Friday, October 08, 2010

நயன்தாரா சீதையா?என்ன கொடுமை சிம்பு இது?




1.சீதை கேரக்டர்ல நயன் தாரா நடிக்கறாங்களாம்.

நல்ல வேளை,வால்மீகியோ,கம்பரோ உயிரோட இல்லை.


2. மேடம்,ஹிந்தில நீங்க சீதையா நடிச்ச ராமாயணம் சூப்பர் ஹிட்,இப்போ அதையே தமிழ்ல ரீமேக் பண்றோம்,அதுலயும் நீங்க சீதையாவே நடிக்கனும்.

ஓக்கே ,நோ பிராப்ளம்,ஆனா ஒரு கண்டிஷன்,தமிழ்ல எனக்கு புது ராமர் வேணும்.


3 . அறிஞர் அண்ணா சொன்னதை ஃபாலோ பண்ற ஒரே நடிகை நயன் தாரா தான் அப்படினு எப்படி சொல்றே?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுனு சொன்னாரே?


4. ஐயா படத்துல அறிமுகமான நயனுக்கும்,இப்போ இருக்கற நயனுக்கும் என்ன வித்யாசம்?

அவங்க ரசிகர்களோட தூக்கத்தை கெடுத்தாங்க,இவங்க ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கறாங்க.


5. நயன் தாரா மாதிரி தீபாவளி கொண்டாட யாராலும் முடியாது.

ஏன்?

போன வருஷம் சிம்புவோட தலைதீபாவளி கொண்டாடுனாங்க,இந்த வருஷம் பிரபுதேவா கூட தலைதீபாவளி கொண்டாடறாங்க.

6. பிளஸ் டூ பரீட்சைல இப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்கனு யாரும் எதிர்பாக்கலை.

ஏன்?

பிரபுதேவாவுக்கும்,சிம்புவுக்கும் உள்ள உறவு முறை சகலை முறையா? பங்காளி முறையா?அப்படினு கேட்டிருக்காங்க.


7. எந்த அடிப்படைல சிறந்த தம்பதி விருது குடுத்தாங்க?

ஏன்?அவருக்கு இவரு ரெண்டாவதுவது சம்சாரம். இவங்களுக்கும் அவரு ரெண்டாவது சமாச்சாரம்.


8. பிரபுதேவா,நயன் தாரா ரெண்டு பேருக்கும் அஞ்சு எழுத்துதான் ,எப்படி பெயர் பொருத்தம்?

ஹூம்,எல்லாம் என் தலைஎழுத்து.


9.மேடம்,முதல்ல சிம்பு பேரை பச்சை குத்துனீங்க,இப்போ பிரபுதேவா பேரை பச்சை குத்தி இருக்கீங்க,இப்படியே போனா உங்களுக்கு நடமாடும் பச்சையம்மாகல்லூரினு எல்லாரும் பட்டப்பெயர் வெச்சுடுவாங்க,ஜாக்கிரதை.


10 . தீபாவளிக்கு வரப்போற ஜவுளிக்கடை விளம்பரத்துல நயன் தாரா பல கெட்டப்ல வர்றாராம்.

நிஜ வாழ்க்கைல பல செட்டப்போட வந்தவர் ஆச்சே?இது ஒரு பெரிய மேட்டரா?

Thursday, October 07, 2010

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலகம் அதிர்ச்சி


தனி நபர் தாக்குதலை என்றுமே நான் விரும்பியதில்லை. மேலும் ஒருவரின் பர்சனல் லைஃப்ஃபில் அத்து மீறி நுழைவதும் நாகரீகமானது அல்ல. இருந்தாலும் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதன் காரணம் நீங்கள் இது போல் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்.

சித்தோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். ஈரொட்டிலிருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் அந்த ஊரின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.அக்டோபர் 1ந்தேதி அன்று நடந்த சம்பவம் இது.நான் சித்தோடு சென்று அந்த பதிவரின் வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். அவரது மனைவி கதவைத்திறந்து ,”வாங்கண்ணே, அவர் ஆஃபீசில்தன் இருக்கிறார்”என்றார். நானும் ஆஃபீஸ்க்கு சென்றேன். 2 கிமீ தூரம்தான்,அவரது வீட்டிற்கும், ஆஃபீசுக்கும்.

ஆஃபீஸ் பூட்டி இருந்தது.செல்லுக்கு ட்ரை பண்ணுனேன். கட் பண்ணினார்.எஸ் எம் எஸ் அனுப்பினேன். எங்கேப்பா இருக்கேஎன.... அவர் பதில் அனுப்பினார். ”நான் எந்திரன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”

அடப்பாவி, என்கிட்ட சொல்லாமயே படத்துக்கு போய்ட்டியா? உன் மனைவி கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாமெ? எனக்கேட்டதுக்கு அவர் "ம்க்கும், இதுக்கே ரூ 300 செலவு, மனைவியையும் கூட்டிட்டுப்போனா செலவு பட்ஜெட் ஏறிடும். எனக்குத்தான் சினிமா விமர்சனம் போடனும்னு தலை எழுத்து. அவளுக்கென்ன. மெதுவா பார்க்கட்டும்" என்றார்.



இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் இது ஒரு மொக்கைப்பதிவென்று., அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு இது 100வது பதிவு. அதைக்கொண்டாடவும், என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய குருவுக்கு நன்றிக்கடன் கட்டவும்,(காட்டவும்) இந்தப்பதிவை உபயோகப்படுத்திக்கொண்டேன்.

அந்தப்பதிவர் வேறு யாரும் அல்ல,நல்லநேரம் ஆர் கே சதீஷ்குமார்தான். நாங்கள் இருவரும் 15 வருடங்களாக நண்பர்கள். நெட் பற்றி எனக்கு சொல்லிக்குடுத்ததும், வழிகாட்டியாக இருந்ததும் அவர்தான். டெக்னிக்கல் அறிவில் நான் பூஜ்யம் (மற்ற அறிவில் மட்டும் ராஜ்யம் அமைச்சுக்கிழிச்சீரா?என்று கேட்காதீர்). பிளாக்கில் எனக்கு டைப் பண்ண மட்டுமே தெரியும். மற்ற அனைத்து இடுகை இணைப்பு, மார்க்கெட்டிங்க் விஷயங்கள் அனைத்தும் என் நண்பர் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.

பதிவுலக தர்மப்படி இதுவரை போட்ட 99 இடுகைகளில் சூப்பர்ஹிட் ஆன பதிவுகள் லிஸ்ட்டும், லின்க்கும்


1. குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-

இந்த வாரக் குமுதம் இதழில் ‘ஓ’ பக்கங்கள் கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளிவரா காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்.

ஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.

3. கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?

கோடம்பாக்கத்தில் இப்போது காமெடிக்குப்பஞ்சம் ஏற்பட்டது போல் ஒரு மாயத்தோற்றம் . பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு அடைந்ததைப்பார்த்து ஆளாளுக்கு இப்போது காமெடி ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்


4. பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்

பத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.

5. புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்

கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை, அப்படியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள், அப்போ நீங்க நம்ம ஆளு. பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி. 72 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


டிஸ்கி 1 - டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு? பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்,அதனால்தான் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பதிவுலகத்திற்கே ஏற்பட்டதாக நினைத்துக்கொண்டேன்……..ஹி…ஹி…ஹி

டிஸ்கி 2 - ஓட்டு போட தமிழ் மணம் பட்டை தெரியவில்லை எனில் பதிவின் டைட்டிலை ஒரு முறை க்ளிக் செய்யவும்

Wednesday, October 06, 2010

எந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் நான் கேட்கும் சில கேள்விகள்


 
சமீபகாலமாக அமைதியாக இருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.2 தினங்களுக்கு முன் அவரது பிளாக்கில் அவர் தெரிவித்த கருத்து



கோபமான இரண்டு பேர்…

ரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா, அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால் இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.  ஒருவர், கமல்ஹாசன்.  காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்.  இரண்டாவது, சாரு நிவேதிதா.  அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…
(எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது.  மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)
4.10.2010.
1.50 p.m.


எனது கேள்விகள்


1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையா?கதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா?

2.ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமா?ரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.

3.சக எழுத்தாளர்,அமரர்,சீனியர் என 3 கிரேடுகளில் எதிலாவது நீங்கள் மரியாதை செய்தீர்களா?அமரர் சுஜாதாவிற்கு உங்களைப்போல் 10 மடங்கு வாசகர்கள் இருப்பது தெரியாதா உங்களுக்கு?


4.ஃபேன்சி பனியன் நாவல்.ஜீரோ டிகிரி நாவல்,மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் ஒரு ஜனரஞ்சகமான படத்தை குறை கூறுவது சரியா?

5.படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனிப்பட்ட விரோதம்,பொறாமை இவற்றின் காரணமாக இழிவுபடுத்தி எழுதுவது சரியா?படைப்பாளர்கள்.எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பு பாராட்டையும் பெற்ற களவாணி படத்தையே குறை சொன்னவர் ஆச்சே நீங்கள்?

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?

Tuesday, October 05, 2010

எந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும்,ரஜினி ரசிகர்களின் பதிலடியும்

சர்ச்சை 1 - ரஜினியின் அறிமுகக்காட்சி மிக சாதாரணமாக இருக்கே,ஏன்?ஒரு மாஸ் ஹீரோ இப்படித்தான் சிம்ப்பிளாக இண்ட்ரடக்‌ஷன் ஆவதா?

பதிலடி - கதையும்,சூழ்நிலையும் அனுமதித்தால் மட்டுமே ஹீரோவுக்கான பில்டப் தர முடியும்.பாட்ஷா,படையப்பா,மன்னன் மாதிரி சவால் விடும் ஆக்‌ஷன் கதை என்றால் ஓப்பனிங் ஃபைட் அல்லது பில்டப் இண்ட்ரடக்‌ஷனுக்கு சான்ஸ் உண்டு.ஏன் கமலின் லேட்டஸ்ட் படமான உன்னைப்போல் ஒருவனில் சர்வ சாமான்யனாக மார்க்கட் போகும் சராசரி மனிதன் போல் அறிமுகம் ஆகவில்லையா?அன்பே சிவம்,மகாநதி,உன்னைப்போல் ஒருவன்,ஹேராம் உட்பட பல படங்களில் ஹீரோ சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?அவ்வளவு ஏன்?ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வசந்த் இயக்கிய வேதம் படத்தில்,விஜய்காந்த் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படத்தில் சாதரணமாக அறிமுகம் ஆகவில்லையா?எப்படி அறிமுகம் ஆகறார்ங்கறது முக்கியம் இல்லை.


சர்ச்சை 2 -ரோபோ கேரக்டரில் ரஜினியின் நடிப்பில் லேசாக செயற்கை இழை தட்டுகிறது.காமெடி இயல்பாக வரவில்லை.கமல் அந்த கேரக்டரில் இதை விட சிறப்பாக நடித்திருக்க முடியும்.

பதிலடி - யார் வேணாம்னு தடுத்தது?வந்த வாய்ப்பை கோட்டை விட்டுட்டு இப்போ லபோ திபோனு அடிச்சுக்கிட்டு என்ன பிரயோஜனம்?சயிண்ட்டிஸ்ட் கேரக்டரில் கமல் நடிச்சிருந்தா இந்தளவு மாஸ் கிடைச்சிருக்குமா?ஓப்பனிங்க் இவ்வளவு பிரம்மாண்டமா வந்திருக்குமா?


சர்ச்சை 3 - கருணாஸ்,சந்தானம் இருவருக்கும் சரியான வாய்ப்பு தரப்படவில்லை.சும்மா வந்துட்டு போறாங்க,இன்னும் காமெடியில் அவங்களை யூஸ் பண்ணி இருக்கலாம்.

பதிலடி - படத்தின் காமெடி போர்ஷனை ரோபோ ரஜினி (சிட்டி) டாமினேட் செய்வதால் அப்படி தோன்றி இருக்கலாம்.ஃபுட்டேஜ் பிராப்ளமாகக்கூட இருக்கலாம்.(அதாவது படத்தின் நீளம் கருதி காமெடி போர்ஷனை குறைத்தல்).இதே பிரச்சனை சிம்புவின் மன்மதன் படத்தின் போதும் வந்தது,கவுண்டமணியின் காமெடிகாட்சிகள் பல வெட்டி எறியப்பட்டன.பொதுவாக ஒரு படத்தில் நீளம் அதிகமாக இருந்தால் அதற்கு முதலில் பலி ஆவது காமெடி காட்சிகளே.


சர்ச்சை 4 - ஐஸ்வர்யாராய்க்காக காத்திருந்ததால்தான் இந்தப்படம் இவ்வளவு தாமதமாக வந்தது.ராவணன் பட ஷூட்டிங்கில் அவர் இருந்ததால் கால்ஷீட் பிராப்ளம் வந்தது.ஒரு சூப்பர்ஸ்டார் படம் ஹீரோயினுக்காக வெயிட் பண்ணலாமா?ஏன் கோலிவுட்டில் வேறு நடிகைகளே இல்லையா?

பதிலடி - ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர வேண்டும் (படத்தில்தான்)என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை.பல படங்களில் அதற்கான முயற்சி செய்யப்பட்டது.ஆனால் இப்போதுதான் கை கூடி வந்தது.தசாவதாரம் படத்தில் அசின்தான் கமலுக்கு ஜோடி.ஆனால் மும்பை மார்க்கெட்டுக்காக கமல் மல்லிகா ஷெராவத்தை ஊறுகாய் ஆக்கவில்லையா?அவருக்காக 2 மாதங்கள் காத்திருந்து ஷீட் பண்ணவில்லையா?விக்ரம் படத்தில் அம்பிகா,லிஸி என 2 ஜோடி இருந்தும் டிம்பிள் கபாடியாவுக்காக 3 மாதங்கள் வீணாக்கவில்லையா?ஹேராம் படத்தில் ராணி முகர்ஜி கால்ஷீட்டுக்காக காத்திருக்கவில்லையா?



 



சர்ச்சை 5 - படத்தில் கடைசி 20 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார்தான்.ஏதோ கார்ட்டூன் சேனல் பார்ப்பது மாதிரி இருக்கே தவிர சிலாகிக்க முடியவில்லையே?ராமநாராயணன் பட காட்சிகள் போல்,தான் இருக்கே தவிர ஷங்கரின் பிரம்மாண்டம் இல்லையே ,ஏன்?

பதிலடி - ஆளவந்தான் படத்தில் மணிஷா கொய்ராலா அடிபடுவது மாதிரி சீன் 15 நிமிடம் கார்ட்டூனாகவே காண்பிக்கப்படவில்லையா?அப்போது ரசிகர்களும் ,பத்திரிக்கைகளும் எள்ளி நகையாடவில்லையா?அதற்கு ஒண்ணும் இது மோசமில்லை.தசாவதாரம் படத்தில் கமலின் பல கேரக்டர்களுக்கான மேக்கப் ஏதோ மாறுவேஷப்போட்டிக்குத்தயார் ஆவது போல் அன் இயற்கையாக (நன்றி - சுஜாதாவின் வார்த்தை உபயோகம்) இருந்ததே?அந்தளவு மோசமில்லை.

சர்ச்சை  6 - படத்தின் டிக்கட் ரூ 300 என நிர்ணயித்திருக்காங்களே?இது ஓவரா இல்லை?ரசிகனை ஏமாத்தற வேலை இல்லையா?

பதிலடி -நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலையே?வீடு வீடா வந்து கையைப்பிடிச்சு இழுத்து இந்தப்படத்தை பார்த்தே ஆகனும்னு சொல்லலையே.ரேட் அதிகம்னு நினைக்கறவஙக ஏம்ப்பா வர்றிங்க?கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா.பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்.மார்க்கெட் இருக்கு,ரேட் ஃபிக்ஸ் பண்றான்.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளிக்கொள்.


சர்ச்சை 7 -படத்தில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லையே?ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங்க்.படம் பார்த்தவங்க ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லைனு சொல்றாங்களே?

பதிலடி - இதே ஷங்கரின் சிவாஜி படத்துல ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் வைக்கலையா?மொட்டை பாஸ் ஸ்டைல்,மெயின் ஹீரோ ஸ்டைல்னு வெரைட்டியா கலக்கலியா?இதுல கதை அனுமதிக்கலை.ஒரு சயிண்டிஸ்ட் என்ன பஞ்ச் டயலாக் பேசிவிட முடியும்?அப்படியே பேசினாலும் அது நகைப்புக்கு இடம் ஆகி விடாதா?அதையும் தாண்டி ரோபோ ஒரு இடத்தில் “ரோபோ” என ஸ்டைலாக சொல்வது போதுமே?
மகாநதி படத்தில் ஏன் பிரேக் டான்ஸ் வைக்கலைனு கேக்கமுடியுமா?



சர்ச்சை 8 - படத்தில் ரஜினியின் டாமினேஷன் அதிகமா இருக்கே?

சந்திரமுகி படத்தில் ஜோதிகா,வடிவேல் 2 கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லையா?அதில் ரஜினி அடக்கிதானே வாசித்தார்?வேட்டையன் கேரக்டரில் 10 நிமிஷத்தில் கலக்கவில்லையா?கதை,திரைக்கதைக்குத்தகுந்தாற்போலத்தான் எல்லாம்.

ஏன் இதே கமல் குருதிப்புனல் படத்தில் அர்ஜூனை டம்மி பண்ணவில்லையா?வெற்றி விழா படத்தில் பிரபுவை இருந்த இடம் தெரியாமல் ஆக்கவில்லையா?அன்பே சிவம் படத்தில் மட்டுமே மாதவனுக்கு சரி சம கேரக்டர் குடுத்தார்,மற்றபடி கடந்த 15 வருடங்களில் கமல் தனக்கு நிகரான ஒரு கேரக்டரை யாருக்கும் தரவில்லை.தான் மட்டுமே தனித்து தெரிய வேண்டும் என நினைத்தார்.



ஆனால் ரஜினி மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு தன்னை விட அதிக வாய்ப்பு குடுத்தார்,அவர் கையால் அறை கூட வாங்கினார்.படையப்பா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனுக்கு வலிமையான கேரக்டர் தந்தார்.இந்தப்படத்தில் 2 கேரக்டர் என்பதால் பார்வையாளனுக்கு ஆக்கிரமிப்பு போல் ஒரு மாயத்தோற்றம் தெரிகிறது,அவ்வளவுதான்..


டிஸ்கி -இந்தப்பதிவைப்படித்த அனைவருக்கும் ஒரு தகவல்.யாரும் இப்படி பேசிக்கொள்ளவில்லை,நானே கமல் ரசிகனாக் இருந்து எனக்குத்தோன்றிய கேள்விகளை எழுப்பி ,ரஜினி ரசிகனாக இருந்து பதில் அளித்துக்கொண்டேன்.நான் உண்மையில் கமல் ரசிகனும் அல்ல,ரஜினி ரசிகனும் அல்ல,சினிமா ரசிகன்,நல்ல சினிமா அது யார் நடித்தாலும் பார்ப்பவன்.

டிஸ்கி 2 - கோபத்தில் மைனஸ் ஓட்டு போடும்  மைனாரிட்டி மைனர்கள்  தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தேடி குழம்ப வேண்டாம்.பதிவின் டைட்டிலை ஒரு கிளிக் செய்தால் போதும், தமிழ்மணம் தெரியும்,நீங்கள் மைனஸ் ஓட்டைப்போட்டு ஜென்ம சாபல்யம் அடையுங்கள்.

பாலிடிக்ஸா?பாலிடிரிக்ஸா?



1. 2011 அதுக்குள்ளே வந்துடுச்சே-னு தலைவர் ஏன் புலம்பறாரு?

2011-ல் CM ஆவது திண்ணம்-னு 2006-ல சவால் விட்டிருந்தாராம்.





2. தலைவருக்கு சொல்புத்தியும் கிடையாது, சுயபுத்தியும் கிடையாது.

முதல்ல புத்தி இருக்கா?னு விசாரிங்க.





3. தலைவரே! காமன்வெல்த் போட்டி பற்றி என்ன நினைக்கறீங்க?

காமனா எல்லாருக்கும் வெல்த் ஏற்படுத்தற ஹெல்த்தான போட்டி-னு
நினைக்கறேன்.





4. உன் காதலன் ஒரு டுபாக்கூர் பார்ட்டி-னு எப்படி சொல்றே?

லவ் லெட்டர் ஒவ்வொண்ணுலயும் “படித்தவுடன் கிழித்துவிடவும்.
ஆதாரமாக இதை வைத்துக்கொள்ளவேண்டாம்” அப்டினு எழுதியிருக்கானே?





5. அயோத்தி தீர்ப்பு சொதப்பல் ரகம்-னு எப்படி சொல்றீங்க தலைவரே?

நமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காத எல்லாமே சொதப்பல் ரகம்தான்.





6. ஜட்ஜ்: நீ கொலை பண்ணுனதைப் பார்த்த சாட்சி இருக்கு.

கைதி: சாட்சியோட அட்ரஸ் குடுங்க. அவனையும் கொன்னுட்டா போச்சு.








7. தேவையே இல்லாம எதுக்கு அரசியல்வாதிங்க கூட கான்டாக்ட் வெச்சு இருக்கீங்க?            ஏதாவது கான்ட்ராக்ட் (CONTRACT) கிடைக்கும்னுதான்.           8. வரவர தலைவர் குழப்ப ஆரம்பிச்சுட்டார்.    எப்படி?   சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்-னு சொல்றாரே? சொல்லாம அது எப்படி வாக்குறுதி ஆகும்?                   9. டெரரிஸ்ட் எல்லாரும்ம் சாமியார் மாதிரி டிரஸ் பண்ணி இருக்காங்களே, ஏன்?             காவி தீவிரவாதமா இருக்குமோ? என்னமோ?                  10. தலைவர் கட்சிமாநாட்ல மைக்ராஸ்கோப் எடுத்துட்டு வந்திருக்காரே,ஏன்?   கட்சியோட வளர்ச்சியை பார்க்கப்போறாராம்.                    11. தலைவரே! ஆட்சில பங்கு வேணாம்-னு திடீர்-னு பல்டி அடிச்சிட்டீங்களே, ஏன்?             கிடைச்சவரைக்கும் லாபம்-னு குடுக்கற சீட்டை வாங்கிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன்.                     12.தலைவரு பயமே இல்லாம தெனாவெட்டா இருக்காரே, எப்படி?         பதவில இருக்கறவரைதான் பதவியை காப்பாத்த பயப்படனும். அவரைத்தான் தூக்கிட்டாங்களே?       டிஸ்கி - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்