Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Saturday, August 17, 2019

அமலாபால் நடிச்ச "ஆடை" vs முதல் பாவம் அபிலாஷா 32+

1  மனைவிகள்

சமையலறையில் கத்திகள் இருந்தும் .புருசனை தாக்க
பூரிக்கட்டையை தேர்ந்தெடுக்கிறார்கள்...அது ஏன்?

கத்தி ல குத்துனா,கீறுனா ரத்தக்கறை வந்துடும்,அதை கழுவனும்,துலக்கனும்.பூரிக்கட்டை பிரச்னை இல்லை,பெண்கள் புத்திசாலிகள்



================


2 தலைவரே!இந்திய தேசியக்கொடில காவி கலர் இருக்கு,அதை மாத்தனும்னு கிளம்புவோமா?விளம்பரத்துக்கு விளம்பரம்,நமக்கும் பொழுது போகும்,37 பேரும் தண்டமாதானே இருக்கோம்?


கம்னு இருய்யா,தேசியக்கொடியை அவமதிச்சா தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளுத்துடுவாங்க



=============


3 டாக்டர் ,துக்கம் தொண்டைய அடைக்கும்போது ஒரு கூலிங் ஃபீர் சாப்பிட்டா சரியா போயிடும் னு சொல்றாங்களே ?நிஜமா?


ஆமா,அது போய் கல்லீரல் ல போய் அடைச்சுக்கும்,உயிர் சீக்கிரம் போய்டும்,துக்கமும் போய்டும்


================


4 டாக்டர்,நானும் என்னெல்லாமோ செய்து பார்க்கிறேன், ரைஸ்தான் குறையுது தவிற நம்ம வெயிட் குறைய மாட்டேங்குது


ரைஸ் ரெகுலரா சாப்ட்டா வெய்ட் குறைஞ்சாதான் அது சர்ப்பரைஸ்,ஓட்ஸ்,கோதுமை ,ராகி (கேழ்வரகு) இப்டி சாப்டுங்க



==============


5 நன்னடத்தை காரணமாக ஓராண்டுக்கு முன்பே விடுதலை..ஆகறீங்களாமே"மேடம்?அப்டி என்ன நன்னடத்தையை அவங்க"கண்டுட்டாங்க?


ஜெயில் ல இருந்து வெளில ஷாப்பிங்கோ,சினிமாக்கோ போனா சொன்ன டைம்க்கு திரும்ப வந்துடுவேன்,இது நன்னடத்தை தானே?



===========


6 டைரக்டர் சார்,இந்த ராஜ ராஜசோழன் முதல்ல எடுபுடியா அமாவாசையா இருந்தவர்தான்னு எப்டி சொல்றீங்க?


அமைதிப்படைல அப்டித்தானே காட்னாங்க?

அட ராமா,அது நாகராஜசோழன் ,இது ராஜராஜசோழன்,நமக்குத்தமிழும் தகராறு,வரலாறும் தகராறு



==========


7 டைரக்டர் சார் ,நாளை காலை இயக்குநர் சேரனை தாக்கி அறிக்கை விடப்போறீங்களா?


ஏன் கேட்கறீங்க?

சோழனை தாக்கியாச்சு ,வரிசைப்படி அடுத்து சேரன்,பாண்டியன் தானே?



==========


8 டாக்டர் ,உடல் எடை குறைய


வெந்தையம்- 1 TSP
கொள்ளு- 1 TSP
சீரகம் - 1 TSP
ஓமம் - 1 TSP
மல்லி- 2 TSP
கருஞ்சீரகம்- 2 TSP
மஞ்சள்த்தூள்- 1 TSP
சோம்பு - 1 TSP
Flaxseed- 2 TSP
த்ரிபலா பவுடர்- 5 TSP (TSP = டீ ஸ்பூன்)மிக்ஸ் பண்ணி குடிக்கனுமாமே?

பர்ஸோட வெய்ட் வேணா குறையும்



===========


9 டாக்டர்,ஜீரணக்கோளாறு சரியாக வயிற்றைக்காயப்போட்டா போதுமாமே?


மழை சீசன் இப்ப,துவைச்ச துணியையே காயப்போட முடியறதில்லை



============


10 சார்,கட்சி மாறிடலாம்னு இருக்கே்ன்,பேப்பர்"போட்ரலாமா?


அவசரப்படாதய்யா,முன்னணி"நடிகை"யாரையாவது"கண்டபடி திட்டி அறிக்கை"விடு,கட்சியே உன்னை நீக்கிடும்,டக் னு கட்சி மாறிடலாம்,அத்தையை நலம் விசாரிச்ச மாதிரியும் ஆச்சு,அத்தை பொண்ணுக்கு லவ் லெட்டர்"குடுத்த மாதிரியும் ஆச்சு



=============


11 ஆபீசுக்கு ஏன் லீவு?


புளிச்ச மாவுல ஊத்துன தோசை சாப்ட்டதால உடம்புக்கு சேரலை சார்

இந்தப்புளிச்சுப்போன கதையை இன்னும் எத்தனை பேரு எத்தனை தடவைதான் சொல்வீங்க?


===================


12 சிந்துபாத் படத்துக்கு ஏ"சர்ட்டிபிகேட் தராம யூ சர்ட்டிபிகேட்"தந்ததை கண்டிக்கிறேன்


ஏன்?

சிந்து bath னா சிந்து குளிக்கிற சீன் இருக்கும்ல?அப்போ 18+ , ஏ தானே தரனும்?



=================



13 டாக்டர் எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு போன சரக்கு உடம்புக்கு நல்லதா?

அது என்ன லாஜிக்?

உடம்புக்கு நல்லது செய்யும், நோய் தீர்க்கும் மருந்து எக்ஸ்பயரி டேட் முடிஞ்சுபோனபின் உபயோகிச்சா அது கெடுதல், அதே ரிவர்ஸ் ஃபார்முலால உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் சாராயம் கெட்டா நல்லதுதானே?




==================




14 டாக்டர் , வலது கால் கட்டை விரல்ல கல் இடிச்சுட்டா அதிர்ஷ்டம் வருமாமே? நிஜமா?

ரத்தம் தான் வரும்




==================



15 டாக்டர் , வாசக்கதவு நிலைப்படில தாண்டறப்ப கூரைல நங்-னு இடிச்சுக்கிட்டேன், வீக்கம் வருமா?

முதல்ல நங்-னு சத்தம் தான் வரும், அப்புறம் ரத்தம் வரும், கடைசியா தான் வீக்கம் வரும்





================




16 தலைவரே! எம். பி ஆகி என்ன சாதிச்சீங்க?

தமிழ் வாழ்கனு கோஷம் போட்டேன்

அப்றம்?
அந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங்ல விட்டோம், நெ 1


அருமை , அப்றம்?
1 ந்தேதி வந்தா சம்பளத்தை ஏ டி எம் ல எடுக்க வேண்டியதுதான்




=================




17 தலைவரே!நம்ம எம்.பி ங்க 38 பேரும் தமிழ் வாழ்கனு கோஷம்"போட்டு கலக்கிட்டாங்க


நன்றி

ஆனா கையெழுத்தை மட்டும் இங்க்லீஷ்ல போட்டாங்க,அது ஏன்?
அது வந்து ஆங்,வாழு வாழ விடு"பாலிசி,அந்நிய மொழி வாழவும் வாய்ப்பு குடுக்கனும்ல?


==============


18 டாக்டர்,தலைல 2 சுழி இருந்தா 2 பொண்டாட்டி கட்டலாமாமே?நிஜமா?

பொண்ணை கட்னா பொண்டாட்டி ஆகும்,பொண்டாட்டியை கட்டுனா அதுக்கு ஆல்ரெடி புருசன் இருப்பானே?


===============


19 அமலாபால் நடிச்ச "ஆடை" படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரு?

