Wednesday, December 08, 2010

கறுப்பு எம் ஜி ஆர்-ன் விருதகிரி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-NCWrjY_4-jiVCvY7DDzeLrqgoo9LwjJWBZb-9NyX4wtwAu35b9UabktAzwhky1Rwj0FCl7EG_pNYx8RafsjB9xxn9abjYt-cPQTm9JeUf01NG9nVSbPeqBoViPuz6ds01igKKA-1Rnk/s1600/virutha211209_1024_1.jpg
1. கேப்டனுக்கு மனசுக்குள்ள நாடோடி மன்னன் எம் ஜி ஆர்னு நினைப்பு.

எப்படி சொல்றே?

இந்தப்படம் ஓடுனா நான் கிரி,ஓடாட்டி ஆகிடுவேன் வெறி..னு சொல்றாரே?

ஓடுனாலும்,ஓடாட்டியும் படம் படம் சொறினு மக்கள் சொல்றாங்களே?


2.கேப்டன் -  இதுவரைக்கும் யாருமே பண்ணாத கேரக்டர் நான் பண்றேன்.

இவ்வளவு கேவலமான கேரக்டரை வேற யாரும் பண்ண மாட்டாங்க...


3. ஊமை விழிகள்,புலன் விசாரனை-னு நான் நடிச்ச போலீஸ் சப்ஜெக்ட்
   எல்லாமே ஹிட்,இது ஹிட் ஆகாதுன்னு எப்படி சொல்றீங்க?

அந்தப்படங்களை எல்லாம் விபரமான டைரக்டர்ஸ் டைரக்ட்
பண்ணாங்க,இந்தப்படத்தை நீங்க டைரக்ட் பண்றீங்களே..அதான் பயம்.


4.  இந்தப்படத்துல நான் சீரியஸ் போலீஸா வர்றேன்.

ஆனா ஸ்டில்ஸைப்பார்த்தாலே எங்களுக்கு சிரிப்பு பாலீஸா வருதே...


5.இந்தப்படம் பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம்.

படம் ஓடும்னு எனக்கு ஸ்கோப் இல்லை.
http://img219.imageshack.us/img219/5307/17virudhagiri200.jpg

6. படப்பெட்டில பேடு ஸ்மெல் (BAD SMELL) வருதே...?

படத்துல அங்கங்கே அரசியல் கலந்திருக்காராம்.

சோ வாட்? (SO WHAT?)

அரசியல் ஒரு சாக்கடை ஆச்சே?சாக்கடைல பேடு ஸ்மெல் வராம
குல்கந்து ஸ்மெல்லா வரும்?



7. இந்தப்படத்துக்கு விருது நிச்சயம்னு.எப்படி சொல்றே?

ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?



8. இது ஒரு போலீஸ் ஸ்டோரி.

நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க,போலீஸ் ஸ்டோரியா? போலி ஸ்டோரியா?



9. கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.

தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?

படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்‌ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?




10. குடும்ப அரசியல் பண்றவங்களைத்தாக்கி பஞ்ச் டயலாக் பேசறேன் இதுல..

அடடா,உங்க மச்சான் கோவிச்சுக்க மாட்டாரா?

Tuesday, December 07, 2010

சினிமாவில் ரஜினி போல் பதிவுலகில் நெம்பர் ஒன் ஆவது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy7MAEqX9sCzu7X51W_mWjrXZD_5-iNSwjHqvaufPyP7F8o-9obUODvJh0n8yvo87BHE_smUNg8TCwJ0mEVhqEYIsGZB4d4wS_RECuhzaQK6ciKTxpee0d0oLgA1B91zk04V_YgOwyG8k/s1600/Rajinikanth.jpg 
நெம்பர் ஒன் பதிவர் ஆவது எப்படி?

கோடம்பாக்கத்தில் ரஜினிதான் எப்பவும் நெம்பர் ஒன்னாக இருந்து வருகிறார்.
ஆனால் விஜய்,விஷால் போன்றவர்களுக்கு நெம்பர் ஒன் ஆசை வந்திருக்கிறது.அவரைப்போலவே பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மைக்கொன்னெடுக்கிறாங்க. பதிவுலகிலும் இப்போது எல்லோருக்கும் நெம்பர் ஒன் ஆசை துளிர்விட்டிருக்கிறது.

நெம்பர் ஒன் பதிவர் ஆக சில குறுக்கு வழிகள்.

1.பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.
அதைக்கொண்டு வந்து வீட்டு வாசலிலோ ஆஃபீஸ் வாசலிலோ மாட்டிக்கொள்ளவும். பார்க்கறவங்க நீங்கதான் நெம்பர் ஒன் பதிவர் னு நம்பிடுவாங்க.

2.  மிட்நைட் 1 மணிக்கு அல்லது மதியம் 1 மணிக்கு பதிவு போடும்
   பழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.அட,இவரு (எவரு?) ரெகுலரா
ஒன் ஒ க்ளாக்கிற்கு பதிவு போட்றாரே,என சிலாகித்துப்பேசி,காலப்போக்கில்
நெம்பர் ஒன் பதிவர்  என அழைக்கப்படுவீர்.

3. டாக்டர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் மனித உடலுக்கு
  நல்லது என அட்வைஸ் பண்றாங்க.நீங்கள் இனிமேல் தினமும் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.இதுல  2 மாங்கா அடிக்கலாம். 1.உடல்ல கிட்னில கல் வராது 2,அடிக்கடி நெம்பர் ஒன் போக பாத்ரூம் போவீங்க..அப்போ நீங்க
நெம்பர் ஒன் பதிவர் என ஆட்டோமேட்டிக்கா,டாக்ஸிமேட்டிக்கா ஆகிடுவீங்க.


4.  நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..
   சொந்தத்தொழில் பண்றவரா இருந்தா அதை இழுத்து மூடிடுங்க.நமக்கு
 ஏதாவது ஒன்னுலதான் முழு கவத்தையும் வைக்க முடியும்.
முழு மூச்சா பதிவு போடறதைப்பற்றியே சிந்திக்கனும்.

5. நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.

6. யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.பார்ட்டி கோபம் ஆகி உங்களைத்திட்டி ஒரு பதிவு போடுவார்.உங்க பிளாக்கிற்கு லிங்க்கும் கொடுப்பார்.இப்போ அவர் பிளாக் வர்ற ரெகுலர் ஆளுங்க நம்ம பிளாக்கும் வர ஆரம்பிப்பார்.

7.யாராவது உங்க பிளாக்கில் பதிவுக்கு கமெண்ட் போட்டா பொத்தாம் பொதுவாக  கமெண்ட் போட்ட 12 பேருக்கும் நன்றி என பின்னூட்டம் போட வேணாம்.தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றி என கமெண்ட் போடவும்.இதனால் நிறைய கமெண்ட் சேர்ந்து விடும்.அது உங்களை நெம்பர் ஒன் பிளாக்கர் ஆக்கி விடும்.
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/ACTERSS/aishwarya-rai.jpg
8.உங்கள் பர்சனல் சேட்டிங்கை பின்னூட்டத்திலேயே நடத்தலாம்.யாராவது கமெண்ட் போட்டா அப்புறம் மாப்பு சாப்பிட்டியா?படத்துக்கு போலாமா என மொக்கை போடவும். அதைக்கண்டித்து யாராவது கமெண்ட் போட்டா மாட்டிக்கிச்சு பட்சி,அவரை திட்டி ஒரு பதிவு போடுங்கள்.பிரபலம் ஆகிடலாம்.

9.ஏதாவது ஒரு தமிழ் சினிமாவை வாய் கூசாமல் புகழவும்.அதில் நடித்த+
பங்கு பெற்றவர்கள் அனைவரும் உங்க பிளாக்கிர்கு வருவாங்க.ஹிட்ஸ் ஏறும்.

10. வே டூ ஃப்ரீ எஸ் எம் எஸ் . காம் போய் பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள்
செல் நெம்பரையும் ஸ்டோர் பண்ணிக்கொள்ளவும்.பிறகு குரூப் மெசேஜ்
அனுப்பவும்.மாப்ளை  நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.

11. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி பெண்களின் கவனத்தை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.உங்கள் பிளாக்கிற்கு பெண்களே வருவதில்லையா? (எப்படி வருவாங்க?பிட்டுபட விமர்சனம் போட்டா?) அவங்களை வர வைக்க ஒரு ஐடியா. உங்க பிளாக்கில் எஸ் கே அல்லது வந்தே மாதரம் சசி உதவியுடன் ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.

12.  தமிழனோட நாடித்துடிப்பே சாப்பாட்லதான் இருக்கு,வாரம் ஒரு சாப்பாடு பதிவு போடவும். அழையா விருந்தாளியாய் கல்யாண மண்டபத்துக்குபோய் ஓ சி சாப்பாடு சாப்பிட்ட அனுபவம் ஏதாவது எழுதவும்,பதிவு செம ஹிட் அகிடும்.

13. கிசு கிசுவை ரசிக்காத ஆட்களே இங்கே கிடையாது.சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருந்தாங்க?அந்த காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ  யாரு வெச்சிருக்காங்க என்ற கரகாட்டக்காரன் காமெடி ஹிட் ஆனதை மனதில் நிறுத்திக்கொண்டு கோடம்பாக்கத்தில் யரு யாரை வெச்சிருகாங்க என புலனாய்வு செய்து ஒரு பதிவு போடவும்.
அடித்துப்பிடித்துக்கொண்டு ஆட்கள் வருவாங்க.சூப்பர் ஹிட் ஆகிடும் பதிவு

14.நாம் எல்லாத்தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் போட்டால்தான் அவர்கள் பதில் மொய்  வைக்க நம்ம பிளாக்கிற்கு வருவாங்க,ஆனா நமக்கு நேரம் கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம்,  பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.
1.உங்க பதிவு சூப்பர்  2.ஆஹா அருமை.  3,சூப்பர் பதிவு தல  4.எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது? 5 ப்ளீஸ் விசிட் மை பிளாக்
மேலே சொன்ன கமெண்ட்ஸை போட்டு ஓட்டும் போட்டு வரவும்.ஒரு நாளில் 350 பின்னூட்டம்
போடலாம்.10 % திரும்பி வந்தாலே நமக்கு லாபம் தான்.

டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை  எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.

Monday, December 06, 2010

தா - எதிர்பாராத வெற்றிப்படம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj85oNZd-wjLtFGjAZ7300vi2zdpQU39C2wehyphenhyphenW1hTCSFKltKLetP3POIjl56X7cX45Zhxxn7VA1A8XTJKPmg0AqLiksohnbHCQ3QOoahwHPnRbRQwCarfguPi35ItstuU01RV2IjroRY/s1600/thaa-tamil-movie-2010.jpg
கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தோட ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதீத அன்பு எப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கையை பாதிக்குதுன்னு கொங்கு மண்டல மண்வாசனையோட நகைச்சுவையா சொல்லி இருக்காரு  புது இயக்குநரு,பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

படத்துல 90% புது முகங்களே..எல்லாரோட நடிப்பும் இயற்கையா இருக்கு.கத்தி,வெட்டு,குத்து,பஞ்ச் டயலாக் தலைவலி இல்லாம ஒரு அமைதியான கிராமத்துக்கதையைக்கொடுத்ததுக்காக புது இயக்குநரை வாழ்த்தலாம்.

தாழ்வு மனப்பான்மையும்,பொசசிவ்நெஸ்சும் உள்ள சாதாரண கிராமத்து ஆள் கேரக்டருக்கு  புதுமுகம் ஸ்ரீ ஹரி நல்ல தேர்வு.மிக இயற்கையாக டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை வெளிக்கொணர்கிறார்.
புதுமுகம் நிஷா மஞ்சள் நிற நந்தியாவட்டப்பூ போல கொள்ளை அழகு.அவரது பாடிலேங்குவேஜ்,அவுட்புட் பிரபல நடிகைகள் நோட் பண்ணி ஃபாலோ பண்ண வேண்டிய ஒன்று.

பெண் பார்க்கப்போன இடத்தில் பார்த்த பெண்ணின் மீது காதல் கொள்ளும் மாப்பிள்ளை-காலேஜ் படிக்கும் பெண் படிக்காத மாப்பிள்ளையை வீட்டில் பார்த்து விட்டார்களே என மனசுக்குள் மருகி மெல்லவும் முடியாமல்,சொல்லவும் முடியாமல் தவிக்கும் மணப்பெண்ணின் மனசில் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ எப்படி இடம் பிடிக்கிறார்,அவர் காதலி மீது வைக்கும் அதீத அன்பால் என்ன பாதிப்பு நிகழ்கிறது என்பதே திரைக்கதை.



http://pirapalam.net/wp-content/uploads/2010/06/thaa.jpg
 நண்பர்கள் குழாம் சூழ ஹீரோ தண்ணி அடிக்க கிளம்பும்போதே படத்தில் கலகலப்பு தொடங்கி விடுகிறது.நான்கு நண்பர்களுக்கும் தனித்தனி பேக் கிரவுண்ட் கொடுத்து அவர்களை பார்வையாளன் மனதில் பதியவைக்கும் முயற்சியில் டைரக்டர் அநாசயமாய் கோல் போட்டு விடுகிறார்.
குறிப்பாக அந்த ஃபோட்டோகிராஃபர் கேரக்டரை மறக்கவே முடியாது.மனைவியிடம் கொஞ்சிப்பேசி நடித்து விட்டு தனது ஸ்டூடியோவுக்கு வந்து ஃபிகர்களை கரெக்ட் பண்ணும் சீனில் தியேட்டரில் செம அப்ளாஸ்.

ஏற்கனவே ஓவராக சாப்பிட்ட பிறகு நண்பர்கள் சரக்கடிக்க கூப்பிட்டதும்,இங்கும் அங்கும் ஓடி,எக்சசைஸ் செய்து,எல்லாம் பயனளிக்காமல் போன பிறகு ,வாயில் விரல் விட்டு வாமிட் எடுத்து வயிற்றை காலி ஆக்கி பின் பார்ட்டிக்கு போகும் கேரக்டரும் தூள்.


அப்போது சரக்கு அடித்து விட்டு பாடும் டப்பாங்குத்து பாட்டில் உபயோகப்படுத்திய நாட்டுப்புற மெட்டும்,தாரை தப்பட்டை இசைக்கருவிகளின் லயமும் செம.

ஃபிகரை கரெக்ட் பண்ண பஸ்சில் ஏறி பெண்கள் சைடில் வந்து கலாய்ப்பதும் கமலின் சத்யா படத்தில் அமலாவுடன் கமல் செய்யும் சேஷ்டைகளை ரிப்பீட் செய்வதும் கலகலப்பு.

 உயிர் ஊருக்கு உடல் பாருக்கு என்ற பஞ்சிங்க் லைனுடன் சங்கம் ஆரம்பித்து பார் என்பது டாஸ்மாக் பார் அல்ல உலகம் எனும் பார் என விளக்கம் அளிப்பதும் சூப்பர்.

 ஹீரோவின் நண்பர்களில் ஒருவர் மொக்கை ஃபிகருக்கு ரூட் போடுவதும் அந்தப்பேரழகி (!!??) அம்சவேணி அடிக்கடி ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க,நான் உங்க வெற்றிக்குப்பின்னால இருக்க ஆசைப்படறேன்,நீங்க கண்ட கண்ட நாதேரிப்பசங்களோட எல்லாம் சேராதீங்க என சொல்லும்போது  தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால்.
இந்த சீனை காட்சிப்படுத்துகையில் இயக்குநரின் லாவகமான இயக்கமும்,டைமிங்க்சென்ஸும் வெளிப்படுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj5637uxvwnbWU2_4K792yVYbYy2-I85928yrB40RCW2AcfiTKKP5hdhvhQy5B2io_BvfdGlxKQwGPL1DS5GjyiRiDpz66_ZghKHSuZIrnE5bu5AN1Y4uaqW0viLQQXbxAdVCQ7F8TKkst/s1600/thaa_tamil_movie_stills_gallery_02.jpg
கூட்டத்துல வந்திருக்கும் பெரியோர்களே பாட்டு கோவை மாவட்ட இசைக்கலக்கல்.தப்பாட்டம் எனப்படும் மாரியம்மன் கோவில் ஸ்டெப் ஆட்டம் போட்டு பின்னி எடுத்து விட்டார்கள்.

அதே போல் ஒரு கல்யாண விருந்தில் கஷ்டப்பட்டு ஒரு ஃபிகரிடம் ஐ லவ் யூ சொல்லும்போது அந்த ஃபிகர் என் விக்கலை நிறுத்துவதற்குத்தானே அப்படி சொன்னீங்க,ரொம்ப தேங்க்ஸ் என காலை வாரும்போது உம்மணாம்மூஞ்சிகள் கூட சிரித்து விடும்.

ஒரு சீனில் ஜோதி என பெயர் வருவது மாதிரி அகல் விளக்கில் டிசைன் செய்து காதலை வெளிப்படுத்தும் இடத்தில் ஆர்ட் டைரக்டர் பெயரை தட்டி செல்கிறார்.
அதீதமாக காதலியிடம் அன்பு வைப்பவர்களின் கண் பார்வையில் காதலியிடம் யார் பேசினாலும் ,பழகினாலும் பொறாமை,சந்தேகம்,கோபம் எப்படி வரும் என்பதை ரொம்ப எதார்த்தமாக எடுத்து சொல்வதில் இயக்குநர் தேர்ந்தவராக இருக்கிறார்.

