Thursday, March 31, 2011

ஆனந்த விகடன் VS திரிஷா பேட்டி - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglXA_OfOWZDKNdGy8BlHRr7Msaf212BwQ_SAXIURLouez2wK1Ug_St8itoC9xxCYF35KTYVAjk6QhYDI32hvB-74WPJ0uhSTk1aNcetOKcXAr5EBAFeVXG3US4kE_Zx047OsCxH7ScEPWI/s1600/trisha-in-marmayogi.jpg
ரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!
1. '' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே?'' 

''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா? சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை.

 ஆமாங்க.. சிம்பு கூட இதையே தான் சொல்வாரு...

என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை.

 வேற யாருக்கு.. உங்க ரசிகர்களுக்குத்தான்

எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது.

 ஆமாங்க.. ஆனா 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வதந்தி வந்ததே அது டாப் டக்கருங்க.. அந்த மாதிரி மறுபடி புதுசா எதுவும் வர்லைங்களே.. ? ஏன்?



கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண்.

 ஆமாங்க.. நீங்க பச்சை குத்தி இருக்கற ஸ்டைல்லயும், டாட்டூ போட்ட மேட்டர்லயும் அது நல்லா தெரியுது...


என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை!''


பொதுவா மார்க்கெட் போன பிறகுதானே கல்யாணத்தை பத்தி யோசிக்கனும்?



2. ''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க?'' 


''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம்.

 இருந்தோம்னு ப்ளூரல்ல சொல்றீங்களே? #டவுட்டு


உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு!


நாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!''

 சபீனா, ஹேமா ரெண்டு பேரும் வந்தாங்க.. ஓக்கே? சேட்டை அண்ணனுமா வந்தாரு? அண்ணன் சொல்லவே இல்லை?


3. ''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே?''  


''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு.

 ஓஹோ.. அப்படியே தான் இருக்கா.. ஜாக்கிரதை.. அவரோட லேட்டஸ்ட் படம் பார்த்தீங்க இல்ல..?


இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpuw6USWI7xaJkE7Y9uTrYZlA7-8QehTw7pZdQZFe0eTPFYBxVuXgz1Bs_RbdpRkdASu3uo5rg2WI0WHZuqre3eqvMK4Sn4OJzRmNRZr6wW3zzzSvCOIB6uNdVcD-1lFnQiVkltFnYpQpZ/s1600/Trisha065.jpg
4. ''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு?'' 

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''


டி ஆர் நிக்கலை.. அதனால டி ஆருக்கு ஓட்டு போட வழி இல்லை... 

கறுப்பு எம் ஜி ஆர் + சிவப்ப்பு ஜெயலலிதா VS விகடன் பேட்டி - காமெடி கும்மி கலாட்டா

.தி.மு.க. கூட்டணியின் அனல், புனல் இரண்டுமே இப்போது விஜயகாந்த்தான்!

அப்பாவின் 'முரசொலி’ அவரைத் திட்டித் தீர்க்கிறது. 'விஜயகாந்த் மானஸ்தன்!’ என்று தூபம் போட்டார் அண்ணன் அழகிரி. '30, 40 சீட்டுக்காகக் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என்ற முன்னாள் கதாநாயகன் என்ன ஆனார்?’ என்று கேட்டார் தம்பி ஸ்டாலின். தி.மு.க-வின் வெற்றிக் கணக்கை, விஜயகாந்த்தின் கூட்டணிக் கணக்கு முறியடித்து வருகிறதோ என்ற கோபத்தின் வெளிப்பாடுகளாகவே இவர்களின் வாக்குமூலங்களைக் கருத வேண்டி இருக்கிறது.

இதுவரை 'சிங்கிள் சிங்கமாக’ வலம் வந்த விஜயகாந்த், இப்போது கூட்டணிக் காட்டுக்குள். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் போகும் அவரது வேனில் ஓர் இடம் கிடைத்த இடைவேளையில், பல விஷயங்களைப் பேச முடிந்தது.


1. ''முதல் கேள்வியை நானே கேட்கிறேன் சார்! 'தெய்வத்துடனும் மக்களுடனும் தான் கூட்டணின்னு சொன்ன நீங்க, ஏன் ஒரு அணியில் சேர்ந்தீங்க?’ன்னுதானே கேட்கப்போறீங்க?''- உஷாராக எடுத்துக் கொடுக்கிறார்.
''அதுதானே முதல் கேள்வியாக இருக்க முடியும்...'' 


''இன்றைக்கு என்னோட ஒரே இலக்கு, முதலமைச்சர் நாற்காலியில் கருணாநிதி நீடிக்கக் கூடாது. தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடாது. அதுக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் நான் எடுத்திருக்கேன். என்னை தனியா நிறுத்தி, ரத்தம் குடிக்கச் சில நரிகள் தயாராக இருந்தன. அதற்கு நான் தடைபோட்டு விட்டேன். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது அவதூறு பரப்புறாங்க!
இப்போதும் சொல்றேன்... மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி வைத்து இருக்கேன். சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில், 'கூட்டணி சேரலாமா, வேண்டாமா’ என்று கேட்டேன். 'கூட்டணி சேருங்கள்! அப்போதுதான் நம் எண்ணம் நிறைவேறும்’னு எல்லா மக்களும் ஒரே மாதிரி சொன்னாங்க. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது அண்ணாவின் மந்திரம். அதைத்தான் நான் செயல்படுத்தி இருக்கேன்!''


கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு? 

2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?'' 

'' 'கருணாநிதி ஒரு தீய சக்தி’ என்று சொல்லி, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. 'கருணாநிதி பல தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம்’ என்று சொல்லி வருபவன் நான். ஒரே கொள்கைகொண்ட இரண்டு கட்சிகள் கூட்டணிவைப்பது எப்படி சந்தர்ப்பவாதம் ஆகும்? இதுதான் சரியான வாதம்!

கருணாநிதி அமைச்சிருக்கிறது கொள்கைக் கூட்டணியா? காங்கிரஸ் கட்சியை 1967-ம் வருஷம் வீட்டுக்கு அனுப்பினார் அண்ணா. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் கட்சிதான்னு சொன்னார் அண்ணா. இன்றைக்குத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கட்சி கேட்பதையெல்லாம் தூக்கிக் கொடுக்கிறார் கருணாநிதி.


தி.மு.க-வின் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கை அடமானம் வைக்கப்பட்டதற்குக் காரணம், ஆ.ராசா திஹார் ஜெயிலில் இருக்கிறதுதானே?
டாக்டர் ராமதாஸ் கட்சி ஆரம்பிச்சதில் இருந்து கருணாநிதியைத்தான் ஆதரிச்சுக்கிட்டு இருக்காரா? இந்தக் கூட்டணிக்குள் எத்தனை தடவை வந்தார்... எத்தனை தடவை வெளியே போனாருங்கிற கணக்காவது கருணாநிதிகிட்டயும் ராமதாஸிடமும் உண்டா? 'கருணாநிதி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீங்க?’ன்னு ராமதாஸிடம் ஒரு நிருபர் கேட்டப்போ, 'முட்டை மார்க் போடுவேன்’னு சொன்னவர் அவர். முட்டை மார்க் போட்ட ராமதாஸும் கருணாநிதியும் மேடையில் சிரிக்கிறது சந்தர்ப்பவாதம் இல்லையா?''

மிஸ்டர் கேப்டன்.. சந்தர்ப்பவாதத்தைப்பற்றி நீங்க பேசாதீங்க.. 30 அல்லது 40 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன்னு ஒரு மானஸ்தன் சொன்னதா ஞாபகம்.. 


'3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?'' 


'' 'நீண்ட கால நண்பர்’னு வேற சொல்லியிருக்கார்! சின்ன வயசுல நானும் அவரும் என்ன கோலிக்குண்டு விளையாடினோமா? கபடி ஆடினோமா? சும்மா, மைக் கிடைச்சதும் அடிச்சுவிட்டிருக்கார் அழகிரி.

அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க. கூட்டணி போடக் கூடாது. போட்டால், தி.மு.க. அதோட காலிங்கிறது னால, அவங்க என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. நான் எதுக்கும் அசரலை. விலை பேசினாங்க. நான் மசியலை. உளவுத் துறையைவெச்சு பொய்களை, வதந்திகளைக் கிளப்பினாங்க. நான் எதைப்பத்தியும் கவலையே படலை. அர்ஜுனனுக்குத் தெரிந்தது கிளியின் கழுத்து மட்டுமேங்கிற மாதிரி, எனக்குத் தெரிந்தது எல்லாமே கருணாநிதி மட்டும்தான். கோடிகளைவிட, இந்த மோசடிப் பேர்வழிகள்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.
கோடிகளை வாங்கினால், நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க முடியும். ஆனா, நான் அந்தப் பாவத்தைச் செய்யலை. மே 13-க்குப் பிறகு, நாடே நல்லா இருக்கப்போகுது!''


 ஏன்? நீங்க சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்களா? 


4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?'' 


'' 'அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நான் பார்க்க மாட்டேன்’னு அவரோட அப்பா சொல்லி இருக்கார். அதை ஸ்டாலினும் கடைப்பிடிக்கட்டும். சேர்ந்து பிரசாரம் பண்றோமா, தனியா பண்றோமாங்கிறது முக்கியம் இல்லை. ஜெயிக்கிறோம்... அதுதான் எங்க லட்சியம்!''

எலக்‌ஷனுக்கு முன்னாலயே 2 பேரும் சேரலைன்னா எலக்‌ஷன் ல ஜெயிச்ச பிறகு அந்தம்மா உங்களை கிட்டே விடும்னு நினைக்கறீங்க?

5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?'' 

''பயனடைந்தவர்கள் பத்துப் பேர்னா... எதுவும் கிடைக்காதவங்க தொண்ணூறு சதவிகி தம் பேராச்சே! அவங்க உதயசூரியனுக்கு எப்படிக் குத்துவாங்க?
இலவச டி.வி. எதுக்குக் கொடுத்தார் கருணாநிதி? டி.வி-க்களின் எண்ணிக்கை அதிக மானால், தன் குடும்பத்துக்கு கேபிள் பணம் கொட்டும். அதுக்காகத்தான். அரசாங்கப் பணத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்து, அதைத் தன் குடும்பத்துக்குத் திருப்புற டெக்னிக் அது. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடியவர் கருணாநிதி’ன்னு நீதிபதி சர்க்காரியா சும்மாவா சொன்னார்?


இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. யார் கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா கருணாநிதிக்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித் திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.


இப்படி உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் கருணாநிதி கொண்டுவரலை. கொண்டுவரவும் மாட்டார். 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலன் ஒன்றையே மனதில்கொள் வார்’ங்கிற பாட்டு கருணாநிதிக்கு மட்டும் தான் பொருந்தும்.


'அரிசிக் கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக் கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி திருவாரூர்லயும் தஞ்சாவூர்லயும் சொல்றார். இதை எல்லாம் தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?

இந்த அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன் எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்? திருவண்ணாமலையில் ஒரு லாரியே எரிஞ்சுபோச்சு. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அதை ரேஷன் அரிசின்னார். கூட்டணி சேர்ந்த பிறகு, அவங்க அதைப்பத்திப் பேசவே இல்லை. கருணாநிதியும் ராமதாஸும் சேர்ந்தால், உண்மை செத்துடுமா?


'பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை எங்கள் கட்சிப் பெண்களே அடித்து நொறுக்குவாங்க’ என்றார் ராமதாஸ். மதுவிலக்கு வேண்டும் என்று ராமதாஸ் சொன்னார். செய்தாரா கருணாநிதி?
இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''

என்ன இப்படி சொல்லீட்டீங்க..?நீங்க அரசியலுக்கு வந்ததே அவங்களால தானே.. அது நல்லது இல்லையா? எத்தனையோ நடிகைகளுக்கு கலைமாமணி விருது கிடைச்சது அது நல்லது இல்லையா?கலைஞர் டி வி யே என்னுது இல்லைன்னு கலைஞர் சொல்லீட்டார்.. அது பொது சொத்து ஆகப்போகுது.. அது நல்லது இல்லையா?அவ்வளவு ஏங்க? தப்ஸி, தமனா,அஞ்சலி போன்ற சூப்பர் ஃபிகர்கள் களம் இறங்குனதும் அய்யாவோட ஆட்சில தானே..?


6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?'' 

''ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, தி.மு.க. குடும்பச் சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் சொத்தா மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.

முன்பெல்லாம் படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமத்துப் பாட்டாளிக்கும் நல்லாவே தெரியுது. அதில் அடிச்ச பணத்தைத்தான் நமக்குத் தரப்போறாங்கன்னு மக்களே சொல்றாங்க.
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்,

அவர் இதுவரைக்கும் போட்டுவெச்சு இருந்த கொள்கைவாதி முகமூடியைக் கிழித்துவிட்டது. 2009 மே மாசத்துக்குப் பிறகு, உண்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

ஸ்பெக்ட்ரம் மோசடி வெளிச்சத் துக்கு வந்த பிறகு, அவர் இதுவரைக்கும் போட்டு வைத்திருந்த நேர்மையாளன் என்ற முகமூடியும் கிழிந்துவிட்டது. 2010 நவம்பர் மாசத்துக்குப் பிறகு நேர்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.

எகிப்துல முபாரக் ஓடின மாதிரி, இங்கேயும் நடக்கப்போகுது பாருங்க!'
''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!''

கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விடும் என்று நினைத்துத்தான் பலர் மனப்பால், மனபிராந்தி, மன விஸ்கி எல்லாம் குடிக்கறாங்க.. இந்த கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் தப்ஸி வந்தாக்கூடத்தான் வரும்.. அதுக்காக தப்ஸி தான் அடுத்த சி எம்னு சொல்லிட முடியுமா? போங்க தம்பி போங்க.. போய் புள்ள குட்டிகளை நல்லா படிக்க வைங்க.. அவங்களாவது நல்ல புத்தியோட வளரட்டும்..  


டிஸ்கி -1.  இந்த பதிவில் கறுப்பு , வெள்ளை, சிவப்பு என கலர் மாறி மாறி வருவது எதேச்சையானது.. நான் அதிமுகவுக்கு ஆதரவு என யாரும் முத்திரை குத்த வேண்டாம்..  


டிஸ்கி 2  - டைட்டிலில் ஜெயலலிதா இருக்கார் ஆனால் பதிவில் அவர் இல்லையே என கேட்பவர்களுக்கு  நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது. அதை குறிப்பால் உணர்த்தவே அப்படி டைட்டில்.... ஹி ஹி ( எதையாவது எதுகை மோனையா டைட்டில் வைக்க வேண்டியது.. அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க யோசிக்க வேண்டியது..)

63 நாயன்மார்களும் (காங்க் ) ஒரே ஒரு நயன் தாராவும் (ஆங்க்)

http://www.skynyxonline.com/myimages/actress/nayanthara/nayanthara-hot-sexy-gallery-4%5B1%5D.jpg 

1. தலைவர்  ஏன்  கோபமா  இருக்கார்?

ஓய்வுக்கே  ஓய்வு  கொடுத்தவருக்கு  நாம  ஓய்வு  கொடுத்து  வீட்டுக்கு  அனுப்புவோம்னு  அவரோட எதிரிகள்  பிரச்சாரம்  செஞ்சாங்களாம்.

------------------------

2. தலைவருக்கு  தேர்தல்  ஜுரம்  பிடிச்சிருக்கு...

இப்பவே  இப்படின்னா  தேர்தல்  ரிசல்ட்  ஜுரம்  வந்தா... அவ்வளவுதான்  போல...

-----------------------

3. அரசியலில்  என்னை  தோற்கடித்தால்  நான்  சினிமாவில்  நடிப்பேன்னு  தலைவர்  அறிவிச்சிருக்காரே?

ஆமா... அவரோட  நடிப்பை  பார்க்கற  கொடுமைக்கு  ஆட்சிப்  பொறுப்பையே  குடுத்துத்  தொலைச்சிடுவோம்-னு  மக்கள்  நினைக்கட்டும்னுதான்.

------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/nayanthara27.jpg
4. தலைவருக்கு  அரசியல்  அறிவு  சுத்தமா இல்லைனு  எப்படி  சொல்றே?

தமிழகத்தில்  500  தொகுதிகளிலும்  தனித்துப்  போட்டி  இடுவோம்னு  முழங்குனாரே?

--------------------------------

5. தலைவரோட  நாக்கு  குழறுனதால  கட்சில  ஏகப்பட்ட  குழப்பமாமே?

ஆமா...  என்  கூட  பிரச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்கறப்ப  வாய்  குழறி  மகளிர்  அணித்தலைவி  கிட்டே, “என்  கூட  விபச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்டுட்டாராம்.

---------------------------------

6. தலைவருக்கு  சின்னம்  இன்னும்  ஒதுக்கலையாமே?

ஆமா...  போற  போக்கைப்  பார்த்தா  அவரையே  ஒதுக்கிடுவாங்க  போல.

--------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqV0VCL9C1k3J54sR_kSPDwjFvi80i5h3o_IEfzDiHlTg-95JQ7bIQ7315IUZbcQ8MTGJFZq-9lmSR2HQ-QebY76XtIxZZq0_OZiKz2vKILjqDO23N10kAssr7_f5D4RTrj7Q5JCEwY8A/s400/Nayantara-Photos-074.jpg
7. கூட்டணித்  தலைவரோட  பேச்சு  வார்த்தை  நடக்கறப்ப  சொடக்கு  எடுத்துவிடறாரே  தலைவரு...?

“எப்படியாவது  அவரை  மடக்கிடுங்கனு  கட்சி  மேலிடம்  சொன்னது  அவர்  காதுக்கு  எப்படியாவது  சொடக்கிடுங்க-னு  கேட்டுதாம்.

--------------------------------

8. தலைவர்  பேச்சைக்  கேட்டு  ஊரே  சிரிச்சுதாமே?

மக்கள்  ஆட்சிவர  ஆதரவளிப்பீர்-னு  சொல்றதுக்குப்  பதிலா  மாக்கான்  ஆட்சி  அமைக்க  ஆதரவு  தாரீர்-னு  உளறிட்டாராம்.

----------------------------

9. தலைவர்  எதுலயும்  பர்ஃபக்‌ஷன்  எதிர்  பார்ப்பார்...

அதுக்காக  மகளிர்  அணித்தலைவி  மேட்சுக்கு  மேட்சா  ஜாக்கெட்  போடலைங்கறதை மேடைலயே  சொல்றது  ஓவர்...

----------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy53lnYNvfAcw27J7C1f84isOoJzcS8uvGIdGvqP4qZ7rwo1FysiRzDtJmrhmVtl7fyAN6RDmcwpyaC9o2XVRnCwl4IuITesOqRykpHmcc7vSmyBezMVMkIjwv9vmEvxTfxmjhE3w7hBc5/s400/nayantara_image_06.jpg
10. இதுவரை  எனக்கு  63  பேர்  லவ்  லெட்டர்ஸ்  குடுத்திருக்காங்க...

அடேங்கப்பா..மேடம்.... பயங்கரமான  நாயன்மார்கள்  கதை  உங்களுதுதான்  போலிருக்கே!  மரித்திடாத  சரித்திரம்  படைத்த  மகளிர்  அணித்தலைவி-னு  போஸ்டர்  ஒட்டிடவேண்டியதுதான்.


டிஸ்கி - இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. சோ டிஸ்கிக்கு தடா...ஹி ஹி 

விளக்க டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் 63 நாயன்மார்கள் என்று கலைஞரால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறி அதிக சீட்டுக்கு ஆசைப்படுது.. நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்...

Wednesday, March 30, 2011

இலியானா வுக்கும், தி மு க வின் கதாநாயகிக்கும் என்ன வித்தியாசம்?

http://oniondosa.net/photos/Heroines/Ileana/tn_Ileana030.jpg 

1. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும். நெல், கரும்புக்கு பணவீக்கத்திற்கு தகுந்தபடி, உடனடியாக குறைந்தபட்ச விலை வழங்கப்படும். காவிரியில் இருந்து, 205 டி.எம்.சி., தண்ணீரை ஆண்டுதோறும் உறுதியாக பெற்று, தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படும்.

முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.....இங்கே அம்மாவும், அய்யாவுமே அடிச்சுக்கிட்டு இருக்காங்க.. இதுல இவரு வேற காமெடி பண்ணிட்டு இருக்காரு...

---------------------------------------

2. தமிழக முதல்வர் கருணாநிதி: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.

ஆமா தலைவரே.. இப்பவெல்லாம் நல்லதுக்கு காலம் இல்ல... உண்மையை சொன்னா எவனும் நம்ப மாட்டான்.. ஆனா இலவசம்னு சொல்லுங்க.. உடனே ஓடி வருவான்.. இந்த நாட்டில் கடைசி இளிச்சவாயத்தமிழன் இருக்கும் வரை நீங்க தான் தலைவரே, தமிழ் இனத்தலைவரு,.. ஒண்ணும் கவலைப்படாதீங்க..

----------------------------------------------------
http://3.bp.blogspot.com/_maPlgJCAIqk/S-lfoD2PaOI/AAAAAAAAASc/R62ghQeimxo/s320/ileana_hot.jpg
3. பத்திரிகை செய்தி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.

அது ஓக்கே.. இப்போ 2011ல கலைஞரே முதல்வர் ஆனா நாங்க என்ன பரிகார பூஜை யாருக்கு பண்ணனும்?

----------------------------------------------


4. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: இன்று வீட்டிற்கு வீடு ஆடு, மாடு தருவதாக அ.தி.மு.க., வாக்குறுதி கொடுத்துள்ளது. படித்த, படிக்காத பாமர மக்களான நம்மை மாடு மேய்க்கச் சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. மாணவர்கள் அனைவருக்கும், "லேப்-டாப்' வழங்குவதாக கருணாநிதி கூறியுள்ளார்.


செம்மறி ஆடுகள் போல் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் தமிழனுக்கு ஒரு அடையாளத்திற்கு ஆடு கொடுப்பது சரிதான்.. எலக்‌ஷன் முடிஞ்சு அன்புமணிக்கு சீட் தர்லைன்னா இதே நாக்கு எப்படி பேசும்னு எங்களுக்கு தெரியாதா? என்ன?

-----------------------------------------
Hilarious political cartoon images

5. தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி பேட்டி: தமிழக அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவரும் நோக்குடன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிக்சி, லேப்-டாப்களை இலவசமாக வழங்கப்போவதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியுள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் கவலையளிக்கும் இந்த போக்கை, மக்கள் கருத்தில் கொண்டிருக்கின்றனர்.


சார். நீங்க என்ன தான் சொலுங்க.. என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சாப்பிட்டாலும் , ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப கிடைக்கற சுகம் இருக்கே... 


------------------------------------------



6. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: ம.தி.மு.க., உண்மையான ஜனநாயக கட்சி. ம.தி.மு.க.,வின் முடிவால், மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், படித்தவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்.


ம தி மு க எடுத்த முடிவால் மக்கள் நல்லெண்ணத்தை பெற்றுள்ளதுன்னு சொல்லுங்க.. மொட்டையா ம தி மு க முடிவால்னா அண்ணன் கலைஞர் உடனே ம தி மு க முடிந்து விட்டது என தம்பி வை கோவே ஒத்துக்கிட்டாருனு ஒரு அறிக்கை ரெடி பண்ணிடுவாரே... 

----------------------------------------
http://3.bp.blogspot.com/_AybDLz0ru4s/THna7Tk6sPI/AAAAAAAACLA/nK53g26Bg1U/s1600/Ileana-hot-pics-1.jpg
7. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர், உப்பு சப்பு இல்லாமல் பேசி வருகிறார். என்ன பேசுகிறோம் என்பதையே புரியாமல் பேசுகிறார். அ.தி.மு.க., அணியில் இருந்து எழுப்பப்படும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். எந்த ஒரு கட்சியாவது, 119 தொகுதிகளில் போட்டியிட்டு, 118 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? தோற்பதற்காகவே தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது.


வரலாறு தெரியாம பேசாதீங்க.. கள்ள ஓட்டு போடறதுல கழகம் தான் முதலிடம், பணத்தை அள்ளி இறைக்கறதுல கழகமே முன்னிலை...நேர்வழில போறவங்க தான் வெற்றியா? தோல்வியா?ன்னு கவலைப்படனும்.. கழகம் கண்ட வழி குறுக்கு வழி.. ஈசியா ஜெயிச்சுடுவாங்க பாருங்க....

------------------------------------

8. வி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சு: கூட்டணியில் போட்டியிடும் ஒரு கட்சி, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சிக்கு ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால், அந்த கட்சி போட்டியிடும் தொகுதியில் மற்றொரு கட்சி வேலையை காட்டி விடுவாங்க. கூட்டணிக்கு ஒழுங்காக மனசாட்சியோடு வேலை பார்க்க வேண்டும்.

நீங்க காங்கிரஸை மிரட்டறீங்கன்னு தெரியுது... ஆனா இப்போ காங்கிரஸ்தான் கலைஞரை மிரட்டற சீசன்.. அதனால அமுக்கி வாசி அண்ணாத்தே... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6kS5NFJGKhLSFVmUBSjt9PYpqgS7wIrguXxm_tJdFlgME7q0g3NfJwIvH7kh7mjkkgosY6TBhx3gql0XjSd-qYhrbAlt7Q3p2ZKvEAdya5vCssaqiW61LzzJZdPEqJ3j9LEVMVcYYmRk/s1600/Ileana_latest_pics_hot.jpg
-----------------------------------------

9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு:தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறினாலே போதும், நாம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை நிதி நிறுவன அறிக்கை போல் உள்ளது. அம்மா என்றால் சும்மா. நாம் கிராமப்புற இளைஞர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவோ ஆடு மேய்க்க சொல்கிறார். இதனால், அந்த கூட்டணியை முறியடிக்க வேண்டும்.


ஆம்.. அம்மா என்றால் சும்மா.. அய்யா என்றால் அய்யோ.... 


---------------------------------------
Hilarious political cartoon images

டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இலியானா கழுத்துல நாய்க்கு சங்கிலி மாட்டி இருக்கற மாதிரி ஏதோ மாட்டி இருக்கே  அது அழகுக்கு மட்டும் இல்ல.. ஒரு பாதுகாப்புக்கும் தான்.. பாப்பா போட்டிருக்கற டாப்க்கு அதுதான் ஸ்டேண்ட்.. ஹி ஹி 

டிஸ்கி 2 - ரெண்டாவது ஸ்டில்லுல இலியானா போட்டிருக்கற பாசி மாலை ரொம்ப சின்னதா இருக்கேன்னு யாரும் கவலைப்படவேணாம்.. அதுக்குப்பதிலாத்தான் கோட் பட்டன் மாதிரி 4 பட்டன் பெரிசா டி சர்ட்ல இருக்கே... 

டிஸ்கி 3 - ஸ்டில் 3 - இலியானா அவரோட வாழ்க்கைலயே முதன் முதலா தலை சீவி சிங்காரித்த நாள்  இதுதானாம். ஞாபகார்த்தமா வெச்சுக்குங்க.. இனி மறுபடி எப்போ தலை சீவுவாரோ...

டிஸ்கி 4 - ரெண்டாவது ஸ்டில்லுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான இன்னொரு உண்மை ஜாக்கிங்க் போறது உடம்புக்கு நல்லது.. ஆனா ஜாக்கிங்க் போற ஃபிகரை வேடிக்கை பார்க்கறது மனசுக்கு கெட்டது ஹி ஹி ....

டிஸ்கி 5 -  கடைசி ஸ்டில்லுல இருக்கற இலியானா நிலைமையும் , தி மு க நிலைமையும் ஒண்ணுதான்.. இலியானா போட்டிருக்கற டிரஸ்ல கை வெச்சுக்கவும் மனசில்ல... கையே வேணாம்னு கை இல்லா ரவிக்கை போடவும் பயமா இருக்கு.. அதனால ரெண்டுங்கெட்டானா கை....


டிஸ்கி 6 - டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இலியானாவும் சரி,  தி முக கதாநாயகியும் சரி .. பார்க்க நல்லாருக்கும்..கவர்ச்சியா இருக்கும்..ஆனா........

நாளைய இயக்குநர் - சஸ்பென்ஸ் + த்ரில்லர் கதைகள்

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Spicy-Keerth-Chawla-Gallery/keerthi-chawla-stills-019.jpg 


இன்னைக்கு (27.3.2011) ஒரு இனிய ஆச்சரியம் என்னன்னா முதல் போட்டியாளர் ஒரு பெண் இயக்குநர்.. பேரு வெண்ணிலா ( கவிதாயினி அ. வெண்ணிலா அல்ல).அவரைப்பார்த்ததும் ஏதோ ஃபேமிலி செண்ட்டிமெண்ட் எடுத்துக்கொல்லப்போறார்னு நினைச்சேன்.. ஆனா சஸ்பென்ஸ் ஸ்டோரி...

1. நான் சொல்வதெல்லாம் உண்மை - வெண்ணிலா

பாட்டோட பல்லவியை படத்துக்கு டைட்டிலா வைக்கிறது,பழைய படங்களோட டைட்டிலை புதுப்படத்துக்கு வைக்கரது இதெல்லாம் இப்போதைய டிரெண்ட் போல.. ஆனா என்னை கேட்டா கிரியேட்டிவ் மைண்ட் இல்லாதவங்க தான் அப்படி வைப்பாங்கன்னு சொல்வேன்.. ஆனா சிலர் மக்களை ஈஸியா போய் ரீச் ஆக ஏற்கனவே ஹிட் ஆன டைட்டில் பெட்டர்னு சொல்றாங்க..

நூறாவது நாள் படத்தோட ஒன்லைன் தான் இந்த குறும்படத்தோட கதை..அதாவது ஹீரோவுக்கு நைட் கண்ட கனவு மறு நாள் மதியம் 12 மணிக்கு பலிக்குது..அந்த பலிக்கற சூழல் அந்த டைம்ல ஹீரோ எங்கே இருக்காரோ அந்த இடத்துல யார் இருக்காங்களோ அவங்களை பாதிக்குது..இந்த மாதிரி 3 கனவு பலிக்குது..

4 வது கனவுல யாரோ ஆக்சிடெண்ட்ல இறக்கற மாதிரி பார்க்கறார் ஹீரோ..அப்போ கூட இருக்கற ஃபிரண்டை எச்சரிக்கறப்பத்தான் அவருக்கு பலி ஆகப்போவது தான் தான் என்ற எண்ணம் வருது.. ஆனா.. அட சட்.. டூ லேட்.. ஆக்சிடெண்ட் ஆகுது...ஆள் அவுட்.. 

இந்த க்ளைமாக்ஸ் KNOT  மட்டும் மாதவன் நடிச்ச யாவரும் நலம் படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல இருந்து உருவி ஆல்டர் பண்ணி டிங்கரிங்க் ஒர்க் பண்ணி இருக்காங்க..

இதுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கலக்கலா போட்டிருந்தாங்க..பொதுவா இந்த மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லர்க்கு இசை தான் முக்கியம்.. 

ஆனா சராசரிக்கும் மேலே உள்ள இந்தப்படத்தை மதன்+ பிரதாப் போத்தன் பெரிசா சிலாகிக்கலை.. ஓக்கே அப்படின்னாங்க...
...
http://www.topnews.in/files/Keerthi-Chawla.jpg



2. ஸ்கூல் பெல் - பிரின்ஸ்

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி ரொம்ப சின்ன கதையா இருந்தது. குறும்படம் ஓடறதுக்கான டைம் அவங்க குடுக்கறது 7 நிமிஷம்னா குறைஞ்ச பட்சம் 5 நிமிஷமாவது யூஸ் பண்ணனும்.. ஆனா இந்தப்படம் 4 நிமிஷம் தான் ஓடுச்சு..

ஒரு ஏழைக்குடும்பத்துல 2 குழந்தைங்க காலைல அவசர அவசரமா ரெடி ஆகறாங்க.. அம்மா.. சீக்கிரம் டிஃபன் ரெடி பண்ணு.. ஸ்கூல் பெல் அடிக்கப்போறாங்க... லேட்டாப்போனா அடி விழும் என 2 பேரும் சொல்றாங்க.. இந்த பில்டப்புல 3 சீன் ஓடுது.. அப்புறம் பார்த்தா 2 குழந்தைங்கள்ல ஒரு பையன் ஸ்கூல்க்கு போறான்.. இன்னொரு குழந்தை ( பொண்ணு ) வேலைக்கு போகுது.. ஸ்கூல் பெல்லை ஒரு டைமிங்க்க்கான அடையாளமா வெச்சிருக்காங்க.. அவ்வளவுதான்.

குழந்தைதொழிலாளர் எதிர்ப்புக்கான ஒரு டாக்குமெண்ட்ரியா இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கே ஒழிய ஒரு குறும்படத்துக்கான ட்விஸ்ட்டோ, அழகிய ரசனை சார்ந்த  மேக்கிங்க் ஸ்டைலோ இல்லை..இதை 2 ஜட்ஜூங்களுமே சொன்னாங்க.. ( குறையை கரெக்ட்டா சொல்லிடறாங்கப்பா..)

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1.   கதைக்களன் ரொம்ப ஏழை.. கிட்டத்தட்ட சேரின்னு முடிவான பின்னே அந்த கேரக்டர்கள் அதே போல் செலக்ட் பண்ண வேண்டாமா?சிட்டி லைஃப் குழந்தைகளை செலக்ட் பண்ணாம சேரிக்குழந்தைகளையே செலக்ட் பண்ணி இருக்கலாம்...

2. ஓப்பனிங்க் ஷாட்ல ஹைக்ளாஸ் பெட்ஷீட்டை போர்த்தி படுத்திருக்கு குழந்தை.. அது எப்படி?


http://s4.hubimg.com/u/3606995_f520.jpg
3. இலக்கணப்பிழை - சரத்

இதே டைட்டில்ல இப்பத்தான் ஒரு  கில்மாப்படம் ரிலீஸ் ஆச்சு..( கில்மா = KILL மா -அதாவது எதுவுமே இல்லாம கொலையா கொன்னெடுக்கற படம் ஹி ஹி ))ஆனா அந்தப்படத்தை விட இந்த படத்துக்குத்தான் டைட்டில் ரொம்ப பொருத்தம்..

நடைபாதைல தள்ளுவண்டி வியாபாரம் பண்ற ஒரு தம்பதி..அதுல கணவனை போட்டுத்தள்ள ஒருத்தன் வர்றான்.அவன் கூட கை கலப்பு நடக்கறப்ப எதிர்பாராத விதமா வந்தவனை கணவன் கொலை பண்ணிடறான்.

அந்த டெட்பாடியை மறைக்க முயலும்போது கணவனோட நண்பன் வர்றான்.. அவனையும் ஒரு கை பிடிக்க சொல்லி பாடியை அப்புறப்படுத்தும்போது செல் ஃபோன் இருக்கு.. அந்த ஃபோன்ல நண்பனோட நெம்பரை பார்த்ததும் தான் உண்மை தெரியுது.. 

கணவனோட  நண்பன் தான் அந்த கூலிப்படை ஆளை அனுப்பினதே..உடனே 2 பேருக்கும் கை கலப்பு நடக்குது..அப்போ


பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... இவங்க காதலுக்கு கணவன் இடஞ்சலா இருந்துடக்கூடாதுன்னு ப்ளேன் போட்டு நடத்தறப்ப ஜஸ்ட் மிஸ் ஆகி காதலன் செத்துடறான்...

ஆனா கணவனுக்கு கடைசி வரை தன் மனைவி டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஒரு நயவஞ்சகக்காரி என்பது தெரியாமலே போகுது..

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1,  பொதுவா ஒரு மனைவி கணவனை கொல்ல நினைச்சுட்டா 1008 வழி இருக்கு.. சாப்பாட்ல விஷம் வைக்கலாம்..,மலைல இருந்து தள்ளி விடலாம்,மப்புல இருக்கறப்ப எதாவது பண்ணலாம், தூங்கிட்டு இருக்கறப்ப தலைல கல்லை தூக்கி போடலாம்... ( இதுக்கு மேல விவரிச்சா நானே லீடு குடுத்த மாதிரி ஆகிடும்..)ஆனா இந்த மனைவி ஏன் இப்படி ஒரு ரிஸ்க்கான வழியை தேர்ந்தெடுத்தா?


2. அப்புறம் முக்கியமான விஷயம் ஒருத்தரை தாக்கறப்ப அவர் மட்டும் தனியா இருந்தா நாம் ஒரே அடில ஆளை முடிக்கற மாதிரி பவர் ஷாட் குடுத்து கொலை செய்யலாம்.. (இதெப்பிடி உனக்கு தெரியும்?)ஆனா 2 பேரு சண்டை  போட்டுட்டு இருக்கறப்ப ஒரே ஷாட்ல ஆளை முடிக்க முடியாது.. முதல் அடி லைட்டா எதிராளி நிலை குலையற அளவு மட்டும் அடிச்சுட்டு, அடுத்த அடில தான் ஆளை முடிச்சுக்கட்டுவாங்க.. 

மதன் இந்த படத்துக்கு ஒரு ஐடியா சொன்னாரு.. அதாவது மனைவி தாக்கும்ப்[ஓது ஸ்லோமோஷன் ஷாட் வெச்சிருக்கலாம்.. அப்பத்தான் அவ கணவனை கொலை செய்ய போய் மிஸ் ஆகி காதலனை கொலை செய்தது தெளிவா பார்வையாளனுக்கு தெரியும்னார்...


இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருந்தது.. கேமரா கோணங்களும் அழகு.. இந்தப்படம் தான் இந்த வார சிறந்த படமா தேர்ந்தெடுப்பாங்கன்னு நினைச்சேன்..ஆனா...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW-69AV7Tn-itTuuwqGt_5QMqC2R6Eax2ds3FqQo7HQoAFyXSPpi67Yludufhzn5O_ymDKQVoKJFxhpMzQBB031VuQThJYddJpxYZM1ksr_ujGMKPlabnVtEfyRahCynkyxBxZBUYNC0bg/s1600/rahi-bd-hot-tv-anchor-10.jpg

4. கானல் நீர் - அருண்

ராஜேஷ் குமாரோட பாதிப்பு இந்த கதைல நிறையவே தெரிஞ்சுது..ஒரு அம்மா, பொண்ணு  மட்டும் இருக்கற வீடு.. அப்பா சில நாட்கள் முன்புதான் இறந்திருக்காரு.. அது கொலை.. கொலை செஞ்சது அம்மாவோன்னு சந்தேகப்படறா பொண்ணு... 

அப்புறம் பார்த்தா அப்பாவோட ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட தொடர்பு.. அந்த பொண்ணோட புருஷன் அப்பாவையும், அவனோட மனைவியையும் போட்டுத்தள்ளி இருக்கான்..

இந்தப்படத்துக்கான கேமரா ஷாட்ஸ் ரொம்ப புத்திசாலித்தனமா இருந்தது.. படத்தோட மைனஸ் என பார்த்தா பொலீஸ் ஆஃபீசரா வர்ற கேரக்டர் எப்போ பாரு தம் அடிச்சுக்கிட்டே இருப்பது...எதுக்காக அப்படி ஒரு ஷாட் வைக்கனும்?அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு புகை பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என வாசகம் ஓட விடனும்?

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. டெட்பாடியில் ரத்தம் வர்ற மாதிரி காட்சில ரத்தத்தை அப்படி தெளிக்கக்கூடாது..

2. வயலட் கலர்ல ரத்தம் எந்த கிரகத்துல இருக்கு?டாக்டர் ராஜசேகரோட மன்னிக்க வேண்டுகிறேன் படத்துலதான் முதன் முதலாக உண்மையான ரத்தத்தையே யூஸ் பணி கொலைக்காட்சிகள் எடுத்தாங்களாம். அந்த அளவு இல்லைன்னாலும் ஓரளவாவது மெனக்கெடலாமே..?

போட்டில ஸ்கூல் பெல் படத்தை தவிர மற்ற  3 பட டைரக்டர்களுமே குவாட்டர் ஃபிஅனலுக்கு போறாங்க..


டிஸ்கி 1 - ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதில நில நடுக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு.. எனக்கு சொன்னவர் நம்ம காங்கேயம் நந்த குமார்.. சன் டி வி குரூப்ல நிறைய பேர் அங்கே இருக்காங்களாம்.. இன்னைக்கு மாலை நான் அங்கே போறேன்... ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா அதை ஒரு பதிவா போடறேன்... 

டிஸ்கி 2  - இங்கே போடப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களுக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இது திராவிடக்கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்கள் மாதிரி.. சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்காக...