Showing posts with label REVIEW. Show all posts
Showing posts with label REVIEW. Show all posts

Monday, July 04, 2011

நாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேரும் கோட் சூட்ல நீட்டாவும்,தொகுப்பாளினி வழக்கம்போல நைட்டில கசங்கலாவும் ஆஜர்....இன்னைக்கு டபுள் ரோல் கதைகள் அப்டின்னு மதன் சார் சொல்லிட்டு அது பற்றி ரொம்ப சிலாகித்து பெசினார்.. டபுள் ரோல் அந்தக்காலத்துல இருந்தே பிரமாதமான வரவேற்பு பெற்றவைகள்னு.. எடுக்கறது ரொம்ப கஷ்டம்னாரு.. (பார்க்கறது அதை விட கஷ்டம்)

1. நகுலன் - ராஜேஷ்குமார்
இந்தப்படம் போட்டு 2 வது செகண்ட்லயே அபூர்வசகோதரர்கள் இன்ஸ்பிரேஷன்னு தெரிஞ்சிடுச்சு.. அப்பு கமல் மாதிரி ஹீரோ (இவர் தான் இயக்குநரும் ) அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. தான் அநாதை,யாரும் நம் மீது அன்பு செலுத்துவது இல்லைன்னு.. இது பற்றாதுன்னு குடைக்குள் மழை பார்த்திபன்  மாதிரி இல்லாத ஒரு கேரக்டர் கூட பேசிக்கற மனப்பிறழ்வு நோய் வேற.. 

ஸ்கூட்டில போற ஃபிகர் கிட்டே பேச ஆசைப்படறாரு.. அது கண்டுக்கவே இல்லை.. (இந்தப்பொண்ணுங்க யாரைத்தான் கண்டுக்குவாங்களோ?).. இவர் ஆற்றாமைல பொங்கி அழறாரு.. இசை வேற சோகத்துல போட்டு தாளிக்கறாங்க.. கடைசில எப்படியோ அந்த ஃபிகர் அவரை வண்டில ஏத்திக்கிட்டு கிளம்புது..  

ஹீரோ முழங்காலை கட்டி ரொம்ப சிரமப்பட்டு தான் நடிச்சிருக்கார்.. என்ன பிரச்சனைன்னா நமக்கும் பார்க்க சிரமமா இருக்கு.. டிரமாட்டிக்கா இருக்கு.. சித்தரிக்கப்பட்ட ,செயற்கையான சோகம் மாதிரி நம்ம மூளைக்குள்ள ஒரு அவார்னெஸ் பல்பு எரியுது.. சாரி டைரக்டர் சார்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அதிகம் பழக்கம் இல்லாத அந்த பொண்ணு ஹீரோவை பரிதாபப்பட்டு எங்காவது டிராப் பண்ணினா ஓக்கே.. திடு திப்னு வீட்டுக்கே கூட்டிட்டு போக ஓக்கே சொல்லுமா?
2. அதிக பழக்கம் இல்லாத ஆணிடம் அப்படி பாசமா முகத்தை தடவி கொடுக்குமா?

3. ஹீரோ மாதிரியே இருக்கும் அந்த இன்னொரு கேரக்டர் யாரு? இவரோட கற்பனையா? அண்ணனா? அதற்கு படத்துல விளக்கமே இல்லை.. 


இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

டைட்டிலுக்கான  விளக்கத்தை ஹாய் மதன் கிட்டே டைரக்டர் சொன்னது டச்சிங்கா இருந்துது..  நகுலன் அப்டிங்கறதை வேகமா,தொடர்ச்சியா சொல்லிட்டே வந்தா அது நான் குள்ளம், நான் குள்ளன்னு வரும் ..அது படத்தோட மையக்கரு.ன்னாரு.. குட் ஒன். 


2. சித்திரப்பாவை - சரத்ஜோதி 

ட்வின்ஸ் சிஸ்டர்ஸோட கதை.. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.. அடிக்கடி ஏதாவது வரைஞ்சிட்டே இருக்கா.. மன நிலைக்காப்பகத்துல அவ ஒரு முறை எங்கேயும் வர சம்மதிக்காம மாடில அபாயமான இடத்துல நின்னு  வரையறா.. அவளை கீழே விழாம காப்பாற்றப்போகும் அவளின் சகோதரி ஸ்லிப் ஆகி கீழே விழுந்துடறா.. அக்கா க்ளோஸ். தங்கை.. எகெயின் டிராயிங்க் கிளாஸ்..


  இந்தப்படத்தின் மூலமா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல.. மனநிலை தவறியவர்களை பாதுகாக்கும்போது நாம முதல்ல ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்ல வர்றாரோ? 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. மனநலக்காப்பகம் அப்படி அபாயமான மாடியை கொண்டிருக்குமா? பேஷண்ட்டை அங்கே போக அலோ பண்ணுமா?
2. மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்? ஆ ராசா ஊழலில் மாட்னார்னு கேட்டு மக்கள் சகஜமா இருக்கற மாதிரி  என்ன ஒரு அலட்சியம்?

3.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால அவ்வளவு தெளிவான ஓவியத்தை வரைய முடியுமா?

இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

 பட ஹீரோயினை நடிக்க வைத்த விதம் ,மற்றும் அந்த நடிகை தேர்வு..  

看完震惊了,这才叫艺高人胆大


3. மைக்கேல் மதன் காமராஜ் - தமிழ் சீனு 

 ஒரே மாதிரி முகத்தோற்றம் உள்ள இருவரில் ஒருவர் செய்யும் தவறால் இன்னொருவர் மாட்டிக்கொள்ளும் கதை.. கேட்க பழைய கதையாக தோன்றினாலும் காமெடியாக கொண்டு போனதால் தப்பித்தார் இயக்குநர்..

போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோவும், போலீஸூம் பேசும் வசனங்கள் நல்லதொரு காமெடி ஸ்க்ரிப்ட் கிடைத்தால் இயக்குநர் கிளப்புவார் என்று கட்டியம் கூறுகிறது.. 


க்ளைமாக்சில் “ கை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாம்” என மனைவி கூறுவது டச்சிங்காக இருந்தது.. 

 இந்த வாரம் போட்ட 3 படங்களுமே சுமார் ரகங்கள் தான்.







டிஸ்கி - மேலே சொன்ன படங்களின் யூ டியூப் லிங்க் 


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html
 

Thursday, June 09, 2011

நாளைய இயக்குநர் - த்ரில் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு தொகுப்பாளினி  ஓரளவு சுமாரான நைட்டி போட்டுட்டு வந்தாங்க.. (நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஃபிகர் இவர் தான் ஹி ஹி )ஹாய் மதன் வந்ததும் ஒரு டிஸ்கஷன்.டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு மேக்கிங்க்ல தரம் குறைஞ்சிடுச்சா? என்பதே அந்த கேள்வி. கோட்ஜில்லா பட டிஸ்கஷன்ல சில குறைகள் இருந்தப்ப டைரக்டர் கிட்டே ஆளாளுக்கு எடிட்டிங்க்ல பார்த்துக்கலாம், டிஜிட்டல்ல பார்த்துக்கலாம் அப்டின்னு தட்டிக்கழிக்கறாங்களாம்..

ஜூராசிக் பார்க் படத்துல அந்த மாதிரி ஒரு பிராணி இல்லாதப்பவே இருக்கற மாதிரி ஒரு இமேஜினேஷன் மனசுக்குள்ள கொண்டு வந்து பயந்த மாதிரி நடிக்கனும்.அது கஷ்டம் என்றார்..

பென்ஹர் படத்துல ஒரு சீன்ல ரேஸ் கார் அவங்களையும் அறியாம இடம் பிடிச்சதையும் அதை ஒண்ணும் பண்ண முடியாம போனது பற்றியும் குறிப்பிட்டாங்க..

www.forwards4all.com
1. அருண்ராஜா காமராஜர் - THE DARK

வாய் பேச முடியாத பொண்ணு ,அவங்கம்மா மொத்தம் 2 கேரக்டர். அந்த பொண்ணுக்கு இருட்டுன்னா பயம்.. அது ஞாபகம் இல்லாம வெளில கிளம்பறப்ப அம்மா ஆல் லைட்ஸ் ஆஃப் பண்ணிட்டு போறாங்க.. உடனே அந்த பொண்ணு ஆ என அலறுது.. அப்பத்தான் அம்மாவுக்கு ஞாபகம் வருது.. உடனே ரிட்டர்ன் ஆகி அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா  வெளியே கிளம்பறாங்க.. 

அவங்க போனதும் மறுபடி கரண்ட் கட் ஆகுது.. ( கலைஞர் டி வி லயே இப்படி கரண்ட் கட் ஆகற சீன் வருதேன்னு யோசிச்சா அட,..  இப்போ நடக்கற ஆட்சி அம்மா ஆட்சின்னு நினைவு வருது.. )ஆனா இந்த டைம் அந்த பொண்ணு பயப்படலை.. விளக்கு ஏற்றி வெச்சு( ஒரு குத்து விளக்கே இன்னொரு குத்து விளக்கை ஏற்றுகிறதே அடடே ஆச்சரியக்குறி.. )ஏதோ ஒரு புக் படிக்கறாங்க.. 

அந்த புக் ஆதிகாலத்தில் மனிதன் எப்படி எதேச்சையாக நெருப்பை கண்டு பிடிக்கிறான் என்பது..

இருள் இவ்வுலகின் முடிவல்ல ஆரம்பம் என்ற பின் குரலோடு படம் முடியுது.. 

படம் ஏதோ சொல்ல வருது.. ஆனா இன் கம்ப்ளீட்.. இதை கே பி சார் ரொம்ப நாசூக்கா சொன்னாரு.. ஆதிகால நிகழ்வு, நிகழ்கால நிகழ்வு இரண்டுக்குமான லிங்க் ஈஸ் நாட் சோ குட் என்றார்..

ஹாய் மதன் பேசுனப்ப 2 டைம் சீன் சேஞ்சிங்க்க்காக இருட்டை காட்றீங்க.. அதுக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்? சாதா ரசிகன் குழம்ப சான்ஸ் உண்டு என்றார்.. என் பதில் நோ சான்ஸ் எனபதுதான்.. அதான் சீன் சேஞ்சுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் குடுக்கறாரே?

3வதா வந்த பிரதாப் சார் எடுத்த எடுப்புலயே அந்த ஊமைப்பொண்ணு அப்படின்னு ஆரம்பிச்சார்.. நான் கடுப்புல ரிமோட்ல சேனல் மாத்திட்டேன்.. ஸ்டேஜ் மேனரிசம் என்ற ஒன்றை பிரதாப் சார் கத்துக்கறது நல்லது.. பிசிக்கலி சேலஞ்சுடு,மவுனமொழிபேசுபவர்கள்,என எத்தனையோ கண்ணிய வார்த்தைகள் இருக்கறப்ப.. ஹூம்.. திருந்த மாட்டாங்கப்பா.. 


www.forwards4all.com
2. அருண்குமார் - நிழற்படம்

இந்தப்படத்துல என்னைக்கவர்ந்த முக்கிய அம்சம் ஹீரோயினின் டிரஸ்ஸிங்க்சென்ஸ்.. ஓப்பனிங்க் சீன்ல போட்டுட்டு வந்த டிரஸ்க்கு மேட்சா ஸ்டெட்,செப்பல் முதற்கொண்டு கலக்குனாங்க.. அப்புறம் 4 வதா போட்ட டிரஸ் சோபா கலர்ல ஆரஞ்ச் டிரஸ் போட்டுட்டு வந்து அசத்துனாங்க.. 

வீட்ல தனியா இருக்கற பொண்ணுக்கு வரிசையா க்ரீட்டிங்க் கார்டு வருது.. அதுல அவ காதலனுடன் இருந்த ஃபோட்டோஸ் இருக்கு. தொடர்ந்து பெட்ரூம்ல ஒரு கார்டு.. உடனே அவ காதலனுக்கு ஃபோன் பண்றா.. அவன் வர்றான்.. 2பேரும் டிஸ்கஸ் பண்றாங்க.. 

2 பேரும் ஒரு முடிவெடுத்து ஒரு ஆள் வீட்டுக்கு போறாங்க.. அங்கே அவன் தனியா இருக்கான்.. அவன் இவங்களை உபசரிக்க ஏதோ டீ காபி போட உள்லே போறப்ப இவங்க டேபிள், ஃபிரிட்ஜ் எல்லாம் செக் பண்றாங்க.. அவங்களுக்கு அனுப்புன அதே மாதிரி கார்டு அங்கேயும் இருக்கு.. 

அவன் தான் அந்த ஆள்னு தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துடறாங்க.. 

அப்போ நியூஸ்ல சொல்ராங்க.. சீரியல் கில்லர் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான்... அவன் கொலைகளை செய்யும் முன் அவர்களுக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புகிறான்.... 

அவ்வளவுதான் படம் ..

கே பி சார் கமெண்ட் - படம் இன் கம்ப்ளீட்டா இருக்குன்னு சிலர் சொலலாம். அதே சமயம் அப்படி காட்டுனதுல தான் சஸ்பென்ஸ் நிக்குதுன்னும் சொல்லலாம்.. எனி வே இட் ஈஸ் எ குட் ஃபிலிம்னார்.. 