படத்துக்கும், டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை.காதலியிடம் உள்ளத்தை அள்ளித்தா என கேட்பதாக வைத்து அதை சுருக்கி தா என வைத்திருக்கலாம்.ஆனால் படத்துக்கு ராஜேஷ்குமாரின் நாவல் தலைப்பான இறந்தவன் பேசுகிறேன் என்ற டைட்டில் மிகப்பொருத்தமாக இருக்கும் ,ஆனால் கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் செம்மல்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா என்ன?

http://travelindiasmart.com/images/trainWaiting.jpg
வசனகர்த்தாவின் பேனா துள்ளி விளையாடிய இடங்கள்.


1. ஆம்பளைக்கு எத்தனையோ விஷயங்களை பிடிக்க வெச்சுடலாம்,ஆனா பொம்பளைக்கு எதைப்பிடிக்கும்னு சொல்ல முடியாது.

2. எனக்கு 40 வயசு ஆனாலும் 20 வயசுப்பொண்ணை கரெக்ட் பண்றதுதான் என் லட்சியம்.

3. ஓசில சரக்கு அடிக்கறப்ப - தண்ணி கிளாசை கைல பிடிக்கறப்ப உலககோப்பையையே பிடிக்கற மாதிரி இருக்கு.

4. த்ண்ணி அடிக்க கூப்பிட்டீங்கன்னு வந்தா இப்படி 3 காலிக்குடம் குடுத்து  தண்ணி அடின்னு சொல்றீங்களே,இது நியாயமா?

5. இன்னைக்கு வள்ளலார் பிறந்த நாள்,அதனால டாஸ்மாக் எல்லாம் லீவ் ,தண்ணி அடிக்க முடியாது.

அதனால என்ன?அவரு தமிழ்நாட்டுலதானே பொறந்தாரு,நாம கேரளா போய் கள்ளு குடிப்போம்,நமக்கு லட்சியம்தான் முக்கியம்.

6.  லைட்டை ஆஃப் பண்ணீட்டா எல்லா பொண்ணுங்களும் ஒண்ணுதான்.

7.. நீ 10 பேரை அடிக்கறதால மட்டும் ஆம்பளை ஆகிட முடியாது.ஒரு பொண்ணோட மனசுல இடம் பிடிக்கறவன் தான் ஆம்பளை.

8. என்னடா மாப்ளை,கலர் ஏறிக்கிட்டே போகுது?

ஹி ஹி ஹி

ரொம்ப சந்தோஷப்படாதே,கறுப்புக்கூட ஒரு கலர்தான்.ஏன் கறுத்துட்டேன்னு கேக்க வந்தேன்.

9. பொண்ணுங்களுக்கு ஆக்‌ஷன் ஹீரோவை விட ரொமாண்டிக் ஹீரோவைத்தான் ரொம்பப்பிடிக்கும்.

10 .எதுக்குமே மடங்காத பொண்ணுங்க நல்லா பாடறவன் கிட்டயும் ,குரல் வளம் உள்ளவங்கிட்டேயும் மயங்கிடுவாங்க,

11. இப்போ பொம்பளைங்க் சொந்தமா எங்கே பேசறாங்க?டி வி சீரியல் பார்க்க வேண்டியது,அதுல வர்றதை அப்படியே நெட்டுரு போட்டு நம்ம கிட்டே பேசறது,இதைத்தானே பண்றாங்க?

12. தப்பு ரைட் எல்லாம் பார்த்துட்டு இருந்தா என்னோட பர்சனல் ஃபீலிங்கை நான் அனுபவிக்க முடியாது.

13. திடீர்னு நமக்கு லவ் ஆசை வந்துடும் ,அவளுங்களும் நம்மை ஏத்தி விட்டுட்டு  டாக்டர் பட்டம் வாங்கிட்டு போய்ட்டே இருப்பாளுங்க..

14.  நீ வா என் கூட ,உன்னை அந்த மாதிரி இடத்துக்கு கூட்ட்டிட்டு போறேன்,லவ்வோட கிளைமாக்சே அதுதான்.

15. சம்பந்தம் பண்றவங்க கொஞ்சம் ஏறி இறங்கிதான் போகனும்,பொண்ணு வீடும்,பையன் வீடும் சரிசமமா மல்லுக்கட்டீட்டு இருந்தா எப்படி?

இயக்குநர் தனிப்பட்ட முறையில் பெண்களால் பாதிக்கப்பட்டவர் போல,அங்கங்கே தனது கோபத்தை காட்டுகிறார்,ஆனால்  பெண்களின் ஒட்டுமொத்த குணமே அதுதான் என்பது போல ஒரு தவறான பாதையை காட்டுகிறது.

படத்தில் கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவும்,கோவை ஸ்லேங்கும்,இசையும் (அறிமுகம்) படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.இந்தப்படத்தின் போஸ்டர் டிசைனும் சூப்பர்.

இயக்குநர் கிளைமாக்சில் வைத்த ட்விஸ்ட் அகதா கிரிஸ்டியின் நாவலிலும் ,அமரர் சுஜாதாவின் சிறுகதையின் ஃபினிஷிங்க் டச்சையும் தன்னகத்தே கொண்டது,வெல்டன்.

இது போன்ற தரமான லோ பட்ஜெட் படங்கள் மக்களால் வரவேற்கப்படும்போது,ஹீரோயிச படங்களும் தாதா படங்களும் வழ்க்கொழிந்து போகும்.தயாரிப்பாளர்கள் ஹீரோவின் பின்னால் ஓடாமல் நல்ல கதாசிரியர் பின்னால் காத்திருப்பர்.ஒரு ஆரோக்கியமான மாற்றம் வரும்.

இந்தப்படம் நல்ல மார்க்கெட்டிங்க்கும் ,மக்களின் மவுத்டாக்கும்,பத்திரிக்கைகள்,ஊடகங்களின் விமர்சங்களும் 75 நாட்கள் ஓட வைக்கும் ,ஆனால் தியேட்டர் ஓனர்கள் அதுவரை பொறுமையாக இருக்கனும்,அட்லீஸ்ட் ஒரு வாரமாவது வெயிட் பண்ணனும்,நான் போறப்ப தியேட்டர்ல 56 பேர்தான் இருந்தாங்க.ஸ்லோ பிக்கப் ஆகும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 46

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று.

