Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, December 06, 2012

குமுதம் இதழில் நிகழ்ந்த இலக்கியத்திருட்டு - அம்பலப்படுத்தினார் டாக்டர்

தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன்  இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய்  செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து  மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா? 

ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம். 


 அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா  1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.



இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க  சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.


பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில்  வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார். 



ட்விட்டர் நண்பர் டாக்டர்



சிறுகதை கதிர் 16-31 ஜனவரி  94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய 
இந்த கதை
Views 102
419 days ago
சிறுகதை கதிர் 16-31 ஜனவரி 94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய இந்த கதை






 இன்று வெளியான தீபாவளி மலர் குமுதத்தில்
 போளூர் சி.ரகுபதி நூறு சதம்
 காப்பியடித்து அதே கதை இங்கே:
Views 116
419 days ago
 வெளியான தீபாவளி மலர் குமுதத்தில் போளூர் சி.ரகுபதி நூறு சதம் காப்பியடித்து அதே கதை இங்கே:

Thursday, November 22, 2012

பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள் - சிறுகதை -ஆர். மீனலதா

பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள்

கதை : ஆர். மீனலதா
ஓவியம் : ராமு

ஏம்மா ராதா, நீயுந்தான் கிட்டத் தட்ட இருபத்து இரண்டு வருஷமா ஆபீஸுக்குப் போய் அல்லாடறே? ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துக்கிட்டு சௌகரியமா போகக் கூடாதா?" மாமியார் லக்ஷ்மி வாஞ்சையோடு கேட்டாள்.
அப்படியில்ல பாட்டி; அம்மாவுக்குத் தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கும்பலோடு செகண்ட் க்ளாஸ்ல பேய் கும்பல்ல போனாத்தான் சரிப்படும்" - மூத்தவன் ஆனந்த் சொல்ல, செல்லப் பெண் ரேகாவும், அன்புக் கணவன் சிவராஜனும் சேர்ந்து கலாட்டா பண்ணினார்கள்.
சரி! சரி! செகண்ட் க்ளாஸ் பாஸ் வர்ற இருபத்தைந்தாம் தேதியோட முடியுது. அப்புறம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துடறேன். ஆளாளுக்கு கலாட்டா பண்ண வேணாம்" முற்றுப் புள்ளி வைத்தாள் ராதா.
அன்றிரவு ராதாவுக்கு ஒரே யோசனை.
ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கறேன்னு சொல்லி விட்டாளே தவிர, தேவையா? ஃப்ரெண்ட்ஸோடு கலாய்த்துக் கொண்டும், ஸ்லோகம் சொல்லிக் கொண்டும் போவது போல வருமா? அநாவசியச் செலவு வேற!’
சிவராஜன் ஆரம்பம் முதலே ஃபர்ஸ்ட் க்ளாஸ் பயணிதான். என்ஜினீயரிங் முடித்து, ஆனந்த் இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்வது அலுவலகப் பேருந்தில். மும்பை லோக்கல் ட்ரெயின் நெரிசலுக்குப் பயந்து, கல்லூரிக்கு ரேகா செல்வதும் மாநகர பஸ்ஸில்தான்.
முன்பிருந்ததை விட குடும்ப நிலைமை இப்போது ஓரளவு ஓகேதான். சம்பளமும் கூட வருகிறது என்றாலும் யோசனையாக இருந்தது. சரி, எதற்கும் முதல்ல ஒரு மாதம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கலாம். போகப் போக பார்த்துக்கலாம். இல்லன்னா வீட்டுல இருக்கிறவங்க நச்சு தாங்காதுஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுப்பதென்று முடிவெடுத்தாள் ராதா.
என்னம்மா கண்ணு! இன்னிக்குத் தேதி 25. நினைவிருக்கில்லையா?" கிசுகிசுத்த சிவராஜனிடம்,
ம்...ம்" என்றாள்.

அலுவலக வேலை முடிந்து பாஸ் எடுக்க வருகையில், மைல் கணக்கில் க்யூ. மறுநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி வீடு திரும்பியவளிடம் லக்ஷ்மி கேட்டாள், பாஸ் வாங்கியாச்சா?"
இல்லம்மா, இன்னைக்கு க்யூ நிறைய. நாளைக்குக் காலையில கண்டிப்பா வாங்கிடறேன்" என்றவாறே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
மறுநாள் வீட்டினர் மீண்டும் நினைவுபடுத்த, ஞாபகமாக தமதுமுதல்முதல் வகுப்பு பாஸை வாங்கி கம்பீரமாக ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறினாள். கசகசவென இல்லாமல், சற்றே சௌகரியமாக நின்று கொண்டு போக முடிந்ததென்றாலும் செகண்ட் க்ளாஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் மிஸ் ஆனது வருத்தமாகத்தான் இருந்தது.
அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக, மாமியார் லக்ஷ்மி, கணவர் மற்றும் ஆனந்த், ரேகா எல்லோரிடமும் பாஸ் எடுத்த விவரத்தைத் தெரிவித்தாள்.
சாப்பாட்டு நேரத்தில், தமது நெருங்கிய அலுவலக நண்பிகளிடம் இதைப் பகிர்ந்து கொண்டாள். ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸாச்சே!
மாலை மூன்று மணியளவில், ராதா, சிவராஜனுக்கு ஃபோன் செய்து, தனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கும் செய்தியை சந்தோஷமாகச் சொன்னாள்.
கங்கிராட்ஸ்" என வாழ்த்தியவனிடம், நான் கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பலாம்னு இருக்கேன். முடிஞ்சா நீங்களும் வாங்களேன். தாதர் ஸ்டேஷனில் மீட் பண்ணி, இரண்டு பேரும் அந்தேரிக்குச் சேர்ந்தே போகலாம்" என்றாள்.
எனக்கு வேலை எக்கச்சக்கமாy இருக்கு. நாளைக்குச் சேர்ந்து போகலாம் ஓகே?" என்று ஃபோனை வைத்தான் சிவராஜன்.
சிவராஜனிடம் சீக்கிரம் வீடு திரும்புவதாகச் சொல்லிவிட்டாளே தவிர, முக்கியமான திடீர் மீட்டிங் காரணமாக, ராதாவால் கிளம்ப முடியவில்லை. திரும்பவும் சிவராஜனிடம் பேசவும் நேரமில்லை.
சிவராஜனுக்கு அன்றைக்கென்று பார்த்து, அலுவலகத்தில் நிறைய வேலை. ராதாவுடன் சேர்ந்து போக முடியவில்லை. என்ன செய்வது? ப்ரைவேட் கம்பெனியாச்சே. அவசர அவசரமாக வேலையை முடித்து சர்ச் கேட் ஸ்டேஷன் வருகையில் ஆறு மணியாகி விட்டது. இலேசாக வானம் இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது. கூட்டத்துக்கு நடுவே அடித்துப் பிடித்து சர்ச்கேட் - போரிவிலி ட்ரெயினில் ஏறினான். பிறகு தான் தெரிந்தது ஏதோ யோசனையில் ஃபர்ஸ்ட் க்ளாஸுக்கு அடுத்து இருந்த செகண்ட் க்ளாஸில் ஏறியது. ‘பரவாயில்லை. ஒருநாள் இதில் பயணம் செய்தால் குறைந்து போக மாட்டோம்என்று நினைத்துக் கொண்டான். மழை ஆரம்பமானது.
மெதுவாக சாந்தா க்ரூஸ் ஸ்டேஷனை நெருங்குகையில், ‘டமால்என்ற சத்தம். காதுகள் அடைத்துப் போயின. வண்டி நின்று போனது. ஒரே புகைமயம்.
பாம்! பாம்!" உடீமாரோ! ஜல்தி!" (பாம் வெடித்து விட்டது. கீழே குதியுங்கள், சீக்கிரம்) என்று கத்தல். பாம் வெடித்தது முதல் வகுப்புப் பெட்டியில். சிவராஜனும், தான் தினமும் வணங்கும் சாயிபாபாவை நினைத்துக் குதித்தான்.
நல்லவேளை ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறவில்லை. ராதா முதலிலேயே வீட்டுக்குப் போயிருப்பாள் என்ற சமாதானத்துடன் மற்றவர்களுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். வழியில் கண்ட அவலங்கள் நெஞ்சைப் பிழிந்தன. உடன் நடந்து வந்த பயணி ஒருவர் மயங்கி விழ, அவருக்கு உதவி செய்து, பிறகு வெளியே வந்து டாக்ஸி பிடித்து வீடு வருகையில் இரவு மணி ஒன்பது.
லக்ஷ்மி, ஆனந்த், ரேகா மூவரும் பேயறைந்த மாதிரி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள் . ராதா எங்கே?
ராதா! ராதா! வரலையா?" பதற்றத்துடன் உள்ளே சென்றான் சிவராஜன். சின்னத் திரையில், ‘தொடர் பாம் வெடித்ததினால் பயணிகள் அதுவும் முதல் வகுப்புப் பயணிகள் மரணம்; ரயில் பெட்டிகள் சேதம்என டீ.வி.யில் அவலக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. எல்லோரும் உறைந்து போனார்கள். ராதாவை தொடர்புகொள்ள முடிய வில்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

