Tuesday, November 05, 2024

பிளடி பெக்கர் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹியூமர் ஹாரர் திரில்லர்)

             


  நயன்  தாரா  நடிப்பில்  கோலமாவு  கோகிலா (2018) ,   சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (2021)      ,, ரஜினி நடிப்பில்  ஜெயிலர்( 2023)   ஆகிய  3  வெற்றிப்படங்களையும்   , விஜய் நடிப்பில்  பீஸ்ட்  (2022)   என்ற  டப்பாப்படத்தையும்  கொடுத்த இயக்குநர்  நெல்சன்  ஒரு  வித்தியாசமான  இயக்குநர். பிளாக்  ஹ்யூமர் படங்களை  இயக்குவது  அவர்  பாணி , அவரது  தயாரிப்பில் , அவரது  அசிஸ்ட்ண்ட்  டைரக்டர்  ஆன   சிவபாலன்  முத்துக்குமாரை  அறீமுக  இயக்குனர்  ஆக   அறிமுகப்படுத்தி  இருக்கும்  படம்  தான்  இது 


ஒரே  ஒரு  பங்களாவில் 90%  படத்தைமுடித்து  புதுமுகங்களை  வைத்தே   காசை  மிச்சம்  பண்ணீயதற்காக  பாராட்டலாம் . தீபாவளி  ரேசில்  நெம்பர் 3  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  சிறுவனாக  இருக்கும்போதே   பிச்சைக்காரனாக  வளர்கிறார் . இவர்  ஒரு  அனாதை . இவருக்கு  ஒரு  காதலி . அவரை  மணம்  முடிக்கிறார். இருவருக்கும்  ஒரு  மகன்  பிறக்கிறான் . ஒரு  கார்  விபத்தில்  மனைவி  பலி  ஆக  நாயகன்  தன்  மகனுடன்  இப்போது  பிச்சை  எடுத்து  வருகிறார் . மகனுக்கு  இவர்  தான்  தன்  அப்பா  என்பது  தெரியாது 


ஒரு  மிகப்பெரிய    செல்வந்தர்  இறக்கிறார்.  தன்  கடைசி  ஆசையாக  25  பிச்சைக்காரர்களுக்கு  ஒரு  வேளை  விருந்து படைக்க  வேண்டும்  என  தெரியப்படுத்தியதால்  24  பேரைப்பிடித்து  விட்ட  அவரது  குடும்பம்  25  வது  நபர்  ஆக   நாயகனை  அழைத்துச்செல்கிறார்கள்  . நாயகன்  அங்கே  போய்  விருந்து  சாப்பிட்டு  விட்டு  திருட்டுத்தனமாக  மாளிகைக்குள்  புகுந்து  விடுகிறார் . அங்கே  2  நாட்கள்  ஜாலியாக  இருக்கலாம்  என்பது  நாயகனின்  திட்டம்


 ஆனால்  ஆட்டோமேட்டிக்  லாக்  என்பதால்  மாளிகை  உள் பக்கமாக  பூட்டிக்கொள்கிறது . நாயகன்  உள்ளே  மாட்டிக்கொள்கிறான் . மாளிகைக்கு  உள்ளே  இறந்த   செல்வந்தனின்  உறவினர்கள்   சொத்தை  அபகரிக்க  சதித்திட்டம்  போடுகிறார்கள் .


 பிச்சைக்காரன்  ஆன  நாயகனை  வாரிசு  போல்  நடிக்கச்சொல்கிறார்கள் . ஒரு  கட்டத்தில்   சொத்துக்காக  நாயகனைக்கொலை செய்ய  அனைவரும்  துரத்துகிறார்கள் . நாயகன்  தப்பித்தானா? இல்லையா?   என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக   கவின்  கெட்டப்பில்  கச்சிதம் , நடிப்பில்  மெச்சும் விதம்  என  பாராட்டுப்பெறுகிறார் . ரெடின்  கிங்க்ஸ்லி  காமெடி  என்ற  பெயரில்  படம்  முழுக்கக்கத்திக்கொண்டே  இருக்கிறார். ஒரு  சீனில்  கூட  சிரிப்பு வரவில்லை 


மற்ற  அனைவரும்  புதுமுகங்கள் . அவர்களில்   புருவங்களை  வளைத்தே  வில்லி  ஆக  மிரட்டும் பெண்  கவனிக்க  வைக்கிறார். மற்ற  அனைவரும்  அனுபவம்  இல்லாத  நாடக  நடிகர்கள்  போல  சொதப்பி  இருக்கிறார்கள் . ராதாரவிக்கு கெஸ்ட்  ரோல் 


நாயகனின்  மனைவியாக  வரும்    மெரின்  பிலிப்  அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே 


 ஃபிளாஸ்பேக்கில் வில்லி  ஆக  வருபவரும் , இன்னொரு  நாயகி  ஆக  வருபவரும்  சுமார்  ரகம் .


 ஜென்  மார்ட்டின்  தான்  இசை. காது  வலிக்கும் அளவு  பிஜிஎம்மைப்போட்டுத்தாக்கி இருக்கிறார் .ஆர்  நிர்மல்  எடிட்டிங்கில்  படம்   139  நிமிடங்கள்  ஓடுகிறது


  சுஜித்  சாரங்க் தான்  ஒளிப்பதிவு . ஒரே  பங்களாவில்  கதை  நடப்பதால்  சவாலான பணி தான்   திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் சிவபாலன்  முத்துக்குமார்


சபாஷ்  டைரக்டர்


1      2019  ஆம்  ஆண்டு  வெளியான  ரெடி  ஆர்  நாட்  என்ற  ஹாலிவுட்  படத்தை  சத்தம்  இல்லாமல்  அட்லீ  ஒர்க்  செய்து ஒரு  கதை  ரெடி  செய்தது 


2    மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  . ரெடின்  கிங்க்ஸ்லி  கேரக்டர்  இருந்தாலும்  படம்  நெடுக  அவரை  உலவவிட்டது 


3   ஒரே  பங்களாவில்  முழுப்படத்தையும்  முடித்தது 



  ரசித்த  வசனங்கள் 


1   இந்த   சொசைட்டிக்கு  பிச்சைக்காரனும்  தேவை தான். யாராவது  ஒழுக்கமா  இல்லைன்னா    அவனைத்திட்ட”  நீ  ஒழுங்கா  இல்லைன்னா  கடைசில  பிச்சைதான்  எடுக்கனும்  என  சொல்லவாவது  பிச்சைக்காரன்  யூஸ்  ஆகிறான் 


2   கதாபாத்திரமா  வாழனும், நடிக்கக்கூடாது 


3   வாழ்க்கைல  நம்ம  கர்மாவுக்கு  நாம  பதில்  சொல்லியே  ஆகனும் 


4  என்னாலயே  அந்த  முகத்தைப்பார்க்க  முடியலை . , நிமிசத்துக்கு  மூணு  தடவை  ஐ லவ்  யூ  சொல்லனுமே , உன்னை நினைச்சா..    எவ்ளோ  சிரமம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகனின்  மனைவியை  காரில்  மோதிய  பெண்   நாயகனை  ஃபிளாஸ்பேக்  சீனில்  பார்க்கும்போது  நாயகன்  தாடியுடன்  இருப்பதால்  அடையாளம்  தெரியாதது  ஓக்கே . ஆனால்  தன்  மனைவியை  கார்  மோதி  இடித்த  பெண்ணை  க்ளோசப்பில்  பார்த்த  நாயகன்  பிறகு  அதே  பெண்ணை  சந்திக்கும்போது  அவருக்கும்  அடையாளம்  தெரியவில்லையே ? அது எப்படி ? அந்தப்பெண்  தாடி  வைத்திருக்கிறாரா? மேக்கப்பில்லாமல்  இருந்தாரா|  ஏன்  அடையாளம்  தெரியவில்லை ? 


2   காமெடியன்  ஆக  வரும்  ஒரு  கேரக்டர்  இறந்து  போன  ஆத்மா . ஆவி . அவர்  மற்ற  யார்  கண்களுக்கும்  தெரியாமல்  நாயகன்  கண்களுக்கு  மட்டும்  தெரிவது  எப்படி ? 


3   ஒரு  பெரிய  செல்வந்தனின்  உயிலைப்படிக்கும்போது  வக்கீல் உரிய  பாதுகாப்பில்லாமல்  தனியே  வருவாரா? 


4    திரைச்சீலையின்  மறைவில்  ஒளிந்திருக்கும்  நபரை  முகத்தைப்பார்க்காமல்   ஈட்டி  எறிந்து  கொல்வது  அபத்தம் .  பூட்ஸ்  காலைவைத்து  அது  தன்  மகன்  தான்  என்பது  தெரியாதா? 


5  ரெடின்  கிங்க்ஸ்லியின்  இரிட்டேட்டிங்கான  மொக்கை  நடிப்பு   சகிக்கவில்லை 


6     நாயகன்  ஆன  கவின் பிச்சைக்காரன்  ஆக  வரும்போது  ஓக்கே , ஆனால்  க்ளீன்  ஷேவ்  செய்து  கெட்டப்  மாற்றிய  பின்   கமல் , சிவாஜி  போல  பல  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் (  முதல்  மரியாதை  தவிர   பெரும்பாலான  படங்களில்  சிவாஜி  ஓவர்  ஆக்டிங்.  நாயகன்  வரை  இயல்பான  நடிப்பில்  பரிமளித்த  கமல்  அதற்குப்பின்   ஒவ்வொரு  படத்திலும்  தன்  தனித்தன்மை தெரிய  வேண்டும்  என  ஓவர்  ஆக்டிங்  ) 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிளடி பெக்கர்(2024)-தமிழ் - பட்டி டிங்கரிங் அட்லி வெர்சன் ஆப் Ready or not (2019)@அமேசான் பிரைம்.விகடன் மார்க் 40.ரேட்டிங் 2.25 /5.முதல் பாதி சுமார்.பின் பாதி வெகு சுமார்.காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.புதுமுகங்கள் நடிப்பு எடுபடவில்லை.கவின் மட்டும் ஓக்கே.தீபாவளி ரேசில் நெம்பர் 3


Bloody Beggar
Theatrical release poster
Directed bySivabalan Muthukumar
Written bySivabalan Muthukumar
Produced byNelson Dilipkumar
Starring
CinematographySujith Sarang
Edited byR. Nirmal
Music byJen Martin
Production
company
Filament Pictures
Distributed byFive Star K. Senthil
Release date
  • 31 October 2024
Running time
139 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box officeest. 6.25 crore[2]

Saturday, November 02, 2024

அமரன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பயோ பிக்சர் ஆக்சன் டிராமா )

                     

  மிலிட்டரி ஆபீசராக  நாயகன்  நடிக்க தமிழில்  வந்த மெகா ஹிட் படம் விஜய் நடித்த துப்பாக்கி (2012) .அஜித் நடித்த உன்னைக்கொடு என்னைத்தருவேன் (2000) அட்டர் பிளாப் . கே பாக்யராஜ் நடித்த  பவுனு பவுனு தான் (1991)தொடர் கதையாக பாக்யா வார இதழில் வந்த போது வரவேற்பைப் பெற்றாலும் படமாக  ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .ஆனால் இதில் நாயகன் மிலிட்டரி ஆள் கிடையாது  மிலிட்டரி ஆள் போல ஆள் மாறாட்டம்  செய்யும் கேரெக்டர் ,ஜீவா + மோகன்லால்  காம்போ வில்  வெளிவந்த அரண் மலையாள  டப்பிங்க்  படம் ஓடவில்லை .கீர்த்தி  சக்ரா(2000) என்ற  மலையாள ஒரிஜினல் ஓடிய படம் .ரஜினி நடித்த  ராணுவ வீரன் (1981) சுமார் ரகம் தான் .விஜயகாந்த்  கேப்டன் ஆக நடித்த செந்தூரப்பூவே (1988) இண்டஸ்ட்ரி  ஹிட் கமல்  நடிப்பில்    வெளிவந்த  விஸ்வரூபம் பாகம் 1 (2013) ஹிட் ,விஸ்வரூபம் பாகம் (2018) சுமார் .காஸி ( தெலுங்கு டப்பிங்க் ( ghazi attack) சுமார் 


இந்திய நாட்டுக்காக தன்னுயிரையே தந்த ராணுவ வீரர்  மேஜர் முகுந்தின்    பயோ பிக்ஸர் தான்  இந்த அமரன் .சினிமா வுக்காக  சில காட்சிகள்  புனையப்பட்டவை .நவரச  நாயகன்  கார்த்திக் நடித்த அமரன் (1992) படத்தின்  கதைக்கும்  ,இதற்கும்  சம்பந்தம் இல்லை .பாடல்கள் எல்லாம் மெகா ஹிட் ஆகி  மிகப்பெரும்  எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆனஅந்த  பழைய அமரன் அட்டர் பிளாப் ஆனாலும்  சென்ட்டிமென்ட் ஆக பயப்படாமல் இந்தக்கதைக்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என வைத்திருக்கிறார்கள்  


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிறுவனாக இருந்த போது  ஒரு மிலிட்டரி பேரேடைக்காண்கிறான்  அப்போதே அவன் மனதில்  தான் ஒரு மிலிட்ரிமேனாக ஆகவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது . ஆனால்  வீட்டில் பெற்றோருக்கு சம்மதம் இல்லை . அவர்களைக்கன்வின்ஸ்  செய்து மிலிட்ரிமேன் ஆக முயற்சி செய்கிறான் 


நாயகன்  கல்லூரியில்  படிக்கும்போது  ஒரு மலையாள இன பெண்ணை சந்தித்துக்காதல் வசப்படுகிறான் .நாயகியின் அப்பா மிலிட்டரி கேம்பஸில் டாக்டர்  ஆகப்பணியாற்றுவதால்  தினசரி கண் முன் மிலிட்டரி ஆட்கள் மரணத்தைக்காண்பதால்  தன மகளுக்கு ஒரு மிலிட்ரிக்கார மாப்பிள்ளை வேண்டாம் என மறுக்கிறார் .அவரை கன்வின்ஸ்  செய்து தான் மணமுடிக்கிறார்  நாயகன் . திருமண  வாழ்க்கையில்  அவர்களுக்கு  ஒரு மகள் பிறக்கிறாள் 


 மிலிட்ரி  ஆபீசர் ஆக  அவர் அடைந்த  பிரமோஷன்கள் ,தீவிரவாதிகளைப்பிடிக்க  நடத்திய ஆபரேஷன்கள் , அவரது வீர மரணம்  பற்றிப்பேசிய படம் தான் இது  


நாயகன்  ஆக சிவா கார்த்திகேயன்  அட்டகாசமான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்திருக்கிறார் .கேரக் டருக்காக  தன உடலை வருத்தி கெட்டப் சேஞ்ச்  செய்யும் கமல் ,விக்ரம் , சூர்யா  வரிசையில்  இவரும்  இணைந்திருக்கிறார் . ரஜினி முருகன் மாதிரி கமர்சியல் ஹீரோவாகப்பார்த்த நமக்கு இம்மாதிரி ரோல் புதுசு 


நாயகி ஆக  சாய் பல்லவி  உயிரோட்டமான  நடிப்பை வழங்கி இருக்கிறார் . இந்த வருடத்தின்  சிறந்த நடிகைக்கான தேசிய விருது நிச்சயம் . பல  காட்சிகளில்  இவரது நடிப்பு  நம்  புருவங்களை  உயர்த்த செய்கிறது 


 நாயகனின்  அம்மாவாக நடித்தவரும்  அருமை .மற்ற  அனைத்துகேரக்டர்களும் குட் 


ஜி வி பிரகாஷ் குமாரின் இசை அட்டகாசம் .எல்லாமே மெலோடி சாங்க்ஸ் .பின்னணி இசையும் கலக்கல் ரகம் . சாய்   தான் ஒளிப்பதிவு . சாய் பல்லவியின்  கன்னக்கதுப்புகளை , பருக்களைக்கூட  ரசிக்கும் வண்ணம்  படம் பிடித்து இருக்கிறார் 


 ஆர் கலைவாணன்  எடிட்டிங்கில்  படம் 169  நிமிடங்கள்  ஓடுகிறது .பின் பாதியில்  20 நிமிடங்கள் இன்னும் ட்ரிம் பண்ணி  இருக்கலாம் . நாயகி  வரும் 53  நிமிடங்கள்  மிகவும்  ரசிக்க முடிகிறது 


சிவ அரூர் எழுதிய இந்தியாவின் மாடர்ன் மிலிட்டரி ஹீரோஸ்  புத்தகத்தை  தழுவி திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  ராஜ் குமார் பெரிய சாமி , இவர் ஏற்கனவே  ரங்கூன்  (2017) என்ற கிரைம்  திரில்லர்  படத்தை  இயக்கியவர் 

 மேஜர் முகுந்த்  தனது மகளுடன் இணைந்து பாடி வெளியிட்ட அச்சம்  இல்லை  பாட்டு வீடியோ  பார்த்து  இன்ஸ்பயர்  ஆகி  அவர்  வாழ்க்கையைப்படம் ஆக்க துணிந்தார் 


 தயாரிப்பு  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்  + சோனி 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகனுடன்  நாயகி போனில் பேசும்போது பாத்ரூம் கதவை தாழ் போட்டுக்கொண்டு பேசுகிறார் .அப்போது குடும்பத்த்தினர் கதவைத்தட்டி  கதவைத்திற     என சத்தம் போட தொடர்ந்து பேசும் சீனில்  டெம்ப்போ  ஏற்றும்  சீன் . நாயகியின் நடிப்பு அசால்ட் ஆக நாயகனை ஓவர் டேக் செய்யும் காட்ச்சி 


2  நாயகி  நாயகனுடன்  போனில் பேசிக்கொண்டிருக்கும்போது  நடக்கும் அட்டாக்கில்  சத்தத்தை வைத்தே  சூழலை உணர்ந்து பதறும் காட்சி 


3  நாம்  வாழ்கின்ற  இந்த சராசரி வாழ்க்கை   எவ்வளவு  பெரிய  வரம் என்பதை உணர்த்தும் மிலிட்டரி வீரர்களின் குடும்ப வாழ்க்கை உணர்த்தும்   விதம்  


  ரசித்த  வசனங்கள் 


 1   நான்  திரிச்சி  போகட்டே?


புரோகிராம் பாண்டிச்சேரில , திருச்சி போய் என்ன பண்ணப்போறீங்க? 


2  2  உன் பேரென்ன? 


 இந்து 


 பேரு தான் இந்து , ஆனா கிறிஸ்டியன் பொண்ணு  அதானே? 


3   மலையாளப்பொண்ணு மரியாதை தந்து பேசாதா ? 


அம்மா, கேரளாவில்  அதெல்லாம் இல்லை 


 அப்போ மரியாதை தமிழ் நாட்டில் மட்டும் தான், இப்பவாவது  தெரிஞ்சுக்கோ 


4  ஒரு வாரத்துல எவ்ளோ   இளைச்சுட்டே ,  ரொம்ப கருத்துட்டே , நிழல்ல நின்னு விளையாடலாமில்ல? 


விளையாட்டா? இது மிலிட்டரி டிரெய்னிங்க்மா 


5  ஆர்மில  என்னை மாதிரி 11,000,00   பேரு  இருக்காங்க, அவங்க அம்மாக்களை நினைச்சுப்பாரு 


 டெய்லி காலைல ஆபீஸுக்குப்போய்ட்டு மாலையில் வீட்டுக்கு வரும் கோடிக்கணக்கணக்கான பசங்களின்  அம்மாவா இருக்க விரும்பறேன் 


6   பைபிளிலும் , பகவத் கீதைலயும்  ஒரே விஷயம் தான் சொல்லி இருக்கு .இந்த உலகத்துல பிறந்த எல்லாரும் அவங்கவங்க வேலை முடிஞ்சதும்  இந்த உலகத்தை விட்டு கிளம்பி தான் ஆகணும், ஆனா அவங்க வேலை முடியும் வரை அவங்க உயிரோட தான் இருப்பாங்க 


7   சஸ்பெக்ட் ஆல் ,பட் ரெஸ்பெக்ட் ஆல் 


8  இங்கே  மன்மோகன் சிங்க் பி எம் ஆக  இருக்கலாம் , ஆனா எங்க ஊருல  சி எம் சினிமா வில்  இருந்து தான் வரணும் 


9   என்ன சாப்பிடணும் ? 


 உன்னை தான்  சாப்பிடணும்


10         எங்களை விட்டு தூரமா  இருந்தாலும்   ஷேமமா  இருக்கணும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிலிட்டரி  ஆபீசருக்கான  இண்ட்டர்வியூவில்  நாயகன்  கவுன்ட்டர் கொடுக்க எதுவாக செஸ் போர்டு  காயின்ஸ்   எல்லாம்  முறையா  அடுக்கி வெச்சு இருக்கு .இது எங்காவது நடக்குமா?  


2   ஒரு  பெண்  தன காதலைப்பற்றி  தன அம்மாவிடமோ ,     அப்பாவிடமோ தனிமையில்  ஓப்பன்  செய்வதுதானே  வழக்கம் ? நாயகி முழுக்குடும்பத்தின்  முன் ஓப்பன் செய்கிறார் 


3  நாயகியின் பார்வையில் தான் முழுக்கதையும் சொல்லப்படுகிறது , ஆனால்  நாயகன் மிலிட்டரி கேம்ப்பில்  ,காஷ்மீரில் செய்யும் ஆக்சன் அதகளங்கள் எல்லாம் சீன்  பை  சீன்  அவரால்  எப்படி  சொல்ல முடிகிறது ?இதைத்தவிர்க்க  நாயகன்  கதை சொல்வது போலக்காட்டி இருக்கலாம் . க்ளைமாக்சில் மட்டும்  நாயகி சொல்வது போல் அமைத்து இருக்கலாம் 


4   முதல்  50 நிமிடங்கள்  கமர்ஷியலாக , ரொமான்ஸ் , பேமிலி  டிராமா  போல சுவராஸ்யமாக நகர்கிறது . அதற்குப்பின் வரும்  காஷ்மீர் ஆக்சன் சீக்வன்ஸ்  போர்  அடிக்கிறது 


5   தீவிரவாதியின் இறப்பு , இறுதிச்சடங்கு  இவை எல்லாம் இவ்ளோ  டீட்டெயிலா  காட்டக்கூடாது , பரிதாபம்  தான்  வருகிறது . பொதுவாக  வில்லன்களின் மேல்  இரக்கம்  வருவது போல காட் சிகள்  வைக்கக்கூடாது 


6   நாயகன் உட்பட  பலரும்  தாடி ,பரட்டைதலையோடு  மிலிட்டரியில் சுற்றுகிறார்கள் .அதுக்கு ஒரு சால்ஜாப்பு வேற 


7 மிலிட்டரி , அல்லது போலீஸ் டிபார்ட்மெண்ட்டில்  ஹையர் ஆபிசரிடம் குரலை உயர்த்திப்பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்

8   ஒரு மிலிட்ரி  ஆபீசர்  தர லோக்கல்  ரௌடி போல " அவனைப்போட்டுத்தள்ளறோம் "  என டயலாக் பேசுவாரா? 

9   பொங்கல் , தீபாவளி  மாதிரி விழாக்காலங்களில்  ரிலீஸ் ஆகும் படங்கள் ஹேப்பி எண்டிங்க் கொண்டவையாக இருக்க வேண்டும் . கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் சோக முடிவு கொண்ட படங்களைக்காண  தயங்கலாம் 


10 காஷ்மீர்  தீவிரவாதிகள்  சம்பந்தப்பட்ட காட்சிகளைஇன்னமும்  சுவராஸ்யமாகக்காட்டி இருக்கலாம் .ஆல்ரெடி ரோஜா , குருதிபுனலில்  நாம் சுவாரஸ்யமாக  ரசித்தவை தான் .அந்த அளவு இன்ட்ரஸ்ட் இதில் இல்லை  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பிரமாதம் .பின் பாதி கொஞ்சம்  இழுவை , க்ளைமாக்ஸ்  கண் கலங்க  வைக்கும்  சோகம் .விகடன்  மார்க் 44 .குமுதம் - நன்று ,

மை ரேட்டிங்க்  3 /5 


Amaran
Theatrical release poster
Directed byRajkumar Periasamy
Screenplay byRajkumar Periasamy
Stefan Ritcher
Based onIndia's Most Fearless: True Stories of Modern Military Heroes
by 
Produced by
Starring
CinematographyCH Sai
Edited byR. Kalaivanan
Music byG. V. Prakash Kumar
Production
companies
Distributed bysee below
Release date
  • 31 October 2024
Running time
169 minutes[2]
CountryIndia
LanguageTamil
Budget130–200 crore[3][4][5]
Box officeest. ₹42.03 crore[6]

