Showing posts with label சீன் படம். Show all posts
Showing posts with label சீன் படம். Show all posts

Sunday, February 13, 2011

அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +



லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை ஒன்லைனாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் இடைவேளைக்குப்பிறகு காட்டிய அக்கறையையும்,கவனத்தையும் ,படத்தோட ஓப்பனிங்கல காட்டத்தவறிட்டாரு இயக்குநர்.

ஹீரோ புதுமுகம் அகிலன் சுமார்க்கும் கீழே இவரது நடிப்பு.(புரொடியூசர் பையன் அல்லது ஃபைனான்சியர் பையனோ? # டௌட்டு )

ஹீரோயின் அனகா (இவர் அமலா பால் எனும் அனாகாவுக்கு சித்தி பொண்ணா? #டவுட்டு 2) இவரது நடிப்பு ஓக்கே.. ஆளும் நல்ல ஃபிகராத்தான் இருக்காரு. ( ஆண்களை மட்டம் தட்டறதும், பெண்களை புகழ்றதுமே வேலையா போச்சு)
அது என்னமோ தெரியலை. இப்போ கோடம்பாக்கத்துல ஒரு புது ட்ரெண்ட் பரவிட்டு இருக்கு... அது என்னன்னா ஒரு பொண்ணு டிரஸ் மாத்தறதை செல்ஃபோன் மூலமா படம் பிடிச்சு மிரட்டி அவளை அடி பணிய வைப்பதும், அந்த வில்லனை சம்பந்தப்பட்ட பொண்ணோட ரிலேஷன் பழி வாங்கறதும் .. சமீபத்தில் ஹிட் ஆன யுத்தம் செய் முதல் ஈசன் வரை நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ( எல்லாருக்குமே ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் இன்ஸ்பிரேஷன் போல)

ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும். உல்டா பண்றவங்க , காப்பி அடிக்கறவங்க எல்லாருமே அவங்கவங்க ஸ்டைல்ல திரைக்கதைல அமைச்சு புது கதையோன்னு ஒரு பிரமையை ஏற்படுத்திடறாங்க.

படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற தத்தோம் தகிடதோம் பாட்டு ஓகே ரகம் . ஆனா திடீர்னு அழகி படத்துல வர்ற மாதிரி கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பூலம்னு படத்துக்கோ, கதைக்கோ சம்பந்தமே இல்லாம ஒரு பாட்டு வருது.. அது ஏன் வருது? எதுக்கு வருதுன்னு யாருக்கும் தெரில..

அன்பே எங்கள் அர்த்த சாஸ்திரம் பாட்டு மாமூல் தமிழ் சினிமா க்ளிஷே காட்சிகள் அடங்கிய டூயட் பாட்டு.

போலீஸ் ஆஃபீசர் ஹீரோவோட பெற்றோர்ட்ட விசாரணை பண்றப்ப அவங்க உதார் விடறதும், எகத்தாளமா பேசறதும் ஓவர். சும்மா முறைச்சாலே போலீஸ் பின்னி எடுக்குது.. அப்படி எதிர்த்து பேசியும் சும்மா விடுவாங்களா? என்ன?
சும்மா சஸ்பென்ஸுக்காக ஹீரோயின் தான் கொலைகாரியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்த இயக்குநர் கையாண்ட முயற்சி படு தோல்வி. இடைவேளை போடறப்ப ஹீரோ தான் கொலை காரன் கற ட்விஸ்ட்டை கொடுத்ததா மனப்பால் குடித்த இயக்குநருக்கு ... எத்தனை  தமிழ்ப்படங்கள் பார்த்திருகோம் பாஸ்?

ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் படு சுமார். ஆனா போஸ்டர் டிசைன் அமைச்சவர் ஏதோ சீன் படமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமா செம ஜோரா கிளாமர் ஸ்டில்ஸ்...(. # நம்புங்க நான் சீன் படம்னு நினைச்சு போகலை)

ஹீரோவின் ஹவுஸ் ஓனர் மனைவியாக வரும் ஃபிகர் நல்ல ஷேப் ( ரொம்ப முக்கியம்). ஆனா அவருக்காக ஹீரோ ஒரு கொலை பண்றது ஓவர்.

சென்சார் போர்டு படத்தை பார்க்காமலேயே சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டுட்டாங்களா?ன்னு சந்தேகப்பட வைக்கும் வசனங்கள்
1 நம்ம கிட்டே இருக்கற பொண்ணுங்க எல்லாம்  M C A

அதென்ன M C A ?

மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வாங்குனவங்க... பயம் இல்லாம எஞ்ஜாய்


2. ஹீரோயின் - ஒரு கிளாசை கூட ஒழுங்கா பிடிக்கத்தெரியலையே ..இவனுக்கெல்லாம் மேரேஜ் பண்ணி வெச்சா என்ன பண்ணப்போறானோ தெரியலையே..?

3.  டேய்.. முடியாது முடியாதுன்னு சொல்லீட்டே ஆளாளுக்கு பிக்கப் பண்ணிடறாங்களே..?

4.  ஹீரோயின் - டேய்.. சூப்பர்டா.. நல்லாதான் வேலை செய்யறே... என் வீட்டு வேலைக்காரன் கூட இப்படி சூப்பரா துணி துவைச்சிருக்க மாட்டான்.

5. ஏய்.. பொண்ணு.. மறந்துட்டியா..? நீ கூட ஆரம்பத்துல இப்படித்தான் கத்துனே..இப்போ ரசிகர் மன்றமே வைக்கற அளவு கஸ்டமரோட எண்ணிக்கை பெருகலை..?

6. வில்லன் - எனக்கு எதிரா பொண்ணுங்க கோஷம் போடறாளுகளா?ஒண்ணும் பயப்படத்தேவை இல்லை. இன்னைக்கு இங்கே கத்தறவங்க நாளைக்கே கத்திரிக்கா விலை ஏறிடுச்சுன்னா அங்கே போயிடுவாங்க..
மக்களுக்கு மறதி ஜாஸ்தி..
படத்தில் ஏகப்பட்ட அபத்தங்கள்

1. ஹீரோயின் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது அங்கே வரும் ஹீரோவால் சேறு ஆகிடுது.. உடனே வழக்கமா பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?திட்டுவாங்க.. அல்லது கம்முன்னு விட்டுடுவாங்க. ஆனா நம்ம ஹீரோயின் ( கவனிக்கவும் # நம்ம ஹீரோயின் ) என்ன பண்றாங்க..?

ஹீரோவோட ரூமுக்கே போய் அவங்களோட எல்லா டிரஸ்ஸையும்  (#அண்டர்லைன் எல்லா) கழட்டி ஒரு பெட்ஷீட் போர்த்திக்கிட்டு ஹீரோ கிட்டே என் டிரஸ் எல்லாத்தையும் நீயே  துவைங்கறா?
இப்படி யாராவது கேனத்தனமா நடந்துக்குவாங்களா?

2. பழி வாங்கற ஹீரோ பெண் வேஷம் போட்டு ஏன் கொலை பண்றார்?அது தேவையே இல்லையே.நைட்டு பெண் மாதிரி கொலை பண்றவர் காலைல மீசையோட இருப்பது எப்படி? (# கேசவர்த்தினி ஹேர் ஆயில் அவ்வளவு வேகமான முடி வளர்ச்சியை தருதா? # டவுட்டு)

3.லெடீஸ் ஹாஸ்டல்ல ஒரு ஆண் பெண் வெஷம் போட்டு ஒரு நைட் தங்கறதும், அங்கே ஹால்ல 8 பேர் வரிசையா படுத்திருக்கறப்ப
ஒரு பொண்ணு கிட்டே போய் கட்டிப்படிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கறதும் நடைமுறைல சாத்தியமே இல்லாத விஷயங்கள். ( #லேடீஷ் ஹாஸ்டல் போய் செக் பண்ணுனவன் மாதிரியே பேசறானே..?)
மொத்தத்துல 2 மணி நேரப்படத்துல உருப்படியான ரெண்டே விஷயங்கள்
1. ஹீரோயின் 2 . ஹவுஸ் ஓனர் ஒயிஃப் ( ரெண்டுமே நல்ல உருப்படிகள் தான் )
 
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாள் தான் ஓடும்.
 
ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை..
 
டிஸ்கி -1 மேலே உள்ள ஸ்டில் சிந்து சம வெளி புகழ் அமலாபால் எனும் அனாகா. மற்ற ஸ்டில்களில் உள்ளவர் அனகா.. 2 பேரும் ஒருத்தர்தானோ? எனது சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு 1000 பொற்காசுகள்... ம்ஹூம் 1000 நன்றிகள்
 
டிஸ்கி 2 -

Saturday, January 01, 2011

சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18 +

http://www.dailythanthi.com/thanthiepaper/13122010/MDSG423131-M.jpg
டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ மர்டர் கம் புலனாய்வுப்படம் என நினைத்துப்போனால் அது ஏதோ ரெண்டுங்கெட்டான் படம் போல. ஆர் கே நடித்த  எல்லாம் அவன் செயல் என்ற படம் மலையாளத்தில் வந்த  சிந்தாமணி கொலை வழக்கு என்ற படத்தின் ரீ மேக்.ஆனால் அந்த 2 படங்களுக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தம் இல்லை.இது வழக்கமாக சீன் பட லேபிளில் வெளி வந்து சீன் இல்லாத சீன் படம் என்ற லேபிளில் வகைப்படுத்தலாம். (புது வருஷமும் அதுவுமா மாட்டுனேன் பாரு...)

பிரபல நாவல் ஆசிரியை தான் எழுதும் நாவலுக்காக தனிமையான பங்களாவில் வந்து தங்குகிறார். அங்கே அவரை 4 இளைஞர்கள் ரேப் செய்கிறார்கள்.இவர் அவர்களை மறுபடி ரேப் செய்வது போல் பாவ்லா காண்பித்து பழி வாங்குகிறார்.( என்ன கேவலமான கதை..?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.படத்தின் பெயர் சட்டென ஞாபகம் வர மாட்டேங்குது.இந்தக்காலத்தில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தர்றாங்க. இதுல ஒரு லேடி நாவல் ஆசிரியை நாவல் எழுத ரூ 20000 அட்வான்ஸ் குடுத்து ரூ 5000 வாடகையில் பங்களாவில் தங்குவது செம காமெடி.

4 இளைஞர்களாக வருபவர்கள் அடிப்படை நாகரீகமும்,நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் வருவது ரொம்ப கொடுமை.அந்த நாவல் ஆசிரியையாக வரும் மோனலிசா எனும் நடிகை பார்க்க சுமாராக இருந்தாலும் எப்போ பாரு சிரிச்சிக்கிட்டே இருப்பது மகா எரிச்சல்.நல்ல வேளை ரேப் சீனில் சிரிக்கலை.
http://www.seithy.com/admin/upload/Ellam-Avan-Seyal-Stills__14_seithy.jpg

கேமரா ஆங்கிள்கள் எவ்வளவு மோசமாக ஒரு படத்துக்கு இருக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.நாவலில் வரும் சம்பவங்கள் போலவே கொலை நடந்திருக்கிறதே என போலீஸ் விசாரிக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் கொஞ்சம் விறு விறுப்பு.அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஆப்செண்ட்.க்ளைமாக்சில் திடீர் என படம் முடிவது அதிர்ச்சி.போலீஸ் என்ன ஆச்சு? கேஸ் என்ன ஆச்சு? அந்த நாவல் ஆசிரியை என்ன ஆனார்? என எந்தக்கேள்விக்குமே பதில் இல்லை.


வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்தில் தேறிய 3 வசனங்கள்-

1.  ஏய், உனக்கு பாய் ஃபிரண்டே இல்லையா?

இல்லை,ஏன்?

எனக்கு கேர்ள் ஃபிரண்ட் ஆகிடறியா?

2. மேடம், உங்க முதல் நாவல் ல ஹீரோயினுக்கு உங்க பேரையே வெச்சிருக்கீங்களே?ஏன்?

இந்த உலகத்துலயே என் பேரை விட அழகான பேரு எது?

3. பொண்டாட்டிக்கு பயப்படற ஆளுங்க எதுக்கு மத்த பொண்ணு மேல ஆசப்படனும்?

