இரும்புத்திரை ஹிட் படம் தந்த இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சமீபகாலமாக தோல்விப்படங்களையே தந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக சாரி சூப்பர் ஹீரோவாக நடித்த படம் ஹீரோ
இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில்மேன் படத்துல சொல்லப்பட்ட கல்வி சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்கள் நகாசு வேலை பண்ணி அதை மிஷ்கினின் இயக்கத்தில் வந்த முகமூடி பாணில கதை சொன்னா அதுதான் ஹீரோ
இரும்புத்திரைல டெக்னிக்கலா பல விஷயங்களில் அசத்திய இயக்குநர் இதில் தடுமாறி இருப்பது தெரியுது
ரஜினி முருகன் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் முகத்தில் பிரகாசம், உதட்டில் புன்னகையுடன் வலம் வந்த பழைய சி, கா காணவில்லை , சீரியசாவே இருக்கார் . அந்த முகத்தை ரசிகர்கள் விரும்பலை, மற்றபடி அவர் நடிப்பில் குறை இல்லை
நாயகியா கல்யாணி , இவரு சும்மா ஓபிஎஸ் மாதிரி , ஒப்புக்கு சப்பாணி , ஆள் நல்ல ஃபிகர் தான் ஆனா இந்தக்கதைல ஹீரோயினுக்கு வேலை இல்லையே?
ஆக்ஷன் கிங் அர்ஜூன்க்கு முக்கிய ரோல் ட்= கெட்டப்க்கு பூ விழி வாசலிலே ரகுவரன் , கேரக்டர் வடிவமைப்புக்கு அவரே நடிச்ச ஜெண்ட்டில் மேன். படத்துல சி. கா வை விட இவர் கேரக்டருக்கே வெயிட் அதிகம்
காமெடிக்கு ரோபோ சங்கர் இருக்கார் , ஆனா காமெடி இல்லை
வில்லனா அபய் தியோல் ஓக்கே ரகம்
படத்தின் முதல் 20 நிமிடங்கள் கதைக்குள்ளே போகாம நாயகன் நாயகி காதல் பம்முதல்னு இழுத்தது தேவை இல்லாதது பட நீளம் 2 3/4 மணி நேரத்துல அதை கட் பண்ணி இருக்கலாம்
முதல் பாதில கதை கண்ட்டெண்ட் நல்லா அமைஞ்சாலும் இரண்டாவது பாதில என்ன பண்றதுனு இயக்குநர் ரொம்பவே தடுமாறுகிறார். பிரச்சனை என்ன என சொல்லியாச்சு அதுக்கு ஒரு தீர்வு சொல்லனுமில்ல? அதுல கோட்டை விட்டுட்டார்
நச் வசனங்கள்
1 சின்னவயசுல பொது நலவாதியா இருக்கற நம்மை சுயநலவாதியா மாத்தறது இந்த சமூகம்தான் #hero
2 சக்திமான் மட்டும் இல்லை,யாரும் யாரையும் காப்பாத்த முடியாது,நம்மை நாமதான் காப்பாத்திக்கனும் #hero
3 நம்ம எஜூகேஷன் சிஸ்டமே எஜூகேட்டட் லேபரை உருவாக்கறதுதான் #hero
4 கேள்வி கேட்டா பதில் சொல்லியே / எழுதியே பழக்கப்பட்டுட்டோம் ,நாம கேள்வி கேட்டாதான் அறிவு வளரும் #hero
5 உங்க பசங்களோட திறமையைப்பாக்கனும்னா (கண்டறியனும்னா) அவங்க ரப் நோட்டை பாருங்க #hero
6 தன்னோட சொந்த அம்மா ,அப்பா கிட்டயே தன்னோட திறமைகளை வெளிப்படுத்தத்தயங்கற ஒரு சமுதாயம் இருப்பது இந்தியால மட்டும்தான் #hero
7 சினிமாலதான் ஹீரோ ஜெயிப்பாரு,நிஜத்துல வில்லன்தான் ஜெயிப்பான் #hero
8 ஒரு மனுஷனை அழிச்சிடலாம்,சிலையை உடைக்கலாம்,ஆனா அவன் சிந்தனைகளை,அவன் உருவாக்கிய சித்தாந்தங்களை அழிக்க முடியாது #hero
9 சுயமா சிந்திக்கத்தெரிஞ்சவன்தான் ஹீரோ #hero
10 படிப்பை வெச்சு வியாபாரம் பண்றவன் இல்லை நான்,படிக்கறவனை வெச்சு வியாபாரம் பண்றவன் #hero
11 ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும் அதைக்கண்டுபிடிக்கறதுதான் கல்வி #hero
12 திறமையானவனை மதிங்க,சர்ட்டிபிகேட்டை பார்க்காதீங்க #hero
13 நீங்க என்ன கத்துக்கிட்டாலும் அது உங்களுக்கு மட்டும் பிரயோஜனமா இல்லாம மத்தவங்களுக்கும் பயன்படறமாதிரி பாத்துக்குங்க #hero
14 இந்த உலகத்துல பிழைக்கத்தெரிஞ்சவங்களைத்தான் மதிக்கறாங்க #hero
15 படிச்ச படிப்புக்கும் ,வாழற வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை #hero
16 சிரிப்பு வர்ல
அதான் நாங்களே சிரிச்சுக்கறோமே?
