Sunday, October 31, 2010

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை



1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.



3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.



8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.



11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.



12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.



15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?



16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.

டிஸ்கி 1  - படம் உதவி வி வி எஸ் கஜா (விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம்)

Saturday, October 30, 2010

ஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்

Bitch Slapஅட 1

ஒரு புதையலைத்தேடி 3 சில்ஃபான்சிகள் + வில்லன் குரூப் அலைவதும்,ஒரு போலீஸ் ஆஃபீசர் குறுக்கிடுவதும்,அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.ஆரம்பத்துலயே சொல்லிடறேன் இது ஒரு அக்மார்க் ஏ படம் .ஏ சர்ட்டிஃபிகேட் வசனத்துக்காகவும்,வன்முறைக்காகவும் கொடுக்கப்பட்டது,எனவே ஓவராக உங்கள் கற்பனைகளை சிறகடிக்கவிடாமல் அடுத்த பேராவுக்கு போலாம் வாங்க.

படத்தில் வரும் 3 ஹீரோயின்களுமே பாஸ் மார்க் ரகம்தான்.ஆனால் டைரக்டர் என்னவோ அவர்களுக்கு கேமரா கோணம் வைப்பதில் ஆகட்டும்,ஸ்லோமோஷன் சீன் வைப்பதில் ஆகட்டும் ஏஞ்சலீனா ஜூலீ ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறார்.


bitch slap screenshotsஅட 2

 ரன் லோலா ரன் படத்தில் வரும் திரைக்கதை உத்தியை இதில் கொஞ்சமே கொஞ்சம் காப்பி செய்து டைரக்டர் தான் ஒரு புதுமை விரும்பி என காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.10 நிமிடத்துக்கு ஒரு முறை 2 நாட்களுக்குமுன், 4 நாட்களுக்கு முன் என 8 தடவை ஃபிளாஷ்பேக் சொல்லும் உத்தி கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

3 பருவ அழகிகள் (நன்றி தினத்தந்தி) ஆள் அரவம் அற்ற பாலைவனத்தில் நிற்க அங்கே வரும் போலீஸ் ஆஃபீசர் அவர்கள் மேல் எந்த ச்ந்தேகமும் படாமல் கடலை போடுவது போலீசையே அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.யூ டூ ஃபாரீன் போலீஸ்?

bitch slap cameroஅட 3.

வில்லன் & வில்லி குரூப் ஓவர் அலட்டல்.அநேகமாக  படத்தின் ஃபைனான்சியர் என நினைக்கிறேன்.ஆனால் வில்லி லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே பேபி வாய்சில் பேசுவது ரசிக்க வைப்பதற்குப்பதில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதாரவி ஒரு ரவுடி கெட்டப்பில் வந்து “இந்த வெள்ளிக்கிழமை ராமசாமி ....”என்று ஆரம்பித்து ஒரு கேவலமான் பஞ்ச் டயலாக் (என அவராக நினைத்துக்கொண்டு) பேசுவார்,கையில் ஒரு செயின் இருக்கும்.அதே போல் இந்தப்படத்திலும் ஒரு ஸ்டார் டாலருடன் ஒரு செயின் உண்டு.மகா மட்டமான ரசனை.

படத்தில் ஓவர் வன்முறை காட்சிகள்.

தேடித்தேடிப்பார்த்ததில் தென்பட்ட சில பளிச் வசனங்கள்-

1.ஏய்,பியூட்டி,உன்னை பெத்தாங்களா,இல்லை அளவு குடுத்து செஞ்சாங்களா?

2.யோவ்,என்னய்யா மடில வந்து உக்காந்துக்கிட்டே

தெரியல?இதுக்குப்பேர்தான் சொர்க்காசனம்.


3.டியர்,நான் உன் மேல பாசம் வெச்சிருக்கேன்.

அடியே,நான் உன் மேல எல்லாத்தையும் வெச்சு இருக்கேன்.


4. கன்னி(!)பெண்கள் 3 பேரும் போலீஸை கூப்பிடுகிறார்கள்,உடனே அவர் ,” அட,3 பேரும் கூப்பிடறீங்க,அந்தளவுக்கு நான் ஒர்த்   (WORTH)இல்லையே?இதுல ஏதோ உள் குத்து இருக்கு.

5. போலீஸ் சார்,ஒரு ரேகிங்க் பற்றி விளக்கனும் உங்க கிட்டே,
நாங்க 3 பேரும் பிஞ்சுக்குழந்தைகள்னு கூட பாக்காம கலாய்ச்சாங்க சார்.


6, ஏய்,என் கூட கொஞ்சம் மோதிப்பாரு அப்போதான் என் பவர் என்னனு உனக்கு தெரியும்.(சத்தியமா இது ஆங்கிலபடம்தான்,தனுஷ் நடிச்ச சுள்ளான் படம் அல்ல)

பவரா?அது எங்கே இருக்கு உனக்கு?


7. யோவ் உன் பேர் என்ன?

சாமான்

அப்படி ஒரு பேரா? ( சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் சந்தானமும் பேசும்போது இதே உரையாடல்?!!)

யார் யாரைப்பார்த்து சுட்டாங்கனு தெரியலை.


bitch slap Trixie அட 4



படம் என்னவோ சுவராஸ்யமாய் போகுது என்றாலும் பாதிக்கு மேல் செம இழுவை.க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.(நீலம் நோ)பார்த்தே தீர வேண்டிய படங்கள்,டைம் பாஸ் படங்கள் ,சுமார் படங்கள்,வரிசையில் பார்க்கவே தேவை இல்லாத படம் இது  .(அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்?)