முதல் பாவம் படத்துல அபிலாஷாக்கு அமைச்ச அதே ஆள்தான்


===============


20  ஜோசியரே!வீட்ல ஊறுகாய் இருந்தா குபேரன் வருவாராமே ,நிஜமா?

அது நிஜம்னா ஊறுகாய் விற்கற கடைக்காரங்க கோடீஸ்வரர்களா ஆகி இருப்பாங்களே?


================

Wednesday, August 14, 2019

கஸ்தூரி"அக்காவும் இசக்கி தம்பியும் 38+

1  பட டைட்டில் 8 எழுத்து

ரிலீஸ் ஆகற தேதி 8
மாசம் 8 வது"மாசம்
8/8/2019=8+8+2+0+1+9=28 இதுலயும் ஒரு 8 . இதுல என்ன குறியீடு? அஷ்டமத்துல சனி னு எடுத்துக்கலாமா?

எட்டுத்திக்கும் புகழ் பரப்பும்னு ம் எடுத்துக்கலாம்



============


2 சிட்டிசன் ல வர்ற அத்திப்பட்டி தான் அத்தி"வரதரோட "சொந்த ஊரு னு யாரும் இன்னும் கிளம்பலையா?


=============


3 அத்திவரதரைப் பார்க்கச் செல்லும் பலரும்..அங்கு இருக்கும் சிக்கல்களைப் பற்றியும்..சங்கடங்களைப்பற்றியும் குறைகூறுகிறார்களே அது ஏன்?


மனுசனோட"கண்ணுக்கு மைனஸ்தான் முதல்ல தெரியும்.
நிறைதான் எல்லாமே எனும் அர்த்தத்தைக்கூட
மறைமூர்த்தி கண்ணா னுநெகடிவ்வா சொல்ற மாதிரி
குறை ஒன்றும் இல்லை



================


4 அனுஷ்கா இல்லாத ஊருக்கு நயன் தாரா அஸ்கா சர்க்கரை


===============


5 இன்றைய ஆண்கள் தேடுவது,

மனம் படைத்த பெண்களை அல்ல...
பணம் படைத்த பெண்களைத் தான்...என்ற கருத்து உண்மையா?

பொண்ணு அழகா இருந்தா போதும்னு ஏழைப்பெண்ணை கட்டிக்கிடட ஒரு கோடி ஆண்கள் பட்டியலை வெளியிட முடியும்.பொருளாதார பின்புலம் இல்லாத ஆணைக்கட்டிக்கிட்ட பத்து பொண்ணுங்க பேரு தர முடியுமா?


=================


6 ஏற்கனவே இருக்கற ரெக்கார்டை முறியடிப்பவர் ஸ்டாரு,
புதுசா ஒரு ரெக்கார்டை ஒவ்வொரு முறையும் உருவாக்குபவரே அல்ட்டிமேட் ஸ்டாரு


=======================


7 பெண்கள் நகம் வளர்ப்பதன் காரணங்கள்



1 வெங்காயம் ,பூண்டு இத்யாதிகளை உரிக்க

2 காதலனை,கணவனை நறுக்னு கிள்ள
3 ஒரு பிரச்சனை வர்றப்ப மகாத்மா காந்தி சொன்ன மாதிரி ஆயுதமா உபயோகிக்க


-=================


8 அத்தி வரதர் ஸ்பெஷல் துளசி;

அத்தி வரதர் டூர் பிளான்
அத்தி வரதர் பிரசாதம்;
இப்டி"யாரும் இன்னும் பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலையா?



===============


9 டாக்டர் ,கல்யாணம் பண்ணதும் புள்ள பெத்துக்கனும்னு சுத்தி இருக்குற ஆளுங்க,சொந்தக்காரங்க

உசுரு எடுக்குறாங்க

🤦



🤦

ஏன்?

இப்பவெல்லாம் தம்பதிகளுக்குள்"அடிக்கடி சண்டை வருது,பிரிஞ்சுடறாங்க.சட்டு புட்டுனு குழந்தை"பெத்துக்கிட்டா அன்யோன்யம் கூடும்.



