Thursday, January 01, 2026

ரெட்ட தல (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர்)

         

           மான் கராத்தே(2014) என்ற சுமாரான படத்தைத்தந்த இயக்குநர்  கரிஸ் திருக்குமரன் தரத்தில் அதை விட ஒரு மாற்றுக்குறைவான தரத்தில் இந்தப்படத்தைத்தந்துள்ளார்.தடம் என்ற பிரமாதமான டபுள் ஆக்சன் க்ரைம் திரில்லர் தந்த அருண் விஜய் இதில் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்

         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் சின்ன வயதிலேயே ஒரு பெண்ணைக்காதலித்தவன்.அவன் காதலி இப்போது ஒரு பாரில் க்ளீனர் ஆக வேலை செய்பவள்.நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகியை சந்திக்கும் நாயகனுக்கு அதிர்ச்சி.அவளுக்குப்பணம் தான் முக்கியம்.வசதியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறாள்.


நாயகன் வெறுத்துப்போய் திரும்பி வரும் வழியில் வில்லனை சந்திக்கிறான்.வில்லன் நாயகனைப்போலவே இருக்கிறான்,ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவன்.

வில்லன் ஜெயிலில் இருந்து பரோலில் வந்தவன்.தன்னைப்போன்ற சாயலில் இருக்கும் நாயகனைக்கொன்று விட்டு தான் இறந்ததாக உலகை நம்ப வைக்கத்திட்டம் இடுகிறான்.ஆனால் நாயகன் தன் காதலிக்காகப்பணக்கார வாழ்க்கைக்காக வில்லனைக்கொன்று விடுகிறான்.


இப்போ தான் ஒரு சிக்கல்.வில்லன் ஆல்ரெடி இன்னொரு ஆளைக்கொலை செய்தவன்.கொலை செய்யப்பட்ட ஆளின் அப்பா வில்லனைப்பழி தீர்க்க வருகிறான்

வில்லனுக்கு ஒரு காதலி.வில்லனைத்தேடி வரும் ஒரு போலீஸ் ஆபீசர் இவர்களை எல்லாம் நாயகன் எப்படி சமாளித்தான் என்பது மீதிக்கதை.


நாயகன்,வில்லன் என்று இரு வேடஙகளில் அருண் விஜய் நன்றாக.         நடித்து இருக்கிறார்.இருவருமே கெட்டவர்கள் என்பதால் ஒருவர் இறக்கும்போது நமக்குப்பரிதாபம் வரவில்லை.

நாயகி ஆக சித்தி இட்னானி  நடித்திருக்கிறார்.இவரது கேரக்டர் டிசைனில் குழப்பம்.சில இடங்களில் நல்ல காதலி ஆகவும் ,சில இடஙகளில் பணத்தாசை மிக்கவராகவும்  சித்தரிக்கப்பட்டது ஏனோ?

வில்லனின் ஜோடியாக வரும் தீவ்ரா கெஸ்ட் ரோல் தான்.வந்த வரை ஓக்கே.

போலீஸ் ஆபீசர் ஆக ஜான் விஜய் ஓவரோ ஒவர் ஆக்டிங.அவர் வரும் காட்சிகள்  எல்லாம் டபுள் மீனிங் டயலாக்ஸ் பேசி முகம் சுளிக்க வைக்கிறார்.


இன்னொரு வில்லன் ஆக ஹரீஸ் பெரோடி ,யோகேஷ் சாமி இருவரும் பரவாயில்லை ரகம்.

தன் யா ரவிச்சந்திரன் ரோல் துக்ளியூண்டு.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  கரீஸ் திருக்குமரன்

டிஜோ டாமியின் ஒளிப்பதிவு அருமை.ஹாலிவுட் தரம்.பெரும்பாலான காட்சிகள் இரவு நேரக்காட்சிகள் என்றாலும் திறமையான மேக்கிங் ஸ்டைல்.

சாம் சி எஸ் சின் இசையில் பாடல்கள்  பரவாயில்லை ரகம்.பின்னணி இசை குட்.

ஆண்ட்டனியின் எடிட்டிஙகில் ஏகப்பட்ட குழப்பங்கள். 113 நிமிடஙகள் படம் ஓடுகிறது.

சபாஷ்  டைரக்டர்

1 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக இறந்தவர் உயிரோடு இருக்கிறார் எனக்காட்டாமக் இருப்பவரை வைத்தே ட்விஸ்ட் காட்டியது

2 வசனகர்த்தாவின் உழைப்பு.

3 ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு


  ரசித்த  வசனங்கள் 

1 உன்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும்,ஆனா உனக்காக நான் சாக முடியாது


2 கேட்கறவன் கேனயனா இருந்தா கேத் ரீனா கைப். கோட்டா சீனிவாசராவின் ஒயிப்னு சொல்வான் போல

3 டியர்,உன் காலைக்கொஞ்சம் காட்டு

எதுக்கு?

பேய்க்குக்கால் இருக்காதுன்னு சொன்னாங்க.

3 டியர் ,நான் போய்க்குளிச்சுட்டு வர்றேன்


ம்


வந்ததும் நீ என்ன பண்ணனும் தெரியுமா?

?

மறுபடியும் என்னைக்குளிக்க வைக்கனும்

4 பொண்ணுங்களை நம்பக்கூடாது.உனக்காக உயிரைக்கூடத்தருவேன்னு சொல்வாளுக.மயிரைக்கூடத்தர மாட்டாளுக

5 உண்மை என்னைக்கு சுவராஸ்யமா இருந்திருக்கு?

6 ஆம்பளைம்னா அலெக்சாண்டர் போல் இருக்கனும்.பொண்ணுன்னா கிளியோபாட்ரா போல் இருக்கனும்

7 கிடைச்ச வாழ்க்கையே போதும்னு வாழ்க்கையை சுருக்கிக்கக்கூடாது.

8 ஒருத்தன் சாகறதுக்கு முன்னால அவன் கண் முன் அவன் வாழ்ந்த வாழ்க்கை வந்துட்டுப்போகும்

9   டீயில் விஷத்தைக்கலந்துடாத.விக்கற விலைவாசியில் உனக்கு ஒரு புல்லட் செலவு பண்ணி சுட்டுட்டு இருக்க முடியாது

10  கார் ,பெண் இரண்டையும் மாத்திக்கிட்டே இருக்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிறையில் இருந்து பரோலில் வரும் வில்லன் தன் சாயலில்  இருக்கும் நாயகனைக்கண்டதும் ஆன் த ஸ்பாட் கொலை செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏனோ?

2 வில்லனைப்போல் நாயகன் தன் இடது கையில் டக் என்று சைன் பண்ணுவது ஓவர்

3 நாயகி பணம் தான் குறியாக இருப்பதாக சில இடஙகளிலும் ,காதலன் மேல் பாசம் கொண்டவள் ஆக பல இடஙகளிலும் மாற்றி மாற்றிக்காட்டுவது ஏனோ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி யில் போட்டால் பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 39 குமுதம் ரேங்க்கிங் சுமார்.ரேட்டிங்க் 2/5



ரெட்ட தல
திரைப்பட பதாகை
இயக்கம்கரிஸ் திருக்குமரன்
தயாரிப்புபாப்பி பாலசந்திரன்
கதைகரிஸ் திருக்குமரன்
இசைசாம் சி. எஸ்.
நடிப்பு
ஒளிப்பதிவுடிஜோ டோமி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்பிடிஜி யுனிவர்சல்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: