Saturday, September 11, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - சினிமா விமர்சனம் - காமெடி கலாட்டா


சந்தானம் ஹீரோவா? ஆர்யா ஹீரோவா? என்று கேள்வி கேட்கும் அளவு சந்தானத்தின் டாமினேஷன் தூக்கல் ரகம் என்றால் படம் முழுக்க அவர் தூவிச்செல்லும் ஜோக் மழை கலக்கல் ரகம்.வேலை இல்லாத வெட்டாஃபீஸர் ஆர்யா,ஒரு காலேஜ் லெக்சரரை காதலிக்கிறார்.(நயன்தாரா ஆர்யாவின் கொழுந்தியா என்று திரைக்கதையை கொண்டு செல்வதில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது.) லாஜிக்,கீஜிக் என்றெல்லாம் கவலைப்படாமல் இயக்குநர் நகைச்சுவையில் பின்னிப்பெடெலெடுக்கிறார்.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஆர்யா அரியர் எக்சாமுக்கு பிட் எடுத்துப்போகும்போது அவரது குடும்பம் வாழ்த்தி வழியனுப்பும் காட்சி செம காமெடி.பிட் எடுத்துட்டுப்போறது பெரிய விஷயமில்லை,பிட் அடிச்சாவது பாஸ் ஆகனும் என அண்ணன் சொல்லும்போது அரங்கம் அதிர்கிறது.மச்சி,நீ என்னை டிராப் பண்ண வேணாம் ,ராசி இல்லை என செண்ட்டிமெண்ட் பேசும் ஆர்யாவிடம் சந்தானம் “சரஸ்வதி தேவியே வந்து உன்னை டிராப் பண்ணினாலும் நீ பாஸ் ஆகமாட்டே” என நக்கல் அடிப்பது தூள்.




பேப்பர் பிட்டை நீ எடுத்துட்டு வந்ததற்குப்பதிலா ஏதாவது ஜாக்கெட் பிட் எடுத்துட்டு வந்து வித்தாலாவது ஏதாவது லாபம் கிடைக்கும் என வாருவது செம சிரிப்பு.எந்தெந்த பிட் எங்கெங்கே இருக்கு என அடையாளம் காட்டும் மெயின் பிட்டை தொலைத்து ஆர்யா அவதிப்படுவதும், பஸ்சில் வரும் நயன்தாரா அதை குடுப்பதும் ரகளை என்றால் எக்சாம்  ஹாலில் நயனே எக்ஸாம் சூப்பர்வைசராக நிற்பது குபீர் சிரிப்பு.

ஆர்யா கூட எக்ஸாம் எழுத வரும் அரியர்மேட் ஆறுமுகம் சந்தானத்தை காட்டி,”இவன் யாரு,உன் அல்லக்கையா?” என நக்கலாகக்கேட்க சந்தானம் கொஞ்சமும் அசராமல் ,”என்னை கலாய்க்கறாராம்”  என பந்தை சிக்ஸர் அடிக்கும்போது தியேட்டரில் விசில் அடங்க 3 நிமிஷம் ஆகுது.மனைவி டம்ளரில் தரும் பாலை குடிக்கும் அந்த ஓல்டு மேனைப்பார்த்து ,”ஏன்,உன் பொண்டாட்டி நைட் உனக்கு பால் தர்லையா? “ எனக்கேட்கும்போது இலை மறை காய் மறையான காமெடி வெளிப்படுகிறது.(சென்சார் இந்த இடத்துல தூங்கிடுச்சா?).

PRACTICE MAKE A MAN PERFECT (பயிற்சிதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் என சந்தானம் கருத்து சொன்னாக்கூட ஜனங்க ரசிச்சு சிரிக்கறாங்கன்னா சந்தானத்துக்கு சுக்ர திசை சுருக்க வந்துடுச்சுன்னுதான் சொல்லனும்.அதே ஓல்டு மேனை ,”யார் இவன்,ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மூத்த பையனா இருக்கானே” என கவுண்ட்டர் டயலாக் அடிக்கும்போது இதெல்லாம் எழுதி வைத்து படிக்கும் வசனமல்ல,ஒரு ஃப்ளோவில் வருவது என்பது தெரிகிறது.