============


10 டாக்டர்",போறபோக்க பாத்தா சென்சூரி போட்ருவேன் போல.

உடம்ப குறச்சே ஆகனும்.

1தினசரி அதிகாலை 5 மணிக்கு 4 கிமீ வாக்கிங் ,1 கிமீ ஜாக்கிங்க் 1 கிமீ ரன்னிங்
2 அரை மணி நேரம் கிணற்று நீச்சல்
5 அசைவம் தவிர்
3 வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கனும்
4 யோகா


================

11 நெகடிவ் டேக் போடறது,
ஒரு நடிகரை , குடும்ப"வாழ்வை மடட் ரகமா சித்தரிப்பது னு ஈடுபடற ஐடிகளை சஸ்பென்ட் பண்ணிட்டா ஒரு பயம் இருக்கும்,,வேற புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்க மாட்டானா?னு கேட்கறவங்களுக்கு பாலோயர்ஸ் போய்டுமே?அடியைப்பிடிடா பாரதப்பட்டானு மறுபடி முதல்ல இருந்து மேல வரனும்


================


12 ஆடி மாசத்தை முன்னிட்டு பிரிக்கப்பட்ட புதுமணத்தம்பதிகளை ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வாங்கனு நம்பி வீட்டு பெருசுங்க ஏமாந்து அனுப்பிடறாங்க,நம்மாளுக கேப்ல கெடா வெட்டிடறாங்க


==============



13 நான்புதுசா ஒரு கண்ணியமான மலையாளப்படம் இயக்கப்போறேன்
டைட்டில்
கஸ்தூரி"அக்காவும்
இசக்கி தம்பியும்


================



14 குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள்
கே பாக்யராஜ் (பாரதிராஜா)
ஆர் பாண்டியராஜன் (பாக்யராஜ்)
இரா பார்த்திபன் (பாக்யராஜ்)
குருவை மிஞ்சிய சிஷ்யர்
குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்

ஷங்கர் (SAC)
குருவே இல்லாத ஏகலைவன்
மணிரத்னம்
அட்லீ (ஷங்கர்)


===================

15  சமீபத்திய மரணங்கள் சாப்பாடு சம்பந்தப்பட்டவருடையதாகவே இருப்பதை கவனித்தீர்களா?அது"தற்கொலையோ ,கொலையோ,இயற்கை மரணமோ


1 சரவணபவன் அண்ணாச்சி
2 காபி டே ஓனர்
அன்ன லட்சுமி க்கு கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டா இப்டி தான்

இப்டி ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?



==============

16 8/8/2019 8pm அப்போ மோடி உரை என்றதும் ஆளாளுக்கு பணமதிப்பிழப்பு னு புரளி கிளப்பிட்டு இருக்காங்க.காஷ்மீர் ,370 பத்தி எதுனா சொல்வாரா இருக்கும்


================


17 சமீப காலத்தில் பெண்களின் வரவேற்பைப்பெற்ற இருவர்
1 அத்தி வரதர்
2 அஜித்குமார் #NerkondaParvai


================


18  எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கதரிசி.இப்படி நம்மாளு எசகு பிசகா கிசு கிசு ல சிக்கி பிரச்சனை உதய மாகும்னு முன் கூட்டியே கணித்துதான் "ட்ரியோ ட்ரியோ ட்ரியோ" சத்தியம் நீயே ,தர்மத்தாயே னு பாடுனாரு


===============


19 பழைய தலைவர் − அம்மா
புதுத்தலைவர் = மகன்
இடைக்காலத்தலைவர் = அதே அம்மா (அன்னை)
வருங்காலத்தலைவர் = மகள் /அதே மகன் # கை கொடுக்கும் கை


===============


20 அஜித்"ரசிகர்களே!ப்ளூசட்டை,வலைப்பேச்சு இவங்க நெகடிவ்"விமர்சனம் பண்ணா என்ன இப்போ?வீணா அவங்களுக்கு நீங்க விளம்பரம் தேடித்தந்துட்டு இருக்கீங்க,மெர்சல் படத்தை வெட்டியா எதிர்த்து அதை ப்ரமோட் பண்ணுன பிஜேபிகாரங்க செஞ்ச தப்பை நீங்களும் செஞ்சு அவங்களை பெரிய ஆள் ஆக்கிட்டு இருக்கீங்க


================

Tuesday, August 13, 2019

அட்டென்ஷன் சீக்கிங்க் அத்தி வரதர்

1 வருங்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட, எந்த கட்சியுடனும், கூட்டணி அமைக்க மாட்டோம்.-  தேவகவுடா: 


எங்க நாட்டில் கூட டாக்டர் ராம்தாஸ்னு ஒருத்தர் இதே மாதிரி டய;லாக்கை இதை விட ஃபோர்சா சொல்லிட்டு இருந்தாரு

===============

2   காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராகுலுக்கு மட்டுமே தகுதி உள்ளது. ஆனால், பதவியில் நீடிக்க முடியாது என, அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்-பீட்டர் அல்போன்ஸ்:

 கூட்டிக்கழிச்சுப்பார்த்தா காங் கட்சித்தலைமைக்கு யாருக்குமே தகுதி இல்லை, தலைமை இல்லாத கட்சினு சொ,ல்லறாரு போல 

=============

3 : எந்த தேர்தலிலும், அ.தி.மு.க., தோற்றால், அதற்கு அடுத்த தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறும். அது தான், இதுவரை நடந்திருக்கிறது. எனவே, வேலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி -.!***துணை முதல்வர், பன்னீர்செல்வம்


 வாயைக்கொடுத்து மாட்டிக்கிட்டாரு ,. அப்போ 2021   சட்டமன்றத்தேர்தல்ல அதிமுக தோற்குமா?


===============

4  மத்திய அரசின் தேச பாதுகாப்பு பயங்கரவாத ஒழிப்பு, என்.ஐ.ஏ., சட்டத்தால், சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக,  ஸ்டாலின் கூறுகிறார். கூட்டணி கட்சிக்காக, அவ்வாறு பேசும் அவரிடம், மக்கள் ஏமாறக் கூடாது-=அர்ஜுன் சம்பத் 

அவரு எந்த ஜோக் சொன்னாலும் சிரிப்போம், சீரியசா எடுத்துக்க மாட்டோம்

=================

5   ஓட்டு வாங்க, தி.மு.க.,வினர், பணப் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து, கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால், வேலுார் லோக்சபா தேர்தல், ரத்தானது. யாரால் தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அவரே மீண்டும் போட்டியிடுகிறார்.-ஜி.கே.வாசன் :


 தகவலுக்கு நன்றி , அப்போ வரவு நல்ல உறவு - தொகுதி மக்கள் குஷி

===============


6   இதனால், மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்-ஜி.கே.வாசன் 

ஜனங்களுக்கு கொண்டாட்டம் தான், ஜாக்பாட் அடிச்சிருக்கு மீண்டும்’’


=========:


7. அக்கட்சி வேட்பாளரை, டிபாசிட் இழக்கச் செய்யும் வகையில், கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும்.-ஜி.கே.வாசன் :-ஜி.கே.வாசன் :


 கூட்டணிக்கட்சியினரா எல்லா ஓட்டையும் போடப்போறாங்க, ஜனங்க தானே போடனும்?

=================
8 ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது, அ.தி.மு.க., அரசு தான். இத்திட்டத்துக்கு அடிக்கல் மட்டுமே நாட்டி விட்டு, தி.மு.க., தான் அதை நிறைவேற்றியதாக, ஸ்டாலின் கூறுவது, உண்மைக்கு மாறானது. -கே.பி.முனுசாமி  

அரசியல்வாதின்னாலே வாய்க்கு வந்ததை அடிச்சு விடறவங்க தானே?

