Monday, December 12, 2022

LADY CHATTERLY'S LOVER (2022) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


டி ஹெச்  லாரன்ஸ்  எழுதிய  லேடி  சாட்டர்லீஸ்  லவ்வர்  எனும்  நாவலை  அடிப்படையாகக்கொண்டு  எடுக்கப்பட்ட  படம்  தான்  இது. நாவல்  டைட்டிலையே  படத்துக்கும்  வைத்திருக்கிறார்கள் . இந்த  வருடம்  அக்டோபர்  மாதம்  திரையரங்குகளில்  வெளியான  படம்  இப்போது  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


நாயகிக்கு  ஒரு  மிலிட்ரி  ஆஃபீசருடன்  திருமணம்  நடக்கிறது . திருமணம்  ஆன  அடுத்த  நாளே  கணவன்  போருக்குபோக  வேண்டிய  சூழல் . போர்க்களத்துக்குபோய்  மீண்டும்  வீட்டுக்குத்திரும்பி  வரும்போது  போரில்  காயம்  பட்டு  வீல்  சேரில்  அமர்ந்த  நிலையில்  தான்  வருகிறான். கணவனால்  நடக்க  முடியாது 


கணவன்  ஒரு  எழுத்தாளன். தான்  எழுதிய  ஒரு  சிறுகதையை  மையமாக  வைத்து  ஒரு  நாவல்  எழுத  ஆசைப்படுகிறான்,  அதற்கு  நாயகி  உதவி  செய்கிறாள்


  அவர்கள்  தங்கி  இருக்கும்  மிகப்பெரிய  பங்களா  மற்றும்  பண்ணையை  பராமரிக்க  இண்ட்டர்வ்யூ  வைத்து  ஆட்களை  எடுக்கிறார்கள் . அப்படி  வேலைக்கு  வந்த  ஒரு  ஆளுடன்  நாயகிக்கு  காதல்  ஏற்படுகிறது. 


 கணவனைக்கவனிக்க  ஒரு  நர்ஸ்  ஏற்பாடு  செய்யப்படுகிறார். நாயகிக்கு  சுதந்திரமாக  சுற்ற  ஆசை, ஆனால்  கணவன்  தன்னைக்கவனித்தால்  போதும்  என  சுயநலமாக  இருக்கிறான் 


  ஊரில்  இருந்து  நாயகியின்  உறவினரான  ஒரு  பெண்  வருகிறாள் , நாயகியின்  காதல்  விஷயம்  அறிந்து  நாயகிக்கு  அறிவுரை  சொல்கிறாள் . காதலனுக்கு  வேலை  போய்  விட்டால்  பொருளாதார  நிலை  அவனுக்கு  சரி  இல்லை , அதனால்  காதலுக்கு  நல்லா  இருந்தாலும்  நடைமுறைக்கு  இது  சாத்தியம்  இல்லை  என்கிறாள் 


நாயகியின்  காதலனுக்கும்  ஏற்கனவே  திருமணம்  ஆகி  விட்டது, ஆனால்  அவன்  மனைவி  வேறு  ஆண்  நண்பர்களுடன்  சுற்றுவதால்  தனிமையில்  இப்போது  இருக்கிறான்


நாயகியின்  க்ணவன்  நாயகியின்  காதலனை  அழைத்து  உன்னை  டிஸ்மிஸ்  செய்கிறேன், நீ ஊரை  விட்டுப்போய்  விடு  என்கிறான்


 இதற்குப்பின்  நாயகியும் , அவள்  காதலனும்  இணைந்தார்களா? என்பதை  திரையில்  காண்க 


நாயகியாக  எம்மா  காரின்  அற்புதமான  முக  அழகு , பிரமாதமான  நடிப்பு  என  ரசிகர்களைக்கவர்ந்திழுக்கிறார்.  நீ  ஒரு  சுயநலக்காரன்  என  கணவனிடம்  வாதிடும்  காட்சியில்  எரிமலை  நடிப்பு 


நாயகியின்  காதலனாக  ஜாக் . என்னை  உன்  சுயநலத்துக்காக  உபயோகித்துக்கொண்டாய்  என  சீறும்போது  அனலாகக்கொதிக்கிறார். நாயகியுடனான  கெமிஸ்ட்ரி  நன்கு  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது 


 நாயகியின்  கணவனாக   மாத்யூ  கச்சிதமான  நடிப்பு , படம்  பூரா  வீல்  சேரில்  வரும்  கேரக்டர் 


 ப்டத்தின்  மிகப்பெரிய  பலம்  ஒளிப்பதிவு .  தொட்டு  பொட்டு  வைத்துக்கொள்ளலாம்  போல  கண்ணாடி  போன்ற  ஒளி  ஓவியங்கள்  படம்  முழுக்க


ஒரு  காதல்  கதைக்கு  மிக  முக்கியத்தேவைகள்  கண்ணுக்கு  அழகான  நாயகி  , பிரமாதமான  லொக்கேஷன்கள்  ,  ஒளிப்பதிவு , இசை , இவை  அனைத்தும்  நலமாய்க்கூடி  வந்திருக்கிறது  இந்தப்படத்தில் 


இந்தப்படத்தில்  அடல்ட்  கண்ட்டென்ட்ஸ்  இருப்பதால்  18+  ரேட்டிங்  கொடுக்கப்பட்டுள்ளது 

திரைக்கதை  எழுதியவர் டேவிட் மேகி , இயக்கம்  லார் டே  கிளமண்ட்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  பொதுவாக   ஏழைகள் தான்  மிலிட்ரில  சேருவாங்க, ஏன் எனில்  எபோது  வேண்டுமானாலும்  போரில்  இறக்கலாம்  என்பதால்  உய்ருக்கு  பயந்து  யாரும்  ம்லிட்ரில  சேர  மாட்டாங்க, நாட்டுக்காக  பாடுப்டும்  சிலர்  விதி விலக்கு . ஆனால்  தேச்த்தின்  மீது  எந்த  பற்றும் இல்லாதவரான  நாயகன்  மிகப்பெரும்  பணக்காரனாக  இருந்தும்  மிலிடிரில  சேர்வதற்கான  காரணங்கள்  சரியா  சொல்லப்படலை


2    நாய்கியின்  காதலன்  முன்னாள்  லெஃப்டினெண்ட்  கர்னல் , அவ்ளோ  பெரிய  பதவி  வகித்து  விட்டு  சாதா  சோல்ஜரிடம்  பணியாளாக  வேலைக்கு  சேர  ஈகோ  தடுக்குமே? .


3   நாயகியின்  கணவனால்  ஒரு  குழந்தைக்கு  அப்பா  ஆக  முடியாத  சூழல், ஆனால்  குழந்தை  மீது  கணவனுக்கு  ஆசை, நியாயமாக  ஒரு  கணவன்  செய்ய  வேண்டியது  ஆதரவற்ற  குழந்தையை  தத்து  எடுத்துக்கொள்வது , அல்லது  டெஸ்ட்  ட்யூப்  பேபி   ரெடி  பண்ணுவது. இந்த  இரண்டையும்  முயற்சிக்காமல்  ஒரு  கணவன்  தன்  மனைவியை  மிஸ்கைடு  பண்ணுவது  ஏற்புடையதாய்  இல்லை 


4  நாயகி  தன்  காதலனிடம்  பின்  பாதியில்  சில  ரொமாண்டிக்  டயலாக்   எல்லாம்  அள்ளி  விடறாரு, ஆனா  காதலனை  முதல்  முறை  சந்திக்கும்போதோ  முதல்  பாதி  திரைக்கதையிலோ கண்ணுக்கு  எட்டிய  தூரம்  வரை  காதல்  தென்படவே  இல்லை , காமம்  தான்  தெரியுது 


5  நாயகியின்  காதலனுக்கு  தன்  மனைவி  எங்கே  இருக்கிறாள்  என்பதே  தெரியாது,  டைவர்ஸ்  வாங்க  முடியலை  என்கிறான், ஆனா  மனைவியின்  காதலன்  வந்து  பென்ஷன்  பணம்  கேட்டு  அனுப்பினாள்  என  சொல்லும்போது  அவ  கிட்டே  என்னைக்கூட்டிட்டுப்போ, தர்றேன்  என  சொல்லி    அட்ரஸ்  கண்டு  பிடிச்சிருக்கலாமே? 


6   குழந்தைக்காகத்தான்  என்னை  யூஸ்  பண்ணிக்கிட்டியா? என  காதலன்  நாயகியிடம்  ரொம்ப  வருத்தமாக்கேட்பது  நமக்கு  சிரிப்பு  தான்  வரவைக்குது , ஓ சி ல  திருப்ப்தி  ல்ட்டு  சாப்ட்டுட்டு  அதுல  திராட்சை  கம்மியா  இருக்கே?னு  குறை  சொல்ற  மாதிரி .. வந்த  வரை  லாபம்னு  போகாம  என்னமோ  ஒரு கோடி  ரூபா  முதலீடு  போட்டு  செஞ்ச  தொழில்ல  நட்டம்  வந்த  மாதிரி  ஃபீலிங்  எதுக்கு ? 


ரசித்த  வசனங்கள் 

1   புத்தகங்கள் இருக்கும்  அறையில்  தூங்குவதுதான் ஒரு  ரைட்டருக்கு  பெரிய  இன்ஸ்பிரேஷனாக  இருக்கும் 


2  வாழ்க்கையை  வாழப்பழகுவது  என்பது  வாழ்வின்  வெறுமையை  ஏற்றுக்கொள்வதுதான்


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நாவலாக  இது  பெஸ்ட்  செல்லர்  வரிசையில்  ஏகப்பட்ட  புக்ஸ்  வித்துச்சாம், சாரு  நிவேதிதா  எழுதுன  சில  நாவல்கள்  கூடத்தான்  செம  சேல்ஸ்,  அதுக்காக   அதை  சிலாகிக்க  முடியுமா? குடும்பப்பாங்கான  , கண்ணியமான  ஆண்கள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  காலைக்காட்சிப்படம்   , ரேட்டிங்  2 / 5 


Lady Chatterley's Lover
Lady Chatterley's Lover (2022 film).png
Official release poster
Directed byLaure de Clermont-Tonnerre
Screenplay byDavid Magee
Based onLady Chatterley's Lover
by D. H. Lawrence
Produced by
Starring
CinematographyBenoît Delhomme
Edited byGéraldine Mangenot
Music byIsabella Summers
Production
companies
Distributed byNetflix
Release dates
  • 2 September 2022 (Telluride)
  • 25 November 2022 (United Kingdom/United States)
  • 2 December 2022 (Netflix)
Running time
127 minutes
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish