Wednesday, August 31, 2011

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

http://www.thangameen.com/Images/ContentImages/admin/mangatha-016.jpg 

பொறி பறக்கும் ஒன் லைன்  ஸ்டோரி, மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ,கிளாமர் குயின்ஸ்ஸாக கட்டுடல் கன்னிஸ் 3 முத்தான ஃபிகர்ஸ் , சூப்பர் ஹிட் ஸாங்க்ஸ் 4 இத்தனையையும் கையில் வைத்துக்கொண்டு வெங்கட் பிரபு சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் ஃபோர் அடிக்கவே தட்டு தடுமாறி இருக்கிறார்..

ஏற்கனவே மணிரத்னம் திருடா திருடா படத்தில் எடுத்த ஒன் லைன் தான்.. 500 கோடி பணம் , அதை அபேஸ் பண்ண அந்தப்படத்தில்  3 கேங்க் , இந்த படத்தில் 2 கேங்க்,ஒரே வித்தியாசம் இந்தப்படத்தில் போலீஸ் ஆஃபீசர்ஸே வில்லன் வேலையை செய்கிறார்கள்.. 

அஜித்துக்கு கொஞ்ச நாள் கேப்க்கு பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.. ஆண்ட்டி ஹீரோ..ஆனால் அதற்காக அவர் 40 வயசு கேரக்டருக்கு 50 வயசு மாதிரி ஓவரா நரை முடி காட்டி இருக்க தேவை இல்லை.. டான்ஸ் காட்சிகளில் புது சுறு சுறுப்பு, சில மெனக்கெடல்கள்,வாக்கிங்க் போறதை எல்லாம் குறைச்சு ,இடைவேளை ட்விஸ்ட்டின் போது வாலி சிரிப்பு சிரித்து பல புதிய நடிப்பின் பரிமாணங்களை தொட முயற்சி செய்துள்ளார்.. வரவேற்கலாம்..

திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, பீமா படங்களோடு ஒப்பீடு செய்கையில் இதில் அவர் மேக்கப் , கெட்டப், நடிப்பு எல்லாம் சுமார் தான்.. பாடல் காட்சிகளில் கூட அவரால் சோபிக்க முடியாமல் போனது சோகமே... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/08/Mankatha-trisha-hot.jpg

லட்சுமிராய் ஆள் செம ஹைட் என்பதால் வில்லி ரோலுக்கு நல்ல பொருத்தம்,அவரை முடிந்த அளவு “யூஸ்” பண்ணிக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்.

அங்காடித்தெரு அஞ்சலிக்கு தம்மாந்தூண்டு கேரக்டர்.... ஆண்ட்ரியாவுக்கும் அதே..

ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் கிழடு தட்டிப்போன முகத்துடன் வருகிறார்.. படத்தில் வரும் எல்லா போலீஸ் கேரக்டர்களும் கிராப்பை குறைத்து க்ளோஸ் கட்டிங்க்கில் வரும்போது இவர் மட்டும் ஹிப்பி தலையுடன் ஃபங்க் முடியுடன் வருவது இவரது கேரக்டர் ஸ்டடிக்கு கிடைத்த அடி.. 

http://www.cinespot.net/gallery/d/82031-1/Lakshmi+Rai+Hot++Photos.jpg

 படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  XQS  மீ மிஸ்.. நீங்க யாரு..?

அடப்பாவி.. நைட் பூரா என் கூட இருந்துட்டு இப்போ கேள்வியைப்பாரேன்?

சாரி. மப்பு.. 

2. நேத்து நான் தப்பா நடந்துக்கிட்டேனா?

நேத்து சரியாதான் நடந்துக்கிட்டே.. இப்போதான் தப்பா நடக்கறே.. கண்டுக்க மாட்டேங்கறே....

3.  பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே...

4.  உங்க வயசு என்ன?

அப்பா.. அவர் கிட்டே ஏன் வயசை கேட்கறீங்க?

பொண்ணுங்க கிட்டே தானே வயசை கேட்கக்கூடாது,..?

பொண்ணுங்க இருக்கறப்பவும் வயசை கேட்கக்கூடாது...

 5. ஹாய். குடிக்கவா வந்தீங்க..?

என்னைப்பார்த்தா குடிகாரன் மாதிரியா தெரியுது?

6. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கறது?

7.  எனக்கு அந்த ஃபிகர்  வேணாம்.. 

நீயே நினைச்சாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.. 

8.  லைட் போட்டூட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா போட்டுட்டு வண்டி ஓட்டக்க்கூடாது...டைட்டா இருக்கனும் சரக்கு உள்ளே.. 

9.  நான் ஏன் வேலைக்கு போகனும்?நான் நினைச்சா எனக்கு கீழே 80 பேர் வேலை செய்வாங்க. 

அதுக்கு ரொம்ப செலவாகுமே..? 


http://hothubshot.com/hothub_files/2010/04/lakshmirai-bath-hot-hub.jpg

10. ஏய்.. நீ எப்படி இங்கே வந்தே.?

டார்லிங்க்.. எப்படி வந்தேன்னு கேக்காதே..? எதுக்கு வந்தேன்னு கேளு.. 

தண்ணி அடிச்சிருக்கியா?

ம்..

வீட்டுக்குத்தெரியுமா?

வீட்டுக்கு ஏன் தெரியனும்?அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா போதாதா?

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ஆணோ, பொண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக்ஸா சொல்ல முடியுது?

11.  யார் எவ்வளவு சரக்கு அடிச்சிருந்தாலும் அவங்கவங்க வீட்டுக்கு போகும்போது கொஞ்சமாவது மப்பு தெளிஞ்சிடும்....

12.  பல் துலக்கிட்டு வீட்டுக்குள்ள போ.. அம்மா கண்டு பிடிக்க மாட்டாங்க. 

13.  வாங்க மாப்ளை.. மாப்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..

வேணாங்க.. இப்போதான்... 

14.  என்ன வந்ததுல இருந்து சீரியஸாவே இருக்கீங்க?

காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?

15.  சிக்னல் ஓப்பன் பண்ணப்போறோம். நீ ரெடியா இருந்துக்க. 

பிறந்ததுல இருந்தே நான் ரெடி தான்.. 

16.  ஹூம்.. இவ்வளவு பணம் இருந்து என்ன? சுகர் பேஷண்ட் மாதிரி எதையும் அனுபவிக்க முடியல.. 

17.  அதென்னவோ தெரியல.. மப்பானாலே இளையராஜா பாட்டெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwmFxhW-0NSMJEqhevRJe4yFU8pRCr2PA9uiMVJLc4dLMNN92EhzhG51-iA1q8Mw6m33Ra0GduM_FJGbQa0fZ157_6-kfWI83R8jFYTsT5ICXnDImDcGBZzQ3HWx0p37TJZdyNKDhDSbg/s1600/Anjali_In_Saree_00.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. இடைவேளை வரை செம ஸ்பீடான திரைக்கதை. க்ளைமாக்ஸில் சொல்லப்படும் சஸ்பென்ஸ்.. 

2.  பணத்துடன் செல்லும் டிரக்வேனை டிராஃபிக்கில் பாடியை மட்டும் அலாக்காக மாற்றுவது.. அதை நம்பும் வகையில் காட்டியது. 

3. லட்சுமிராய்  பிரேமை சுடாமல் திடீர் என ஆள் மாற்றி சுடும் சீன் நல்ல ட்விஸ்ட்.. 

4. கிரிக்கெட் சூதாட்டம் என ட்ரெண்டுக்கு தக்க வகையில் திரைக்கதையில் அதை நுழைத்த விதம்.. 

5. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் முடிந்த வரை குழப்பம் வராத அளவு கதை சொல்ல முயன்றது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheY-DGZozoCU69Bdj4V29yGkl2amHGYo2fz-rf1Gfig6c4m0YH7tOqfEzhLjhqv4wLGyMT3TLCgPZlK8RW5nOycfMDdYp9nJaU3Yg3PE2lG-GdQWc5YahTuf5YXVTOBURKfF_L_yuw_hE/s1600/andrea08.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  செம டெம்ப்போ பாட்டான விளையாடு மங்காத்தா பாட்டை அஜித்தே பாடுவது போல் காட்டாமல் பேக் டிராப்பில் பாடல் மட்டும் ஒலிக்க அஜித்தை சும்மா டான்ஸ் மட்டும் பண்ணுவது போல் காட்டி இருக்கலாம். இன்னும் கெத்தாக இருந்திருக்கும்..

2.  ஏமாற்றி காதலிப்பதாக நடிக்கும் அஜித்தை விட உண்மையாக காதலிக்கும் த்ரிஷா முகத்தில் காதல் ரசமே சொட்டவில்லையே ஏன்?த்ரிஷாவின் காதல் உண்மையாக பதிவு செய்யப்பட்டால்தான் அஜித் அவரை ஏமாற்றும்போது அதன் எஃபக்ட் எடுபடும்?

3. என்னதான் ஒருவன் பணத்தின் மேல் ஆசை உள்ளவனாக இருந்தாலும் காதலியின் அல்லது காதலி என நம்பவைத்து ஏமாற்றும் பெண்ணின் தந்தையை அப்படியா ஓடும் காரிலிருந்து வீசி எரிவார்கள்?வில்லன் இமேஜை வலிய அஜித் மேல் திணிப்பது போல் இருக்கே?பெண்கள் இந்த காட்சியை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே?

4. ஓப்பனிங்க் சாங்கில் அஜித் முதலில் லட்சுமிராய் உடன் டான்ஸ் ஆடுகிறார்.. பின் அங்கே வரும் த்ரிஷாவுடன் ஆடுகிறார்.. ஆனால்  அடுத்த ஷாட்டில் அஜித்தின் வீட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் த்ரிஷாவிடம்  அஜித் லட்சுமிராய் அட்ரஸ் கேட்டு வந்த பெண் என பொய் சொல்லும்போது அவர் லராயை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை.. எப்படி?

5.  போலீஸ் டிபார்ட்மெண்ட்டே ஒரி போலீஸ் ஆஃபீசரை தற்கொலை செய்தது போல் செட் பண்ணுகிறது , ஆனால் அதே ஆஃபீசரை எந்த கெட்டப்பும் மாற்றாமல் பேரை மட்டும் மாற்றி அதே கேசில் நடமாட விடுகிறதே . எப்படி?

6.  பணத்தை யாராவது தனியே வந்து எடுத்தால் கூட்டாளிகள் செல்ஃபோனுக்கு அலாரம் அடிப்பது போல் செட் செய்த பிரேம் பின் எப்படி அவர்களை ஏமாற்றுகிறார் என்பதை காட்டவே இல்லையே?

7. பணத்தை அடைவதையே குறியாக இருக்கும் அஜித் ஏன் பிரேமை யூஸ் பண்ணி அலாரம் கொலாப்ஸ் செய்ய முயற்சியே எடுக்கவில்லை?

8. இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள், பெண்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளூம்படி இன்னும் பாலிஷாக செய்திருக்கலாம்... பண விஷயத்தில் மட்டும் அஜித் கெட்டவர் என காட்டி.. காதலி, தோழி எல்லோரையும் பணத்துக்காக கொலை செய்யக்கூட அஞ்சாதவர் என காட்டி இருக்க தேவை இல்லை. அதை பலரால் ஜீரணிக்க முடியாது. 

http://s4.hubimg.com/u/1248939_f520.jpg

ஏகன், அசல், ஆஞ்சநேயா போன்ற தோல்விகளால் துவண்டு கிடந்த  அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமே , ஆனால் வாலி, பில்லா ரேஞ்சுக்கு இல்லை..

 ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி  செண்ட்டர்களில் 50 நாட்கள்.,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள், அஜித் ரசிகர்கள் பார்க்கலாம்

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.