சமீபத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கம்பெனியின் உண்மை சம்பவங்களை ஒட்டி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மெடிக்கல் ரெப்.ஒரு கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்கிறான்.ஆரம்பத்தில் அவனால் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்ள முடியவில்லை.அவனது மேலதிகாரியிடம் டோஸ் வாங்குகிறான்.போகப்போக எல்லா டெக்னிக் கையும் கற்று நல்லா டெவலப் ஆகி ஏரியா சேல்ஸ் மேனேஜர் ஆகிறான்.
நாயகன் மெடிக்கல் ரெப் ஆக இருந்தபோது அவனால் விற்கப்பட்ட ஒரு மருந்து சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.இதனால் பாதிக்கப்பட்ட நாயகன் ,ஒரு லேடி டாக்டர்,ஒரு நர்ஸ் மூவரும் இணைந்து அந்தக்கம்பெனியை சட்ட ரீதியாக மாட்டி வைக்க திட்டம் இடுகிறார்கள்.
இந்தப்போராட்டத்தில் அவர்கள் இழந்தது என்ன? சாதித்தது என்ன? சந்தித்த இன்னல்கள் என்ன?என்பதே மொத்தத்திரைக்கதையுமே
நாயகன் ஆக நிவின் பால் அடக்கி வாசித்து இருக்கிறார்.பிட் பாடியாக இரெத அவர் ஓவர் பீர் அடித்து தொப்பையுடன் இருப்பது வருத்தமாக இருக்கிறது.நடிப்பு குட்.
மெடிக்கல் கம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர் ஆக ரஜித் கபூர கச்சிதம்
லேடி டாக்டர் ஆக வரும் ஸ்ருதி ராமச்சந்திரன் நடிப்பும் கண்களும் ,அழகு முகமும் நினைவில் நிற்கிறது.
நாயகனின் மனைவியாக கெஸ்ட் ரோலில் சுதி ஜெயன் வருகிறார்.
நாயகனின் முன்னாள் காதலி ஆக வீணா நந்தகுமார் பாந்தமாக நடித்து இருக்கிறார்.
நாயகனின் சீனியர் ஆபீசர் ஆக ஜாஸ்மின் நடித்திருக்கிறார்
பாதிக்கப்பட்ட நர்சாக பிதமாதமாக நடித்திருக்கிறார் அஸ்வதி மனோகரன்
இசை அப்ஜெக் ஸ்+ ஜேக்ஸ் பிஜோய்
பின்னணி இசை கச்சிதம்
ஒளிப்பதிவு அபினந்தன் ராமானுஜம் கலக்கி இருக்கிறார்.ஆரம்பக்கட்ட காட்சிகளில் பல சிங்கிள் ஷாட்கள். கை தட்ட வைக்கின்றன.
எடிட்டிஙக் ஸ்ரீஜித் சரண்.இன்னமும் அரை மணி நேரம் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
திரைக்கதை இயக்கம் பி ஆர் அருண்
சபாஷ் டைரக்டர்
1 சாட்சி சொல்ல கோர்ட் வரும் டாக்டருக்கு அவர் மனைவி இறந்ததாக மெசேஜ் வந்தும் அவர் கூண்டில் ஏறும் சீன்
2 லேடி டாக்டருக்கும் ,நாயகனுக்கும் இடையே இருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங மற்றும் உரையாடல்கள் கச்சிதம்
3 நாயகனுக்கு காதலி,மனைவி இருந்தும் டூயட் வைக்காதது
4 கேப்டன் நடித்த ரமணா பட ஹாஸ்பிடல் எட்பாடி ட்ரீட்மெண்ட் சீனையே கொஞ்சம் மாற்றி லேடி டாக்டரைக்கார்னர் செய்த ஐடியா
5 லேடி டாக்டருக்கும் ,நாயகனுக்குமானா காம்பினேசன் சீன்ஸ் கவிதை
ரசித்த வசனங்கள்
1தோல்வி என்பது வித்தியாசமான ஒன்று.நாம் தோத்துட்டோம்னு நாமா ஒத்துக்கறவரை அது தோல்வி இல்லை
2. தோல்வி தான் சாவைவிடக்கொடியது
3 உலகத்துலயே மிக மோசமான இடம் கோர்ட் தான்
4 பெரும்பாலான கிரிமினல்கள் கோட் சூட் தான் போட்டுட்டு சுத்திட்டு இருக்காஙக
5 ஒருவர் இறந்த பின் தான் அவஙகளோட நிறைவேறாத ஆசையை நிறைவேத்தி வைக்கனும்னு தோணுது
6 சொந்தமா வீடு வாங்கி அதுலதான் தன் உயிர் போகனும்னு அம்மா ஆசைப்பட்டாஙக
7 கனவில் புதுக்கனவு ,பழைய கனவுன்னு இருக்கா?
