Monday, November 22, 2010

பிரபல பதிவர்களின் பர்சனல் சேட்டிங்க்ஸை அம்பலமாக்கிய இணைய தளம்

















மெயிலில் மெசேஜ் அனுப்புவது,மின் அரட்டையில் ஈடுபடுவது எல்லாம் சேஃப் ,பர்சனல் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் ஒரு இணைய தளம் பிரபல பதிவர்களின் லவ் சேட்டிங்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.

1. உண்மைத்தமிழன் -

ஃபிகரு - சார்,என் கிட்டே ஒரு லாங்க் சைஸ் 2 குயர் நோட்டு குடுத்து விட்டு இருக்கீங்களே..எதுக்கு?அதை ரெக்கார்டு நோட்டா யூஸ் பண்ணிக்கவா?

உண்மைத்தமிழன் - அடிப்பாவி ,அது என் லவ் லெட்டர்.

ஃபிகரு - லவ் லெட்டர்னா 2 பக்கம் தானே எழுதுவாங்க?


உண்மைத்தமிழன் - நான்  ரெண்டரை மணி நேரம் ஓடற சினிமா  விமர்சனத்தையே 20 பக்கம் எழுதற ஆளு,25 வருஷம் ஒண்ணா வாழப்போற பொண்ணுக்கு அட்லீஸ்ட் 400 பக்கங்களாவது லெட்டர் எழுத வேணாம்?

2.கேபிள் சங்கர்

ஃபிகரு - சங்கர்,வழக்கமா எல்லா காதலர்களும் பீச்லயோ,கோயில்லயோதானே மீட் பண்ணுவாங்க?நீங்க மட்டும் ஏன் ஏதாவது ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்றீங்க?

கேபிள் சங்கர்  - ஏன்னா எனக்கும் சாப்பாட்டுக்கடைக்கும் ராசி அதிகம்.நான் ஒண்ணு மட்டும் முதல்லியே சொல்லிடறேன்,உங்கப்பா மட்டும் நம்ம காதலை எதிர்த்தா அவரை கொத்துபுரோட்டா பண்ணிடுவேன்.

ஃபிகரு - உங்களுக்கு எப்போ ஃபோன் பண்ணுனாலும் ஒரு லேடி ஃபோனை எடுத்து “சார் ஸ்டோரி டிஸ்கஷன்ல இருக்காரு”அப்படினு சொல்றாங்களே..அவங்க உங்க பி ஏ வா?

கேபிள் சங்கர்  - சுத்தம் ,அது என் செல் ஃபோன் ரிங்க் டோன்,சும்மா என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணீட்டு இருந்தா எனக்கு பிடிக்காது.

ஃபிகரு - சரி,சினிமா விமர்சனம் பண்றதுல நீங்க தான் நெம்பர் ஒன் அப்படினு சொல்றாங்களே?என் அழகை பற்றி விமர்சனம் பண்ணுங்க பாக்கலாம்?

கேபிள் சங்கர்  - என் எண்டர் கவிதைகள் படி.எல்லாமே எண்ட்டர்டெயின்மெண்ட் கவிதைகளாவும் இருக்கும்,அழகை வர்ணிக்கறமாதிரியும் இருக்கும்.உன் முகத்தை க்ளோசப்ல பார்க்கறப்ப பயமா இருக்கு.ஜூம் பண்ணி லாங்க் ஷாட்ல பார்த்தா பாஸ் மார்க் போடலாம்.


3.மங்குனி அமைச்சர்

ங்கொய்யால,உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப்போடு,பிடிக்கலைன்னா இண்ட்லில ஓட்டுப்போடு..மொத்தத்துல எனக்கு ஓட்டு விழுந்தா சரி..அட ச்சே பதிவு ஞாபகத்துலயே பேசிட்டேன். டியர் உனக்கு என்னை பிடிச்சிருந்தா என் வலது கன்னத்துல முத்தம் குடு,பிடிக்கலைன்னா இடது கன்னத்துல முத்தம் குடு.மொத்தத்துல எனக்கு முத்தம் கிடைச்சா சரி.வாரா வாரம் டாப் 20 ல நான் வந்தே ஆகனும்.பாக்கறவனுங்க எல்லாம் நொந்தே போகனும்.


4.பன்னிக்குட்டி ராமசாமி

என்னம்மா முறைக்கிறே?பெரிய பருப்பா நீ?நான் ஒரு பதிவு போட்டா 200 கமெண்ட்ஸ் 20 நிமிஷத்துல விழும்.நீ என்னடான்னா என் அழகைப்பற்றி ஒரு கமெண்ட் கூட அடிக்க மாட்டேங்கறே..எனக்கு மினி கட்டிங்க்னா பிடிக்கும்கறது உண்மைதான்,அதுக்காக இப்படி மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டுட்டு அலையக்கூடாது.இது ஆவறதில்லை.ஆனா இந்த மடம்  ஆகாட்டி சந்தை மடம்.. நான் சவுதி அரேபியா... அதனால அரேபியன் குதிரை மாதிரி நமீதா மாதிரி பொண்ணு தான் வேணும்.நீ என்னமோ பென்சில்ல கோடு போட்ட பல்பம் மாதிரி இவ்வளவு ஒல்லியா இருக்கறே?


5. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - ஸாரி டியர்,என்னால நைட் 7 மணிக்கு எல்லாம் பீச்க்கு வர முடியாது.ஆஃபீஸ் டைம் ல ஆஃபீஸ்க்கே வந்துடு.அங்கேயே எல்லாம் பண்ணிக்கலாம்.நான் பதிவு போடறது,கமெண்ட்ஸ் போடறது எல்லாமே ஆஃபீஸ் டைம் தான்.அவ்வளவு ஏன் நான் குளிக்கறது,சாப்பிடறது  எல்லாமே ஆஃபீஸ்டைம்லதான்.இதுல என்ன காமெடின்னா என்னை நம்பி எனக்கு டேமேஜர் அட ச்சே மேனேஜர்  போஸ்ட்டிங்க் குடுத்திருக்காரே எங்க முதலாளி  அவர நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.


6. பட்டாபட்டி - இங்கே பாரம்மா,நான் ஒரு ஃபாரீன் பதிவர்,இப்படி நீ தாவணியோட வந்தா என்னால லாவணி பாட முடியாது.நீ பீச்சுக்கு மிடியோட வா,நான் அண்டர் டிராயரோட வந்துடறேன்,ஜாலியா லவ் பண்ணலாம்..கேள்வி.நெட்ல எனக்கு 34வது ரேங்க்,அதுக்காக 34 வயசுப்பொண்ணை எல்லாம் லவ் பண்ண முடியாது.உன் தங்கச்சி இருந்தா கூட்டிட்டு வா..த்ரீ வே லவ் படத்துல வர்ற மாதிரி 3 பேரும் லவ் பண்ணுவோம்.

7.நல்ல நேரம் சதீஷ்

உன் ஜாதகப்படி உனக்கு இப்போதைக்கு மேரேஜ் ஆகற யோகம் இல்லை.அப்போ தைரியமா உன்னை லவ் பண்ணலாம்.இந்தா இந்த ராசிக்கல் மோதிரத்தை போட்டுக்கொ,நல்ல நேரம் நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவுமே நைட் 8 டூ 9 தான். சித்தோடு வாய்க்காமேட்டுக்கு தனியா வந்துடு.உன் பேரே மோஹனா அப்படினு கும்முனு இருக்கு,எனக்கு டைட்டில் ரொம்ப முக்கியம்.

8.கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இங்கே பாரம்மா ,நீ சொல்றதை எல்லாம் அப்படியே என்னால் ஏத்துக்கவே முடியாது.என் சொந்த பிளாக்லயே கமெண்ட்ஸ்சுக்கு மாடரேஷன் வெச்சு இருக்கேன்.அவனவன் பிளாக்ல கமெண்ட்ஸ் வராதான்னு ஏங்கறான்.ஆனா எனக்கு கமெண்ட்ஸ்ல கூட டீசண்ட்சி முக்கியம்.இந்த மாதிரி எல்லாம் முழங்கை தெரியறமாதிரி ஜாக்கெட் போடாதே,ஃபுல் ஹேண்ட் ஜாக்கெட் வாங்கித்தர்றேன்,அதை போட்டுக்கோ,எல்லாம் கவர் ஆகிடும்,எனக்கு டீசண்ட்தான் முக்கியம்.எட்டாம் நெம்பர் பஸ்ல  வழக்கம் போல மீட் பண்ணுவோம்.எல்லாருக்கும் அஷ்டமத்துல சனி.ஆனா எனக்கு மட்டும் ஏறுமுகம்.எட்டு எனக்கு ராசியான நெம்பர்,தமிழ்மணத்துல தொடர்ந்து 2 வாரமா 8வது இடம்,இந்த பதிவுல கூட எனக்கு 8வது இடம்,அவ்வளவு ஏன்? நீ கூட எனக்கு 8வது ஆள் தான்.

9. ம தி சுதா

டியர், வாங்க சினிமாவுக்கு போகலாம்

இரம்மா,சுடு சோறு சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

யோவ்,பதிவுலகுலதான் சுடுசோறுக்கு சீட் போட்டுடறீங்க..இங்கேயுமா?

10.இம்சை அரசன் பாபு

டியர் பாபு,எதுக்கு என் ஆள் காட்டி விரலை ஆராயறீங்க?வழக்கமா லவ்வர்ஸ்னா கண்ணை,உதட்டை,கன்னத்தை பார்ப்பாங்க..நீங்க டிஃப்ரெண்ட்டா இருக்கீங்களே...

இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம்.முதல்ல என் பதிவுக்கு ஓட்டு போட்டுட்டு வா,மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.ஓட்டு போட்டிருந்தா விரல்ல மை இருக்குமே..என்னை யாராலயும் ஏமாத்த முடியாது..நானே ஏமாந்தாதான் உண்டு.

டிஸ்கி 1- மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையே.இந்த மின் அரட்டையை வெளியிட்ட அந்த கேவலமான இணைய தளம் அட்ராசக்க தான்.எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்.பிரபல பதிவர்கள் அனைவரும் என நண்பர்கள் என்பதால் அவர்கள் யாரும் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.அவர்களது ரசிகர்கள்,நண்பர்கள் யாராவது மனம் புண்பட்டால் அதற்கு சாரி.இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளி வரும் ,ஊத்திக்கிச்சுன்னா கமுக்கமா இருந்துக்குவேன்.(வேற என்ன பண்ண முடியும்?)

டிஸ்கி 2 - எனது சேட்டிங்க் ஏன் வரவில்லை?என கேட்பவர்களுக்கு

1.சொந்த செலவில் யாராவது சூன்யம் வெச்சுக்குவாங்களா?

2. டைட்டிலை நன்கு கவனிக்கவும்.இது பிரபல பதிவர்களுக்கு மட்டும்,ஓட்டு பெறுவதில்,கமெண்ட்ஸ் பெறுவதில்,ஹிட்ஸ் கிடைப்பதில்,பதிவின் தரத்தில் இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்கள் என்னை விட முன்னணியில் உள்ளதால் நான் இதில் இடம் பெறவில்லை.

3.மேலும் நான் ஃபிகர்களுடன் கடலை போடுவதில்லை...எனக்கு வயசு இன்னும் அந்த அளவு ஆகலை.(ஜஸ்ட் 18)

Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

 
கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல?

சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்தப்படம்னே...

கவுண்டமணி - நாங்க எல்லாம் பார்த்து நொந்த படம்னு சொல்லு..

சுந்தர் சி - படத்துல பாட்டு,ஃபைட்டு,காமெடி,லவ்,ஆக்‌ஷன் அப்படினு எல்லா ஐட்டமும் இருக்கேண்ணே?

கவுண்டமணி - எந்தத்தமிழ்ப்படத்துல இதெல்லாம் இல்லாம இருக்கு.எல்லாருமே இதே மிக்சிங்க் தான் பண்றாங்க.அதெல்லாம் இருக்கட்டும்.நீ ஏன் தலை சீவறதே இல்லை?புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே?எந்த கேரக்டர் குடுத்தாலும் தாடியோட சுத்தறே?

சுந்தர் சி - அண்ணே,அதெல்லாம் ஒரு ஸ்டைலுண்ணே...

கவுண்டமணி - ஸ்டைலா...மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ..அது இருக்கட்டும்,டூயட் சீன் எடுக்கறப்போ பக்கத்துலயே குஷ்பூ பொண்ணும் இருந்துச்சாக்கும்?



சுந்தர் சி - எப்படிண்ணே கரெக்ட்டா சொன்னீங்க?

கவுண்டமணி - பின்னே, டூயட் சீன்ல கூட மூஞ்சியை உம்முன்னே வெச்சுக்கிட்டிருந்தியே...ரவுடி கேரக்டர்னா எப்பவும் உர்ருன்னே வெச்சிருக்கனும்னு உனக்கு எவன் சொல்லிக்குடுத்தான்?

சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...


கவுண்டமணி - நாஸ்தி

சுந்தர் சி - என்னண்ணே இப்படி சொல்லுறீங்க?

கவுண்டமணி - நீதானே ஒரு வார்த்தை சொல்லச்சொன்னே...

அட

சுந்தர் சி - திருந்தி வாழனும்னு நினைக்கற ஒரு ரவுடியை போலீஸ் விடறதில்லை ,ஏமாத்தி மறுபடி அதே வேலையை செய்ய வைக்குது,அதுல ஆதாயமும் அடையுது..ஹீரோயினோட அம்மாவை வெச்சுக்கிட்டிருந்த வில்லன் இப்போ ஹீரோயினையும் வெச்சுக்கனும்னு நினைக்கறான்..ஹீரோயின் அம்மாவுக்கு ஆப்பரேஷன்..பணம் வேணும்...ஹீரோயின் கிட்டே காசில்லை... இங்கே தான் வில்லன் கொக்கி போடறான்.ஹீரோயின் ஓக்கே சொன்னா பணம் கட்டப்படும்.ஹீரோ வர்றாரு...




கவுண்டமணி - போதும் நிறுத்து...இந்த  மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?


சுந்தர் சி - சரிண்ணே,வடிவேலு காமெடி படத்துல ஹை லைட் ஆச்சே,செம காமெடியா இருக்கே அதை பத்தி சொல்லுங்க...


சி.பி. - அண்ணே ஒரு நிமிஷம்...


கவுண்டமணி - டேய், யார்டா நீ .,2 பெரிய மனுஷங்க பேசறப்ப குறுக்கே பேசறது?முதல்ல உன் கூலிங்க் கிளாசை கழட்டு,மனசுக்குள்ள பெரிய அஜித்குமார்னு நினைப்பா..?


சி.பி. - அதைக்கழட்டுனா இன்னும் கேவலமா இருக்கும்னே ,பரவால்லியா?


கவுண்டமணி - ஓ இது வேறயா?சரி,இருந்துட்டு போகட்டும் வந்த மேட்டரை சொல்லிட்டு ஓடிப்போயிடு

சி.பி. - அண்ணே,படத்துல ரசிக்கற மாதிரி காமெடி டயலாக்ஸ் நிறைய இருக்கு,எனக்கு ஞாபகம் இருக்கறவரை சொல்றேன்..

கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை  லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..
 
படத்தின் ஹைலைட்ஸ் காமெடி வசனங்கள்


1.தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு.


உன் ஏரியா எதுன்னு சொல்லீட்டு போ.


ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வம்பு வளர்க்கறது?


2. மணி என்ன இப்போ?    ஏன் உனக்கு மணீ பார்க்கத்தெரியாதா?


இப்போ மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும்  கை வைக்க மாட்டோம்


3.  எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு வம்புக்கு இழுக்கறியே?


சரி ,வேலையை முடி ,நான் வெயிட் பண்றேன்..


4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...


மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.


5. நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வி ஆர் எஸ் வாங்கிட்டு வந்தவங்க தெரியுமில்ல?


ஆமா,பெரிய ஜெயிலர் இவரு..கைதிக்கு லொள்ளப்பாரு.

6. இந்தாங்க புளீயோதரை சாப்பாடு.

என்னது? ஒரு புலிக்கே புளீயோதரை சாப்பாடா?

7.லவ்வுக்காக கண்ட கண்ட நாய் வாய்ல எல்லாம் வாய் வைக்க வேண்டியதா இருக்கு.

ஆமா,நாய் காட்டிக்குடுக்கலைன்னாலும் என் வாய் காட்டிக்குடுத்துடும் போல?

8. அங்கே என்ன பண்றே?ஆண்ட்டியை கரெக்ட் பண்ணச்சொன்னா டி வி ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ணீட்டு இருக்கே.?


9.நான் எல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்குல அழ ஆரம்பிப்போம்,அத்தனை அழுகையை மனசுக்குள்ள அடக்கி வெச்சிருக்கோம்.


10. என் கிட்டே யாரும் சீரியஸா பேசாதீங்க,எனக்கு சிரிப்பு வந்துடும்.


11.என் ஃபேஸ்கட்டைப்பார்த்து யாரும் சிரிச்சு என்னை நோஸ்கட் பண்ணீடாதீங்க.


12.  ஏதோ அக்ரஹாரத்துல மாட்டுனதால வெறும் அடியோட விட்டாங்க..வேற எங்காவது சிக்கி இருந்தா குஸ்கா போட்டிருப்பாங்க.


13. இந்த ஒத்தை தம்பியை காப்பாத்த இந்த ஏரியாவுல இருக்கற மொத்தத்தம்பிகளும் வரனும் போல இருக்கே?


14. வீட்டுக்கு வாடகை தான் தர்றது இல்லை.ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு....


யோவ்....


பர்த்டே ஃபங்க்‌ஷன்,வந்து கொட்டீட்டு போன்னு சொல்ல வந்தேன்


15. சில லேடீஸ்க்கு ஆணோட ஃபேஸ்கட்டை விட இப்படி ஃபேர் பாடியோட இருந்தாதான் பிடிக்குது..
அட

கவுண்டமணி - முடிச்சிட்டே இல்ல,நீ ஓடிப்போயிடு.சுந்தர் நம்ம மேட்டருக்கு வருவோம்.உனக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு ஆசை இருக்க வேண்டியதுதான்,அதுக்காக...

சுந்தர் சி - ஏண்ணே,ஃபைட் சீன்ல எல்லாம் பட்டையை கிளப்பி இருப்பேனே?

கவுண்டமணி - சொதப்பி இருக்கே,நிறைய ஆடியன்ஸை  தியேட்டரை விட்டு கிளப்பி இருக்கே..ஒரு ஃபைட் சீன்ல பட்டத்துக்கு விடற நூல் கண்டு மீறி மீறிப்போனா 20 கிராம் வெயிட் இருக்கும் ,அதை ஒரு அடியாள் மேல வீசி எரியறே,அவன் 108 கிலோ வெயிட் இருப்பான்,2 கி மீ தள்ளிப்போய் விழறான்...இதெல்லாம் என்ன?




சுந்தர் சி - அண்ணே ,ஃபைட் சீன் ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது..


கவுண்டமணி - கதைலயும் லாஜிக் பாக்கக்கூடாது,காமெடியிலயும் லாஜிக் கூடாது,டூயட்ல ஏன் திடீர்னு கூடுவாஞ்சேரில இருந்து சிங்கப்பூர் போறீங்கன்னு கேக்கக்கூடாது,,அப்புறம் எதுல தான் லாஜிக் பாக்கறது..?


சுந்தர் சி - சரி விடுங்க,ஹீரோயினுக்கும் எனக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?


கவுண்டமணி - சிவா மனசுல சக்தி படத்துல அந்தப்பொண்ணு ஜீவா கூட நல்ல ரொமான்ஸ் பண்ணுச்சு,பாக்க முடிஞ்சுது.இதுல அந்தப்பொண்ணு உனக்கு ஜோடியா நினைக்கவே நாராசமா இருக்கு,நீ அந்தப்பொண்ணுக்கு பெரியப்பா மாதிரி இருக்கே...


சுந்தர் சி - படத்துல ஒரு ஐட்டம் சாங்க் இருந்துதே பார்த்தீங்களா?


கவுண்டமணி - ம்ம் ,ம்ம் ,பார்த்தேன் பார்த்தேன்,ஏய்யா லைட்டிங்க் அடிக்கறப்ப அப்படியா மஞ்சள் லைட் அடிப்பீங்க.தக தகனு அந்தப்பார்ட்டிக்கு இடுப்பு ஜொலிக்கறதைப்பார்த்து அவனவன் தியேட்டர்ல ஜொள்ளு விடறான்.

சுந்தர் சி - தலை நகரம் படத்துக்குப்பிறகு வடிவேல் காமெடி இந்தப்படத்துல ஒரு மைல்கல்னு எல்லாரும் பேசிக்கறாங்கண்ணே..


கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.

Saturday, November 20, 2010

மந்திரப்புன்னகை - சினிமா விமர்சனம்





குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி மனச்சிதைவு நோய்க்கு ஆளான ஹீரோ  மீது கல்கி ஹீரோயின் மாதிரி முற்போக்கு எண்ணம் உள்ள பெண் காதலிப்பதே  கதை.தான் அன்பு வைத்த அம்மா அப்பாவுக்கு துரோகம் செய்து ஓடி விடுவதால் தன் மேல் அன்பு வைக்கும் பெண்ணும் அதே போல் தனக்கு துரோகம் செய்து விடுவாள் என கற்பனை பண்ணிக்கொள்ளும் இளைஞன்,அந்த பெண்ணுடன் நடத்தும் நாடகம் தான் திரைக்கதை

கரு பழனியப்பன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விக்குப்போகும் முன் இந்தப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஹீரோவுக்கு ஏன் அப்படி ஒரு நோய் வந்தது என்பதற்கு இயக்குநர் படத்தின் பின் பாதியில் ஒரு ஃபிளாஷ்பேக் வைத்திருக்கிறார் பாருங்கள்.. அது சுந்தர ராமசாமியின் கதை போல் அழகிய சிறுகதை.அப்பா,அம்மா வாக வரும் கேரக்டர்கள் மனதில் பதிந்து போகும் அளவுக்கு இயற்கையான நடிப்பு.

ஹீரோயின் செலக்‌ஷன் சுமார்தான்.கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி குடி,கூத்தி என அலையும் ஒரு ஆணை ஒரு பெண் விரும்புகிறாள் என்பதை ஜீரணிக்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது..ஹீரோயின் முக சாயலில் மீனா மாதிரியும்,நடிப்பில் பூஜா மாதிரியும் முயன்று இருக்கிறார்.


மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் வசனங்கள் -

1. பிள்ளைகளால பெத்தவங்க வயிறு நிறையாட்டி பரவால்ல,மனசு நிறைஞ்சா போதும்

2. பொலைட்டா( POLITE ) கும்புடு போட்டு பணிஞ்சு நடக்கறவன் ஒழுங்கா வேலை செய்ய மாட்டான்.நல்லா வேலை செய்யறவன் கூழைக்கும்புடு போட மாட்டான்.

3. பொம்பள பாக்கற வேலையை அவரு பாக்கறாரு,அவரு பாக்கற வேலையை நீ பாக்கறே ,ஏன்?