டிஸ்கி 1 - படத்தில் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட வசனங்களும்,காட்சிகளும் வருவதால் கண்டிப்பாக பெண்கள்,குழந்தைகள் தவிர்க்க வேண்டிய படம்

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் . ஹாலிவுட் கேர்ள்ஸ் -2  என வருவதால் இந்தப்படத்தில் 2 கேர்ள்ஸ்தானா என எண்ண வேண்டாம்.4 பேர் உண்டு.இரண்டாம் பாகம் என்பதை அது குறிக்கிறது.

டிஸ்கி 3- மேலே உள்ள 3வது ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையை கவனியுங்கள்.நாம் பனியன் போட்டு கழட்டிய பிறகு ஒரு தாரை தெரியும்,சூரியன் படாத இடம் தனி கலரில் இருக்கும்.அது போல்  ஸ்டில்லில் உள்ள ஃபிகரின் இடையில் ஒரு  வெள்ளை லேயர் இருப்பதை கண்டு களியுங்கள்.

டிஸ்கி 4 -  முதல்ல இந்த டிஸ்கிக்கு ஒரு லிமிட் வைக்கனும்யா)
              நான் ஒரு பிரபல பதிவர் என தவறாகப்புரிந்து கொண்டு மூன்றாம் கோணம் எனும் பிளாக் எனது பேட்டியை கேட்டு வாங்கி போட்டுள்ளது.அதற்கான லிங்க் கீழே அதை க்ளிக்கவும்
உங்கள் பேட்டி 

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-bloggers-interview-cpsenthilkumar.html

டிஸ்கி 5 - எமது அடுத்த வெளியீடு  நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலாய்க்கும் கவுண்டமணி ( இவரு பெரிய ஏ வி எம் சரவனன்,ரிலீஸ் டேட் ,டைம் எல்லாம் சொல்லித்தான் ரிலீஸ் பண்ணுவாரு.

Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?



ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”


டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.


டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

Thursday, October 28, 2010

டாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்


1.எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....

கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?

1.நீ    2  நான்   (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)



2.போன வாரம் ஆனந்த விகடன் புக்குல மேட்டர் எல்லாம் நல்லாத்தானே இருந்தது,ஏன் சேல்ஸ் ரொம்பக்குறைஞ்சுது?


உனக்கு விஷயமே தெரியாதா?போன வார விகடன் அட்டைப்படத்துல நம்ம விஜய் இருந்தாரே,பாக்கலை?

3.ஏ ஆர் முருகதாஸ் நம்ம டாக்கூட்டரை ஹீரோவா போட்டா என்ன டைட்டில் வைப்பாரு? (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)

ஐந்து அறிவு ஜந்து

4.கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுல விஜய் பேசுனதுல ஏதோ கலாட்டாவாமே?

ஆமா,டாக்டர் பட்டம் மட்டும் குடுத்தா போதுமா?நர்ஸ் எங்கேனு கேட்டாராம்.


5.ஊர்ல  நாலு அஞ்சு அஜித் படம் பார்த்தவன் எல்லாம் ஜாலியா இருக்கான்,ஒரே ஒரு விஜய் படம் பார்த்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே.....




6.விஜய் - டைரக்டர் சார்,காவலன் பட கதையை இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?

டைரக்டர் - படத்தோட ஹீரோயின் கிட்டயும்,காமெடியன் கிட்டயும் சொல்லியாச்சு,போதாதா?

7. ராகுல் சார்,இளைஞர் காங்கிரஸ்ல ஏன் என்னை சேத்துக்க மாட்டேங்கறீங்க?

மிஸ்டர் விஜய்,படங்களை ஃபிளாப் பண்றது பத்தலையா?கட்சியையும் காலி பண்ணனுமா?

8. எஸ் ஏ சந்திரசேகர் - எப்படியாவது என் பையனை சி எம் சீட்டில் உட்கார வெச்சு அழகு பாக்கனும்.

பப்ளிக்- உங்க ஒருத்தரோட ஆசைக்காக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கைல விளையாடனுமா?


9. ஆனந்த விகடன் பேட்டியில் விஜய் - நான் அப்பாவியா ,வெகுளியா நடிச்ச படம் எல்லாம் ஹிட்,காவலன்ல நான் ரொம்ப இஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.


பப்ளிக் - அதை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாக்கனுமா?


10. அதே ஆனந்த விகடனில் ஜெ விடம் விஜய் - அம்மா உங்க மேடைப்பேச்சை கேட்டேன்,அருமை,உங்களுக்கு ஏகப்பட்ட கூட்டம் கூடுதே?

ஜெ -நான் கூட உங்க படங்களை பார்த்தேன்,ஒண்ணு கூட உருப்படியா இல்ல,தியேட்டர் காத்து வாங்குது.

Wednesday, October 27, 2010

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா


  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?

கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)

கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?

கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.

 கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.

கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.

 கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.

கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?

 கவுண்டமணி  (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...

கலைஞர்  - ஐயம் என தமிழிலேயே கேள்



 கவுண்டமணி  - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.


கலைஞர் - அது ... அது வந்து... ஒரு னிதை  , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

 கவுண்டமணி  - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?

கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.

 கவுண்டமணி  - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.

கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின்  நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.


கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.

 கவுண்டமணி  - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா