Sunday, March 01, 2015

காக்கி சட்டை வசூலில் “புலி” யா? வாசகர்கள் அலசல்

சிவகார்த்தியேன் நடிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார், காக்கி சட்டை படத்தின் மூலம் போலீஸ் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
மீண்டும் எதிர்நீச்சல் டீம் இணைந்தது என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறி அடித்தன. அந்த எதிர்பார்ப்பை காக்கி சட்டை நிறைவேற்றியதா?
கான்ஸ்டபிளாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடமை தவறாமல் கண்ணியமாக, நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இல்லாததால், இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் விரக்தியை வெளிப்படுத்துகிறார். நிஜமான போலீஸ்காரன்னா ஒரு கேஸ் பிடி. அப்புறம் பார்க்கலாம் என்று பிரபு சவால் விடுகிறார். அப்படி ஒரு கேஸ் சிவகார்த்திகேயனிடம் சிக்குகிறது. அந்த கேஸில் சிக்கியவர்கள் கதி என்ன ஆகும்? இதுதான் காக்கி சட்டை படத்தின் கதை.
காக்கி சட்டை திரைப்படத்தின் டிரெய்லர் உங்களுக்கு நினைவிருக்கலாம். சட்டத்தை காப்பாத்தணும். பொதுமக்களைப் பாதுகாக்கணும். குற்றவாளிகளைத் தண்டிக்கணும். இந்த தொனியில் சிவகார்த்திகேயன் இன்ஸ்பெக்டராக போலீஸ் ஜீப்பில் இருந்து மாஸ் ஹீரோ எஃபக்டில் இறங்கி வரும்போது விசில் பறக்கிறது.
அந்தக் காட்சி முடிந்ததும் ஒரு ட்விஸ்ட். ரசிகர்கள் சின்னதாய் சிரித்தபடி கூர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.
சிவகார்த்திகேயன் போடும் சின்ன சின்ன தமாஷ் கெட்டப்புகளும், பக்கத்தில் இருப்பவனை 'பன்னி மூஞ்சி வாயா' என கிண்டல் செய்யும்போதும் படம் நார்மலாகத்தான் போனது.
சிவகார்த்திகேயன் என்ட்ரியை அதிகம் சிலாகித்து வரவேற்றது பெண்கள் அணிதான். சிவகார்த்திகேயன் ஒவ்வொரு பன்ச் பேசும் போதும் பெண்களிடம் அதிக கிளாப்ஸ் பறந்தது.
ஸ்ரீதிவ்யா அறிமுகக் காட்சியில் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும்போது மட்டும் சின்னதாக ரசித்த பார்வையாளர்கள், அதற்குப் பிறகு 'ஊதா கலரு ரிப்பன் இதுல ஓவர் மேக்கப்பில் இருக்கே' என்று சலித்துக்கொண்டனர்.
சிவகார்த்திகேயன் - இமான் அண்ணாச்சி பேசும் காட்சிகளுக்குதான் ரசிகர்கள் மனம் திறந்து சிரித்தனர். இமான் அண்ணாச்சியின் ஆலோசனைப்படி, ஸ்ரீதிவ்யாவுக்கு பொஸசிவ்னெஸ் வரவேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் செய்யும் விஷயம் விவகாரமாகப் போய் முடிந்ததும் தியேட்டர் முழுக்க சிரிப்பலையில் அதிர்ந்தது.
ரொம்ப நேரம் கதைக்குள்ளேயே வராமல் இப்படி வழக்கமாக காட்சிகளால் காய வைக்கிறார்களே என்று நினைக்கும்போதுதான் மெயின் கதைக்குள் வருகிறார்கள். அப்படி மெயின் கதை தெரிந்த உடனே 'என்னை அறிந்தால்' கதை என்று ரசிகர்கள் முணுமுணுத்தனர். இன்னும் சிலர், 'என்னை அறிந்தால் பார்ட் 2வா?' என்று அலுத்துக்கொண்டனர்.
இடைவேளை வரை ஆக்‌ஷன் பிளாக்கே இல்லையோ என்று யோசிக்கும் நேரத்தில், ஒரு ஷாட்டில் சிவகார்த்திகேயன் மழையில் ரவுடிகளைப் புரட்டி எடுக்கும் காட்சி ஓகே ரகம்.
இடைவேளைக்குப் பின்னர், கேன்டீனில் ரசிகர்கள் பாப்கார்ன் கொறித்தபடி பேசியபோது காதைக் கொடுத்தேன். 'கான்ஸ்டபிள் சிவா பெருசா பண்ணலையேப்பா. இன்னும் ஏதாவது செகண்ட் ஆஃப்ல இருந்தா நல்லா இருக்கும்' என ஏக்கத்தைக் கொறித்தார்கள். ரசிகர்கள் இதுக்கும் மேல ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
நாகிநீடுவை வில்லனாக முன்னிறுத்தி அப்பாவியாகக் காட்டிவிட்டனர். மிரட்டும் வில்லனாக நடித்த யோக் ஜெபி இதில் சத்தம் போடாத வில்லனாக வந்து தன் கதையை முடித்துக்கொள்கிறார்.
மெயின் வில்லனாக விஜய் ராஸ் ஆசம்... ஆசம்... ரகுவரன் பாணி உடல் மொழியில் அசால்ட்டாக டீல் செய்யும் விதத்தில் ரசிக்க வைக்கிறார்.
படம் கொஞ்சம் நீளம் என்றாலும்கூட, கடைசியில் சிவகார்த்திகேயனை அப்படி ஒரு போலீஸ் பொறுப்பில் பார்ப்பது சரியாகவே பொருந்தியது. இடையில், மயில்சாமி என்ட்ரியும், மனோபாலாவின் அலட்டலும் கிச்சுகிச்சு மூட்டின
சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதை தியேட்டரில் நன்றாகவே உணர முடிந்தது. ஆனால், அந்த ரசிகர் கூட்டத்தை கொஞ்சம்கூட திருப்தி செய்ய மெனக்கெடவில்லை.
'பசங்களை அப்படியே ஏத்துக்குங்க. உங்க அளவுக்கு மாத்திடணும்னு நினைக்காதீங்க' என அட்வைஸ் (!) பண்ணும்போது ஒட்டு மொத்த இளைஞர் பட்டாளமும் விழுந்தடித்துக்கொண்டு கை தட்டியது.
ஆனால், பஞ்சம் இல்லாமல் காமெடி கவுன்டர் கொடுக்கும் சிவா பேச வேண்டிய இடத்தில் பேசாமல் ஸ்லீப்பர் செல் போல தேமே என கிடக்கிறார். இல்லையென்றால் ரஜினி, சூர்யா போல மூச்சு விடாமல் பேச முயற்சிக்கிறார்.
'சாரே! கொஞ்சம் உங்க பாணியில நடிக்கலாமே. ஏன் அந்த ஆக்‌ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோ இமேஜூக்கு இப்பவே ஆசைப்படறீங்க! இன்னும் கொஞ்சம் டயலாக் டெலிவரியில கவனம் செலுத்துங்க சிவா. இப்பவும் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா நல்லாவா இருக்கும்?' என்றெல்லாம் நாம் தான் அவருக்கு அட்வைஸ் பண்ணத் தோன்றியது.
ஸ்ரீதிவ்யா மேக்கப்புடன் வலம் வருகிறார். சீரியஸ் காட்சி, இரவு நேர காட்சி என்றாலும் அம்மணி ஒப்பனை அய்யோ என சொல்ல வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமார் இருட்டு சாலைகள் முதல் முரட்டு முகங்கள் வரை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசையில் சபாஷ் வாங்கும் அனிருத் பாடல்களில் பாஸ் மார்க் தான் வாங்குகிறார். எந்தப் பாடலும் ரசிக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை.
மிக மெதுவான காட்சிகள், பழகிய காதல் காட்சிகள், பழைய காலத்து டைப்பில் இருக்கின்றன. போலீஸ் படத்துக்கான எந்த புத்திசாலித்தனமும் படத்தில் பளிச்செனத் தெரியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கல்பனா, வித்யூ லேகா, பருத்தி வீரன் சுஜாதா ஆகியோர் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ரசிகர்கள் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை.
யூகிக்க முடிந்த கதைப் போக்கு, வசனங்களின் பங்களிப்பு முதலான குறைகள் அடுக்கப்பட்டாலும், போலீஸ் ஸ்டோரியை கான்ஸ்டபிள் லெவலில் இருந்து பேசியதாலும், சாமானிய அளவில் இருக்கும் மனிதனும் மனது வைத்தால் பிற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்தியதாலும் காக்கி சட்டையை பார்க்கலாம்.
படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, கிடைத்த பாயின்ட்ஸ்:
அதிகம் பகிரப்பட்டவை: சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் படம் இனி பண்ணலாம்.
ஓரளவு சொல்லப்பட்டவை: ஒரு முறை பார்க்கலாம்.
சிலர் குறிப்பிட்டவை: ரொம்ப சுமார் தான்.


  • செம்ம மொக்க படம்!!! Not even worth watching once... Money 💵 waste..
    about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Selva  
      ssssss
      about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Selva  
        சிவா கார்த்திகேயன் கொஞ்சமாவது நடிக்க பழகிட்டு வாங்க . காமெடின்ர பேர்ல தனக்கு தன தேச தரியும்னு பேசாதிங்க.
        about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Jaco  
          "சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் படம் இனி பண்ணலாம்." anaal yaar padam paarppathu?
          about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • உடனே அஜித் விஜய் மாதிரி பஞ்ச் dialoge பேசி action ஹீரோ ஐரனும்... தனுஷ் பண்ண பெரிய தப்பு இவர ஹீரோ வா நடிக்க வச்சது.
            about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • காக்கி சட்டை கிழிந்து போச்சு....!
              about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • ஹர ஹர மகாதேவ் .. செம காமெடி படம் ... சூப்பர் மியூசிக் ... கிளாஸ் .... அண்ட் மாஸ் .... சிவா, தனுஷ், அனிருத், செந்தில்குமார்.. எல்லோருக்கும் செம விசில் போடுங்க....
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Jaisak  
                  மொக்க படம். சிவகர்த்திகேயன் தன் இயல்பான நடிப்பில் அசத்தலாம். எதிர்நீச்சல் - நன்று காக்கிசட்டை - கசங்கிவிட்டது
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • சூப்பர் படம் . நல்ல massage
                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Zem  
                      பழைய சரக்கு புது பாட்டில் , ரொம்ப மொக்க , ஒரு தடவ பாக்கலாம்
                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • சிவகர்த்திகேயன் நீங்க நீங்கலாவே நடிங்க ஷீரோயிசம் வேண்டாம் மொக்க கதை
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • Kumar  
                          Padama da ithu music kaevalam . screen play waste. Mokka padam
                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • Sathish Rao .... at No 
                            Super
                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • இட்ஸ் ஜஸ்ட் பிகினிங்
                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                              • ஓகே
                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • Kumaran  
                                  pppppaa! yaarraa intha ponnu paei madhiri irukku make-up pottukittu?hmmm sreedhivya vaam!:)
                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                  • படம் ஒரு மாதம் முன்னாடி வந்து இருந்த்தா கௌதம் மேனன் படம் அவுட்டு
                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (3) · 
                                    • எனக்கு சிரிப்பே வரல, மாறாக எரிச்சல்தான் வருது.
                                      about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                      • parthi  
                                        எல்லாரும் சிரிசுருங்க அண்ண காமெடி பண்றாரம்.
                                        about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                        • senthil  
                                          செம காமெடி போங்க
                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                        • Vishwa  
                                          ஹலோ நேக சொல்லூர் மாரிலம் அன்னும் வில்ல pad அம சாங் எல்லாம் super
                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                          • Thiru  
                                            ஜஸ்ட் பாக்கலாம்
                                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                            • Kavin  
                                              100 kodi ammpu, 100 kodi.... 1st half mokka, 2nd padu mokka.. Last 15 min ok......
                                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                              • மொவயே நாட் குட் சிம்ப்லி முக தா
                                                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                • Kishor  
                                                  second half slow..one time pakkalamm..
                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                  • அப்ப மொத்தத்துள்ள புட்டுகுச்சா?
                                                    Points
                                                    3245
                                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                    • Laxman  
                                                      Over
                                                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                      • Laxman  
                                                        Wast
                                                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                        • Screen play nalla panirukkalam

                                                        ஒய் திஸ் கொலை வெறி நாயகனின் நிலா அது வானத்து மேல வின் காப்பியா?-ஆண்ட்ரியாவின் ஃபேமிலி (லிப் லாக் ) ஃபிரண்ட் பேட்டி

                                                        அனிருத் படம்: எல்.சீனிவாசன்
                                                        அனிருத் படம்: எல்.சீனிவாசன்
                                                        குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற புகழைச் சுமந்து நிற்கிறார் அனிருத்.
                                                        ‘3’ படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவரைச் சந்தித்தோம். பியானோவில் விரல்களை ஓடவிட்டவாறு நம் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனிருத்.
                                                        இவ்வளவு சீக்கிரம்... இத்தனை உயரம்... எதிர்பார்த்தீர்களா?
                                                        இல்லை. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பள்ளி யில் பஜன்ஸ் குழு, கல்லூரியில் ராக் குழு என்று நிறைய இசைக்குழுக்களில் இருந்த தால் இசையில் அதிக ஆர்வம் இருந்தது.
                                                        ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இசைய மைப்பாளர் ஆவேன் என்று நினைக்க வில்லை. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்ததற்கு என்னுடைய நல்ல நேரம்தான் காரணம் என்று சொல்லவேண்டும்.
                                                        சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆனதால் இளமைக் கால கலாட்டாக்களை தவறவிட்ட வருத்தம் இருக்கிறதா?
                                                        கண்டிப்பாக இருக்கிறது. நான் கல்லூரி யில் படிக்கும் போது என்னுடைய வருகைப் பதிவேடு மிகவும் மோசமாக இருக்கும். நான் அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதால் வகுப்புக்கு அதிகம் போகமாட்டேன். ஆனால், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்வானேன்.
                                                        படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என்று ஓடிக் கொண்டே இருந்ததால் என்னால் கல்லூரி கலாட்டாக் களை அனுபவிக்க முடியவில்லை. கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்களும் இல்லை. இப்போதும் எனக்கு நண்பர்கள் என்றால் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னுடன் பணிபுரிபவர்களும்தான்.
                                                        தனுஷ், சிம்பு இருவருக்கும் நீங்கள் நண்பராக இருக்கிறீர்கள். இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது?
                                                        இரண்டு பேருக்குமே அவ்வளவாக ஆகாது என்று நான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இருவரிடமும் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர்களிடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. இருவருமே நெருங்கிய நண்பர்கள்தான்.
                                                        பள்ளி நாட்களில் நான் கலை நிகழ்ச்சியில் இசைப் பிரிவில் இருக்கும்போது சிம்பு வேறு பள்ளியின் நடனப்பிரிவில் இருப்பார். அதனால் அவரை எனக்கு அப்போதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் சீனியர்.
                                                        ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நீங்கள் நாயக னாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்ததே?
                                                        அந்தச் செய்தி எப்படி வந்தது என்று தெரிய வில்லை. ‘3’ படத்துக்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து நிறையப் பேர் எனக்கு கதை சொல்ல வந்தார்கள். கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘நீங்கள்தான் படத்தில் நாயகன்’ என்று சொல்வார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது.
                                                        நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. கடந்த 3 வருடங்களில் என்னுடைய 7 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக் கும் இந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது இருக் கிறது. இசைக்காக வீடியோ தயார் பண்ணும் போதே, அதில் எப்படி ஆடுகிறோம், நடித்திருக்கிறோம், அழகாக இருக்கிறோமா என்றுதான் எண்ணம் போகிறது. என்னால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. அதனால் எனக்கு நடிப்பில் விருப்பமில்லை.
                                                        அப்படியென்றால் நாயகனாக நடிக்கவே மாட்டீர்களா?
                                                        இசைக்கான வீடியோ ஆல்பங்களில் மட்டும் நடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இசை ஆல்பத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை.
                                                        உங்களுடைய இசைக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்ன?
                                                        மறக்க முடியாத பாராட்டு என்றால் ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு கிடைத்ததுதான். நான் இசையமைத்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ‘எதிர் நீச்சல்’ படத்தை முதல் ஷோ பார்த்தேன். அதில் பெயர் போடும்போது, என் பெயர் இசையமைப்பாளர் அனிருத் என்று வந்தது.
                                                        அப்போது ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் மற்றும் விசிலைக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய இரண்டாவது படத்துக்கே இப்படி ஒரு வரவேற்பா என்று ஒரு பிரமிப்பு இருந்தது.
                                                        திரையுலகில் எனக்கு எல்லாமே ரஜினிகாந்த்தான். என் இசை வெளியாவதற்கு முன்பே அதன் சிடியை ரஜினிகாந்துக்கு அனுப்பிவிடுவேன். என்னுடைய இசை வெளியாவதற்கு முந்தைய நாளே அவரு டைய விமர்சனம் கிடைக்கும்.
                                                        அது தான் திரையுலகத்தில் எனக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு. ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் அனுப்ப மறந்து விட்டேன். அப்போதுகூட அவராகவே போன் செய்து ஆல்பத்தைக் கேட்டு வாங்கினார். எப்போதுமே அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு நன்றாக இசையமைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
                                                        மறுபடியும் ‘கொலவெறி’ பாடல் மாதிரி ஒரு பாடலை உங்களால் கொடுக்க முடியவில்லையே?
                                                        அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். எனக்கு முதல் படத்திலேயே அப்படி ஒரு பாடல் அமைந்தது. அதுபோன்ற ஒரு பாடல் மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்குமே தெரியாது. அப்போது கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்ளத்தான் உழைக்கிறேன், போராடுகிறேன்.
                                                        இளம் வயதில் பெரிய இசையமைப்பாளர் என்ற புகழ் கிடைத்தாலும் மறுபுறம் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்கள். அப்படி காதல் சர்ச்சையில் சிக்கும்போது இருந்த மனநிலை என்ன?
                                                        முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அடி என்று அதைச் சொல்லலாம். ஏனென்றால் அது வரைக்கும் எல்லாருமே என்னுடைய இசையைக் கொண்டாடினார்கள். முதல் தடவையாக என்னைப் பற்றி ஒரு எதிர்மறையான செய்தி வந்தது.
                                                        இரண்டு நாட்கள் மனநிம்மதி இல்லாமலேயே இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு வெளியே தலைகாட்டா மலேயே இருந்தேன். என் பொழுதை தனிமையில் இசையோடு கழித்துக் கொண்டிருந்தேன்.
                                                        அப்போது பண்ணிய பாடல்கள் தான் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள். இப்போது எதிர்மறைச் செய்தி களை தாங்கிக்கொள்ள மனம் பக்குவப் பட்டுள்ளது. அதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.
                                                        இவ்வளவு ஒல்லியாக இருப்பதற்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறீர்கள்?
                                                        நீங்கள் ஒருநாள் என்னுடன் இருந்து, நான் சாப்பிடுவதைப் பாருங்கள். சாப்பாட்டை சும்மா வெளுத்துக் கட்டுவேன். ஒரு வேளை, சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால் எடை கூடாமல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.




