Wednesday, August 21, 2024

LITTLE HEARTS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

   


     7/6/2024 முதல் திரை அரங்குகளில்  வெளியாகி மீடியம் ஹிட் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம்  ஓடிடி யில் காணக்கிடைக்கிறது மூன்று வேவ்வேறு ஜோடிகளின் காதல் கதை தான் இப்படம் . சில நாடுகளில் இப்படத்துக்கு   தடை விதிக்கப்பட்டது .கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிரான படம் என்று சொல்லப்பட்டது படம் வெளியான போது படத்தின் நாயகன் ஆன ஷேன் நிகாம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பாகப்பேசப்பட்டு பின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் .குடும்ப நண்பர்கள் நாயகனுக்கு அம்மா இல்லை . அப்பா மட்டும் தான் .அப்பா ஒரு இன்ஸடாகிராம் பைத்தியம் . எப்போப்பாரு அதில் போஸ்ட் போட்டுக்கொண்டு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் வருது என கணக்குப் போடுபவர் . அவருக்கு திருமணம் ஆன ஒரு  பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது .அந்தப்பெண்ணுக்கு ஒரு மகள் உண்டு . அந்த மகளுக்கு இவர்கள் பழக்கம் பிடிக்கவில்லை .அந்த பெண்ணின்  கணவன்  எங்கேயோ ஓடிப்போய்விட்டான் . நாயகனின் அப்பா - அந்தப்பெண் இருவருக்குமான காதல் ,சந்திப்புகள் என ஆரம்பத்தில் காமெடி , கலாட்டாக்களோடு படம் களை  கட்டுகிறது 



நாயகி நாயகனை  விரும்புகிறாள் . அதை நாயகனிடம் வெளிப்படுத்தும்போது நாயகன் பயப்படுகிறான் . உன் அப்பாவும் , என் அப்பாவும் பேமிலி  பிரண்ட்ஸ் . நம் காதல் விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என மறுக்கிறான் . ஆனால் நாயகி தன்  முடிவில்  உறுதியாக இருக்கவே நாயகன்  வேறு வழி இல்லாமல் காதலுக்கு ஓகே சொல்கிறான் .நாயகி , நாயகனைத்துரத்தி துரத்தி  காதலிப்பது முதல் பாதி திரைக்கதையில் காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது 


நாயகியின் அண்ணன்  ஒரு நபரைக்காதலிக்கிறான் . அந்த விஷயத்தை  தன பெற்றோரிடம் சொல்லி சம்மதம்  பெற்றுத்தரவேண்டும் என நாயகனிடம் கேட்டுக்கொள்கிறான் . சரி என்று சொன்ன நாயகன் 

நாயகியின் அண்ணன்   காதலிப்பதாகக் காட்டிய  நபரைக்கண்டு  அதிர்ச்சி அடைகிறான் 



 இந்த மூன்று காதல்களும் நிறைவேறியதா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  ஷேன் நிகாம்  கலகலப்பாக நடித்திருக்கிறார் . கேரளாவில் இவருக்கு ரசிகைகள் அதிகம் , நம்ம ஊரு சித்தார்த் போல  முகச்சாயல் 


 நாயகி ஆக மஹிமா நம்பியார் கண்ணியமான  அழகுடன் வந்து போகிறார் . 


நாயகனின் அப்பாவாக  பாபுராஜ் .காமெடி நடிப்பு  இயல்பாக வருகிறது . இவர் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டரும் கூட 


இவருக்கு ஜோடியாக ரம்யா  சுவி  அமர்க்கள மாக நடித்திருக்கிறார் ., ஆனால் டூயட் எல்லாம்  இல்லை . மொத்தப்படத்திலும்  இந்த ஜோடி தான் நம் கவனத்தை ஈர்க்கிறது 


நாயகியின் அண்ணன் ஆக  ஷைன் டாம் சாக்கோ .பல படங்களில்  வில்லனாக கலக்கியவர் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார் . இவர் காதலிக்கும்  நபர்  ஆக வருபவர் பரவயில்லை ரகம் 


 ஜாபர்  இடுக்கி ஒரு  சிறிய ரோலில் வந்தாலும் பிரமாதாதப்படுத்தி இருக்கிறார் 


ரோஸி செபாஸ்டின்  நடிப்பு குட் இவர் பேசிக்கலி ஒரு டான்சர் 



கைலாஷ் மேனன் இசையில் 6 பாடல்கள் , அவற்றில் 4  குட் . லுக் ஜோஸ் தான் ஒளிப்பதிவு .குளுமையான படப்பிடிப்பு , நாயகிகளுக்கான க்ளோசப் ஷாட்களில் முத்திரை பதிக்கிறது கேமரா . 


 நோட்டல் அப்துல்லாவின்  எடிட்டிங் கச்சிதம் 134 நிமிடங்கள் படம் ஓடுகிறது 


கதை + இயக்கம் = ஆண்ட்டோ  ஜோஸ் ப்ரேரியா + அபி   ட்ரிசா பால் 


திரைக்கதை வசனம் ராஜேஷ் பின்நாடன் 



சபாஷ்  டைரக்டர்

1  லவ் ஸ்டோரியாக  இருந்தாலும் குடும்பத்துடன் கலகலப்பாக ரசிக்கும்படி காட்சிகளை அமைத்த விதம் 


2  நாயகன் - நாயகி காதல் கதையை விட நாயகனின் அப்பா - அந்தப்பெண் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன விதம் 


3  நாயகியின் அப்பாவாக வரும் ரஞ்சி பணிக்கரின் இயல்பான நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு மொத்தம் 3 பிரச்சனைகள் இருக்கு 


 முதல் பிரச்சனை என்ன?என எனக்குத்தெரியும் .இரண்டாவது பிரச்சனை என்ன? 


இரண்டாவது பிரச்சனை என்ன?   என்பதை   வெளில சொல்ல முடியாது என்பதுதான் மூன்றாவது பிரச்சனை 


2   உலகில் பெரிய கொடூரம் எது தெரியுமா?தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு ஜோடி செட் ஆன பின்பு மீண்டும் அவன் தனியன் ஆவது 


3  உங்களுக்கு வயசு எவ்ளோ? 


56 


இன்சூரன்ஸ்  எடுத்தாச்சா? 


இன்னும் இல்லை 


 எடுத்துடுங்க , யூஸ் ஆகும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  நாயகனின் அப்பாவின் காதலி யின் மகள் டீன் ஏஜ் பெண் .அவளுக்கு இவர்களது  பழக்கம் பிடிக்கவில்லை .ஆரம்பத்தில் இருந்து வெறுக்கிறாள் . அவளது  வெறுப்பு ஓவர் டோஸ் அம்மாவின் நிழலில் வாழ்பவர்  அம்மா வை அவ்ளோ எதிர்ப்பது எதனால் ? திடீர் என அவர் மனம் மாறி அம்மாவின் காதலை ஏற்பதும்  நம்ப முடியவில்லை 

2 நாயகனின் அப்பாவின் காதலி யின்  கணவன் திடீர் என  என்ட்ரி கொடுக்கும்போது   பெரிதாக எதோ நடக்கப்போவதாக நினைத்தால்  ஏமாற்றம் .அவர்   கேரக்டர்  நம்பகத்தன்மை இல்லை  

3   காமெடியாகப்போகும் முதல் பாதி திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திடீர் என பின் பாதி திரைக்கதை  சீரியஸ் மோடுக்குப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி ஆன ரொமாண்டிக் காமெடி டிராமா . டைம் பாஸ் கேட்டகிரி . ரேட்டிங்  2. 5 / 5 


Little Hearts
Directed byAnto Jose Pereira
Aby Treesa Paul
Written byRajesh Pinnadan
Story byAnto Jose Pereira
Aby Treesa Paul
Produced bySandra Thomas
Wilson Thomas
StarringShane Nigam
Mahima Nambiar
Baburaj
Aima Rosmy Sebastian
Shine Tom Chacko
Shammi Thilakan
CinematographyLuke Jose
Edited byNoufal Abdullah
Music byKailas Menon
Production
company
Distributed byMillion Dreams
Release date
  • 7 June 2024
Running time
134 minutes
CountryIndia
LanguageMalayalam

Tuesday, August 20, 2024

JAMA(2024) -ஜமா -தமிழ் - சினிமா விமர்சனம் (உலக சினிமா )

             

        ஒரு கமல் ஹாசனோ , சீயான்  விக்ரமோ  நடிக்க வேண்டிய ஒரு பிரமாதமான கேரக்டரை  ஒரு அறிமுக நடிகர்  துணிச்சலாக ஏற்று நடித்து அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டி இருக்கிறார் என்பது முதல் அதிசயம் . அவரே தான் படத்தின் இயக்குனர் அதுவும்  அவர் இயக்கும் முதல் படம் என்பது அடுத்த அதிசயம்  


கதாநாயகன் + இயக்குனர்  என்ற இரு அந்தஸ்தில் தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட முதல் நபர் கே பாக்யராஜ் .அவரைத்தொடர்ந்து  டி ராஜேந்தர் , ஆர் பார்த்திபன் , ஆர் பாண்டியராஜன் , சேரன் , கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ,அமீர்   என  நீளும் பட்டியலில் புதிய வரவாக  பாரி இளவழகன் . பிரமாதமான திரைக்கதை + அட்டகாசமான நடிப்பு என  கலக்கி இருக்கும் இந்தப்படத்தைப்பற்றிப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

தெருக்கூத்து நடத்துபவர்கள்  வைத்திருக்கும் குழு வுக்கு ஜமா  என்று பெயர் . வில்லன் நடத்தும் ஜமாவில்  நாயகன் பெண் வேடம் இட்டு நடிப்பவர் .இதனால் அவர் உடல் மொழியில் , பேச்சில் இயல்பாக ஒரு பெண் தன்மை வந்து விடுகிறது . ஊர் மக்கள்  இதை வைத்து  நாயகனை  கிண்டல் செய்கிறார்கள் .நாயகனுக்கு யாரும் பெண்  தர மறுக்கிறார்கள் . இதனால் கோபம் கொள்ளும் நாயகனின் அம்மா இனி பெண் வேடம் இட்டு நடிக்க வேண்டாம் என சொல்ல நாயகன் வில்லனிடம் போய் இனி ஆண்  வேடம் இட்டு நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்கிறான் . ஆனால்  வில்லன் மறுக்கவே நாயகன் தனியாக ஜமா ஒன்றைத்தொடங்க  திட்டம்  இடுகிறான் 

வில்லனின் மகளும்  , நாயகனும்  சின்ன வயதில் இருந்தே  காதலர்கள் . இது வில்லனுக்குப்பிடிக்கவில்லை . ஆனால் நாயகி தன காதலில் உறுதியாக இருக்கிறாள் . தன்னிடம் இருக்கும் பெண் தன்மையால்   நாயகிக்கு அவப்பெயர் வரக்கூடாது என நாயகன் நினைக்கிறான் .அதனால் நாயகியை விட்டு விலகியே இருக்கிறான் 

பிளாஸ்பேக்கில்   ,  நாயகனின் அப்பாதான் ஜமாவின் தலைவர் என்பதும் , அவரிடமிருந்து வஞ்சகமாக ஜமாவைக்கைப்பற்றியவன் தான்  வில்லன் என்பதும் நமக்குத்தெரிய வருகிறது 

நாயகனின்  ஜமா கனவும் , ஆண்  வேடம் இட்டு நடிக்கும் லட்சியமும்  நிறைவேறியதா? நாயகன் - நாயகி காதல் என்ன ஆனது ? என்பது மீதி திரைக்கதை 

நாயகன் ஆக அதகளம் செய்திருக்கிறார்   பாரி இளவழகன் .குறிப்பாக  பெண்  தன்மை மிளிரும் உடல் மொழியில் அசத்தி இருக்கிறார்  . தமிழ் சினிமாவில் இது போல் இதற்கு முன் செய்தவர்கள் அவ்வை சண்முகி கமல் , ஆணழகன் பிரசாந்த் ( காமெடி டிராக்குகளில்  விவேக் ,சந்தானம் ) பாஞ்சாலி  வேடத்தில் இவர் நடிப்பு அருமை எனில்   குந்தி தேவி வேடத்தில் இவர் நடிப்பு அட்ட காசம் .க்ளைமாக்சில் இவரது கனவு வேடம் ஆன அர்ஜுன் மகாராஜா  வேடத்தில் ஆர்ப்பரிக்கும் நடிப்பு 

வில்லன் ஆக சேத்தன் செமயான ரோல் . அசத்தி  இருக்கிறார் . நய வஞ்சகம் , ஆணவம் , கெத்து , வெறுப்பு என இவர் காட்டும் முக பாவனைகள் செம 

நாயகி ஆக  அம்மு அபிராமி .வரும் காட்சிகள் குறைவு , ஆனால் வந்தவரை அவர் நடிப்பு நிறைவு 

நாயகனின் அம்மாவாக  மணிமேகலை உணர்வுப்பூர்வமான நடிப்பு , அப்பாவாக கிருஷ்ண தயாள் அடக்கி வாசித்த நடிப்பு .அப்பா , மகன்  இருவருக்கும் துணை ஆக வரும்  பூனை  கேரக்டரில்  வசந்த் மாரிமுத்து  களை  கட்டும் நடிப்பு 

இந்தமாதிரி படங்களுக்கு இசை அமைப்பது இளையராஜாவுக்கு  அல்வா சாப்பிடுவது போல .புகுந்து விளையாடி இருக்கிறார் நீ இருக்கும் உசரத்துக்கு நானும் வருவது எப்போ  என்ற அட்டகாசமான மெலோடி  கலக்கல் ரகம் . பின்னணி இசை வழக்கம் போல் ராஜாங்கம் .க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னி இருக்கிறார் பிஜிஎம்மில் 

கோபால கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அழகு. கூ த்து நடக்கும் காட்சிகளை  படம் பிடித்த விதம் உயிரோட்டம் . எடிட்டிங்க் பார்த்தா . படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது.

நேர்த்தியாக திரைக்கதை  எழு தி   இயக்கி இருப்பவர்  பாரி இளவழகன்

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனுக்கும் , நாயகிக்கும் ஆல்ரெடி காதல் இருந்திருக்கிறது என்ற டிவிஸ்ட் வெளியாகும் இடம் , வெளியான விதம் இரண்டும் அருமை 

2  பெண் தன்மை மிளிர  நாயகன் நடந்து கொள்ளும் இடங்கள் , பாஞ்சாலி ஆக நடிக்கும்போது  ஒரு விதமான நடிப்பு , குந்தி ஆக நடிக்கும்போது சோக நடிப்பு , அர்ஜுன் மகாராஜாவாக நடிக்கும்போது கம்பீர நடிப்பு என  மாறுபட்ட பரிமாணங்களில்  நாயகனின் நடிப்புத்திறன் வெளியான விதம் . சில கோணங்களில் நாயகன் சிலம்பாட்டம் சிம்பு போல முக சாயல் கொண்டு இருப்பது பிளஸ் 

3 டைட்டில் போடும்போதே டைட்டில் டிசைனில்  நாயகன்  கேரக்டரை உணர்த்திய விதம் .முதல் காட்சியிலேயே   கதைக்குள் போன விதம் 

4   வாய்ப்பிருந்தும்  வன்முறைக்காட்சிகள்  , ரத்தம் , கொலை , சண்டை போன்றவற்றை தவிர்த்த விதம் 

5  ஆக்சன் மசாலா  படங்களில் வருவது போல வில்லனைப்பழி வாங்காமல்   தன்  நடிப்பால்  தவறை உணரச்செய்த விதம் 



ரசித்த  வசனங்கள் 


1  நமக்கு எதிரி அவனுக்கும்  எதிரியா இருக்கணும்னு அவசியம் இல்லை 


2  என் கோபம் என்  மகனுக்கு வராம நீ தான் பார்த்துக்கணும் 


3  ஒரு சில தெல்லாம் நம்ம வாழ்க்கைல லேட்டா வந்தாலும்  அதுவே முக்கியம் ஆகிடும் 


4  அடுத்து நாம தலைவன் ஆகலாம்னு பார்த்தா ஆளாளுக்கு போட்டிக்கு வர்றானுங்களே  ?


5   யார் மனசும் நோகாம யார் பேசறாங்களோ , நடந்துக்கறாங்களோ அவன் தான் ஆம்பளை 


6 நமக்குப்பிடிச்சவங்க  நம்மை தட்டிக்கொடுப்பாங்க . நம்மைப்பிடிக்காதவங்க  நம்மை அமுக்கப்பார்ப்பாங்க 


7  நமக்கு  திறமை இருக்கா ?இல்லையா?ன்னு நாம தான்  சொல்லணும் , மத்தவங்க சொல்ல மாட்டாங்க 


8 கல்யாணம் தான் இப்ப ரொம்பமுக்கியமா? 


 அதை விட வேற என்ன முக்கியம் ? 


9  கல்யாணம் பண்ணிக்கனு என்னை  ஒவுத்திரியம் (தொந்தரவு) பண்ணவே  எனக்கு கல்யாணம் னு பேரு  வெச்சுட்டாங்கபோல 


10  என்னை விட்டுப்போன்னு நீயே சொன்னாலும் உன்னை விட்டு எப்பவும் நான் போகமாட்டேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனுக்கு பெண்பார்க்க பல வீடுகளுக்குப்போவதாக ஓப்பனிங்கில் சீன் வருகின்றன .ஆனால் பிளாஷ்பேக்கில்   நாயகன் - நாயகி  தெய்வீகக்காதல் எபிசோடு காட்டுகிறார்கள் . எப்படியும் நாயகன் நாயகியைத்தான்  திருமணம்  செய்துகொள்ளப்போகிறான் என்பது நாயகியின் அம்மாவுக்கும்  தெரியும் , பின்  எதற்காக பெண் பார்க்கும் படலங்கள் ? 

2  எந்த  தைரியத்தில் , என்ன நம்பிக்கையில் சொந்த நிலத்தை விற்று அந்தப்பணத்தை அட்வான்ஸாக ஜமா நடிகர்களுக்கு நாயகன் கொடுக்கிறார்? பணத்துக்கு என்ன கேரண்டி ?

3   நாயகன் - நாயகி காதல் போர்ஷனில் இன்னும் கொஞ்சம்  காட்சிகள் வைத்திருக்கலாம் . நாயகன் விலகி விலகிப்போவதும் , நாயகி நாயகனை மிரட்டிக்காதலிப்பது  போலக்காட்சிகளும்  காதலை  கேள்விக்குள்ளாக்குகிறது 

4  வில்லனை நாயகன் பேசியே திருத்துவது  எம் ஜி ஆரின் பல்லாண்டு வாழ்க , ஆர் பார்த்திபனின்  இவண்  ஆகிய  படங்களிலேயே   எடுபடலை .இதிலும் வில்லன் திருந்துவது  நம்பமுடியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தெருக்கூத்து பற்றித்தெரியாத  2 கே கிட்ஸ் கூட ரசிக்கும் அளவு பிரமாதமான திரைக்கதை , காட்சி அமைப்புகளுடன்   இளையராஜாவின் இசையும் , அனைவரது  அட்டகாசமான நடிப்பும்  பார்த்தே தீர வேண்டிய படமாக பரிந்துரைக்கும் .,அவதாரம் எடுத்த நாசர் கூட சிலாகிப்பார் .ரேட்டிங்  4 / 5 

டிஸ்கி - இந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகர் , இயக்குனர் ,  சிறந்த குணசித்திர நடிகர்   என 3 விருதுகளை இப்படம் வெல்லும் .அன்பே சிவம் , குணாபோல  இப்படமும் காலம் கடந்தும் பேசப்படும் 


ஜமா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்பரி இளவழகன்
எழுதியவர்பரி இளவழகன்
தயாரித்தது
  • சாய் தேவானந்த் எஸ்
  • சசிகலா எஸ்
  • சாய் வெங்கடேஸ்வரன் எஸ்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுகோபால கிருஷ்ணா
திருத்தியதுபார்த்தா எம்.ஏ
இசைஇளையராஜா
உற்பத்தி
நிறுவனங்கள்
SSBV Learn and Teach Production Private Limited
மூலம் விநியோகிக்கப்பட்டதுபடப்பெட்டி நிறுவனம்
வெளியீட்டு தேதி
  • 2 ஆகஸ்ட் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, August 19, 2024

chandu champion (2024) -ஹிந்தி /தமிழ் -சினிமா விமர்சனம் (பயோ கிராபிக்கல் ஸ்போர்ட்ஸ் டிராமா ) @ அமேசான் பிரைம்

         


             கற்பனை கலந்து எழுதப்படும் புனைவு சிறுகதைகள் , நாவல்களுக்குக்கிடைக்கும் வரவேற்பு  சுயசரிதை நூல்களுக்கோ ,சுய சிந்தனைக்கட்டுரை நூல்களுக்கோ கிடைப்பதில்லை .இந்த உண்மையை  உணர அரசு பொது நூலகங்கள் சென்றால் போதும் .சுஜாதா , பாலகுமாரன் ,ராஜேஷ் குமார் , பிகேபி , சுபா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் அழுக்காக , கிழிந்து , சேதமுற்று  இருக்கும் . சுயசரிதை நூல்களும்  ,சுய சிந்தனைக்கட்டுரை நூல்களும்  புத்தம் புதிதாக அப்படியே இருக்கும் .யாரும் படித்திருக்கமாட்டார்கள் . ஆனால் அந்த நூல்கள் தான்  நாம் படிக்க வேண்டிய நூல்கள் 



அது மாதிரி தான் சினிமாவிலும்  ஆக்சன் மசாலாக்கள் ,க்ரைம் த்ரில்லர்கள் , காதல் கதைகள் வெற்றி பெறுவது  போல்  மோட்டிவேஷனல் டிராமாக்கள்  ஹிட் ஆவது இல்லை . 140 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம்  தரமான படமாக இருந்தும் 85 கோடி ரூ மட்டுமே வசூலித்து உள்ளது 14/6/24 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப் படம் இப்போது 9/8/24 ,முதல அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது . ஹிந்திப்படமான இது தமிழ் டப்பிங்கில் உள்ளது 


உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியவீரர் ஆன  முரளிகாந்த் பெட்கரின்  போராட்ட வரலாறு தான் இப்படம் . ஆனால் ஒரு  காட்சி கூட போரடிக்காமல்  கமர்ஷியல்  படம் போலவே எடுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


60+ வயதான பெரியவர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷன்  வந்து கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ஜனாதிபதிகளாக இருந்த அனைவர் மீதும் ஒரு புகார் வைக்கிறார் . தனக்கு  அர்ஜுனா  விருது தந்திருக்க வேண்டும் , ஆனால் தரவில்லை .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்  அபப்டி என்ன சாதனை அவர் செய்தார் எனக்கேட்கும்போது  பிளாஷ்பேக் விரிகிறது 


நாயகன் 8 வயது சிறுவனாக இருக்கும்போது அவன் கண்டகாட்சி அவன் மனதில் ஆழப்பதிகிறது . ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கிய ஓருவரை இந்த உலகமும், மீடியாக்களும் கொண்டாடுவதைப்பார்த்து தானும் அதே போல் ஒலிம்பிக் கோல்டு மெடலிஸ்ட் ஆக வேண்டும் என நினைக்கிறான் 



இளைஞன் ஆனதும் குஸ்தி சண்டை பயில்கிறான்  . சிறப்பாக  பயிற்சி பெற்று அதில் தேறுகிறான் .மிலிட்டரியில் சேர்ந்தால் தான் அவன் கனவு நனவாகும் என தெரிய வந்த;பின்  பெற்றோரின் எதிர்ப்பை மீ றி   மிலிட்ரியில் சேர்ந்து  பாக்சிங்க் வீரன் ஆகிறான் 



முக்கியமான ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பைனலில் தோற்கிறான் . இதற்குப்பின் நடந்த போர் தாக்குதலில்  நாயகனின் உடலில் 9 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து  தெய்வாதீனமாக  உயிர் பிழைக்கிறான் . ஆனால் இடுப்புக்குக்கீழே  பாகங்கள் செயல் இழக்கின்றன 


மனம் தளராமல் பயிரசி பெற்று  நீச்சல் வீரர் ஆக முன்னேறி  ஒலிம்பிக்கில் தங்கபபதக்கம் வெல்வதுதான் மீதி கதை 


நாயகன் ஆக கார்த்திக் ஆரியன் பிரமாதமாக நடித்தி ருக்கிறார் சூப்பர் ஹீரோக்களைப்பார்த்த நமக்கு யதார்த்த மனிதன் சாதிப்பதைப்பார்க்கும்போது  சந்தோஷமாக இருக்கிறது 


நாயகி , காதலி  என யாரும் இல்லை 


 நாயகனுக்குப்பயிற்சி  அளிக்கும் வீரராக விஜய் ராஜ் பிரமாதப்படுத்தி இருக்கிறார் 


பத்திரிக்கையாளர்  நயன் தாரா வாக பாக்ய ஸ்ரீ போஸ்  நல்ல அழகு . ஆரம்பத்தில் இவர் தான் நாயகி என நினைக்க வைத்தது , ஆனால் ஏமாற்றம் 


நாயகனைப்பற்றிக்கட்டுரை எழுதும் பெண் நிருபர்  சோனாலி குல்கர்னி கச்சிதமான நடிப்பு .இவரும்  அவருக்கு ஜோடி இல்லை 


பிரித்தம்  இசையில்  பாடல்கள் .பின்னணி  இசை ஜுலியஸ் பாஸ்கர் .கச்சிதம் . ஒளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி . எழுதி இயக்கியவர் கபீர் கான் 

சபாஷ்  டைரக்டர்


1   முன் அனுபவமோ , பயிற்சியோ இல்லாத நாயகனை  குஸ்தி போட்டியில் பலிகடாவாக  இறக்கி விட நாயகன்  அந்தபோட்டியில் வெல்லும் காட்சி கூஸ்பம்ப் மொமெண்ட் 


2  மிலிட்டரியில் சேர்ந்த நாயகன் ஹையர் ஆபீசரிடம் நல்ல பேர் வாங்கும் காட்சி


3  சீனர்கள் போல  ஸ்போர்க் , கத்தி யுடன் சாப்பிட்டுபழக்கம்  இல்லாத நாயகன் வெட்டி பந்தாவுக்காக முயற்சிக்கும்போது  நோஸ்கட் பெறும் காமெடி காட்சி 


4   முதன்முதலாக  டி வி பேட்டி அளிக்கும் நாயகன் இங்க்லிஷ் தெரியாத போதும்  நண்பன் உதவியுடன் சமாளிக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1  அர்ஜுனா  அவார்டு கிடைக்காதது தானே பிரச்சனை ?அதுக்கு அர்ஜுன் மேல கேஸ் போடாம எதனால ஜனாதிபதி மேல   கேஸ்  ;போடணும்? 

2 வாழ்க்கைல எந்தப்பிரச்சனை வந்தாலும் பயந்து ஓடக்கூடாது ,  எதிர்த்துப்போராடனும்,அப்போதான் ஜெயிக்க முடியும் 

3இதுவரைக்கும்  யாரும்  ஜெயிக்கமுடியலைன்னா யாராலும் ஜெயிக்கமுடியாதா? 

4 உன் பேரு தானே  டைகர் ?உன் பேரையே மறந்துட்டியா? அவனுக்கு உன் பேரை வெச்சிருக்கே? 

இது பெரிய டைகர் , அவன் சின்ன டைகர் 

5  நீ குடிச்சிருக்கியா?

 ச்சே ச்சே , நான் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் .தண்ணி  அடிச்சா லிவர் டேமேஜ் ஆகிடும் 

6 மெக்சிகன் பாக்சர்ஸுக்கு  டிபன்ஸ் என்றால் என்னன்னே தெரியாது , அட்டாக் , அட்டாக்  ஒன்லி  அட்டாக் 

7   சார்  , முதல் தடவை  செய்த தப்புக்கு மன்னிப்பு கிடையாதா? 

8  இது சூதாட்டம் இல்லை , விதியின் விளையாட்டு 

இரண்டும் ஒண்ணுதான் 

9  போர் ரொம்பமோசமானது  போர் தொடுப்பவனுக்கு   எந்த நஷ்டமும் இல்லை , நஷ்டம் எல்லாம் போரில் சண்டை போடுபவனுக்குத்தான்  

10   வாழ்வதை இன்னும் விடலைன்னா  போராடுவதை , கனவு காண்பதை என் விடணும்? 

11   நாம் கனவு காண்பதை நிறுத்தும்போதுதான் கனவு நின்னு போகும் 

12  உண்மையான வெற்றி மத்தவங்களைத் தோற்கடிப்பதில் இல்லை , உண்மையான வெற்றி என்பது தோற்று விட்டேன் என்ற குமுறலை தோற்கடிப்பதில்தான் இருக்கு 

13   இங்கே வந்திருக்கும் எல்லாருமே  உன்னால முடியாது உன்னால முடியாது   என பலரால் அவநம்பிக்கை ஊட்டப்பட்டவர் தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


நல்ல படங்கள் வருவதே  அரிது .அதிலும் குறை கண்டுபிடித்தால் நல்லாருக்குமா? எனவே ஆக்சன் மசாலாக்களில் மட்டுமே  இந்த வேலையை வைப்பது என நினைக்கிறேன்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரும் நிச்சயமாகப்பார்க்கவேண்டிய மோட்டிவேஷனல் டிராமா .உங்களுக்கு ஒரு உதவேகம் தரும் . ரேட்டிங்க்  3.5 / 5 


சந்து சாம்பியன்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்கபீர் கான்
எழுதியவர்கபீர் கான்
சுமித் அரோரா
சுதிப்தோ சர்க்கார்
தயாரித்ததுசஜித் நதியத்வாலா
கபீர் கான்
நடித்துள்ளார்கார்த்திக் ஆர்யன்
விஜய் ராஸ்
புவன் அரோரா
விவரித்தார்சோனாலி குல்கர்னி
ஒளிப்பதிவுசுதீப் சட்டர்ஜி
திருத்தியதுநிதின் பைட்
இசைபாடல்கள்:
ப்ரீதம்
ஸ்கோர்:
ஜூலியஸ் பாக்கியம்
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுபென் மருதர் பொழுதுபோக்கு
வெளியீட்டு தேதி
  • 14 ஜூன் 2024
இயங்கும் நேரம்
142 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட  70–140 கோடி [ 2 [ 3 ]
பாக்ஸ் ஆபிஸ்மதிப்பிடப்பட்ட ₹88.73 கோடி [ 4 

Sunday, August 18, 2024

டிமாண்ட்டி காலனி -2 - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் )

       


        அருள்நிதியின்  கதைத்தேர்வு  எப்போதும் வித்தியாசமாக இருக்கும் . அவரது எல்லாப்படங்களுமே மாறுபட்ட திரைக்கதை அம்சம் கொண்டவை .  டிமாண்ட்டி காலனி 2015 ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது திகில் பட ரசிகர்கள் கொண்டாடினார்கள் .ஹிட் ஆனது .இப்போது இரண்டாம் பாகம் வந்துள்ளது .மூன்றாம் பாகத்துக்கும் லீடு உண்டு        


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - நாயகியின்  கணவன் திடீர்  என தூக்கில் தொங்கி உயிர் இழக்கிறான்.அது தற்கொலையா? விபத்தா? அமானுஷ்ய சம்பவமா? தெரியவில்லை . தன  மாமனாருடன்  வசிக்கும் நாயகிக்கு இறந்த தன கணவன்  தன்னிடம் எதோ சொல்ல முயல்வது போல தோன்றுகிறது .அந்த ரகசியம் என்ன?   என்பதைக்கண்டறிய  முயல்கிறாள் 


சம்பவம் 2  - காலேஜ் லைப்ரரியில் குறிப்பிட்ட ஒரு புக்கை யார் படித்தாலும் அவர்கள் இறக்கிறார்கள் அவர்கள் இறந்த பின் அந்த புக் மீண்டும் லைப்ரரிக்கு எப்படி வருகிறது ? அந்த புக்கை யார் எப்போது படிக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது மர்மம் 


சம்பவம் 3  - முதல் பாகத்தில் க்ளைமாக்சில் உயிருக்குப் போராடும் நாயகன்  இதில்  கோமா ஸ்ட்டேஜில்  இருக்கிறான் . அவனது  டிவின் பிரதர் வில்லன் .இருவரது அப்பாவும்  இறக்கும் முன் சொத்தை  நாயகன் பேரில் எழுதி வைத்து விடுகிறார் .இதனால் நாயகன்  இறந்து  விட்டால்  வில்லனுக்கு லாபம் என்று  நினைக்கும்போது அவன் இறந்தால் தானும் இறக்க நேரும் என்ற உண்மை தெரிய வருகிறது 


மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் எப்படி ஒரு நேர்கோட்டில் வருகின்றன பின்பது மீதி  திரைக்கதை  


நாயகி ஆக ப்ரியா பவானி சங்கர் செம நடிப்பு . துடிப்பான முக பாவனைகள் அருமை 



அருள் நிதி க்கு அதிக வேலை இல்லை .அவரது கேரக்டர்  டிசைனில்  ஒரு  தெளிவில்லை . ஒருவர் படம்  முழுக்க கோமா ஸ்டேஜில்  , இன்னொருவர்   நாயகிக்கு பி ஏ போல என  இருப்பதால் அவருக்கு வாய்ப்பு  கம்மி 

நாயகியின் மாமனார் ஆக  அருண் பாண்டியன்  சுமாரான நடிப்பு . அவரது குரல் செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரி 


புத்த மத  பிட்சுவாக டிசேரி ங்க்  டோர்ஜி  நல்ல நடிப்பு 


இசை சாம் சி எஸ் . காத்து வலிக்கும்  அளவு பிஜிஎம்மில்  பிளந்து கட்டி விட்டார் 

ஒளிப்பதிவு ஹரீஷ் கண்ணன் . பின்பாதி முழுக்க இவர் ராஜ்ஜியம் தான் 

இயக்கம் அஜய் ஞான முத்து



சபாஷ்  டைரக்டர்

1  லைப்ர்ரரியில் குறிப்பிடட ஒரு புக்கை எடுத்த யாருமே  உயிரோடு இல்லை என்பதும் அவர்கள் அனைவரும் வெவ்வேறு ஆண்டில் ஜூன் 6 அன்று மர்ம மரணம் அடைந்தவர்கள் என்பதும்  சுவராஸ்யமான முடிச்சு 

2   நாயகனுக்கு டபுள் ரோல் , ஆனால் இருவரையும் விட  நாயகிக்கே முக்கியத்துவம் . நாயகனுக்கும், நாயகிக்கும், டூயட்டோ காதலோ இல்லை , இந்த ரெண்டு கான்செப்டும் புதுசு 

3    பிக்பாஸில் குறும்படம்  ஓட்டுவதைப்போல   நாயகனுக்கும்,நாயகிக்கும்  திரையில்  படம் காட்டுவது நல்ல ஐடியா 

4  நாயகி ஆன பிரியா வு க்கும் , அந்த புத்த[பிட்சுவுக்கும்  நடிக்க நல்ல வாய்ப்பு 


  ரசித்த  வசனங்கள் 

1      இயற்கையோட படைப்புகளில் பல நம்ம கற்பனைக்கு எட்டாததாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும் 


2 நான்  சுயநலம்  மிக்கவனா இருக்கலாம், ஆனா  கெட்டவன் இல்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முதல் காட்சியிலேயே இழவு , தற்கொலை , அழுகை , கதறல்  என காட்டக்கூடாது . முதலில் கேரக்டர்களை  உலவ விட்டு  நம் மனதில் பதிய விட்டு பின் தான் இதெல்லாம் காட்டணும் 


2   இறந்த தன அப்பா தனக்கு 5% சொத்துக்களை   மட்டுமே எழுதி வைத்தார் என்பது தெரிந்து  மகள்  அப்பா போட்டோ முன் காரி துப்பும் காட்சி மகா மட்டமான ரசனை .இது போல ஒரு கேவலமான காட்சி இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை 


3   நாயகனும் , வில்லனும்  நீரும்  நெருப்பும்   எம் ஜி ஆர் போல இரட்டைப்பிறவிகள் . ஒருவருக்கு மரணமோ , காயமோ  , தீங்கோ ஏற்பட்டால் இன்னொருவருக்கும் அது நேரும் என்பதாக இவர்கள் தான் சொல்கிறார்கள் , ஆனால்  கோமா ஸ்டேஜுக்கு  ஒருவர் போன பின்பு இன்னொருவரும் அதே போல் ஆகவில்லையே? 



4   கர்ப்பமாக  இருக்கும் ஒரு பெண்ணுக்கு  தான் கர்ப்பமாக  இருப்பது தெரியாதா? தலை சுற்றல், வாந்தி, அதிக பசி , களைப்பு  என பல சிம்பட்டம்ப்ஸ் இருக்கே? 


5  நாயகியின் கணவன்  இறந்த பின்பு  என்னமோ நாயகியிடம் சொல்ல முயல்கிறான் என படம் முழுக்க பில்டப் கொடுத்து விட்டு  கடைசியில்  நாயகி  கர்ப்பமாக இருக்கிறாள் என்ற டாகடர் ரிப்போர்ட்டை  சொல்வதுதான் அந்த  ராணுவ  ரகசியம் என  சொல்லும்போது சிரிப்பு தான் வருது , நாயகிக்கு  தான்  கர்ப்பமாக இருப்பது தெரியாதா? 


6  இரட்டையர்களின் ஒருவன் நல்லவன்,இன்னொருவன் கெட்டவன் . கெட்டவன் ஆன வில்லன் திடீர் என  நல்லவனாக  எப்படி மாறுகிறான் ? 


7  கதை , திரைக்கதைக்கு  முக்கியத்துவம்  தராமல் பின்  பாதியில்  ,  வி எப் எக்ஸ் ஒர்க்ஸ்  ஓவராக இடம் பிடித்து இருப்பது திகட்டல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாகம் அளவு விறுவிறுப்பு இல்லை என்றாலும்  முதல் பாதி குட் , இரண்டாம் பாதி பரவாயில்லை ரகம் . ரேட்டிங்க்  2.5 / 5  விகடன் மார்க்  41  , குமுதம் - ஓகே 

Saturday, August 17, 2024

தங்கலான் (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

     


         இயக்குனர் பா ரஞ்சித்தின் முதல் படமான அட் டக்கத்தி (2012)  அவரது படைப்புகளில்   நெம்பர் 1 தரம் .அவரது  ஐந்தாவது படமான சார்ப்பேட்டா பரம்பரை (2021) இரண்டாவது நல்ல படம் .அவரது இரண்டாவது படமான மெட்ராஸ் (2014)  மூன்றாவது  நல்ல படம் .இந்த மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்ட ஜனரஞ்ச்க வெற்றியைப்பெற்ற படங்கள்  


இவரது மூன்றாவது  படமான  கபாலி (2016)   ரஜினியின் திரை  உலக வாழ்வில் முதல் நாள் முதல் காட்சி  டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு  கவுண்ட்டரிலேயே விற்கும் அளவுக்கு பிராண்ட் வேல்யூ ஏற்றிய படம் . இவரது  நான்காவது படமான காலா (2018) ரஜினி ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியாத  படம் .இவரது ஆறாவது படைப்பான விக்டிம் (2022) வெப் சீரிஸ்     எப்படி என தெரியவில்லை .இவரது ஏழாவது படைப்பான நட்சத்திரம் நகர்கிறது (2022)  இவருக்கு ஏழரையைக்கூட்டிய படம் ..ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோவிலேயே கூட்டம் வராமல் ஷோ கேன்சல் ஆன டப்பாப்படம் 

இவரது எட்டாவது  படம் தான் தங்கலான் .கோல்டு போல கொண்டாடப்பட வேண்டிய படமா? அஷ்டமத்துல சனியா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

1850  ம்   ஆண்டு கதை நடக்கிறது .நாயகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன் . அவனும் , அவனது ஊர்  மக்களும் அடிமைகளாக பண்ணையாரிடம் வேலை செய்து வருகிறார்கள் வில்லன் ஆங்கிலேயன் .ஒரு  தங்கச்சுரங்கத்தில்  வேலை செய்ய அடிமைகள் தேவை என்பதால் ஆசை வார்த்தை கூறி  நாயகனையும் , ஊர்  மக்களையும்  அழைத்துச்செல்கிறான்   வில்லன்  சொன்னபடி தங்கத்தில்  நாயகனுக்கும், ஊர் மக்களுக்கும் பங்கு தந்தானா? அல்வா  கொடுத்தானா?   என்பது  மீதிக்கதை 


 நாயகன்  ஆக  சீயான்  விக்ரம் .சேது ,  பிதா மகன் , காசி உட்பட பல படங்களில் பிரமாதமான நடிப்பைத்தந்தவர் .நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக தன உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் கமலுக்கே  சவால் விடுபவர் . இந்தப்படத்திலும் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார் . ஆனால் விழலுக்கு இறைத்த நீர் 


  நாயகி  ஆக பார்வதி திருவோத்து. செம ஆக்டிங்க் ,சூனியக்காரி  ஆக  மாளவிகா மோகனன் ,குட் ஆக்டிங் பசுபதியின் பங்களிப்பும் அருமை   


 இசை ஜி வி பிரகாஷ் . 2 பாடல்கள் அருமை . பின்னணி இசை அட்டகாசம்  ஒளிப்பதிவு  கிஷோர் குமார் . நல்ல உழைப்பு . ஒப்பனை , ஆர்ட் டைரக்சன்  இரண்டும்   சவாலான பணி 


சபாஷ்  டைரக்டர்


1   பாலா இயக்கிய  பரதேசி (2013)  60%  ,செல்வராகவன் இயக்கிய  ஆயிரத்தில் ஒருவன் = 20% மெக்கன்னாஸ் கோல்டு  உட்பட ஹாலிவுட் படங்கள் 10 % , சொந்த சரக்கு 10%  என கலந்து கட்டி கதை சொல்லி தயாரிப்பு தரப்பை திருப்திப்படுத்தியது 


2  ஷங்கர் இயக்கிய ஐ படத்தால்  உங்க உழைப்பே வீணாச்சு , இந்த  படத்துக்கு உங்களுக்கு ஆஸ்கார் நிச்சயம் என ஆசை வார்த்தை சொல்லி விக்ரம் கால்ஷீ ட் வாங்கியது 


3   அந்தக்காலக்கதை என்பதால்     காஸ்ட்யும் செலவை மிச்சம் செய்தது 


4   இந்த டப்பா  படத்துக்கு  150 கோடி பட்ஜெட் செலவு என தைரியமாக  எல்லாரையும் நம்ப வைத்தது 


5  முதன் முதலாக ஜாக்கெட் அணியும் பெண்களின் குதூகலத்தை அழகாக  பதிவு செய்தது 



6    விக்ரம், பசுபதி , பார்வதி , மாளவிகா  உட்பட அனைவரிடமும்  நல்ல நடிப்பை வெளிக்கொணர்ந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1   யாருக்கு தேவை இருக்கோ அவங்க தேடி எடுத்துக்கிடட்டும் 


2  மின்னுவதெல்லாம் பொன்னல்ல , பேரழிவு 


3 ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் ரோஷத்தோட வாழ்ந்து செத்துப்போகணும் 


4 வயித்துக்கு இல்லைன்னாலும் வைராக்கியம் தான் சோறு 


5  சாவுக்குத்துணிஞ்சசவங்களுக்கு மட்டும் தான் இங்கே வாழ்க்கை 


6  எங்களுக்குக்கிடைக்காத உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது ? 