Friday, November 01, 2024

LUCKY BASKHAR (2024) -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( பைனான்சியல் க்ரைம் த்ரில்லர் )

               


       மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ்  எனக் கணக்கில்  ஒரு பார்முலா உண்டு .   THOLI PREMA (2018) என்ற  தெலுங்குப்படத்தை இயக்கிப்புகழ் பெற்ற  வெஙகி அத்லரி  தனுஷை  வைத்து  வாத்தி (2023) என்ற  சுமார் ரகப்படம்  தந்தார் . துல்கர் சல்மான் கிங்க் ஆப் கோத்தா(2023)  என்ற டப்பாப்படம் தந்தார்.இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ஹிட் படம் தந்தது ஆச்சரியம் 


சதுரங்க வேட்டை (2014) , ஸ்கேம்  1992 த ஹர்சத் மேத்தா ஸ்டோரி(2020)  , ஸ்கேம் 2003 த டெல்கி  ஸ்டோரி (2023) , முகுந்தன்  உன்னி அசோசியேட்ஸ் (2022),கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் (2020),மங்காத்தா  (2011)  இவை ஆறுமே  சக்கை போடு போட்ட படங்கள் / வெப் சீரிஸ் .. அதே மாதிரி ஒரு கான்செப்டில்  வந்திருக்கும் படம் தான் இது . தீபாவளி ரேஸில்  நம்பர்  ஒன் வசூல் /தரம்   இதுவாகத்தான் இருக்கும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு   பேங்க்கில் கேஷியர் .ஒரு மனைவி , ஒரு மகன்  உள்ள  மிடில் கிளாஸ் பேமிலி நாயகனுக்கு  திருமண  வயதில்  ஒரு தங்கை , காலேஜ் படிக்கும் வயதில்  ஒரு தம்பி  இருப்பதால்  அனைவரையும்  தான் வாங்கும் 6000   ரூபாய் சம்பளத்தில்  கரை சேர்க்க முடியவில்லை .கடன் காரன் நெருக்குகிறான் .பேங்க்கில்  அவர் தனக்கான பிரமோஷனை எதிர்பார்த்து இருக்கிறார் . ஆனால்  திறமை  இருந்தும்  அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது .இதனால் மனம் உடைந்த   நாயகன் பேங்க் பணத்தை  முறைகேடாக  ரொட்டேஷன் பண்ணி  பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் 


அவர்  என்னென்ன  தில்லுமுல்லுகள்  செய்தார் , எப்படி  தப்பித்தார் ? என்பது மீதி  திரைக்கதை 

நாயகன் ஆக துல்கர் சல்மான் மொத்தப்படத்தையும்  தன ஒத்தைத்தோளில் சுமக்கிறார் , பிரமாதமான நடிப்பு . நாயகி  ஆக மீனாட்சி சவுத்ரி  கச்சிதமான அமைதியான  நடிப்பு 


நாயகனை முதன் முதலாக  தப்பு செய்யத்தூண்டும்  நபர் ஆக ராம்கி  சிறப்பான  நடிப்பு . மற்ற  அனைவருமே  கொடுத்த பாத்திரத்தை நிறைவாகசெய்திருக்கிறார்கள் 


 ஜி வி பிரகாஷ் குமாரின் இசையில்  இரண்டு பாடல்கள் செம ஹிட் .அதே சமயம்  பின்னணி இசை யில் கலக்கி இருக்கிறார்  .பல கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் களை  தியேட்டரில்  கை தட்டல்களாக மாறியதில் பிஜி எம் க்குப்பெரும் பங்கு உண்டு 


நவீன் நூலின் எடிட்டிங்கில்  படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி செம விறு விறுப்பு  பின்  பாதி   கொஞ்சம்  ஸ்லோ  ஷேர்  மார்க்கட்டில்  டிரேடிங்க்  செய்ப்பவர்களுக்கு நல்லா கனெக்ட் ஆகும் 

நிமிஷ்  ரவியின் ஒளிப்பதிவு அருமை 


திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர் வெஙகி அத்லரி

சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் , நாயகி இருவருக்குமானகெமிஸ்ட்ரி  குட் . குறிப்பாக ஒப்பனை அதீதம் இல்லாமல் இயல்பான கனகாம்பரப்பூ  அழகில் நாயகியின் உதடு அமர்க்களம் 


2  டி வி யாக  இறக்குமதி செய்தால் வரி கட்டணும் , ஸ்பேர் பார்ட்சாகக்கொண்டு  வந்து கோல்மால் செய்தால்  லாபம் என்ற  ஐடியா  அருமை 

3     பாரீன்  கார்களை கோவா கொண்டு செல்வதும் , செக் போஸ்டில் மாட்டும்போது  தப்பிக்கும் கிரிமினல் ஐடியாவும் செம 

4  நாயகன் வாழும்  வீடு , பணி  செய்யும்  வங்கி ,துணிக்கடை ,நகைக்கடை என எல்லாமே செட்  தான். ஆனால் ஆர்ட் டைரக்ஸன் , புரோடக்சன் டீம் ஒர்க் அனைத்தும் பிரமாதம் 


5  இண்ட்டர்வெல்  பிளாக் சீன கூஸ்பம்ப்  மொமெண்ட்  எனில் கிளைமாக்ஸ்  டிவிஸ்ட்  செம 


6  பேங்க்கில்  நாயகன்  50 லட்சம்  ரூபாய் திருப்பிக்கொண்டு வந்து வைக்கும் காட்சியில்  வரும் ட்விஸ்ட்   எடிட்டர் , இசை அமைப்பாளர்  , டைரக்டர்  மூவரும் கலக்கிய தருணம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1 கொல்லாமல்  கொல்லாதே கோபக்காரி


2   லக்கி பாஸ்கர் 

சித்த  வசனங்கள் 

1  கனவு காணவே  பயப்பட்ட  கண்களுக்கு கனவை நனவாக்குவது எப்படி?என கற்றுத்தந்தவர்  ஹர்சத் மேத்தா 


2  பணம்  இருந்தாதான் பாசம், மரியாதை எல்லாமே  கிடைக்கும்,சம்பாதிக்கணும்,சம்பாதிச்சுக்காட்டனும் 


3  இதை எல்லாம் எப்படிடா  தாங்கிக்கறே? 


ஒரு நாள் ஒரு அரை மணி நேரம் எனக்குப்பிடிச்ச  மாதிரி  நடக்கலை ,அதுக்காக  வாழ்க்கை பூரா உக்காந்து அழுதுட்டு  இருக்க முடியாதுல்ல ?


4  நேர்மையான  ஆபீசர்களை விட விலை போகக்கூடிய ஆபீசர்கள் தான் அதிகம் 

5  உனக்கு நம்பிக்கை அதிகம்,  எனக்கு முன் எச்சரிக்கை அதிகம்

6    எப்பவும் பணத்தால் மட்டும்  வேலை நடந்துடாது , அப்பப்ப இப்படி பார்ட்டியும்கொடுக்கணும் 


7 நான் பொய் சொல்லலை , உண்மையைக்கொஞ்சசம் திரிச்சு சொல்லி  இருக்கேன் 


8 லாபம் வரும்போது  மட்டும் இல்லை   , கஷ்டம் வரும்போதும்  கை  கோர்த்து நிற்கணும் 


9 பிச்சைக்காரங்களை  அரசியல்வாதிகள்  எனக்கெட்டப்  மாத்திக்கூட்டிட்டு ப்போனா  அவங்க  நம்புவாங்களா? 


அவங்கஓட்டுக்கேட்டு  கேட்டு  அப்படி ஆகிட்டாங்க 


10  ஒரு பேங்க் இன்னொரு பேங்க்கிற்குக்கொடுத்த  கடனை   ஷேர்  மார்க்கட் ல  இன்வெஸ்ட பண்றது தப்பு ,இல்லீகல் 


11   நான் விலை  போகணும்னு முடிவு பண்ணிட்டா என்  ரேட் என்ன? என நான் தான் சொல்வேன் 


12   ஒரு டீலில் இறங்கும்போது அப்பர் ஹேண்ட் நம்மடையதா  இருக்கனும் இதுல மாட்டிக்கிட்டா  எனக்கு என் வேலை மட்டும் தான் போகும்,ஆனா உங்களுக்கு மொத்த கேரியரே போயிடும் 


13   இது மிடில் கிளாஸ் மெண்ட்டாலிட்டி . கஷ்டப்பட்டு சேமிச்சு வைப்போம் , ஆனா போட்டின்னு வந்துட்டா 

 ஒத்தைப் பைசா மிச்சம் வைக்காம செலவு செய்வோம் 


14   இதுதான் இந்தியா .பொருள் வேணும்னா பணம் கொடுத்து வாங்கணும் .மரியாதை   வேணும்னா பணம்  நம்ம உடம்பு மேல  தெரியனும் 


15  பணம் இருக்கறவனை இந்த உலகம் கெட்டவனாத்தான் பார்க்கும் 


16 தலை கனத்தால மனிதன் ஆடும்போதெல்லாம் ஆண்டவன் அவன் தலைலை ஓங்கி ஒரு  அடி அடிப்பான் 


17  சிகரெட் , ஆல்ஹகால்  , ட்ரக்ஸ்  கொடுக்கும் கிக்கை விடப்பணம் கொடுக்கும் கிக் பெருசு 


18   ஷேர்  மார்க்கெட்டில் சம்பாதிப்பது போல வேறு எதிலும்  சம்பாதிக்கமுடியாது 


19  குடும்பத்துக்காகத்தான் முதல்ல பணம் சம்பாதிக்க ஆரம்பிப்போம் ,ஆனாபோகப்போக அது தரும் போதைல குடும்பத்தினயே மறக்க ஆரம்பிப்போம் 


20  பணம் சம்பாதிப்பது கொஞ்ச  காலத்துக்கு முன்னே உனக்கு அவசியம், ஆனா இப்போ நீ  அதுக்கு அடிமை 


21   வேகமா ஓட்டும்  வண்டி , வேகமா  வரும் பணம் ரெண்டும் ஒரு நாள் நம்மைக் கீழே தள்ளியே தீரும் 


22   சூதாட்டத்தில்  எப்பவும் நீ  எவ்ளோவ் நல்லா ஆடுனே  என்பது முக்கியம் இல்லை , எப்போ நீ ஆட்டத்தை நிறுத்துனே என்பதுதான் முக்கியம் 


23    பழைய நாட்களை என்னால திருப்பித்தரமுடியாது , ஆனா பழைய  பாஸ்கரை என்னால திருப்பித்தரமுடியும், இந்தநிமிசம் முதல் 


24     அம்மா கிட்டே பொய் சொல்றதே தப்பு , அப்படி இருக்கும்போது ஏமாத்த நினைப்பது பாவம் 

25   அவனோட  லாபத்துல  ஷேர் பண்ணிக்கத்தயார் ,ஆனா ரிஸ்க் ல ஷேர் பண்ணிக்கத்தயார்   இல்லை 


26   நீ சின்சியரா  மாறணும்னு  உடனடியா நீ மட்டும் முடிவு எடுத்தா போதுமா? உன் கூட  வேலை செஞ்சவங்களும் முடிவு எடுக்க வேணாமா ?


27    சூதாட்டத்தில் சில சமயம்  ஜெயிப்போம் , சில சமயம் கத்துக்குவோம் 


28   இந்தமாதிரி நிலைமை வரும்போது அழுது புலம்புவதை விட சிரித்துக்கொண்டே விலகி விடுவது நல்லது 

29    இந்த ஸ்கேம்  வெளில வந்தா அவன் மாட்டிக்குவான் , ஆனால் அவனே அதை வெளில கொண்டு வந்தா நீங்க மாட்டிக்குவீங்க 


30   நான் எதோ  தப்பு பண்ணி  இருக்கேன்னு அவளுக்குத்தெரியும், ஆனா அது என்ன?னு தெரிஞ்சுக்கும்  தைரியம் அவளுக்கு இல்லை 


31    எவ்ளோ  நாட்களா ஆடுனோம் என்பது முக்கியம் இல்லை , எப்போ நிறுத்தினோம் என்பதுதான் முக்கியம் 


32  என்னை மாற்றியது  என் மனைவியோட  அழுகை ,அப்பா சொன்ன வார்த்தை , ஒரு மனிதனோட மரணம் 


33    ஜெயிச்சுட்டு  பின் தோற்றுப்போனா அந்த தோல்வி தான் நினைவு வரும் , ஆனா  தோற்ற பின் ஜெயித்தா  அந்த  வெற்றி சரித்திரத்தில்    நிற்கும் 

34    ஹிஸ்ட்ரி ஆல்வேஸ் ரிமெம்பர் ஹவ் யூ பினிஷ்டு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மாத வருமானம் ரூ 6000 மட்டுமே கொண்ட நாயகனின்  வீடு பங்களா டைப்பில் பிரம்மாண்டமாக  மும்பையில்  இருக்கு . அப்பா கட்டிய சொந்தவீடு என சமாளித்தாலும் 10 கோடி ரூ பெறுமானமுள்ள  அந்தவீட்டின் பேரில்  கடன் வாங்கி பிஸ்னஸ் பண்ணாமல்  நாயகன்  வேலைக்குப்போவது எதனால் ? லோயர் மிடில் கிளாஸ்  என கதையில்  சொல்லப்படும்  நாயகன் அப்பர் ஹையர் கிளாஸ்  வாழ்க்கை  வாழ்வது எப்படி ? 


2  நாயகன்  ராம்கிக்கு  வங்கிப்பணம் ரூ 2 லட்சம் ரூபாய்  அன் - அபிஷியலாக  கை  மாத்தாகத்தரும்போது எந்த அடிப்படையில் தருகிறார்? செக்  லீப் வாங்கவில்லை .ராம்கி  அல்வா கொடுத்து விட்டால் ? 


3  ராம்கி  தான் வாங்கிய கடன் ரூ 2 லட்சம் + கமிஷன்  ரூ 50,000  என  பணம் திருப்பித்தரும்போது நாயகன் வீட்டுக்கு வெளியே  வாசலில் நின்று தருகிறார் . இது அபாயம் . பலரும் பார்க்கிறார்களே? 


4   செக்போஸ்டில் போலீஸ் பிடிக்கும்போது நாயகன் செட்டப்  செய்த ஸ்பைசி கேர்ள்  காரை விட்டு  இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்து போலீசிடம் பேசுகிறார் . அடுத்த  ஷாட்டில் அந்தப்பெண்  அருகே  கார் நிற்கிறது .கண்ட்டினியுட்டி மிஸ்ஸிங்க் 


5 நாயகன்  முறைகேடாக தான் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணத்தை அவர் பேங்க் அக்கவுண்ட்டிலேயே  வைத்திருப்பது  எப்படி ?ரிஸ்க் ஆச்சே? சம்சாரம் , மச்சினி  , தம்பி  இப்படி பலர் அக்கவுண்ட் களில்  ஸ்பிலிட்  செய்து  டெபாசிட் செய்திருக்கலாமே? 


6  ஷேர்  மார்க்கெட்டில் சம்பாதித்த பணத்தை நாயகன்  பேங்க் பெண் ஸ்டெனோவிடம்  சொல்லி டெபாசிட் செய்ய சொல்கிறார் .இந்தவிஷயம்  யாருக்கும்  தெரிய வேண்டாம் என்கிறார் .அதுக்கு அவரே அதை செய்திருக்கலாம்.  ஒரு பெண் கிட்டே  ரகசியம் தங்குமா? ரிஸ்க்   

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான , விறுவிறுப்பான  கமர்ஷியல்  த்ரில்லர்  படம் ,அனைவர்க்கும் பிடிக்கும் .விகடன்  மார்க்  45 ,  குட் . மை  ரேட்டிங்  3.5 /5 


Lucky Baskhar
Theatrical release poster
Directed byVenky Atluri
Written byVenky Atluri
Produced bySuryadevara Naga Vamsi
Sai Soujanya
StarringDulquer Salmaan
Meenakshi Chaudhary
CinematographyNimish Ravi
Edited byNaveen Nooli
Music byG. V. Prakash Kumar
Production
companies
Sithara Entertainments
Fortune Four Cinemas
Release date
  • 31 October 2024
Running time
150 minutes
CountryIndia
LanguageTelugu

Thursday, October 31, 2024

DO PATTI (2024) -ஹிந்தி/தமிழ் . சினிமா விமர்சனம் ( திரில்லர்) @ நெட் பிளிக்ஸ்

     


                  DO PATTI  என்ற ஹிந்தி  வார்த்தைக்கு  டூ கார்ட்ஸ்  என்று பொருள் . டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றிப்பேசுகிறது .திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகாமல் நேரடியாக  நெட் பிளிக்ஸ்  ஓ டி டி  யில் 25/10/2024  முதல்  காணக்கிடைக்கிறது .போலீஸ் ஆபீசர் ,வக்கீல்  என இரு  பதவிகளில் கஜோல்  நடித்து இருக்கிறார் .அக்கா , தங்கை என ட்வின்ஸ்  ரோலில்  நாயகி க்ரித்தி  சனோன் நடித்து இருக்கிறார் தமிழ்  டப்பிங்கில்  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சவுமியா ,ஷைலி  இருவரும் இரட்டை சகோதரிகள் . அம்மா , அப்பா இல்லை .அத்தைதான்  வளர்க்கிறார் .இருவரும்  சிறுமிகளாக இருக்கும்போதே அம்மா  தற்கொலை செய்து இறந்து விடுகிறார் .அம்மாவின் மரணத்துக்கு  அப்பா தான் காரணம் .அடிக்கடி   அம்மாவை அடித்துக்கொடுமைப்படுத்தி வந்தவர் தான் அப்பா  . இந்த  சம்பவத்தால் சவுமியா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் 


சவுமியா ,ஷைலி  இருவருக்கும்  சின்ன வயதில் இருந்தே ஆகாது . அடித்துக்கொள்வார்கள் .சவுமியாவின்  உடைமைகளை  கபளீகரம் செய்வதில் ஷைலி க்கு  கொள்ளை  ஆனந்தம் 

அக்கா , தங்கை என ட்வின்ஸ்  ரோலில்  நாயகி க்ரித்தி  சனோன் பிரமாதமாக நடித்து இருக்கிறார் . சவுமியா  ரோலில் இவர் அமைதியான பெண்ணாக மனம் கவர்பவர் , ஷைலி ரோலில்  மாடர்ன் கேர்ள் ஆக கிளாமர் டிரஸில் கலக்குகிறார் .இவர்தானா அவர் ?அவர் தானா இவர்?என திகைக்க வைக்கிறார் 

நாயகன்  ஆளும் கட்சி அமைச்சரின் மகன் . சவுமியாவை  சந்திக்கிறார் . இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள் . அப்போது ஷைலி இருவருக்கும் இடையில்  நுழைகிறார் .  நாயகனுக்குக்குழப்பம் . இருவரில் யாரைத்தேர்வு செய்வது ?இறுதியில் சவுமியாவை   திருமணம் செய்து கொள்கிறார் 


  திருமணம் ஆகி  சில மாதங்களில்  நாயகனின் சுய ரூபம் வில்லன்  என்பது  தெரிய வருகிறது . அடிக்கடி சவுமியாவை அடிக்கிறான் .அவனைப்போலீஸில்  எப்படி மாட்ட  வைத்து  தண்டனை பெற்றுத்தருகிறார்  என்பது தான் மீதிக்கதை 


.போலீஸ் ஆபீசர் ,வக்கீல்  என இரு  பதவிகளில் கஜோல்  நடித்து இருக்கிறார். போலீஸ் ஆபீசர் ரோலில் இவரது உடல் மொழி , நடிப்பு  ரொம்ப செயற்கை . வக்கீல்  ரோலில் பரவாயில்லை 


நாயகன் ஆக  ஷஹீர் ஷேக் .டிரான்ஸ் பர்மேஷன்  காட்சியில்  வில்லன் அஜித் போல் கலக்கி இருக்க வேண்டாமா? கோட்டை விட்டிருக்கிறார் 


சச்சேத்  பரம்பரா , டானிஷ் பாக்சித்  இருவரும் பாடல்களுக்கான இசை .ஐந்து  பாடல்களில்  2  சுமார்  ரகம் .பின்னணி  இசை அனுராக் சவுக்கியா . கச்சிதம் 



மார்ட் ரட்டாசிப்  தான் ஒளிப்பதிவு . கிளாமர்  காட்சிகளை ஆர்வமாக ,ரசனையாகப்படம் பிடித்து இருக்கிறார் .நாமன் அரோரா , ஹேமல் கோத்தாரி  இருவரும்தான் எடிட்டர்கள் .127  நிமிடங்கள்  டைம் டியூரேஷன் 


கனிகா தீலியன் எழுதிய  கதை , திரைக்கதைக்கு  சஷாங்க் சதுர்வேதி  உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்

1  பிரியாமணி நடிப்பில் வெளிவந்த  சாருலதா (2012) , அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த  தடம்  (2019) சாமி இயக்கிய  உயிர் ( 2006) , அஜித் நடித்த   வாலி ( 1999)   போன்ற படங்களில்  வெளி வந்த பல காட்சிகளை கோர்வையாக சொன்ன விதம் 

2   முதல் பாதி ரொமாண்டிக் த்ரில்லர் , பின்பாதி  கோர்ட்  ரூம் டிராமா என பிரித்துக்கொண்டு  திரைக்கதை அமைத்த விதம் 

3  டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றி அழுத்தமாகப்பே சிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 ரூல்ஸை பாலோ பண்றே , ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கறே , ஆனா பிரமோஷன் எதிர்பார்க்கறே . எப்படி நடக்கும் ?


2   சூஸ் பண்றதுல எதுவும்  தப்பு பண்ணலையே? ஐ மீன்  ஜூஸ் ..


 3  லைப்ல  நாம சந்தோஷமா  இருக்க நமக்கு என்ன எல்லாம் தேவையோ  அவை எல்லாமே நம் கண் எதிரே தான் இருக்கும் 


4   லைப்லஅட்வென்ச்சர்  இருந்தா அது நமக்கு ஹார்ட் அட்டாக்கைத்தான் வர வைக்கும் 


5   இருவருக்கு இடையில் உருவாவதுதான் காதல் .மூவர் வந்து விட்டால் அது போர்


6   என்  அப்பா யார் என  உனக்குத்தெரியுமா? 


உன்  அப்பா யார் என  உனக்குத்தெரியுதே , சந்தோசம் 


7  ஒரு வீட்டில் டொமஸ்ட்டிக்  வயலன்ஸ்  நடக்கும்போது யார்  எல்லாம் அதைப்பார்த்துட்டு  அமைதியா  இருக்காங்களோ  அவங்களும்  தப்பு நடக்கக்காரணம் 

8 நமக்காகப்பேச  உரிய தருணம்  வரும்வரை காத்திருக்கணும் 

9 ஒரு பெண்ணைக்கை நீட்டி  ஒருத்தன் அடிச்சா  அது மொத்தக்குடும்பத்துக்கும் விழும் அடி 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இரட்டை  சகோதரிகளின்  அத்தையாக நடித்தவர் நடிப்பு ரொம்ப செயற்கை 


2  ஒரு புருஷன் மனைவியை கை நீட்டி  அடிப்பது 

பெரும்பாலும்  ஹாலில் , கிச்சன்  ரூமில் .. ஆனால் அத்தை பெட்ரூமில்  சிரமப்பட்டு  அதைப்படம்  பிடிக்கிறார் 


3  இயக்குனருக்கு  இப்படத்தை டொமஸ்ட்டிக்  வயலன்ஸ் பற்றிப்பேசுவது போல எடுக்கலாமா? கிளுகிளுப்புக்கதையாக  எடுக்கலாமா?   என ஒரு டைலமோ  


4  கோர்ட்   காட்சிகள்  எடுபடவில்லை .நாடகத்தனம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமாக வந்திருக்க வேண்டிய நல்ல படம் . இயக்குனரின் அனுபவக்குறைவால்  சுமாராக  வந்துள்ளது . ரேட்டிங்க்  2.25 / 5 


Do Patti
release poster
Directed byShashank Chaturvedi
Written byKanika Dhillon
Produced by
Starring
CinematographyMart Ratassepp
Edited byNaman Arora
Hemal Kothari
Music byScore:
Anurag Saikia
Songs:
Sachet–Parampara
Tanishk Bagchi
Production
companies
  • Kathha Pictures
  • Blue Butterfly Films
  • Vipin Agnihotri Films
Distributed byNetflix
Release date
  • 25 October 2024
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageHindi

Wednesday, October 30, 2024

BOUGAINVILLEA (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் )@டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

           


   11 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்  நடிகை ஜோதிர்மயி க்கு இது ஒரு கம் பேக் படமாக அமைந்துள்ளது .2019ஆம் ஆண்டு ஜோஸ் எழுதிய  ருத்திண்டே லோகம்  என்ற நாவலைத்தழுவி  திரைக்கதை  அமைக்கப்பட்ட  படம் இது . 20 கோடி  ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரிலீஸ் ஆன  முதல் வாரத்திலேயே  27 கோடி ரூபாய் வசூல்  செய்துள்ளது ஸ்துதி  என்ற ஒரு பிரமோ சாங்குக்கு எதிராக  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .கிறித்துவ மதத்தினரைப்புண்படுத்ததும் விதமாக உள்ளது எனக் கேஸ்  பைல் செய்யப்பட்டுள்ளது .17/10/2024  அன்று    திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம்   14/11/2024  முதல்  டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார்  ஓடிடி யில் ரிலீஸ் ஆக உள்ளது          


பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த  வரதன்(2018)  டிரான்ஸ் (2020) ஆகிய  இரு  படங்களின்  இயக்குனர் ஆகவும்  , மம்முட்டி  நடிப்பில் வெளிவந்த  பீஸ்மா பர்வம் (2022)  இயக்குனர் ஆகவும்   தமிழ்  ஆடியன்ஸுக்கு அறியப்பட்டாலும் இயக்குனர் அமல் நீரத் தின் முதல் படம்  மம்முட்டி நடிப்பில்  பிக் பி  என்ற படம் தான் .பெரும்பாலும் ஆக்சன் த்ரில்லர் ,கிரைம் திரில்லர் தான்  இவரது சாய்ஸ் . பட  ரிலீஸ்  டைமில்  இது வரதன் படத்தின் பாகம் 2 ஆக இருக்கலாம் என ரசிகர்களிடையே பரபரப்பாகப்   பேசப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு டாக்டர் . ஓப்பனிங்க்  ஷாட்டிலேயே  ஒரு  கார் விபத்தில்  நாயகனும் , அவர்  மனைவியும்  மாட்டிக்கொள்கிறார்கள் , மனைவிக்கு  தலையில்  அடிபட்டதால்  பழைய நினைவுகள்  அவ்வப்போது தான்  நினைவு வரும் .அது போக  தனக்கு  இரு குழந்தைகள்  இருப்பதாக  கற்பனை உலகில்  அவர்  வாழ்ந்து வருபவர் . தன மனைவியைப்பார்த்துக்கொள்ள  நாயகன்  ஒரு பெண்ணை நியமித்து  இருக்கிறார் . ஹாஸ்பிடல்  டியூட்டி  முடிந்ததும்  இவரும்  மனைவியை  கவனித்துக்கொள்கிறார் 


நாயகியைப்பார்க்க  ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார் . கேரளாவில்  பல  டூர் ஸ்பாட்களில்  பெண்கள் காணாமல் போன கேஸ்களில்  நாயகிக்கு  எதோ  ஒரு தொடர்பு உண்டு என அவர் சந்தேகிக்கிறார் . சில சி சி டிவி  புட்டேஜ்களில்  காணாமல் போன  பெண்  நாயகியுடன்  இருப்பது  தெரியவருகிறது  ,ஆனால்  நாயகிக்கு நினைவு  வரவில்லை 



உடல் நிலை , மற்றும் மனநிலை  சரி  இல்லாத    நிலையில்  நாயகி    இருந்தும் போலீஸ்  தொந்தரவு செய்வது நாயகனுக்குப்பிடிக்கவில்லை , இருந்தும்  வேறு  வழி இல்லாமல்  ஒத்துழைக்கிறார் 


 இந்த கேஸ்  என்ன ஆனது என்பது மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக குஞ்சாக்க போபன்  கச்சிதமாக நடித்திருக்கிறார் . பொறுமை யாக  அவர் தன மனைவியை , போலீசை டீல் செய்வது செம . நாயகி ஆக  ஜோதிர்மயி  அருமையான கேரக்டர் . நாயகனை விட  அதிக காட்சிகள்  இவருக்குத்தான் , நடிக்க  அதிக முக்கியத்துவமும் இவருக்குத்தான், உணர்ந்து  நடித்திருக்கிறார் . இவர் அஜித் ரசிகையோ என தெரியவில்லை . சால்ட்  அண்ட் பேப்பர்  ஹேர்  ஸ்டைலில்  வருகிறார் 


போலீஸ்  ஆபீசர் ஆக பகத் பாசில்  அதிக  காட்சிகள்  இல்லை .கொலையாளியை  இவர் துப்பறிந்து கண்டுபிடிப்பது போல  காட்சிகள் இல்லாதது பலவீனம் .


கிரிமனாலஜிஸ்ட்  ஆக  வரும்  வீணா  நந்தகுமார்  செம நடிப்பு ., க்ளைமாக்சில்  இவரது ஆக்சன் ஸீக்வன்ஸ்   அருமை 


சுசின்  ஷியாமின்  இசை கச்சிதம் .பின்னணி இசை பெரிய பிளஸ் . விவேக்  ஹாசன்  எடிட்டிங்கில்  படம் 144 நிமிடங்கள்  ஓடுகிறது . சி சந்திரன்  ஒளிப்பதிவில்  சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் படத்துக்கான கலர் டோன்  செட் செய்த விதம் அருமை 



மூலக்கதை ஆன  நாவல் ஆசிரியர் ஜோஸ்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் இயக்குனர் அமல் நீரத்



சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  ஷாட்டில்  இருந்து நாயகியா?  வில்லியா? என்ற  சந்தேகத்தைக்கிளப்பும் நாயகியின்  உடல் மொழி , அபாரமான  நடிப்பு


2  இடைவேளை முடிந்து  கொஞ்ச  நேரத்தில் கொலைகாரன்  யார் என்பது  தெரிந்தாலும் க்ளைமாக்ஸ்  வரை நீடிக்கும் சஸ்பென்ஸ்  அருமை 


3   வில்லனின் பிளாஸ்பேக்  காட் சிகளில் நடுநிசி  நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள்  போலஅடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகள்  வைக்காமல்  கண்ணியமான காட்ச்சிகளைக்காட்டிய விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1   டியர் , உங்களுக்கு வயசாகிடுச்சு , தாடில நரை 


 அப்டியா? வயசாகலைனு நிரூபிக்கவா? 


2   இந்த வீட்டுக்குக்குடி  வந்து  எத்தனை  வருஷங்கள் ஆகுது ?


 அஞ்சாறு வருஷங்கள்  இருக்கலாம் சார் 


அஞ்சா? ஆறா ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நிஜ  வாழ்வில்  47 வயதான நாயகன் குஞ்சாக்கா போபன்   படத்தில்  மேக்கப் போட்டு  ஹேர்  டை  அடித்து  30 வயது ஆள் போல  உள்ளார் , நிஜ  வாழ்வில்  41 வயதான நாயகி ஜோதிர்மயி  நரைத்த   தலைமுடியுடன்  48  வயசு ஆள் போல  இருக்கிறார் . கணவன் , மனைவி போலவே இல்லை . . நாயகனின்  பெரியம்மா மகள் போல நாயகி இருக்கிறார் 

2     ஓப்பனிங்  ஷாட்டில்  வரும்  கார்   விபத்து    காட்சி  2012ல்  ரிலீஸ் ஆன தலாஸ்  ஹிந்திப்படத்தில்  வந்த அதே காட் சி   


3  வில்லனின்  பிளாஸ் பேக்  காட்சிகள் , க்ளைமாக்ஸ்  செட்டப் , ஆர்ட் டைரக்ஸன்  எல்லாம்   நடுநிசி  நாய்கள் , சிகப்பு ரோஜாக்கள்  போலவே  இருக்கிறது 


