Sunday, December 12, 2010

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.dinakaran.com/vellimalar/2009/nov/27/image/9.jpg
தம்பியை கொலை செய்த அரசியல் தலைவரை போட்டுத்தள்ளும் அண்ணன் கம் ஹீரோவின் சாதாரண பழிவாங்கல் கதையைக்கூட இவ்வளவு சுவராஸ்யமாய்த்தர முடியுமா? என வியக்க வைக்கிறார் இயக்குநர்.

ஆதிக்கு மிருகம்,ஈரம் என தொடர்ந்து வித்தியாசமான கதா பாத்திரம் வந்து மாட்டுகிறது. சர்வ சாதாரணமாய் ஊதித்தள்ளுகிறார்.ஆனால் ஃபைட் சீனில் எல்லாம் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பது ஓவர்.அதே போல் பக்கத்தில பவ்யமான பைங்கிளி இருக்கும்போது காதல் காட்சிகளில் கூட உம்மென்ற முகத்தோட இருப்பது ஏன் என தெரியவில்லை.(சம்பள பாக்கியோ?)

ஹீரோயின் மீரா நந்தன்.நல்ல ஃபிகர்தான்.ஆனால் ரொம்ப மெச்சூரிட்டியான முகம்.பொதுவாக காதலி கேரக்டர் என்றால் அப்பாவித்தனமான, ,குழந்தைத்த்தனமாக இருந்தால் செமயாக இருக்கும்.அவருக்கு வாய்ப்பும் குறைவுதான்.இந்த மாதிரி ஆக்‌ஷன் திரில்லரில் காதல் காட்சிகள் அதிகமாக வைத்தால் ரிலாக்ஸாக இருந்திருக்கும்.

படத்தோட ஓப்பனிங்கில் வரும் சாவுப்பாட்டுக்கு ஆடும் ஸ்டெப் டான்ஸ் செம.  வெல்டன் டான்ஸ் மாஸ்டர்.அதே போல் ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேனே பாட்டு ஒளிப்பதிவாளரின் ஒட்டுமொத்த திறமையையும் ஒருமுகப்படுத்தி கலக்கிய இடம்.

ஹீரோ டாஸ்மாக்கில் போடும் தெனாவெட்டான ஃபைட் டாப்.அந்த ஃபைட்டில் ஹீரோ காட்டும் ஆக்ரோஷம், முக உணர்வுகள் ஒண்டர்ஃபுல்.

படத்தின் கதையை நேரடியாக சொல்லாமல் அண்ணன்தான் தம்பியை கொலை செய்தான் என்று சந்தேகப்படும்படி காட்சியை நகர்த்துவது ஷிட்னி ஷெல்டனின் லாவகம்.ஆனால் தம்பி கேரக்டர் திக்குவாய் என காட்டியது தேவையே இல்லாதது.
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/ayyanar.jpg
படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு எல்லாம் நாட்டில் அங்கங்கே நடக்கும் சென்சேஷனல் நியூஸ்களை சம்பவங்கள் ஆக்கி இடைச்செருகல் செய்த சாமார்த்தியத்தை பாராட்ட வேண்டும்.
சாதாரணமாக எல்லாருக்கும் புரிய வேண்டிய கதையை வேண்டுமென்றே சிக்கலான திரைக்கதையாகக்கொண்டு சென்ற நோக்கம்தான் எது என தெரியவில்லை.படத்தின் ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு,இசை,படத்தொகுப்பு என டெக்னிக்கல் ஐட்டங்கள் எல்லாமே சராசரிக்கும் மேலே.

வெறும் 3 சீன்கள் மட்டுமே வரும் சந்தானம் சிரிக்க வைத்தாலும் இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கலாம் என ஏங்க வைக்கிறார்.

படத்தின் வசனகர்த்தா அட போட வைத்த இடங்கள்

காமெடி

1. ஒயின்ஷாப்புல பிரச்சனை பண்ணுனியா?

ஆமா,மப்பு ஜாஸ்தியா இருந்தா வேற என்ன பண்றது?

2.  ஏன் யாரும் பேசவே மாட்டேங்கறீங்க?

சந்தானம் - சாப்பிடறப்ப பேசற பரம்பரை நாங்க கிடையாது.

3.  டேய்... ஏண்டா உன கையை அங்கே வெச்சிருக்கே...?

அப்பா....

மரியாதை தர்றாராம்... அடச்சே கையை எடு. அவர் என்ன குடும்ப கட்டுபாடு பண்ற டாக்டரா?

4.  டேய் ,உள்ளே உங்கம்மா பாத்திரம் உருட்டற சத்தம் கேக்குது,கோபமா இருக்காங்களோ?

ம்ஹூம்,சுத்தம் சோறு போடும்கறதால முதல்ல பாத்திரம் துலக்கறாங்க.

5.  அவன் என்னை மொட்டை போட்டுடுவானோன்னு பயமா இருக்கு.

கவலைப்படாதே,நான் உனக்கு விக்கு வாங்கித்தர்றேன்

ஒரு பெக்கு வாங்கவே கையாலாகாத நாய் ஓசில சரக்கு சாப்பிடுது,பேச்சை பாரு

6. டேய், வெறும் 80 ரூபா செப்பலுக்கே பூட்டு போடற குடும்பம்டா உங்களுது.

7. டேய்,உனக்கு அறிவு இருக்கா?

இருக்கு,ஆனா யூஸ் பண்றது இல்ல.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
செண்ட்டிமெண்ட்ஸ்

1.  லெட்டர் எழுதி வெச்சுட்டு சாகற எல்லா லேடீஸும் நல்லவங்களும் கிடையாது.அவங்க சாவுக்கு காரணம்னு சொல்லப்படற ஆம்பளைங்க கெட்டவங்களும் கிடையாது.

2. தப்பு பண்ணி  இருக்கான்,தட்டிக்கேட்டா தனிக்கட்சி ஆரம்பிச்சுடுவேன்னு மிரட்டறான்.இவ்வளவு தப்பு பண்ணி இருக்கானே ,எந்த தைரியத்துல?

மக்கள் மறந்துடுவாங்கங்கற தைரியத்துல.பணபலமும் ,ஜாதி ஓட்டும் இருந்தா அரசியல்ல என்ன வேணா பண்ணலாம்கற எண்ணத்துல...


3.  வில்லன் - போலீஸ்காரனுக்கே ஏதாவதுபிரச்சனைன்னா அவன் என்னைப்பார்க்கத்தான் வருவான்.

ஹீரோ - இப்போ உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ என்னை பார்க்க வந்திருக்கே?

4.  என் ஆள் ரமணியை ஏண்டா கொன்னே?

தப்பு பண்ணுனான்,அதனால (அப்படியே தளபதி பட ரிப்பீட்டு)

எங்க வேலையே தப்பு பண்றதுதான். (இந்த லைன் மட்டும் புதுசு)

5. காதலி - நீ எனக்கு செஞ்சது முக்கியமான உதவிதான்,ஆனா அதுக்காக உனக்கு தாங்க்ஸ் சொல்லி உன்னை தூரமா வெச்சுக்க விரும்பல.

இடைவேளைக்குப்பின் வரும் தனியே தனியே பாட்டு செம ஹிட்டு.
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/MeeraNandhanan.jpg
இயக்குநருக்கு சில அட்வைஸ்

1. படத்தின் பெரிய மைனஸ் டைட்டிலும் பட போஸ்டரும்.ஏதோ கிராமத்து தாதா கதையோ என பயத்தை ஏற்படுத்தும் விதம் உள்ளதை தவிர்த்திருக்கலாம்.இந்தப்படத்துக்கு கொலைக்கண்ணோட்டம் அல்லது சாதுர்யன் என டைட்டில் வைத்திருக்கலாம்..அதே போல் போஸ்டரில் 5 அடிக்கு அரிவாள் வைத்திருக்கும் ஸ்டில்சை யூஸ் பண்ணாமல்  மேலே உள்ள 4 ஸ்டில்ஸ்களை போட்டிருக்கலாம்.

2. படத்தின்பெரும்பாலான் காட்சிக்கான பின்ன்ணி இசை ஈரம் படத்திலிருந்து எடுக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

3. இந்தப்படத்தை தீபாவளிக்கோ ,பொங்கலுக்கோ ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.

4. படத்தின் முன் பாதியில் ஹீரோ வேலை வெட்டியே இல்லாதவர் என காண்பிக்கப்பட்டு பின் அவர் ஏற்கனவே செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை உள்ளவர் என குழப்பி இருக்கவேணாம்.

5. அண்ணன் தம்பிக்கு இடையே ஏன் வெறுப்பு என ஒரு காட்சியில் கூட விளக்கவே இல்லை.

இந்தப்படம் எல்லா தரப்பு மக்களையும்  கவரும் என சொல்ல முடியாது.ஆனால் வித்தியாசமான படம் பார்க்க விரும்புவர்கள்,ஆக்‌ஷன் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த  விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங் - நன்று

இந்தப்படம் ஏ செண்ட்டர்கள்,பி செண்ட்டர்களில் பொங்கல் வரை ஓடும். (35)

சி செண்ட்டர்களில் 10 நாட்கள் தான் ஓடும்.


டிஸ்கி 1 -

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

சித்து + 2 சினிமா விமர்சனம்

 

Saturday, December 11, 2010

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/viruthagiri/stills/virudhagiri-stills01.jpg
ஜக்குபாய் என்ற டப்பா படமே ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்தான்.அந்தப்படத்தின் கதையை எடுத்துக்கொண்டு இயக்குநராக களம் இறங்கி இருக்கும் கேப்டனின் அசாத்திய துணிச்சல் +அசட்டுத்துணிச்சல்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்,திருநங்கைகள் கேட்பாரற்று இருப்பதால் அவர்களின் கொலை செய்து  உடல் உறுப்புகளை விற்கும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டுவதில் வித்தியாசம் காட்ட நினைத்தாலும் படத்தின் மூலக்கதை ஃபாரீனில் இருக்கும் தனது சொந்தக்காரப்பெண்ணை வில்லன் குரூப்பிலிருந்து காப்பாற்றும் அதிகாரியின் கதைதான்.

படம் போட்டதுமே தீவிரவாதி,டைம்பாம் என்று வசனம் வைத்து ரசிகர்களுக்கு அபாய அலாரம் வைத்தாலும் இடைவேளை வரை படம் சுவராஸ்யமாகவே செல்கிறது.இடைவேளைக்குப்பிறகுதான் மெயின் கதை.(ஆவ்.தூக்கம்)



http://www.tamilmasalaa.com/wp-content/uploads/movies/Viruthagiri/virudhagiri-14-02-Stills-017.jpg
படிக்காதவன் படத்தில் அம்பிகா கஞ்சா கடத்த கர்ப்பிணி வேடம் போடுவதை உல்டா பண்ண இன்னும் எத்தனை இயக்குநர்கள் நினைத்திருக்கிறார்களோ?
படத்தோட முத ஃபைட்டில் புதுமை என நினைத்து அடி ஆட்கள் காலில் ஸ்பிரிங்க் கட்டி பறந்து பறந்து சண்டை போடுவது நல்ல காமெடி.(எந்த ஆங்கிலப்படத்திலிருந்து உருவுனாங்களோ?)

பாடி பில்டராக வரும் வில்லன்கள் தமிழ் சினிமாவில் மட்டும் ஃபைட் போடும்போது அதை கிழிப்பது ஏனோ?கழட்டினால் போதாதா?(கோபமா இருக்காங்களாம்)

ஒரு கொள்கை விளக்கப்பாடலில் டாப் ஆங்கிளில் இந்தியா மேப் போல் அணி வகுப்பது கிளாப்ஸ் அள்ளுகிறது.

மன்னவரே மந்திரரே பாட்டுக்கு ஆடுபவர் ஒரு டான்ஸ் மாஸ்டராக இருக்கவேண்டும்,பட்டையை கிளப்பி இருக்கிறார்.

கேப்டன் வருவது தெரிஞ்சதும் மன்சூர் அலிகான் காட்டும் பதட்டமும்,நெளிவும்,குழைவும் டாப்.


புலன் விசாரனை படத்தில் சுவரில் பிணங்களை வைத்த சீன் அதிர்ச்சியை கிளப்பியது போல் இதிலும் ஒரு சீன் உண்டு.அது சுவராஸ்யமாக இருந்தாலும் படத்தின் கதைக்கு தொடர்பில்லை.இடைவேளை வரை வரும் காட்சிகளை பார்க்காமல் இருந்தாலும் படம் புரியும்,அந்தளவுக்கு படத்தின் முன் பாதி கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஓடுது.




http://www.findnearyou.com/moviegallery/Viruthagiri/Viruthagiri_3081.jpg

படத்தில் கேப்டன் கொன்னு கொலையெடுக்கும் பஞ்ச் டயலாக்ஸ்

1. அண்ணே,நீங்களா? வர மாட்டீங்கன்னு நினைச்சோம்,வந்துட்டீங்களே?

நான் வரக்கூடாதுன்னுதான் எல்லாரும் நினைக்கறாங்க.ஆனா காலம் என்னை வர வெச்சுடுச்சு. ( அந்த காலத்தின் தலையில் இடி விழ)

2. ஃபோன்ல டவர் இல்ல,என் வாய்ஸ் கேக்குதா?

உங்க வாய்ஸ்தான் டெல்லி வரை கேக்குதே.. (அவ்வளவு கட்டக்குரலா?)


3. எமன் கிட்டே மாட்டுனவன் கூட தப்பிச்சிடலாம் ,ஆனா விருதகிரிக்கிட்டே மாட்டுனவன் தப்பிக்கவே முடியாது. (ஆடியன்சை சொல்றாரோ?)

4. நான் பஞ்ச பூதத்தோட மொத்த உருவம்டா..(மொத்தமான உருவம்னு சொல்லுங்க)

5. அரசாங்கத்துக்கு எதிரா நீ இருக்கே

அது எனக்கு பழக்கமானதுதான்

தப்பு பண்றீங்க.       தப்பு பண்றவங்களுக்கு எதிராத்தானே... (தத்துவமாம்)

6. எல்லா சூழ்நிலையிலும் நான் தாழ்வா இருப்பேன்,ஆனா தாழ்ந்து போக மாட்டேன். (மொத்தத்தில எங்களை வாழந்து போக விட மாட்டீங்க)

7.வாழ்க்கைங்கறது ஐஸ்கிரீம் மாதிரி,அது உருகறதுக்குள்ள நாம அதை சாப்பிட்டடனும்,புகழைத்தேடி நாம போகக்கூடாது,நம்மைத்தேடி புகழ் வரனும்.(இந்த எஸ் எம் எஸ் உங்களுக்கும் வந்துடுச்சா?)

8. என்னைப்பத்தி தெரியும் இல்ல,பேச்சு மூச்சு இல்லாம கோமால கிடக்கறவனைக்கூட விசாரனை பண்ணி உண்மையை வரவழைக்கறவன் நான். (உங்களைப்பத்தி தெரிஞ்சிருந்தா இப்படி வந்து மாட்டுவோமா?)

9. இருட்டுல கூட நிழலை கண்டுபிடிக்கறவண்டா நானு.கண் வெச்சாலும் சரி,GUN வெச்சாலும் சரி,என் குறி தப்பாது
(உங்க குறி ஆடியன்சா?)

10.  நாம கூட்டணி ,அவன் தனி.

இதற்கு கேப்டன் குடுத்த ப்திலடி 10 நிமிஷம் ஓடுது,காது வலி வந்ததால சரியா வசனம் கேட்கலை).

படத்தில் காமெடி காட்சிகள் இல்லாத குறையை கேப்டனே தீர்த்து வைக்கிறார்
அவர் பஞ்ச் டயலாக் என நினைத்து பேசும் எல்லாமே காமெடி தான்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ்சில் தரைமட்டமாக வீழ்ந்து கிடப்பவர் 2 முஷ்டிகளை மட்டும் ஊன்றி அப்படிய்யே வீறு கொண்டு எழுவார் பாருங்கள்..அட அட அடா  (மனசாட்சியே இல்லையா ஸ்டண்ட் மாஸ்டர்?)

வசனகர்த்தாவின் பெயர் சொல்லும் காட்சிகள்

1.குற்றம் நடந்த பிறகு பாதுகாப்பு தர்றது பெரிய விஷயம் இல்லை.குற்றம் நடப்பதற்கு முன்னாலயே புரொடக்‌ஷன் தர்றதுதான் போலீஸோட வேலை.

2. குளத்துல நீச்சல் பழகுனவன் ஆத்தை கண்டு பயப்படுவான்,ஆத்துல நீச்சல் பழகுனவன்  கடலைக்கண்டு பயப்படுவான்.கடல்ல நீச்சல் பழகுனவன் எதைக்கண்டும் பயப்பட மாட்டான்.

3. போட்டி போடற அளவைத்தாண்டி பொறாமைப்படற ஸ்டேஜ்க்கு நம்ம இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுல சைன் பண்ணீட்டாங்க.

4.  எதுக்குப்பிரச்சனை,அவங்களைத்திரும்பி வரச்சொல்லிடலாமா?

திரும்பி வர்றவன் நம்ம ஸ்டூடண்ட்ஸ் இல்லை,மத்தவங்களை திரும்பி பார்க்க வைக்கறவன் தான் உண்மையான ஸ்டூட்ண்ட்ஸ்.

5. அடிமாடுங்க காணாமப்போனாக்கூட கேக்க ஆள் இருக்கு,ஆனா அரவாணிங்க காணாமப்போனா கேக்க ஆள் இல்லை.

6.  அட,ஸ்டேஷன்ல கேஸே இல்லைன்னு கவலைப்படற நேரத்துல ஒரு கேஸே நடந்து வருதே,,இன்னைக்கு மடக்கிட வேண்டியதுதான்.

7. போலீஸாய்யா நீங்க எல்லாம்?யார் வந்து புகார் குடுத்தாலும் அவங்களுக்கு ஏற்பட்டிருக்கற நஷ்டத்தைத்தான் பார்க்கனும்,உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை பார்க்கக்கூடாது.

8. பைப் மட்டும்தான் போட்டாங்க,தண்ணீர் வர்லை.

பைசா வாங்கிட்டு  ஓட்டு போட்டா பைப் மட்டும்தான் வரும்.

9. மத்தவங்க முடியற தூரம் வரை மட்டும்தான் ஓடுவாங்க..ஆனா நான் முடிக்கற தூரம் வரை ஓடுவேன்.

10. சன் டி விக்காரங்க படம் எடுத்தா அந்தப்படம் வேற எங்கேயும் டி வி டி கிடைக்க மாட்டேங்குது,ஆனா மத்தவங்க எடுத்தா படம்ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி டி வி டி ரிலீஸ் ஆகிடுது, இது என்ன மர்மனே புரியல.

11. இன்னைக்கு ஆளுங்கட்சிப்போலீஸா இருக்கறவங்க நாளைக்கே எதிர்க்கட்சி போலீஸா ஆக ரொம்ப நாள் ஆகாது,

12. தண்ணி பிடிக்க வந்த பொம்பளையும் ,தண்ணி அடிக்க வந்த ஆம்பளையும் சணடை போடாம போனதா சரித்திரமே இல்லை.( SMS JOK)

13. அரசாங்கத்துல வேலை செய்யறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே,அரசாங்கமே உங்க கைல வந்தா?

14. நான் எந்தத்தப்பும் பண்ணலை.

தப்புப்பண்ற எல்லா மோசடிக்காரங்களும் தர்ற முத ஸ்டேட்மெண்ட் இதுதானே..

15.சட்டம் உனக்கு வார்த்தையாத்தான் இருக்கு ,எனக்கு வாழ்க்கையாவே இருக்கு.

16.பணம் வர்ற வழி எல்லாம் நான் போறதில்லை,ஆனா நான் போற வழி எல்லாம் பணமா வருது. (இது வில்லன் பன்ச்)

17, உள்ளூர்லயே சம்பாதிக்க நினைக்கறவனுக்கு ஒரு மொழி தெரிஞ்சிருந்தா போதும் ஆனா உலகத்தையே ஜெயிக்க நினைக்கறவன் எல்லா மொழியையும் கத்துக்குவான்.

18. பசிக்கு இரை தேடற சிங்கத்தோட வேகத்தை விட உயிரைக்காப்பாத்திக்கற மானோட வேகம் ஜாஸ்தியாத்தான் இருக்கும்.


இது போக கேப்டனின் காமெடி சீன்கள்

1. ஆறு குண்டுகளே போட முடியும் ரிவால்வரில் தொடர்ச்சியாக 18 முறை சுடுவது.

2. ஒரு கையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டே இன்னொரு கையில் அசால்ட்டாக சுடுவது. (ரிஃப்ளக்‌ஷன் ஃபோர்ஸ் வராதா/)

3. மனோகரா படத்தில் வருவது போல் இரும்புச்சங்கிலியை உடைத்து தப்பிப்பது.

இது போக அருண் பாண்டியன் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி வசனத்தை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் ரிப்பீட் செய்கிறார்.

வாட் ஈஸ் யுவர் பிராப்ளம்?  உங்க பிரச்சனை தான் என்ன? (இந்தப்படத்துக்கு வந்ததுதான்).

இடைவேளைக்குப்பிறகு வரும் முதல் சீனில் ஃபோட்டோகிராஃபர் உள்ளேன் ஐயா சொல்லுகிறார்.

இயக்கம் விஜய்காந்த்தா பினாமியா தெரியவில்லை, விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் விமர்சனம் - ஓக்கே

ஏ செண்ட்டர்களில்  34 நாள் (அதுக்குள்ள பொங்கல் வந்துடுமே)
பி செண்ட்டர்களில் 20 நாட்கள், சி செண்ட்டர்களில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை ஓடும்.


டிஸ்கி 1- 

சித்து + 2 சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

Friday, December 10, 2010

சித்து + 2 சினிமா விமர்சனம்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/11/siddhu2-oc22-2009.jpg
இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் பெற்ற கே பாக்யராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கும் படம்.
சக்கரக்கட்டி என்ற முதல் படம் ஓடாவிட்டாலும் நடிப்பு,நடனம் என கலக்கிய சாந்தனுவின் 2 வது படம்.

முந்தானை முடிச்சு,இது நம்ம ஆளு,மவுன கீதங்கள் என்று திரைக்கதையில் வித்தை காண்பித்தவரும் இவர்தான்.வேட்டியை மடிச்சுக்கட்டு,என் ரத்தத்தின் ரத்தமே ,ஞானப்பழம் என சறுக்கியவரும் இவர்தான்.

பிளஸ் 2 ரிசல்ட் ஃபெயில் என்பதால் ஊரை விட்டு ஓடி வரும் 2 பேர் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்வில் இணைவதுதான் கதை.

முற்போக்குவாதி என பெயர் பெற்ற குமுதம் உதவி ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி ஏன் இந்த மாதிரி பிற்போக்குத்தனமான கதையை தேர்ந்தெடுத்தார் என புரியவில்லை.அதே போல் தொட்டால் தொடரும் என்ற அற்புதமான காதல் கதையை கொடுத்த பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப்படத்தின் திரைக்கதையில் பணி புரிந்தும் அங்கங்கே தடுமாறுவது ஏன்?

முதலில் இந்தக்காலத்தில் ஐ ஏ எஸ் எக்சாமில் ஃபெயில் ஆனால் கூட யாரும் கவலைப்படுவதில்லை.வெறும் பிளஸ் டூ ஃபெயிலுக்கு யாராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா?ஹீரோயின் கால் ஆண்டு,அரை ஆண்டு தேர்வில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தவர்,ஏதோ மிஸ்டேக்கில் ஃபெயில் என தவறான தகவல் வந்ததும் ஊரை விட்டு  ஓடுவாரா?அடிப்படையான இந்தக்கேள்விகள் மொத்தப்படத்தையே ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.

சாந்தனு சக்கரக்கட்டியில் ரொம்ப இயல்பாக நடித்தார்.ஆனால் இந்தப்படத்தில் சொந்த அப்பாதானே டைரக்டர் என்ற தெனாவெட்டுடன் நடித்திருக்கிறார்.அது தெள்ளத்தெளிவாக ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

புதுமுகம் சாந்தினி நல்ல அறிமுகம்தான்.ஆனால் அவரை லட்டு ஃபிகர் என அள்ளிக்கவும் முடியல.அட்டு ஃபிகர் என தள்ளிக்கவும் முடியல.ஆனால் நடிப்பில் புதுமுகம் போல் தெரியாத அளவு நல்ல பர்ஃபார்மென்ஸ்.ஆனால் அவர் ஜோதிகாவின் தங்கை மாதிரி பல காட்சிகளில் நடந்து கொள்கிறார்.50,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்.ஓவர் ஆக்டிங்க்கை குறைத்தால் முன்னேறலாம்.

ஹீரோ அறிமுகக்காட்சியில் நல்ல காமெடி.போலீஸில் மாட்டிக்கொண்ட ஹீரோ அட்ரஸ் சொல்லும்போது ஏதோ பழனி லேகிய டாக்டர் அட்ரஸ் சொல்லி கலாய்ப்பதும்,அது தெரியாமல் நெல்லை சிவா அவரை விட்டு விடுவதும் நகைப்பு.

ஓப்பனிங்க் சாங்கில் சாந்த்னு ரொம்ப அருமையாய் நடனம் ஆடி இருக்கிறார்.நடனத்தில் விஜய்க்கு நிகராய் பெயர் எடுக்க வேண்டும் என்ற அவரது துடிப்பு ஒவ்வொரு அசைவிலும் ,டான்ஸ் ஸ்டெப்பிலும் தெரிகிறது.
அந்தப்பாடலில் வரும் முகம் தெரியாத ஒரு ஃபிகரின் இடை அழகு டாப்.ஃபேஷன் என நினைத்து அந்தப்பாடலில் சாந்தனு போட்டிருக்கும் பெல்ட் சகிக்கலை.



ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளும் ஹீரோ- ஹீரொயினிடம் ஒரு ஃபிகர் கம்ப்பெனிக்கு ரேட் பேசுவதும்,ஹீரோவுக்கு ரூ 15,000 பணமும்,ஹீரோயினுக்கு ரூ 10,000 பணமும் தருவதாக பேரம் பேசுவது தியேட்டரில் கலகலப்பை கிளப்பினாலும் மாபெரும் கலாச்சார சீர்கேடு.
 
அதே போல் ஹீரோவும் ஹீரோயினும் படகுக்குள் சும்மா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் ,ஹீரோ காலை ஆட்டிக்கொண்டிருப்பதால் வெளியிலிருந்து பார்க்க படகு ஆடுவதைப்பார்த்து போலீஸ் + ஆடியன்ஸ்  தவறாக நினைப்பது அக்மார்க் பாக்யராஜ் டச்.அதே போல் ஹீரோயினுக்கு ஹீரோ விடும் காகித ராக்கெட் மிஸ் ஆகி அவரது தங்கை (இவரும் சுமார் ஃபிகரே)மீது விழுவதும் அவர் பதிலுக்கு ஹீரோவுக்கு ரூட் விடுவதும் ஜாலி கலாட்டா.


படத்தில் வரும் என்கவுண்ட்டர் இன்ஸ்பெக்டர் கேரக்டர் கதைக்கோ,திரைக்கதைக்கோ தேவையே இல்லை,சும்மா இடைவேளை ட்விஸ்ட்டுக்காகவும் ,ஒரு ஃபைட்டுக்காகவும் வலிய திணிக்கப்பட்டு இருக்கிறார்.அதே போல் ஹீரோயினின் மாமாவாக வரும் கேரக்டர் அசட்டுத்தனமாய் ஹீரோயினை லவ் பண்ணுவதை பிளாக் அண்ட் ஒயிட் ஃபிளாஸ்பேக்குடன் சொல்ல வேண்டுமா?வழக்கமாக பாக்யராஜ் படங்களில் தேவையில்லாத கேரக்டரே வராது,இது விதி விலக்கு .

ஒரு சீனில் ரெட் & ரெட் காஸ்ட்யூமில் ஹீரோயின் சோபாவில் படுத்திருக்க அதை ஹீரோ ரசிப்பது ஒளிப்பதிவாளருக்கு பெயர் சொல்லும் சீன்.
ஒரு குடோனில் ரவுடிகள் கூட்டம் இருப்பதும் அவர்களுடன் ஹீரோ சண்டை போடுவதும் படு செயற்கை.ஒவ்வொரு முறை ஹீரோயின் ஹீரோவிடம் தனது ஃபிளாஸ்பேக்கை சொல்ல விழையும் போதும் ஹீரோ தூங்கிவிடுவது செம காமெடி.

ஏழைக்கேத்த எள்ளுரண்டை, 2 இட்லி ஒரு வடை ,மெது வடையா?மசால் வடையா?போன்ற வசனங்களை தனது மகன் பேச அப்பா கேட்டுக்கொண்டு இருக்கிறாரே என நமக்குத்தான் கூச்சமாக இருக்கிரது,சாந்தனு சர்வசாதாரனமாக பேசுகிறார்.
பாக்யராஜ் படங்களில் பொதுவாக சொல்லப்படும் குறை இதிலும் உண்டு.அதாவது ஒரு கேரக்டரை பற்றி ஒருவர் சொல்வதும் அதை ஒளிந்திருந்து மற்றவர் கேட்டு திருந்துவதும் ரொம்ப நாடகத்தனம்.

வில்லனின் மகளை ஸ்கூலில் திட்டிய ஆசிரியர் வாயை நிஜமாகவே தைப்பது காதில் பூ சுற்றும் வேலை,ஹீரோ ஹீரோயினின் பக்கத்து வீட்டுக்கு குடி வருவது ,அவர் மனதில் இடம் பிடிக்க முயல்வது எல்லாம் அரதப்பழசான சிச்சுவேஷன்ஸ்
தூறல் நின்னு போச்சு பட பாடலான என் சோகக்கதையை கேளு தாய்க்குலமே பாட்டு ரீ மிக்ஸ்சாக ஒலிக்கும்போது அதற்கு பாக்யராஜ் அளிக்கும் விளக்கம் கலகல.சாந்தனு “டான்ச் ஆட வாங்க,உங்க எக்சசைஸ் பார்த்து மக்களுக்கு ரொம்ப நாள் ஆச்சாம் என கலாய்ப்பது செம.இந்தக்காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டது ஒரு தந்தையாக மகனுக்கு ஆற்றும் உதவி.



அந்தப்பாட்டில் கரகாட்டக்காரியாக வரும் ஃபிகர் சூப்பர் சரக்கு.திருவிழாவில் தீவிரவாதி வைத்த டைம்பாம்பை ஹீரோ அகற்றும் சீன் விஜய்காந்த் படத்துக்கு வந்து விட்டோமோ என எண்ண வைக்கிறது.ஹீரோயினின் மாமாவாக வரும் கேரக்டர் ஒரு சீனில் பாம்பை கடித்தே கொல்வது அருவெறுப்பு.பாய்சன் பாட்டிலை ஒரு சீனில் உடைத்த ஹீரோயினை ஹீரோ பளார் என அறைகிறார்,அது என்ன காணக்கிடைக்காத சீமைச்சர்க்கரையா?ரூபாய்க்கு 4 பாக்கெட் எலி மருந்து ஊரில கிடைக்குமே?


வசனகர்த்தா டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆன இடங்கள்

1.  கைல எவ்வளவு  வெச்சிருக்கே?

37 ரூபாவும் கொஞ்சம் சில்லரையும்.

37 ரூபாயே சில்லரைதான்.

2. நீ எந்த சப்ஜெக்ட்ல வீக்?       ஹி ஹி படிக்கற எல்லா சப்ஜெக்ட்லயும்.

3. யோவ்,வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா?

இல்லை 2 பேருமே சொல்லாம வந்துட்டோம்.

4. ஹீரோயின் - எனக்கு பயமா இருக்கு.

ஹீரோ - என்ன பயம்?

ஹீரோயின் - உன்னை தனியா விட்டுட்டு போறேனே,நீ பயந்துக்குவியோன்னு.

5.அவ உனக்கு ஆண்ட்டி மாதிரி இருக்கா,அவ கிட்டே போய் வழியறியே...

சோ வாட்....?கத்துக்கறேன்.


6. பிளாட்ஃபார்ம் கடைல  எச்சில் பிளேட் கழுவறேனேன்னு கவலைப்படாதே,இன்னும் 3 மாசத்துல....

நல்ல கவுரவமான வேலைல இருப்பியா?

ம்ஹூம்,சரவணபவன்ல கழுவற அளவு முன்னேறிக்காட்டறேன்.

7.  யாரு ஃபோன்ல?டி ஜி பியா?       இல்லை சார்.     பின்னே சி எம்மா?

சார் ,நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா?


8.என்னை எப்படியும் சாகடிக்கப்போறே,பாலிடால்ல சாராயத்தைன் கலந்து குடுத்துடு,கிக்கோட சாகறேன்.

படத்தில் பொறுமையை சோதிக்கும் சீன்கள் அதிகம்.ஒரு காட்சியில்

ஹீரோ - எல்லாத்தையும் சாகடிக்கறதை விட நான் செத்துடறேன்.

ஹீரோயின்  - முதல்ல நாந்தான் சாவேன்.

ஆடியன்ஸ் - ஏய்யா எங்களை சாகடிக்கறீங்க?

எதிர்பர்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39
எதிர்பர்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

ஏ செண்ட்ட்ரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள் ,சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்.

டிஸ்கி - 1 

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

ஈரோடு தனியார் வங்கியில் நடக்கும் செக்ஸ் மோசடிகள்

http://blog.beliefnet.com/faithfunnies/imgs/bank_trust.gif
நீங்க காரோ,பைக்கோ பிரைவேட் பேங்க்ல லோன்ல வாங்கி இருக்கீங்களா?
அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ நீங்க அவசியம் படிக்க வேண்டிய
விஷயம் இது.

10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆன்லைன் வசதி வராத போது
லோன் வாங்கும்போது முன் தேதி இட்ட காசோலைகள் வாங்குவார்கள்.
PDC (POST DATED CHEQUES) என ஆங்கிலத்தில் சொல்வார்கள்,தவணைத்
தேதியைப்பொறுத்து  மாதாமாதம்
1ந்தேதியோ அல்லது 10ந்தேதியோ பேங்க்கில் பணம் கட்ட வேண்டும்.
நாம் கொடுக்கும் செக் பேங்க்குக்கு 2ந்தேதியோ அல்லது 11ந்தேதியோ
கலெக்‌ஷனுக்கு வரும்.

ஆனால் இப்போது ஆன்லைன் வசதி வந்த பிறகு நிலைமையே தலைகீழ்.
1ந்தேதி உங்களுக்கு தவணைத்தேதி என்றால் அதற்கு முந்தின நாளே
பேங்க்குக்கு செக் அனுப்பப்பட்டு விடுகிறது.1ந்தேதி காலை 9.30
மணிக்கு உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் பண்னி பேலன்ஸ் பார்க்கும்போது
உங்கள் அக்கவுண்ட்டில் பணம் இருக்க வேண்டும்.நீங்கள் சாவகாசமாக
காலை 10 மணிக்கோ 12 மணிக்கோ பேங்க் வந்து பணம் கட்டினால்
ஏற்கனவே செக் ரிட்டர்ன் ஆகி இருக்கும்.

செக் ரிட்டர்ன் சார்ஜ் ரூ 500 வசூலிக்கப்படும்.இது நீங்கள் லோன்
வாங்கிய பேங்க்கில்,அக்கவுண்ட் வைத்த பேங்க்கில் ரூ 200 பெனால்டி
 வசூலிக்கப்படும்.

இப்போது நடந்த சம்பவத்தை சொல்கிறேன்.எனது நண்பர் ஒருவர்
ஈரோடு செஞ்சுரியன் பேங்க்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி
36 செக் லீவ்ஸ்ஸை கொடுத்து மாருதி கார் லோனில் வாங்கினார்.
சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் லோன் வாங்கினார்.

மாதாமாதம் 1ந்தேதி அவருக்கு டியூ டேட்.அவருக்கு எந்த மார்க்கட்டிங்க்
எக்ஸ்சிகியூட்டிவ்வும் ஒரு நாள் முன்பாக பணம் கட்ட வேண்டும் என
சொல்ல வில்லை.செக் 1ந்தேதி காலையே ரிட்டர்ன் ஆகி விட்டது.
இவர் காலை 10 மணிக்கு பணம் கட்டி விட்டார்.ஆனா நோ யூஸ்.

சோழமண்டலம் டி பி எஸ் பேங்க்கில் 1270 பேர் ஈரோடு பிராஞ்ச்சில்
 மட்டும் லோன் வாங்கி இருக்கிறார்கள்.
இது போக ஐ சி ஐ சி ஐ பேங்க்,ஹெச் டி எஃப் சி பேங்க்,சுந்தரம் ஃபைனான்ஸ்,ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ்,மஹேந்திரா &மஹேந்திரா ஃபைனான்ஸ்,இந்தஸ் இந்த் பேங்க்,அசோக் லைலேண்ட் ஃபைனான்ஸ் உட்பட ஈரோட்டில் மட்டும் 17 தனியார் வங்கிகள் உள்ளன.ஒவ்வொரு வங்கியிலும் சராசரியாக 1000 அக்கவுண்ட் என கணக்கு வைத்தாலும் 17000 அக்கவுண்ட் ஆச்சு. செக் ரிட்டர்ன் சார்ஜ் மட்டும் மொத்தம் ரூ எட்டரை லட்சம் வருகிறது.
பொதுமக்கள் பணம் வீணாக பறிக்கப்படுகிறது,


நேஷனலைஸ்டு பேங்க்கில் ரூ 80ம், சில வங்கிகளில் ரூ 180ம் பிடித்தம் செய்யப்படுகிறது.ஆனால் மற்ற பிரைவேட் பேங்க்கில் ரூ 500 சார்ஜ் போடப்படுகிறது.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.


நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்


1.நம் கணக்கில் பணம் இருந்தால் மட்டும் செக் குடுக்க வேண்டும்.அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ 1000 மட்டும் வைத்துக்கொண்டு பின் தேதி இட்ட காசோலையாக ரூ.50,000 ,ரூ.75,000 என தருவது தவறு.

2.பிரைவேட் பேங்க்கில் லோன் வாங்கும்போது மாதாமாதம் பணமாக கட்டி விடுகிறேன்.செக் தர மாட்டேன் என கறாராக கூறி விடவும்.

3. அப்போதைக்கு மார்க்கெட்டிங்க் எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் அவர்களுக்கு கிடைக்கப்போகும இன்செண்ட்டிவ்வுக்காக ஏதாவது கதை அளந்து விடுவார்கள்,நம்ப வேண்டாம்,அவர்கள் வாய் மொழியாக என்ன வாக்கு கொடுத்தாலும் அதை பேங்க் லெட்டர் பேடில மேனேஜர் சைன் பண்ணி ரிட்டர்ன் ஃபார்மில் கேட்கவும்.

4.தவணைத்தொகையை மாதாமாதம் நீங்களே பேங்க்கில் நேரடியாக போய்க்கட்டவும்.கலெக்‌ஷன் எக்சிகியூட்டிவ் வீட்டுக்கு வந்தார் ,கொடுத்தேன் என சொல்ல வேண்டாம்,பின்னால் என் ஓ சி (NO OBJECTION CERTIFICATE) வாங்கும்போது கலெக்‌ஷன் சார்ஜ் என ஒரு விசிட்டுக்கு ரூ 100 வசூலிப்பார்கள்.நியாயம் கேட்டால் எல்ல கண்டிஷனுக்கும் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணி இருக்கிறீர்கள் என்பார்கள்.

5.லோன் வாங்கும்போது செக்யூரிட்டி செக் லீவ்ஸ் என பிளாங்க்காக 4 செக் லீவ்ஸ் வாங்கி வைப்பார்கள்,நீங்கள் டியூ சரியாக கட்டத்தவறினால் அந்த் பிளாங்க் செக்கில் ரூ 2 லட்சம் ரூ 3 லட்சம் என ஃபில் பண்ணி கலெக்‌ஷன் போட்டு அது ரிட்டர்ன் ஆனதும் செக் ரிட்டர்ன் கேசில் சிக்க வைப்பார்கள்.

6.தவணைத்தேதி அரசாங்க விடுமுறையாக இருந்தால் அதற்கு முந்தின நாளே பேங்க்கில் பணம் கட்டி விடவும்.

7.இத்தனை பிரச்சனை எதற்கு என நினைப்பவர்களும் ,கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்வடைக்கு ஏற்ப மானம் மரியாதை உள்ளவர்கள் லோன் வாங்கவும் வேண்டாம்,லோல் படவும் வேண்டாம்,நம்மிடம் என்ன இருக்குதோ அதற்குள் வாழ்க்கையை ஓட்டவும்.

டிஸ்கி 1- டைட்டிலில் உள்ள செக்ஸ் மோசடி என்பது CHEQUES மோசடி என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது,SEX  மோசடி என எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க

டிஸ்கி 2- தனியார் வங்கிகளைப்பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி பேசறியே,கம்பெனியின் ரூல்ஸ் & ரெகுலேஷன் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று மிரட்ட நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை ,நானும் ஒரு தனியார் வங்கி ஊழியனே..



டிஸ்கி 3 - என்னை மிரட்ட ஆஃபீஸ் வருபவர்கள் கொஞ்சம் டீசண்ட்டாக டிரஸ் பண்ணி வரவும்.வருபவர்கள் பெரும்பாலும் லுங்கி அணிந்து வருவதால் எனக்கு ஆஃபீசில் அவ்ர்களுடன் உரையாட கூச்சமாக இருக்கிறது.

Thursday, December 09, 2010

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்

http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SWwMWxbhqFI/AAAAAAAAGPM/cbcRgVDzdkQ/s400/radha_krishna_throne_close.jpg
1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்

  மணப்பெண்
- யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
                                   யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
                                     கும்மி அடிக்க வந்தீங்களா?

சிரிப்புப்போலீஷ் ரமேஷ்
- எனக்குப்பிடித்த டாப் 10 பெண்கள் அப்படிங்கற
தலைப்புல உன் கிட்டே அரை மணி நேரம் பேசப்போறேன்.


  மணப்பெண் - இதென்ன உங்க பிளாக்னு நினைச்சீங்களா?எதை
எழுதுனாலும் படிக்க ஆளுங்க வர்ற மாதிரி இங்கேயும் ஆளுங்க வருவாங்கன்னு அளக்க ஆரம்பிச்சிட்டீங்களா?


2. நல்ல நேரம் சதீஷ் -

மாமனார் -மாப்ளே,முதலிரவுக்கு நல்ல நேரம் பாருங்கன்னா சிஸ்டத்தை
ஆன் பண்ணி நெட் கனெக்‌ஷன் குடுக்கறீங்களே?

சதீஷ் - மாமா உங்களுக்குத்தெரியாதா?என் பிளாக் பேரே நல்ல நேரம்தான்.
அதனால அதை ஓப்பன் பண்ணி பார்த்தாலே நல்ல நேரம் பார்த்த மாதிரிதான்.
முதல்ல என் பிளாக்கை ஓப்பன் பண்ணி பார்க்கறேன்,ஹிட்ஸ் நிறைய வந்தா
மட்டும்தான் இன்னைக்கு முதலிரவு..இல்லைன்னா எல்லாம் கேன்சல்.



3. ஈரோட்டு லொள்ளு பதிவர் நண்டு நொரண்டு

மணப்பெண்  - அத்தான் ,என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..

நான் ஒரு லாயர்,அதனால உன்னோட வாதம் (ARGUMENT)வேணா பண்றேன்,30 பவுன் போட்டே ஆகனும்னு பிடிவாதம் பண்றேன்,உங்கப்பா கிட்டே சீர் செனத்தி க்ளியர் ஆனாத்தான் முதல் இரவுன்னு வாக்குவாதம் பண்றேன்.லேட்
பண்ணுனார்னா கோர்ட்ல வெளிநடப்பு பண்ற மாதிரி முதலிரவு அறையை
விட்டு வெளியேறி முடக்குவாதம் பண்றேன்,ஆனா ஆசீர்வாதம் பண்ண மாட்டேன்.

4.  பன்னிக்குட்டி ராம்சாமி - என்னடி ,உன் கழுத்துல தாலி ஏறுனதும் உங்கப்பன் வீங்குன வாயன் ஆள் அட்ரஸையே காணோம்?இப்படி ஓடிப்போய்ட்டா சீர் செனத்தியை நான் யார் கிட்டே வசூல் பண்றது?ங்கொக்காமக்கா,என்னை என்ன இளிச்சவாயன்னு
நினைச்சானா?அய்யோ நாராயணா,நாட்ல இந்த எழில் அதிபருங்க தொல்லை
தாங்க முடியலடா சாமி..மாநிறமா இருக்கறவளுக எல்லாம் உலக அழகி ரேஞ்சுக்கு பந்தா பண்றாளுங்க..

மணப்பெண்  - அத்தான்,அதெல்லாம் காலைல பேசிக்கலாம்,இப்போ லைட்டை ஆஃப் பண்ணுங்க.

'முடியாது..இன்னும் ஒரு வாரத்துக்கு முல்லைச்சரம்கற பொண்ணுக்கு என்னை இன்சார்ஜ்ஜா போட்டிருக்காங்க..நான் அங்கே போறேன்.

மணப்பெண்  -அந்தப்பெண்ணை கவனிச்சா உங்க சொந்தப்பொண்டாட்டியை யார் கவனிப்பா?

ஆ எகிருதுங்கோ எகிருதுங்கோ

5.. சங்கவி - டியர்,நான் 2 பிளாக் (BLOGS) வெச்சிருக்கேன்.அதைத்தான் யாரோ உன் கிட்டே  திரிச்சு 2 பிளாக்கிகளை( BLOCKY) வெச்சிருக்கறதா திரிச்சு  சொல்லீட்டாங்க.கறுப்புப்பொண்ணுங்களை நான் ஏறெடுத்தும் பாக்கறதில்லை.இதுக்குப்போய் கோவிச்சுக்கிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி? பிகு பண்ணாம வா,இல்லைன்னா அஞ்சறைப்பெட்டில உங்க
குடும்பத்தை பற்றி புட்டு புட்டு வெச்சுடுவேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILx9r6__wECfg8MzDfBkZWBaAs_AkUvaC35fX8hQRCwDwb-ZYkkptYs8ZG5DM6NRmIxSe_wHRK93mpCncM6EJeIsa6_mGjpGRTETQcdso0IsQ_fuX0d7GxkeSMKfO1LHDsoZU_v4gMVol/s1600/amy_jackson_280x450_6660a.jpg
6. கோமாளி செல்வா - ஹைய்யா,வடை எனக்குத்தான்...வடை எனக்குத்தான்.

மணப்பெண் -யோவ்,இங்கே பால் ,பழம்,ஸ்வீட்ஸ் மட்டும்தான் இருக்கு,வடை ஏது?

உனக்குத்தெரியாது,பதிவுலகில்நான் ஒரு வடை வாங்கி வங்கி.எனக்கு இணையா ஒரு பயலும் வட வாங்க விடவே மாட்டேன்..

சவுந்தர் - அய்யய்யோ,வட போச்சே...

செல்வா -இங்கேயும் வந்துட்டியா,பிச்சுப்பிடுவேன் பிச்சு.

சவுந்தர் - எதை?வடையையா?


7. டெரர் பாண்டியன் - அன்பே,இந்த மஞ்சத்தில் வந்து அமர்.உன் இடை அழகும்,
நடை அழகும் ,உடை அழகும் என்னை சொக்க வைக்கிறது.

மணப்பெண்  -அத்தான்,தமிழைக்கொல்லாதீங்க,இங்கே வந்து உங்க கவிதைக்குப்பையை அள்ளாதீங்க. பதிவுலகில் அடிக்கடி காணாமப்போயிடற மாதிரி இங்கேயும் எஸ்கேப் ஆகப்பாக்காதீங்க..தினமும் என் பக்கத்துலயே இருக்கனும்.பை த பை உங்க பேரைப்பார்த்ததும் நீங்க திகிலா இருப்பீங்கன்னு நினைச்சேன்.

நான் கூட உன் பேரைப்பார்த்ததும் ஷகீலா மாதிரி கும்முன்னு இருப்பேன்னு
நினைச்சேன்.உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகளே வர்லை.




மணப்பெண்  -அதெப்பிடி வரும்?பதிவுலகில் இதுவரை 1675 கமெண்ட் போட்டிருக்கீங்க,என்னைப்பற்றி ஒரு கமெண்ட் சொல்லசொன்னா தடுமாறுறீங்க,.....

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட்- டியர்,நீ கட்டில்ல படுத்துக்கோ,நான்
தரைல படுத்துக்கறேன்.

மணப்பெண்  -ஏன்?

பெண்களை நான் மதிக்கறேன்,அவங்களை ஆண்களை விட உயர்ந்த இடத்துல
 வைக்கனும்னு ஆசைப்படறேன்

மணப்பெண்   -அது சரிதான்,ஆனா முதல் இரவுன்னா ஒரே கட்டில்லதானே படுப்பாங்க?

ஸாரி,நான் ரொம்ப டீசண்ட்,எனக்குன்னு ஒரு இது வெச்சிருக்கேன்.(எது?)
என் பிளாக்கிற்கு கமெண்ட் போட வர்றவங்களையே குளிச்சிட்டு நீட்டா
டிரஸ் பண்ணிட்டு வர்றவங்களைத்தான் அலோ பண்றேன்.எனக்கு ஒழுக்கம்,
டிசிப்ளின்தான் முக்கியம்.

 மணப்பெண்   - சுத்தம்,நமக்கு வாரிசு உருவான மாதிரிதான்



9. கலியுகம் தினேஷ்  - டியர்,நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு,இனி தினம் உனை வதம் செய்யப்போகிறேன்,ஒரெ மாதத்தில் சதம் அடிக்கப்போகிறேன்.


மணப்பெண்  -யோவ்,நீங்க பிளாக்ல எழுதுன 37 கவிதைகள்ல 48 தடவை வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணி இருக்கீங்க,டைரில எழுதுன 189 கவிதைகள்ல 214 தடவை வதம் வருது. அப்பவே உங்களுக்கு வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணவேணாம்னு தடா வந்ததே...இங்கேயும் ஆரம்பிச்சுட்டீங்களா?


10. முறைமாமன் கார்த்திக் - டியர் ,இதுதான் என் மாமன் பொண்ணு.


மணப்பெண்  -சரி,இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?


நான் எங்கே போனாலும் மாமன் பொண்ணை விட்டுட்டு  வர மாட்டேன்,அவளை கை விட மாட்டேன்னு சத்தியம் செஞ்சு குடுத்திருக்கேன்.


மணப்பெண்  -அப்போ அவளையே கட்டிக்க வேண்டியதுதானே..என் உசுரை ஏன் எடுக்கறீங்க?




டிஸ்கி 1 - சொல்லவே தேவை இல்லை மேலே கண்டவை அனைத்தும் கற்பனையே என்று,உங்களுக்கே தெரியும் அட்ரா சக்க என்றால் அதற்கு  போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் என.


டிஸ்கி 2 - இத்தனை நாளாக (177) எனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு இல்லாமல் இருந்தது.நண்பர்கள் யாராவது இணைத்தால்தான் உண்டு.நான் யாருக்கும் ஓட்டும் போட முடியாது,இண்ட்லியில் மட்டுமே அனைவருக்கும் ஓட்டு போட்டேன்,பலத்த போராட்டத்துக்கு பிறகு நேற்று ஓட்டுரிமை பெற்று விட்டேன்,அதற்கு உதவிய நல்ல நேரம் சதீஷ்க்கு நன்றி.இனி நானும் உங்களுக்கு ஓட்டு போடுவேன்.cp666 யூசர்நேம்.


டிஸ்கி 3 - இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.