Saturday, November 27, 2010

கனிமொழி Vs கவுண்டமணி - சினிமா விமர்சனம்

அட

கவுண்டமணி - அய்யா ,ராசா,புது டைரக்டரு,இந்தப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தோட டைட்டில் பற்றி என்ன ராசா பேட்டி குடுத்தீஙக?ஞாபகமிருக்கா?

டைரக்டர் - அண்ணே,அது வந்து....கனி மொழி என்று டைட்டில் வைத்த்துக்கு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை,படத்தின் கதைக்கு அந்த டைட்டில் தேவைப்படுகிறதுன்னு பேட்டி குடுத்திருந்தேண்ணே...

கவுண்டமணி - மேலே மெலே....


டைரக்டர் - அப்புறம் .. ம் ம் இந்தப்படத்தை பார்த்தா இந்த டைட்டிலை விட பொருத்தமான வேற டைட்டில் இந்த படத்துக்கு வைக்கவே முடியாதுன்னு பேட்டி குடுத்திருந்தேன்...ஏண்ணே?பொருத்தமா இல்லையா?

கவுண்டமணி -  வருத்தமா இருக்கு.அந்தம்மா பேரை இப்படி எல்லாம் கெடுக்கறியேன்னு...இந்த டைட்டில் வைக்க அனுமதி வாங்க ஒரு மாசம் செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைஞ்ச நேரத்துக்கு நல்ல கதையை
ரெடி பண்ணி  இருக்கலாம்..

டைரக்டர் - ஏண்ணே,படத்தோட கதைக்கு என்ன குறைச்சல்?

கவுண்டமணி - ஹீரோ ஹீரோயினை ஒரு தலையா காதலிக்கறான்,கடைசி வரை காதலை அவ கிட்டே சொல்லவே இல்லை,கிளைமாக்ஸ்ல வேற ஒருத்தன் ஹீரோயினை தட்டிட்டு (கல்யாணம் பண்ணிட்டு ) போயிடறான்..இதுல என்ன புதுமை இருக்கு?இந்த மாதிரி ஓராயிரம் படம் பார்த்தாச்சு...

அட

டைரக்டர் - சரி,அதை விடுங்கண்ணே...ஹீரோவும்,ஹீரோயினும் சந்திக்கற முத சீன்ல 2 பேருமே மஞ்சள் கலர் டிரஸ் போட்டுட்டு வந்து கலக்கி இருப்பாங்களே,அதைப்பத்தி ஆடியன்ஸ் என்ன பேசிக்கறாங்க?

 கவுண்டமணி -  ஏதோ மஞ்ச மாக்கான் படத்துக்கு வந்துட்டமோன்னு பேசிக்கிட்டாங்க...

டைரக்டர் - சரி..ஹீரோயின் எப்படிண்ணே?

கவுண்டமணி - அது சும்மா சொல்லக்கூடாது..நல்ல ஃபிரிட்ஜ்ல வெச்ச லெமனா,18 வயசு தமனா மாதிரி தளதளன்னு தான் இருக்கு..ஆனா படத்தோட கதை,திரைக்கதை உனக்கு எமனா அமைஞ்சிடுச்சே?

டைரக்டர் - காமனா (COMMON) படத்தை பத்தி என்ன தாண்ணே சொல்ல வர்றீங்க?

கவுண்டமணி - படத்துக்கு தலை வலின்னு டைட்டில் வெச்சு இருக்கலாம்.

சி பி - அண்ணே,ஒரு நிமிஷம்....

கவுண்டமணி - வந்துட்டாண்டா வீங்குன வாயன்....டேய்.. இப்போ எதுக்கு வந்திருக்கே?படத்துல நீ கேட்ட நல்ல வசனத்தை பற்றி சொல்றக்காக்கும்?பரங்கிமலை ஜோதில பிட்டு படம் பாக்கற நாய் நீ இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..?நீ தலையே சீவ மாட்டியா?

சி பி - அண்ணே,பட விமர்சனம் இனிமே எழுதுனா உன் தலையை சீவிடுவோம்னு ஆளாளுக்கு மிரட்டறாங்க..அவங்க வந்து சீவட்டும்னு நான் சீவாம இருக்கேன்.