7  தன்னை உணராதவன் தானே அழிவான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  படம் முழுக்க ஒரே இரைச்சல் . இரிட்டே ட்டிங்க் ஆக இருந்தது . வசனமே புரியலை 


2  உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பது போல , 10 வருடங்கள் குடி இருந்தால் வாடகை வீடு சொந்தம் என்பது போல  தங்க சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் தங்கம் அந்த கூலித்தொழிலாளிகளுக்கு சொந்தம்   என கண்டு பிடித்த விதம் 


3  முதல் பாதி திரைக்கதை கூட சுமாராக இருந்தது . பின் பாதி திரைக்கதை  ஒரே குழப்பம் , பிளேடு 


4  பாம்பு பொதுவாக மனிதர்களைக்கண்டால்  பயந்து ஓடும் . நாமாக தெரியாமல் அதை மிதித்தால் நம்மைக்கொத்தும் , இதுதான் பாம்பின் சுபாவம் . ஆனால் பல பாம்புகள் காரணமே இல்லாமல் மனிதர்களைத்துரத்துவது போல் காட்சி 


5   வில்லனை பாம்பு கொத்தியதும்  நாயகன் பதட்டமடைந்து அவனை  காப்பாற்றுவது எதனால் ? சாகட்டும்னு விட வேண்டியதுதானே? 


6 கூலி வேலை  செய்யும் நாயகனும் , ஊர் மக்களும்  தங்கம் எடுத்தால்  நமக்கும் பங்கு உண்டு என  எப்படி நம்புகிறார்கள் ? பேராசைதானே ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    இயக்குனர் பா ரஞ்சித்தின்  ஏழாவது படைப்பான நட்சத்திரம் நகர்கிறது (2022)  தான் இவரது படைப்புகளிலேயே  மோசமான தோல்வியை சந்தித்த படம் .  அதைக்கூட டி வி ல போட்டா  பார்க்கலாம் . இந்தக்குப்பையை  டி வி ல கூட பார்க்க முடியாது .200 ரூபா தண்ட க்கடன் . விகடன் மார்க் 39 , குமுதம் ரேங்க் சுமார் . ரேட்டிங் 1.75 / 5 


 எச்சரிக்கை - பல வாட்சப் பார்வர்டு களில் , பேஸ்புக் பதிவுகளில் இது அவார்டு படம் , அட்டகாசம் என்றெல்லாம் அளந்து விடுவார்கள் , நம்பாதீர்கள் , மகா குப்பை   



Thursday, August 15, 2024

GOLAM (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

         


    சமீப காலமாக  மலையாளப்படங்களை சிலாகித்து , அவற்றை வெற்றி பெற செய்வது  பல மொழி ரசிகர்களின் போக்காக இருக்கிறது .காரணம் அவர்கள்: எடுத்துக்கொள்ளும் கதைக்கரு சாதாவாகவும், திரைக்கதை ஸ்பெஷல் ஆகவும் இருப்பதே .அவர்கள் ஹீரோவுக்கு கோடிக்கணக்கில் தண்டமாக சம்பளம் தருவதில்லை .திரைக்கதை ஆசிரியர்களை மதிக்கிறார்கள் .ஸ்க்ரிப்ட்  தான் ஜெயிக்கும் என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் 

பெரிய நட்சத்திரப்பட்டாளம் எதுவும் இல்லாமல்  ஸ்க்ரிப்ட்டை நம்பி வெளியான இன்னொரு வெற்றிப்படம் இது .7/6/2024  அன்று  திரைக்கு வந்த இப்படம் இப்போது அமேசான் பிரைம்  ஓடிடி  யில் காணக்கிடைக்கிறது . தமிழ் டப்பிங்க் இல்லை  . கோளம்   என்பது டைட்டில் . விக்கி பீடியா உட்பட பல தளங்களில் கோலம் என்று தவறாக உச்சரிக்கிறார்கள்           


ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் இரு கம்பெனிகளின் எம் டி . பார்ட்னர் ஒரு ஆள் உண்டு . ஒரு கம்பெனியில் 15 பேர் வேலை  செய்கிறார்கள் . இன்னொரு கம்பெனி  ஒரு மெடிக்கல் கம்பெனி .வில்லன்  எம் டி ஆக இருக்கும் முதல் கம்பெனியில்  சிசிடி வி கேமராக்கள் உண்டு . கம்பெனியில்  பாத்ரூமில்  வில்லன் ஒரு நாள்  தலையில் அடிபட்டு இறந்து கிடக்கிறான்  .இது  விபத்தா? கொலையா?என ஆராய நாயகன் ஆன போலீஸ் ஆபீசர்  வருகிறார் .

வில்லனுக்கு  சொந்த பந்தம் யாரும் இல்லை .அதனால் வில்லனின் மறைவுக்குப்பின் சொத்துக்கள் எல்லாம் பார்ட்னருக்குத்தான் .அதனால் சந்தேக வளையத்தில்  பார்ட்னர்தான்  விழுகிறான்  . எம் டி உடன் பணியாட்கள் யாராவது தகராறு செய்தார்களா ? என  இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறது . அதில் அதிர்ச்சி அளிக்கும்  சில உண்மைகளை  நாயகன் கண்டுபிடிக்கிறான் . இதற்குப்பின்  நாயகன் எடுக்கும்   முடிவுகள்   ,திட்டங்கள் தான் மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக ரஞ்சித் ராஜீவ் பக்காவான ஜிம் பாடியுடன் , சிக்ஸ் பேக் கட்டழகுடன்  அண்டர்ப்பிளே  ஆக்டிங் செய்திருக்கிறார் . நம்ம தமிழ் நாட்டில் பல ஹீரோக்கள் தொப்பை   உடம்பை வைத்துக்கொண்டு தரும் பில்டப்களை நினைத்தால் சிரிப்பாக  இருக்கிறது 

வில்லன் ஆக திலீஷ் போத்தன்  சிறப்பாக நடித்திருக்கிறார் , ஆனால்     அவருக்கான  காட்சிகள் குறைவு . கம்பெனியில்  பணியாற்றும் பணியாளர்கள்  அனைவருக்கும் சம  வாய்ப்பு ,. கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 

 அபி செல்வின் தாமஸ் தான்  இசை .ஒரே ஒரு பாடல் .ஓகே ரகம், பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவு விஜய் .பாராட்டும் தரம் .எடிட்டிங்  மகேஷ் புவனேநந்  .இரண்டு  மணி நேரம்  டைம் டியூரேஷன் வரும்படி கச்சிதமாக  ட்ரிம் செய்து இருக்கிறார் பிரவீன் விஷ்வநாத்  என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்  சம்ஜத் 


சபாஷ்  டைரக்டர்


1   சி சி டிவி  யை ஏமாற்றி கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது   என்று காட்டிய விதம் அருமை 


2  கொலை நடந்தது எப்படி என்பதை விலாவாரியாகக்காட்ட வேண்டி இருப்பதால் கொலையாளி யார் என்ற டிவிஸ்ட்டை இடைவேளைக்கு முன்பே  ஓப்பன்   செய்தாலும்  சுவராஸ்யமாக திரைக்கதை  அமைத்த விதம் 



  ரசித்த  வசனங்கள் 

1   ஒரு கம்பெனிக்கு காலைல லேட்டா வருவதற்கான  காரணமா  முந்தின நாள் லேட்டா வீட்டுக்குப் போனதை சொல்லக்கூடாது . வேலையை  ஒழுங்கா செய்யாததால்தானே  ஓ. டி பார்க்க நேரிடுது ? 