‘ஒருவேளை நாம வந்த லோகல் அல்லது அடுத்த லோகல் ஃபர்ஸ்ட் க்ளாஸில் வந்திருப்பாளோ? அநாவசியமாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினோமே என்று மனத்துக்குள்ளேயே மருகினார்கள். சிவராஜன்சாயிராம்என்றவாறே கண்களை மூடி அமர்ந்து விட்டான்.
நான் வேணா போய்ப் பார்க்கிறேன்" என்று கிளம்பிய ஆனந்தை நிறுத்தினாள் லக்ஷ்மி.
மழைல நீ போய்த் தனியா மாட்டிக்காதே" என்று சொல்கையில், கரண்ட் கட்டானது. யாரிடம் கேட்க, என்ன செய்வது என்று புரியாமல், தவிப்புடன் உட்கார்ந்திருந்தனர்.
இரவு 10.25 மணிக்கு கரண்ட் வர, ராதா இன்னும் வரலையா?" என்றவாறே எதிர் வீட்டு சீதாவும் ரவியும் வந்தனர்.
ஆனந்த்! நீயும் அங்கிளும் சேர்ந்து போய்ப் பாருங்க. இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா எப்படி?" அதட்டினாள் சீதா.
யாருக்கும் வார்த்தைகளே வரவில்லை.
வாடா ஆனந்த்! நாம கிளம்பலாம். சீதா, லக்ஷ்மி மாமியைப் பார்த்துக்கோ. ரேகா, அப்பாவைக் கவனிச்சுக்கோ" கிடுகிடுவென உத்தரவிட்டார் ரவி.
ரவியும், ஆனந்தும் கிளம்பி நாலு அடி எடுத்து வைத்திருப்பார்கள். அப்போது ஸ்கூட்டர் ஒன்று வேகமாக வந்து நின்றது. ராதாவின் அலுவலக ப்யூன் வந்திறங்கினான்.
ராதா மேடம்" என்று அவன் கூறியவுடன் ராதாவுக்கு என்ன ஆச்சு?" என்று பதறினார்கள்.
கவலைப்படாதீங்க சார். மேடமுக்கு ஒண்ணும் ஆகலை. முக்கியமான மீட்டிங் திடீர்னு முடிய நேரமாயிடுச்சு. புறப்படறப்போ, பாம் நியூஸ் வரவே ரொம்பவே பதறிட்டாங்க. எல்லா ஸ்டாஃபும் இப்போ ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சு. உங்ககிட்ட விவரம் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாங்க. மேடம் செல்ஃபோனில் சார்ஜ் இல்லையாம். வீட்டுக்கு ஃபோன் செய்தால்டெட்டோன் கேட்குதாம். ட்ராஃபிக் நிறைய இருந்ததால் நான் வருவதற்கும் நேரம் ஆகிவிட்டது. ஸாரி சார்!"
ஏதேதோ உணர்ச்சிகள் மோத மலைத்துப் போய் நின்ற சிவராஜனிடம், பயப்படாதீங்க ஸார், நாமெல்லாம் இங்க ஃபீனிக்ஸ் பறவைங்க மாதிரி. எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலிருந்தும், உத்வேகத்துடன் மீண்டு விடுவோம்" என்று சொல்லி புறப்படத் தயாரானான்.
தாங்க்யூ! தாங்க்யூ வெரி மச்!" என்றவாறு கண்களில் கண்ணீர் அருவி போலக் கொட்ட, சிவராஜன் ஓடிச் சென்று, அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
உன் பேர் என்னப்பா?"
சாயிராம்!" என பதில் வந்தது.