                                                        நன்றி - த இந்து

                                                        • Seetharaman  
                                                          காப்பி அடிச்சு மியூசிக்ல பெரிய ஆளு ஆயிடிங்க , அது போல விக்ரம் , கமல் மாதிரி பெரியே ஆளுங்கள காப்பி அடிச்சு இன்னும் பெரியே ஆள் ஆயிடுங்க அனிருத்... நமக்கு தான் புதுசா யோசிக்க தெரியாதே
                                                          about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                                             
                                                          • Gnanasekaran  
                                                            "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." -திருவள்ளுவ நாயனார். கமெண்ட்: அனிருத் அய்யா அவர்களே, முதலில் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நடிப்பை பற்றி யோசிக்கலாம். அது மட்டுமின்றி இப்போவே சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் அப்படி இப்படின்னு பேச்சு அடி படுத்து. நீங்களும் நடிக்க வந்துடீங்கன்ன நிலைமை இன்னும் சூப்பர். முதலில் நீங்கள் சொந்தமாக மியூசிக் போட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி காமெடி எல்லாம் பண்ணாதீங்க. "சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால்..." இது தவறு. இதற்கு பின்னால் ஒரு அரசியல் தென்படுகிறது. வீணான குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டாம். " (கொலைவெறி) அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்." கமெண்ட்: கொலைவெறி பாடல் இசைத்தாய் இசைஅமைத்த "நாயகன்" படத்தில் இடம்பெற்ற, "நிலா அது வானத்து மேல" பாடலின் காபிதான். "ஓடுற நரியில ஒரு கிழ நரி தான்" = "why திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி" காபி அடிங்க, ஆனா தெரியாத மாதிரி காபி அடிங்க... நன்றி. தமிழ் வாழ்க.

                                                          எனக்குள் ஒருவன் -லூசியா’ கன்னடத்தில் ஹிட் ஆன அளவு தமிழில் ஆகுமா?-தனுஷின் முன்னாள் சகலை பேட்டி

                                                          • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
                                                            ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
                                                          • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
                                                            ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
                                                          பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.
                                                          தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.
                                                          ‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?
                                                          இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
                                                          இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.
                                                          முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
                                                          ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.
                                                          முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
                                                          மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.
                                                          உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?
                                                          எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.
                                                          போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.
                                                          இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?
                                                          இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
                                                          எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.
                                                          வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?
                                                          எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.
                                                          எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
                                                          போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?
                                                          அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
                                                          ‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…
                                                          வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.
                                                          இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!
                                                          மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?
                                                          (சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.


                                                          thanx = the hindu



                                                          இளைய தளபதி VS வைகைப்புயல்

                                                          1  கவுதம் -அஜித் காம்போ வில் அடுத்த படம் புக் ஆகும் அளவுக்கு எ அ ஹிட் இருக்கும்.100 கோடி கலெக்சன் அளவு ஹிட் ஆகுமா?உறுதியா சொல்ல முடியலை

                                                          ===========

                                                          2 ஒரு மாஸ் ஹீரோ கிளாசிக் இயக்குநர் படத்தில் நடிக்கும்போது கை தட்டல் அள்ளும் பரபரப்பான காட்சி இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.்

                                                          ==============


                                                          3 விஜய் = படம் குட்.ஆனா நீளம் அதிகமா இருக்கே?


                                                          அஜித் =சீனப்பெருஞ்சுவரும் ,மயில் தோகையும் கொண்டாடப்படுவதற்கான காரணமே அதன் அழகியல் நீளமே்


                                                          ==========
                                                          4 வில்லனுக்காக நீங்க உங்க இமேஜை விட்டுக்கொடுத்துட்டீங்க போல?
                                                          விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்ல.


                                                          =============

                                                          5
                                                          படம் எல்லாருக்கும் பிடிக்கும் -னு சிம்ப்பிளா சொல்லி இருந்தா கோட்டுக்கு இந்தப்பக்கம் சிம்பு நல்லவரா ஆகி இருப்பாரு.அவசரப்பட்டுட்டார்


                                                          ===============


                                                          ஒரு ரஜினியோ ,அஜித்தோ மசாலா பாதையில் விலகி ஹீரோயிசம் இல்லாம நடிச்சு கமல் ரேஞ்சுக்கு போக நினைக்கையில் முட்டுக்கட்டை போடுவான் தமிழன்


                                                          ================


                                                          வீட்டில் வடிவேலு வெளியில விஜய் # புதுமொழி


                                                          ================

                                                          பஸ் ல 3,பொண்ணுங்க கிச்சு கிச்சு மூட்டி விளையாடறாங்க.கேம் நல்லாதான் இருக்கு.நம்மை சேத்திக்க மாட்டாகளே!


                                                          ===========

                                                          இதே திரைக்கதை இதே மேக்கிங் ஸ்டைலில் விஷ்ணுவர்தன் இடம் ஆலோசனை கேட்டிருந்தால் அப்ளாஸ் அள்ளும் மாஸ் சீன் 15 இடங்களில் வைத்திருக்கலாம்


                                                          =================


                                                          10
                                                          திரையில் ஒவ்வொரு சீன் வரும்போதும் அந்த சீனை இப்ப்டி வைத்திருந்தால் தெறிக்க விட்டிருக்கலாம் என என் மனதில் காட்சிகள் ஓடியது


                                                          ============


                                                          11
                                                          சமீப கால தமிழ் சினிமாவில் ஹீரோ.வில்லன் ஹீரோயின் யாரும் சரக்கு/தம் அடிப்பதுபோல் சீன் வைக்காத படம் எ அ வாகத்தான் இருக்கும்


                                                          ============


                                                          12
                                                          கிளாஸ் படம் கொடுத்தவங்க மாஸ் படம் கொடுக்கறது அபூர்வம். மாஸ் படம் கொடுக்கறவங்க கிளாஸ் படம் தர்றது ஒரு ஆர்வம்


                                                          ==============



                                                          13 
                                                          ஸ்லோபிக்கப்பில் மெகாஹிட் ஆன படங்கள் 1 முதல் மரியாதை 2 புது வசந்தம் 3 கரகாட்டக்காரன்் 4 சேது


                                                          ==============

                                                          14
                                                          கோபமோ ,அன்போ வெளிக்காட்டினால்/உணர்த்தினால் தான் அதுக்கு மதிப்பே!


                                                          =============


                                                          15
                                                          மட்டன் ஷாப் 1 = சன்டே /தீபாவளி க்கு 8000 ரூபாய்க்கு சேல்ஸ் ஆச்சு. 


                                                          மட்டன் ஷாப் 2,=,கண்ணா! வியாழக்கிழமையே 7000 ரூபா ஆச்சு.எது பெருசு?(  கத்தி - எ அ  முதல் நாள்  வசூல் ஒப்பீடு)


                                                          =================

                                                          16
                                                          ரஜினி ,கமல் படங்களை விட அஜித் ,விஜய் படங்கள் தான் FDFS. டிக்கெட் ரேட் 250,டூ 400 விற்கப்படுது.இப்போதைய ட்ரெண்டில் இருவரும் கிங் தான்


                                                          =================


                                                          17 
                                                          நானும் 25000* விரைவில் பெறுவேன்.அப்போ மட்டும் ரைட்டர் தனி பதிவு போடாம இருக்கட்டும்.பெங்களூர் போய் வெட்றேன் #சும்மா


                                                          ==================

                                                          18
                                                          அஜித் துக்கு பெண் ரசிகைகள் கம்மி என்ற மாய வலையை உடைத்த மாயாஜால படங்கள் காதல் கோட்டை முகவரி ககொககொ எ அ


                                                          ============

                                                          19 
                                                          100 மீ ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவனின் வேகத்தை விட 5 கிமீ ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவனின் "ஆரம்ப" வேகம் குறைவாகத்தான் இருக்கும்.


                                                          ==============


                                                          20
                                                          ஒரு நல்ல படத்தை சராசரிப்படம் என்று சொல்வது நெருங்கிய நண்பரா இருந்தாலும் சரி அல்ல


                                                          ====================

                                                          Saturday, February 28, 2015

                                                          த்ரிஷாவும் லிப் கிஸ்சும்

                                                          1  பொய் சொல்லி DMKவை யாராலும் அழிக்க முடியாது-மு க #2ஜி ஊழல் ,குடும்ப அரசியல் னு உண்மையைச்சொல்லி அழிச்சுடலாம்னு இவரே ரூட் போட்டுத்தர்றார் போல

                                                          ===============


                                                          2 பறக்கும் விமானத்தில் நடிகை திரிஷா திருமணம் # மாப்ளை லிப் கிஸ் அடிச்சாக்கூட அது FLYING kiss னு தான் சொல்லனும்


                                                          ===========


                                                          3

                                                          ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு # கொடூர அப்பனுக்குப்பிள்ளைங்க தப்பாம பிறந்திருக்கு


                                                          ===========


                                                          4 பொய் சொல்லி தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது- கருணாநிதி # கழகக்கண்மணி! அன்போட கழகத்தலைவர் அவிழ்த்து விடும் கட்டுக்கதை


                                                          --------------

                                                          5 பாரீன்வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பது சிக்கலான பிரச்சினை" - அமித்ஷா# தம்பி!முடிஞ்சா தாலி கட்டு.இல்லைன்னா கிளம்பு.ஆள் வெய்ட்டிங்க்

                                                          ==========

                                                          6 விஜயகாந்த் குடிக்கிறார் என்று நிரூபிக்க முடியுமா?- பிரேமலதா ஆவேசம் # நீங்க அவரோட மேடைப்பேச்சைக்கேட்டதே இல்லையா? சொன்னதையே சொல்வாரே?



                                                          ============


                                                          7 கள்ளக்காதலுக்கு தடையா இருந்த கணவன்... கூலிப்படையை வைத்து காலி செய்ய முயன்ற மனைவி கைது @ சேலம் # தடையறத்தாக்க ன்னா இதானா?்


                                                          ============


                                                          8 குடிக்காத என்னை குடிகாரன் என்கிறார்கள்-விஜயகாந்த் #,ஆதங்கம் எதுக்கு? குடிச்சிடுங்க


                                                          ===========

                                                          9 ரூ 1000 கோடிக்கு சத்யம் சினிமாஸை வாங்குகிறது பிவிஆர்! # அடடா.ஏன் வித்தாங்க?10 விஜய் படம் தயாரிச்சா ஈசியா 10*100 =1000 கோடி ரெடி


                                                          =============


                                                          10 கட்டாதே, ரன்பிர் கபூரை கட்டாதே: கத்ரீனாவுக்கு தீபிகா அறிவுரை #ஏன்?ரன்"பீர்"கபூர் நல்ல குடிமகன் இல்லையா?



                                                          ===========


                                                          11 ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வேன்# கெஜ்ரிவால்# வாய்ல வேணா வடை சுட்டு பஜ்ஜி செய்வீங்க


                                                          =============


                                                          12 அதிமுக,திமுகவுக்கு மக்களை பற்றி அக்கறை இல்லை#விஜயகாந்த் # உங்களுக்காவது உங்க மக்கள் பற்றி அக்கறை இருக்கே.அதான் சகாப்தம் படைக்கறீங்க


                                                          ===========


                                                          13 //குடிக்காத என்னை குடிகாரனாக்கிவிட்டார்கள்-விஜயகாந்த்// நடிக்காத பையனை நீங்க கூடத்தான் நடிகன் ஆக்கி இருக்கீங்க


                                                          ===========


                                                          14 o
                                                          ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா 3 அத்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய ஆம்பள விஷால் # ஆன்ட்டி ஹீரோ அவதாரமா?,அபாரம்


                                                          ===============

                                                          15 கற்பழிப்பு புகார் : வழக்கை எதிர் கொள்ள தயாராக உள்ளேன் - நமல் ராஜபக்சே # கையைப்பிடிச்சு இழுத்தியா?
                                                          என்ன கையைப்பிடிச்சு இழுத்தியா?


                                                          =============’


                                                          16 சட்டசபை தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள அதிமுக திட்டம். தேர்தல் ஆயத்தம்!#இப்டித்தான் ராஜபக்சேவும் திட்டம் போட்டார்.நட்டம் தான்


                                                          ==================


                                                          17  பொங்கலுக்கு போனஸ் தராத முதலாளி - மனைவியைக் கொன்று கொள்ளையடித்த ஊழியர் @சென்னை # எல்லா முதலாளிங்களும் நல்லா கேட்டுக்குங்க


                                                          ==================


                                                          18 
                                                          ஆளுங்கட்சி மோசடி செய்கிறது#கருணாநிதி # தலைவா! மோசடி வித்தை நமக்குத்தெரியும் மோடி வித்தை எதிர்காலத்தில் புரியும்


                                                          ================


                                                          19 
                                                          திமுக.,விற்கு ஆதரவு தாருங்கள்கருணாநிதி # தலைவா! ஒரு பக்கம் குஷ்பூ மறுபக்கம் அதிமுக ஆப்பு.வேகுமா நம்ம பருப்பு?


                                                          =================


                                                          20  பொங்கல்: கருணாநிதியிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், கனிமொழி: ரூ.10 'அள்ளிக்' கொடுத்து வாழ்த்து #பதவியைத்தரத்தான் மனம் இல்லை.100 ரூ பணம் தரவும் ?



                                                          ====================