2   அனுபவம் தான்  பேசும் , டிகிரி  சர்ட்டிபிகேட் இல்ல

3  இது சாதா கேஸ் , பொண்ணுங்களுக்கு முன்னால ஜேம்ஸ்பாண்ட் ஆக காட்டிக்க ஆசைப்படறாரு 

4 பிஸ்னஸ் ல சக போட்டியாளர்கள் எல்லாரும் எதிரிகள் தான்  


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரு கம்பெனி  எம் டி  கோடீஸ்வரர் ஆக இருப்பவர் கம்பெனியில் தன அறைக்கு உள்ளே அட்டாச்டு  பாத்ரூம்   வெச்சிருக்க மாட்டாரா? 

2  கோடீஸ்வரர்  காபி வேண்டும் எனில் பணிப்பெண்ணை அழைக்க  மாட்டாரா ?தானே போயா காபி  கலக்குவார் ? 

3  ஆபிஸ் ல பனி புரியும் ஒரு பெண் தன  கைப்பையில் தூக்க மாத்திரை ஒரு டப்பா நிறைய வைத்திருக்கிறார் , அதைக்கண்டுபிடித்த நாயகனுக்கு கொலைக்கான  க்ளூ  கிடைக்கிறது . வீட்டில் தூங்க வீட்டில் தானே  தூக்க மாத்திரை வைப்பாங்க ? கம்பெனிக்கு அதை  எதனால் கொண்டு வந்து மாட்டிக்கணும் ? 

4   வாக்கும் கிளீனர் கொண்டு பணிப்பெண் சுத்தப்படுத்தியதால்  எழுந்த சத்தத்தால்   வில்லன் எழுப்பிய அபயக்குரல் கேட்கவில்லை  என போலீசில்  சொல்கிறார்கள. வழக்கமாக அந்த சுத்தப்படுத்தும் வேலையை காலை 8 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு செய்வார்களா? ஆபிஸ் ரன்னிங் டைமில் 11  மணிக்கு செய்வார்களா? 

5   வில்லன் கம்பெனி சார்பாக ஒரு டாக்டரை  எதனால் வைத்துக்கொள்ளவில்லை ? யாருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும்  அவர்  பார்த்து  தக்க பதில் சொல்லி சமாளித்திருப்பாரே?  வெளி ஹாஸ்பிடல் போனால்,தான்   மாட்டிக்கொள்வோம் என்பது வில்லனுக்குத்தெரியாதா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட்ட க்ரைம் த்ரில்லர் திரைக்கதை . ரசிக்கலாம் . ரேட்டிங்  3 / 5 


Golam
Theatrical release poster
Directed bySamjad
Written byPraveen Viswanath & Samjad
Produced byAnne Sajeev & Sajeev P K
Starring
CinematographyVijay
Edited byMahesh Bhuvanend
Music byAby Salvin Thomas
Production
company
Fragrant Nature Film Creations
Release date
  • 7 June 2024
CountryIndia
LanguageMalayalam

Monday, August 12, 2024

அந்தகன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (பிளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் )

           

            2010 ஆம்  ஆண்டு ஃபிரெஞ்ச் ஷார்ட்  ஃபிலிமாக  THE PIANO TUNER  என்ற 13 நிமிட குறும்படம்  வெளிவந்தது , அந்தக்கதைக்கருவை மையமாக வைத்து  10% இன்ஸ்பிரேஷன் 90% புதிய  கற்பனை  என்ற  ஃபார்முலாவில் 2018 ஆம் ஆண்டு அந்தாதூன்  என்ற  ஹிந்திப்படம்  வெளியாகி  சக்கை  போடு போட்டது . 32 கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு 457 கோடி  வசூல்  செய்த  மெகா  ஹிட்  படம்  அது . ஆயுஷ் மான்  கொரானா + தபு  காம்போவில்  வெளியாகி  ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைப்பெற்றது 

       2021 ஆம்  ஆண்டு  மேஸ்ட்ரோ  என்ற  டைட்டிலில்  நிதின் + தமனா  காம்ப்போவில் தெலுங்கில்  ரீமேக்  ஆகி  ஹிட்  ஆனது . அதே  ஆண்டில்  மலையாளத்தில்  பிருத்விராஜ் + மம்தா  மோகன் தாஸ்   காம்ப்போவில்  பிரம்மம்  என்ற  டைட்டிலில்  ரீமேக்  ஆகி  ஹிட்  அடித்தது 


தமிழில்  இதன்  உரிமம்  வாங்கிய  தியாகராஜன்  தபு  ரோலில்  தபுவையே  நடிக்க  வைக்க  முயற்சி  செய்தார்.  அவர்  ஒப்புக்கொள்ளவில்லை . பின்  அந்த  ரோலில்  ரம்யா  கிருஷ்ணனை  நடிக்க  வைக்க  முயற்சித்தார். அதுவும்  செட்  ஆகவில்லை /பின்  கோவிட்  காரணம்  ஆக  படப்பிடிப்பு  தாமதம்  ஆகி 2022 ல்  படம்  ரெடி  ஆகி  விட்டது . பல  பொருளாதாரப்பிரச்சனைகளால்  தாமதம்  ஆன  படம்  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது 

ராமராஜனுக்கு  ஒரு  கம்  பேக்  படமாக  எதிர்பார்க்கப்பட்ட  சாமான்யன்  , மோகனுக்கு ஒரு  கம்  பேக்  படமாக  எதிர்பார்க்கப்பட்ட  ஹரா  இரண்டுமே  பெரிய  அலவில்  ஹிட்  ஆகவில்லை . ஆனால்  பிரசாந்த்துக்கு  இது  நிச்சயம்  ஒரு  கம் பேக்  படம்  தான் .கமர்ஷியலாகவும் படம்  ஹிட் , விமர்சன  ரீதியாகவும்  பல  நேர்மறை  விமர்சனங்கள்  வருகின்றன  


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஃபேஸ்புக்கில்  ஆண்கள்  போடும் கருத்தாழம்  மிக்க  நல்ல  பதிவுகளுக்கு  10  லைக்ஸ்  கூட  வருவது  இல்லை , ஆனால்  பெண்கள்  போடும் மொக்கையான  டம்மி  பதிவுகளுக்கு, செல்ஃபிகளுக்கு  1000  லைக்ஸ் , 2000  கமெண்ட்ஸ்  வருகின்றன. இதனால்  ஒரு  அங்கீகாரத்துக்கு  வேண்டி  சில  ஆண்கள்  ஃபேக்  ஐடி  ஓப்பன்  பண்ணி  பெண்  பெயரில் பதிவுகள்   இட்டு  லைக்ஸ்  பெறுகிறார்கள் / அந்த  மாதிரி  தான்  படத்தின்  நாயகனும்  மக்களின்  பரிதாபத்தை  சம்பாதிக்க  ஒரு  திட்டம்  போடுகிறான் 


நாயகன் ஒரு பியானோ  இசைக்கலைஞன் . லண்டன்  போய்  செட்டில் ஆக வேண்டும்  என்பதுதான்  அவனது  லட்சியம். விழி  ஒளி  இழந்தவனாக  நடித்தால்  தனக்கு  மக்களிடையே  கூடுதல்  வரவேற்புக்கிடைக்கும்  என்பதாக  நினைத்து  அதை  செயல்படுத்துகிறான், அவன்  நினைப்பும்  சரியாக  நடக்கிறது 


 ஒரு  சாலை  விபத்தில்  நாயகியின்  அறிமுகம்  கிடைக்கிறது . நாயகியிடமும்  நாயகன்  கண்  பார்வை  அற்றவராகவே  நடிக்கிறான். இருவருக்குள்ளும்  காதல்  மலர்கிறது 


நாயகனுக்கு  ஒரு  பிரபல  நடிகரின்  அறிமுகம்  கிடைக்கிறது. அவர் ஒரு  கால  கட்டத்தில்  மிகப்பிரபலம்  ஆக  இருந்த  நடிகர் . இப்போது  மார்க்கெட்  இல்லை .அவர்  இரண்டாம்  திருமணம்  ஆக  ஒரு  இளவயதுப்பெண்ணைக்கல்யாணம்  செய்து  கொண்டார் .


 அவரது  திருமண  நாள்  அன்று  தன்  மனைவியை  சர்ப்பரைஸ்  செய்ய  நாயகனை  நியமிக்கிறார். அவரது  திருமண  நாள்  அன்று  அவர்  வீட்டுக்கு  வந்து பியானோ   வாசிக்க  வேண்டும் ., இது தான்  டீல்


 பிரபல  நடிகர்  வெளியூர்  போவதாக  மனைவியிடம்  சொல்லி  விட்டுச்சென்றவர்  பின்  ஷாக்  சர்ப்பரைஸ்  ஆக  திரும்பி  வந்த  போது  தன்  மனைவி   கள்ளக்காதலனுடன்  இருப்பதைக்கண்டு  அதிர்ச்சி  அடைகிறார். இவர்  பார்த்ததால்  ஆபத்து  என்று  உணர்ந்து  கள்ளக்காதலன்  நடிகரை  ஷூட்  செய்து  கொன்று  விடுகிறான்


 அந்த  தருணத்தில்  நாயகன்  பியானோ  வாசிக்க   நடிகரின்  வீட்டுக்கு  வருகிறான். நாயகனுக்குக்கண்  தெரியாது  என்று  நினைத்து  நடிகரின்  மனைவி  ஆன  வில்லியும், கள்ளக்காதலன்  ஆன  வில்லனும்  சேர்ந்து  நடிகரின் பிணத்தை  டிஸ்போஸ்  செய்கிறார்கள் 


நாயகன் இந்த  சம்பவத்தை  போலீசில்  புகார்  அளிக்க  ஸ்டேஷன்  போனவர்  அதிர்ச்சி  அடைகிறார். அங்கே  இன்ஸ்பெக்டர்  ஆக  இருப்பவர்  தான்  கொலையாளி . கொலையாளி  ஆன  வில்லனும்  நாயகனைக்கண்டு  அதிர்கிறார்


 இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக  பிரசாந்த்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். காதல்  காட்சிகளிலும்  சரி ,  கொலையை  நேரில்  கண்டு  அதிர்ச்சி  பெறும்போதும்  சரி  துல்லியமான  உணர்வுகளைப்பிரதிபலிக்கிறார் . ஒரிஜினல்  வெர்சனில்  நாயகனுக்கு  30  வயது . இதில்  50  வயது . அந்தக்குறை  தெரியாதவாறு  சமாளிக்கிறார் 


நாயகி  ஆக பிரியா  ஆனந்த் . கிளாமர்  காட்சிகள்  அதிகம், ஆனால்  அவர்  வரும்  காட்சிகள்  குறைவு 


 வில்லி  ஆக  சிம்ரன் . ஒரிஜினல்  வெர்சன்  தபு  அளவுக்கு  இளமை , நடிப்பு  இரண்டுமே  மிஸ்சிங்  என்றாலும்  சோடை  போகாத  நடிப்பு 


 வில்லன்  ஆக  சமுத்திரக்கனி பாத்திரத்துக்கு  மெருகூட்டுகிறார். வழக்கமாக  இவரை  அட்வைஸ்  அம்புஜம்  ஆக , ஹான்ஸ்ட்  ராஜ்  ஆக  பார்த்துப்பழக்கப்பட்ட  கண்களுக்கு  வில்லன்  ஆக  மாறுபட்ட  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


  கிட்னி  திருடும்  டாக்டர்  ஆக  கே எஸ்  ரவிக்குமார் , அவரது  அசிஸ்டெண்ட்  போல  செய்லபடும்  ஆட்களாக  யோகிபாபு , ஊர்வசி  இருவரும்  காமெடி   நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 

இசை  சந்தோஷ்  நாராயணன். பியானோ  இசை  தான்  மெயின்  கதையின்  அங்கம்  என்பதால்  அதை  வைத்தே  இசை  அமைத்திருக்கிறார். பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


ரவியாதவ்  ஒளிப்பதிவு  அட்டகாசம் . ஷீஸ்  சூர்யாவின்  எடிட்டிங்க்  கச்சிதம் . இரண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . முதல்  பாதி  ஒர்ஜினல்  வெர்சன்  போலவே  செம  விறுவிறுப்பு . இடைவேளை  வந்ததே  தெரியவில்லை 


 பின்  பாதி  திரைக்கதை  ஒரிஜினல்  வெர்சன்  போலவே  கொஞ்சம்  ஸ்லோ , பிளாக்  ஹியூமர்   காட்சிகள்  த்ரில்லிங்க்  மோடைக்குறைக்கிறது 


வசனம்  பிரபல  நாவல்  ஆசிரியர்  பட்டுக்கோட்டை  பிரபாகர் . இயக்கி  இருப்பவர்  தியாக  ராஜன் . 95%  ஒரிஜினல்  வெர்சனை  சிதைக்காமல்  கொடுத்திருப்பது  பலம் 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  கொலையை  நாயகன்  பார்க்கும்போது  காட்டும்  அதிர்ச்சி .  இரண்டாவது  கொலையை  எதிர்பாராத  நேரத்தில்  வில்லி  அரங்கேற்றும்  விதம்   ட்விஸ்ட்டுக்கு மேல்  ட்விஸ்ட் 


2  முதல்  பாதியை  த்ரில்லிங்காக  தந்து  விட்டாலும்  பின்  பாதி  கதையை  இழுக்க  கிட்னி  திருடும்  டாக்டர்  கும்பலை  இணைத்தது  சாமார்த்தியம் 


3  நாயகனுக்கு  நிஜமாகவே  கண்  பார்வை  தெரியு8மா? தெரியாதா? என்பதை  செக்  பண்ண  வில்லி  நாயகன்  கண்  எதிரே  விஷம்  கலந்த  பானத்தைத்தருவது   அதைத்தொடர்ந்து  நடக்கும்  காட்சிகள்  செம 


4   ஓப்பனிங்  ஷாட்டில்  முயலைக்காட்டுபவர்கள்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  அந்த  முயலை  கச்சிதமாக  பயன்படுத்திய  விதம் 


5  வில்லி  நாயகனுடன்  இருக்கும்போது  நாயகி  வந்து  விட  அதைத்தொடர்ந்து  எழும்  சந்தேகங்கள்  கச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   எல்லா  கலைஞர்களுமே  போதைக்கு  அடிமை , அதாவது  அப்ளாஸ் ம் அங்கீகாரம்  போன்ற  போதைகளுக்கு.... 


2   சில  விஷயங்களை  கம்ப்ளீட்  பண்ணாமல்  இருந்தால்  தான்   நல்லாருக்கும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியின்  அறிமுகத்துக்குப்பின்  நாயகன்  எங்கே  போனாலும்  நாயகியுடன்  தான்  போகிறான் , ஆனால்  நடிகரின்  அழைப்பின்  பேரில்  அவரது  வீட்டுக்குப்போகும்போது  ஏன்  தனியாகப்போகிறான் ? இத்தனைக்கும்  நாயகிக்கும்  , நடிகருக்கும்  ஏற்கனவே  அறிமுகம்,   உண்டு , தாராளமாக  உடன்  அழைத்துச்சென்றிருக்கலாம், அல்லது  நாயகி  வராமல்  இருக்க  ஒரு  காரணம்  காட்டி  இருக்கலாம் 


2   பல  கோடி ரூபாய்களுக்கு  அதிபர்  ஆக  இருக்கும்  பிரபல  நடிகர்  தனி  பங்களாவில்  இருப்பாரா?  அபார்ட்மெண்ட்டில்  பல  குடும்பங்களுக்கு  மத்தியில்  வசிப்பாரா? 


3   பிரபல  நடிகரின்  மனைவியாக  இருப்பவர்  கள்ளக்காதலனை  சந்திக்க தன்  வீட்டுக்கே  வர  வைப்பாரா?  அபார்ட்மெண்ட் வாசிகள்  பார்த்தால்  கணவனிடம்  சொல்லி  விட  மாட்டார்களா? 


4  ஒரு  போலீஸ்  ஆஃபிசர்   தன்  கள்ளக்காதலியை  சந்திக்க சிசிடிவி  கேமரா  இருக்கும்  அபார்ட்மெண்ட்டுக்கு  வருவாரா? 


5  வில்லி  செய்த  கொலையை  நேரில்  கண்ட் சாட்சி  ஆன  நாயகன்  தனக்கு  வில்லி  தந்த  பிரசாதத்தை  எந்த  சந்தேகமும்  படாமல்  சாப்பிடுவது  எப்படி ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஹிந்தி  வெர்சன்  ஆன  அந்தாதூன்  பார்க்காதவர்கள்  இந்தப்படத்தைப்பார்க்கலாம் . ரேட்டிங் 3 / 5

ஆனந்த  விகடன்  மார்க் 43   குமுதம்  ரேங்கிங் = குட் 


அந்தகன்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்தியாகராஜன்
மூலம் திரைக்கதைதியாகராஜன்
பட்டுக்கோட்டை பிரபாகர் (உரையாடல்)
அடிப்படையில்ஸ்ரீராம்
ராகவனின் அந்தாதுன்
தயாரித்ததுசாந்தி தியாகராஜன்
ப்ரீத்தி தியாகராஜன்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுரவி யாதவ்
திருத்தியதுசதீஷ் சூர்யா
இசைசந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு
நிறுவனம்
ஸ்டார் திரைப்படங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுவி கிரியேஷன்ஸ்
வெளியீட்டு தேதி
  • 9 ஆகஸ்ட் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்