 நன்றி - கல்கி 

அபார்ட்மென்ட் எண் : ஈ505 - சுஜாதா தேசிகன் - சிறுகதை

அபார்ட்மென்ட் எண் : 505

சுஜாதா தேசிகன்

FM க்ருஷ் பெங்களூரில் வீடு வாங்கவில்லை என்றால் இந்தக் கதைக்குக் கூட தகுதியற்றவராக இருந்திருப்பார்.
சென்னை அண்ணாசாலை நடுராத்திரி கியூவில் நின்று, விசா கிடைத்தால் திருப்பதிக்கு குடும்பத்தோடு வருகிறேன் என்று வேண்டிக்கொண்டு, திருப்பதி பெருமாள் கருணையால் அமெரிக்கா சென்று முதல் காரியமாக பர்முடாவுக்கு மாறியதோடு அதற்கு ஏற்றாற்போல தம் பெயரையும் சுருக்கி க்ருஷ் என்று மாற்றிக்கொண்ட பல கிருஷ்ணமூர்த்திகளில் ஒருவர். ஃப்ரீமான்ட் பகுதியில் இருக்கிறார். அதனால் FM.
ஃபோனில், யாரு கிச்சாமியா?" என்று கேட்டுப்பாருங்கள்.
க்ருஷ்" என்று பதில் வரும்.
தற்போது இணையத்தில் FM க்ருஷ் என்ற பெயரில் அச்சுப்பிச்சு கவிதைகளை எழுதிக்கொண்டு இருப்பவர் இவர்தான். வருடத்துக்கு ஒருமுறை டிசம்பர் சீசனுக்கு இந்தியா வந்து அம்பிகா அப்பளம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, கரப்பை பார்த்து பயந்து, ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு போகும் க்ருஷை அவருடைய மாமனார் ஸ்கைப்பில் தோன்றி உங்களோடு கொஞ்சம் பேசணும் மாப்ளே" என்றார்.
சொல்லுங்கோ"
அமெரிக்காவில் வேலை எல்லாம் எப்படி இருக்கு?"
இஸ் கோயிங் வெல்."
போன வார எக்னாமிக் டைம்ஸில், அமெரிக்காவில் இந்த வருஷம் .டி.யில நிறைய பேர் இந்தியா திரும்ப வந்துட்டதா போட்டிருக்கான்..."
இருக்கலாம்... பட் டோன்ட் ஹாவ் பிராப்ளம்."
அப்படியே இந்தியா வந்தாலும்... உங்களுக்கு பிராப்ளம் இல்லை. பெங்களூரில் இருக்கும் பார்க் எல்லாம் இப்ப டெக் பார்க்காகிவிட்டது."
கூல்."
இந்தியா வந்தால் உங்களுக்கு பெங்களூர்தான் சௌகரியப்படும், அதனால இங்கே ஒரு பிராபர்ட்டி வாங்கிடுங்கோ."
குட் ஐடியா, பட்டோன்ட் ஹாவ் பிளான்ஸ் டூ இன்வஸ்ட் இன் இந்தியா. ஐயம் வெயிட்டிங் ஃபார் மை கிரீன் கார்ட்."
உடனே இப்படி பதில் சொல்லாதீங்கோ, கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கோ."
அதற்குப் பிறகு, தன் பெண் சுமதியுடன் ஒரு மணி நேரம் சம்பாஷணையின் இடையில், மாப்பிள்ளையை யோசிக்கச் சொல்லு. எழுபது லட்சத்தில அமக்களமா த்ரீ பெட்ரூம் பிளாட். ஸ்விம்மிங் பூல், ஜிம், கிளப் ஹவுஸ்... இன்னும் என்னென்னமோ சொல்றான். டாலர் பேமென்ட்னா இன்னும் கம்மியாம். அவர்ட்ட நீ கொஞ்சம் பேசிப்பார்."
மாமனார் பேசிய ஒரு மாதத்தில் லேயவுட், பிளான் என்று இமெயில் அனுப்பப்பட்டு பெங்களூர் மூலையில் தும்பரஹல்லி பக்கம் இருபது ஏக்கரில் எட்நூறு வீடுகளில் ஒன்றை பிளாக் செய்வதும் க்ருஷின் அந்த வருட பெங்களூர் வெக்கேஷனும் ஒன்றாக அமைந்தது.
ஜெட் லாக் காரணமாக, நடுராத்திரி டி.வி.யில் சுதா சந்திரன் ஆஞ்சநேயர் டாலர் விற்பதை ஆர்வமாகப் பார்க்கும் போது...
என்ன மாப்ளே தூக்கம் வரலையா? நாளைக்கு பத்து மணிக்கு உங்க வீட்டைப் போய் பார்த்துட்டு வந்துடலாம்."
இன்னும் கட்டவே இல்லையே..."
மாடல் ஃபிளாட் இருக்கு, உங்க பிளாக் எங்கே எப்படி இருக்குனு பார்த்தா உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்..."