டிஸ்கி - இந்த இடுகையின் கடைசியில் போடப்பட்டுள்ள ஸ்டில் நாம் வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர வேண்டும் என்ற படத்தின் அடிநாதத்துக்குகாக போடப்பட்டது.ஹி ஹி ஹி


அவசியம் படிங்க...

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010


.

Sunday, December 05, 2010

இளைய தளபதியின் காவலன் கலக்குமா?கவுக்குமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY701XzwAZMzfXMGyEBrLVsw650PJLma66Sdiwv9qgyfr5fDvsS3XlHTl3n-GNtZMtO3G7PxpkQPjpXUct1fm8eiaBq-3WMQp1up84DiOGWx-GcoFxfZRIjgjJ6XfMvoezMa3ULpoyhMc/s1600/vijay_kavalan_movie_stills_pics_images_02.JPG

1.இளைய தளபதி விஜய்யோட காவலன் ரிலீஸ் ஆகறப்ப மக்கள் நாயகன் ராமராஜன் நடிச்ச மேதை படமும் ரிலீஸ் ஆகுதாமே? ஏன்?

சனி பொணம் தனியா போகாதும்பாங்களே...அதான்


2. காவலன் செம காமெடி படமாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றே?

விஜய் சும்மா வந்து நின்னாலே காமெடியாத்தான் இருக்கும்,இதுல 4 கெட்டப்ல
வேற வர்றாராம்.

3.   படத்துல விஜய்க்கு 2 ஜோடியாமே?

      20 ஜோடி போட்டாலும் படம் 20 நாள்தான் ஓடப்போவுது.


4.   நடிகர் சிவகுமார் விஜய் மேல கேஸ் போடப்போறாராமே?

  அவர் நடிச்ச பழைய படமான வாட்ச்மேன் வடிவேலு டைட்டிலை அவரோட
   அனுமதி இல்லாம சுட்டு உல்டா பண்ணீட்டாங்களாம்.


5. மிஸ்டர் விஜய்,உங்க எல்லா படத்துலயும் காமெடி  இருக்கற மாதிரி
     பார்த்துக்குறீங்க?ஏன்?

     காமெடிபீஸ் இருக்கு,காமெடி இல்லைன்னா எப்படி?
http://chennai365.com/wp-content/uploads/movies/Innisai_Kavalan/Innisai_Kavalan_009.jpg

6. உங்க படத்தை ஏன் டிசம்பர் மாசம் ரிலீஸ் பண்றீங்க?

    இப்போதான் குளிர்,மழை எல்லாம் இருக்கு,கொசு ஜாஸ்தி இருக்கும் ,      தியேட்டர்ல ஆடியன்ஸ் கொசு அடிக்கறப்ப படத்தைப்பார்த்துத்தான் கை தட்டறாங்கன்னு பில்டப் குடுக்கலாம்.


7.   இனிமே பைலட்னுதான் உங்களை கூப்பிடனுமா?ஏன்?

      ஏற்கனவே கேப்டன்னு ஒரு டெரர் பீஸ் இருக்கே?


8.ஒண்ணா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருக்கனும்,அல்லது
பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணனும்,இப்படி ரெண்டுங்கெட்டானா டிசம்பர்ல
ரிலீஸ் பண்றீங்களே ,ஏன்?

உங்க கேள்விலயே பதிலும் இருக்கு.



9.ஹிந்தி டிக்‌ஷன்ரியை எடுத்து பாருங்க,விஜய்னா வெற்றின்னு அர்த்தம்.

தமிழ்  சினிமா இண்டஸ்ட்ரி டிக்‌ஷனரியை எடுத்துப்பாருங்க,விஜய்னா ஃபிளாப்னு அர்த்தம்.


10.இதுவரைக்கும் ஏதாவது சரித்திரப்படத்துல நடிச்சிருக்கீங்களா?

இல்லை.

சாண்டில்யன்,கல்கி நாவல் ஏதாவது படிச்சிருக்கீங்களா?

இல்லை.

ஸ்டாலின் கட்சியா?

இல்லை.

ஜே கே ரித்தீஷ்க்கு உறவா?



இல்லை.


அப்புறம் என்ன இதுக்கோசரம் இளைய தளபதின்னு பட்டப்பேரு வெச்சுக்கிட்டீங்க?

Saturday, December 04, 2010

சிக்குபுக்கு - சினிமா விமர்சனம்

http://www.maniyosai.com/cms/images/stories/cinemanews/chikku%20bukku.jpgஅட



பையா,காதல் சொல்ல வந்தேன்,ஜப் வி மெட் (ஹிந்தி) படங்களின் வரிசையில்
இதுவும் ஒரு பயண காதல் கதைதான்.ஆனால் கூடவே ஃபிளாஸ்பேக்கில் இன்னொரு காதல் கதையையும் இணைத்திருப்பது புதுசு.

ஆர்யாவுக்கு டபுள் ரோல்.அப்பா,பையன் என.2க்கும் மனுஷன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சைடு வகிடு எடுத்து தலை சீவினால் 1985 கால கட்டத்தில் வரும் அப்பா கேரக்டர். தலையே சீவாமல் அசால்ட்டாக காற்றில் பறக்க விட்ட ஹேர் ஸ்டைல் 2010 மகன் கேரக்டர். வாழ்க தமிழ் சினிமாவின் மெனக்கெடல்.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன்,இதில் ஸ்ரேயா செகண்ட் ஹீரோயின் தான்.வந்தவரை வாங்கிய சம்பளத்துக்கு பழுதில்லாமல் நடித்திருக்கிறார்.துடுக்கான பெண்ணாக இவர் வரும் சீன் எல்லாம் ஓக்கேதான்.ஆனால் ஆர்யாவுடன் பழகும் காட்சிகளில்,காதல் காட்சிகளில்
எல்லாம் செயற்கையான நடிப்பு.அதீத மேக்கப்பும்,கஷ்டப்பட்டு வரவழைக்கும் துடுக்குத்தனமும் மைனஸ்.மற்றபடி ஆள் பர்பி பொம்மை மாதிரி அழகாகவே இருக்கிறார்.பாடல்  காட்சிகளில் நடிக்கும்போது தான் அழகி என்ற கர்வத்துடன் முக பாவனைகள் அவரையும் மீறி வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம்.

புதுமுகம் ப்ரீத்திகா நல்ல முக லட்சணம்.இளமை பொங்கி வழியும் ,காதல் உணர்வுகள் ஓங்கி எழும் விழியும்,வெட்க உணர்வுகள் அட்டகாசமாக வெளிப்படுத்தும் சிவந்த கன்னக் கதுப்புகளும் கொண்ட 20 வயது இளமைப்பெட்டகம்.முக வெட்டு மட்டும் சைனீஸ் மாதிரி  இருப்பதால் எல்லா தமிழர்களுக்கும் பிடித்துப்போகும் என சொல்ல முடியாது.ஓர விழிப்பார்வையில் இவர் பார்வைக்கணைகளை தொடுக்கும்போது ஆர்யா மட்டும் அல்ல ,நாமும் வீழ்கிறோம். பாடல் காட்சிகளிலும்,சில காதல் காட்சிகளிலும் இயக்குநர் இவரிடம் குழந்தைத்தனமான சேஷ்டைகளை எதிர்பார்க்கிறார்.ஆனால் அம்மணி ஒரு விளைஞ்ச கட்டை (மாதர் குல மாணிக்கங்கள் மன்னிக்க)போல் நடந்து கொள்வது மைனஸ்.
http://www.vanakham.com/Admin/NewsAdmin/Upload/News/OYXKauYN.jpg
இந்த மாதிரி காதல் கதைகள் ஆர்யாவுக்கு அல்வா சாப்பிடுவது போல ,அசால்ட்டாக நடிக்கிறார்.
டூயட் சீனில் போகிற போக்கில் ஆர்யா ஒரு ஹை ஜம்ப் பண்றார் பாருங்க சான்சே இல்ல , கலக்கி எடுத்துட்டார் மனுஷன்.

படத்தின் ஓப்பனிங்கிலேயே 1985இல் ஒரு காதல் கதையும்,2010 இல் இன்னொரு காதல் கதையும் நடக்கிறது என்பதை சொல்லி விடுவது தெளிவான முடிவு.
1985இல் எழுதப்பட்ட அப்பாவின் டைரியை ஆர்யா படிக்கும்போது டைரியின்
எழுத்துக்கள் அப்படியே ஃபிரீஸ் ஆகி 2010இல் நடக்கும் கதையில் கோல மாவின் வரிகளோடு கனெக்டிங்க் ஷாட் வைக்கும்போது இயக்குநரின் அழகியல் ரசனை  வெளிப்படுகிறது.

ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் ஃபிகர்சை யூஸ் பண்ணியது ஓக்கே,ஆனால் எல்லாருமே 35 வயசு ஆண்ட்டிகளாக இருப்பது மைனஸ்.கண்ணுக்கு குளிர்ச்சியாக 18 வயசு ஃபிகர்களை ஆட விட்டிருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.

நண்டு சிண்டு ஜெயன் ஆர்யாவின் நண்பராக வந்து ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி  1000 தாமரை மொட்டுக்களே பாட்டுக்கு முக எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் காட்டுவது செம காமெடி.அதே போல் பின் பாதியில் ஃபிளாஸ்பேக் கதையில் ஆர்யாவின் நண்பராக சந்தானம் வந்ததும் காமெடி களை கட்டுகிறது.

ஆர்யா கல்யாண விசேஷத்தில் ப்ரீத்தாவுக்கு காகித ராக்கெட் விடுவதும் அது பாதை மாறி வேறொரு மொக்கை ஃபிகரிடம் பட்டு அவர் காதலுடன் ஆர்யாவை லுக் விடுவது  டைமிங்க் காமெடி.

நீளமான காகித பீப்பீ செய்து அதன் மூலம் ஹீரோயின் கன்னத்தை ஹீரோ தொடும் சீன் செம கிளு கிளு.தெளிவாக நீரோடை மாதிரி செல்லும் திரைக்கதையில் ஆர்யாவின் ரூம் மேட் கேரக்டர் ஆர்யாவின் காதலியை அத்தை பெண் என ட்விஸ்ட் வைத்ததும்,அவருக்காக  ஆர்யா தன் காதலை ,காதலியை விட்டுத்தருவதும் நம்ப முடியாதது மட்டும் அல்ல பார்வையாளனுக்கு எரிச்சலை வர வைக்கும் சீன்.

அதே போல் அப்பா ஆர்யா காதலித்த பெண் தனது அத்தை பையனை மணக்க ஒத்துக்கொள்ளும்  காட்சி சும்மா வசனம் மூலமே கட்டப்படுவது அழுத்தம் இல்லை.ஆர்யாவுக்கு வேற இடத்தில்  கல்யாணம் ஆகிடுச்சு என சொன்னதும் ,அதை நம்பி அவர் அத்தை பையனை மேரேஜ்  பண்ண ஒத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

அப்பா கேரக்டர் ஆர்யாவின் காதலி வேறொருவரை திருமணம் செய்வதையே
ஏற்க முடியாத நிலையில் அவருக்குப்பிறந்த மகளை மகன் ஆர்யா காதலிப்பதும் , மணப்பதும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?சித்தி மகள் முறை ஆகாதா?

இந்த 2 மைனஸ்களும் படத்தின் வெற்றியை நிரம்பவே பாதிக்கும்.

ஸ்ரேயா பாடல் காட்சிகளில் தனது கூந்தல் கற்றைகளை மீசையாக்கி அழகு காண்பிப்பது கவிதை.ஆர்யாவின் நண்பராக வந்து காதல் கதையில் குழப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் ஒரு பெரிய ஸ்டாரை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தூறல் என்றாலும் சாரல் என்றாலும் ஈரம் மண்ணில்தான் என்ற பாடல்
பல கவிதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.அதே போல் நடுக்காட்டில் ஸ்ரேயாவின் பர்த்டே கொண்டாட காய்கறிகளைக்கொண்டே ஆர்யா கேக் ரெடி பண்ணுவது ,அதன் மூலம் லவ் ஸ்டார்ட் ஆவது THE BLUE LAGUNE படத்தை நினைவுபடுத்தினாலும் கவிதையான காட்சி.

லேடீஸ் பஸ்சில் பார்வை இல்லாதவராக நடிக்கும் ஆர்யா பண்ணும் சேஷ்டைகள் இனி டாப் டென் காமெடியில் ரொம்ப நாளுக்கு இருக்கும்.அதே போல் ஸ்ரேயாவுக்கு  உள்ளங்கால் ஜோசியம் பார்ப்பதும் செம கிளு கிளுப்பு.
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1591.jpg
கதா விலாசம் எஸ் ராமகிருஷ்ணனின் மேதாவிலாசம் தென் பட்ட இடங்கள்

1.காதலிக்கறவங்க யோசிக்கறது கிடையாது,யோசிக்கறவங்க காதலிக்கறது கிடையாது.

2. ஹாய்... ஹேப்பி மேரீடு லைஃப்...

சாரி,இந்தக்கல்யாணம் நடக்காது,நான் ஓடிப்போகப்போறேன்.

3. யோவ்,மதுரைக்கு ஒரு டிக்கெட் வேணும்.

மரியாதை வேணும்.

மதுரை வேணும்.

ஏம்மா,நீயே ஒரு டிக்கெட் மாதிரிதான் இருக்கே உனக்கு எதுக்கு டிக்கெட்?

4.மேடம்,நீங்க லவ் மேரேஜா?      ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க?

உங்க ஆளு என்னை சைட் அடிச்சிட்டு இருக்காரே,லவ் பண்ணும் வரைதான் உங்களைப் பார்ப்பாரு,மேரேஜ் ஆகிட்டா போர் அடிச்சிடும்,வெளில பார்ப்பாரு.

5. நம்ம கூடப்படிச்சாளே வள்ளி ,அவ இப்போ எப்படி இருக்கா?

ராயல் தியேட்டர் ஓனரை கட்டிட்டு சினிமாஸ்கோப் மாதிரி இருக்கா.

6. யோவ்,தில்லு இருந்தா என் சைக்கிளை உன் டப்பா காரால ஓவர்டேக் பண்ணுய்யா பார்ப்போம்.

7.  தம்பி,நமக்கு எதுக்கு இந்த போலீஸ் வேலை  எல்லாம்?

மாமூல் கிடைக்குமே.

8.  இது பிளாக் டிக்கட்டா?       நோ டிரெயின் டிக்கட்

9. வயசுப்பையனை இப்படி தனியா விட்டுட்டுப்போனா எப்படி?மோகினிப்பொண்ணு பார்த்தா இழுத்துட்டுப்போயிடாது?

அப்படி இழுத்துட்டுப்போனா அவளை இழுத்து வெச்சு அறுத்துடறேன்.

10. அய்யய்யோ,என் பேக்கை அபேஸ் பண்ணிட்டு ஓடறான்,என் பாஸ்போர்ட்,விசா எல்லாம் அதுலதான் இருக்கு,

அப்போ உன் ஹேண்ட்பேக்ல என்னதான் இருக்கு?     லிப்ஸ்டிக்,கண்ணாடி,பவுடர் பஃப்

11. டீச்சர்,ஷாஜகான் மும்தாஜ் இறந்ததும் தாஜ்மகால் கட்டுனாரு,பக்கத்து வீட்டு முத்து அவரோட மனைவி இறந்ததும் அவளோட தங்கையை கட்டுனாரு.2 பேருல யார் புத்திசாலி?

12.  சார்,ஒரு ஹெல்ப்,நீங்க ஃபோட்டோகிராஃபர்தானே,என் ஆள் கோயிலுக்குப்போறப்ப நடக்கறப்ப,குளிக்கறப்ப ஃபோட்டோ எடுக்கனும்.

குளிக்கறப்பவுமா?

13. என் ஃபோட்டோவுக்கு கிஸ் குடுக்காதே.    சரி ,அப்போ நேரடியா நீயே குடு.


14. இங்கே இருந்து மதுரைக்கு ஸ்ட்ரெயிட் பஸ் இருக்கா?   பஸ்சே கிடையாது.


15. அப்பன் சேர்த்து வெச்ச சொத்தை கரைக்கறவன்தான் உண்மையான ஆம்பளை.

16. நான் வயிற்றுல தொப்பையை பார்த்திருக்கேன்,முகத்துலயே தொப்பை உள்ளவனை இப்போதான் பார்க்கறேன்.

17. நாம 2 பேரும் ஃபிரண்ட்சா இருக்கலாமா?   ஃபிரண்ட்ஸிப்ங்கறது தானா உருவாகனும்.

18. எல்லாருக்கும் ஒவ்வொரு வயசுல ஒவ்வொண்ணைப்பிடிக்கும்.எனக்கு எப்பவும்  அவளை மட்டும் தான் பிடிக்கும்.

19. பொண்ணுங்க யாரை எப்போ லவ் பண்ணுவாங்கன்னு சொல்லவே முடியாதுஅது அவங்களுகே. தெரியாது.

20.  4 லார்ஜ்ஜூகு கம்மியா சரக்கு அடிச்சா என் பரம்பரைக்கே கேவலம்.

21. சார்,7.30 க்கு வர்ற டிரெயின் எப்போ வரும்?

       இதென்ன கேள்வி? 7.30க்குத்தான் வரும்.

22. சார்,டிரெயின் ஏன் இன்னும் வர்லை?   பஞ்சர் ஆகியிருக்கும்.