கவுண்டமணி - அட விளங்காதவனே.. அவங்க அரிவாளோட வருவாங்க,சீப்போட வருவாங்கன்னு நினைச்சியா?சரி சரி சொல்லித்தொலை...
அட

ரசிக்க முடியாத படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்-

1.யோவ்,தியேட்டர்ல எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணுங்கய்யா.. சின்னஞ்சிறுசுக  ஏதோ சில்மிஷம் பண்ணுவாங்க..ஈங்க பாட்டுக்கு எல்லா லைட்டையும் போட்டு வெச்சா?


2.காலேஜ்க்கு படிக்கத்தானே வர்றே?எங்கே புக்,பேனா,நோட் எல்லாம்?

 எல்லாம் டெஸ்க்குல வெச்சுட்டு போயிடுவேன் சார்...

அடப்பாவி,அப்புறம் எதை படிப்பே?   நான் எங்கே சார் படிக்கறேன்?


3. முதல்ல இந்த மாதிரி அட்வைஸ் பண்ற லெக்சரரை டைவர்ஸ் பண்ணனும்.

4  நமக்குள்ள  இருக்கற டேலண்ட்டை அடிக்கடி யூஸ் பண்ணனும்,பெரிய வாய்ப்பு கிடைக்கறப்ப பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணக்கூடாது..

5. டேய். உனக்கு எல்லா வேலையும் செஞ்சு செஞ்சு என் காலெல்லாம் தேஞ்சு போச்சு.

அம்மா.பேசாம எனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி  வெச்சுடு. உனக்கு ரெஸ்ட் எனக்கு பெஸ்ட்.


6. கமபைன் ஸ்டடி பண்றேன்னு வெளில போறவனை நம்பிடலாம்,ஆனா தனியா படிக்கறேன்னு கதவை தாழ் போட்டுட்டு படிக்கறவனை நம்ப முடியாது..

7.  டேய் மாப்ளே.. இவளா உன் ஆளு?சூப்பரா இருக்கா.. இவளை மட்டும் நீ கல்யாணம் பண்ணிட்டே என் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாதுடா..

நல்ல ஃபிரண்டுடா...

8. என் பந்தை எவனும் தொடக்கூடாதுடா,தொட்டா அவன் ஃபெயில் ஆகிடுவான்..

அடப்பாவி..எப்படி எல்லாம் மிரட்டறான்..நீயே தனியா வலிபால் விளையாடு..

9.எது கத்துக்கறதா இருந்தாலும் இன்ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்.

10.  சார் எனக்கு பட சான்ஸ் வேணும்.

எனக்கு தெரிஞ்ச புது டைரக்டர் ஒருத்தர் இருக்காரு,போறியா?

சார்... மணிரத்னம்,ஷங்கர் இப்படி இருந்தா சொல்லுங்க...

11.  மாமா ,உங்களுக்கு லவ் பிடிக்காதா.. ஏன்? லவ் ஃபெயிலரா?

இல்ல,லவ் பண்ணுனவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..அதான்..

12. போலீஸ் மாதிரியே கேள்வி கேக்கறியே அது ஏன்?

திருடன் மாதிரியே பதில் சொல்றியே அது ஏன்?

13.  காதலியின் ஃபோட்டோவை தொட்டுப்பார்க்க முயலும் நண்பனிடம் ஹீரோ-   டேய்.. அவ என் ஆளு கை வைக்காதே..



அடப்பாவி.. வெறும் ஃபோட்டோடா..

கூப்பிட்டுப்பாரு,திரும்பிப்பார்ப்பா..

14. நான் உன் ஃபோன் நெம்பரை சத்தம் போட்டு  அவ முன்னால சொல்றேன்,அவ உனக்கு கால் பண்ணுனா  அவ உன்னை லவ் பண்றான்னு அர்த்தம்.

சப்போஸ் அவளுக்கு நீ சொன்ந்து கேக்கலைன்னா?

காது கேகாதவனு கழட்டி விட்டுடு..

15.  என்னடா ஸ்வெட் ட்ரீம்ஸ் (SWEAT DREAMS) னு மெசேஜ் அனுப்பி இருக்கே..ஸ்வீட் ட்ரீம்ஸ்டா (SWEET DREAMS)

அடடா இத்த்னை நாளா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடதான் எல்லாருக்கும் அனுப்பினேனா?

அதான் எவளும் உனக்கு செட் ஆகலை


16.  இங்கே வெச்சிருந்த பாட்டில்ல இருந்த மீதி சரக்கு எங்கே?


விடுடா,சிந்தி இருக்கும்

  எங்கே,சிந்துன இடத்தை காமி..      என் வாய்ல...


17. உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி என் கூட இருக்கறதா ஏண்டா சொன்னே?

மாட்டுனா எல்லாரும் மாட்டனும்னுதான்

18. அம்மா ஒரு 200 ரூபா குடு.

எதுக்கு?

உன் பர்ஸ்ல 500 ரூபா  நோட்டுதான் இருந்துச்சு அதான்   200 குடு,500 எடு.

19. அப்பா இந்த இங்கிலீஷ் படத்துல கிஸ் சீனே வர்ல?

5 வயசுப்பையன் கேக்குற கேள்வியைப்பாரு.. எல்லா இங்கிலீஷ் படத்துலயும் கிஸ் சீன் வரும்னு யார் சொன்னது உனக்கு?

கவுண்டமணி - அப்பாடா,முடிச்சுட்டான்,நாயே நீ ஓடிப்போயிடு,தம்பி நீ நில்லு,நீ இதுக்கு முன்னால ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல வேலை செஞ்சியா?

டைரக்டர் - ஆமாண்ணே,எப்படி கண்டு பிடிச்சீங்க?

கவுண்டமணி - படத்துல பர்ச்சேஸ் பண்ற சீன் ஏகப்பட்டது வருதே..

1. ஹீரோ செல்ஃபோன் வாங்கும் சீன் 20 நிமிஷம்

2. ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டிராவல் பேக் வாங்கும் சீன் 5 நிமிஷம்

3.ஹீரோவின் அண்ணன் பைக் வாங்கும் சீன் 3 நிமிஷம்

4.ஹீரோயின் கிஃப்ட் வாங்கும் சீன் 7 நிமிஷம்

எதுக்கு இப்படி சாவடிக்கறே?

டைரக்டர் - அண்ணே ,படத்துல சம்பவங்கள் வேணும்னே...ரசிக்கற மாதிரி சீன்ஸ் நான் சொல்றேன்

1.ஹீரோயின் எங்கே இருந்து எந்த ரூட்ல வருவானு ஹீரோவுக்கு மேப் போட்டு விவரிக்கும் சீன்.

2. ஏரியா விட்டு ஏரியா போய் அந்த ஏரியா ஆளுங்க கிட்டே அடி வாங்கும் சீன்

3.யோகா கிளாஸ்க்கு முதன் முதலா போற ஹீரோ ஜீன்ஸ்,டி சர்ட் ,கூலிங்க் கிளாஸ் சகிதம் போற சீன்

4.உள்ளங்கை மாடலில் ஒரு சோபாவை அலங்கரித்து வைத்திருந்த  சீன்

கவுண்டமணி - தம்பி நீ ஹிட்ஸ் ஆன படங்கள் நிறைய பாரு.அதுல 60 சீன்ஸ் ரசிக்கற மாதிரி இருக்கும்.நீ பண்ணுன கூத்துக்களை நான் வரிசைப்படுத்தறேன் பாரு.

1.ஹீரோயின் காலடில ஹீரோ விளையாடும் வாலிபால் போய் விழுது,தை ஹீரோயின் எடுத்து தர்றா உடனே ஒரு டூயட்

2.நடக்காததை எல்லாம் நடந்ததாக கற்பனை பண்ணிக்கொள்ளும் ஹீரோ (இப்போதான் மந்திரப்புன்னகை,குடைக்குள் மழை வந்தது)

3.க்ளை மாக்ஸ்ல ஹீரோயின் டபுள் ஆக்ட்னு ஒரு ட்விஸ்ட் தந்து பேக் அடிச்சு அது ஹீரோவின் கற்பனைனு ஜகா வாங்குனது..