4  கத்தியால்  ஒருவரை த்தாக்குபோது  கொலைகாரனை கைப்பிடி காப்பாற்றும் ,ஆனால்  உடைந்த கண்ணாடித்துண்டால் ஒருவரைத்தாக்கும்போது  கொலைகாரனுக்கும்  கையில்  காயம்  உண்டாகும் , எனவே தாக்க  அது சிறந்த ஆயுதம் அல்ல ,கிளைமாக்சில் கொலைகாரன் கிரிமினாலஜிஸ்டை  உடைந்த கண்ணாடித்துண்டால்  தாக்கி காயப்படுத்துவது போல  ஒரு காட்சி இருக்கு

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  படம் மிக மெதுவாகத்தான் நகர்கிறது , பொறுமையாகப்பார்க்கும்  க்ரைம் திரில்லர் ரசிகர்கள்  பார்க்கலாம் , ரேட்டிங்க்  2.75 / 5 

 THANX  -ANICHAM  DIWALI SPL 

Bougainvillea
Theatrical Release Poster
Directed byAmal Neerad
Written byLajo Jose
Amal Neerad
Based onRuthinte Lokam
by Lajo Jose
Produced byJyothirmayi
Kunchacko Boban
Starring
CinematographyAnend C. Chandran
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
companies
Distributed byA & A Release
Release date
  • 17 October 2024
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹20 crore[2]
Box office₹33 crore[3]

Monday, October 21, 2024

பிளாக் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன். ஹாரர். திரில்லர்)

 


பிளாக் (2024) - தமிழ்- சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ஹாரர் த்ரில்லர்)



டைம் டிராவல் படங்கள் /டைம் லூப் மூவிஸ் அல்லது சயின்ஸ் பிக்சன் படஙகள் தமிழில் வந்தவை எவை என ஒரு லிஸ்ட் எடுத்தால். 12பி (2001) ,இன்று நேற்று நாளை (2015),ஓ மை கடவுளே(2020),மாநாடு (2021) என வெகு சில படங்கள் தேறுகின்றன.


Coherence(2013) ஹாலிவுட் படத்தின் அபிசியல் ரீ மேக் என சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்குப்புரியும்படி எளிதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.ஒரிஜினல் வெர்சனில் பல கேரக்டர்கள்.அப்படியே தமிழில் எடுத்தால் குழப்பம் வரும் என்பதால். ஒரே ஒரு ஜோடி மட்டும் 80% படத்தில் வருவது போலக்காட்சிகள்


இது போக படத்தின் சில காட்சிகள்  Vivarium (2019) படக்காட்சிகள் போல இருக்கின்றன என பலர்  சொல்கிறார்கள்.குறிப்பிட்ட அந்த இரு படங்களை யும் நான் பார்க்கவில்லை


ஸ்பாய்லர் அலெர்ட்


சம்பவம் 1 - வில்லனின் காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகிறது.காரில் தம்பதி பயணிக்க கார் டிரைவராக வில்லன்.என்னை விட்டுட்டு வேற ஒருத்தனைக்கட்டிக்கிட்டியா?என கருவிக்கொண்டே வருகிறான்.வில்லன் தம்பதியைக்கொல்ல முயலும்போது ஏற்கனவே யாரோ கொன்றதைக்கண்டு திடுக்கிடுகிறான்.கொன்ற உருவம் திரும்பிப்பார்க்கும்போது முகத்தைபார்க்கிறான்.அது வேறு யாரும் அல்ல.வில்லனே தான்.வில்லனுக்குக்குழப்பம்.



சம்பவம் 2.  நாயகன்,நாயகி. இருவரும் காதலித்துத்திருமணம் செய்து கொண்டவர்கள்.ஒரு நாள் ஜாலி ட்ரிப்பாக இவர்கள் வாங்கி வைத்திருக்கும் வில்லாவுக்குப்போகிறார்கள்.அங்கே வேறு யாருமே இல்லை என சொல்லப்பட்டாலும் எதிர் வீட்டில் விளக்கு எரிவதைபார்த்துக்குழப்பம் அடைகிறார்கள்


அந்த வீட்டில் அவர்கள் தங்களைத்தாஙகளே கண்ணாடியில் பார்த்துக்கொண்டதைப்போல்  அதே சாயலில் பார்த்துக்குழப்பமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்

சம்பவம் 3. நாயகி ஒருகட்டத்தில் போலீசுக்குக்கால் பண்ணி அபாயம், உடனே வரவும் என சொல்ல போலீஸ் அங்கே ஆஜர்.அங்கே நாயகன் மட்டும்.நாயகி இல்லை.சந்தேகக்கேசில் போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது


இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் ,மேலே சொன்ன 3 சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஜீவா அருமையான நடிப்பு.முன் கோபம் கொண்ட இளைஞன் ஆக அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டர்.தன்னைப்போலவே இன்னொரு ஆளைப்பார்த்துக்குழம்புவது அருமை


நாயகி ஆக பிரியா பவானி சங்கர்.ராசி இல்லாத நடிகை என்ற அவப்பெயரை இப்படத்தின் வெற்றி மூலம் போக்கி விடுவார்.தன் காதல் கணவன் முரடன் என்பதில் காட்டும் எரிச்சல் ,தன் தோழியுடன் தொடர்பு இருக்குமோ? என சந்தேகப்பட்டுப்பிரிவது என அழுத்தமான பாத்திரம்.உணர்ந்து நடித்திருக்கிறார்

வில்லன் ஆக  விவேக் பிரசன்னா கச்சிதம்.போலீஸ் ஆபீசர் ஆக யோக் ஜேபி எகத்தாளமான பார்வை ,தெனாவெட்டான உடல் மொழியுடன் நன்றாக நடித்திருக்கிறார்


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பாலசுப்ரமணி.

பின்னணி இசை சாம் சி எஸ்.திரில்லர் படஙகளுக்கே உரித்தான பி ஜி எம் செம.ஒளிப்பதிவு ஒரு திகில் படத்துக்கு எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது

பிலோமின் ராஜின் எடிட்டிஙகில்  படம் 2 மணி நேரம் விறுவிறுப்பாகப்போகிறது

சபாஷ். டைரக்டர்

1 கதை இன்ன மாதிரிதான் போகும் என்பதை விளக்க ஓப்பனிங சீனிலேயே ஒரு முன் கதையை சொன்ன விதம்

2. குவாண்ட்டம் பிசிக்ஸ் , பேரலல் ரியாலிட்டி , பெர்முடா ட்ரை ஆங்கிள் ,என சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரியாத சமாச்சாரங்களை முடிந்தவரை எளிமையாகச்சொன்ன விதம்

3. பூமிக்கு அருகே நிலா வரும் ஒரு அபூர்வமான பவுர்ணமி இரவில் முழுக்கதையும் நடப்பதாக சித்தரிப்பது


ரசித்த வசனங்கள்

1.  என் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் தோல்வி நீ தான்

2. எல்லாக்காதல் கதைகளும் கலர்புல்லா ,ஸ்வீட்டாதான் ஆரம்பிக்கும்


3. மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு பயந்து பயந்து நாம் நமக்கான. வாழ்வைத்தொலைத்து விடக்கூடாது

4.  மேரேஜ் ஆகி 7 வருடங்களுக்குள். மனைவிக்கு ஏதாவது நடந்தாலோ,மனைவி காணாமல் போனாலோ கணவன் தான் முதல் சஸ்பெக்ட்

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டில்  ஏதோ சத்தம் வருது,என்ன? எனப்பாருங்க என சொன்னதும் அனைத்து கான்ஸ்டபிள்களும் கைதியாகபிடித்து வைத்த நாயகனை அம்போ என விட்டு விட்டு அப்படியா  செம்மறி ஆட்டுக்கூட்டம் போல கிளம்புவாஙக?2 பேராவது ஸ்பாட்டில் கைதி கூட இருக்க வேண்டாமா?

2. நாயகனின் முன்னாள் காதலி/ தோழி ஒரு எதிர்பாராத சந்திப்பில் நாயகனை அணைத்து முத்தமிட முயலும்போது நாயகன் காட்டும் அதீத எதிர்ப்பு நம்பும்படி இல்லை.அப்படி எல்லாம் யோக்கிய சிகாமணிகள் இருக்கிறார்களா? என்ன?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்.  - யு


சி பி எஸ். பைனல் கமெண்ட் - மாறுபட்ட திரில்லர் மூவியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.விகடன் மார்க். 44. குமுதம் ரேங்க்கிங் - நன்று.

மை ரேட்டிங். 3/5