வேலைல பொம்பள என்ன? ஆம்பள என்ன? திங்கள் டூ புதன் அவர் சமைப்பாரு.வியாழன் டூ சனி நான் சமைப்பேன்,ஞாயிறு 2 பேருக்கும் லீவ்,ஹோட்டல் சாப்பாடு.

4. சீரியஸா இருக்கற பாட்டியை போய்ப்பாக்க ஏன் மாட்டேங்கறே?

நான் போய் பார்த்தா அவங்களுக்கு வாழனும்கற ஆசை வந்துடும்.அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.சாக வேண்டிய தருணம் இது.சாவுதான் ஒரு மனுஷனுக்கு பூரண விடுதலை.

5. காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்.

6. உன் ஆளு குடுத்த கிஃப்ட் பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?

பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு கிக் இருக்கு.

7.ஒரு அரசியல்வாதியை புரிஞ்சுக்க நாம அரசியல்வாதியா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஒரு நடிகனை புரிஞ்சுக்க நாம நடிகனா இருக்கனும்னு அவசியம் இல்லை.ஆனா ஒரு அப்பாவைப்புரிஞ்சுக்க நாம அப்பாவா இருந்து பாக்கனும்.அப்போதான் புரியும்.

8.வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.

9. எந்தப்புருஷனும் தன் மனைவியை தினம் பாராட்டிட்டு  இருக்க மாட்டான்.

10.நாம எப்படி இருந்தாலும் நமக்கு வரப்போற மனைவி ஒழுக்கமானவளா அமையனும்கறதுதான் ஆம்பளையோட புத்தி.

11. ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?

12. எல்லாப்புருஷனும் தன் மனைவியை கொன்னுடலாமான்னு வாழ்நாள்ல ஒரு தடவையாவது நினைச்சுப்பார்ப்பான்.

13.காதலிக்கறவங்களை நிப்பாட்டி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.

14.கொடுமையைத்தாங்க முடியாதவங்க இருக்கலாம்,கோபத்தை தாங்க முடியாதவங்க இருக்கலாம்,அன்பைத்தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா?உன்னால அதை தாங்க முடியலை,அதனால தான் உன்னை காதலிக்கறேன்.

15, நீ நல்லவன் கிடையாது,உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா,உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா அப்புறம் நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?

16. என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான்,மேனுஃபேக்சரிங்க் டிஃபக்ட்,மாத்த முடியாது..




நினைவில் நின்ற காமெடி வசனங்கள்

1.மாமி,ஆத்துல உங்க வீட்டுக்காரர் இல்லியா?      எப்படி கண்டு பிடிச்சேள்?

அதுதான் தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சி கும்முன்னு இருக்கீங்களே...

2.உனக்கு புரியாது,அவர் இருக்கறப்ப இப்படி இருந்தா அட்டாக் பண்ணிடுவாரு.

3.ஒரு மேரேஜ் கூட இன்னும் பண்ணலை,எதுக்கு மன்மத நாயுடுன்னு பேரு,முதல்ல அதை மாத்தனும்.

4.டே,நாயே  நில்லு எங்கே போறே?     கோமணம் கட்ட மறந்துட்டு வந்துட்டேன்,போய் கட்டிட்டு வர்றேன்.

செத்துப்போன கிளி பறந்து போகவா போகுது?

5.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதா....இதையே எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பீங்க,நங்க இன்ஸ்பெக்டர் சுரைக்காயை வெச்சு சாம்பார் வெச்சுக்குவோம்ல?


6.உங்க குழந்தைக்கு இன்னுமா சீட் கிடைக்கல?

ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் கியூல நின்னு பார்த்தாச்சு,ம்ஹூம்,பிரயோஜனம் இல்ல.

7.இந்த ஸ்கூல்ல என் பையனை சேர்த்துட்டேன்,நான் 25 வயசுல கத்துக்கிட்டதை எல்லாம் இந்த ஸ்கூல்ல 8 வயசுலயே கத்து தர்றாங்க..
நீ அந்த வயசுல தண்ணி அடிச்சே,,,,,அப்போ உன் பையன் இந்த வயசுல தண்ணி அடிப்பானா?இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்கூல்ல சேர்த்தறியே பையன் படிக்கலைன்னா என்ன செய்வே?

8.அந்தாளு உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமாடி?

தெரியும்,அப்படிப்பார்த்தா என் கற்பு ஒன்னும் கெட்டுப்போயிடாது..

9.எல்லோருமே இப்போ டிஃப்ரெண்ட்டாதான் திங்க் பண்றாங்க..நாம நார்மலா திங்க் பண்ணுனாலே அது டிஃப்ரெண்ட் ஆகிடும்..

10.நைட் 10 மணீ ஆனாலும் பரவால்ல... உடனே இப்போ ஆஃபீஸ் வா,..

பாஸ்,, அது வந்து ... நான் என் ஒயிஃப் கூட ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்.

அத வேற யாராவது பண்ண சொல்லீட்டு நீ உடனே வா.    அது முடியாது...



11.அடியே,ஆன்னா ஊன்னா உங்கப்பனுக்கு ஃபோன் போடறியே, அவர் என்ன கஸ்டமர் கேரா?

12, மாப்ளை,எந்த வேலைக்குப்போறதா இருந்தாலும் நைட் 10 மணீக்கு வீட்டுக்கு வர்ற மாதிரி வேலையா பார்த்து போங்க.

மாமா,நான் போறது நைட் டியூட்டி ....

சரி நட் 10 மணீக்குள்ள வரப்பாருங்க.

13.நான் ஒரு குடிகாரன்னு உன் மனைவி கிட்டே ஃபோன் போட்டு இப்பவே சொல்லு.

ஆமா,என்னமோ குடியரசுத்தலைவர் மாதிரி பெருமையா சொல்லிக்கறான் பாரு.

14.வழக்கமா எல்லாரும் சம்பளம் வாங்குன பிறகுதான் சரக்கு அடிக்கப்போவாங்க,நீ சரக்கு வாங்கி பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத்தான் வேலைக்கே  கிளம்புவே போல.

15  உடம்புக்கு கெடுதல் பண்ற கோக் ,பெப்சி இதை எல்லாம் சத்தம் போட்டு கேட்டு வாங்கறோம்,ஆனா உடம்புக்கு நல்லது பண்ற காண்டம் வாங்க மட்டும் ஏன் கூச்சப்பட்டு நிக்கறோம்?

16  இந்தாங்க என் விசிட்டிங்க கார்டு..

அடடா,பதிலுக்கு தர என் கிட்டே விசிட்டிங்க கார்டு இல்லையே..?

17. குடிக்கற நான் இவ்வளவு தெளிவா இருக்கேன்,குடிக்காத நீங்க இவ்வளவு குழப்பத்துல இருக்கீங்களே?

18. அட்டு ஃபிகரா இருந்தாலும் இந்தக்காலத்துல 1008 கண்டிஷன் போடுவாங்க..எந்த கண்டிஷனுமே போடாத நந்தினியை நீ மிஸ் பண்ணிடக்கூடாது..

19.அய்யய்யோ,ஆம்னி பஸ்ல இருந்து மாயாண்டி குடும்பம் வருதே ,அழுதே இவன் ஆஸ்கார் அவார்டு வாங்கறவனாச்சே..

20. ராத்திரி ஏன் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றீங்க?

அதுவா,,பகல்ல குடிச்சிட்டு ஆஃபீஸ் போக முடியாதே,... அதான்

21.. டே நாயே உன் வாய் ஏன் இப்படி கப்பு அடிக்குது,உன் மூக்குக்கு கீழே ஆணி அடிச்சு மல்லிகைப்பூ தொங்க விட்டாதான் வாசம் போகும் போல..நீ உயிரோட இருக்கறப்பவே பொண நாத்தம். அடிக்குதே நீ செத்துட்டா ..எப்படி நாறப்போறியோ?

22. உங்க வீட்டுக்கு பின்னால பலூனா கிடக்குதே..?

வீட்ல குழந்தைங்க விளையாடி இருக்கும்..

எனக்கென்னவோ குழந்தை வேண்டாம்னு நீங்க விளையாடுன மாதிரி தோணுது..

இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்ட் டைரக்‌ஷனில் செம இன்ட்ரஸ்ட் போல.அதற்கு தீனி போடும் விதமாக தனது கேரக்டரை டிசைனிங்க் இஞ்சினியராக வடிவமைத்துக்கொண்டது அவரது புத்திசாலித்தனம்.

படத்தின் ஓப்பனிங்கலயே ஹீரோ அந்த மாதிரி பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளவர் என காண்பித்து அழகிய தவறு என்ற நாவல் டைட்டிலை காண்பிப்பது கே பாலச்சந்தர் டைப் முத்திரை.


கார் ஷோ ரூமில் வேலை பார்க்கும் ஹீரோயின் கஸ்டமரிடம் டெமோ காண்பிக்கும் சீனில் அவர் காட்டும் கிளாமர் செம கில்மா.கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

வீட்டில் அகல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்க சிகரெட் பற்ற வைக்க ஹீரோ மக்கர் பண்ணும் சிகரெட் லைட்டரையே ட்றை பண்ணும் சீனில்  அவர்து கேரக்டர் தெளிவாக விளக்கப்படுகிறது.

படத்துக்கு தூண் மாதிரி சந்தானம்,விவேக்குக்கு பிறகு டிரஸ்ஸிங்க சென்ஸில் கலக்கும் காமெடியன் இவர்தான்.ஹீரோவை விட சூப்பராக டிரஸ் பண்ணீ வருகிறார்.மெடிக்கல் ஷாப்பில் காண்டம் கேட்க கூச்சப்படும் காட்சியில் பின்னிப்பெடல் எடுக்கிறார்.அதே சீனில் புத்திசாலித்தனமாக ஹீரோயின் - ஹீரோவை லிங்க் பண்ணி சீன் வைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.

தண்ணி போட்ட பாப்பா நீ எனும் ஓப்பனிங்க குடி பாட்டில் டான்ச் மூவ்மெண்ட் ஏழையின் சிரிப்பில் பட பிரபு தேவா பாணி.

ஒரு காதல் பாட்டில் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஸ்லோ மோஷனில் சிதறுவது,மழையில் சிறுவர்கள் நனைவது,சோப்புக்குமிழிகள் பறப்பது என கேமரா விளையாடி இருக்கு.

டூயட்டில் ஹீரோ ஹீரோயின் கட்டிப்பிடிப்பது மாதிரி காண்பித்து விட்டதால் இருவரும் பிறகு முதன் முதலாக கைகளை இணைப்பது மாதிரி காண்பிக்கும் சீனில் டைரக்டர் எதிர்பார்த்த எஃபக்ட் கிடைக்கவில்லை.

ஒரு சீனில் ஹீரோ 4 நாட்களாக ஏன் ஆஃபீஸ் வர்லை? என கேள்வி கேட்கப்படுகிறது,அடுத்த சீனிலேயே ஏன் 2 நாளா வர்லை? என்கிறார்கள்.கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்.

குணா,மனசுக்குள் மத்தாப்பு,ஆளவந்தான்,குடைக்குள் மழை, கற்றது தமிழ் போன்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஹீரோக்கள் கதை வெற்றி பெறவில்லை.அந்த லிஸ்ட்டில் இந்தப்படமும் சேரும். சேது,காதல் கொண்டேன், படங்கள் விதி விலக்கு.

பி ,சி செண்ட்டரில் 10 நாட்கள் .ஏ செண்ட்டரில் 25 நாட்கள் ஓடலாம்


.

Friday, November 19, 2010

புது ராசா வரப்போறாரு......அசின் கவனத்தை ஈர்க்கப்போறாரு...



Image





















1. “குற்றம்  என்ன  செய்தேன்  கொற்றவனே?”

“போரில்  இருந்து  திரும்பி  வரும்போது  தோற்றவனே  என்று  அழைத்தீரே!”



2. “மன்னா!  இந்த  அர்த்த  ஜாமத்தில்  கூட  ஏதாவது  யோசித்துக்கொண்டு  இருக்கிறீரே! என்னது?”


“ஜாமம்  என்றால்  என்ன  அர்த்தம்  என்றுதான்  ராணி!”






3. “எதுக்காக  நடிகை  அசின்  வீட்டுக்கு  முன்னாடி  மறியல்  போராட்டம்  நடத்துறாங்க?”


அரசின்  கவனத்தை  ஈர்க்கும்  வகையில்  போராட்டம்  நடத்துவோம்னு  மேடையில  பேசுறப்ப,  நம்ம  தலைவருக்கு  நாக்கு  தடுமாறி  ‘அசின் கவனத்தை’னு  பேசிட்டாரு!”






4. “மேடம்...  நீங்க  சேலை  கட்டி  ஃபுல்லா  கவர் பண்ணி  ஒரு  ஸ்டில்  பார்த்தோமே?”


“ஐயையோ...  நம்பாதீங்க...!  அது  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்!”






5. “மூல  நோயால்  பாதிக்கப்பட்டவர்களை  மன்னர்  ஏன்  நாடு  கடத்துகிறார்?”


“ஆண்  மூலம்  அரசாளும்னு  யாரோ  சொன்னாங்களாம்,  தன்னோட  பதவிக்கு  ஆபத்து  வந்துடுமோனு  பயப்படறார்  மன்னர்!”






6. “போர்க்களத்துக்குச்  செல்ல  மன்னர்  தயங்குகிறாரே...  அவரோட  ‘மூப்பு’தான்  காரணமா?”


“இல்லை.  ஏற்கெனவே  ஒருமுறை  எதிரி  நாட்டு  மன்னன்  இவருக்கு  வைத்த  ‘ஆப்பு’தான்  காரணம்!”






7. “அவ்வப்போது  நகர்வலம்  செல்கையில்  பிச்சைக்காரன்  வேடத்தில்  சென்றது,  போர்க்களத்தில்  உபயோகமாக  இருக்கிறது!”


“எப்படி  மன்னா?”


“உயிர்  பிச்சை  கேட்க  உதவியாக  இருந்தது!”






8. “ஸ்கோப்  இல்லைனு  சொல்றீங்களே  டாக்டர்...  இனி  என்  மாமியார்  பிழைக்க  மாட்டாங்களா?”


“அவசரப்படாதீங்க!  ஸ்டெதஸ்கோப்  இல்லை,  மறந்துட்டு  வந்துட்டேன்னு  சொல்ல  வந்தேன்!”



Asin faints in Vijay film shooting spot



















9. “போர்  செய்தி 
கே ட்டதும்  மன்னர்  பதறுகிறார்.  மகாராணி  பரவசப்படுகிறார்...  ஏன்?”


“இரண்டுக்கும்  ஒரே  காரணம்...  புது  ராஜா  வரப்  போறதுதான்!”



10. “போலி  டாக்டர்னு  தெரிஞ்சும்  அதே  க்ளினிக்குக்கு  ஏன்  போனே?”


“டாக்டர்  போலியா  இருந்தா  என்ன...  நர்ஸ்  ஜாலியா  இருக்காங்களே!”






11. “மன்னா! தகவல்  அறியும்  உரிமைச்  சட்டத்தை  பலர்  தவறாக  புரிந்துகொண்டு  உள்ளனர்!”


“எப்படி?”


“அந்தப்புரத்தில்  உள்ள  பெண்களின்  இடுப்பளவு  எவ்வளவு  என்ற  தகவல்  வேணுமாம்!”






12. “மன்னர்  புலவர்  மேல்  ஏன்  கடுப்பாக  உள்ளார்?”


“ஏற்கெனவே  வேறு  ஒரு  புலவர்  10  வருடம்  முன்பு  பாடிய  பாடலை  இவர்  ரீ-மிக்ஸ்  செய்து  பாடினாராம்!”






13. “மன்னா!  உங்கள்  வாளுக்கு  வேலை  வந்துவிட்டது.”


“என்ன,  போர்  அறிவிப்பா?”


“ம்ஹும்...  சாணை  பிடிப்பவர்  வந்துள்ளார்.”






14. ஒரு  வீட்டில்  விருந்தாளியும்  குழந்தையும்...

“உனக்கு  அம்மா  புடிக்குமா,  அப்பா  புடிக்குமா?”

“எனக்கு  இந்தியன்  கிரிக்கெட்  டீமைத்தான்  புடிக்கும்.  ஏன்னா,  அவங்கதான்  அடிக்கவே  மாட்டாங்க!”






15. ஒரு  பூங்காவில்  காதல்  ஜோடி...


“ரமேஷ்!  எனக்கு  சாப்பிடும்  போதெல்லாம்கூட  உன்  ஞாபகமாவே  இருக்கு...”


“அப்படியா...  எனக்குக்  கைகழுவும்போதுதான்  உன்  நெனப்பு  வருது!”






16. “புடவை,  புருஷன்  என்ன  வித்தியாசம்?”


“புடவை  எடுக்கறப்ப  புரட்டிப்  புரட்டி  பார்த்து  எடுத்து  கட்டிக்குவாங்க.  புருஷனை  கட்டிட்டு  அப்புறமாதான்  புரட்டி  புரட்டி  எடுப்பாங்க.”

Wednesday, November 17, 2010

மார்க்கட் போன நடிகையும்,தலைவரும்.....
























1. “தலைவர்  ரொம்ப  நேர்மையானவர்னு  எப்படி  சொல்றே?”

“கோர்ட்ல  சத்தியப்  பிரமாணம்  எடுக்கறப்ப  நான்  சொல்வதெல்லாம்  பொய்; பொய்யைத்  தவிர  வேறில்லைன்னு  சொன்னாரே?”



2. “கேஸ் (GAS) கம்பெனி  இண்டர்வ்யூல  ஏன்  செலக்ட்  ஆகலை?”

“என்னைப்  பற்றி  ஸ்பெஷலா  ஏதாவது  சொல்லச்  சொன்னப்ப  எனக்கு  கற்பூரபுத்தின்னு  சொன்னேன்.  அய்யய்யோ!  கம்பெனி  பத்திக்குமோனு  பயந்துட்டாங்க”



3. “இப்போதெல்லாம்  தெருக்கூத்துக்  கலை  முற்றிலும்  அழிந்து  விட்டது.  இதைக்  காப்பாற்ற  நமது  தலைவர்  முன்  வர  வேண்டும்னு  தலைவர்கிட்ட  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“எங்க  கட்சில  செயற்குழு  கூட்டம்  நடக்கறப்ப  வாங்க.  ஏகப்பட்ட  கூத்து  நடக்கும்னு  சொல்றார்!”



4. “ம்ன்னர்  எப்படி  எதிரிப்படையை  பின்  வாங்க  செய்தார்?”

“நம்  நாட்டில்  அனைவருக்கும்  சிக்குன்குன்யா.  இங்கு  வந்தால்  உடனே  பரவிக்  கொள்ளும்  என்று  புரளி  கிளப்பினார்”



5. “பெரிய  கட்சித்  தலைவரா  வரப்போறான்னு  இப்பவே  எப்படி  ஆரூடம்  சொல்றீங்க?”

“100/100னு ( நூத்துக்கு நூறு) சிலேட்ல  இவனே  மார்க்  போட்டுக்கிட்டானே?”



6. “நைட்  10.30  மணிக்கு  தலைவரோட  மேடை  பேச்சு  லைவ்-லேபோடுறாங்க”

“அது  காமெடி  டைமாச்சே?”

“இது  மட்டும்  என்ன?”



7. “என்  மனைவி  சமையல்  பண்ணினா  வாசம்  கமகமன்னு  ஆளையே தூக்கிடும்”

“இல்லையே!  அதைச்  சாப்பிட்டாத்தான்  ஆளைத்  தூக்க  வேண்டிவரும்னு  சொன்னாங்க”



8. “மன்னா!  தங்கள்  மெய்க்காப்பாளர்  கல்யாண  மண்டபத்தில்  மொய்  எழுதுற  இடத்துல  எதுக்கு  நிற்கறாரு?”

“அமைச்சரே!  அவர்தான்  இப்போதைய  மொய்க்காப்பாளர்



9. “நண்பர்களாகப்  பிரிகிறோம்னு  அறிக்கை  விட்டது  தப்பாப்  போச்சு”

“ஏன்  தலைவரே?”

“அப்போ...  இத்தனை  நாளா  எதிரிகளா  சேர்ந்து  இருந்தீங்களா?ன்னு  நிருபர்கள்  கேட்கறாக்க!”



10. “தலைவரே!  மேடைல  பேசறப்ப  ‘அன்புக்கு  நான்  அடிமை’ன்னு  சொன்னீங்களே?”

“ஆமா...  அதுக்கென்ன?”

“உங்க  சம்சாரம்  பேரு  அம்புஜம்தானே?  அன்பு-ன்னு  பேரை  மாத்திட்டாங்களா?”



11. “காமெடி  படத்தைப்  பார்த்து  ஏன்  அவர்  அழறாரு?”

“அவரு  அந்தப்  படத்தின்  புரொடியூஸர்”



12. “அரசு  விழாவில்  அரசியல்  பேச  மாட்டேன்னு  அறிக்கை  விட்டேன்!”

“என்ன  ஆச்சு  தலைவரே?”

“பிரஸ்காரங்க  அதை  எடிட்  பண்ணி,  இனி  விழாவில்  பேச  மாட்டேன்னு  சொன்னதா  போட்டுட்டாங்க!”



13. “நீயும்,  உன்  ஆள்  மோஹனாவும்  டெய்லி  பீச்சுல  3  மணி  நேரம்  இருக்கீங்க.  அப்படி  என்னதான்  பேசுவீக்க?”

“நாங்க  பேசுறோம்னு  யார்  சொன்னது?”



14. “என்  மனைவி  கோபமா  இருக்கறப்ப,  ஒரு  வரி  பேசுனா  போதும்.  அடங்கிடுவா.”

“வாயை  மூடுனு  சொல்வியா?”

“ம்ஹூம்.  பேசாம  இருந்தா  ஒரு  நெக்லஸ்  வாங்கித்  தர்றேன்  என்பேன்.”



15. “வரும்  முன்  காப்போம்  திட்டத்தை  தலைவர்  ஆதரிக்கறாராமே?”

“ஆமாம்!  இன்கம்  டாக்ஸ்  ரெய்டு  வரும்முன்  சொத்துக்களைக்  காப்போம்  திட்டமாம்  அது!”



16. நடிகை   - “காய்கறியை  என்  கையால  வாங்கலாம்னு  மார்க்கெட்  போனேன். ஆட்டோகிராஃப்  வேணும்னு  யாரும்  என்கிட்டே  கேட்கலை.  யாரும்  கண்டுக்கலை.”

மார்க்கெட்  போனா  கண்டுக்க  மாட்டாங்க.”

டிஸ்கி 1  - டைட்டிலில் மார்க்கட் என்பது ஆங்கில MARKET டை குறிக்கும்,தமிழ் ஆர்வலர்கள் மார் கட்டு என டபுள் மீனிங்க்கில் பொருள் புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

டிஸ்கி 2- மார்க்கட் போன நடிகை ஜோக் தனி,தலைவர் ஜோக் தனி.ரெண்டையும் சேர்த்து  ஏதோ கிசு கிசு என வந்து ஏமாந்து கோபப்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. ( டேய்,பருப்பு,எதுக்குமே நீ பொறுப்பு இல்லைன்னா எதுக்கு உனக்கு அந்த பொறுப்பு?)