பிரதாப் சார் பேசறப்ப   THERE IS NO MOTIVATION.. WHAT IS THE FUNDAMENDELனு கடைசி வரை நீங்க சொல்லவே இல்லை அப்டீன்னார்.. 

ஹாய் மதன் சார்.. படம் ஓக்கே இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்னார்.. 

என் கருத்து என்னான்னா சஸ்பென்ஸ் படம்னா அவ்வளவு தான் சொல்லனும்.. இது இது இன்ன என படம் வரைந்து பாகங்களை குறிக்க முடியாது.. உள்ளங்கையை மூடி இருக்கும் வரை தான் சஸ்பென்ஸ்.. திறந்துட்டா ப்ச்.. சப்னு போயிடும்.. இது காதலிக்கு மட்டும் இல்லை.. சஸ்பென்ஸ் படத்துக்கும் பொருந்தும்.. 

இந்தப்படத்துக்கு பெஸ்ட் மியூசிக் அவார்டு கிடைச்சுது.. 

www.forwards4all.com








3. ரங்கநாதன் - தா காட்டு

திருநெல்வேலி,கன்யாகுமரி போன்ற தென் மாவட்டங்களில்  தண்ணி காட்டு என்ற சொலவடைக்கு தா காட்டு என்பார்களாம்..

போலீஸ் லாக்கப்ல ஒரு ஆளை அடிக்கறப்ப அவன் மேல் லோகத்துக்கு டிக்கெட் வாங்கிடறான்.உடனே போலீஸ் டிஸ்கஷன்.. சில நாட்களுக்கு முன்னால் டிராஃபிக் டைம்ல தன்னை எதிர்த்துப்பேசிய ஆளை இந்த கொலை கேஸ்ல மாட்டி வைக்க திட்டம் போடுது.. 

அவனை கண்டு பிடிச்சு அவன் காருக்குள்ள பிணத்தை வெச்சுட்டு வந்துடறாங்க..  அவன் காரை கண்காணீக்கறாங்க.. அவன் டெட்பாடியை மறைக்கறப்ப டகார்னு கையும் களவுமா பிடிச்சுடலாம்கறது அவங்க பிளான்.. 

ஆனா அவன் கலைஞர் மாதிரி எத்தனுக்கு எத்தன்.. அவங்க ஜீப்லயே பாடியை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறான்..

இந்த நம்ப முடியாத கதைக்கு சிறந்த படம் அவார்டு குடுக்கறாங்க.. அய்யோ ஹய்யோ..

www.forwards4all.com
இந்தப்படத்தை எடுத்த இயக்குநர், பாராட்டிய வி ஐ பி களுக்கு நான் முன் வைக்கும் கேள்விகள்

1. போலீஸ் லாக்கப்ல ஆள் இறந்துட்டா வழக்கமா தூக்குல தொங்க விடுவாங்க.. அல்லது என்கவுண்ட்டர்ல  போட்டுட்டதா சொல்லிடறது தான் உலக வழக்கம்.. இப்படி தேவை இல்லாம டெட் பாடியை தூக்கிட்டு ரோடு ரோடா போலீஸ் அலையுமா?

2. ஃபுல் மப்புல இருக்கும் போலீஸ் ஆஃபீசர் டிரங்க்கன் டிரைவிங்க்கை பற்றி கேள்வி கேட்பதாகவும், அதை டிரைவர் கேலி செய்வது போலும் சீன் அமைத்திருப்பது நம்ப முடியவில்லை.. 

3. போலீஸ் வேனுக்கு டெட் பாடி மாற்றும் நேரம் குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் ஆகும், ஆனால் போலீஸ் ஆஃபீசர் வாய் கொப்புளிப்பது 20 செகண்ட் மட்டுமே.. அந்த கேப்பில் அவர் எப்படி தன் பங்களாவிலிருந்து 2 மாடி இறங்கி வந்து இத்தனை வேலையையும் செய்திருக்க முடியும்?

4. டிராஃபிக் இன்ஸ்பெக்டரா? க்ரைம் இன்ஸ்பெக்டரா? கேரக்டர் வடிவமைப்பில் குழப்பம்..  டிராஃபிக் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி ஸ்டேஷன்ல லாக்கப்ல கைதியை அடிக்க முடியும்? க்ரைம் இன்ஸ்பெக்டரா இருந்தா அவர் எப்படி சிக்னல்ல நின்னு பைக்கை ,காரை நிறுத்தி டிரங்க்கன் டிரைவ் சோதனை போட முடியும்?