காலை சிட்டி டாக்ஸி அவர்களை ஏற்றிக்கொண்டு அவுட்டர் ரிங் ரோடு வழியாக வரத்தூர் செல்லும் சாலையில் தும்பரஹல்லி என்று வலது பக்கம் சின்னதாக போர்டு போட்டிருக்க அதில் போன போது வழியில் இரண்டு பழைய சமாதி; ஒன்றின் மீது நாய் படுத்துக்கொண்டு இருந்தது. அரை கிலோ மீட்டர் உள்ளே சென்ற போது முழுக்க தென்னை மரங்கள் அடர்ந்து இருக்க கோகோநட் குரூவ் ஹாபிடெட்" என்று பெரிதாக எழுதியிருந்தது.
கதவைத் திறந்த செக்யூரிட்டி திரும்பிப் போகும் போது, ‘பத்து ரூபாய் கொடுத்துட்டுப் போங்கஎன்பது மாதிரி ஒரு சலாம் போட, கார் உள்ளே நுழைந்தது. மாடல் அபார்ட்மென்ட் முன்னால், தற்காலிக அலுவலகத்தில் டை கட்டிக்கொண்டு இருந்தவர், வெல்கம் சார்" என்றார்.
அம் க்ருஷ், ஃபிரம் யூஸ்... மை வைஃப் சுமதி"
வெல்கம் சார்... வெல்கம் மேடம்" என்றது டை.
இரண்டு நியூஸ் பேப்பர் அளவு வரை படத்தில் எங்கே என்ன வரப்போகிறது என்று இருபது நிமிஷத்தில் கட்டி முடித்தார்.
க்ருஷ் பொறுமை இழந்து... கேன் யூ ஷோ வேர் அவர் அப்பார்ட்மென்ட் 505 இஸ் இன் திஸ்?"
வாங்க சார் லெட்ஸ் கோ" என்று டை அழைத்துக் கொண்டு போனார். சில இடங் களில் தென்னை மரங்கள் மார்க் செய்யப்பட்டு இருந்தன.
வை ஹேவ் யூ மார்க் ஆல் தீஸ்?"
சார் இங்கேதான் கிளப் ஹவுஸ் வரப் போகிறது" என்றார்.
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, இங்கே தான் சார் -பிளாக்" என்றார். ஒரு நாவல் பழ மரமும், நிறைய தென்னை மரங்களும் இருந்தன.
மாமனார், உங்க பிளாட் ஈஸ்ட் ஃபேசிங், பால்கனி வெஸ்ட் ஃபேசிங். நான் புக் செய்யும் போதே பார்த்துட்டேன். எதிரே பாருங்க கோயில் கூட இருக்கு. ஹால் பால்கனியிலிருந்து கார்த்தாலே எழுந்தா பெருமாளை சேவிக்கலாம்" என்றார்.
நாவல் பழ மரத்தின் கிளையில் தேன்கூடு இருப்பதைப் பார்த்து, நாம உள்ளே போய் பேசலாம்" என்றார் க்ருஷ்.
வாட் ஆர் நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ்" என்று க்ருஷ் கேட்க மார்கெட்டிங் ஆசாமி ஒரு பிரிண்ட் செய்த காகிதத்தை எடுத்துக் கொடுக்க அதில் ஸ்டேஜ் படி எப்படி பணம் கட்ட வேண்டும் என்று விளக்க... க்ருஷ் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.
எனி டவுட்ஸ்?" என்று கேட்க,
பிராஜெக்ட் எப்ப முடியும்?"
இன்னும் இரண்டு வருஷம்... 2009 எண்ட். நீங்க போசஷன் எடுத்துக்கலாம்."
க்ருஷ் அமெரிக்கா சென்ற பிறகு பெங்களூர் ரியல் எஸ்டேட் சரிந்து 2009-ல் முடிக்க வேண்டிய பிராஜெக்ட் 2010 முழுக்க ஆவுது ஆவுது" என்று இழுத் தடித்து கடைசியாக 2010 டிசம்பரில் முடித்தார்கள். இன்னும் பால்கனி பூச்சு வேலை பாக்கியிருந்தது. முழுமையாகக் கட்டி முடிக்காத வீட்டில் சிலர் பிடிவாதமாக பால்கனியில் பனியன் அண்டர்வேர் காயப் போட்டிருந்தார்கள்.
வீட்டை வாடகைக்கு விடலாமா என்று யோசிக்கும் போது, க்ருஷ் வேலை செய்த கம்பெனி நஷ்டத்தில் இயங்க, உங்களுக்கு உள்ள எக்ஸ்பீரியன்ஸுக்கு, உங்களைக் கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க. வீடோ இங்கே இருக்கு, பேசாம வந்துடுங்களேன்," என்றார் ஸ்கைப் மாமனார். பேய் ஏரியா தமிழ்ச் சங்கம் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, அந்த மாசம்தென்றல்பத்திரிகையில் ஒரு பக்கத்துக்கு இவருடைய கவிதை இரண்டையும் பிரசுரித்து க்ருஷ்ஷை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு மாசத்தில் மாமனார், வீட்டு மர வேலைகளை முடித்து, கண்திருஷ்டி விநாயகர் படத்தையும் வாங்கி மாட்டி விட்டார்.
க்ருஷ் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்த அந்த வாரமே கிரஹப்பிரவேசம் முடிந்து, பக்கத்து பிளாட் கவுடாவுடன் நண்பராகி, அவர் உதவியுடன் மார்த்தஹல்லியில் இருக்கும் கடையில் வீட்டுக்கு வேண்டிய எல்லாம் வாங்கி அடுக்கிவிட்டார்கள்.

ஒரு திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்குக் கிளம்பும்போது விநோத சத்தம் பால்கனி எதிரில் இருக்கும் கோயிலிலிருந்து வந்தது. பார்த்தபோது, முழுசாக ஒரு சேவலை தலைகீழே பிடித்து அருவாளால் வெட்ட, ரத்தம் பீச்சி வெட்டியவரின் மூஞ்சியில் அடிக்க க்ருஷுக்கு ஒரு நிமிஷம் அடிவயிற்றை ஏதோ செய்தது. கோயிலைச் சுற்றி நிறைய ஆடுகளும் கட்டப்பட்டிருந்தன.
அன்று மாலை அசோஸியேஷனுக்குச் சென்று இதைப் பற்றிப் புகார் கொடுக்க, எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. பேசாம விட்டுடுங்க" என்று அட்வைஸ் கொடுத்தார்கள்.
கவுடா அங்கிள் இது வனகாளி கோயில். முன்னாடி இந்த இடம் காடா இருந்தப்ப அமாவாசை அன்னிக்கு மட்டும் வெட்டுவாங்களாம். விடுங்க.. கொஞ்ச நாள்ல சரியாகிவிடும்... கவுன்சிலர் கிட்ட பேசறேன்" என்றார்.
கார்த்தாலே சுப்ரபாதம் கேட்கும் என்று வாங்கினால் இப்படி ஆகிவிட்டது" என்று மாமனார் வருத்தப்பட்டார்.
ஒரு வாரத்துக்கு அப்பார்ட்மென்ட் கூகிள் குழுமத்தில் இதைப் பற்றி விவாதித்து, அந்த ஞாயிற்றுக்கிழமை அசோஸியேஷன் மீட்டிங்கில் இதைப் பற்றிக் கொஞ்சம் பேசினார்கள். அதிலிருந்த ஒருவர் மிருகவதை அமைப்புக்கு எழுதிப் போட அவர்கள் போலீஸுடன் வந்து கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் குடிசை மக்களுடன் பேசினார்கள். அசோஸியேஷன் சார்பில் லெட்டர் ஒன்று எழுதி அந்தத் தொகுதி எம்.எல்..விடம் கொடுக்க, அங்கே ஏதாவது நியூஸ் கிடைக்குமா என்று நின்றுகொண்டு இருந்த போட்டோகிராபர், போட்டோ எடுத்துவிட்டு என்ன விசேஷம்?" என்று க்ருஷிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள, அடுத்த நாள்பெங்களூர் மிரர்மூன்றாம் பக்கம்காட்டுமிராண்டிகள்என்ற தலைப்பில் பெட்டிச் செய்தியாக க்ருஷின் போட்டோவுடன் பிரசுரித்திருந்தது.
அதற்கு அடுத்த நாள் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர், நாம எப்படி அவங்களைக் காட்டுமிராண்டிகள்னு சொல்லலாம்? நாமும் கொசு மருந்து அடிக்கிறோம், கோத்ரெஜ் கம்பெனியைக் கூப்பிட்டு கரப்பு மருந்து வைக்கிறோம்... தேனீக்கள் எல்லாம் அருகிய இனம்னு அரசே அறிவிச்சிருக்கற நிலைல காலனில இருக்கற மரங்கள்ல தேன்கூடுகளை அழிக்கறோம். ஏன் அந்த அப்பார்ட்மென்டில் கூட அழித்திருப்பார்கள்" என்று வக்கணையா வாதம் செய்தார். அடுத்த நாள் போலீஸ், அப்பார்ட்மென்டுக்கு வந்து விசாரித்தது. உங்க போட்டோதானே சார் பேப்பர்ல வந்திருந்தது?" என்று க்ருஷை அடையாளம் கண்டுகொண்டார் இன்ஸ்பெக்டர். ஃபிளாட் நோட்டீஸ் போர்ட்டில் யாரும் தேனீக்களை அழிக்கக் கூடாது" என்று அறிவிப்புப் போட சிபாரிசு செய்தார்.
நவராத்திரிக்கு மாமனார் வந்தவுடன் சுமதி, அப்பா இவருக்கு இந்த வீடு துளி கூட பிடிக்கலை. கசாப்புக் கடை முன்னாடி வீடு என்று சொல்லிண்டு இருக்கார். பேசாம வாடகைக்கு வேற இடத்துக்கு போகலாம் என்று சொல்லிண்டு இருக்கார்... "
சரி...பார்க்கலாம்."
அடுத்த வாரம் கோயில் களைகட்டியது. ஒரே மேளதாளம் என்று அமர்க்களப்பட்டது.
இன்னிக்கு என்னத்தை வெட்டப் போகிறார்களோ என்று அலுத்துக்கொள்ளும் போதே, விஷயம் தெரியுமா க்ருஷ்?" என்று கவுடா அங்கிள் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்.
என்ன?"
நேத்து ராத்திரி திடீர்னு காளிக்குப் பக்கத்துலசஷ்யஹரி விநாயகர்தோன்றியிருக்கார். அதனால ஊரே கூடியிருக்கு."
திருவிழாவுக்கு அந்த ஃபிளாட்டில் இருப்பவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது.
புதுப் பிள்ளையாரைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று மொத்த அப்பார்ட்மென்டும் அங்கே குழுமி இருக்க, அந்தத் தொகுதி எம்.எல்.. எல்லோருக்கும்கேசரி பாத்விநியோகித்துக் கொண்டு இருந்தார்.
திருவிழா முடிந்து அடுத்த அமாவாசை காலை க்ருஷுக்கு ஒரே ஆச்சர்யம்; கோழி, ஆடுகளுக்குப் பதில் பூசாரி இளநீர் வெட்டிக் கொண்டு இருந்தார். கவுடாவிடம் கேட்டதற்குசஷ்யஹரிஎன்றால் கன்னடத்தில் வெஜிடேரியன் என்றார்.
அப்பா, விஷயம் தெரியுமா? பால்கனி கோயில்ல ஆடு, கோழி வெட்றதை விட்டுட்டாங்க" என்று சுமதி உடனே போன் செய்தாள்.
அப்படியா?"
பிள்ளையார் வந்த வேளை!"
சஷ்யஹரி பிள்ளை யார்னு சொல்லு, கிட்டத்தட்ட எட்டாயிரம் செலவாச்சு."
என்னப்பா சொல்றீங்க? ஏதாவது வேண்டுதலா?"
முள்ளை முள்ளால தான் எடுப்பது போல, நான் சாமியை சாமியால எடுத்தேன். காவேரி எம்போரியத்துல பிள்ளையார் வாங்கி... ‘சஷ்யஹரிவிநாயகர்னு நாந்தானே பேர் பொறிச்சேன்" என்றார்.


 நன்றி - கல்கி