Friday, August 06, 2010

பாணா காத்தாடி - சினிமா விமர்சனம்

படத்தோட ஓப்பனிங்கே நெத்திஅடி.அதாவது ஆர்.பாண்டியராஜனின் நெத்தியடி படத்திலிருந்து பட்டம் பறப்பதை பின் தொடர்ந்து ,துரத்தி ,படாத பாடு படுத்தி காமெடி பண்ணி இருப்பாங்களே அந்த சீனை அப்படியே சுட்டு நான் மகான் அல்ல என நிரூபித்து இருக்கிறார் டைரக்டர்.



காத்தாடிக்கு எல்லை கிடையாது. எதைப் பற்றியும் கவலை இல்லை. காற்று போகிற போக்கில் சுற்றிக்கிட்டே இருக்கும். காற்றுதான் காத்தாடியோட வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அது மாதிரி சூழ்நிலைகளால் திசை மாறித் திரியும் ஒரு இளைஞனின் கதைதான் இது.


மேலே குறிப்பிட்ட 4 லைன் படம் பூஜை போடறப்ப புரொடியூஸரிடம் டைரக்டர் சொன்னது.லாஜிக்,நம்பகத்தன்மை,திரைக்கதை திருப்பம்,தமிழ் ரசிகனின் விசாலமான ரசனை என  எதைப் பற்றியும் கவலை இல்லாமல் டைரக்டர் தன் இஷ்டத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


அழகு ஓவியமாய் ,18 வயசு பர்பி பொம்மை மாதிரி வருகிறார் விண்ணை தாண்டி வருவாயா செகண்ட் ஹீரோயின் சமந்தா.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கிற சமந்தா இந்தப்
படத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணாக வருகிறார்.



அதர்வாவுக்கும்,சமந்தாவுக்கும் பாடி கெமிஸ்ட்ரி நல்லாவே ஒத்துப்போகுது.ஏ ஆர் முருகதாஸ்+சந்தானம் 2 பேரின் கலவையாய் முகச்சாயலில் வரும் அதர்வாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.


அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாட்டுக்கான அதே லீடு இந்தப்படத்தில் வரும் முதல் பாட்டுக்கும். டைரக்டர் சார்,சொந்தமாக யோசிங்க சார்.



ஹீரோவின் அம்மாவாக மவுனிகா.பாலுமகேந்திரா பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார்.


படத்தில் தேவையா என சிந்திக்கும் அளவு 2 முக்கிய காட்சிகள்.பட்டம் விடும் ஹீரோ(இந்தக்காலத்துல யார் சார் பட்டம் எல்லாம் விடறாங்க?ஃபிகருங்களுக்கு நூல்தான் விடறாங்க.).ரசிகர்களிடம் அவ்வப்போது க்ளாப்ஸ் வாங்குவதற்காக்வே ரஜினி பட க்ளிப்பிங்க்ஸ்.



ஓக்கே,படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும்,ஹீரோயினுக்கும் மோதல்,அதன் பின் காதல்,பின் ஊடல் ,அதற்குப்பின் நம் பொறுமையை சோதிக்கும் வண்ணம் க்ளைமாக்ஸ்.வெரைட்டி காண்பிக்காவிட்டால் மணிரத்னமே மண்ணைக்கவ்வும் காலம் இது.



படத்தில் வசன்கர்த்தா கவனிக்க வைக்கிறார்.



”நல்லவங்களுக்கு மட்டும்தான் அழுகை வரும்.”




”சண்டைல காதல் வரலாம்.ஆனா காதல்ல சண்டை வரக்கூடாது”



”தோற்கும்போது ஏற்படற வலி பெரிசில்லை,அப்போ அதையும் தாங்கிக்கிட்டு சிரிக்கிறதுதான் பெரிசு.”


அதே சமயத்தில் படத்தில் கருணாஸ் வரும் ஆரம்பக்காட்சிகளில் (போரிங் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சீன்) வசனங்கள் பச்சை.
.ஆனால் அதற்குப்பரிகாரமாக போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் கருணாஸ் கலக்கி இருக்கிறார்.

டேய்,இவன் மேல 60 வயசு கிழவி ரேப் கேஸ் ஒண்ணு ரொம்ப நாளா பெண்டிங் இருக்கே அதை எழுது.



ஐயா வேணாம்,எங்கப்பா கமிஷனர் ஆஃபீஸ்லதான் இருக்கார்


அப்படியா? என்னவா?

விசாரணைக்கைதியா.

30 வருஷமா அம்மா வளர்த்துட்டாங்க,அடுத்து ஒயிஃப்,15 வருஷம் போயிட்டா மக்னோ ,மகளோ வந்து காப்பாத்தட்டும்.இப்படியே காலத்தை ஓட்டிட வெண்டியதுதான்.



ஹீரோயின் சேரி ஜனங்களை கேவலமாக திட்டும் சீன் படத்துக்கு தேவை இல்லாதது.அதே போல் ஹீரோ பார்க்க கம்ப்யூட்டர் புரோகிராமர் மாதிரி இருக்கிறார்,அவரைப்போய் சேரிப்பையன் என்பது நம்பும்ம்படி இல்லை.



ஹீரோயின் லவ்வை சொல்லும் சீன் டிரமாட்டிக்காக இருந்தாலும் தியேட்டரில் டாக்குமெண்ட்ரி படம் மாதிரி எடுத்து வந்து ஹீரோவுக்கு போட்டுக்காட்டுவது ரசிக்க வைக்கிறது.


இண்ட்டர்வல் ட்விஸ்ட்டுக்காக சொல்லப்பட்ட காதலிக்கு கிஃப்டாக காண்டம் குடுக்கும் அதிர்ச்சி காட்சி நம்பகத்தன்மை 0%.என்னதான் ஒருவன் அவசரத்தில் இருந்தாலும் காத்லிக்கு பரிசை அப்படி மாற்றிக்குடுக்க நினைப்பானா?
அதை தொடர்ந்து வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் இன்ஸ்பெக்டர் ஹீரோவிடம் டெமோ பண்ணி காண்பி என சொல்வது ரொம்பவே ஓவர்.
படத்தின் கதைக்களம் திடீர் என குஜராத் போவது காதில் பூ சுற்றும் வேலை.
பாடல் காட்சிகளில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார்.
தாக்குதே கண் தாக்குதே….,
என் நெஞ்சில்… என பாடல்கள்ஏற்கனவே
ஹிட்டாகி விட்டது.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். “பாணா காத்தாடி’ படத்தின் இயக்குநர். திரைப்படக் கல்லூரி மாணவர்.  ஹிட் படங்களின் காட்சிகளை எப்படியாவது திணீத்து விட வேண்டும் என நினைத்து ஒர்க் பண்ணி இருப்பது மைனஸ்.

டி பி கஜேந்திரன் சர்ட் பாக்கெட்டில் பணம் வைத்து விட்டு படுப்பதும்,அதை தொடர்ந்து அதை கருணாஸ் தேடுவதும்,கடைசியில் அது கருணாசின் பேண்ட் பாக்கெட்டில்லேயே இருப்பதும் 1980 களில் வந்த காமெடிதான்.


ஹீரோயின் திருந்தி வலிய வந்து காதலை சொல்லும்போது ஹீரோ ஏற்றுக்கொள்ளாமல் முறுக்கிக்கொள்வது நமக்கு எரிச்சலையே தருகிறது.
பிரசன்னா சத்யா கமல் கெட்டப்பில்,வந்து ரவுடி கேரக்டர் பண்ணுவது நல்ல பர்ஃபார்ம் தான் என்றாலும் எடுபடவில்லை.



சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு ஒரு செண்ட்டிமெண்ட்ஸ் உண்டு.அது க்ளைமாக்ஸ் காட்சி சோகமாக இருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் அந்த ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எடுபடவில்லை.(படம் மட்டும் எடுபட்டுச்சா என ஆடியன்ஸ் தரப்பு முணுமுணுப்பு).


பி.கு-(படத்தில் மேலே கண்ட ஹீரோயின் குளியல் ஸ்டில் படத்தில் இடம் பெறவில்லை.போஸ்டர் அட்ராக்‌ஷனுக்காக எடுக்கப்பட்டது.)