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி கிளம்பினர்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேன்ண்டிய பாடங்கள்

1.  35 வயது நிரம்பியவர்கள் கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது நல்லது.

2.  எப்போதும் பேங்க்கில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பில் வைத்திருக்கவேண்டும்.   ஏ டி எம் கார்டு கைவசம் இருக்க வேண்டும்.

3  .கல்யாணத்துக்கு வெளியூர் போகும்போது நகைகள் அதிகம் அணிய வேண்டாம்.கண்ணை  உறுத்தும் வகையில் அணிவதை தவிர்க்கனும்.

4.  பிரைவேட் ஹாஸ்பிடல் சேஃப்டி என்ற எண்ணத்தை அகற்றிக்கொள்ள வேண்டும்.

5.  40 வயதுக்குப்பிறகு தனியே வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கனும்.

6.  சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்.

டிஸ்கி - பின் விசாரித்த வகையில் ஈரோட்டில் பல ஹாஸ்பிடல்களில் இந்த மாதிரி லிங்க் இருப்பதாகவும்,அட்மிட் பண்ணி 2 மணி நேரத்தில் அந்த ஹாஸ்பிடல் போ, இந்த ஹாஸ்பிடல் போ என பந்தாடப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது பற்றி விசாரனைகள் நடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் நல்லது.ரமணா படத்தில் வருவது போல் நடக்கும் ஹாஸ்பிடல் கொள்ளைகளைதடுக்க நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

Wednesday, December 01, 2010

பதவியைத்தியாகம் செய்த தலைவர்

http://thalaivan.com/blog/modules/upload/attachments/Kaavalan_Movie_Latest_Stills_06.jpg

1. “வண்டில  பெட்ரோல்  தீர்ந்துடுச்சு,  ஒரு  அடி  கூட  முன்னே  போகாது. கீழே  இறங்கு  சார்!”

விஜய் - “முன்னேதானே  போகாது!  ரிவர்ஸ்  எடுத்து  மறுபடி  என்  வீட்டுக்கே  கொண்டுவிடு!”



2. “அவர்  இங்கிலீஷ்  வெறி  டாக்டர்னு  எப்படி  சொல்றே?”

அப்பன்டிசைட்ஸ்  ஆபரேஷன்  செய்யப்படும்னு  போர்டு  வைக்கிறதுக்கு பதிலா  ‘டாடி’ டிசைட்ஸ்  ஆபரேஷன்  செய்யப்படும்னு  போர்டு  வெச்சிருக்காரே!”



3. “தளபதியாரே!  இன்னும்  பத்து  நாளைக்கு  நீங்கள்தான்  ஆக்டிங்  மன்னர்!”

“ஏன்  மன்னா?”

“போர்  வந்துவிட்டதே!”



4. “டாக்டர்...  ஆபரேஷன்  முடிஞ்சுதா?  பேஷண்டைக்  கூட்டிட்டுப்  போலாமான்னு  கேட்டுறாங்க!”

எடுத்துட்டுப்  போலாம்னு  சொல்லு!”



5. “பதவியைத்  தியாகம்  செய்யத்  தயாரானு  தலைவர்கிட்ட  கேட்டது  தப்பாப்போச்சு!”

“ஏன்?”

“பதவியைக்  காப்பாத்திக்க  யாகம்  செஞ்சுதான்  பழக்கம்,  தியாகம்  செஞ்சு பழக்கம்  இல்லைனுட்டார்!”



6. “தலைவரே! அடிக்கடி  நடைப்  பயணம்  போகாதீங்கன்னு  சொன்னேனே, கேட்டீங்களா?”

“என்ன  ஆச்சு?”

“நிறைய  பேர்  கட்சியைவிட்டு  நடையைக்  கட்டிட்டு  இருக்காங்களே?”



7. “மன்னாதி  மன்னா!  போருக்குப்  போகவில்லையா?”

“இல்லை!  போனால்  ஆகிவிடுவேன்  மண்ணோடு  மண்ணா!”



8. “அடிக்கடி  தலைக்கு  எண்ணெய்  தேய்ச்சுக்  குளிப்பீங்களா?”

“பிரமாதம்  ஜோசியரே!  எப்படி  கண்டுபிடிச்சீங்க?”


“ஆயுள்  ரேகையைவிட  ஆயில்  ரேகைதான்  அதிகமா  இருக்கு!”



9 “போர்க்களத்தில்  இன்னும்  போரே  துவங்கவில்லை.  அதற்குள்  மன்னர்  வெற்றிச்  சின்னம்  காண்பிக்கறாரே?”

“அட,  எதிரிப்  படையின்  எண்ணிக்கையைக்  கண்டு  கதிகலங்கி  வயிறு  கலங்கி  விட்டதாம்.  நம்பர்  டூ  போக  பர்மிஷன்  கேட்கிறார்!”



10. “எந்த  ஆவணமும்  இல்லாம  உங்க  கட்சி  ஆளுங்க  உள்ளாட்சித்  தேர்தல்ல  ஓட்டு  போட்டாங்களாமே?”

“நாம தான் ஜெயிப்போம்கற எந்த  ஆணவமும்  இல்லாம  ஓட்டுப்  போடுங்கன்னுதானே  சொன்னேன்!”



11. “அமைச்சரே!  கடைசி  வரை  போராடணும்னு  நீங்கதானே  சொன்னீங்க!”

“அதுக்காக  போரில்  ‘ஆடி’க்  கொண்டு  இருப்பதா?!”



12  “ம்ன்னர்  ஏன்  அமைச்சரை டிஸ்மிஸ்  செய்துவிட்டார்?”

“ ‘ம்ன்னர்கள்  ஒன்றும்  வானத்திலிருந்து  குதித்து  வந்தவர்கள்  அல்ல! போர்க்களத்திலிருந்து  தப்பிக்  குதித்தோடி  வந்தவர்கள்தான்’னு சொல்லிட்டாராம்!”

வெட்டிப்பயல் சொல்லும் வெறுஞ்சிரிப்ஸ் &குறுஞ்சிரிப்ஸ்

http://2.bp.blogspot.com/_xhCC4SePB5g/TLgAtjtrX2I/AAAAAAAAAhU/shSJzkOQbvY/s1600/Kaavalkaran.jpg
1. உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)



2. நாகராஜ்சோழன் எம் எல் ஏ - பெண்ணை நினைப்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோற்பது இல்லை,பெண்ணை மட்டுமே நினைப்பவர்கள் தான் வாழ்க்கையில் தோற்கிறார்கள்.

 3.  வெறும்பய -பேப்பர்ல ஆன்சர் எழுத எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தெரியுமா?

விடுடா மாப்ள,பேப்பர திருத்தறப்ப எதுவும் புரியாம வாத்தி கஷ்டப்படுவார் இல்ல?

4. உங்களுக்கு எந்த மாதிரி படம் வேணும்?

இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.

5. ஃபிகரு - நீ ஒரு முறை பார்த்தாலே என் கண்கள் வலிக்கிறதே... உன் பார்வை என்ன மின்னலா?


ம தி சுதா -அடியே ,கிறுக்கு சிறுக்கி, எனக்கு மெட்ராஸ் ஐ .

6. எக்சாம் செண்ட்டர் -  பையன் பொண்ணு கிட்ட  ஆல் த பெஸ்ட் சொல்றான்.
பொண்ணு பையனுக்கு ஆல் த பெஸ்ட் சொல்றா...

ரிசல்ட் - பொண்ணு 90 மார்க், பையன் வெறும் 9 மார்க்.

நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.

7. அம்மா ,பெரும்பாலும் விஞ்ஞானிகள் தலை வழுக்கையா இருக்கு?

ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..

ஓஹோ,பொண்ணுங்க தலைல அதனாலதான் கூந்தல் நீளமா இருக்கா?

8. அன்[பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

9. வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மென்மையானது.

தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல சொன்னது.