==============


9  ஸ்டாலின், தரம் தாழ்ந்து தான் பேசுவார்; அவரால் தரமாக பேச முடியாது.-கே.பி.முனுசாமி  

அவரால் தரமாகவும் பேச முடியாது , தாமாகவும் ( சுயமா) பேசவும் முடியாது ட், துண்டுச்சீட்டு பார்த்து தான் பேசுவாரு

================= 

10  '  பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு, கங்குந்தி உட்பட பல இடங்களில் கட்டிய தடுப்பணை உயரத்தை, 40 அடியாக உயர்த்தி உள்ளது. இதை, தமிழக அரசு தடுத்து நிறுத்தவில்லை.=பாலகிருஷ்ணன்

 கோர்ட் உத்தரவிட்டாலே அவங்க மதிக்கறதில்லை

===============


11  மக்கள் பிரச்னைகளை, இந்த அரசு தீர்ப்பதில்லை. தமிழகத்திற்கு, இந்த ஆட்சி தேவையா? அ.தி.மு.க., அரசை, வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், விரைவில் நடத்தப்படும்.'-பாலகிருஷ்ணன்

 அவங்க பிரச்சனையே பெரும் பாஅடா இருக்கு, ஆட்சியைத்தக்க்க வைக்கவே நேரம் சரியா இருக்கு

============
12  முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நாளை, கருப்பு தினம் என்றே கூறலாம். -காதர் மொய்தீன்

ஆளுங்கட்சியின் மீதான் வெறுப்பு தினம்னும் கொண்டாடலாம்

==============


13 சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தலையிடுவது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறிச் செய்யும் சட்ட முரண். முத்தலாக் செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில், இச்சட்டம் கொண்டு வருவது, பா.ஜ.,வின் எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.  -காதர் மொய்தீன்

முஸ்லீம் ஆண்களுக்கு கொண்டாட்டம், பெண்களுக்கு திண்டாட்டம்


==============

14  டில்லியில், மாதம், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, கட்டணம் கிடையாது,'' -, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் 

 இந்த ஒரு ,மேட்டரை ப்வெச்சே பிரதமர் ஆகிடலாம்னு பிளான் போடறாரு


ஷாக்கிங் நியூஸ்

==========

15 ராகுல் கூறியதால் தான், இந்தப் பதவியை ஏற்றேன். ஆனால், கட்சித் தலைவர் பதவியில், அவருக்கு பதிலாக நான் இருக்க முடியாது. வீணாக, என்னுடைய பெயரை இழுக்க வேண்டாம்-பிரியங்கா  

 உங்க கணவர் பெயரை இழுக்கலாமுங்களா? 


அதே ராகுல் கூறினால் கட்சித்தலைவர் பதவியை ஏற்பேன்னு சொல்ல வர்றாரா?

====================


16 மதுக்கடை ஊழியர்கள், 'ஐ.டி., கார்டு' எனப்படும், அடையாள அட்டை அணியவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும்' - 'டாஸ்மாக்' நிர்வாகம் 


மப்புல மறந்துட்டோம்னா ஒத்துக்க மாட்டீங்களா?

=================


 விபரம் தெரியாம எதிர்க்கட்சிங்க + இந்த விலைக்க்குறைப்புக்கு ஆளுங்கட்சியே காரணம்னு  சொல்லிடப்போறாங்க 

===================


 அட்டென்ஷன் சீக்கிங்க் அத்தி வரதர்


================


19  அரசு வேலை வாங்கி தருவதாக, பலரிடம், 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த, திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு துறை ஊழியர், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் உட்பட மூவர் மீது, போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்

 நல்லா விசாரிங்க, தன்கியா எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் நடத்திட்டு இருக்கப்போறாங்க 


==================


20 மதுரையில் உள்ள, ஓட்டல் ஒன்றில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிராமணர்களின் போராட்டத்தை அடுத்து, அந்த உணவின் பெயர் நீக்கப்பட்டதுடன், ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கடிதமும், எழுதி கொடுத்தார்.


ஹோட்டலுக்கு ஓசி விளம்பரம்


======================