உருவம்(1991)-தமிழ்- சினிமா விமர்சனம்
(சூப்பர் நேச்சுரல் ஹாரர் ட்ராமா)
@அமேசான் ப்ரைம்,ராஜ் டிஜிட்டல் பிளஸ்,யூ ட்யூப் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்
வெள்ளிவிழா நாயகன் மோகன் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டபோது. அவரது மார்க்கெட்டை மொத்தமாகக்காலி பண்ணிய படம் இது.யார் மேல் தப்பு,?எதனால் தோல்வி என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தனது மனைவி,இரண்டு. குழந்தைகள்,ஒரு தங்கை ,தங்கையின் கணவன,மச்சினி இவர்களுடன்கூட்டுக்குடித்தனமாக ஒரு பங்களாவில் வசித்து வருகிறான்.
நாயகனின் அப்பாவுக்கு ஒரு இல்லீகல் மனைவி அல்லது ஆசை நாயகி உண்டு.அவர்களுக்குப்பிறந்த மகன் சொத்துக்கு ஆசைப்பட்டு கேஸ் போடுகிறான்.ஆனால் தீர்ப்பு அவனுக்கு சாதகமாக வரவில்லை.இதனால் செம கடுப்பான வில்லன் நாயகனின் குடும்பம் நாசமாகப்போக ஒரு மந்திரவாதியின் உதவியுடன் சதித்திட்டம் தீட்டுகிறான்.
பில்லி ,சூன்யம் ,ஏவல் மூலம் நாயகனுக்குப்பேய் பிடிக்க வைத்து நாயகன் மூலமாகவே அவனது குடும்பத்தை நிர்மூலம் ஆக்க முயற்சிக்கிறான்.அவனது திட்டம் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக மோகன்.மீசை இல்லாமல் நடித்திருக்கிறார்.சிட்டிசன் அஜித் கெட்டப் இந்த மோகன் கெட்டப்பில் இருந்து எடுத்திருக்கலாம்.
ஜோடி பல்லவி.அதிக வாய்ப்பில்லை.நாயகனின் குடும்பத்தைக்காப்பாற்றப்பாடுபடும் நம்பூதிரி ஆக ஆர் பி விஸ்வம் நடித்திருக்கிறார்.
ஜெயமாலா வும் ஒப்புக்கு சப்பாணி ஆக படத்தில் உண்டு
இசை இளைஇளையராஜா. ஆனால் எடுபடவில்லை.பாடல்களும் ஹிட் ஆகவில்லை.பிஜெம்மும் சொதப்பல்.
ஒளிப்பதிவு வேலுப்பிரபாகரன்.ஒரே பங்களாவில் மொத்தப்படமும் என்பதால் அதிக வேலை இல்லை
ஏ பி மணிவண்ணனின் எடிட்டிஙகில் படம் 105 நிமிடஙகள் ஓடுகிறது.
வசனம் அறுவடை நாள் புகழ் ஆர் பி விஸ்வம்.மொத்த வசனங்கள் ஏ 4 சீட்டில் அரை பக்கம் தான்.எதுக்கு தண்டமா சம்பளம்?
இயக்கம் ஜி எம் குமார்
சபாஷ் டைரக்டர்
1 ஒரே பங்களாவில் மொத்தப்படத்தையும் முடித்தது
2 த எக்சார்சிஸ்ட் ஹாலிவுட் படக்கதையை நாசூக்காக சுட்டது
3 மொக்கைப்படம் தான் எடுக்கறோம்னு முடிவானபின் எதுக்கு இரண்டரை மணி நேரம் தண்டமா? என பாதி அளவாகக்குறைத்தது
ரசித்த வசனங்கள்
1 டில்லிக்கு ராஜாந்னால்லும் பில்லி ,சூனியத்தில் இருந்து தப்ப முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பேய். எதனால் தவணை முறையில் ஒவ்வொருவராகக்கொல்லுது?
2 நாத்திகன் ஆன நாயகன் க்ளைமாக்சில் தன் தவறை உணர்ந்து பக்திமான் ஆகிறான்.ஓக்கே ஆனால் இறந்த அப்பாவிகள் செய்த தவறென்ன?
3 திகில் படம் பயத்தை வர வைக்கனும்.அருவெறுப்பு தான் வருது.நாயகனின் மேக்கப் கொடூரம்
4 நாயகன் வீட்டில் பூஜை அறையில் முறையிடாமல் எதுக்கு பீச்க்கு ஓடறார்?
5 ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு இருக்கட்டும்னு சேர்த்த சீன் எடுபடவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஒரு குப்பைப்படம்.திகிலும் இல்லை.கதையும் இல்லை.வெட்டியா இருந்தாஇருந்தாக்கூடப்பார்க்க வேண்டாம்.ரேட்டிங் மைனஸ் 1/5