டிரெயின் எப்படி பஞ்சர் ஆகும்?

23. ஒரு ஆம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா பிரச்சனை அவனுக்கு மட்டும்தான்,ஒரு பொம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா அவ குடும்பத்துக்கே பிரச்சனை.

24. நான் ஏகப்பட்ட பேரை அலைய விட்டிருக்கேன்,மாட்டி விட்டிருக்கேன்.

அது சரி ,நீ எத்தனை பேரு கிட்டே மாட்டி இருக்கே?

அது சீக்ரெட்,ஒரு பொண்ணு கிட்டே அதை மட்டும் வரவைக்கவே முடியாது.

25. எக்ஸ்கியூஸ் மீ சார்,நீங்க சூசயிடுதானே பண்ணிக்கப்போறீங்க,உங்க பைக் சாவியை குடுங்க ,நாங்க யூஸ் பண்ணிக்கறோம்.

26. நான் உங்களுக்கு மட்டும்தான் என் பைக்ல லிஃப்ட் குடுப்பேன்,திமிராப்பேசுதே இந்தப்பொண்ணு,அதுக்கு லிஃப்ட் தரமாட்டேன்.

ஓக்கே,நீங்க எனக்கு மட்டும் லிஃப்ட் குடுங்க.

அப்புறம் ஏன் அந்தப்பொண்ணு ம் பைக்ல ஏறுது?

நீங்க எனக்கு லிஃப்ட் தந்தீங்க,நான் அந்தப்பொண்ணுக்கு லிஃப்ட் தந்திருக்கேன்.

(இந்தக்காமெடி கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கரகாட்டக்காரன் வாழைப்பழ ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கும்)

27.   ஸ்ரேயா - எனக்கு பயமா இருக்கு.

ஆர்யா - நாந்தான் கூட இருக்கேனே?

ஸ்ரேயா - அதனாலதான் பயமே...

28. சந்தானம் - நைனா,என் காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணலைன்னா இந்த வீட்ல ஒரு பொணம் விழும்.

அவசரப்பட்டு தற்கொலை பண்ணிக்காதே...

நைனா,நான் உன்னைத்தான் கொலை பண்ணப்போறேன்..

29. அடடே,சொல்லாம கொள்ளாம நம்ம ஊருக்கு வந்துட்டீங்க?

இல்லையே,மனைவி கிட்டே சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.

யோவ்,என் கிட்டே சொல்லாம வந்துட்டேன்னு சொல்ல வந்தேன்.

30. என்ன போட்டின்னா அதோ அந்த ரவுண்டுக்குள்ள நீ சுடனும்.

சந்தானம் - நான் முதல்ல சுடறேன்,அப்புறமா ரவுண்ட் போட்டுக்கறேன்.

31. ஸ்ரேயா- வண்டில ஏ சி இல்லை,குடிக்க தண்ணி இல்லை...

ஆர்யா - அது கூட தேவலை,பிரேக்கும் இல்லை.

32. நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியலை.

லவ் பண்றவங்க பேசறது அப்படித்தான் இருக்கும்.

33.இந்த உலகத்துலயே கஷ்டமான விஷயம் பிடிச்சவங்களை  பிரியரதுதான்,
சந்தோஷமான விஷயம் பிரிஞ்சவங்க சேர்றதுதான்.

34. ஒவ்வொருத்தன் லைஃப்லயும் அடடா மிஸ் பண்ணீட்டமேன்னு வருத்தப்படற விஷயம் கண்டிப்பா ஒண்ணாவது இருக்கும்.

35. யாரோட காதலுக்காகவும் என்னோட காதலை நான் விட்டுத்தர முடியாது.

படத்தில் வசனங்கள் பெரிய பலம்.அதே போல் சந்தானம் காமெடியும்.ஒளிப்பதிவு டாப்.இசை சுமார்

ரன்னிங்க் ரேஸ்சில் கலந்து கொள்ளும் சந்தானம் ஏதோ பேதியை வரவைக்கும் சரக்கை தெரியாமல் குடித்து விட்டு நெம்பர் டூ போவதற்காக வேகமாக ஓடுவதும் அட பிரமாதமாக ஓடறியே என பாராட்டப்படுவதும் கண்ணில் நீரை வர வைக்கும் காமெடி.

நீ எங்கேயோ போகப்போறே?

இன்னும் கொஞ்ச நேரம் ஆனா நான் இங்கேயே போயிடுவேன்.

ம் ம் தேறிடும்.      ம்ஹூம் நாறிடும்.
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/8383_1.jpg
படத்தின் இயக்குநருக்கு சில அட்வைஸ்

1. உலகப்படத்திலிருந்து கதையையோ காட்சியையோ உருவும்போது நமது கலாச்சாரத்துக்கு அது செட் ஆகுமா என எண்ணிப்பார்க்கவும் அல்லது கொஞ்சம் ஆல்டர் பண்ணவும்.

2. எடிட்டிங்கில்,திரைக்கதையில் டவுட் என்றால் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவும்,எந்தத்தவறும் இல்லை.12 பி என்ற படத்தின் திரைக்கதை எடிட்டிங்க்கிற்கு அமரர் ஜீவா கே பாக்யராஜிடம் ஆலோசனை பெற்றார்.( அது ஒரு சிக்கலான திரைக்கதை)

3. டி வி டி பார்த்து அறிவை வளர்ப்பதை விட புத்தக படிப்பு அனுபவம் தேவை.இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என பெயர் பெற்ற கே பாக்யராஜின் திரைக்கதை எழுதுவது எப்படி புக்கை நெட்டுரு போடவும்,அதே போல் அமரர் சுஜாதாவின் சினிமாக்கட்டுரைகளை படிக்கவும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் விமர்சனம் - ஓக்கே.

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள்  சி செண்ட்டர்களீல் 20 நாட்கள் ஓடலாம்.

காதலர்கள்,இளைஞர்கள்,கல்லூரி இளைஞர்கள்,இளைஞிகள் பார்க்கலாம்.