எந்த அந்நிய சக்தியும் நம்மைப்பிரிக்கவே முடியாதுன்னு சந்தானம் ஆர்யாவைக்கட்டிக்கொள்வதும்,அடிக்கடி என் நண்பண்டா என அழுத்திசொல்வதும் தியேட்டரில் ஏகோபித்த வரவேற்பு பெற்ற சீன்கள்.தளபதி படத்தில் இதே வசனம் பேசிய ரஜினியை நக்கல் அடிக்கிறாரா,மணிரத்னத்தை ரேக்குகிறாரா என்றெல்லாம் சிந்திக்க படத்தில் அவகாசமே இல்லை.காமெடி சரவெடி படபடவென வெடித்துக்கொண்டே போகிறது.

எக்சாம் ஹாலில் அந்த ஓல்டு மேன் ஆர்யாவிடம் “பாஸ் பண்ணி தொலைச்சிடாதீங்க,தனி மரம் ஆகிடுவேன்,என்பதும் வினாத்தாளை கொத்தாகக்கொடுத்து லெக்சரர் நயன் “பாஸ் பண்ணுங்க” என்றதும் ,”டிரை பண்றேன் மேடம் எனும்போது வெடித்துக்கிளம்புகிறது சிரிப்பு அலை.

ஆனால் நயன்தாராவைப்பற்றி குறிப்பிட்டுசொல்லியே ஆகவேண்டும்,ஹேர்ஸ்டைலை ஃபாரீன் மாடலில் பண்ணிக்கிறேன் பேர்வழி என அவர் செய்திருக்கும் ஸ்டைல் சகிக்கலை.ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி என டயட் இருந்தும்,மாத்திரை சாப்பிட்டும் உடல் வனப்பை கெடுத்துக்கொண்டார்.பல காட்சிகளில் சிரத்தையே இல்லாமல் கடனுக்கு நடித்திருக்கிறார்.(ஒரு வேளை சம்பள பாக்கியோ).பேசாமல் இந்த கேரக்டருக்கு தமனாவையோ,அசினையோ நடிக்க வைத்திருக்கலாம்.



இடைவேளை வரை செம ஸ்பீடாகபோகும் திரைக்கதை அதற்குப்பிறகு நொண்டி அடிக்கிறது.கதையை எப்படி கொண்டு போவது என இயக்குநர் ரொம்பவே தடுமாறி இருக்கிறார்.டுட்டோரியல் காலேஜ் நடத்தும் காட்சிகள் ரொம்ப இழுவை.எங்கே படத்தை மொக்கை ஆக்கிடுவாங்களோ என திகிலா நாம் பார்க்கறப்ப ஷகிலா முந்தானை முடிச்சு தீபா மாதிரி டீச்சராக எண்ட்டர் ஆகி காமெடி செய்கிறார்.

படத்தில் ரசனையான காமெடி காட்சிகளில் மனதில் நின்றவை.

1.உங்க ஜாதகமே எனக்கு தெரியும்,ஏன்னா அது என் கிட்டதானே இருக்கு?

2.மாப்ளை,கைல காசில்லை.    அப்போ,பீரோல வெச்சிருக்கியா?

3.மேடம் ,24 மணி நேரமும் செல்ஃபோன்ல ஃப்ரீயா பேசனும்,அதுக்கு என்ன ஸ்கீம் இருக்கு?

24 மணி நேரமுமா?அதுக்கு நேர்லயே போய் பேசிக்கலாமே?


4.பெண்களோட அகராதில ஆண்களைப்பற்றிய அளவீடுகளும், மதிப்பீடுகளும் மாறிட்டே இருக்கும்,ஆனா ஆண்கள் பார்வைல பொண்ணுங்க ரெண்டே வகைதான் 1.சூப்பர் ஃபிகர், 2 மொக்கை ஃபிகர்.

5.மிஸ்,உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்கு நிஜமாவே தெரியலை,நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்,வர்லை.

6.அலை பாயுதே மாதவன் மாடுலேஷன்ல பேசச்சொன்னா உன்னை யார் அரண்மனைக்கிளி ராஜ்கிரண் மாதிரி பேசச்சொன்னது?


7.நான் டுபாக்கூரா?         பின்னே,டோக்கோமோ கம்பெனி ஓனரா?

8.மார்க்கட்டிங்க் வேலைக்கு போறியா?

அது நாய் பொழைப்புடா மச்சான்


பிழைப்பே இல்லாம தண்டமா இருக்கறதுக்கு நாய்ப்பிழைப்பு எவ்வளவோ மேல்.

9.உங்களுக்கு எவ்வளவு லோன் வேணும்?
உங்க பேங்க்கால எவ்வளவு லோன் தர முடியுமோ அதை தாங்க.

10. லேடீஸ் தர்ற மிஸ்டு கால் ஆம்பளைக்கு ஊதப்படற அபாயச்ச்சங்கு மாதிரி,புத்திசாலிங்க எஸ்கேப் ஆகிக்கறாங்க.

11.ஊர்ல 15 ஃபிரண்ட்ஸ் வெச்சிருக்கறவன் எல்லாம் ஜாலியா சந்தோஷமா இருக்கான்,ஒரே ஒரு ஃபிரண்ட் வெச்சிருக்கறவன் நான் ஏண்டா இப்படி அவஸ்தைபடனும்?




சந்தானம் தண்ணி அடித்து விட்டு ஆர்யாவின் வருங்கால மாமனார் சித்ரா லட்சுமணனை அவரது பாராட்டு விழாவில் கலாய்க்கும் சீன் தமிழ் சினிமாவின் காமெடி பக்கத்தில் முக்கியமான அங்கம் வகிக்க வேண்டியது.இனி 2 மாதத்துக்கு இந்த காமெடி க்ளிப்பிங்க்ஸை டி விக்களில் பார்க்கலாம்.இந்த காட்சியில் சந்தானத்தின் பர்ஃபார்மென்ஸ் சிம்ப்ளி சூப்பர்.பண்ணிக்குட்டிங்க எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதுங்க என முத்தாய்ப்பாய் பேசுவதும் தூள்.

வண்டிக்குத்தேவை பம்பர்,வாழ்க்கைக்குத்தேவை டெம்பர்,இனி இதுதான் உன் நெம்பர் என ஆர்யா நயனுக்கு செல்ஃபோன் கிஃப்ட் குடுப்பது செம மொக்கை சீன்.
நயன்தாரா அடிக்கடி ஆர்யா எது சொன்னாலும் பார்டன் (இன்னொரு முறை சொல்லுங்க) என கேட்பதும் அப்போது சந்தானம் காட்டும் முக பாவனைகள் அருமை.


ஆர்யாவை முதலில் ஒரு விஷயத்துக்காக பாராட்ட வேண்டும் தன்னை விட சந்தானத்துக்கே ஸ்கோப் அதிகம் என தெரிந்தும் ,நடிக்க ஒத்துக்கொண்டதும் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங் (அடக்கி வாசித்தல்) செய்ததும் பாராட்டத்தக்கவை.
அண்ணனுக்கு நடக்கும் திருமண் பார்ட்டியில் நயனைப்பார்க்கும் ஆர்யா அவரை ரசிச்சு பார்க்க அவரது அண்ணன்”என் வாழ்க்கைல விளையாடிடாதடா”என்பது மாதிரியான அர்த்தத்திலவர் காலை தொட்டுக்கும்பிடுவதும் நல்ல டைரக்‌ஷன்.
இத்தனை +கள் படத்தில் இருந்தாலும் படத்தில் மைனஸ்கள் உண்டு.

1.என்னதான் அரியர் வெச்ச பையனாக இருந்தலும் இங்கிலீஷில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் யாராவது இருப்பார்களா?

2.கமல் மாதிரி பேசாத,புரியற மாதிரி பேசு என்று லிவ்விங் லெஜெண்ட்களை கிண்டல் செய்தது.

3.கும்பகோணம் வெத்தலை பாட்டு படத்துக்கு தேவை இல்லாதது,நயனின் அப்பாவாக வரும் சித்ரா லட்சுமணனை காமெடி பீஸ் ஆக்கி இருக்கத்தேவை இல்லை.மேலும் அந்தப்பாட்டில் நயனின் கெட்டப்,நடன் அசைவுகள் கில்லி படத்தில் அப்படிப்போடு பாட்டுக்கு திரிஷா செய்ததை அட்டக்காப்பி அடித்தது.

4.சந்தானத்தின் சில வசனங்கள் தனிப்பட்ட பிராண்ட்களை கிண்டல் செய்வதாக அமைவது.உதாரணம் - வில்லனை ஓனிடாத்தலையன் என்பது (தியேட்டரில் செம கை தட்டல்)வரவேற்புக்கிடைக்கிறது என்பதற்காக வரம்பு மீறுதல் முறையோ?

5.இடைவேளைக்குப்பிறகு காட்சிகளில் ஜவ்வுத்தன்மை.எடிட்டிங்கில் இன்னும் கவனம் தேவை.

பெண் பார்க்கப்போகும்போது பெண் நமக்குப்பிடித்து விட்டால் சின்ன சின்னக்குறைகள் நம் கண்ணுக்குத்தெரியாதது போல் இந்தப்படத்தின் குறைகளை நாம் கண்டு கொள்ளவேண்டியதில்லை.ஏனெனில் படத்தில் சண்டைக்காட்சிகளோ,ஆபாசமோ ,வன்முறையோ இல்லை.

கெஸ்ட் அப்பியரன்ஸில் வரும் ஜீவா பண்ணும் அலப்பறை அற்புதம்.அந்தப்பாத்திரத்தை கையாண்ட விதத்தில் இயக்குநர் நார்மல் க்ளிஷேக்களில் நம்பிக்கை அற்றவர் என முத்திரை பதிக்கிறார்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள்,பி, சி செண்ட்டர்களில் 50 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


துரோகி -சினிமா விமர்சனம்

அக்னி நட்சத்திரம் படத்தில் வருவது போல் இரண்டு நண்பர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதும்,இருவருக்கும் ஒரு பிரச்சனை வரும்போது இணைந்து எதிரியை வீழ்த்துவதும்தான் கதை.
படத்தோட ஓப்பனிங்கில் கெஸ்ட் ரோல் செய்தாலும் அதை பெஸ்ட் ரோல் ஆக மாற்றிய பூஜாவுக்கு ஒரு பூங்கொத்து.அழுகிற காட்சியில் கூட அழகாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் பூஜாவும் ஒருவர்.ஆனால் கஜினி படத்தில் அசின் மடார் என மட்டையால் அடிக்கப்பட்டு வில்லனால் சாகடிக்கப்பட்ட காட்சி கொடூரம் இதிலும் .இயக்குநர் இன்னும் கொஞ்சம் மென்மையாக அந்த காட்சியை கையாண்டிருக்கலாம்.

சத்ரியன் படத்தில் விஜயகாந்த்தின் ரவுத்திரம் எப்படி வந்தது என்பதை விரிவான ஃப்ளாஷ்பேக்கில் காட்டியது போல் இதிலும் ஒரு நீண்ட ஃப்ளாஷ்பேக் உண்டு,ஆனால் அதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

அநியாயத்தைக்கண்டு பொங்கி எழும் சமூக சேவகி பூஜா (டீச்சர்) வில்லன் க்ரூப்பால் கொல்லப்படும்போது 2 நண்பர்கள் கம் மாணவர்கள் அதைப்பார்த்து கொலையாளியை திட்டம் போட்டு தாக்குகிறார்கள்.போலீஸ் விசாரணையில் அடிக்கு பயந்து ஒருவன் அடுத்தவனை காட்டிக்குடுத்து துரோகி ஆகிறான்.அப்போ வளரும் வன்மம் கடைசி வரை தொடர்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பையனை விசாரிக்கும்போது ஒரு ஃபோன் வருகிறது.உடனே ஃபோனை எடுத்துப்பேசிய எஸ்.ஐ அந்தப்பையனின் அம்மாவிடம் “நீ உன் புருஷன் கூடப் படுத்தியா? இப்போ ஃபோன் பண்ணுனானே அவன் கூடப் படுத்தியா?எனக்கேட்பது குரூரம் என்றாலும் போலீஸ் ஸ்டேஷன்களில் அப்படித்தானே நடக்கிறது?

இவர்தான் ஸ்ரீகாந்துக்கு ஜோடி,இவரது நெருக்கமும்,காதலில் காட்டும் இறுக்கமும் ரொம்ப ஓவர்,இருந்தாலும் ரசிக்க முடிகிறது.பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவை ஹீரோயின்(கள்) விழுந்து விழுந்து காதலிப்பது போலும் ஹீரோ ஏதோ போனால் போகிறது என்று ஒப்புக்கு சப்பாணியாக லவ் பண்ணுவது போலும் காட்டப்படுவது மேல்சாவனிசம் தவிர வேறொன்றும் இல்லை.

ஸ்ரீகாந்த் க்ளோஸ் கட்டிங்,மும்பை ஸ்டைல் மீசை என ஆள் கலக்கலாக வருகிறார்.இவரது கேரக்டரைசேஷனில் இயக்குநர் ஒரு தவறு செய்து விட்டார்.இவரை இன்ஸ்பெக்டராகப்போட்டு விஷ்ணுவை(வெண்ணிலா கபாடிகுழு,பலே பாண்டியா ஹீரோ) ரவுடியாகக்காண்பித்திருக்க வேண்டும்.இயக்குநருக்கு என்ன நெருக்கடியோ?

விஷ்ணு அவரளவில் நன்றாக நடித்திருந்தாலும் இன்னும் பயிற்சி தேவை.போலீஸ் கேரக்டருக்காக சூர்யா,டாக்டர் ராஜசேகர் செய்த ஹோம் ஒர்க்கை எல்லாம் ஃபாலோ பண்ணனும்.(காக்க காக்க,இதுதாண்டா போலீஸ்)

இயக்குநருக்கும், விஷ்ணுவுக்கும் ஒரு கேள்வி.எந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாடியோடும், ஃபங்க் தலையோடும் வர்றார்? (அட்லீஸ்ட் ஐயப்ப சாமிக்குமாலை போட்டிருக்கார் என்றாவது சமாளித்து இருக்கலாம்.)
(பூனம் பஜ்வா)
விஷ்ணுவுக்கு ஜோடி.முன் பின் தெரியாத ஒரு நபருக்கு பப்ளிக் ப்ளேஸில் ஒரு 20 வயசுப்பெண் முத்தம் கொடுப்பதும், இப்போ என்ன முத்தம் குடுத்தா கற்பா போச்சு என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.பெண்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
படத்தோட மெய்ன் கான்செப்ட் ஹீரோக்களின் முன் விரோதமும்,நட்பும்தான்.ஆனால் 2 ஹீரோயின்களின் காதல் காட்சிகளில் ஹீரோக்கள் காணாமல் போகிறார்கள்.இந்த இயக்குநர் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை எடுத்தால் பிரமாத வெற்றி அடைவார் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சிற்சில காட்சிகளில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது,
ஹீரோவின் அப்பா ஒரு அர்ச்சகர்,அவருக்கு பையனை அவனது ரவுடித்தனத்தை பிடிக்காததால் சின்ன வயசுல இருந்தே அவனைக்கண்டு கொள்வதில்லை.2 பேருக்கு கோயிலில் நடக்கும் உரையாடல்.

”என் பையன் செத்து 18 வருஷம் ஆச்சு.”

எங்கப்பா பொறந்து 50 வருஷம் ஆச்சு,அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணனும்”

போலீஸ் இண்ட்டர்வியூவுக்கு செல்லும் விஷ்ணுவை ஸ்ரீகாந்த் விஷ்ணுவின் தங்கையுடன் ஜல்சாவில் இருப்பது போல் செட் பண்ணப்பட்ட செல்ஃபோன் சவுண்ட் மூலம் அவரை டார்ச்சர் செய்வது ரசனையான சீன் என்றாலும் மோசமான முன்னுதரணம்.(இனி இதைப்பார்த்து எத்தனை பேர் இதே மாதிரி சீன் வைக்கப்போறாங்களோ?)
இவர் ஆடும் குத்தாட்டம் சி செண்ட்டர் ரசிகர்களுக்கு செம டானிக்.டீசண்ட்டாக அந்த குத்துப்பாட்டை எடுத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

வசனகர்த்தாவின் தயவில் சில பளிச்கள்.

1.மாப்ளை போலீஸ்க்கு ட்ரை பண்றாரு,அவர் ஃபிரண்டு நீ?

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ட்ரை பண்றேன்.

2.நீங்க லவ் மேரேஜா?அரேஞ்ஜ்டு மேரேஜா?

2ம் தான்.

புரியலையே?

லவ் தனி, மேரேஜ் தனி,ஒருத்தியை லவ் பண்ணுனேன்,வேற ஒருத்தியை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.

3.பொண்ணைப்பார்த்தா பையன் வெட்கப்படறான்,பையனைப்பார்த்தா பொண்ணோட அம்மா வெட்கப்படுது,என்னய்யா நடக்குது இங்கே?

4.துரத்தி துரத்தி உன்னை லவ் பண்றேன்னு பயமா இருக்கா?இந்தப்பிரச்சனைக்கு ஒரே சொல்யூஷன் தான், பேசாம என்னை லவ் பண்ணிடு,ஆல் பிராப்ளம் சால்வ்டு

ஓடும் ரயிலில் பயணம் செய்யும் ஹீரோயின் ஓடி வரும் ஹீரோவுக்கு கை கொடுத்து ஏற்றி விடும் காட்சி ரொம்ப அசிரத்தையா எடுக்கப்பட்ட காட்சி,ஒரு ரிஃப்ளக்‌ஷன் கூடவா ஹீரோயின் கிட்ட் இருக்காது?

படத்தின் வில்லனாக வரும் தியாகராஜன் மலையூர் மம்பட்டியான்,நீங்கள் கேட்டவை படத்துக்கு பிறகு இதில் ஜொலிக்கிறார்.மிரட்டலான் நடிப்பு, ஆகிருதியான தோற்றம்.(இந்தப்படத்தில் பிரசாந்த் ஏன் நடிக்கலை?).ஒளிப்பதிவு ரொம்ப மோசம்.பாடல்கள் ,இசை சுமார் ரகம்.

படம் பாஸ் ஆகி விடும்.

பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.ஏ செண்ட்டர்களில் ஓட இன்னும் விளம்பரம் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்தவிகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங் -ஓகே

Friday, September 10, 2010

ஜாக்கிரதை ஜாக்கிரதை


1


விஜய்காந்த் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கா??

நண்பர் ஒருவர் அனுப்பிய ஈ மெயில் இது.அஜாக்கிரதை என்பது உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Wednesday, September 08, 2010

ஆனந்த விகடனில் ஹிட் ஆன சினிமா ஜோக்ஸ்

பொதுவாக பத்திரிக்கைகளில் 100 ஜோக்ஸ் அனுப்பினால் 4 ஜோக்ஸ் தேர்வு செய்வார்கள்.கடும் போட்டி தான் இதற்கு காரணம்.20.000 பேர் சராசரியாக தலா 2 ஜோக்ஸ் அனுப்பினால் வாரம் ஒரு லட்சம் ஜொக்ஸ் சேர்ந்து விடுகிறது.இதிலிருந்து வாரம் 20 ஜோக்ஸ் மட்டுமே ஒரு எடிட்டரால் தேர்வு செய்ய முடியும்.எனவே ஜோக் வரவழைக்க பிரபல நடிகைகள் சம்பந்தப்பட்ட ஜோக்ஸ் அனுப்பினால் பிரசுரமாக வாய்ப்புகள் அதிகம்.நான் ஆனந்த விகடனில் எழுதி பிரசுரமான ஜோக்ஸ் இவை.



1.விஜய் டி வி ல டான்ஸ் புரோகிராமுக்கு வந்த ஆள் “எனக்கு நயன் தாராவை ரொம்ப பிடிக்கும்,நானும் அவங்களை லவ் பண்றேன்னு சம்பந்தம் இல்லாம பேசறாரே,ஏன்?”

அடுத்த பிரபுதேவா யார்? அப்படிங்கறதுதான் போட்டியோட தலைப்பு,அவர் அதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்னு நினைக்கறேன்.

2.உங்க மெஸ்ல குஷ்பூ இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சிருந்தீங்க,திடீர்னு அதை எடுத்துட்டு,நதியா இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சு இருக்கீங்களே?

ஆமா,இப்போ ஜாக்பாட்ல குஷ்புக்கு பதிலா நதியாதானே வர்றாங்க?

3.சத்யராஜ்க்கும்,நமீதாவுக்கும் என்ன வித்யாசம்?

