Friday, September 27, 2019

நம்ம வீட்டுப்பிள்ளை - சினிமா விமர்சனம்

1961 ல ரிலிஸ் ஆன பாசமலர்   1983ல ரிலிஸ் ஆன தங்கைக்க்கோர் கீதம்  , 2003 ல ரிலிஸ் ஆன  சொக்கத்தங்கம் , 2004 ல ரிலிஸ் ஆன நிறைஞ்ச மனசு இந்த 4படங்களையும் அட்லீ கிட்டே கொடுத்தா என்ன அவுட் புட் கிடைக்குமோ அதுதான் இயக்குநர் பாண்டிராஜ் தந்திருக்கும் கலவை சாதம் நம்ம வீட்டுப்பிள்ளை


அண்ணன் தங்கை பாசக்கதைன்னா வர்ற அதே டெம்ளேட் திரைக்கதை தான்.   ஆனா சும்மா சொல்லக்கூடாது , அண்ணன் தங்கை செண்ட்டிமெண்ட் சீன்களை  புழிஞ்சு எடுத்திருக்காரு

ஹீரோவா சிவ கார்த்திகேயன் , முகத்துல கொஞ்சம் மெச்சூரிட்டி கூடி இருக்கு , உடம்பு வெயிட் போட்டிருக்கு .சோக காட்சிகள் நல்லா பண்றாரு ,. அவரது வழக்கமான காமெடி குறைவு என்றாலும் ஆங்காங்கே மிமிக்ரி போட்டு ஒப்பேத்திட்டார் . சமீபத்திய தோல்விகளில் இஃப்ருந்து அவருக்கு ஒரு கம் பேக் படம்


ஹீரோயினா அனு இமானுவேல் , ஒரு சாயலில் மீனா மாதிரியும் , இன்னொரு சாயலில் ரேஷ்மா மாதிரியும் இருக்கார். ரசிக்கலாம்

இயக்குநர் பாரதிராஜா  ஒரு கேரக்டர்  ரோல் பண்ணி இருக்காரு , குட் ஆக்டிங்

தங்கையா ஐஸ்வர்யா ராஜேஷ் நல்லா பண்ணி இருக்காரு

இயக்குநர் பாண்டிராஜின் மகன்  ஒரு சுட்டிப்பையன் ரோல் பண்ணி இருக்காரு


இசை  ஓக்கே ரகம் 3 பாட்டு ஹிட் ஆகி கிருக்கு , பிஜிஎம்   பரவால்லை ம், போஸ்டர் டிசைன் எடுபடல


நச் வசனங்கள்


1  சி.கா இன்ட்ரோ உள்குத்து டயலாக்
நம்ம மாதிரி பசங்க ஒரு தடவை ஜெயிச்சா ஒத்துக்க மாட்டாங்க ,ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும் #nammaveettuppillai



ஹீரோ இன்ட்ரோ வுக்கு முன் ஹீரோ பில்டப் டயலாக்

எல்லாரையும் ஜெயிக்கனும்கற எண்ணம்உள்ளவன் #nammaveettuppillai


கொஞ்சமா சம்பாதிச்சாலும் குழந்தை ,குட்டி,பொண்டாட்டி,குடும்பத்தோட ஒண்ணா வாழற மாதிரி வாழனும் #nammaveettuppillai


தன் அம்மாவைப்பாத்துக்கற மாதிரி பொண்டாட்டியைப்பாத்துக்கற புருசனை விட தன் பெண் குழந்தையைப்பாத்துக்கற மாதிரி தன்னைப்பாத்துக்கற புருசனைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க #nammaveettuppillai


சொந்தத்துக்குள்ளே தோத்துப்போக தயாரா இருக்கறவனை யாராலும் ஜெயிக்க முடியாது #nammaveettuppillai


6  நம்ம கஷ்டத்துல பங்கெடுக்கத்தயாரா இருக்கறவங்க எல்லாருமே பங்காளிங்கதான் #nammaveettuppillai


பார்க்கற வேலைல கவனம் இல்லைன்னா வெற்றிக்கு நம்மை கவனிக்க நேரம் இல்லாம போயிடும் #nammaveettuppillai