சம்ஹாரம் என்ற பாடல் சீனில் வைஜயந்தி ஐ பி எஸ் படத்தில் வருவது போல் ஹீரோயின் உடற்பயிற்சி செய்வது செம காமெடி...அதற்கு பேசாமல் ஒரு குத்தாட்டப்பாட்டே எடுத்திருக்கலாம்.

எச்சரிக்கை 1 - இந்தப்படத்துக்கு யாரும் போயிடாதீங்க....படத்துல கதை இல்ல சீனும் இல்ல.

எச்சரிக்கை 2 - சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதுவதில்லை என என் மீது ரொம்ப நாளாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது,இப்போ இந்த விமர்சனத்தின் மூலம் பலரை எச்சரித்ததன் மூலம் நானும் ஒரு சமூக விழிப்புணர்வு கட்டுரையாளன் ஆகி விட்டேன்...( யாரப்பா அது கல்லெல்லாம் எடுக்கறது..? நோ பேட் வோர்ட்ஸ்..அவ் அவ் )

Thursday, September 02, 2010

சிந்துசமவெளி - நாகரீகமா?அநாகரீகமா? 18+

22 வருடங்களுக்கு முன் ஈரோடு  ரவி தியேட்டரில் (18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை அமைப்பில் நாளை ரிலீஸ் ஆகும் இந்தப்படமும் சேரும்.

இந்தப்படத்தில் 2 வெவ்வேறு துருவங்கள் இணைகின்றன.மிக கவுரவமான எழுத்துக்களுக்கும்,நுண்ணிய மனித உணர்வுகளின் நுட்பமான தருணங்களை நாவலில் வடிப்பவருமான எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்.இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்.இவரது எழுதும் வேகம் அளப்பரியது.22 வருட பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இவரைப்போல் சலிக்காமல் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுபவரை நான் கண்டதில்லை.

இயக்குநர் சாமி உயிர் படம் மூலம் அண்ணி -கொழுந்தன் உறவில் ஏற்படும் ஒரு சிக்கலான தருணம் பற்றி படம்  எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.படத்தில் காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக கூட்டுக்குடும்பங்களிடையே பெரிய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்த வல்ல பாம் (படம்)அது.2வது படம் மிருகம் ஷீட்டிங்க் டைமில் நாயகி பத்மப்ரியாவை பளார் என அறைந்து ஒரு வருட காலம் டைரக்ட் பண்ண தடை பெற்றவர்.


இப்படி 2 வேறு வேறு துருவங்கள் இணையும் இந்தப்படம் என்ன மாதிரி கதை?

ரஷ்ய மொழியில் வெளி வந்த 3 காதல் கதைகள் என்ற நூல் தொகுப்பில் முதல் காதல் என்ற குறு நாவலே ஜெயமோகன் கை வண்ணத்தில் படம் ஆகி இருக்கிறது.
இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஹீரோயின் கேரளத்துப்பார்ட்டி போல.நல்ல கவிதை பேசும் கண்கள்,நடிக்க பல சீன்களில் வாய்ப்பு.இந்தப்படத்துக்கு நல்ல விளம்பரம் ,தியேட்டர்களில் வைக்கப்பட்ட ரிச்சான ஸ்டில்கள் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவர்வதாக இருந்தன.ஒளிப்பதிவு தரமாக இருந்தது.மாமனாரின் அறிமுகக்காட்சியில் கமாண்டோ படத்தில் அர்னால்டு ஸ்வார்செனேகர் விறகு வெட்டி எடுத்துப்போவது போல் (பைசெப்ஸ் காண்பிக்கும் ஆண்மை தெறிக்கும்)சீனை சுட்டு ஏற்கனவே விஜய்காந்த் உளவுத்துறையில் சீன் வைத்திருந்தாலும் சாமி அது பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் அந்த சீனை சுட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா நல்ல ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,அங்காடித்தெரு
,களவாணி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி புதுப்புது டைரக்டர்களை,புது கதையம்சமான படங்களை கோடம்பாக்கம் வரவேற்கத்தயாராகி வரும் இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
  இயக்குநர் சாமி மீது தனிப்பட்ட பகையோ,கருத்து வேற்றுமையோ எனக்கு கிடையாது.நான் இன்னும் படமே பார்க்கவில்லை.ட்ரைலர் மட்டுமே பார்த்தேன்.மேலும் சில தகவல்கள் சினிமாத்துறையில் உள்ள உதவி இயக்குநர்கள் தந்து  உதவினார்கள்.சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் போராடும் பெண்ணிய அமைப்புகள் இந்தப்படம் பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.

Saturday, July 17, 2010

தேவலீலை - சினிமா விமர்சனம் 18+

http://www.thedipaar.com/pictures/resize_20100716105450.jpg 
சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிங்க எல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க.முதல் பாவம் புகழ் அபிலாஷா நடித்த கானகசுந்தரிக்குப்பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் அஜால் குஜால் படம் தான் இந்த தேவலீலை,கதை இல்லாத படம்தான்,ஆனா சீனுக்காக! பார்த்துத்தொலைக்க வேண்டி இருக்கு.

. கதையோட ஒன்லைனை கேட்டா அசந்துடுவீங்க,குருவிடம் போர்க்கலைகளை கற்கும் வில்லங்க சீடன் குருவையே கொல்கிறான்.இறக்கும்போது ஒரு தேவ ரகசியத்தை சொல்லிவிட்டு இறக்கிறார் குரு.அதாகப்பட்டது கிழக்கு,மேற்கு,வடக்கு என 3 திசைகளிலும் 3 ஃபிகர்கள் உண்டு.குறிப்பிட்ட 3 பேரையும் வெர்ஜினிட்டி மைனஸ் செய்தால்(அதாங்க கன்னி கழித்தல்)உலகையே வெல்லும் சக்தி கிடைக்குமாம்.அதற்குத்துணையாக ஒரு சீடனையும் கூட்டிகொள் என்கிறார் குரு.சிஷ்ய வில்லன் 3 பேரை அடைந்தானா ,மேட்டரை முடித்தானா என்பதை வெண் திரையில்(நீலத்திரை)காண்க.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/07/MG_4978.jpg
இந்த மாதிரி டப்பா படத்துக்கு எதெல்லாம் தேவை இல்லை?

1.காஸ்ட்டியூம் டிசைனர்(உடையே இல்லாத படத்திற்கு எதற்கு உடை அலங்கார நிபுணர்)

2.பாடல்கள்,அவுட்டோர் செலவு

3.திரைக்கதை (திரைல சதை தெரிஞ்சா போதாதா?)

நல்ல கலரான பொண்ணுங்க 4 பேரை ரூ 10000 சம்பளத்துக்கு பேசி(கட்டிட வேலைக்கு சித்தாளு மாதிரி)கூட்டிட்டு வந்து அவங்களை அருவிலயோ பாத்ரூம்லயோ அரை மணி நேரம் குளிக்க விடுவது,



ஏய்,ம்ம்,ஆஆ என பேக்கிரவுண்ட் ம்யூசிக் சேர்த்த வேண்டியது ,அட்டகாசமான போஸ்டர் ரெடி பண்ண வேண்டியது, சீன் படம் ரெடி.

படத்தோட டோட்டல் பட்ஜெட்டே 2 லட்சம்தான் இருக்கும்.வசூல் அள்ளிக்குதே.

இதுல என்ன காமெடின்னா இந்தப்படம் ஒரு பீரியட் ஃபிலிம்.400 வருடங்களூக்கு முன்பு நடக்கும் கதை.பாத்திரங்கள் அனைத்தும் செந்தமிழில் பேசி கொல்கிறார்கள்.


A
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdaqqiuStg6aRAHelIxWar73vxNyNgCaYi0zVq9qeK9ra67cj6w4lnEnaQ6doMkE0lrNWGAfR-1-SwzdPPqp7OWLQo_a4C9QtR_mvRiTAJNYA7SfeN5qMI-zP8mRK_LML86omrKm69t6Q/s640/devale+(17).jpg
படத்தின் ஆண்ட்டி ஹீரோ சுத்த விவரம் கெட்டவனாக இருக்கிறான்.(ர்).நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் மந்திர சக்தி உள்ள அவன் பெண்களை அடைய அவ்ர்கள் காதலனாகவோ,கணவனாகவோ உரு மாறி 5 நிமிஷம் கட்டிப்பிடிக்கிறான்,ஆஹா சீன் கன்ஃபர்ம் என்று துள்ளும்போது ஒரிஜினல் உருவத்துக்கு மாறி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறான்.இன்னும் 10 நிமிஷம் அப்படியே அதே தோற்றத்தில் இருந்தால் மேட்டர் ஓவர்.


அடுத்த காமெடி ஒரு முனிவர் காட்டில் தவம் செய்கிறார்,அவருக்கு 75 வயசு இருக்கும்,அவர் மனைவிக்கு 17 வயசாம்.என்ன கொடுமை சார் இது?காமெடிக்குள் காமெடி 17 வயசு என் முனிவர் சொல்லும் பார்ட்டிக்கு 36 வயசு இருக்கும்.


4 ஃபிகர்களில் ஒன்றே ஒன்று தான் தேறுகிறது.இளவரசியாக வருபவர்.அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சலா மாதிரி பார்ட்டி செம கலரு.மத்ததெல்லாம் 10 பைசாவுக்கு தேறாது.படு திராபை.


4 லேடீஸுக்கும் அருவிக்குளியல் உண்டு.400 வருடங்களுக்கு முன்பே சோப் கண்டுபிடித்து விட்டார்களா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjhyzINQng5BgHVAOXY9VVzUBGEP6egnQp4Ze6d1-9fcJLPxmZRvoZ_0ERPKmWOjM2yRRgeGmOrgbubFftJ_8vryG3ybbcqON24b9m3xIhgpOYYgsNjgQ1aCyZ5WgpDyBLMQsV2Vr3WQk/s640/devale+(8).jpg
குரு கூறிய கண்டிசனை சொல்ல மறந்துட்டனே.வில்ல சிஷ்யன் 3 ஃபிகரயும் அவர்கள் சம்மதம் இல்லாமல் தொடக்கூடாது(,சம்மதம் சொன்னாலே காத தூரம் ஓடிக்கொள்ளும்படிதான் அதுங்களும் இருக்கு)


அநேகமாக ஹீரோதான் ப்ரொடியூசராக இருக்கும்.அவர் சவுர்யத்துக்கு வர்றாரு ,போறாரு,பொண்ணுங்களோட குஜாலா இருக்காரு.

இவ்வளவு கேனத்தனமான டைரக்‌ஷனை என் 100 வருஷ(?!) சர்வீஸ்லயே பார்த்ததே இல்லை.ஒளிப்பதிவு மகாமட்டம்.(இந்த மாதிரி படத்துக்கு அதானே முக்கியம்)பிரபாகரன் எனில் நிறைய பேர் காதல் அரங்கம் எனும் வேலுபிரபாகரனின் காதல் கதை கொடுத்த நாத்திகவாதி பிரபாகரன் என்று நினைத்து விட்டனர்.யாரும் ஏமாறி விட வேணாம்.அவர் வேறு ,இவர் வேறு(அப்பாடி,என்னே ஒருசமூக அக்கறை)



படம் பார்த்து வெளியே வ்ந்தவர்கள் திட்டிக்கொண்டே போனார்கள்.ரொம்ப எதிர்பார்த்து வந்திருப்பார்களோ?


சரி விடுங்க அடுத்த படத்துல பார்த்துக்கலாம்(சீட்டாட்டத்துல பணம் இழந்தவன் அடுத்த ஆட்டத்துல விட்டதை பிடிச்சுடுவேன்னு சொல்றதில்லையா?அது மாதிரி,நம்பிக்கைதாங்க வாழ்க்கை.(மெஸேஜ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iWRoFd1qITvZ9F4V7F4aPbpjNlaxuaHcF7a3ZCMGvmf5l7VHUT5o1n4f6e_l0BVnQcH7-DbdjRuwtvEQ6OnPtcuGmtlm4I-iBSteq8y4qfLZq2TeYIH7opLpjxDfL2CLPKN41W0IrrM/s1600/Deva_Leelai173.jpgA

--