Thursday, November 11, 2010

விஜய் +அமீர் = கண்ணபிரான் - புதுப்பட காமெடி கும்மி


1.படம் இன்னும் பூஜையே போடலை,அதுக்குள்ள கும்மி அடிக்கறது எதுக்கு?

கல்யாணமே ஆகலை,நிச்சயதார்த்தம் கூட ஃபிக்ஸ் பண்ணலை,பொண்ணை மட்டும் தான் பார்த்துட்டு வந்திருப்போம்,ஆனா பொண்ணு கூட ஃபோன்ல கடலை போடறது இல்லையா? அது மாதிரிதான்.


2. அமீர் டைரக்‌ஷன்ல விஜய் ஒரு படம் பண்ணப்போறாராமே?

ஆமா,அது பருத்தி வீரன்,இது படுத்தி எடுக்கற  வீரன்.


3.  ஏசுபிரான் - கண்ணபிரான் என்ன வித்தியாசம்?

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால சிலுவைல அறையப்பட்டு கொல்லப்பட்டாரு ஏசு பிரான். லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்.


4. இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.

5. அமீர்க்கும் ,விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

விஜய் தெலுங்குப்படத்தை ,மலையாளப்படத்தை ரீமேக் பண்ணுவாரு.ஆனா டீசண்ட்டா இந்தப்படத்துல இருந்துதான் சுடறோம்கறதை அறிவிச்சுடுவாரு.ஆனா அமீர் உலகப்படத்துல இருந்து உருவுவாரு,உல்டா பண்ணுவாரு,ஆனா ஒத்துக்க மாட்டாரு,கமுக்கமா இருந்துடுவாரு,நாம தான் கண்டு பிடிக்கனும்.


6.  ஆறிலும் சாவு நூறிலும் சாவுன்னு எதுக்கு பழமொழி வந்தது?

கண்ணபிரான் டைட்டில் பாரு ,6 எழுத்து,அந்தப்படம் 100 நாள் ஓடுனாக்கூட (அல்லது ஓட்டுனாக்கூட) ஆபத்து என்னவோ நம்ம தமிழ்நாட்டுக்குதான்.


7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?


8. அமீருக்கும் ,விஜய்க்கும் ஒத்து வருமானு டவுட் தானா,ஏன்?

எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே?


9.இந்தப்படம் ரிலீஸ் ஆகறது 2015 தீபாவளுக்குத்தானா?ஏன்?

அமீர் பருத்தி வீரனை 3 வருஷமா எடுத்தாரு,யோகியை 2 வருஷமா எடுத்தாரு.ஒரு திறமையான ஹீரோவை வெச்சு படம் எடுக்கவே அவருக்கு இத்தனை வருஷம் தேவைப்படுதே,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)


10. இந்தப்படத்தை சன் டீ வீ அதுக்குள்ள விலைக்கு வாங்கிடுச்சா,ஏன்?

மத்தவங்க யாராவது விலைக்கு வாங்குனா இளைய தளபதி விஜய் நடிக்கும்னு தெனா வெட்டா போட்டுக்குவாரு,இவங்க வாங்கிட்டா சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்னு போட்டு அவரை, அவர் பேரை அமுக்கிடலாமே,அதுக்குத்தான்.

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.

டிஸ்கி 2 - வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் மட்டுமே. (இன்னும் சந்தா கூட கட்டலை)  நான்தான் அதை உருவாக்கினேன் என்பதுபோல் ஆளாளுக்கு என்னை திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.

Wednesday, November 10, 2010

வல்லக்கோட்டை -குப்பைப்படத்தை கும்மி அடிக்கும் காமெடி விமர்சனம்


ஆக்‌ஷன் போங்கு அர்ஜூனும் பொணரஞ்சக இயக்குநர் வெங்கடேஷும்

வாங்க ,வெங்கடேஷ்,வாடா உலகத்தரமான படத்தை இயக்கியதற்குப்பிறகு அடுத்த உலகப்படம் இதுதானா சார்

அர்ஜூன்,சும்மா நக்கல் அடிக்காதீங்க.அங்கே மட்டும் என்ன வாழுதாம்?திருவண்ணாமலைனு ஒரு டப்பா படத்தை குடுத்தவர்தானே நீங்க?

ஏன்?வந்தே மாதரம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

அதுல நீங்க ஹீரோ கிடையாதே?மம்முட்டிதானே ஹீரோ.நீங்க செகண்ட் ஹீரோ,டம்மி பீசு.

சரி,இப்படி 2 மொக்கைகளை ஒண்ணு சேர்த்து ஒரு படம் பண்ணனும்னு புரொடியூசருக்கு ஐடியா வந்தது எப்படி?

அதுவா,புரொடியூசரு பி எஸ் சி மேத்ஸ் படிச்சவராம்.மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் அப்படினு படிச்சிருக்காராம்.2 உதவாக்கரைகளை இணைச்சா ஏதோ தேறும்னு தப்பு கணக்கு போட்டிருக்கார்.

சரி படத்துக்கு ஏன் வல்லக்கோட்டைனு கேவலமா டைட்டில் வெச்சிருக்கீங்க?அடிக்கடி வாயு புத்திரன்னு படம் பூரா பில்டப் குடுத்தீங்களே,அதையே டைட்டில் ஆக்கி இருக்கலாமே?

அப்படித்தான் முதல்ல வெச்சோம்,அது தூய தமிழ் டைட்டில் இல்லைனு சொல்லிட்டாங்க,சரி வரி விலக்குக்கு ஆசப்பட்டு தூய தமிழ்ப்பெயரா வெச்சுட்டோம்.



அட
சார்,நடிக்கறப்பத்தான் கதை என்னன்னு சொல்லலை,இப்பவாவது சொல்லுங்களேன்.

சந்தடி சாக்குல நடிச்சேன்னு எல்லாம் ரீல் விடாதீங்க,கதை என்னன்னா....
சிறைக்கைதி ஒருத்தன் சக கைதியின் தம்பியை காப்பாத்த வாக்கு தர்றான்.அவனோட தம்பி ஹாஸ்பிடல்ல.அவனை காப்பாத்த எடுக்கும் முயற்சில அவன் பல சிக்கல்ல மாட்டி இருக்கறதா தெரிய வருது.இதுக்குள்ள ரிலீஸ் ஆகி வர்ற சக கைதி பணத்துக்காக ஆசைப்பட்டு தம்பிக்கு எதிரா வேலை செய்யறான்.ஹீரோ அப்பப்ப வாயு புத்திரன் அவதாரம் எடுத்து அந்நியன் ரேஞ்சுக்கு அநியாயத்தை தட்டி கேக்கறார்.(தட்டாம கேக்கக்கூடாதா?)
சக கைதி தாந்தான் வாயுபுத்ரன்னு ஊரை நம்ப வெச்சு ஏமாத்தறார்......

சார்..தலையை சுத்துது,ஒண்ணும் புரியலை...இதுக்கு கதை என்னனு கேக்காமயே இருந்திருக்கலாம்.ஹீரோயின் புதுசு போல,ஃபிகர் நல்லாத்தான் இருக்கு...?

ஃபிகர் நல்லாருக்கு..ஆனா டூயட் சீன்ல உங்க பக்கத்துல நிக்கறப்ப அப்பா ,பொண்ணு மாதிரி இருக்கு...

சரி சரி.. பப்ளீக் .பப்ளிக் 


அட
குப்பையில் கிடைத்த மாணீக்க வரிகள்


1.டெரர் தென்னரசாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி - யோவ் நான் ஒரு ஜெயிலர்யா,ஜெயிலர்ட்ட பேசற மாதிரி பேசுங்க ,என்னவோ டெயிலர்ட்ட பேசற மாதிரி பேசறீங்களே..?

2.நல்ல நடத்தை இருந்தா ரிலீஸ் பண்ணுவாங்களாமே. /நான் நல்லா நடப்பேன் பார்க்கறீங்களா?

 எங்கே நட...

அட மூதேவி ,இப்படி நடந்தா ரிலீஸ் ஆனாக்கூட நீ ஊர் போய்ச்சேர ஒரு வாரம் ஆகுமேடா..

3.சார், எனக்குப்பதிலா அவரை ரிலீஸ் பண்ணுங்க,ஊர்ல ஏதோ முக்கிய வேலை இருக்காம்.

இது என்ன டி வி சீரியல்னு நினைச்சியா?யாரோட கால்ஷீட்டாவது கிடைக்கலன்னா இனி இவருக்குப்பதில் இவர்னு டைட்டில்ல காண்பிச்சு மாத்த?

4. வில்லன் சார்,உங்க பேரை சொல்லுங்க...

எதுக்கு?

இல்லை ,உங்க பேரை கேட்டா உச்சா போயிடுவாங்கனு எல்லாரும் பில்டப் குடுத்தாங்க..எனக்கு இப்போ உச்சா போகனும்..

5.டே நாயே இது ஜெயில்,பிரைவேட் பாத்ரூம் கிடையாது..உலகத்துலயே ஜன்னல் வெச்ச ஜட்டி போட்டிருக்கறது நீ ஒருத்தன் தாண்டா.

6. சார் நீங்க எனக்குத்தாத்தா மாதிரி...

அடப்பாவி ஊர்ல தாதா மாதிரி பில்டப் குடுத்து வெச்சிருக்கேன்,என்னை தாத்தா ஆக்கீட்டியே..

7.நான் இந்த ஜெயில்ல சப்பற வயசரா இருக்கேன்.

என்னடா உளர்றே.. ஓ சூப்பர்வைசரா இருக்கியா?உனக்குதான் இங்கிலீஷ் வர்லையே விட்டுட வேண்டியதுதானே,,

8.இப்படியே நீந்திப்போனா கரை வந்துடுமா?

அந்தப்பக்கம் போனா கரை வராது,ரத்தக்கறைதான் வரும் .அது வில்லன் ஏரியா.

9. ஏப்பா,அவனா உன்னை தண்ணில தள்ளி விட்டான்?

நான் என்ன மானங்கெட்டவனா?அவன் தள்ளி விடறவைக்கும் வேடிக்கை பார்க்க,நானே குதிச்சுட்டேன்.

10.

ஷகீலா தோளில் கை வைத்து கஞ்சா கருப்பு  - இதை மெயிண்டைன் பண்ணறது ரொம்ப சிரமமா இருக்கே....

ஓகே வெங்க்டேஷ் சார்,எப்படியோ கஷ்டப்பட்டு 10 வசனம் சொல்லீட்டீங்க.14 ரீல் படத்துல நீங்களே 10 வசனம்தான் ரசிச்சா சராசரி ஜனங்க எத்தனையை ரசிக்கப்போறாங்க.. சார் ஒரு டவுட்,அந்த பக்கெட் ஃபைட் ரொம்ப கேவலமா இருக்கு....

நீங்க போடற எல்லா ஃபைட்டுமே கேவலமாத்தான் இருக்கு அதுக்காக எல்லாத்தையும் கட் பண்ண முடியுமா?

அது சரி சார்,ஒரு சீன்ல போலீஸ் ஹீரோயின் கிட்டே “என் கூட ஒரு நைட் படுத்துடு,இல்லைன்னா பொய்க்கேஸ் போட்டுடுவேன்”னு  சொல்ற மாதிரி கேவலமா ஒரு வசனம் வருதே ,மாதர் சங்கங்கள் எதிர்க்க மாட்டாங்களா?

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி அர்ஜூன்,என்னமோ உங்க படத்துக்கு  லேடீஸ் கூட்டம் அலை மோதற மாதிரி பில்டப் குடுக்கறீங்களே...

சரி சரி சரக்கு ரெடியானு  ஒரு டப்பாங்குத்து பாட்டு வெச்சிருக்கீங்களே,அது வேணா பாக்கற மாதிரி இருக்கு.கடைசியா ஒரு கேள்வி, இந்தப்படத்தை என்ன தைரியத்துல தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுனீஙக?

ஏதோ ,லீவ் டைம்ல ரிலீஸ் ஆனா வெள்ளீ சனி ஞாயிறு அப்படினு 3 நாளாவது ஓடும்னுதான்.

ஆனந்த விகடன்,குமுதம் மதிப்பீடு எப்படி இருக்கும்?

இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?வீணாப்போன படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடற அட்ராசக்க வேணா போடும்.

டிஸ்கி  - ராம்சாமி - டேய் நாயே,இங்கே வா உன் பேர் என்ன?

சி பி  - என் பேரு சி பி எஸ் .

ராம்சாமி - என்னவோ பெருசா ஐ பி எஸ் படிச்ச மாதிரி பில்டப் எதுக்கு?இந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதுன்னு யாரவது கேட்டாங்களா?

இல்லைண்ணே...

ராம்சாமி - அப்புறம் என்ன இதுக்கோசரம் எழுதுனே,நீயே டைட்டில்ல குப்பைன்னு சொல்லிட்டே இல்ல..இனிமே எந்தப்படத்துக்கும் விமர்சனமே எழுதக்கூடாது,.. புரிஞ்சுதா..

சரிங்கண்ணே... 

ராம்சாமி - இன்னைக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்யா

Tuesday, November 09, 2010

இம்சை அரசன் VS மங்குனி அமைச்சர்



1. “மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்?”


“பிச்சைக்காரனாக மாறுவேடத்தில் நகர்வலம் வந்த மன்னரிடம் ஒரு ஆள், ‘தூ! இதெல்லாம் ஒரு பொழப்பா’னு திட்டிட்டுப் போனானாம்!”




2. “மன்னா! எப்போது போர்க்களம் வந்தாலும், நீங்கள் போரிட வருவதே இல்லை. கூடாரத்திலேயே தங்கி விடுகிறீற்கள்!”



“அதனாலென்ன தளபதி?”


“உங்களுக்கு ‘கூடாரம் கொண்டான்’ என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டார்கள் நம் மக்கள்!”




3. “மன்னா! எதிரி நாட்டு மன்னருக்கு என்ன தைரியம் இருந்தால், நம் இருப்பிடத்துக்குள்ளேயே வந்து ‘யாரங்கே’ என்று குரல் கொடுப்பார்?”


“ஐயையோ தளபதி! உணர்ச்சிவசப்பட்டு நாம் ஒளிந்திருக்கும் இடத்தை சத்தம் போட்டு காட்டிக் கொடுத்துவிடாதே!”




4. “மோஹனா... உன் ஞாபகமா வெச்சுக்க உன் போட்டோ ஒண்ணு குடேன்”


“ஏய் மிஸ்டர்... செருப்பு பிஞ்சிடும்”


“போட்டோ தானே கேட்டேன். பேட்டாவா கேட்டேன்?”




5. “கலி முத்திடுச்சுனு புலம்பிட்டு இருந்த தலைவர், இப்போ களி முத்திடுச்சுனு புலம்பறாரே”


“இப்போ... ஜெயில்ல தானே இருக்காரு?”




6. “ஸ்கூலுக்கு ஏன் ரெண்டு நாளா வரலை...?”


“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”







7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”


“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”




8. “வெற்றி! வெற்றி! போரில் மகத்தான வெற்றி!”


“எழுந்திருங்கள் மன்னா. பொழுது விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது.”




9. “ஏன் லேட்?”


“பைக் பஞ்சர்!”


“பஸ்ல வர்றது?”


“பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லை!”




10. “உங்க மாமியார் எமனோட போராடறாரு!”


“அவங்க எப்பவும் இப்படித்தான் டாக்டர். யார் கூடயாவது மல்லுக்கட்டிக்கிட்டே இருப்பாங்க!”




11. “டாக்டர், நாய் என்னை கடிச்சிடுச்சி!”


“எங்கே?”


“அடையாறுல ஒரு தடவை. அண்ணா நகர்ல ஒரு தடவை!”




12. “ அத்தான்,எதுக்கு விடிக்காலையில அஞ்சு மணிக்கு என் முகத்துல தண்ணீர் தெளிக்கிறீங்க?”


“உங்கப்பாதான் உன்னை பூ மாதிரி பார்த்துக்கணும்னு சொன்னாரு!”






14. “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாம கழுத்துல டை கட்டி இருக்கீயே?”


“இள நரையை மறைக்க ‘டை’ யூஸ் பண்ணுன்னு சொன்னாங்க.”




15. எழுத்தாளர் 1: “உங்க கதையைப் பாராட்டி இருபத்தேழு லெட்டர் வந்திருக்கு”


எழுத்தாளர் 2: “சரியாப் பாருங்க, முப்பது இருக்கணும், நான் தானே எண்ணித் தபாலிலே சேர்த்தேன்”




16. “தடிமாடு... க்ளாஸ்ல பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...”



“அதை நான் சரியா எண்ணலை சார்...”

தலைவருக்கு சினிமா நாலெட்ஜே கிடையாதா?

1. தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜே  கிடையாதுனு  எப்படி  சொல்றே?

அய்யன்  வள்ளுவரோட  வாழ்க்கை  வரலாறு  பற்றிய  படம்தான்  மிருகம்  ஆதி நடிச்ச  ‘அய்யனார்’  படமா?-னு  கேட்கறாரே?



2. விக்ரம்  கூட  விளம்பரப்  படத்துல  நடிக்க  ஆரம்பிச்சுட்டாரே? [டீ advt]

“அட  ராவணா”



3. வெளிநாட்டுடன்  நல்லுறவு  நீடிக்கிர்றது  அப்டினு  தலைவர்  சொல்றாரே?

ஆமாமா,  லண்டன்  S.I.S.  நிறுவனம்  கூட  ஃபாரீன்  தானே? காமன்வெல்த்  ஒளிபரப்பு  உரிமைல  ஊழல்  நட்ந்திருக்கே?



4. தலைவருக்கு  G.K.  கம்மினு  எப்படி  சொல்றே?

கவர்ச்சி  நடிகை  சனாகான்  ஷாரூக்கானோட  தங்கையா?-னு  கேட்டாரே?



5. மின்  வாரியம்  மூன்றாகப்பிரிக்கப்  பட்டிருக்கே,  இனி  மின்  சப்ளை  சீராகிடுமா?

ம்ஹும்,  எனக்கென்னவோ  ஒவ்வொரு  பிரிவும்  முறை  வெச்சு  டெய்லி  3 தடவை  கரண்ட் கட்  ஆகும்னு  தோணுது.



6. தலைவரே!  காமன்வெல்த்  போட்டி  ஒளிபரப்பு  உரிமைல  கூட்ட  ஊழல்  நடந்திருக்காமே?

அப்டியா?  இந்த  ரூட்  எனக்கு  தெரியாம  போச்சே?



7. மாப்ளை,  ஒரு  குவாட்டர்  சொல்லு,  2  பேரும்  ஷேர்  பண்ணிக்கலாம்.

ஸாரி,  கூட்டு  குடிநீர்த்  திட்டம்  இதுல  ஒர்க்  அவுட்  ஆகுது,  தனித்தனியா  ஆளுக்கு  ஒரு  ஆஃப்  குவாட்டர்  சொல்லிக்கலாம்.



8. போர்  ரகசியம்  வெளியானதாக  நியூஸ்  வருதே,  தளபதியாரே?

ஆம்  மன்னா,  நீங்க  போரைத்  தவிர்க்க  மானங்கெட்டு  எதிரியின்  காலில்  விழுந்ததை  எவனோ  ஃபோட்டோ  பிடிச்சு  இண்டர்நெட்ல  வெளியிட்டுட்டான்.



9. கொத்தடிமைகளை  தலைவர்  மீட்கப்  போறாராமே?

அது  எப்படி?  நாட்டுல  கல்யாணம்  ஆன  ஆம்பளைங்க  2  கோடி  பேர் இருக்காங்க.  அத்தனை  பேரையும்  இவரால  காப்பாத்த  முடியுமா?



10. தலைவரே!  முல்லை  பெரியாறு  அணையை  உடைக்கப்  போறாங்களாம்.

என்  இணையை (ஜோடி) ஒண்ணும்  செய்யாம  இருந்தா  சரிதான்.



11. மன்னா!  உங்க  சிலையை  சிலர்  அவமானப்  படுத்திட்டாங்க.

விடுய்யா!  என்னையே  அவமானப்  படுத்திட்டாங்க.  என்  சிலையை  அவமானப்படுத்துனா  என்ன  இப்போ?



12. மன்னா,  அமைச்சருக்கு  உங்கள்  மேல்  ஏதோ  காழ்ப்புணர்ச்சி.

எப்படி  சொல்றீங்க?

தில்லு  உள்ள  ஆம்பளையா  இருந்தா  எங்க  மன்னர்  மேல  போர் தொடுத்துப்பார்னு  எதிரிக்கு  ஓலை  அனுப்பி  இருக்காரு.



13. இருக்கற  பிரச்சனை  பத்தாதுனு  இவரு  வேற  அப்படினூ  சலிச்சுக்கறியே  ஏன்?

முல்லைப்  பெரியாறு  ராசி  இல்லை,  எப்பபாரு  பிரச்சனை,  தொல்லை, பேசாம  அதுக்கு  மல்லிகை  பெரியாறு  அணை-னு  பெயர்  மாற்றம்  பண்ணிடலாம்  அப்டினு சொல்றாரு.



14. தலைவரே!  காமன்வெல்த்  பொட்டில  இந்தியாவுக்கு  ரூ.250  கோடி  லாபமாம்.

அதை  விடுய்யா,  நமக்கு  எவ்ளவ்வு  லாபம்?



15. இன்ஜினியர்  கொலைக்கு  அந்த  லேடி  மேல  வெச்சிருந்த

ஒரு  தலைக்காதல்தான்  காரணமா?

இல்லை.  தறுதலைக்காதல்தான்  காரணம்.



16. டீக்கடைக்கு  டீ  குடிக்கப்  போன  தலைவரை  ஏன்  கைது  பண்ணிட்டாங்க?

தீக்குளிக்கப்  போனதா  யாரோ  புரளி  கிளப்பி  விட்டுட்டாங்க.


டிஸ்கி 1 - கலைஞரின் ராசியான நிறமான மஞ்சள் துண்டுக்கும்,காஜல் அகர்வால் அணீந்த மஞ்சள் முண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

டிஸ்கி 2 - ஜோக் 12 க்கும் மங்குனி அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Monday, November 08, 2010

ரோஜாவின் ராஜா (ஆர் கே செல்வமணி அல்ல)

      




சுதந்திர இந்தியாவை உருவாக்கிய சிற்பி

      பம்பாய் ஆஸாத் மைதானத்தில், 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேருஜி, மெளலானா ஆஸாத், புலாபாய் தேசாய் ஆகியோர் அதில் பேசவிருந்தார்கள்.

            நேருஜி பேசத் தொடங்கியபோது பெருமழை கொட்டத் தொடங்கியது. இருந்தாலும் கொட்டும் மழையிலும், இலட்சக்கணக்கான மக்கள் கொஞ்சங்கூட அசையாமல் அமர்ந்து, நேருஜியின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

            அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார். அதைக் கண்டு,”மக்கள் மழையில் நனையும்பொழுது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேரு. குடை பிடிப்பவரோ நேருஜி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டே இருந்தார்.

            நேருஜி பொது மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன்,”இவர் என் சொல்லையும் மீறிக் குடை பிடித்திருப்பதைப் பார்த்தால், இவர் ஒலிபெருக்கியின் சொந்தக்காரராக இருப்பார் என்றுநினைக்கிறேன். இவர் எனக்காகக் குடை பிடிக்கவில்லை. ஒலிபெருக்கியை மழையிலிருந்து
பாதுகாக்கவே குடையைப் பிடிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

            அதைக் கேட்டதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.


லால் பகதூர் சாஸ்திரி


     ஒரு முறை, பம்பாயில் குழந்தைகளின் விழா ஒன்றுக்கு லால்பகதூர்
சாஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதற்காக எழுந்தார், லால்பகதூர் சாஸ்திரி.

            ”குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய
அறிஞன் அல்ல. அப்படியிருக்க இந்தக் குழந்தைகள் விழாவிற்கு என்னை ஏன் அழைத்தார்கள் என்று யோசித்தேன். அப்புறந்தான் உண்மை தெரிந்தது. என் உடல் தோற்றம் ஒரு பத்து வயதுச் சிறுவனைப் போன்று அவ்வளவு
குள்ளமாக இருக்கிறது. ஒரு சிறுவனைப் போலவே நான் தோற்றமளித்த
காரணத்தால்தான் இங்கே என்னை அழைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.”

            இதைக் கேட்டதும், அங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்.