8 மாடி வீட்ல இருக்கற கடனும் தெரியாது , குடிசை வீட்ல இருக்கற பணமும் ( வெளில) தெரியாது #nammaveettuppillai


9 தேன் தானும் கெடாது , தன்னைச்சார்ந்தவங்களையும் கெட விடாது,அது போல தான் அவ #nammaveettuppillai


10 ஒரு தோட்டத்துல பல செடிகள் இருந்தும் துளசி இல்லைன்னா அது நந்தவன்ம் இல்லை , அதே மாதிரி செடிகளே இல்லாத தோட்டத்துல துளசி இருந்தா நந்தவனம் தான் அது ( நந்தவன்ம்னா துளசி இருக்கனும்னு ஒரே வரில சொல்லி இருக்கலாம்) #nammaveettuppillai


11 முதலாளி ஆகனும்னா நல்லா உழைக்கத்தெரிந்திருக்கனும், அல்லது நல்லா வேலை வாங்கத்தெரிஞ்சிருக்கனும், உன் கிட்டே அந்த 2 குணங்களும் இருக்கு #nammaveettuppillai

12 ஈசியா அவுக்க ( அவிழ்க்க ) முடியற கயிறை அறுக்க நினைக்காதே #nammaveettuppillai


13 நல்லது எதுனா செஞ்சா உடனே அவன் கிட்டே அரசியலுக்கு வரப்போறிங்களா?னு கேட்கறதாலதான் நிறையப்பேரு நல்லதே செய்யறதில்லை #nammaveettuppillai


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  2003 ல் ரிலீஸ் ஆன சொக்கத்தங்கம்
2004ல் ரிலீஸ் ஆன நிறைஞ்ச மனசு
இந்த 2 படங்களோட சாயலும் கலந்து இருக்கே! பாண்டிராஜ் எப்பவும் புதுக்கதைதானே எடுப்பாரு?அட்லீ ஆக மாட்டாரே? #nammaveettuppillai





சபாஷ் டைரக்டர்


1  சி,கா , தன் காதலி ,   தன் நண்பன் , காதலி மூவரிடமும் பேசும்   கான்வோ கால் சீன் அருமை , நல்ல ஐடியா


2  பெண் பிர்சவத்துக்குப்போகும்போது காரில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் அற்புதம் , சோக சீனில் ரசிக்கும்படி காமெடி

3  அந்த குட்டிப்பையனின் அதிகப்பிரசிங்கித்தன கமெண்ட்கள்  குட்


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  கிராமத்தில்  வாழும்,  ஹீரோ தன் தங்கையைப்பாம்பு கடித்தது தெரிந்ததும் அவரைத்தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடறார். அவஃப்ரது தோள்ல 2 மீட்டர் நீளத்துக்கு துண்டு இருக்கு , விஷம் ஏறாம இருக்க  கால்ல அதைக்கட்டி இருக்கலாமே?


2   க்ளைமாக்சில்  ஹீரோவின் செண்ட்டிமெண்ட் பேச்சைக்கேட்டி வில்லன்கள் திருந்துவது அல்லது அமைதியாக இருப்பது நம்பும்படி இல்லை , இதே போல் இவண் படத்தில் ஹீரோ பேசியே வில்லன்களை சமாதானப்படுத்துவது எடுப்டலை


 விகடன் மார்க் ( யூகம்)  - 41

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்    2.75 / 5  ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


சி.பி . கமெண்ட்- நம்ம வீட்டுப்பிள்ளை = பாசமலர் + சொக்கத்தங்கம் + நிறைஞ்ச மனசு ,அண்ணன் ,தங்கை,மச்சான் சென்ட்டிமெண்ட்,சீரியல் பார்க்கும் பெண்களுக்குப்பிடிக்கும்,சமீபத்திய 3 தோல்விப்படங்களுக்குப்பின் சி.கா வுக்கு ஒரு வெற்றிப்படம் , விகடன் 41 ,ரேட்டிங் 2.75 / 5 ஏ சென்ட்டர்ல சுமாராதான் போகும்,பி &சி லவசூல் அள்ளிடும் #nammaveettuppillai