4. ......

டைரக்டர் - அண்ணே,நிறுத்துங்க...படம் ஓடுமா ஓடாதா?அதை மட்டும் சொல்லுங்க..

கவுண்டமணி - ஏ செண்ட்டர்ல 7 நாள்   பி செண்ட்டர்ல 5 நால்,  சி செண்ட்டர்ல 3 நாள் ஓடும்

டைரக்டர் -  பத்திரிக்கை விமர்சனம்?

கவுண்டமணி - ஆனந்த் விகடன்-34 மார்க்

குமுதம் - சுமார்

நாடகம் மாதிரி படம் எடுக்கறவங்களுக்கெல்லாம் இந்தப்படத்தோட ரிசல்ட் ஒரு பாடமா இருக்கட்டும்.

Friday, November 26, 2010

கரு.பழனியப்பன் விருந்து - காமெடி கும்மி

http://4.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TO5dK8hrBQI/AAAAAAAAAMU/M7YMmgX2-ps/s1600/mandhira_punnagai_movie_stills_04.jpg
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதை எல்லாம் ஒதுக்கி விட்டு  கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.


1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.

ஏன்?

இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...


2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?

அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.

3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?

யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...

4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?

காலைல 11 மணிக்கு படத்தை போட்டு,  2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.

5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?

பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?


6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?

இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்‌ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.

7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?

கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.


8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?

நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.

9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?

பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK)  இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.

10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?

அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.

11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.

எப்படி சொல்றீங்க ராம்சாமி?

சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?

12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு  படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?

அவங்க எல்லாருமே  சி பி  மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.

டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.

கொலைக்கேசில் மாட்டிய ஆளுங்கட்சித்தலைவர்


1. “மன்னா!  மற்போர்  புரியலாமா,  விற்போர்  புரியலாமா  என்று  எதிரிநாட்டு மன்னன்  அறைகூவல்  விடுக்கிறான்!”

“தளபதி!  சொற்போர்  புரியலாம்  என்று  கூறு.  அப்போதுதான்  நமக்கு  எந்தச்  சேதாரமும்  இருக்காது!”



2. “நம்ம  தலைவர்,  கொலை  கேஸ்ல  கோர்ட்  விசாரணையின்போது  ஏதோ கோக்குமாக்கா  குறுக்குக்  கேள்வி  கேட்டாராமே?”

“ஆமா,  சின்னப்  பசங்க  கொலை  செஞ்சா,  சிறுவர்  சீர்திருத்த்ப்  பள்ளியில  போடறீங்க.  ஆனா,  பெரியவங்க  கொலை  செஞ்சா  மட்டும்  ஏன்  முதியோர்  சீர்திருத்தப்  பள்ளியில  சேர்க்காம,  ஜெயில்ல  போடறீங்கனு  கேட்டாரு!”



3. “சொத்துக்  குவிப்பு  வழக்குல  உங்களை  கோர்ட்  ரிலீஸ்  பண்ணிடுச்சே...  இதைப்  பத்தி  என்ன  நினைக்கறீங்க  த்லைவரே?”

“இந்த  மாதிரி  சாட்சி  கிடைக்காம  கேஸ்  தடுமாறும்னு  தெரிஞ்சிருந்தா,  இன்னும்  அதிகமா  சொத்து  சேர்த்திருக்கலாமேன்னுதான்!”



4. “மந்திரியாரே,  எதிரி  மன்னன்  தகவலை  புறா  மூலம்  அனுப்பாமல்,  மைனா  மூலம்  அனுப்பியுள்ளானே,  ஏன்?”

“புரியவில்லையா  மன்னா! உங்களுடையது  மைனாரிடி  அரசு  என்று  சுட்டிக்காட்டுகிறான்!”



5. “ம்ன்னர்  சேடிப்  பெண்ணைப்  பார்த்து  ‘உன்னை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்க  வேண்டும்’  என்கிறாரே...  அவளிடம்  அப்படி என்ன  தவறு  கண்டார்?”

“நீ  வேற!  மன்னர்  சேடிப்  பெண்ணின்  அழகில்  மயங்கி,  அந்தப்புரத்தில் வைக்கத்  திட்டம்  போடுகிறார்!”



6. “அமைச்சரே!  அண்டை  நாட்டு  அரசர்கள்  என்  மீது  என்ன  அபிப்ராயம்  வைத்திருக்கிறார்கள்?”

“மன்னா!  உங்களிடம்  பொது  வாழ்வில்  நேர்மையும்  இல்லை...  போர்  வாழ்வில்  கூர்மையும்  இல்லை  என்றுதான்  அபிப்ராயப்படுகிறார்கள்!”



7. “என்னதான்  கெட்ட  செய்தியாக  இருக்கட்டும்...  தூது  வந்த  புறாவின்  முதுகில்  நீங்கள்  அப்படி  ஓங்கி  அடித்திருக்கக்  கூடாது  மன்னா!”

“அதனால்  என்ன  அமைச்சரே!”

புற  முதுகிட்டவர்  என்ற  அவப்  பெயரோடு  புறா  முதுகில்  இட்டவர்  என்ற  அவப்  பெயரும்  சேர்ந்துகொண்டதே!”



8. “தலைவர்  கார்ல  போறப்ப  குழியில  விழுந்து,  படுகாயம்  அடைஞ்சுட்டாரு!”

“அதுக்காக  பள்ள  நிவாரண  நிதி  வசூல்  பண்ணக்கிளம்பிடறதா?”



9. “தலைவரோட  தமிழ்ப்  பற்றுக்கு  ஒரு  அளவே  இல்லாமப்போச்சு!”

“எப்படிச்  சொல்றே?”

“உதட்டில்  வரும்  உமிழ்  நீர் கூட  தமிழ்  நீராக  வர  ஆசைப்படுகிறேன்னு ஏகத்துக்கும்  உதார்  விடறாரே!”

Thursday, November 25, 2010

நல்ல சினிமா vs நொள்ள சினிமா

http://tamildigitalcinema.com/wp-content/gallery/manmathan_ambu/manmathan-ambu-1.jpg
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1.மதுரை தான் கதைக்களன் - ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும்.இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2.காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது.நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே “போல செய்தல்”.  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை த்ந்தாரே?

3.சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4.ஹீரோ ஒரு ஊரில் இருப்பார்,ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார்,அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார்.இந்த ஃபார்முலாவில் விஜய்,விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.


எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

2.நிறைய இயக்குநர்கள் கதை ,திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும்.திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும்,அவஙக் பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3.விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது.நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான்,அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6..சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார்,மேலோட்டமாக கதை கேட்டிருப்பார்.நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளைஉள் வாங்க முடியும்.எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7..தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9.ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10.எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11.

பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12.அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக்,போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை

டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.

டிஸ்கி 4 - சாரி டூ சே,மறந்துடுச்சு,அந்தப்பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டு யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.

டிஸ்கி 5 - சிலர் மிஸ்டு கால் விடுகிறார்கள்.யாரோ என்னவோ என கூப்பிட்டால் கண்டபடி திட்டுகிறார்கள்.அவர்கள் சொந்தக்காசிலோ,கடன் வாங்கி டாப் அப் பண்ணியோ திட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, November 24, 2010

ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்ட தலைவர்



1. கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!



2. “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”



3. “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே...  ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”

“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”



4. “இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?”

“எப்படி  மன்னா  கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல்,  ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”



5. “போர்களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”

“யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”

“வேண்டாம்.  போர்க்களத்தில்  பின்வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”



6. “மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”

“ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’  என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”



7. “அமைச்சரே!  நாட்டு  மக்கள்  என்னைப்  பற்றி  என்ன  பேசிக்கொள்கிறார்கள்?”

“போர்க்களத்தில்  மண்ணையும்,  அந்தப்புரத்தில்  பெண்ணையும்  அசராமல்  கவ்வும்  அசகாய  சூரர்  என்று  பேசிக்கொள்கிறார்கள்,  மன்னா!”



8. “மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”



9. “அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”

“எப்படி?”

“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார்.  நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”



10. “புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக  ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

“ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைபிடிக்கறாராம்!”