8 நீங்க ரொம்ப லக்கி டாக்டர்
இதே டயலாக்கை எல்லார்ட்டயும் ஒர்க் அவுட் பண்ணிடுவே போலயே?
9 இருமல் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை சிபாரிசு செய்ங்க டாக்டர்.இருமல் இல்லாத குழந்தைகளுக்கும் இதையே எழுதுஙக.தெரியவா போகுது?
10 ரிசர்ச் டீமோட வார்னிங்கைக்கேட்டு நடந்தா புது மருந்து எதுவும் லாஞ்ச். ஆகாது
11 கணக்கெல்லாம் கூட்டிட்டு இருக்கேன்
நீங்க "கூட்டிக்கொடுத்தது" எல்லாம் போதும்.
12 உனக்கு ஒரு பரிசு
அய்யோ,பொண்ணா?எனக்கு வேண்டாம்.
இது உனக்கில்லை,டாக்டர்க்கு
13 யார் இருந்தாலும் அவஙகளை டெம்ப்ட்டிங்க்லயே வெச்சிருக்கனும்,அதுதான் என் ஸ்ட்ரேட்டஜி
14 நம்ம மெடிக்கல் வேலை ஒரு வகைல சாபம் தான்,மத்தவங்க அழுகைல தான் நம்ம பிஸ்னெஸ்
15 வியாதியை குணப்படுத்துவது மூலக்கூறு தான்,பிராண்ட் இல்லை
16 இது ஒரு மங்களகரமான ஹாஸ்பிடல்
17 நீ தனியாதான் தங்கனும்.நம்ம கம்பெனிக்கு கம்பெனி சேர்வது பிடிக்காது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அவ்ளோ பெரிய கம்பெனி வில்லன் ஒரு சாதா ரெப் இடம் இப்படித்தான் தோற்பானா?
2 நாயகன் தரும் கிப்ட் பேனாவைக்கூட நர்ஸ் வாங்கமறுப்பதும் ,அதுக்கான ரீசனும் நம்ப முடியலை
3 வில்லன் கோர்ட்டில் 220 பேமிலிக்குத்தலா ரூ 20 லட்சம் வீதம் 44 கோடியை நட்ட ஈடு தருவதாக அசால்ட் ஆக சொல்வதும் நம்ப முடியலை
4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வில்லன் மேல் இரக்கம் வர வைப்பதாக இருக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மிக மெதுவாக செல்லும் க்ரைம் ட்ராமா.ரேட்டிங்க் 2.5 /5
| Pharma | |
|---|---|
![]() | |
| Genre | Drama |
| Written by | P. R. Arun |
| Directed by | P. R. Arun |
| Starring | Nivin Pauly Rajit Kapoor Narain Shruti Ramachandran Veena Nandakumar |
| Music by | Abjaksh. S (Original Background Score& Music Composer) Jakes Bejoy (credited for "Music Supervisor") |
| Country of origin | India |
| Original language | Malayalam |
| No. of seasons | 1 |
| No. of episodes | 8 |
| Production | |
| Producer | Krishnan Sethukumar |
| Cinematography | Abhinandan Ramanujam |
| Editor | Sreejith Sarang |
| Production company | Movie Mill |
| Original release | |
| Network | JioHotstar |
| Release | 27 November 2024 (IFFI) 19 December 2025 (JioHotstar) |

0 comments:
Post a Comment