சத்யராஜ் மூட நம்பிக்கை இல்லாதவர்,நமீதா மூடறதுல நம்பிக்கை இல்லாதவர்.



4.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

சுகர் பேஷண்ட்டுக்கு அட்வைஸ் பண்றப்ப அஸ்கா சேத்திக்கக்கூடாதுனு சொன்னா தேவலை,இவர் அனுஷ்கா படம் கூட பார்க்கக்கூடாதுனு சொன்னா எப்படி?

5.நடிகை நமீதா ஏன் கோபமா இருக்காங்க?

ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்கு கூப்பிட்டா பிரசனை இல்லை,ஒரு கடைக்காரரு அவரோட கடையோட மூடு விழாவுக்கு கூப்பிட்டாராம்.

நடிகை சினேகா நாக் ரவி என்பவருடன் சினேகமாக இருந்தபோது எழுதிய ஜோக் இது.ஆங்கில்த்தில் KNOCK என்றால் தட்டுதல் என்று பொருள்.

6. சினேகாவோட இதயக்கதவை ரவி மெல்லத்தட்டி இருக்காரு.

ஓஹோ ,அதுதான் அவரோட பேரு KNOCK ரவினு வெச்சுக்கிட்டாங்களா?

7.தலைவருக்கு எதெதுல சந்தேகம் வர்றதுனு விவஸ்தை இல்லை.

ஏன்?

ஆந்திரா நடிகை இலியானா தெலுங்கானாவுக்கு சொந்தமானவரா?னுகேட்கறாரு.

8.மேடம்,உஜாலா சொட்டு நீல விளம்பரத்துல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்க?


நீலப்பட நடிகைனு முத்திரை குத்திடுவாங்களே?

Tuesday, September 07, 2010

சினிமா டைட்டிலில் கவிதைப்போட்டி


Fifty Seven (by ..priya..)
சில வருடங்களுக்கு முன் தமிழன் எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில்
சில சினிமா டைட்டில்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் கவிதை கேட்டிருந்தார்கள்.
சினிமாவில் சிச்சுவேசன் சாங் கேட்பது போல்தான் இதுவும்.தானாக உருவாகும் கவிதைகளை விட இது போல் நிர்ப்பந்தங்களில் உருவாகும் கவிதைகளில் வீரியம் குறைவாக இருக்கும்.சினி ஃபீல்டில் அதிக முறை திருத்தம் செய்து,அதிக வரிகளில் எடிட் செய்து உருவான பாடல் ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை.இதில் வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்.

முதலில் பரிசு பெற்ற கவிதை.

நேருக்கு நேர்




இனி என்னை மறந்து விடுங்கள் 

என்று தோழியிடம் சொல்லி விட்டாய்.

நமக்குள் இனி ஒன்றுமில்லை என 

கடிதம் எழுதினாய்.

என் வாழ்வில் இனி குறுக்கிடக்கூடாது 

என ஆள் அனுப்பினாய்.

சரி,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் உன்னால் 

நேருக்கு நேர் நின்று 

என் கண்களைப்பார்த்து சொல்ல முடியுமா? 

 இனி பிரசுரத்துக்கு தேர்வானவை.


காதல்

உச்சரிக்கும்போது உதடுகள் கூட


ஒன்று சேர்வதில்லை


காதல்.




நாணயம் இல்லாத நாணயம் 


தொட்டுப்பார்க்க மட்டுமெ சொந்தம் 

பேங்க் கேஷியர் எண்ணும் பணம்.



 ஏட்டிக்குப்போட்டி


கதை எழுதும்போது கிடைக்கவில்லை

காதலிக்கும்போது மட்டும் 

உருவாகி விட்டது கரு.

கவிதைகளை வெளீயிடுவதில் முன்பிருந்ததை விட இப்போது குமுதமும்,விகடனும் அதிக அக்கறை செலுத்துகின்றன.குமுதத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள்,மழலை சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதினால் 20 நாட்களில் போட்டு விடுவார்கள்.விகடனில் காதல் கவிதைகளும்,மனித மன விகாரங்கள்  பற்றிய அலசல்கள்,வித்யாசமான கருக்கள் இருந்தால் பிரசுரம் ஆகி விடும்.குமுதம் ரூ 50 பரிசும், விகடன் ரூ 250 பரிசும் தருகின்றன.