17 பிரச்சனை எப்பவும் நம்மளைப்பிடிச்சுட்டு இருக்கறதில்லை , நாமதான் பிரச்சனையை பிடிச்ட்டு நிக்கறோம்
18 நீட்ட வேண்டியதை நீட்டுனா நீட்டு கீட்டு எல்லாம் கெட் அவுட்டு
19 நீங்க என்ன பண்ண ட்ரை பண்ணறீங்க?
உங்களைத்தான்
வாட்?
ஐ மீன் நீங்க பண்ற மாதிரி பண்ண ட்ரை பண்ண்ணறோம்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 நல்ல கதைக்கரு கைவசம் இருந்தும் எடுத்ததும் நேரடியா கதைக்குள்ளே வராம ஹீரோ ஹீரோயின் காதல் சொல்ல தயங்குதல் ,பம்முதல் என ஜல்லி அடிப்பதும் கமர்ஷியல்ரீதியான பின்னடைவே #Hero
2 தம்பி ப்ளூ சட்டை,இதை ஒரு வாய் குடி னு ஹீரோ உப்புத்தண்ணியைக்குடுக்கறாரு (கடல் நீர்).இது எதுனா குறியீடா?எதேச்சையானதா? #hero
3 மூலிகை பெட்ரோல் கண்டுபிடிச்ச ராமர் பிள்ளை கான்செப்ட் டை கதைல சாமார்த்தியமா புகுத்தி இருக்காரு இயக்குநர் #hero
4 ஒரு கோடி ருபா குடுத்து ஜட்ஜையே விலைக்கு வாங்கலாம்னு ஒரு டயலாக் வருதே,இது நீதிமன்ற அவமதிப்பு ஆச்சே,சென்சார் ல எப்டி விட்டாங்க? #Hero
5 நீட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் கேரக்டரை கதையின் மெயின் கான்செப்ட் ஆக்கி வெச்சிருக்காங்க #hero
6 கேரளா − கோட்டயம் − அனஸ்வரா ,இது முதல்ல கல்யாணமண்டபமா இருந்தது,லிவ்விங்டுகெதர் ஹிட் அடிச்சதால தியேட்டர் ஆகிடுச்சு.இங்கே தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகும் காலை,மதியம் ஹீரோ, நைட் தம்பி.டிக்கெட் விலை 90 ,110
7 ஹீரோ படம் பார்க்கப்போறவங்க சிவகார்த்திகேயன் காமெடி,ஹீரோயின் உடனான காதல் சில்மிஷங்கள்,கவுண்ட்டர் டயலாக்குகளை எதிர்பார்க்காமல் போகனும். இரும்புத்திரை இயக்குநர் மித்ரனின் ரசிகர்கள் அவரது முந்தைய பட ஸ்க்ரிப்ட்ட்எக்ஸ்க்யூசனை மறந்துட்டு வரனும்,இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தா படம் ஹிட்
சபாஷ் டைரக்டர்
1 அர்ஜூன் கதாபாத்திரம் , அவரது ஆய்வுக்கூட செட்டிங் , ஆர்ட் டைரக்ஷன்
2 நாயகி கல்யாணியை கண்ணியமான உடைல காட்டியது அவருக்கான க்ளோசப் காட்சிகள்
3 அந்த ஏழை சிறுமி கதா பாத்திரம் நீட் அனிதா வின் தாக்கம் என்றாலும் குட், அவரது நடிப்பு செம
4 கருத்தைக்கவரும் வசனங்கள் பெரிய பிளஸ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 சுயமா சிந்திக்கத்தெரிஞ்சவன்தான் ஹீரோனு அர்ஜூன் சிவகார்த்திகேயன் கிட்டே சொல்றாரு ஆனா ஓப்பனிங் சீன்லயே ஹீரோ ஹீரோயின் என்ன பண்றாருனு பார்த்து அதேஎ டெக்னிக்கை அட்லீ ஒர்க் பண்றாரு . அந்த டயலாக்கை அர்ஜூன் சொன்ன பிறகும் ஹீரோ அர்ஜூன் சொல்ற ஐடியாக்களை தான் ஃபாலோ பண்றாரு ம் சொந்தமா எதுவும் செய்யலை
2 அந்த முகமூடி மேட்டர் இந்தக்கதைக்கு செட் ஆகலை . ஹீரோ மாஸ்க் போட்டதும் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் ஆடியன்ஸ் கிட்டே இருந்து வர்லை
3 வலுவான கதை முன் பகுதியில் இருந்தும் கமர்ஷியலுக்காக ஹீரோ ஹீரோயின் மொக்கை போடும் சீன்கல் தேவை இல்லாதது
விகடன் மார்க் ( யூகம்) - 42
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3/5
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 2.75/5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
C.P.S கமெண்ட்-ஹீரோ − பாரபட்சமற்ற கல்வி,திறமைக்கான அங்கீகாரம் ,தனித்திறமை களை அடையாளம் காணுதல் டைப் ஜெண்டில்மேன் பட கான்செப்ட்தான்,ஆனா அதை சூப்பர்ஹீரோ பாணில சொன்ன விதம் எடுபடல.இரும்புத்திரை யை விட ஒரு படி கீழே,ஆனா சீமராஜா,Mr.லோக்கல் க்கு பல படி மேல.சுருக்கமா சொல்லனும்னா சி.கா வுக்கு வெற்றிப்படம்,இயக்குநர் மித்ரனுக்கு சராசரி படம், வசனம்,பிஜிஎம் ,அர்ஜூன் + ,ஹீரோயின் ,லவ்−
விகடன் 42 ,ரேட்டிங் 2.75/5 #hero