Tuesday, December 23, 2025

RAAT AKELI HAI-THE BANSAL MURDERS(2025)-ஹிந்தி/தமிழ்- சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்) @நெட் பிளிக்ஸ்

             

            2020ம் ஆண்டு வெளியான ராத் அகேலி ஹை படத்தின் இரண்டாம் பாகமாக இது இருந்தாலும் இது தனிக்கதை.புதுக்கேஸ்.முதல் பாகம் பார்க்காதவர்கள் பார்த்தாலும் கதை புரியும்.தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது   


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர்.அவருக்கு பன்சால் பேமிலியிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது.மிகப்பெரிய கோடீஸ்வரக்குடும்பம் அது.


சில காகஙகள் இறந்து கிடக்க ஒரு பன்றி வெட்டப்பட்ட நிலையில் இருக்கு.அந்தக்குடும்பத்தில் பல விசித்திரமான கேரக்டர்கள் இருக்கிறார்கள்.நாயகன் அந்த பங்களாவில். போலீஸ் பாதுகாப்பு போட்டு விட்டு ஸ்டேசன் திரும்புகிறான்


அடுத்த நாளே அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டு  அவரவர் அறையிலேயே இறந்து கிடக்கிறார்கள்.ஒருவர் மட்டும் உயிர் தப்பிக்காயங்களுடன் யிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார்.அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு நாயகன் இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிக்கிறார்.


மூன்று பேர் மட்டும் தான் உயிர் பிழைத்தவர்கள்.இந்த இன்வெஸ்டிகேஷன் தான் மொத்தத்திரைக்கதையும்


நாயகன் ஆக நவாசுதீன். சித்திக் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாயகனுக்கு உதவும் பாரன்சிக் டாக்டர் ஆக நடிகை ரேவதி கம்பீரமாக நடித்திருக்கிறார்.ஆனால் நரைத்த முடியுடன் அவரைப்பார்க்கக்கஷடமாக இருந்தது

நடித்த மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்


சபாஷ்  டைரக்டர்


1 போதைப்பழக்கம் கொண்ட கேரக்டர் தான் கொலையாளி என்க்காட்டு ட்விஸ்ட் கொடுத்த விதம்

2  பேக்டரியில் வந்த புகையால் மரணம் அடைந்த குழந்தைகள் பிளாஸ்பேக் போர்சன் குட்


  ரசித்த  வசனங்கள் 

1 பாரம்பர்யம்  ஒரு விதமான சிறை

2 அடிக்கறதால குற்றவாளி உண்மையை சொல்ல மாட்டான்,நீங்க சொல்றதை வேணா சொல்வான்

3  நீ ஆக்ரோஷமா இருந்தா உன் எதிரி  சண்டை போடாமலேயே ஜெயிப்பான்

4 எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு,ஆனா என் மேல தான் நம்பிக்கை இல்லை


5 எது உனக்கு சந்தோசத்தைக்கொடுக்கிறதோ அதை நீ துரத்திக்கொண்டு தான் இருப்பாய்

6 வலி இல்லாம சுதந்திரம் கிடைக்காது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் தான் போலீஸ்.அவர் தான் கேசை கிராக் செய்யனும்.ஆனால் டாக்டர் ஆக வரும் ரேவதிதான் 90%  கேசை முடிக்கிறார்

2 கொலை எப்படி நடந்திருக்கும்?என்பதை விளக்கும் காட்சிகளில் ரேவதி ஓவர் ஆக்டிங.ஒரு டாக்டர் இவ்ளவ் ஆக்ரோஷமாகவா டெமோ காட்டுவார்?


3. ராதிகா ஆப்தே படத்துக்குத்தேவை இல்லாத தாவணி.முதல் பாகத்தில் இருந்ததால் இதிலும் செண்ட்டிமெண்ட் ஆக புக் பண்ணி விட்டார்கள் போல்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி ஸ்லோ.பின் பாதி விறுவிறுப்பு.ரேட்டிங்க் 2.5/5

0 comments: