Showing posts with label சாருநிவேதிதா. Show all posts
Showing posts with label சாருநிவேதிதா. Show all posts

Friday, October 26, 2012

சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து


கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்.  ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது.  நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம்.  ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா?  இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்?  ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள்.   அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.



என் மீது பகைமை கொண்டவர்கள் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவன் நான்.  எனக்கு வரும் வசைக் கடிதங்களைப் படிப்பதிலிருந்துதான் என் நாளே துவங்குகிறது.  முதல் வார்த்தையைப் படித்ததுமே delete செய்து விடுவேன் என்றாலும் இவ்வளவு நீளமான கடிதத்தை கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் மட்டுமே எஞ்சும் எனக்கு.  இவர்கள் என் மீது ஏன் இத்தனை கோபம் கொண்டு அசிங்கமாகத் திட்டுகிறார்கள் என்றும் புரியாது.  என் அம்மாவிலிருந்து ஆரம்பித்து என் மனைவி, என் பிறப்புறுப்பு வரை திட்டுவார்கள்.  பரிதாப உணர்ச்சியே மிகும்.



ஆனால் ஒரு கட்டத்தில் இது வசைக் கடிதங்கள் என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேறொரு கிரிமினல் தன்மையை அடைந்தது.  எனது நண்பர்களின் அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்பது அந்த நலம் விரும்பிகளின் விருப்பம்.  எனது வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சில பெண்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  (உங்கள் மனைவியை இந்த வாசகர் வட்டத்திலிருந்து விலகச் சொல்லுங்கள், அவர்களெல்லாம் கெட்டப் பசங்கள்… இன்னும் நீங்கள் யாரும் கற்பனையே செய்ய முடியாத பயங்கரங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்கள்).  இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அந்தப் பெண்களின் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் காரணம்?  இதற்கெல்லாம் நான் சும்மாவே இருந்தேன்.  ஏனென்றால், என்னுடைய புகார்ப் பெட்டி, கடவுள் மட்டுமே.


சுமார் ஒரு பத்து ப்ளாகர்கள் இருப்பார்கள்.  நான் என்ன எழுதினாலும் அதை அப்படியே நகல் எடுத்து வரிக்கு வரி என்னைத் திட்டி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி தன் ப்ளாகில் எழுதி விடுவார்கள்.  இதற்காக அவர்கள் மணிக் கணக்கில் செலவிட்டதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம்.  இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள்.  இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.


நேர் வாழ்க்கையிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ இவர்கள் இப்படி ஸைக்கோ வேலைகள் செய்ய முடியாது.  உடனடியாகத் தூக்கி உள்ளே தள்ளி விடுவார்கள்.  இணைய வெளி கொடுக்கும் எல்லையில்லாத சுதந்திரமே இவர்களை இப்படி ஸைக்கோக்களாக்கி விடுகிறது.  தகுதியில்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும்.  அதனால்தான் நான் எப்போதும் சுதந்திரம் பற்றிப் பேசும்போதெல்லாம் பொறுப்பு (responsibility) பற்றியும் பேசி வருகிறேன்.  பொறுப்பற்ற சுதந்திரம் இப்படித்தான் பொறுக்கித்தனமாக வெளிப்படும்.



ஊடக வெளி தரும் எல்லையற்ற சுதந்திரத்தினால் ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பவன் கூடத் தன்னை சே குவேராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.  இலங்கைத் தமிழர் ஆதரவு, கருணாநிதி-ஜெயலலிதா எதிர்ப்பு, தலித் ஆதரவு, பிராமண எதிர்ப்பு (பிராமண என்று எழுதக் கூடாது; பார்ப்பன என்று எழுத வேண்டும்), தமிழ்ப் பாசம் போன்ற templates-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டால் முடிந்தது கதை – நீங்கள் ஒரு சே குவேரா.  எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; யாரையும் திட்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கேட்க நாதி இல்லை.  இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் “உன்னை நடுத்தெருவில் வைத்து ரேப் பண்ண வேண்டும்” என்று சொல்லத் துணிவானா?



இந்தப் பொறுக்கித்தனத்துக்கு எப்போது தீர்வு வரும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.  இன்று சின்மயி அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  நான் சின்மயி ஆதரவாளன் அல்ல.  நேற்று வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது.  நான் தமிழ் சினிமாப் பாடல் கேட்பவன் அல்ல.  ஆனால் அவருடைய கருத்துக்களுக்காக அவரை உளவியல் சித்ரவதை செய்த பொறுக்கிகள் தண்டிக்கப் பட வேண்டும்.  சின்மயி சொன்னது என்ன?  சின்மயி என்ன அருந்ததி ராயா?  அருந்ததி ராயைப் போலவே எல்லாப் பெண்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி இல்லாவிட்டால் பொறுக்கித்தனம் செய்வதும் ஃபாஸிஸம் அல்லவா?



மேலும், இப்படி இணையத்தில் சே குவேரா வேஷம் போடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் எலிக்குஞ்சாக இருக்கிறார்கள்?  போலீஸ் என்றதுமே தன் ஒரு வயதுக் குழந்தையைக் காட்டி, “என் குழந்தைக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று காலில் விழுகிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?


என்னை இந்தப் பொறுக்கிகள் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதினால் அந்தப் பத்திரிகைக்கு நூறு பெயர்களில் என்னைப் பற்றி அவதூறாகக் கடிதம் எழுதுகிறார்கள்.  என் மொழிபெயர்ப்பாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு வாரம் முன்னால் குழந்தை பிறந்திருக்கிறது.  அந்தக் குழந்தையைத் திட்டி ட்வீட் போட்டிருக்கிறான் ஒரு பொறுக்கி.  அவனும் ஃபேஸ்புக்கில் ஒரு ஹீரோ தான்.  அவனையும் 5000 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  என்னை இவர்கள் செய்யும் டார்ச்சருக்கு வேறு வேறு ஆளாக இருந்தால் தற்கொலைதான் செய்து கொள்வான். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.   நானோ வெளியில் கூட சொல்லிக் கொள்வதில்லை.  ஏனென்றால், இவர்களின் செயல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஒரே நம்பிக்கைதான் காரணம்.



இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மீது பொறுக்கித்தனமான அவதூறுகளை எழுதிய ஒரு இணைய ”சே குவேரா”  இன்று போலீஸிடம் மாட்டிக் கொண்டவர்களை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.  சக பதிவரை ஒருமுறை கொலை செய்ய முயன்றவர் இவர்.  இவர் போலீஸிடம் மாட்டவில்லை.  அதனால் இவர் சே குவேரா.  மாட்டிக் கொண்டவர்கள் மாட்டிக் கொண்டு விட்டதால் பொறுக்கிகள்.  இல்லை?


சமூகப் பொதுவெளியில் நாம் நாகரீகம் தவறினால் அடுத்த கணமே பொளேர் பொளேர் என்று தர்ம அடி கிடைக்கும்.  போலீஸ் வரும் வரையெல்லாம் பொதுமக்கள் காத்திருக்க மாட்டார்கள்.  இணைய வெளியில் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


பொதுவாக, இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தேசம் அல்ல.  தினந்தோறும் வரும் கற்பழிப்புச் சம்பவங்களைப் பார்த்தாலே அது தெரியும்.  நம் தமிழ் சினிமாவும் ஆண் வர்க்கப் பொறுக்கித்தனத்தையே பிரதானப் படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றிரண்டு பேர் தான் பங்கேற்க முன்வருகிறார்கள்.  அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றால் இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதையும் மீறி இத்தளங்களில் செயல்படும் ஒருசில பெண்கள் இந்த இணைய தாதாக்களிடம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  தாதாக்களுக்கு மாமூல் கொடுப்போம் இல்லையா, அது போல இந்த இணைய தாதாக்களுக்கு லைக் போடுவது, retweet போடுவது, follow செய்வது இதெல்லாம்தான் மாமூல்.  இந்த மாமூலைக் கொடுத்தால்தான் அந்தப் பெண்களைப் பற்றி இணைய தாதாக்கள் அசிங்கமாக எழுத மாட்டார்கள்.  இந்த மாமூலை சின்மயி கொடுக்கத் தவறி விட்டார்.  அதனால்தான் அவர் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்ரவதை.



சுதந்திரம் என்பது பொறுக்கித்தனம் இல்லை;  பொறுப்புணர்வு என்பதை இணைய தாதாக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்.  தன் குழந்தையைக் காட்டி மன்னிப்புக் கேட்டால், இந்தியாவில் இருக்கும் அத்தனை சிறைக் கைதிகளுக்கும் கூட மன்னிப்பு வழங்கி விடலாம்.  ஏனென்றால், அவர்கள் எல்லோருக்குமே குழந்தைகள் இருப்பார்கள்.  இந்தியாவில் மிகச் சுலபமாக உற்பத்தியாவது குழந்தைகள்தானே?

நன்றி - சாரு ஆன் லைன்



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html





டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


Monday, July 23, 2012

சாருநிவேதிதா-வின் சிறுகதை -முள்



இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன்
சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா
இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில்
நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகுமாதிரி. சில மீன்களில் சதைக்கு
உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம்
இந்த வகையறாதான்.




ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்… கோலா மீன். இதுக்கும் நடுமுள்
உண்டு. அதோடு பாதி பாகம் சதையோடு முள் கலந்தும், பாதி வெறும் சதையாகவும்
இருக்கும். இந்தக் கோலா வருஷம் பூரா கிடைத்துக் கொண்டிருக்காது. வைகாசி, ஆனி
மாசங்களில் மட்டும்தான் கோலா.. ஆடி வந்தாலே கோலா குறைய ஆரம்பித்து விடும்.
இதுக்குக்கூட ஒரு சொல் வழக்கு… ‘ஆடி மாசம் வந்தா கோலா ஆத்தா வூட்டுக்குப்
போய்டும்.’





கோலா மீன் பிடிப்பதே ஒரு அலாதி… அதைப் பார்க்க வேண்டுமென்று கட்டு மரத்தில்
ஒரு முறை போயிருக்கிறேன்… கோலா பிடிக்க லாஞ்சில் போவது கிடையாது… காரணம், கோலா
பிடிக்க குறைந்தபட்சம் இருபது மைலிலிருந்து அறுபது மைல் வரையிலும் கூட போவது
உண்டு… லாஞ்ச் என்றால் இத்தனை மைல்கள் போக டீஸல் செலவு…?






ஆறு அல்லது ஏழு பேர் ஒரு கட்டுமரத்தில் காலை மூன்று மணிக்குக் கிளம்பினார்கள்
என்றால் வருவதற்கு இரண்டு நாள் கூட ஆகும்! ஒரு தடவைக்கு மூணாயிரத்திலிருந்து
இருபதாயிரம் மீன்கள் வரை அகப்படும். கட்டுமரத்திலேயே தாழை, புல் தழை
இவற்றையும் எடுத்து வந்து விடுவார்கள்… இதை ஒரு மரச்சதுரத்தில்
பிணைத்துக்கட்டி ஒரு சின்ன பசுந்தழைத் தீவு மாதிரி தண்ணீரில் மிதக்க விட்டு
விடுவார்கள்…


 கோலா இந்தப் பச்சையைப் பார்த்ததும் கூட்டம் கூட்டமாகத் துள்ளி
வரும், பசுந்தழையில் முட்டையைப் பீச்ச…. சில சமயம் இந்தத் ‘தீவுகளை’ கரைக்கு
எடுத்து வந்த பிறகும் கூட அவற்றில் தங்கியுள்ள இந்த முட்டைகளைப் பார்க்க
முடியும். இன்னொன்று… கோலாவை வலை ’வீசிப்’ பிடிப்பது இல்லை. இதுதான் கண்ணால்
பார்த்துப் பிடிக்கிற மீன்… கோலாவுக்குத் தனி வலை… அந்த ஏந்து வலையை
வைத்துக்கொண்டு அப்படியே ஏந்தி ஏந்திப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.. இந்த
வலையைத்தான் கச்சா வலையென்று சொல்வது…









சில சமயங்களில் ஒரு கோலா கூடக் கிடைக்காமல் போவதும் உண்டு. இதுக்குக் காரணம்
‘பர்லா’… இந்தப் பர்லா மீன் வந்தாலே அந்த இடத்துக்கு ஒரு கோலா கூட வராது…
மற்றபடி அமாவாசை நாளில் கோலா அதிகம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. பொதுவாக
கோலா சீஸன்தான் இவர்களின் ’அறுவடைக் காலம்’…




கோலாவுக்காக ஒரு தடவை கடலுக்குச் சென்றால் ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய்கூடக்
கிடைக்கும். ஆனால் இதைவிட அபாயமான வேலை உலகத்தில் ரொம்பக் குறைச்சல்…
முன்னேயெல்லாம் கோலா பிடிக்கப் போகிறவர்களுக்கு ‘வாய்க்கரிசி’ போட்டு
அனுப்புவார்களாம். இப்போதெல்லாம் அந்தப் பழக்கம் கிடையாது.





இந்த வைகாசி வந்தாலே போதும்… எல்லார் பேச்சிலும் ரொம்ப அடிபடுவது கோலாதான்…
கொஞ்சம் வேகமா காற்று அடித்தால் கூடப் போச்சு… ‘சே… சே.. என்னா காத்து… முகம்
வாயெல்லாம் ஒரே மண்ணு.. சனியன் புடிச்ச கோலா காத்து’ என்று அலுத்துக்
கொள்வார்கள்.





அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா
ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த
அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க… மீன்
இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா… அதுவும் கோலா மீன் என்றால்
அவருக்கு உயிர்…





அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்… அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை
நான்… இந்த முள்ளை நினைத்தால் மீன் ஆசையே விட்டுப்போய்விடுகிறது… என் அத்தை
மீனெல்லாம் சாப்பிடுவதில்லை… எப்பவாவது எங்கள் கட்டாயத்துக்காக
சாப்பிடும்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு ‘வாந்தி’ எடுக்கவும் தவறுவதில்லை…
மாமாவுக்கு எதிர் என் அத்தை… படிப்பது என்றால் அத்தைக்குக் கொள்ளை ஆசை… சமையல்
முடிந்து விட்டால் கையில் புத்தகம் தான்…. மாமாவோ ஏதாவது படிக்கிறார் என்றால்
அது வாரா வாரம் ராசிபலன் மட்டுமாகத்தான் இருக்கும்!






எழுதுவதிலும் அப்படித்தான்… அத்தை எனக்கு எழுதின எல்லா கடிதங்களையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கவித்துவ மிக்க அந்தக் கடிதங்களை எத்தனை
முறை படித்திருக்கிறேன் தெரியுமா…! மாமாவோ தன் பேனாவைத் திறப்பது கையெழுத்துப்
போட அல்லது தன் அம்மாவுக்குக் கடிதம் எழுத இந்த இரண்டுக்கும் மட்டும்தான்.
(தேவரீர் அம்மாவுக்கு உங்கள் மகன் எழுதிக்கொள்வது. க்ஷேமம், க்ஷேமத்திற்கு
பதில். நான் வரும் பத்தாந்தேதி அங்கு வருகிறேன். வேறு ஒன்றும் விசேஷம் இல்லை.
இப்படிக்கு…)




ஆரம்பத்தில் தன் அம்மாவுக்குக்கூட அத்தையின் மூலம்தான்
எழுதிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவர் அம்மாவிடமிருந்து “எனக்கு நேரடியாக ஒரு
லெட்டர் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையா? இனிமேல் உன் பெண்டாட்டியை விட்டு
எழுதாதே… இஷ்டமிருந்தால் நீயே உன் கைப்பட எழுது” என்று ‘பாட்டு’ வாங்கிய
பிறகுதான் அந்தக் கடிதம் கூட அவர் எழுதுகிறார். இதுக்குப் பிறகு மாமா எழுதச்
சொன்னாலும் அத்தை எழுதுவதில்லை. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.






“டேய் ராஜா… நான் வெளியே போறேன்.. வர்றீயா…?”



மாமாவின் பிசிறான குரல் கேட்டு என் சிந்தனை அறுந்தது. அப்போது அங்கு வந்த என்
அத்தை என்னை முந்திக் கொண்டு சொன்னார்கள்.



“ராஜாவுக்கு உடம்பு சரியில்லை… அது வராது”



“சரி சரி… நீயே அவனைப் பூட்டி வச்சுக்க…”



-மாமா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.

மாமாவுக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெளியே போய் ஊர்
சுற்றாவிட்டால் தலையே வெடித்துவிடும்… பாவம்… அத்தை… வீட்டில் தனியாவே
இருந்திருந்து எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதோ…?



அத்தையின் பேச்சில் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன். கொஞ்ச நாளாக அத்தை
என்னிடம் ‘டா’ போட்டுப் பேசுவதில்லை. பத்து வருஷ வித்யாஸம் பெரிசு இல்லையா?
ஆனால் இப்படிப் பேசுவதுதான் எனக்குப் பிடிக்குது..



நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்….



அத்தை…



”ராஜா… நெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என்
பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள்.
நெற்றி சுடுவதென்ன…? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த
அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்….



வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை.



திடீரென்று அத்தை கேட்டார்கள்.



”தொண்டையிலே முள் சிக்கிட்டுன்னியே..  போய்டுச்சா..?”



“ம்ஹூம்.. இல்லெ…”


“அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்… சாப்பிடும்போது சூடான வெறும் சாதத்தை ஒரு
பெரிய உருண்டையா உருட்டி வாயில் போட்டு விழுங்கு. போய்டும்…”



இதுக்கு நான் பதில் சொல்லவில்லை… என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற
அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்… ஆனால்?




இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?



‘Love has no taboos’ என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான்
கொண்டுள்ளது காதலா…? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த
வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

Is it sex-love…?

நோ… அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion…. ஆனா இதன்
எல்லை எதுவாக இருக்கும்….?



அனாவசியமாக மனசைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்… அத்தையின் மேல்
எனக்குள்ள ப்ரேமை இன்று நேற்று ஏற்பட்டதா என்ன?



அப்போது ஆறு வயசிருக்கும்… அத்தை அடிக்கடி என்னிடம் “ராஜா.. நீ யாரைக்
கல்யாணம் பண்ணிக்கப் போற…?” என்று கேட்பார்கள். நான் ஒவ்வொரு முறையும்
‘உங்களைத்தான்… உங்களைத்தான்’ என்று சொல்வேன்.



கொஞ்சங்கூட மறக்கவில்லை.



“அத்தை… உங்களைத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா நான் உங்களைக் கட்டிக்கிறப்போ
உங்க கை தோலெல்லாம் அவ்வாவுக்கு இருக்கிற மாதிரி கொழ கொழன்னு சுருங்கி
இருக்கக்கூடாது… இப்ப இருக்கிற மாதிரியே இருக்கணும்” என்று சொல்லி அத்தையின்
கைச்சதையைத் தொட்டுக் காண்பிப்பேன்…



உடனே அத்தை சிரித்துக்கொண்டே என் அம்மாவிடம் “பார்த்தீங்களா வதினை… ராஜா
சொல்றதெ” என்று ஆரம்பித்து நான் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி
சிரிப்பார்கள்.



இப்போது மீண்டும் அதை நினைத்துப் பார்க்கிறேன்.. ஆனால் இப்போதெல்லாம் அத்தை
ஏன் அந்தக் கேள்வியைக் கேட்பதே இல்லை…?





’ராஜா நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற…?’



அப்படியே அத்தை கேட்டாலும் முன்பு சொன்னது போல் என்னால் பதில் சொல்ல முடியுமா?



’அத்தை… உங்களைத்தான் நான் கட்டிக்குவேன்… ஏன்னா உங்கள் கை பதினஞ்சு
வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான்
இருக்கு…’



திடீரென்று தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது.
அட எப்படி இங்கே வந்து படுத்திருக்கிறேன்…? கடைசியில் அத்தையோடு பேசிக்
கொண்டிருந்தது நினைவிருக்கு… அப்புறம் தூக்கக் கலக்கத்தில் இங்கே வந்து
படுத்தது நினைவு இல்லை. இனிமேல் எப்படித் தூக்கம் வரும்? விடிகிற நேரம்… கொஞ்ச
நேரம் ஸ்ரீஸ்ரீளம் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தேன்…




பாத்ரூமுக்குப் போய் பேஸ்ட்டும், ப்ரஷ்ஷும் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம்
போனேன். ப்ரஷ் பண்ணிக்கொண்டிருக்கும் போதே முள் நெருடுவது தெரிகிறது… பல்லைத்
துலக்கிவிட்டு கட்டை விரலால் நாக்கை வழித்தேன். இதுக்கு நான் tongue cleaner
பயன்படுத்துவது இல்லை. Tongue cleaner என்றால் நாக்கில் ஒரு குறிப்பிட்ட
‘ஏரியா’வைத்தான் சுத்தப்படுத்த முடியும். அடி நாக்குக்கெல்லாம் அது போகாது…
அதனால் உசிதம், கட்டை விரல். ஆனால் விரல் நகத்தில் ஏதேனும் பிசிறு இருந்தால்
நாக்கைக் கீறி விடும்… எச்சிலோடு ரத்தமும் வரும்… அப்புறம்  அது க்ஷயரோக
ரத்தமா அல்லது நாக்குக் கீறலின் ரத்தமா என்று சந்தேகப்பட்டு பயப்பட
வேண்டியிருக்கும்!


 அதுக்காக கட்டை விரல் நகத்தை மட்டும் பிசிறு இல்லாமல்
வைத்திருக்க வேண்டும். சரி… இன்று எப்படியும் இந்த முள்ளை எடுத்துவிட
வேண்டும்… கட்டை விரலையும், சுட்டு விரலையும் மாற்றி மாற்றித் தொண்டைக்குள்
விட்டுக் குடைந்தேன்… ஏகமாய் வாந்தி வந்ததுதான் மிச்சம்.



முள் அப்படியேத்தான் இருந்தது….



இதுக்கு முன்னால் கூட மீன் சாப்பிட்டபோது முள் சிக்கியிருக்கிறது… ஆனால் இந்த
மாதிரி பதினஞ்சு நாள் இருபது நாளென்று உயிரை வாங்கியதில்லை.



சின்ன வயசில் ஒரு வேடிக்கை நினைவு வருது. அப்போது நான் அவ்வா வீட்டில்
இருந்தேன். ஒரு நாள் சாப்பாட்டுக்கு கருணைக்கிழங்கு வறுவல் செய்திருந்தார்கள்.
அந்த வயதில் அது கருணைக்கிழங்கு என்றெல்லாம் எனக்குத் தெரியாது… ஏதோ ருசியாய்
இருக்கவும் நிறைய சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தது தாமதம்…


 ‘அய்யோ… அம்மா…’
என்று அலற ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் பயங்கர அரிப்பு… அதை அரிப்பு என்று
சொல்லத் தெரியாமல் ‘தொண்டையிலே முள் குத்திடுச்சி’ என்று ரகளை
பண்ணிக்கொண்டிருந்தேன். அப்பறம் மெதுவாக வேலைக்காரி வந்து ‘இது கருணைக்கிழங்கு
சமாச்சாரந்தான்’ என்று சொல்லி எல்லார் பயத்தையும் போக்கி என்னைத் தேற்றினாள்.




டிஃபனை முடித்துவிட்டு அத்தையுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தம்பி
வந்து சொன்னான், யாரோ கூப்பிடுவதாக. வெளியே வந்து பார்த்தால்…. பேபி.

“என்னடா இது அதிசயமா இருக்கு.. பதினொரு மணி வரைக்கும் மார்க்கெட்லெயில்ல
சுத்திக்கிட்டு இருப்ப…”

”இன்னைக்கு நான் மார்க்கெட்டுக்குப் போகலெ.. சரி வா… கொஞ்சம் ஈச்சந்தோட்டம்
வரைக்கும் போயிட்டு வரலாம்.”



“இதோ வர்றேன்… சித்த இரு” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன்.
அத்தையிடம் போய் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் அத்தை…” என்றேன்.



“சீக்கிரமா வந்திடு ராஜா…”



-நான் இப்போது வெளியில் போவதை அத்தை விரும்பவே இல்லை. இருந்தாலும் பேபியின்
முகத்தில் தெரிந்த அந்த சீரியஸ்னஸ்..



கிளம்பிவிட்டேன்.

பேசிக்கொண்டே ஈச்சந்தோட்டம் வந்தோம். பெயர்தான் ஈச்சந்தோட்டம். ஆனால் ஒரு ஈச்ச
மரம் கூடக் கிடையாது.. எப்பவோ ஈச்சந்தோட்டமாக இருந்திருக்கலாம்.. இப்போது
எஞ்சி நிற்பதென்னவோ பெயர் மட்டுந்தான்… பேசாமல் புளியந்தோப்பு என்று பெயரை
மாற்றி விடலாம்… அவ்வளவு புளிய மரங்கள்…



ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தோம்… ஒரு பெரிய வேரில் முதுகைச் சாய்த்து
திண்டில் அமர்ந்திருக்கும் செட்டியார் மாதிரி உட்கார்ந்து கொண்டான் பேபி….



மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து பிறகு சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தான்…



விஷயம் வேறொன்றுமில்லை.. இவன் அப்பாவுக்கு ஏகமான சொத்து இருக்கு… இருந்தாலும்
மகன் தன்னை மாதிரி நிலத்தில் இறங்காமல் ஒரு டாக்டராகி விட வேண்டும் என்று
தீவிரமான ஆசை. இவனோ பி.யூ.சி.யைத் தாண்டவில்லை. பயாலஜி, ஜூவாலஜி புத்தகத்தை
எடுத்தாலே தூக்கம் வருதுங்கிறான். விவசாயத்தில்தான் ஈடுபாடு. இவன் M.B.B.S.
போகாததால் ஜன்ம எதிரியாகப் பார்க்கிறார் தந்தை.. அப்புறம் சச்சரவுக்கு
கேட்கணுமா… இன்னும் கடிக்கிட்டுப் புரளலை… அவ்வளவுதான்.



உணர்ச்சிவேகத்தில் என்னென்னவோ முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்…



“சரி வா, ரொம்ப தாகமா இருக்கு… அந்த வீட்லே போயி கொஞ்சம் தண்ணி குடிப்போம்.”

-பேச்சை மாற்றி அவனைக் கிளப்பினேன்.



தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே தீப்பெட்டி வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துக்
கொண்டான்… எனக்குத் தண்ணீரைக் குடித்ததும் முள் அதிகமாக நெருட ஆரம்பித்தது…



குமட்டியது.


இவனுக்கும் தெரியும். கோலா மீனைச் சாப்பிட்டு எனக்கு முள் சிக்கிக்கொண்டது.
அதுதான் எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருக்கிறேனே…



“ராஜா.. இந்த முள் இவ்வளவு நாள் போகாம இருக்கிறதப் பாத்தா இது முள்ளு தானான்னே
எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒரு வேளை முடி கிடி சாப்பாட்டில் கிடந்து
சிக்கிக்கொண்டிருந்தால்….?”



எனக்கு முடி என்றதும் பயமாகி விட்டது… அதோடு விடாமல், “ஒரு வேளை ஒன்னோட
ப்ரமையாவும் இருக்கலாம்” என்றான்.



எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

“அப்படின்னா… உன் அப்பாவோட நான் நேத்து ராத்திரி சினிமா பார்த்தேனே.. அவர்
எப்படி அந்த நேரத்துலெ உன்னோட சண்டை போட்டிருக்க முடியும்… ஏதாவது கனவு கினவு
கண்டிருப்பெ…”



”எனக்குக் கோபம் வரல்லெ…”


என் எரிச்சல் இன்னும் அதிகமாகியது.



“என்ன ராஜா.. இவ்வளவு நேரம்? இனிமே நீ வெளியே போகக் கூடாது நாளைக்கு நாங்க
ஊருக்குப் போற வரைக்கும் வீட்லயேதான் இருக்கணும்…”



வீட்டில் நுழைவதற்குள் அத்தையின் ஆர்டர்…



“இப்ப என்ன ஊருக்கு அவசரம்? இன்னும் அஞ்சாறு நாள் கழிச்சுக் கிளம்பறது…”



“நான் என்ன பண்றது ராஜா… உன் மாமாதானே…”



“ஆமா, நீங்களும்தான் ஊருக்குப் போகணும் போகணும்னு பறக்கறீங்க…”



-இதுக்கு அத்தை பதில் சொல்லவில்லை.



நான் போய் கொல்லைக் கிணற்றில் குளித்துவிட்டு, திண்ணைக்கு வந்தேன்… அத்தை
இல்லை. அறையில் படுத்திருக்கலாம் என்று அறைக்கு வந்தேன். அங்கே….



டேபிளின்மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி குலுங்கிக்
குலுங்கி…

“அத்தை… என்ன இது?”


தலையின் மீது கைவைத்து நிமிர்த்தினேன்.


“இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா… இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது…”



-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி
இருக்கிறேன்.


தலையின் மீது வைத்த கையை நான் எடுக்கவே இல்லை.


இன்னும் சில நிமிஷங்கள்தான்… அப்புறம் வீடே வெறிச்சோடிக் கிடக்கும்…


இதோ புறப்பட்டு விட்டார்கள்… அத்தையும் மாமாவும்.. நானும் கிளம்பினேன்,
ஸ்டேஷன் வரைக்கும்….



ட்ரெய்ன் எட்டு மணிக்குத்தான் கிளம்பும்… ஒரு மணி நேரம் முன்னாலேயே
வந்தாச்சு.. தம்பியும், மாமாவும் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துவிட்டார்கள்.



அத்தை என்னுடனேயே நின்று கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி லெட்டர் எழுதுவியா…”
என்று கேட்டுக்கொண்டே என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள்…



கண்ணீர்….

எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு… ஆனால்
கண்களில் ததும்பிய கண்ணீரைக்கூட கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு
அடக்கிக் கொள்கிறேன்…



எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. திடீரென்று அத்தை கண்களைத்
துடைத்துக்கொண்டு உள்ளே போய் தம்பி உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள்.
தம்பி கீழே இறங்கினான்….



நான் ஜன்னலருகில் போய் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டேன்.



‘இந்தக் கைக்கு இப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் என்ன…?’



ட்ரெய்ன் லேசாக நகர்ந்தது. நான் கைகளை எடுத்துக்கொண்டேன்…. ட்ரெய்ன் கொஞ்சங்
கொஞ்சமாக வேகம் பெறுகிறது.

வெளிச்சம் தெரிகிற வரை ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

வீட்டிற்கு வந்து அறைக்குள் போய் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு நாற்காலியில்
அமர்ந்தேன். ஒரு பெண்ணின் குரல். ‘கோலா…. கோலா… ரூபாய்க்கு ஏழு கோலா… கோலா….’
என்று ஒரு ராகத்துடன் ஒலித்தது…



கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்…



குமட்டல்தான் வந்தது…


முள்….?

Monday, March 05, 2012

சாருநிவேதிதாவின் எக்செல் நாவல்- ஒலக மகா எலக்கியம்- புத்தக (!!) விமர்சனம்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு அவர்கள் இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்செல்.. அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும்.. விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க .. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான்.. கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் ஸ்டோரி ஓடும்.. நாவலோட கடைசி அத்தியாயத்துல எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து தேரை நிலை சேர்த்துவாரு.. 

அந்த டெக்னிக்ல அண்ணன் சாரு 6 வெவ்வேற டிராக்ல கதையை ஓட்டறாரு.. அதாவது

http://images.indiaplaza.in/books/9788/1849/9788184932041.jpg

1. முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்.. ( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு... )

2. ரெண்டாவது டிராக் - குமுதம் பத்திரிக்கைல ” கதவைத்திற காயத்ரி, கவிதா யாராவது வரட்டும்”னு ஒரு ஆன்மீகக்கட்டுரை எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றாலும்  ஜஸ்ட் லைக் தட் 3 நிமிட குறும்படம் சன் டி வி ல வந்ததால அகில உலக ஃபேமஸ் ஆன உலகம் போற்றும் உத்தமர், ஒழுக்க சீலர், கலியுக ராமர், சந்நியாசி மத்தியானந்தா, சாயங்காலனந்தா, நைட்டானந்தா, மிட் நைட்டானந்தா  அவர்கள் ரஞ்சிதா என்ற குணச்சித்திர நடிகையுடன் ஆன்மீகப்பணி ஆற்றும் நிலை பார்த்து பக்தர்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைஞ்சாங்களே.. அந்த மேட்டர்ல சாருவின் மனைவி சாமியார்க்கு ஒரு லெட்டர் எழுதியதை சாமியார் மீடியாவிடம் பப்ளிஷ் பண்ணி சாருவின் மானத்தை டைட்டானிக் ஏத்துனாரே அதுக்கு பதில் அடி + தன்னிலை விளக்கம்.. ( இதுல ஒரு காமெடி என்னன்னா என் மனைவி அப்படி எல்லாம் லெட்டரே எழுதலைன்னு சொன்னவர் அப்புறம் ராம்தாஸ் விட கேவலமா ஒரு பல்டி அடிச்சு அப்படியே அவர் தான் லெட்டர் எழுதுனார்னே வெச்சுக்குவோம்அதை அவர் பப்ளிஷ் பண்ணுனது நியாயமா?ன்னு அனுதாப ஓட்டு வாங்கும் எம் எல் ஏ மாதிரி பம்மறாரு)

3. மூணாவது டிராக் - ஆ ராசா ஒரு லட்சம் அண்ட் சொச்சம் கோடி  அடிச்சாரே அவர் அந்தரங்க காரியதரிசி  சாதிக் பாட்சாவின் ஆவி தன்னிலை விளக்கம் சொல்ற மாதிரி கொஞ்சம் பக்கங்கள்.. ( அநேகமா அவை ஜூ வி, நக்கீரன் கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்)

4. நான்காம் டிராக் - இதுலதான் நாவலோட மெயின் மேட்டர்.. அண்ணன் எழுதுனதுல சைடு, பார்டர், எல்லாத்துலயும் மேட்டர் இருந்தாலும் மெயின் கதை இந்த டிராக்ல தான் வருது.. அதாவது அண்ணன் கணக்கு பண்ணுன லேட்டஸ்ட் ஃபிகர் பேரு அஞ்சலி.. அந்த பாப்பாவோட சுய சரிதையை பாப்பாவே சொல்ற மாதிரி  வருது.. அநேகமா நோகாம நோம்பி கும்பிட்டுட்டாருன்னு நினைக்கறேன்.. பாப்பாவையே அந்த கதையை டைப் பண்ணச்சொல்லி ஊடால விட்டுட்டாரு போல.. 

 அதாவது அஞ்சலி சின்ன வயசுலயே  திவாகர் அப்டிங்கற ஆளால பால் இயல், மோர் இயல், தயிர் இயல் பலாத்காரம் பண்ண முயற்சி செய்யப்பட்டு அதுல 50 % வெற்றி மட்டுமே அடைஞ்ச ஆள்.. அந்த திவாகர் வேற யாரும் இல்லை, அஞ்சலியோட அம்மாவுக்கு புது பாய் ஃபிரண்ட்.. மீன்ஸ் பாய்ல படுத்திருக்கும்போதும் நட்போட இருப்பாங்க.. 

அஞ்சலிக்கு திவாகர் என்னென்ன கொடுமை எல்லாம் செஞ்சார்னு சொல்றதையே சினிமால காட்டி இருந்தா 4 ரீல் வரும்.. அப்புறம் அஞ்சலி க்கு மேரேஜ் ஆகிடுது.. புருஷன் தண்டம்.. ( அப்டி கதையை கொண்டு போனாத்தானே கிளு கிளுப்பு வரும்?) 

உதயாவோட தூய நட்பு அஞ்சலிக்கு கிடைக்குது.. இந்த கதைல வர்ற உதயா அண்ணன் சாருதான்.. அஞ்சலியும், உதயாவும் பரிமாறிக்கொள்ளும் கில்மாக்கடிதங்கள், சேட்கள் இதைவெச்சே 60 பக்கங்கள் கிளு கிளுப்பா நகர்த்திடறாரு..

தமிழன் கேப்ல கெடா வெட்றவன் ஆச்சே.. அதை நிரூபிக்கும் விதமா அண்ணன் சாரு இந்த அஞ்சலி கதை ஊடால நைஸா தன்னோட பராக்கிரமங்களை அள்ளி விடறாரு.. அதாவது அண்ணனுக்கு வயசு 60 ஆனாலும் 20 மாதிரி அல்ல அல்ல உலக அளவுல தான் தான் கில்மா மன்னன்கறாரு.. 

இந்தக்காலத்துல வயக்காட்டுல, டிராக்டர்ல ஏர் ஓட்டறவனே அரை மணி நேரத்துக்கு ஒருதடவை ரெஸ்ட் எடுத்துக்கறான்.. ஆனா அண்ணன் விடாம 2 மணி நேரம்  நான் ஸ்டாப்பா உழைப்பேன்னு அடிச்சு விடறாரு.. கின்னஸ் சாதனையாளர் போல.. 

அஞ்சலி பாப்பா ஒரு ஃபிரான்ஸ் கேர்ள் போல.. அதனால ஆங்காங்கே ஆங்கில கவிதைகள், ஆங்கில உரையாடல்கள் எஸ் எம் எஸ் கள், சேட்கள் எல்லாம் வருது.. அதை எல்லாம் ஸ்கிப் ஆகி போனா சீக்கிரமா படிச்சுடலாம்.. 

இதை மட்டுமே தனி நாவலா கொண்டு போய் இருந்தா ஒரு வேளை மனம் கவரும் நல்ல நவீனமாக வந்திருக்கலாம்..

இந்த கதை டிராக்ல அண்ணன் சேலம் சித்த வைத்திய சாலை, பழநி டாக்டர்ஸ் ரேஞ்சுக்கு இறங்கி பல சித்த வைத்திய, கில்மா மருத்துவ உத்திகள், ஐடியாக்கள் எல்லாம் குடுக்கறார்.. 

5. ஐந்தாம் டிராக் - அண்ணன் சாருவுக்கு இலக்கிய உலகத்துல அராத்து (இவர் ட்விட்டர்லயும் இருக்கார்), மனுஷ்ய புத்திரன்,ஆர்னிகா நாசர் போன்ற எழுத்தாளர்கள் நண்பர்களா இருக்காங்க.. இந்த 3 பேரில் ஒருவரை அல்லது மூன்றும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கி  கொக்கரக்கோ அப்டின்னு ஒரு எழுத்தாளரோட பள்ளிப்பருவ நிகழ்வுகளை கொஞ்சம் சொல்றாரு.. இது கொஞ்சம் சுவராஸ்யமா இருக்கு.. 

ஆனா சர்க்கரை பொங்கல்ல கல்லா, பிரபு தேவா- நயன் தாரா தெய்வீகக்காதல்ல நுழைந்த ஹன்சிகாவா அண்ணன் தன்னையே ஒரு ஹோமோன்னு அறிவிச்சு பெருமைப்பட்டுக்கறாரே அதுதான் உறுத்துது.. சீரியசா கதை போய்ட்டு இருக்கும்போது நாம என்ன கேள்வி கேக்கனும்னு நினைக்கறோமோ அந்த கேள்வியை கொக்கரக்கோவை விட்டே கேக்கற மாதிரி கதை நடை செல்வது நல்ல யுக்தி.. 

6. ஆறாம் டிராக்  -சினிமால கோக்குமாக்கான சீன் உள்ள படமா இருந்தாலும் அறிவுரை சொல்ற மாதிரி சில சீன் வைப்பாங்க.. அது சென்சாரை கன்வின்ஸ் பண்ண உதவும்.. அந்த மாதிரி நாவலுக்கு சம்பந்தமே இல்லாம ஐயப்பன் சாமி 18 படிகள் பற்றிய விளக்கங்கள், தேவாரப்பாடல்கள் ,  சித்தர்கள் பற்றிய குறிப்புகள்  அப்டின்னு அண்ணன் அள்ளி விடறாரு.. அதை நாவல் படிச்ச ஆட்கள்ல 90% பேரு அப்டியே ஸ்கிப் ஆகித்தான் படிப்பாங்க.. ஆனாலும் அண்ணனுக்கு கவலை இல்லை../ ஏன்னா யாராவது நாவலை குறை சொன்னாக்கூட என் நாவல்ல யூஸ்ஃபுல் மேட்டர் இருக்குன்னு காட்டிக்கறதுக்காகவும் அது தேவைப்படுது போல.. 

 இதுல என்ன காமெடின்னா சித்தர்கள் ராஜ்ஜியம்னு ஒரு வலைப்பூ பற்றி குறிப்பிட்டு அண்ணன் லிங்க் குடுத்திருக்காரு.. தோழி என்ற புனை பெயரில் எழுதும் அவருக்கு இது நல்ல அங்கீகாரம் தான்.. . 

முதல் வசந்தம் குங்குமப்பொட்டுக்கவுண்டர் -ஹிட்ஸ் வந்ததுன்னு சந்தோஷமாவும் இருந்துக்குங்க, அதே சமயம்  சாக்கிரதையாவும் இருந்துக்குங்க.. அவரிடம் கேட்காமல் அண்ணன் 3 பதிவை அப்படியே சுட்டு போட்டிருக்காரு, அதுக்கு பிராயசித்தமா லிங்க் குடுத்துட்டார் போல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s640/Balu-mahendra-010808.jpg



 குப்பையில்  பொறுக்கிய மாணிக்கங்கள்


1. ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்... ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் அப்டினு யாரோ சொன்னாங்களாம்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை..


2.  தமிழிலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழின் ஆகச்சிறந்த  எழுத்தாளர்களெல்லாம்  எப்படி மறக்கடிக்கப்பட்டார்களோ அதே போல் நானும் மறக்கடிக்கப்படுவேன்

3. இரவு 7 மணிக்குள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் இந்தியர்கள் 50 வயதில் நோயில் விழுவதும், மிட் நைட்டில் 2 மணிக்கு சாப்பிடும் சீனர்கள் 90 வயது வரை ஆரோக்யமாகவும் வாழ்வது இயற்கையின் முரண்பாடு


4. வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிது பைத்தியக்காரத்தனம் வேண்டும்

5. சாமியாரின் பேச்சு நடைபெற்ற இடம் மிகச்சிறிய இடம்./.  ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறிய  இடத்தில் 16,000 பேர்  கூடுவதற்கு எப்படி அனுமதி அளித்தது?மேலும் ஒருவர் இடையில் வெளீயே போக நினைக்கும்போது அவர்களை அனுமதிக்கவில்லை, அப்படித்தடுப்பது சட்டத்துக்குப்புறம்பானது இல்லையா? ( WRONGFUL CONFINEMENT)

6.  உன்னை காதலிக்கும் பெண்கள் அனைவருமே எப்படி ஒரு கூடை சோகங்களை  கை வசம் வெச்சிருக்காங்க?நீ ஏதும் பண்ட மாற்று வேலை செய்கிறாயா?

7.  பெண்கள் அனைவரும் ஹீரோவைத்தேடி வாழ்க்கை முழுக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.. அவர்கள் பழைய வில்லன்களை எல்லாம் இன்றைய ஹீரோ ஆக்குகிறார்கள்

8. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சோகமாக ஆக்கிக்கொள்வது ஒரு வித மன நோய்.. அப்படிப்பட்ட பெண்கள் மன நல நிபுணரை பார்க்கலாம், அல்லது புது காதலரை காதலிக்கலாம்

ஓக்கே .. ஓவர் ஆல் நாவல் எப்படி இருக்கு? யார் எல்லாம் படிக்கலாம்?

கில்மா ரசிகர்கள், ஃபிகர்களை செட் பண்ணுவது எப்படி? சேட்டிங்கில் ஆண்ட்டிகளை மடக்குவது எப்படி?, வெறும் வாய்லயே மங்கலம் பாடி மங்களத்தை கரெக்ட் பண்ணுவது எப்படி? போன்ற பல அரிய கேள்விகளை மனதில் தக்க வைத்துள்ள ரசிக மகா ஜனங்கள் இதை படிக்கலாம்..

 யாரெல்லாம் படிக்கக் கூடாது?  தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்,கண்ணியமானவர்கள்,ஒரு இல் ஒரு சொல் என்று வாழ்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள்,இவங்க எல்லாம் படிக்கக்கூடாது..

நாவல் மொத்தம் 435 பக்கங்கள்.. அதுல ஆங்கில வசனங்கள், ஜோதிட பக்கங்கள், சபரிமலை சுலோகங்கள் போன்ற வெகுஜன மக்கள் ஒதுக்கும் பக்கங்கள் போக  403  பக்கங்கள்.. படிக்க மொத்தம் நாலரை மணி நேரம் ஆகுது.. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ள சராசரி வாசகனுக்கு 6 மணி நேரம் ஆகலாம்.. 


விகடன் மார்க் போட்டால் - 40

Saturday, February 25, 2012

பொங்கி எழுந்த சாரு - என்னை எழுத வேண்டாம் என்று சொல்ல ஞாநி யார்? - காமெடி கும்மி

http://www.sahodari.org/images/With_Charu.jpgஎக்ஸைல் விமர்சனக் கூட்டத்தில் ஞாநி ஒரு வருஷ காலத்துக்கு இணையதளத்தில் என்னை எழுதாமல் இருக்கும்படி ஆலோசனை கூறினார். 


 சி.பி - அப்புறம் என்ன ? எழுதத்தானே கூடாதுன்னார்? சேட்டிங்க் கூடாதுன்னு சொல்லலையே?


 ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் எனக்கு இணைய தளத்தை விட்டால் எழுதுவதற்கு இடம் ஏது?  எந்தப் பத்திரிகை என் எழுத்தை வெளியிடத் தயாராக உள்ளது?  ராஸ லீலா என்ற எனது 700 பக்கத் தமிழ் நாவலை நான் கலா கௌமுதி என்ற மலையாளப் பத்திரிகையில்தானே வாரா வாரம் எழுதினேன்?  அது மட்டும் அல்ல; கலா கௌமுதியில் வந்து கொண்டிருந்த போதே அது சாரு ஆன்லைன் இணைய தளத்திலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 



சி.பி - என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க? திரைச்சித்ரா, விருந்து எல்லாம் எதுக்கு இருக்கு?

 

 காமரூப கதைகள் நாவலையும் சாருஆன்லைன் இணையதளத்தில்தான் எழுதினேன்.  மற்றபடி விகடன் இணையதளத்தில் ஓரிரு ஆண்டுகள் கோணல் பக்கங்கள் என்ற பிரசித்தி பெற்ற பத்தியை எழுதினேன்.  அது அப்படியே விகடன் இதழிலும் வரும் என்று எதிர்பார்த்தேன்.  எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சி.பி - ஒண்ணும் கவலைப்படாதீங்க, டாக்டர் விகடனை தொடர்ந்து நர்ஸ் விகடன், அல்லது கில்மா விகடன் வருதாம் அதுல சான்ஸ் உண்டு.. 
 


 பிறகு, குமுதத்தில் ஒன்பதே வாரங்கள் கோணல் பக்கங்கள் தொடர்ந்தது.  பிறகு அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது.  உடனே விகடனில் வாய்ப்புக் கேட்டேன்.  வாய்ப்பு கிடைக்கவில்லை.  நான் 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  இதுவரை குமுதத்தில் 9 ஒன்பது வாரமும், விகடனில் 24 வாரமும் மட்டுமே (துக்ளக்கில் 6 மாதம் எழுதியது தனிக்கதை) எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியே கிடைத்தாலும், இப்பத்திரிகைகளில் எழுதும் உற்சாகத்தையும் மன எழுச்சியையும் நான் இழந்து விட்டேன். அதற்கு ஒரே காரணம்தான்.  இனிமேல் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவதை விட ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதே எனக்கு நல்லது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்.   ரொம்ப காலத்துக்கு செவியில்லாதவர்களின் தேசத்தில் இசைக் கலைஞனாக வாழ முடியாது.  அலுப்பாக இருக்கிறது.


 சி.பி - ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்???

ஆனால் நான் எழுதுவதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இடமான இணைய தளத்திலும் எழுதாதே என்று சொன்னால், ஒரு மனிதனைப் பார்த்து மூச்சு விடாதே என்று சொல்வதற்குச் சமம் என்று ஞாநி உணர்கிறாரா?


சி.பி - அவர் ஏதோ ஒரு  பேச்சுக்கு சொன்னதுக்கு ஏண்ணே இப்படி பொழியறீங்க?

 
ஞாநி எத்தனை ஆண்டுகள் விகடனில் எழுதி இருக்கிறார்?  30 ஆண்டுகளா, அதற்கும் மேலா?  அதிலும் ஒரு கட்டத்தில் விகடனில் ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கள்!  உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் இப்படிப்பட்ட லக்கி ப்ரைஸ் அடித்ததில்லை. 

 சி.பி - இல்லையே , ஹாய் மதன்  3 தொடர் ஒரே சமயத்தில் எழுதி இருக்காரே?


 ஆனானப்பட்ட சுஜாதா கூட ஒரே பத்திரிகையில் இரண்டு பத்திகள் எழுதியதில்லை.  ஒரு சுபதினத்தில் திடீரென்று ஞாநியின் இரண்டு கட்டுரைகளும் விகடனில் நிறுத்தப்பட்டன.  என்ன நடந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம்.  ஆனால் உடனே என்ன நடந்தது?  விகடனில் ஞாநியின் இரண்டு பத்திகளும் நிறுத்தப்பட்ட மக்யா நாளே குமுதத்தில் ஞாநியின் பத்தி தொடர்ந்தது.  ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டேன்.  ஞாநி குமுதத்தில் எழுத ஆரம்பித்ததும் குமுதத்தின் விற்பனை அதிகரித்தது.


சி.பி - ஆமா, குமுதத்தின் சேல்ஸ் 3,75,887 ல இருந்து  3,75,898 ஆக உயர்ந்தது.. எக்ஸ்ட்ரா பிரதிகள் வாங்குனது ஞாநி சார் ஃபேமிலிதான் ஹி ஹி


  இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்.  ஆனால் முன்னாள் ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால் ஞாநியின் தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டது.  இது குமுதம் என்ற இதழுக்கு நேர்ந்த அவமானம்.  இதுதான் குமுதத்துக்கும் விகடனுக்கும் உள்ள வித்தியாசம்.  விகடன் ஆசிரியர் யாரோ வரைந்த கருத்துப் படத்துக்காக சிறைக்கும் சென்று வந்தார்.

சி.பி - அண்ணே, அதுக்குப்பேரு கருத்துப்படம் இல்லீங்கோ, ஜோக்குங்கோ..  படுதலம் சுகுமாரன் எழுதுனது , அட்டைப்படத்துல வந்தது.. 

மேடைல உக்காந்திருக்கரவங்கள்\ல யார் எம் எல் ஏ, யார் எம் பி?

 திருடன் மாதிரி இருக்கறது எம் எல் ஏ, முக மூடிக்கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறது  எம் பி 

 ஜோக் வந்தப்ப எம் ஜி ஆர் சி எம்.. 



  ஆனால் குமுதமோ கருணாநிதிக்கு பயந்து கொண்டு ஞாநியின் தொடரை நிறுத்தியது.  அந்தச் சமயத்தில் குமுதத்தைக் கண்டித்து எழுதிய ஒரே எழுத்தாளன் நான் தான்.  இது ஞாநிக்கு ஞாபகம் இருக்கலாம்.  குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டதும் அதற்கு மக்யா நாளே ஞாநி கல்கியில் எழுதத் தொடங்கினார்.  அப்போதும் நான் ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்றே ஆச்சரியப்பட்டேன்.


சி.பி - மக்கா நாளெல்லாம்  இல்ல அண்ணே, சும்மா ரீலா விடாதீங்க.. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்ட அடுத்த வாரம் கல்கியில் விளம்பரம் வந்து அதற்கு அடுத்த வாரம் தான் வந்தது.. இடைப்பட்ட நாட்கள் 14.



குமுதத்தில் என் தொடர் வந்த போது “சாண்டில்யனுக்குப் பிறகு குமுதத்தில் இப்படி ஒரு தொடர் வருவது இப்போதுதான்” என்று என்னிடம் சொன்னவர்கள் ஒருவர் இருவர் அல்ல… ஓராயிரம் பேர் சொன்னார்கள்.  ஆனால் தொடர் ஒன்பதே வாரத்தில் திடுதிப்பென்று நிறுத்தப்பட்டதும் எனக்கு எங்கேயும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஞாநிக்கு இருக்கும் luxury எனக்கு இல்லை.  என்னுடைய ஒரே இயங்கு தளம் இணைய தளம்தான்.  கடந்த பத்தாண்டுகளாக நான் இணைய தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.  (ஒரு பத்திரிகையில் நான் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள் மட்டுமே விதிவிலக்கு). 

 சி.பி - எது? காலச்சுவடு என்ற இலக்கிய இதழ் லைப்ரரில இருக்குமே அந்த புக் தானே?

 


 ”இதிலிருந்தும் நீ விலகி விடு” என்று 5 லட்சம் சர்க்குலேஷன் கொண்ட ஒரு பத்திரிகையில் முப்பது ஆண்டுகளாக எழுதி வந்த ஒருவர் – அதிலும் அதே பத்திரிகையில் இரண்டு பத்திகள் – சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?  நான் மட்டும்தான் வாழ வேண்டும்; நீ செத்து ஒழி என்றுதானே அர்த்தம்?



சி.பி -  இதுக்கெல்லாம் நீங்க கவலைப்படலாமா? தமனா சொல்லி அனுஷ்கா விலகுவாரா? நீர் அடித்து நீர் விலகுமா? நீங்க எழுதுங்கண்ணே, உங்க சேவை நாட்டுக்கு தேவை..( எங்களுக்கும் பொழுது போகனும் ஹி ஹி )



 
”காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்று நான் எழுதியிருந்தது பற்றி 19-2-2012 அன்று ஞாநி எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்:


 சி.பி - அவர் எழுதுன லெட்டர்ஸ் படிக்கவெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா? அப்புறம் எப்போண்ணே சேட் பண்ணுவீங்க?



”அப்புறம் எதுக்காக என்னை கூப்பிடணும்? வந்து பேசினா போதும். உங்க மனசுல படறதைப் பேசலாம்னு எதுக்கு சொல்லி அழைக்கணும்? பேசினதுக்காக உங்க வாசகர்கள் எதுக்கு என்னை திட்டணும்? நான் பாட்டுக்கு என் வேலையைப் பாத்துகிட்டு இருந்தேன். தேவையா இது எனக்கு?”


ஞாநி


தப்புதான்.  இனிமேல் விஐபிகள் யாரையும் என் கூட்டத்துக்குப் பேச அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். 


சி.பி - நீங்க கூட ஒரு வி ஐ பி தான்.. அப்போ நீங்களும் பேச மாட்டீங்களா?

 
 ஆனால் ஞாநி எக்ஸைல் பற்றிப் பேசுவார் என்றே நினைத்தோம்.  ஆனால் அவர் “நீ மூச்சு விடாதே, செத்து ஒழி” என்று பேசுவார் என்று எதிர்பார்க்காதது எங்களுடைய தவறுதான்.  அதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.



சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நான் கடந்த பத்து ஆண்டுகளாக இணைய தளத்தில் எழுதி வருவதால்தான் என்னால் ஒரு பரந்து பட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க முடிந்தது.  ஒரு புத்தக வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் நடத்துகிறேன் அல்லவா?  1800 பேர் கொண்ட அரங்கில் 1500 பேரை என் பெயரை மட்டுமே சொல்லி என்னால் கூட்ட முடிகிறது அல்லவா? 


சி.பி - இதெல்லாம் பெரிய சாதனையா அண்ணே? திருமயம்கற ஊர்ல தமிழச்சி தங்க பாண்டியன் மேடம் கூட்டிய இலக்கியக்கூட்டத்துக்கு 18, 300 பேர் வந்திருந்தாங்க.. அப்போ அவங்க பெரிய எழுத்தாளரா? 



 இது என்னுடைய 10 ஆண்டுகளின் உழைப்பு அன்றி வேறென்ன? கடந்த பத்தாண்டுகளில் தமிழில் இலக்கிய வாசிப்பு அதிகரித்து இருக்கிறது என்றால் அதற்கு என்னுடைய பங்களிப்பும் ஒரு முக்கியமான காரணம்.  இதற்காக நான் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்தக் கலாச்சார மாற்றத்துக்குக் காரணமான நிறுவனங்கள் என்று விகடன், உயிர்மை, கிழக்கு போன்றவற்றைச் சொல்லலாம்.

சி.பி - சரோஜா தேவியை விட்டுட்டீங்களே?

 



இணைய தளத்தில் இவ்வளவு தீவிரமாக நான் இயங்கி இருக்காவிட்டால் என்னுடைய வாசகர்கள் என்று அறியப்படும் ஒரு 20,000 பேர் இன்று நல்லபடியாக வீடு கட்டி, குழந்தை பெற்று தங்கள் சமூகத் தொண்டை ஆற்றியிருப்பார்கள்.   ஆனால் என்னுடைய எழுத்தைப் படித்துத் தொலைத்து விட்டதால் என்னவெல்லாம் ஆகி இருக்கிறது என்று பாருங்கள். 


 1990-ஆம் ஆண்டில் நான் மீட்சி என்ற பத்திரிகையில் “the joker was here” என்ற ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.  அந்தக் கதை வந்த சமயத்தில் அதைப் படித்துப் பாராட்டியவர்கள் என் நண்பர்களான எம்.டி.எம்., நாகார்ச்சுனன் மற்றும் மீட்சியின் ஆசிரியர் பிரம்மராஜன்.  (நான் அப்படிப் பாராட்டவே இல்லை என்று எம்டிஎம் இப்போது சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  அப்படிச் சொன்னால் என்னுடைய பிழையான ஞாபக சக்திக்காக எம்டிஎம்மிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 


 சி.பி - மீட்சி பத்திரிக்கைல உங்க கதையை படிச்சு எல்லாரும் மிரட்சி ஆகி இருப்பாங்களே?

 


  ஆனால் இந்த மூவரைத் தவிர இந்தக் கதை பற்றி வேறு சத்தமே இல்லை.  யாருக்குமே கதை புரியவில்லை.  யாராலுமே இதை ஒரு கதை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. ”நம்ம புதுமைப் பித்தன்லாம் என்னமா எளுதியிருக்கார்… இவன் யாரு ஏதோ பைத்தியக்காரனைப் போல் உளறுகிறான்” என்றே அவர்கள் நினைத்தார்கள்.  காரணம், அவர்களுடைய வாசிப்பு நவீனத்துவத்தோடு நின்று போய் இருந்தது.  காஃப்கா, ஆல்பெர் கம்யு போன்றவர்களோடு அவர்கள் முடிந்து போய் இருந்தார்கள்.  அவர்களுக்கு William Burroughs, Donald Barthelme, Kurt Vonnegut, Georges Perec, Ronald Sukenik போன்றவர்களின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை. 


 மற்றபடி, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பதைப் போல் ஒரு பரந்து பட்ட வாசகர் வட்டம் இருக்கவில்லை.  அப்போதெல்லாம் எழுத்தாளரே வாசகர்; வாசகரே எழுத்தாளர்.  அதன் காரணமாக, the joker was here என்பது போன்ற என்னுடைய கதைகள் யாருமே சீந்திவாரற்றுத்தான் கிடந்தன.  நான் மேலே குறிப்பிட்ட எம்டிஎம் கூட தனிப்பட்ட முறையில் என் சிறுகதைகளை சிலாகித்தாரே தவிர, அது பற்றியெல்லாம் அவர் ஒரு வரி கூட எழுதியதில்லை.  இப்போதுதான் அதற்கு எனக்குக் காரணம் புரிகிறது; அவருடைய பாராட்டு உள்ளத்தில் இருந்து வந்ததல்ல. 


 ஏதோ உபசார வார்த்தைகள் அவை.  அதை நான் தான் பாராட்டு என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு விட்டேன் போலும்.  ஏனென்றால், எம்டிஎம்  என்னதான் பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் படித்தாலும் அவரால் புதுமைப்பித்தன் அண்ணாச்சி, வண்ணதாசன் அண்ணாச்சி, விக்ரமாதித்யன் அண்ணாச்சி ஆகியோரைத் தாண்டி அவரால் வர முடியவில்லை. 


 ஸாரி, வண்ணாதாசன் அண்ணாச்சியின் டாடியான தி.க.சி. அப்புச்சியைப் பற்றியும் எம்டிஎம்மின் கட்டுரைகள் வந்திருக்கலாம்.  படிக்கவில்லை.  (ஏற்கனவே உத்தமத் தமிழ் எழுத்தாளன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களைப் பகைத்துக் கொண்டிருக்கும் நான் இப்போது அவர்களையெல்லாம் விட அறிவில் சிறந்தவரான எம்டிஎம்மையும் பகைத்துக் கொள்கிறேன்.


  பகவதி… எனக்கு என்ன ஆகப் போகிறதோ…  அதிலும் உ.த.எ. தன்னுடன் சண்டை போடும் எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிக் கொள்ளும் சக்தி மிக்கவர்.  அவரையே நாக் அவுட்டில் வீழ்த்திக் காட்டியவர் எம்டிஎம்.  நானெல்லாம் எம்மாத்திரம்?  ஆஃப்டர் ஆல், என்னுடைய ப்ரூஃப் ரீடரையே சமாளிக்க முடியாத பலஹீனன்…


மீண்டும் இப்போது ஜோக்கருக்கு வருகிறேன்.  எழுதி 22 ஆண்டுகளாக யாராலும் பேசப்படாத அந்தக் கதையைப் பற்றி இப்போது என் வாசகர் ஒருவர் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளுகிறார்.  நான் கால் நூற்றாண்டுக் காலம் முன்னோக்கிச் சிந்திக்கிறேன் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  நான் ஒரு கதை எழுதி விட்டு, அதை வாசிக்கக் கூடிய ஒருவன் அல்லது ஒருத்திக்காக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 


 ஜோக்கரை எழுதிய போது, இப்போது இதை வரிந்து கட்டிக் கொண்டு விளக்கிக் கொண்டிருக்கும் “பிரியமுடன் துரோகி” என்ற இளைஞரின் வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அல்லது, அப்போது அவர் பிறந்து கூட இல்லாமல் இருக்கலாம்.  ஆக, இன்று நான் எழுதுவது இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவா?  பெருமையாக இருக்கிறது எனக்கு.


ஞாநி சொன்னார்.  எக்ஸைல் நாவலை இன்னும் 30 ஆண்டுகள் கழித்து யாரும் பேச மாட்டார்கள் என்று.  அது என்ன ஜோதிடம்?  எதை வைத்து அப்படிச் சொல்கிறார் ஞாநி?  இதோ ஞாநி சொல்வது தவறு என்று நான் நிரூபித்து விட்டேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதையை – இதுவரை யாருமே வாயே திறக்காத ஒரு சிறுகதையைப் பற்றி – வாசகர் வட்டத்தில் சுமார் 30 பேர் விவாதிக்கிறார்கள். 


 விவாதத்தில் பொறி பறக்கிறது.  பிரியமுடன் துரோகிதான் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்.  ஆக, ஞாநி சொல்வது போல் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எக்ஸைலை யாரும் மறக்க மாட்டார்கள்.  இன்னும் பல நூறு மடங்கு அதை விவாதிப்பார்கள்.  இப்போது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைப் போல் அந்த நாவல் கொண்டாடப்படும்.  20 ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி வந்த போது மாலன் அதை ஒரு பத்திரிகையில் “பீ” என்று எழுதினார்.  சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்தார்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?


இதோ அந்த உரையாடல்:  ஃபில்ம் சேம்பர் வாசலில்.


“என்ன ராமகிருஷ்ணன், ஸீரோ டிகிரி படிச்சிங்களா?”


“ஓ… பார் மகளே பார் தானே படிச்சேன்…”


அதற்கு மேல் நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.


இந்திரா பார்த்தசாரதியைத் தவிர வேறு ஒருவர் கூட ஸீரோ டிகிரி பற்றி ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இப்போது அந்த நாவல் கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் modern asian classic ஆக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளாக எம்.ஏ. மலையாளத்தில் பாடமாக உள்ளது.  இதேதான் எக்ஸைலுக்கும் நடக்கும் என்று ஞாநியிடம் நான் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.


மேலும், ஞாநி சொன்னார்.  “சாருவுக்குப் பிடித்த உதாரணத்தையே சொல்கிறேன்.  ஒரு நாவலைப் படித்து முடிக்கும் போது ஒரு ஸம்போகத்தில் திளைத்தது போல் இருக்க வேண்டும்” என்று.  


.  ஞாநி சொல்வது நூற்றுக்கு நூறு சரி.  இதைத்தான் ரொலான் பார்த் pleasure of the text என்று சொல்கிறார்.  ஆனால் ஒரு பெண்ணைத் தொடும் போது ஆணுக்கு premature ejaculation ஆகி விட்டால் என்ன செய்வது?  சிலருக்கு எழுச்சியே ஏற்படுவதில்லை.  சிலருக்கு ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுச்சி அடங்காது.  இந்த இரண்டுமே erectile dysfunction தான்.  இரண்டாவதில் இன்பம் உத்தரவாதம்.  முதலாவதில் மன உளைச்சல் தான் உண்டாகும்.  பெண்ணை ஸ்பர்ஸிக்கும் போது எழுச்சியே ஆகவில்லையானால் எப்படி இன்பம் துய்ப்பது?


உலகத்திலேயே பேரழகியான ஒருத்தி இருந்தாள்.  அவளிடம் போய் விட்டு வந்த ஒருத்தன் “ம்ஹும்… வேஸ்ட்…” என்றான்.  என்ன பிரச்சினை என்றால், அவளை ஸம்போகிக்கும் போது அவன் தன் மனைவியை நினைத்துக் கொண்டு தொட்டிருக்கிறான்.  எப்படிக் கிடைக்கும் இன்பம்?


அடுத்து ஞாநி கேட்டார்.  செக்ஸை எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அதில் vision இருக்க வேண்டாமா?
சரி, நான் கேட்கிறேன்.  அந்த விஷன் உள்ள ஒரு சில தமிழ் நாவல்களை ஞாநியால் சொல்ல முடியுமா?  சமீபத்தில் ஜி. நாகராஜனின் நாளை மற்றொரு நாளே என்ற நாவலைப் படித்தேன்.  30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உணர்வைக் கொடுத்ததோ அதே உணர்வைத்தான் இப்போதும் அது கொடுத்தது.  பார்த்திபனின் புதிய பாதையைப் போல்தான் இருந்தது அந்த நாவல். 


நாளை மற்றுமொரு நாளேயில் எல்லாமே அசட்டு உணர்வுகள்.   பாரதிராஜா படங்களில் பாடல் காட்சிகளில் நாம் பார்க்கும் பூக்களைப் போல் இருக்கிறார்கள் ஜி.நாகராஜனின் விபச்சாரிகள்.  கொடுமை.  கொடுமை.

 நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.  படித்த அத்தனை பேரும் கொண்டாடிய, ”ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி” என்ற என்னுடைய கதையை இன்று ஜூனியர் விகடன் நிருபர் கூட எழுதி விட முடியும்.  ஆனால் என்னுடைய மிகச் சிறந்த கதைகளான ”கர்னாடக முரசுவும், நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் பின்நவீனத்துவ ஆய்வும்”, the joker was here, நேநோ, ”பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” போன்ற சிறுகதைகளை தமிழில் என்னைத் தவிர வேறு யாருமே எழுதியிருக்க முடியாது.  உலக அளவிலும் இது போன்ற சிறுகதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்


 சி.பி - மொத்தத்துல நீங்க ஒலக ஃபேமஸ் ரைட்டர்னு சொல்றீங்க? அதானே? அதே தான்.. 

 

Wednesday, February 08, 2012

ரஜினியை கலாய்த்த சாரு நிவேதிதா,சாருவை கலாய்த்த ரஜினி ரசிகன்

http://www.tamilcnn.com/upload-files/feb_2012/hot/kochadaiyaan.jpg

சாரு -எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர்.  அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:


சி.பி - என்னது? உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா? பேடு பாய்ஸ்.. சரியா புரிய வெச்சிடலாம் 

1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  அப்படிச் சொல்வதற்கு நான் யார்?  இது ஒரு ஜனநாயக நாடு.  எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?  துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.  எப்படி?  பார்வையாளர்களில் ஒருவராக.  ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி?  அது பற்றியே என்னுடைய கேள்விகள்.



சி.பி - விழாவில்  கலந்து கொள்வது எல்லாம் அவங்கவங்க விருப்பம்.. அதுல எல்லாம் நொட்டு சொல்லிட்டு இருந்தா எப்படி?


அழைப்பிதழிலேயே தகராறு.  ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள்.  இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி.  நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?


சி.பி - யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கோ அவங்க ஃபோட்டோவை, பேரை பெருசா போஸ்டர்ல போட்டா இன்னா தப்பு?போஸ்டரை பார்க்கற ஜனங்களுக்கு ரஜினி வர்றது தெரிஞ்சா போதும், விழாவுக்கு வந்து பார்த்து எழுத்தாளரை தெரிஞ்சுட்டுப்போறாங்க.. 

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி.  அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு. 

சி.பி - பாவம், ரஜினி , ஆளாளுக்கு அவரை ஒப்புமைப்படுத்தறாங்க அவ்வ்வ் இன்னும் கொஞ்ச நாள் போனா வி சாரதி டேச்சு ஆனந்த விகடன்ல எழுதுன கடி ஜோக் போல ஆகிடும்

நானும் ரஜினியும் ஒரே இலைல தான் சாப்பிட்டோம்

அடடே.. அவ்ளவ் நெருக்கமா?

ச்சே. ச்சே.. அவரும் வாழை இலைல தான் சாப்பிட்டார், நானும் வாழை இலைல தான் சாப்பிட்டேன்.

என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர்.  மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர்.  மற்றும் இமயமலைப் பயணம்.  அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை.  பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி. 

சி.பி - சாரு ரஜினியை பாராட்ற ,மாதிரி ஏதோ ஒரு எழுத்தாளரை தாக்கறாரு.. இதான்யா தமிழன் பண்பாடு.. அடுத்தவனை தாக்காம ,மாற்றான் தோட்டத்து மல்லிகையை  நோக்காம தமிழனால இருந்துட முடியாதே?


அவர் நடிப்பது திரையில் மட்டுமே.  ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.


பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா?  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா?  அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?


சி.பி - சரி ஒரு வாதத்துக்காக கேட்கறேன், உங்க புத்தக வெளீயீட்டு விழாவுல ரஜினி பேச ஒத்துக்கறார், இப்போ சொன்ன அதே கண்டிஷன்ஸை நீங்க ரஜினிக்குப்போடுவீங்களா? அல்லது அவர் வந்தாலே போதும்னு நினைப்பீங்களா? விழாவுக்கு அவரைப்போல் வி ஐ பிங்களை அழைப்பதன் நோக்கம் மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்கத்தானே, அதுல என்ன தப்பு இருக்கு?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s1600/Balu-mahendra-010808.jpg
எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்?  அதுதானே நடைமுறை?  அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்? 

சி.பி - சார்.. உலக நடப்பு தெரியாம, தமிழனை பற்றி சரியா புரியாம பேசக்கூடாது.. ரஜினி பேசிட்டா எல்லாரும் கிளம்பிடுவாங்க.. கூட்டமே  இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்துவீங்க? 




சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன்.  இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா?  உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா?  இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள்.  அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள்.  ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும்.  அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.


சி.பி - அட, நீங்களும் அதுதான் சொல்றீங்களா?  சரி.. அதுல என்ன தப்பு  இருக்கு? 

இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும்.  கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்.   ஏன் அவர் இதைச் சொல்லவில்லை?  துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்?  அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்.  அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா?  எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?



சி.பி - இந்த மாதிரி வம்புகள் வரும்னு தான் அஜித் மாதிரி சிலர் பொது நிகழ்ச்சிகளுக்கு வர்றதையே அவாய்டு பண்றாங்க போல.. எது செஞ்சாலும் அதுல ஒரு குத்தம் கண்டு பிடிச்சுட்டு.. 


தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி.  அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன?  அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்?  மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா?  ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?  அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?


சி.பி - இலக்கிய வாசிப்பு தமிழனிடம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, அறவே இல்லைன்னு சொல்லாதீங்க.. வருடா வருடம் புத்தகத்திருவிழாவில் புக்ஸ் விக்குதே?


புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே?  மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது?  சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.  கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது?  தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது?  இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?

 சி.பி - ரஜினி ஒண்ணும் ஆன்மீகம் மட்டும் படிங்கன்னு மேடைல சொல்லலையே? அவருக்குத்தெரிஞ்சதை அவர் சொன்னார்.. அதுல என்ன தப்பு? நீங்க எழுதுன ஃபேன்சி பனியன் நாவல்ல கில்மா எதுக்கு? தவிர்க்கவும்னா நீங்க கேப்பீங்களா? அவங்கவங்க எதுல டேலண்ட்டோ அதுல பேச்சு, பழக்க வழக்கம் வெளிப்படறது  சகஜம் தானே?

http://www.kollytalk.com/wp-content/gallery/rajini-at-s-ramakrishnan-felicitated-event/rajini-at-s-ramakrishnan-felicitated-event-27.jpg

மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி:  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?  இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன்.  இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார்.  உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?

சி.பி - மேடை நாகரிகம் கருதி ஏதோ பேசிட்டார்.. அதுல போய் குறை சொல்றீங்களே? சக எழுத்தாளர் மேல அப்படி என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு? 


நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும்.  உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது.  பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது.  இதேபோல்தான் ஏஷியன் மேன் புக்கர் விருதும்.  ஆசியாவிலிருந்து வெளிவந்த நாவல்களிலிருந்து  (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  முதலில் long list… பிறகு short list.  கடைசியில் ஒரே ஒரு நாவல்.  அதற்குப் பெயர் கூட சர்வதேச விருது அல்ல; Asian Man Booker…  அது ஒரு ஆசிய விருது.  அவ்வளவுதான்.  எனவே இயல் விருது என்பது நம்முடைய கலைமாமணி விருதுக்கு சமமான ஒரு விருது என்பதே உண்மை.


சி.பி- குஷ்பூ கூட கலைமாமணி தான், போற போக்கை பார்த்தா அங்காடித்தெரு அஞ்சலி,ஆடுகளம் டாப்ஸினு ஆளாளுக்கு கலைமாமணி விருது வாங்கிடுவாங்க போல 

இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ”ரஜினி மிகப் பெரிய எழுத்தாளர்” என்று ராமகிருஷ்ணன் சொன்னதுதான்.  இதையாவது நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா?  கண்டித்திருந்தால் உங்கள் மதிப்பு கூடுமே ஒழிய குறைந்திருக்காதே?  அரசியலில் இப்படிப்பட்ட வீண் முகஸ்துதிகளை நீங்களே விரும்பியதில்லையே?  அப்படியிருக்க, உங்களை ஒரு ஒருவர் “மிகப் பெரிய எழுத்தாளர்” என்று சொன்னபோது உங்களுக்குக் கூச்சமாக இல்லையா?  நல்லவேளை, நீங்கள் பதிலுக்கு எஸ். ராமகிருஷ்ணனை “மிகப் பெரிய நடிகர்” என்று புகழவில்லை.  அப்படிப் புகழ்ந்திருந்தால் அது புகழ்ச்சிக்குப் பதிலாக வேறு விதமாக அர்த்தமாகி இருக்கும்…


பாவம், தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டியதில்லை.

சி.பி - உங்களைக்கூட நிறைய பேரு நல்ல கண்ணியமான எழுத்தாளர்னு சொல்றாங்க.. அதை யாராவது தட்டிக்கேட்டாங்களா? சார்.. மேடைல கொஞ்சம் உயர்வு நவிற்சியா ஏதாவது சொல்றதுதான்.. அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும். மோர் சாப்பிடுங்க லைஃப் நல்லாருக்கும்..வயிறு எரியாது

Monday, August 01, 2011

தமிழ் இனப்படுகொலைக்கு சீனா இலங்கைக்கு உதவியதா? கோவை ஞானி VS குமுதம் பேட்டி

http://koodu.thamizhstudio.com/images/kadhaisolli_5_kovai_gnani_3.jpg

கோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும் எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு இதழை நடத்தி வருகிறார். இப்போது `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார்.


மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும் தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத் தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், `நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாது, ஆழ்ந்த படிப்புணர்வின் மூலம் ஏற்பட்ட நுட்பம், அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது.


இவரது மனைவி இந்திராணி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன்கள் பாரிவள்ளல், மாதவன் ஆகியோர். ஞானி கோவையில் வசித்து வருகிறார்.


1.நீங்கள் படித்த சமயத்தில் திராவிட இயக்கம் பெருமளவுக்கு வளர்ந்துகொண்டு இருந்திருக்கும். பெரியாரும், அண்ணாவும் மக்களை பெருமளவு பாதித்தனர். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு ஏன் ஈடுபாடு ஏற்படவில்லை?


கோவை ஞானி : நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1955_58 கால அளவில் படித்தபோது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படாத அறிஞர் அண்ணா அவர்களை, அப்பொழுது கல்லூரி விடுதி செயலராக இருந்த திரு. பழ.நெடுமாறன் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் துணைவேந்தரோடு போராடி பல்கலைக்கழகத்திற்கு வரச் செய்தார்கள்.

அரசியல் கலவாத அண்ணா அவர்களின் பேச்சு எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. தமிழ் இலக்கிய மாணவனாகியஎனக்கு அறிஞர் அண்ணாவின் மேல் இன்றளவுக்கும் ஈர்ப்புக் குறையவில்லை. சிதம்பரத்திற்கும், அண்ணாமலை நகருக்கும் பெரியார் பலமுறை வந்திருந்தார். புராணம் முதலியவை குறித்த அவரது திறனாய்வை யாரால் மறுக்கமுடியும். இளமை முதற்கொண்டே எனக்குள் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தேன்.

தாகூர், விவேகானந்தர், அரவிந்தர் முதலியவர்களை விரிவாகக் கற்றுக்கொண்டும் இருந்தேன். எல்லாமே பிரம்மம் என்பதனை தியானத்தின் மூலம் எனக்குள்ளும் உணர்ந்தேன். வெற்றுச் சடங்குகள், வழிபாடுகள் முதலியவற்றில் எனக்கு எப்பொழுதும் நாட்டமிருந்ததில்லை. இலக்கியம், திறனாய்வு, வரலாறு, மெய்யியல், உளவியல் என்று என் ஆர்வங்கள் மிக விரிவாக இருந்தன.

பகுத்தறிவாதம் எனக்குப் போதுமானதாக இருக்கவில்லை. நானே பிரம்மம் என்ற என் அனுபவம், சில ஆண்டுகளுக்கிடையில் பிரபஞ்சம், வரலாறு, இயற்கை, சமுதாயம் ஆகிய அனைத்தையும் தழுவியதாக மாறியது. இத்தகைய ஆழமான புரிதல் என்னை மார்க்சியத்திற்குக் கொண்டு சேர்த்தது. கடவுளைக் கைவிட்டு மார்க்சை ஏற்றேன்.



2: தமிழிலக்கிய மாணவராகிய உங்களுக்கு மார்க்சியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்துச் சொல்லுங்கள்.

கோவை ஞானி : என் இளமைக்காலம் உழவர்களும், நெசவாளர்களும் வாழ்ந்த கிராமத்தில் கழிந்தது. இயற்கைச் சூழல் உழைப்புக்குத் தயங்காத உழவர்கள். கலையுணர்வுமிக்க நெசவாளிகள் இந்த கிராமத்து ஏழை உழவர்கள், புன்செய் நிலம். இயற்கைக்கு நெருக்கமான வாழ்வு. இவையனைத்தும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன.

இந்த உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கை என்றைக்கும் உறுதிபட வேண்டும். இதை யாரும் பறித்துக்கொள்ளக் கூடாது. 1947-க்கு முன்னர் விடுதலை உணர்வோடு கூடிய நெசவாளர்கள் மத்தியில் நாங்கள் இருந்தோம். என் தந்தையார் வழியிலும் தேச உணர்வு, விடுதலையுணர்வு என் நெஞ்சில் குடியேறிற்று. காந்தி, நேரு, நேதாஜி முதலியவர்கள் மீது அளவுகடந்த மரியாதை இருந்தது. விடுதலைக்குப் பிறகு எல்லோருக்கும் நல்வாழ்வு கிட்டும் என்று நம்பியிருந்தோம்.


எல்லாமே பொய்யாய் பழங்கனவாய்ப் போயின. 47, 48 காலத்தில் வறுமை நிலை எங்கள் அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருந்தது என்பதையும் கூடுதலாகச் சொல்லவேண்டும். இது ஒருகாரணம்.


கோவையில் கல்வி கற்றேன். கோவையில் பணிபுரிந்தேன். தொழிற்பெருக்கம் மிகுந்த நகரம் கோவை. தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்கள். இவர்களது மத்தியில் என் வாழ்வு. கோவைப் பகுதியில் வாழும் ஒருவர் மார்க்சியத்தால் ஈர்க்கப்படாமலும் இருக்கமுடியாது. தஞ்சை, திருச்சி பகுதி என்றால் பெரியாரியத்தால் ஈர்க்கப்படாமல் இருக்கமுடியாது என்பது போல. கோவையில் பணிபுரிந்த காலத்தில்தான் புலவர். ஆதி, எஸ்.வி.ஆர்., தோழர் எஸ்.என். நாகராசன் முதலியவர்கள் மூலம் மார்க்சியத்தை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு நேர்ந்தது.



நான் மார்க்சியத்தை ஏற்பதற்கு இவை அடிப்படையான காரணங்கள். பூர்வீகச் சொத்து எங்களுக்கு இல்லை. ஏதாவது தொழில் செய்துதான் பிழைத்தாக வேண்டும். சாதியில் நான் பிராமணனும் இல்லை. உழவர்கள் தொழிலாளர்களோடு உறவு. இவர்களோடுதான் எங்களுக்கும் வாழ்வு. விடுதலைக்குப் பிறகு எல்லா நம்பிக்கைகளும் பொய்யான நிலைமை. 68இல் கீழ்வெண்மணி. மார்க்சியம் மட்டுமே எங்களுக்கு விடுதலை தரமுடியும். நேரு, காந்தி, குருஷேவ் முதலியவர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கையை எனக்குள்ளிருந்து கலைத்தவர் நாகராசன்.

சோவியத் ஒன்றியத்தில் முதலாளியம்தான் நிலை நிறுத்தப்படுகிறது என்ற உண்மையை நிதானமாகவே அறிந்துகொண்டேன். 68இல் `வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று சொல்லப்படுகிற நக்சல் பாரி இயக்கம் எங்கள் எல்லோரையுமே ஈர்த்தது. மாவோ சிந்தனைக்கு நாங்கள் வசப்பட்டோம். தொடர்ச்சியான படிப்பு. இயக்கத்தோடு குறைந்த அளவுக்கேனும் தொடர்பு. இப்படித்தான் மார்க்சியம் என்னை வசப்படுத்திக்கொண்டது.

சிறு வயது முதலே கடவுளைக் காணவேண்டுமென்ற என் விடாப்பிடியான ஆர்வம் ஒரு கட்டத்தில் தியானத்தின் மூலம் நானே பிரம்மம் என்று உணர்ந்து, பிறகு இத்தகைய உணர்வுக்கு என்ன ஆதாரம் என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு, மார்க்சியத்திற்கு எனக்குள் இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எனது முன்னைய இறுக்கம் எனக்குள் கலைந்து பிறகு மெல்ல மெல்ல மார்க்சியத்திற்கு நான் வசப்பட்டேன். மார்க்சியம்தான் எனக்குள்ளிருந்த சமய உணர்வுக்கான தெளிவையும் தந்தது.

நான் முதல் தரமான தமிழிலக்கிய மாணவன். எனக்கு வாய்த்த பேராசிரியர்கள் தகுதிமிக்கவர்கள். என் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வு கைலாசபதி முதலியவர்கள் மூலம் என்னை மார்க்சியத்தோடு முழுமையாக இணைத்தது. மார்க்சியத்தின் மூலம் தமிழிலக்கிய ஆய்வில் புதிய வெளிச்சங்களைப் பெற்றேன். தமிழிலக்கிய ஆய்வுக்கு மார்க்சியம் இல்லாமல் முடியாது என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

3. கண் பார்வையிழப்பு உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? இந்த இழப்பை எப்படித் தாங்கிக் கொண்டீர்கள்? இழப்பிற்குப் பிறகும் இடைவிடாது படிப்பதும், எழுதுவதுமாக இருக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகிறது?


கோவை ஞானி : 1988-இல் நீரிழிவு நோய் காரணமாகப் பார்வையிழப்புத் தொடங்கியது. லேசர் மருத்துவம் செய்துகொண்டபிறகும் பார்வையிழப்புத் தொடர்ந்தது. கோவையில் மருத்துவர் இராமமூர்த்தி அவர்களிடம் உண்மையில் எனக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டபோது, மிகுந்த அக்கறையோடு எனக்கு விளக்கம் தந்தார். பார்வையை மீண்டும் பெற இயலாது என்ற நிலையில் ஒரு கணம் நான் திகைத்தேன்.

வேறு வழியில்லை. என் மரியாதைக்குரிய தலைமை ஆசிரியரும் எனக்குப் பதிலாக என் ஊதியத்தில் ஒரு பகுதியைத் தந்து இன்னொருவரைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கலாம் என்று கூறினார். என் பணியை நானே செய்யவேண்டும். நான் ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். என் இடத்தில் இன்னொருவர் அமர்ந்து முழுமையான ஊதியம் பெறட்டும் என்ற நிலையில் பணியிலிருந்து விடுவிப்பை வேண்டினேன்.

கல்லூரியில் படித்த காலத்திலும் கோவையில் பணியாற்றிய காலத்திலும் தமிழிலக்கிய திறனாய்விலும், மார்க்சியத்திலும் பெருமளவு என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். நிறைய எழுதிக்கொண்டும் இருந்தேன். ஆசிரியப் பணியில் அரைத்த மாவையே அரைப்பது எனக்குப் பெரும் சலிப்பாக இருந்தது. கண் பார்வையிழப்பு எனக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதவியாளர் ஒருவரை வைத்துக்கொண்டு நிறையப் படிக்கவும், எழுதவும் முடிகிறது.

இதைத்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் செய்து வருகிறேன். என் சமூக ஈடுபாடும், தமிழிலக்கியக் கல்வியும் மார்க்சியமும் அற்புதமான நண்பர்களும் என் குடும்பச் சூழலும், என் எழுத்துக்கும் படிப்புக்கும், நூல் வெளியீட்டிற்கும் இதழ் பணிகளுக்கும் ஆதரவாக அமைந்தன. அமைகின்றன. கற்பதிலும், செரித்துக்கொள்வதிலும் இளமைத்தொட்டே எனக்கு இருந்த ஈடுபாடு இன்றளவும் குறையவில்லை.

4. `புதிய தலைமுறை’ தொடங்கி இன்றுவரை ஏதாவது ஒரு இதழ் பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறீர்கள். அதுபற்றி நீங்கள் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

கோவை ஞானி : 1968-70 கால அளவில் எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ஆர்., புலவர் ஆதி முதலியவர்களோடு நானும் இணைந்து `புதிய தலைமுறை’ என்ற கலை இலக்கியத் தத்துவ இதழை நடத்தினோம். சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளிலிருந்து மாறுபட்டு மாவோவின் சிந்தனையை தமிழகச் சூழலில் முதன்முதலில் உள்ளடக்கமாகக் கொண்டுவெளிவந்த இதழ் இது. எங்கும் எதிலும் தமிழ் என்று எழுதினோம்.

பாரதிதாசனைப் பாராட்டினோம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்த புதிய ஆய்வுகளை வெளியிட்டோம். அந்நியமாதலுக்கு அழுத்தம் தந்து படைப்புக்களை வெளியிட்டோம். மார்க்சியத்திற்குள் புதிய காற்றைக் கொண்டு வந்தது இந்த இதழ்.

சோவியத் இரஷ்யாவிலிருந்தும் மாவோவின் சீனத்திலிருந்தும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான மார்க்சியத்தோடு மேலை உலகில் அல்தூசர் முதலியவர் மூலம் மார்க்சியத்திற்குள் வந்த புதிய பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளும் முறையிலும், தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் முறையிலும் 79-80களில் `பரிமாணம்’ என்ற இதழை நடத்தினோம்.

இந்திய வரலாற்றின் தனித்தன்மைகள் தமிழ்ச்சூழலில் இலக்கியம், மெய்யியல் முதலியவை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டோம். ஸ்டாலின் பிரச்சனை என்ற முறையில் உலக அளவில் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களை ஒரு தனி இதழாக வெளியிட்டோம். மாவோவிற்குப் பிறகு சீனம் என்ற முறையில் இன்னொரு தனி இதழ். கோசாம்பி, கால்டுவெல், அல்தூசர், தாமோதரன் குறித்த கட்டுரைகளும் வெளியிட்டோம்.

இடையில் 70-72 வாக்கில் வானம்பாடி இயக்கத்தினுள் நான் இருந்தேன். தமிழில் புதுக்கவிதையை மார்க்சிய உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுப்பது வானம்பாடி இயக்கத்தின் நோக்கம். புலவர்களிடமிருந்து மக்களிடம் கவிதையைக் கொண்டு சேர்க்கும் ஒரு சனநாயக இயக்கம் இது. உலகம் முதல்முறையாக தமிழ்க் கவிதைக்குள் இவ்வியக்கத்தின் மூலம்தான் வந்தது என்று சொல்வதில் தவறில்லை. தி.மு.க.விற்கு எதிரான கவிதை இயக்கமும் இது. கவிதை என்றால் என்ன என்று நாங்களும் கற்றுக்கொண்டிருந்தோம்.


1983-இல் `நிகழ்’ இதழைத் தோற்றுவித்தோம். 88-ல் கண்பார்வை இழந்த நிலையில் `நிகழ்’ இதழை நண்பர்கள் ஒத்துழைப்போடு நானே பொறுப்பேற்று நடத்தினேன். 1996 வரை 32 இதழ்கள். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் `நிகழ்கள்’ பங்களிப்பை யாரும் மறுக்க இயலாது. சோவியத் ஒன்றியத்தில் சோஸலிசம் தகர்ந்த நிலையில், இனி மார்க்சியத்திற்கு வாழ்வு இல்லை என்று பலரும் நம்பிய சூழலில் உண்மையில் மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு என்ற முறையில் தோழர் எஸ்.என். நாகராசன் அவர்களின் தூண்டுதலோடு `நிகழ்’ வகைவகையான கட்டுரைகளை வெளியிட்டது. `நிகழி’ன் சிறப்பான கட்டுரைகளை `இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்’, `அறிவியல், அதிகாரம், ஆன்மிகம்’, `மார்க்சியம் தேடலும் திறனாய்வும்’, சில சிகரங்களும் வழித்தடங்கலும்’, `நிகழ் மதிப்புரைகள் நூறு’ என்று 5 தொகுப்புகளில் நூல்களாக நாங்கள் வெளியிட்டோம்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம் என்ற முறையில் தமிழகச் சூழலில் நடைபெற்ற பெரும் விவாதங்களை உள்வாங்கி மார்க்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தோம். `நிறப்பிரிகை’யோடு கடுமையான மோதல் ஏற்பட்ட சூழலில் இப்பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம். சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள், மதிப்புரைகள் என ஏராளமாக வெளியிட்டோம். எத்தனையோ புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம்.

1998 முதல் இன்றுவரை தொடர்ந்து `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறேன். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நம் காலச்சூழலில் நேர்ந்திருக்கிற நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றும் முறையில் சிறப்பான ஆய்வுகளைத் தொடர்ந்து வெளியிடுகிறது தமிழ்நேயம். தமிழ்த் தேசியம் என்பது இதன் மையம். இயற்கை வேளாண்மை, சூழலியம் குறித்த கட்டுரைகள்.

தமிழியல் ஆய்வுகள் - இதுவரை - இன்று என்ற முறையில் கட்டுரைகள் தமிழனுக்கு உலகப் பார்வை தேவை என்ற முறையில் திறனாய்வுகள் இப்படிப் பலவகையான கட்டுரைகள், `தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’, `தமிழனுக்கு மெய்யியல் உண்டா’, `தமிழனுக்கு மெய்யியல் உண்டு’, `தமிழின் ஆக்கம் -தடையும் விடையும்’, `எஸ்.பொ. படைப்பும் பார்வையும்’ ஜெயமோகனின் `கொற்றவை படைப்பும், பார்வையும்’, `அறிஞர் அண்ணா - பன்முகப் பார்வை’, `தோழர் எஸ்.என். நாகராசன் வினாவும் - விடையும்’ இம்முறை இவ்வகையிலான தலைப்புகளில் தனித்தனி சிறப்பிதழ்கள் இவற்றோடு 98 முதல் இன்றுவரை தேர்வு செய்த பெண் எழுத்தாளர் சிறுகதை தொகுப்புகள் 13 வெளியிட்டோம். இவை சுருக்கமாக என் இதழ் பணிகள்.


5.  க.நா.சு. முதல் சுந்தர ராமசாமிவரையிலான தமிழ் நவீன இலக்கியத்திற்கு முக்கியமான பங்காற்றியவர்களை மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லையே. உங்களால் மட்டும் எப்படி ஏற்க முடிந்தது?


கோவை ஞானி : கலை இலக்கியங்களின் உள்ளடக்கம் வர்க்கப் போராட்டமாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய அடிப்படையிலிருந்துதான் கலை இலக்கியப் படைப்புகள் உருவாக வேண்டும். வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியக் கட்சிக்கு, தொழிற்சங்கத்திற்கு கட்சித் தலைமைக்கு இடமில்லாமல் முடியாது. தலைவர்கள் புனிதமானவர்கள். நிலவுடைமையாளர்களும், உரிமையாளர்களும் கொடுமைக்காரர்கள், அயோக்கியர்கள். உழைப்பாளிகள் புனிதமானவர்கள்.

இத்தகைய படிமங்களோடுதான் இவர்களைப் படைக்கவேண்டும். நடுத்தர மக்கள் - படிப்பாளிகள் முதலாளியத்திற்கு சேவகம் செய்பவர்கள் கலை இலக்கியத்தில் உருவத்திற்கு, கலை உணர்வுக்கு, அழகியலுக்கு முதன்மை இல்லை. உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை. இதுதான் கட்சி மார்க்சியரின் திறனாய்வுப் பார்வையாக இருந்தது. இவ்வகையான பார்வை ஸ்டாலின் காலத்தில் உருவான ஸ்தானோவியம் என்ற பார்வையின் தொடர்ச்சி. இதன் காரணமாகத்தான் க.நா.சு. முதலியவர்களைக் கட்சி மார்க்சியர் சாடினர்.

க.நா.சு. முதலியவர்களுக்கு மார்க்சியர் சொல்லுகிற வரலாறு மற்றும் பொருளியல் அடிப்படையிலான விஞ்ஞானக் கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற பார்வை இல்லை என்பது உண்மைதான். இலக்கியம் என்பது அரசியல் ஆவணமாகத்தான் இருக்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. வர்க்கக் கண்ணோட்டத்தை ஏங்கெல்ஸ் கூறுகிற மாதிரி தட்டில் வைத்துத்தான் வழங்கவேண்டும் என்பதும் உண்மையில்லை.

இத்தகைய பார்வைதான் மார்க்சுக்குள் அழுத்தமாக இருந்திருக்குமென்றால் ஷேக்ஸ்பியரையும் பால்சாக்கையும் அவர் கொண்டாடியிருக்க முடியாது. டால்ஸ்டாயை லெனின் கடிந்து ஒதுக்கியிருக்க வேண்டும். இத்தகைய பார்வையில் கார்க்கி, மாயகோவ்ஸ்கி முதலியவர்களும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இவையெல்லாம், கட்சி மார்க்சியர் வழியே மார்க்சியத்திற்குள் வந்த திரிபுகள் / விபத்துக்கள். க.நா.சு. முதலியவர்களுக்குள் சமூகம் பற்றிய அக்கறை இருந்தது என்பதை மார்க்சியர் மறுக்கமுடியாது.

அரசியலின் தேவைக்காக வளமான கலை இலக்கியங்களைப் பலியிட முடியாது. கட்சி மார்க்சியரின் பார்வையில் வள்ளுவர், இளங்கோ முதலியவர்களும் திறனாய்வு என்ற முறையில் விமர்சனம் செய்யப்பட்டார்கள். மனித வாழ்வின் பலவிதமான பரிமாணங்களில் ஒன்று அரசியல். அரசியல் தேவைதான் என்றபோதிலும் மனிதனின் அழகியல், அறிவியல் முதலியவற்றை இழக்க வேண்டியதில்லை. ஆண்-பெண் உறவு பற்றி மார்க்சியருக்கு அக்கறை இல்லை.

காமம் வெறுக்கத்தக்கது என்ற முறையில்தான், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் முதலியவர்களும் சாடப்பட்டார்கள். க.நா.சு.வை சி.ஐ.ஏ. என்று  கைலாசபதி சாடினார். வாழ்வுக்கு அர்த்தம் தேடும் இருத்தலியல் மார்க்சியத்திற்குத் தேவையில்லை. சமயம் எப்பொழுதுமே அபின். குழந்தைகள் பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. இயந்திர நாகரிகம் வாழ்வை நாசமாக்குவது பற்றி மார்க்சியருக்குப் பார்வையில்லை. க.நா.சு.வின் `பொய்த்தேவு’ நாவலை மார்க்சியர் பாராட்டியிருக்க வேண்டும். `

இதய நாதம்’ நாவலை கைலாசபதியும் பாராட்டினார். கட்சி மார்க்சியம், பொருளாதாரவாதமாக, தொழிற்சங்கவாதமாக, அதிகாரமாக மாறிய சூழலில் இவர்களோடு க.நா.சு. முதலிய கலைஞர்கள் ஒத்துப்போக முடியாது. மார்க்சிய அரசியலும் பெரியாரியத்தை, திராவிட இயக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், முற்றாக மறுத்தது. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகள், படைப்பாளிகள் கட்சிக்கு அடிமையாக முடியாது. கட்சிக்கு இத்தகைய அடிமைகள், கூலிகள் தேவை. தமிழகச் சூழலில் கட்சி மார்க்சியர் என்பவர் மார்க்சியத்தின் ஆழ, அகலங்கள் தெளிந்தவராகவும் இல்லை. ஜீவா, ஆர்.கே. கண்ணன், விஜயபாஸ்கரன் முதலியவர்களை கட்சி மார்க்சியர்கள் ஒதுக்கவும் செய்தார்கள்.

மார்க்சியருக்கு அக்காலத்தில் தமிழ் தேசியப் பார்வை இல்லை. தமிழிலக்கியத் திறனாய்வையும் இவர்கள் வர்க்கப்போராட்டம் என்பதையே முதன்மையாக வைத்துப் பார்த்தார்கள். தமிழ் அழகியல் தமிழறம் இவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. சமயத்தை ஒதுக்கிவிட்டு தமிழிலக்கியம் கற்கவும் முடியாது. கம்பர் கொஞ்சம் தப்பிப் பிழைத்தார். பாரதியும் தப்பித்தார். வரலாற்றில் கட்சி மார்க்சியர் இப்பொழுது கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தம்மைத் திருத்திக்கொண்டிருக்கிறார்கள்.

6. வானம்பாடி இயக்கத்திலும் இருந்துள்ளீர்கள் வானம்பாடிக் கவிஞர்களின் போலியான புரட்சி முழக்கங்களும் கற்பனை வாதங்களும் இன்று பார்க்கும்போது உவப்பாக இல்லை. வானம்பாடிக் கவிஞர்கள் மேத்தா, புவியரசு, சிற்பி ஆகியவர்கள் புரட்சிக்காரர்களாக மாறவில்லையே? இதற்கான அரசியல் தத்துவக் காரணங்கள் ஏதும் உண்டா?

கோவை ஞானி : மரபுக் கவிதைகளுக்கு எதிராக சி.சு. செல்லப்பா, க.நா.சு.முதலியவர்கள் புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். மரபுக் கவிதைகள் சாரமற்று வெறும் எதுகை மோனையாக யாப்பாக மாறிய நிலையில், வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கம் செல்லப்பா முதலியவர்களுக்கு எதிர்வினை தருவதாக இருந்தது.

செல்லப்பா முதலியவர்களின் புதுக்கவிதை இயக்கம் அதிக அளவு மனத்தின் குரலாக, படிமமாக, குறியீடாக, மார்க்சிய, திராவிட இயக்கங்களின்  எதிர்வினையாக இயங்கியது, பாரதியின் தொடர்ச்சியாகத் தங்களை இனம் கண்டுகொண்ட வானம்பாடிகள் 1967-க்குப் பின் அரசியல் அதிகாரத்தில் நுழைந்து சீரழிந்த திராவிட அரசியலுக்கு எதிர்நிலையாகவும் மார்க்சிய நோக்கில் உலகப் பார்வை மற்றும் சமூகப் பார்வையை சாதி எதிர்ப்பு பெண்ணடிமைத்தன எதிர்ப்பு முதலியவற்றை உள்வாங்கிக் கொண்ட கவிதை இயக்கமாகத் தோன்றியது.

வானம்பாடிகளில் பலர் தமிழாசிரியர்களாக இருந்தபோதிலும் யாப்பு மரபுகளைப் புறக்கணித்ததோடு படிம, குறியீடு முதலிய உத்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்கள். சொன்னதையே திரும்பச் சொல்லுகிற மரபு முறையைக் கைவிட்டார்கள். கட்சி மார்க்சியர் தொடக்கத்தில் வானம்பாடிகளை மறுத்தார்கள். காரணம், கட்சி அதிகாரத்தை இவர்கள் ஏற்கவில்லை.

காலங்காலமாகக் கவிதையென்பது மனத்தின் குரலாக மட்டுமல்லாது சமுதாயத்தின் குரலாக, அறத்தின் குரலாக, சில சமயம் போர்க்குரலாகவும் வெளிப்பட்டு இருப்பதைக் கவிதை வரலாறு அறிந்தவர்கள் மறக்கமாட்டார்கள். வானம்பாடிகள் இயக்கம் வளர்ச்சி பெற்ற வேகம் வியக்கத்தக்கதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர் கவிதை எழுதினார்கள்.

தமிழ் மரபின் தொடர்ச்சியால்தான் வானம்பாடிக் கவிஞர்களை வைத்துப் பார்க்கமுடியும். வானம்பாடியின் 23 இதழ்களில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து வைத்து உண்மையான தரத்தோடு கூடிய கவிதைகள் என ஒரு 100 கவிதைகளையாவது தெரிவு செய்யமுடியும். வானம்பாடி இயக்கத்தினுள் முரண்பாடுகள் இருந்தன. கவிதை இயக்கமாக இருப்பது மட்டுமே போதாது. இலக்கிய இயக்கமாக, திறனாய்வு இயக்கமாக மாறவேண்டும். மார்க்சியத்தில் மேலும் தெளிவு பெறவேண்டும். உறுதி பெறவேண்டும் என்ற எதிர்க்குரல்கள் நாளடைவில் ஒதுக்கப்பட்டன. நெருக்கடி நிலைக்காலத்தில் வானம்பாடி இயக்கம் `இந்திராவே இந்தியா’ என்று குரல் எழுப்பியதோடு, கலை இலக்கியப் பெருமன்றத்தினுள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டது.

மேத்தா முதலியவர்கள் பற்றி தொடக்கம் முதலே விமர்சனம் இருந்தன. உணர்ச்சிகரமான முழக்கங்கள் கவிதையின் உயிராக இருக்கமுடியாது. வானம்பாடிகள் நடுத்தர வர்க்கத்தினர். எதிர்காலத்தில் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதில் உறுதிகொண்ட இவர்கள் கற்பனாவாதத்திற்குள்ளிருந்து கவிதையாக்கம் செய்வதைத் தவிர்க்கமுடியாது. கவிதை இயக்கம் ஓய்ந்த பிறகும் புவியரசு, சிற்பி முதலியவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். சிற்பியின் கிராமத்து நதி, பாரதி கைதி எண். 2053, சூரிய நிழல் முதலிய அற்புதமான படைப்புக்களைப் படைத்திருக்கிறார்.

தொடக்கம் முதலே புவியரசுவின் அற்புதமான கவிதைகளை யாரும் மறுக்கமுடியாது. இருத்தலியல் நோக்கி பிரபஞ்ச சூழலில் மனித வாழ்வுக்கு என்ன அர்த்தம் என்ற முறையில் புவி எழுதிய `மீறல்’ கவிதைகளை யாரும் மறுப்பதற்கில்லை. இளமுருகு, கங்கைகொண்டான் ஆகியவர்களின் கவிதைகள் நேர்த்திமிக்கவை. ஞானி, ஜீவஒளி, சி.ஆர். இரவீந்திரன், தமிழ்நாடன், தமிழன்பன் முதலியவர்கள் தமிழ்ச்சூழலில் இன்றும் ஆற்றலோடு வகைவகையான படைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வானம்பாடி கவிஞர்களுக்குள் இருந்த புரட்சிகர உணர்வு, அவர்களை கட்சி சார்ந்த புரட்சிக்காரர்களாக மாற்றியிருக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும். தமிழ்க்கவிதையில் இவர்களில் சிலர் நிலைபெற்றிருக்கிறார்கள். வானம்பாடி இயக்கம் வெறுக்கத்தக்கதாக நான் கருதவில்லை.


7. எஸ்.பொ.வின் சடங்கு, தீ முதலிய படைப்புகள் அவை எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை காமம் சார்ந்தவை என்றும், இதன் காரணமாகவே மார்க்சியராக அவர் இருக்கமுடியாது என்றும் மார்க்சியர் சாடும்பொழுது அவரை நீங்கள் இன்றும் கொண்டாடுகிறீர்களே?
கோவை ஞானி : மனிதனின் வாழ்வியல் அனுபவத்திலிருந்து காமம் என்பதை விலக்கிப் பார்க்கவே முடியாது. காமம் குறித்த சரியான அணுகுமுறை இல்லையென்றால் என்னவெல்லாம் நேரும் என்பதற்கு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் முதலிய படைப்புகள் தக்க சான்று. காமத்தை அழித்தால் மட்டுமே மனித விமோசனம் சாத்தியம் என்று மதவாதிகள், துறவிகளின் போலித்தனமான போதனைகள் நெடுங்காலமாக நம் மக்களைக் கடுமையாகப் பாதித்து வந்துள்ளன.

இயல்பான காம உணர்வைஅடக்குவதனால் மனித ஆளுமை சிதையத்தான் செய்யும். காமத்தைப் பல வகைகளிலும் தூண்டி வளர்ப்பதை ஒரு பெரும் வணிகமாக முதலாளியம் மாற்றியிருக்கிறது. தற்காலச் சூழலில் காமம் ஒரு வணிகப் பொருள். மார்க்சியருக்கு இது தெரியும். காமம் ஒரு பாவம் என்று சமயவாதி கருதுவது போலவே காமம் குறித்துப் பேசவே கூடாது என்று பேசும் மார்க்சியனும் காமத்திற்கு மறைமுகமாக இடங்கொடுத்து தன் இழிசெயல்களை மறைத்துக்கொள்வது பற்றி இங்கு ஆதாரங்கள் தரவேண்டியதில்லை.

எஸ்.பொ.வின் படைப்புகளில் யாழ்ப்பாணத்து நடுத்தர வேளாளர் குடும்பத்து இளைஞர்களும், பெண்களும் திருமணத்திற்குப் பிறகும் வாய்ப்புக் கிடைக்காத சூழலில் தவிப்பது முதலிய அனுபவங்களை விரிவாக எழுதுகிறார். போலித்தனமாக மார்க்சியன் ஒதுக்குவதைப்போல எஸ்.பொ. ஒதுக்கவில்லை. அன்றியும் காமம் பற்றி மட்டுமே எஸ்.பொ. காலமெல்லாம் எழுதிக்கொண்டும் இருக்கவில்லை.



கைலாசபதி முதலியவர்களுக்கு முன்பே மார்க்சிய இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எஸ்.பொ. தொழிற்சங்கப் பணியிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். எஸ்.பொ.வின் ஆற்றல்மிக்க படைப்புத்திறனும் அவர் பெரிதும் கொண்டாடிய தமிழ்த்துவம், தமிழ் தேசியத்தோடு கைலாசபதி முதலியோர்க்கு உடன்பாடில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது தொழிற்சங்கமாக இருக்கமுடியாது என்பதும் எஸ்.பொ.வின் கருத்து. வேண்டியவர்களுக்குப் பரிசு வழங்குவதும், பாராட்டுவதும் இவர்களின் தொழிற்சங்க நியதி.

எஸ்.பொ.வின் கனத்தை இவர்களின் நொய்மையான படகால் தாங்கமுடியவில்லை. தமிழ்த்தேசியத்திற்கு எதிராக சிங்களத் தேசியத்தோடு ஒத்து உயர்பதவியில் தம்மை அமர்த்திக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களை அசலான மார்க்சியர் என்று சொல்வதற்குக் கொஞ்சம் முட்டாள் தனமும் தேவை.


8. புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளில் முக்கியமானவர்கள் கவிஞர் சேரன், அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்கள். ஆனால் நீங்கள் `வரலாற்றில் வாழ்தல்’ நூலுக்காக எஸ்.பொ.வையே பெரிதும் பாராட்டுகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?


கோவை ஞானி : சேரன், முத்துலிங்கம், ஷோபாசக்தி முதலியவர்களைக்  குறைந்த அளவுக்கேனும் நானும் படிக்கிறேன். புரிந்துகொள்கிறேன். இவர்கள் படைப்புக்களின் தனித்தன்மை குறித்தும் எனக்கு மரியாதை உண்டு. சேரனின் கவித்துவச் செழுமையை யாரால் மறுக்கமுடியும். முத்துலிங்கத்தின் வாழ்வியல் அனுபவ வளத்தை யாரால் பாராட்டாமல் இருக்கமுடியும். ஷோபா சக்தியின் படைப்புத்திறன் வியக்கத்தக்கது.

நம் மனத்திற்குள் பெரும் தீயாய் சுழன்று அடித்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் குறித்து இவர்களின் நிலைப்பாடுகள் எத்தகையதாய் இருந்தபோதிலும் இதன் காரணமாக இவர்கள் படைப்புத்திறனையோ தமிழிலக்கியத்திற்கு இவர்கள் பங்களிப்பையோ நான் மறுக்கமாட்டேன். ஒரு வகையில் சரியாகச் சொன்னால் இவர்கள் இளைய தலைமுறையினர் என்றால் நான் இவர்களுக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவன்.

எஸ்.பொ.வின் தலைமுறையும், என் தலைமுறையும் ஒத்த தலைமுறை. எனக்குள் நான் பழசாகிவிடவில்லை. இளைய தலைமுறையை இயன்றவரை புரிந்துகொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். எஸ்.பொ. அவர்களின் ஆளுமை இவர்கள் எவரையும்விட ஆழமானது. விரிவானது. செரிவானது. எஸ்.பொ.வின் `வரலாற்றில் வாழ்தல்’ என்ற அவரது தன் வரலாறு, தமிழுக்கு நம் காலத்தில் கிடைத்த மாபெரும் சொத்து.

வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் தன் கால வரலாற்றுச் சூழலில் இருந்து தனக்குள் கண்டு அற்புதமாக எஸ்.பொ. எழுதுகிறார். இலங்கை, இந்தியா மற்றும் உலக அளவிலான வரலாற்று இயக்கத்திற்குள் தன்னைக் கண்டு, இதன் காரணமாகவே தனக்குள் மாபெரும் ஆளுமையைத் தாங்கி, தமிழுக்கு இன்னொரு இதிகாசத்தைத் தந்திருப்பவர் எஸ்.பொ. என்னதான் அவரை விட்டு விலகிச் சென்றாலும் சேரன் முதலியவர்கள்  எஸ்.பொ.வின் பிள்ளைகள்.

தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான நூல் என்று ஒன்றைச் சட்டெனச் சொல்வதென்றால், `வரலாற்றில் வாழ்த’லைத்தான் நான் சொல்வேன். இந்தப் பெருமைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஈழத்தமிழகம் சார்ந்த வரலாற்று நெருக்கடியை நம்மால் எப்படி செரித்துக்கொள்ள முடியும்?


http://thoughtsintamil.blogspot.com/images/tlit2004/varalatril.jpg
9. சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியே வந்திருக்கின்றன. இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பரிசு வழங்கியிருப்பது பற்றி ஒரு திறனாய்வாளராய் என்ன நினைக்கிறீர்கள்?


கோவை ஞானி : சாகித்திய அகாதெமியின் விருதுகள் தந்த வரலாற்றை இன்று திரும்பிப் பார்க்கும்பொழுது நமக்கு உவப்பாக இல்லை. இரண்டாந்தர, மூன்றாந்தரப் படைப்புகள் கூட, படைப்பாளிகள் கூட விருது பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். தமிழில் தகுதி வாய்ந்த எத்தனையோ படைப்பாளிகளுக்கு விருது தரப்படவில்லை. இதில் தொடர்பு பெற்றவர்கள் தமிழுக்குக் கேடு செய்தவர்கள்.

படைப்பின் தரம் குறித்து தெரிவு செய்யும் தகுதியற்றவர்கள். நடுவர் குழு என்பதை நாம் காய்வதற்கான நியாயங்கள் பல உண்டு. மலையாளத்திலோ, கன்னடத்திலோ தகுதிக்குறைவான படைப்பாளிக்கு விருது வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். தமிழனுக்கு நேர்மைத்திறம் இல்லை என்று சொல்வதில் தவறில்லை.

இப்போது மேலாண்மை பொன்னுச்சாமிக்கு விருது கிடைத்த கதையை இதற்குள்ளே நண்பர்கள் சிலர் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடுவர் குழுவுக்கு வந்த படைப்புகளில் ஜெயமோகனின் `கொற்றவை’க்கு இணையான படைப்பு என்று எதையும் சொல்லமுடியாது. `ஜெயமோகன் தமிழ்த் துரோகி. அவருக்கு விருது வழங்கக்கூடாது’ என்றாராம் ஒரு நடுவர். கொற்றவையைப் படிக்கவே முடியவில்லை’ என்றாராம் இன்னொருவர்.

கொற்றவையை ஒதுக்கிவிட்டால், சி.ஆர். இரவீந்திரனின் நாவலுக்கு விருது வழங்கப்பட்டிருக்கலாம். சிற்பிக்கு அவர் மிக நெருக்கமானவர். `வேண்டாம்’ என்றாராம் சிற்பி. சிற்பியின் கருத்தை நடுவர் குழு ஏற்க வேண்டியதில்லை. அப்புறம் மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதை தொகுப்பிற்கு விருது கிடைத்திருக்கிறது. பொன்னுச்சாமியின் `மின்சாரப் பூக்கள்’ தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச் சாதாரணமானவை.

வேறு இந்திய மொழிகளில் இக்கதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவரும்போது, தமிழுக்கு என்ன மரியாதை கிடைக்கும். விருது பற்றிய விவாதத்தை வெளியில் சொல்வது நாகரிகம் இல்லை என்பார்கள் நாகரிகத்திற்கு ணி அடிப்பவர்கள்.

11.  மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசனுக்கும், உங்களுக்குமான உறவு பற்றிச் சொல்லுங்கள். மார்க்சியத்திற்கு அவரது பங்களிப்பாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?


கோவை ஞானி : தோழர் எஸ்.என். நாகராசனுக்கு இப்பொழுது வயது 82. ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தென்கலை வைணவர் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் உயிரியியல் கற்றவர். ஆய்வு செய்தவர். ஜே.பி. ஹால்டேன் முதலியவர்களோடு நட்புக் கொண்டவர். உயிரியியல் கல்விதான் தன்னை மார்க்சியத்திற்குக் கொண்டு சேர்த்தது என்பதை அவர் தெளிவாகச் சொல்லுகிறார். பிற்காலத்தில் தான் தென்கலை வைணவராகப் பிறந்ததால்தான் மார்க்சியனாக தனக்குள் உரம் பெற வாய்த்தது என்பதை உணர்ந்துகொண்டார்.

1844 மார்க்சின் கையேடுகளின் மூலம் அந்நியமாதல் என்பதை ஆழமாகக் கற்றுப் புரிந்துகொண்டவர் நாகராசன். 1960-க்குப் பிறகு அவர் மூலம்தான் அந்நியமாதல் தொடங்கி எவ்வளவோ, கற்றோம். இரஷியாவிலிருந்து வந்த மார்க்சிய நூல்களோடுதான் நாங்கள் உறவு கொண்டிருந்தோம். கட்சிக்காரர்கள் முதன்மைப்படுத்தும் சில நூல்களோடுதான் எங்களுக்கு உறவு இருந்தது.

எங்கள் மார்க்சிய அறிவைப் புரட்டிப் போட்டவர் நாகராசன். மார்க்சிய நூலிலிருந்து எத்தனையோ புதிய வெளிச்சங்களை எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் மார்க்சிய அறிஞர் கார்டுவெல், ஜோசர்நீதாம் ஜே.டி. பெர்னால்டு என்று பலரை அவர் வழியே நாங்கள் கற்றோம். டி.டி. கோசாம்பி முதலிய பேரறிஞர்களையும் கற்றோம்.

இவர்களோடு அமெரிக்க மார்க்சியரும் சிலர். மார்க்சியக்கல்வி என்பது எங்களுக்கு அப்படி ஆழமாகப் பதிந்தது. நக்சல்பாரி இயக்கம் பற்றியும் மாவோவின் மார்க்சியம் பற்றியும் நாகராசன் மூலம் எங்களுக்குக் கூடுதலான தெளிவு ஏற்பட்டது. அறிவியல் சிக்கல்கள் வரலாறு, மெய்யியல், சமயம் என்றெல்லாம் தேடித்தேடி நாங்கள் கற்றோம். எனக்கு மட்டுமல்லாமல், சத்தி, ஈரோடு, கோவை, பெங்களூர் முதலிய பல்வேறு பகுதிகளில் பலருடைய மார்க்சிய ஈடுபாட்டிற்கு நாகராசன்தான் காரணம்.

நாகராசன் கட்சியிலிருந்தபோதிலும் கட்சியோடு அவர் பல சமயங்களில்முரண்பட்டவராகவே இருந்தார். இந்தியாவுக்கு ஒரு கட்சி கூடாது என்றார். தமிழ்த் தேசியம் தேவை என்றார். திராவிட இயக்கம் குறித்து எதிரான பார்வை கூடாது என்றார். டாங்கே கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார்.

மாவோ நெறியில் மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுத்தார். மேற்கத்திய மார்க்சியம், கீழை மார்க்சியம் என வேறுபடுத்தி விளக்கினார். உற்பத்தி சக்திகளுக்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம். உற்பத்தி உறவுகளுக்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம். பகை முரண்பாட்டிற்கு அழுத்தம் தருவது மேலை மார்க்சியம். நட்பு முரண்பாட்டிற்கு அழுத்தம் தருவது கீழை மார்க்சியம். இப்படிப் பல விளக்கங்கள் தந்தார்.

பசுமைப் புரட்சியின் தீமை பற்றி தொடக்கத்திலிருந்தே பேசினார். நவீன அறிவியலும் தொழில் நுட்பமும் புதிய காலனியத்தின் உள்ளார்ந்த கூறுகள். இவை, இயற்கையை நாசமாக்கும். காலனியம், புதிய காலனியம் என்ற பெயரில் திரும்பி வந்திருக்கிறது.

சோவியத் தகர்வு தனக்கு வியப்பளிக்கவில்லை என்றார். காரணங்களை விளக்கினார். இப்படி நூறு வகைகளில் மார்க்சியம் குறித்துப் புதிய விளக்கங்களை நாகராசன் தொடர்ச்சியாகத் தருகிறார். இனி ஆயுதப் புரட்சி சாத்தியமில்லை என்கிறார். காந்தியையும், மாவோவையும் இணைக்கவேண்டும் என்கிறார்.

உழவர்களும், பெண்களும், இசுலாமியர்களும் இணைவதன் மூலமே உலகப் புரட்சி சாத்தியம் என்கிறார். உலக அளவில் நாகராசன் முன்பே அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். அந்த அளவுக்கு அவரது மார்க்சியம் இன்றைய உலகுக்குத் தேவை. எனக்கு மட்டுமல்லாமல் எத்தனையோ பேருக்கு நாகராசன்தான் மார்க்சிய ஆசான்.

12. மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை தமிழகத்தின் அறிவுத்தளத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. மார்க்சியத்திற்கும் பிற துறைகளுக்கும் அவர் பங்களிப்பு என்ன என்பது குறித்து அவருக்கு நெருக்கமான நண்பர் என்ற முறையில் உங்கள் மதிப்பீடென்ன?

கோவை ஞானி : கோவை வட்டாரத்தில் 1965-க்குப் பிறகு எஸ்.என். நாகராசன் அறிமுகமான அதே காலத்தில்தான் எஸ்.வி.ஆர். எங்களுக்கு அறிமுகமானார். `புதிய தலைமுறை’ இதழ்மூலம் நாங்கள் இணைந்திருந்தோம். மார்க்சியம் என்று மட்டுமல்லாமல் தமிழில் நவீன இலக்கியம் மேற்குலகின் ஆங்கிலம் வழியே சேர்ந்த இலக்கியம், வரலாறு. இதேபோல இரஷிய இலக்கியம். சீன இலக்கியம் என்று கல்லூரி மாணவர்களைப் போல `விழுந்து விழுந்து’ படித்தோம். இயக்கத்தோடும் இணைந்திருந்தோம். நாகராசன் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட அந்நியமாதல் குறித்து எஸ்.வி.ஆர். விரிவான நூல் ஒன்றை எழுதினார்.

எழுத்து வன்மை எஸ்.வி.ஆருக்கு இயல்பானது. திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர் எனினும் மார்க்சியத்திற்கு அவர் முழுமையாக வசப்பட்டார். வியட்நாம், சேகுவேரா என்று ஆவேசமாக அவர் பேசுவார். கல்லூரிக் கல்வி அவருக்கு இல்லை எனினும் அரசுப் பணியில் அவர் ஈடுபட்டிருந்ததன் விளைவாக ஆங்கிலத்தில் எழுத்து வன்மையையும் பெற்றிருந்தார். சென்னையிலிருந்த க்ரியா, கசடதபற, பிரக்ஞை நண்பர்களோடு அவர் ஆழமான உறவு கொண்டிருந்தார். அவர்களோடு விவாதித்தார்.

இருத்தலியல் குறித்து `கசடதபற’ நண்பர்கள் பெரும் ஈடுபாட்டோடு பேசியபொழுது எஸ்.வி.ஆரும், நானும் இருத்தலியல் பற்றி 50-க்கும் மேற்பட்ட நூல்களைச் சேகரித்து ஆழ்ந்து கற்றோம். இருத்தலியல் குறித்து மார்க்சிய நோக்கில் தெளிவு பெற்ற நிலையில் அற்புதமான நூல் ஒன்றை (எக்ஸிஸ்டென்ஷியலிசம்) எழுதினார். சல்சனிட்சன் குறித்து பிரக்ஞையில் எழுதினார். எஸ்.வி.ஆரின் நட்பு வட்டாரம் தமிழகத்திற்கு வெளியிலும் உலக அளவில் விரிவுடையது.

ஆங்கிலம், தமிழ் என்று பலதுறை நூல்களை நண்பர்கள் மூலம் சேகரித்து விரிவாக அவர் கற்பார். நாடகம் பற்றிய வெங்கட்சாமிநாதன் நூலுக்கு அவர் அக்காலத்திலேயே விரிவான முன்னுரை எழுதினார். இதன்பிறகு அவர் சென்னைக்குக் குடியேறினார். அவரது எழுத்துப்பணிகள், இயக்கப்பணிகள் விரிவு பெற்றன. புரட்சிகர மார்க்சிய இயக்கத்தினரோடு அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். தருமபுரி, திருப்பத்தூர் போன்ற ஊர்களில் என்கவுன்ட்டர் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் உச்சநீதி மன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்தார். கட்சியினரோடு, இயக்கத்தவரோடு அவர் கொண்டிருந்த அனுபவங்கள் வெகு நுட்பமானவை மட்டுமல்ல; கசப்பானவையும்தான்.

நாகராசன் ஓரிடத்தில் நிற்கமாட்டார். அலைவார். எஸ்.வி.ஆர். எந்த இடத்திலும் நின்று எதனையும் எதிர்கொள்வார். செய்து முடிக்காமல் ஓயமாட்டார். ரஷ்யப்புரட்சி - முன்னும், பின்னும் ரஷ்ய இலக்கிய உலகில் என்னவெல்லாம் நடந்தன என்பது பற்றி `ரஷ்யப் புரட்சி - இலக்கிய சாட்சியம்’ என்ற ஒரு அற்புதமான நூலை எஸ்.வி.ஆர். எழுதினார். அவரது படிப்பறிவின் விரிவை அறிந்துகொள்ள இந்த ஒரு நூலே போதும். மார்க்சியம் குறித்து ஜார்ஜ் தாமஸ் எழுதிய 3 நூல்களை எஸ்.வி.ஆர். மிகச் சிறப்பாக மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் அவரது ஆழ்ந்த கவனத்திற்கு ஈடுசொல்லமுடியாது. மொழியாக்கம் செய்யும் நூலில் இடம்பெறும் கோட்பாடுகள் பிற நூலாசிரியர்கள் முதலியவை குறித்து விரிவான அடிக்குறிப்புகள் தராமல் இருக்கமாட்டார். கட்சி மார்க்சியர் புறக்கணித்த மார்க்சிய பேரறிஞர்களில் ஒருவர் கிராம்சி. கிராம்சியின் எழுத்துக்கள் சிக்கலானவை. ஒரு சவால் போலத்தான் கிராம்சியைப் படித்து எழுதமுடியும். கிராம்சி குறித்து முழு நூலொன்றை எஸ்.வி.ஆர். எழுதினார். இருத்தலியல் பற்றி நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தவர் சார்த்தர். சார்த்தருடைய நூல்களோடு போராடி, பின்னர் அவர் விரிவான நூலொன்றை எழுதினார்.

80-களில் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலியவை குறித்து பெரும் விவாதங்கள் நடந்தபோது அல்தூசர் பற்றியும், ஃப்ராங்பர்ட் மார்க்சியம் குறித்தும் நூல் எழுதினார். ஸ்டாலின் காலத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர் மீது எஸ்.வி.ஆருக்கு எப்பொழுதுமே அக்கறை அதிகம். (கட்சி மார்க்சியரால் இவரும்தான் பாதிக்கப்பட்டவர்) அண்ணா அகம்தோவா கவிதைகள் நேர்த்தியானவை. அவரது கவிதைகளை மொழிபெயர்த்தார்.

இன்னொரு சமயம் மாவோவின் கவிதைகள் மொழிபெயர்ப்பையும் செய்தார். எப்பொழுதெல்லாம் புரட்சியாளர்களின் கவிதைகள் கைக்குக் கிடைக்குமோ அப்பொழுது எல்லாம் சேகரிப்பவர் எஸ்.வி.ஆர்.
தொடக்கம் முதலே எஸ்.வி.ஆருக்கு பெரியாரியத்தின் மேல் ஆழ்ந்த பற்று உண்டு.

பெரியாரை ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கமுடியாது. பெரியாரியம் குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து வெளிவருகின்றன. வெளிநாட்டவரும் செய்கின்றனர். பெரியாரின் வாழ்வும், பணியும் குறித்து எஸ்.வி.ஆரும்., கீதாவும் இணைந்து வெளியிட்ட ஆய்வு நூல்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

இதற்காக அவர் ஏராளமான ஆதாரங்களைச் சேகரித்தார். ஆங்கிலத்திலும் அவர் எழுதினார். பெரியாரியம் குறித்த எஸ்.வி.ஆரின் ஆய்வுக்கு இணை சொல்லமுடியாது. எந்த ஒரு சமயத்திலும் மார்க்சியத்திலிருந்து விலகி பெரியாரைப் பற்றியோ, இன்னொருவரையோ இவர் எழுதவில்லை. பெரியாரியம் குறித்து எழுதிய அதே காலத்தில் தலித்தியம் குறித்தும் நிறைய எழுதினார். பெரியாரியத்தை தலித்தியம் பற்றி எழுதும் சிலர் குறைத்து எழுதியதை இவர் மறுத்தார். தலித்தியம் பற்றி எழுதும்போதே மார்க்சியத்தைக் குறித்து எழுதுவதும் இவருக்கு முரண்பாடில்லை.

இது குறித்தும் அவர் எழுதினார். எஸ்.வி.ஆரை தமிழகத்தின் இன்னொரு சாமிநாத சர்மா என்று சொல்வது போதாது. அவரை மதிப்பீடு செய்வதும் எனக்கு சாத்தியமில்லை. அவரது படிப்பறிவும் உலக அளவிலான அரசியல் பற்றிய அறிவுத் தெளிவும், எனக்கில்லை. தொட்ட எது குறித்தும்நூல்கள், இதழ்கள், இணையதளம் என்று தேடித் தேடி விரிவாக அவர் இன்றைக்கும் எழுதி வருகிறார்.

அவரைத் தொடர்வதும் எனக்கு சாத்தியமில்லை. தன் வரலாறு குறித்து அவரே எழுதி வைக்கவேண்டும். இது என் பேராசை.


13. தமிழ் இனப் படுகொலைக்கு சீனா இலங்கைக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி இங்குள்ள மார்க்சியவாதிகள் வாயைத் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

கோவை ஞானி : ஈழத்தில் நடைபெறுவது இனப்படுகொலைதான் என்பதை இப்பொழுது அனைவரும் ஒப்புக்கொண்டுதான் பேசுகிறோம். இந்தப் படுகொலைக்கு சீனா மட்டும்தான் உதவி செய்கிறது என்பதுமில்லை. இந்தியாவும்தான் உதவி செய்கிறது. சிங்கள அரசு செய்யும் இந்தப் படுகொலையை இந்திய அரசுதான் ஊக்குவிக்கிறது. உதவி செய்கிறது. உலகமே வேண்டாம் என்றாலும் சீக்கிரம் செய்து முடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது இந்தியாதான் என்பதும் இப்பொழுது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

சீனா ஏன் உதவி செய்கிறது என்பது உங்கள் கேள்வி. சீனா ஒரு சோசலிச நாடாயிற்றே. எப்படி இதைச் செய்யமுடியும் என்பது உங்கள் உணர்வு. திபெத் தன்னுரிமைக்காக நேரு காலம் முதலே போராடி வருகிறது. நேருவும் வேறு வழியில்லாமல் திபெத்தின் மீது சீனாவுக்கு இறையாண்மை உண்டு என்று ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சிக்கல் இன்னும் கடுமையாக இருக்கும். திபெத் மக்களுக்கு ஒரு தேசிய இனம் என்ற முறையில் இறையாண்மை உண்டு என்பது பற்றி இப்பொழுது நம்மால் பேசமுடியும். சச்சனியா மீது ரஷ்யாவும்தான் கடுமையான போர் நடத்தியது என்பதையும் நாம் மறக்கவில்லை. சோசலிசம் என்பதன் எச்சம் ஏதேனும் இவர்களிடம் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்மையில் இலங்கையின் பொருளியலுக்குள் இந்திய முதலாளிகளின் ஊடுருவல் மிகக் கடுமையாகஅதிகரித்துக்கொண்டு வருகிறது. சீனாவும் இதைச் செய்கிறது. இலங்கைத் தீவில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து பொருளியல் அதிகாரம் தொடர்ந்து பறிபோய்க்கொண்டு இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மீது போர் என்று தொடங்கி தமிழினத்தையே அழித்தாகவேண்டுமென்ற வெறி அவர்களைப் பிடித்தாட்டுகிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தம் பொருளியல் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். இலங்கைத் தீவின் பொருளியல் அதிகாரம் இப்படி அந்நியர் கைகளுக்குள் செல்லும் நிலையில் சிங்கள மக்களுக்கு என்ன மிஞ்சும்.

இராணுவம்தான்சிங்கள அரசியல்வாதிகளை இப்பொழுது ஆட்டி வைக்கிறது. இராணுவ வெறிக்கு எல்லைகள் கிடையாது. கொலைவெறி இறுதியில் அவர்களை மனிதத் தரத்திலிருந்து கீழே தள்ளும். தமிழனை ஒழித்துவிட்டு அப்புறம் அவர்கள் சிங்கள மக்கள் தங்களைத் தாங்களே கொன்று தீர்ப்பார்கள்.
மேலும் ஒன்று, தென்கிழக்கு ஆசியப்பகுதியில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு இந்தியா தானும் ஒரு வல்லரசு என்று  தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முறையில் சிங்கள அரசுக்கு அவன் கேட்டும், கேட்காமலும் உதவி செய்கிறது. இந்தியாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக சீனா இலங்கைக்கு வருகிறது. இலங்கைத் தீவின் துறைமுகங்கள் சிலவற்றை சீனா கட்டிக்கொண்டிருக்கிறது. எப்பொழுதாவது இந்தியாவுக்கும், சீனாவுக்குமான போர் மூளும்போது என்னவெல்லாம் நேரும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தியாவின் மைய அரசு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த விதியை ஆதாரமாகக் கொண்டு இந்தப் போரை நடத்துகிறது.

குறைந்த அளவு பாராளுமன்றத்திற்காவது அரசு தன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியதா என்றெல்லாம் இங்குள்ள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பவில்லை. கட்சி மார்க்சியரிடம் எந்தக் கேள்விக்குத்தான் விடை கிடைக்கும்.

http://farm5.static.flickr.com/4049/4350754748_8a4a1ba553.jpg

14. ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ  ஜக்கிவாசுதேவ், ரவிசங்கர் மற்றும் நித்யானந்தர் முதலியவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?


கோவை ஞானி : `கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, `நானும், கடவுளும் நாற்பதாண்டுகளும்’ ஆகிய எனது நூல்களைப் படித்தவர்கள் ஓரளவுக்கேனும் என் சிந்தனைப் போக்கை புரிந்துகொள்ளமுடியும். கடவுள் என்பதை ஜே.கே. முதலிய அனைவரும் மறுத்துவிட்டு, கடவுள் தன்மை என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். இவர்களைப் படிக்கும்பொழுது இன்னும் இவர்களுக்குள் மதம் என்பதன் எச்சம் இருக்கிறதோ என்று நான் எண்ணிக் கொள்வேன். எனக்குள்ளும் இப்படி இருக்கக்கூடும்.

சமயம், கடவுள் ஆகியவற்றை ஆழமாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள நான் பலஆண்டுகள் செலவிட்டிருக்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு பேரியக்கம், இயற்கை, உலகம், உயிர்கள், தாவரங்கள், நீர், நிலம், காற்று முதலியவை மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தின் பிரிக்கமுடியாத கூறுகள். இந்தப் பேரியக்கத்தினுள்தான் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்சம், இயற்கை முதலியவை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. மாறிக்கொண்டும், மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டும் இருப்பவை. இந்தப் பேரியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது. நமக்குள்ளும் பேரியக்கம் என்ற படைப்பியக்கம் இயங்குகிறது.

படைப்பில்லாமல், இயக்கமில்லாமல் நாம் இல்லை. பிரபஞ்சம், இயற்கை, வரலாறு முதலியவற்றை எந்த அளவுக்கு நாம் அனுமதிக்கிறோமோ, எந்த அளவுக்கு இவற்றின் விரிவுக்கும், ஆக்கத்திற்கும் இடம் தருகிறோமோ, எந்த இடத்தில் எந்தக் கணத்தில் தான் என்ற உணர்வு அற்றுப் போகிறதோ, அந்த அளவுக்கு பிரபஞ்சம் என்ற பேரியக்கத்துடன் நாம் கரைந்து விடுகிறோம்.



தன்னலமற்றவர்களாக, தற்செருக்கு அற்றவர்களாக மாறுகிறோம். நம் அறிவு, ஆற்றல் ஆகியவை இயற்கையிலிருந்து சமூகத்திலிருந்து நாம் பெற்றவை. இவற்றுக்கு தனி மனிதன் என்ற முறையில் நாம் உரிமை கொண்டாட முடியாது. பிரபஞ்சம் என்ற இதுவரை நான் விவரித்த இந்த பேரியக்கத்திற்கு முன்னோர்கள் வைத்த பெயர் கடவுள். இமயமலையிலிருந்து ஒரு சிறு கல்லைப் பெயர்த்து இது கடவுள் என்று சொல்வது மாதிரி, இது ஒரு வகையில் இதுதான் அத்வைதம் என்ற பேருணர்வு. இந்தப் பேருணர்வை தனக்குள் கண்டவர் பிராமணனாக, முதலாளியாக, அதிகாரியாக, நான் எல்லாம் அறிந்தவன் என்பவனாக இருக்கவே முடியாது.

விவேகானந்தரும், பாரதியாரும் இத்தகைய பேருணர்வைப் பெற்றவர்கள். இந்தப் பேருணர்வுக்கு இன்னொரு பெயர் சமதர்மம். மார்க்சியனாக இருந்துதான் நான் இத்தகைய புரிதலைப் பெற்றேன். இத்தகைய புரிதலோடு வாழ்பவர் எல்லாவற்றையும் எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள முடியும். இவர்தான் அசலான மகான். இதுதான் கடவுள் தன்மை. ஓஷோ. ஜே.கே. இத்தகைய உணர்வு கொண்டவர்கள் மார்க்சியத்தை இவர்கள் ஒத்திருக்கலாம்.

மறுத்திருக்கலாம். பெரிய மடம், நிலச்சொத்து, அதிகார வெறி, தான் குரு என்ற மமதை, சாதி உணர்வு முதலியவற்றைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டவன், உண்மை ஞானம் பற்றிய அறிவைச் சிறிதளவும் பெறாதவன். வேதம், பகவத்கீதையென நாம் கதைக்கவேண்டாம். சித்தர்கள், சூஃபிகள் பற்றி நமக்குப் புரிதல் தேவை. இந்தப் பேருணர்வு என்ற பெருந்தளத்தில் எவ்வளவு காலம் எத்தனை பேர் வாழமுடியும் என்பது கேள்வி. மு. தளையசிங்கம் பற்றி இவர்கள் வரிசையில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இத்தகைய பேருணர்வு எல்லாருக்கும் எந்த ஒரு கணத்திலும் சாத்தியம். அந்த ஒரு கணத்தை நமக்குள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புத்தர் முதலியவர்கள் இப்படித்தான் ஞானம் பெற்றார்கள். ஒரு மார்க்சியனுக்கும் இந்த ஞானம் இல்லாமல் முடியாது. ஜக்கி வாசுதேவ் முதலியவர்கள் ஓர் அமைப்பை வைத்துக்கொண்டுஎன்னனென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிகார பீடங்களை அமைத்துக்கொண்டு வாழ்கிற துறவிகள் போலித் துறவிகள். சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள். குறைந்த அளவுக்கு வள்ளலார் போல செயல்படலாம். இரவிசங்கர் போல செயல்படலாம். மார்க்சியத்திற்குள்ளிருந்தும் இத்தகைய துறவிகள் செயல்படலாம். என்னளவில் லெனின் ஒரு மகான்; ஜெயகாந்தன் சொல்வதுபோல.

15. செம்மொழித் தமிழ் என்பது குறித்து இப்போது நீங்கள் மிகுந்த ஆதங்கத்தோடு தொடர்ந்து எழுதுகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?


கோவை ஞானி : தமிழனுக்கும், தமிழுக்கும் இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் மிகக் கடுமையானவை. தமிழன் இந்தியனுக்கு மட்டுமல்லாமல் அந்நியருக்கும் அடிமைப்பட்டுள்ளான். தன் அரசியல், பொருளியல், கல்வி, மருத்துவம், இசை முதலிய அனைத்தையுமே இழந்தவனாக, வறியவனாக இருக்கிறான். தமிழனின் அரசியல் பொருளியல் முதலியவற்றைத் தீர்மானிக்க இயலவில்லை;

தமிழின் பெயர் சொல்லி அரசியல் தலைமைக்கு வந்தவர். தமிழனைக் கொள்ளையடித்து அந்நியருக்கும் அடிமைப்படுத்தியிருக்கிற தமிழன் தன் நெடுங்கால வரலாற்றைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான். தமிழன் தன் மொழியைக் கூடத் தக்க வைத்துக்கொள்ளாமல் தவிக்கிறான். தமிழை இழந்தபிறகு, தமிழ் நிலத்தையிழந்த பிறகு தமிழனுக்கு இங்கு என்ன சாத்தியப்படும்.

தமிழ் இன்று தமிழனுக்கு முதல் மொழியாக இல்லை.ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்து தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை வைத்து சம்பாதிக்க முடியும். அதிகாரம் செய்யமுடியும். தமிழ்ப் பண்பாட்டை அழிக்கமுடியும். தமிழைக் கொலை செய்யமுடியும்.

ஆங்கிலத்தோடு இந்தி, சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் கடுமையாக இருக்கிறது. இந்துத்துவம் தன் பிடிப்பைக் குறைத்துக்கொள்ளாது. சமஸ்கிருதத்திற்கு எதிராக தமிழை இன்றும் நிலைநிறுத்த முடியாது.

இந்திய வரலாற்றில் தமிழனின் தொன்மை பற்றி இன்றைக்கும் அழுத்தமாகப் பேசமுடியாது. உண்மையில், இந்திய நாகரிகத்தில் தமிழ் நாகரிகத்தின் பங்களிப்பென்பது 100-க்கு 80 அல்லது 90 விழுக்காடு என்று உறுதியோடு சொல்லமுடியும். தமிழன் ஒரு காலத்தில் கிரேக்கத்தோடும், சீனத்தோடும் உறவு கொண்டிருந்தான். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழ் நாகரிகம் பதிந்து இருக்கிறது.

இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம். இந்தியாவில் காகிதம், கட்டிடம், தர்க்கம், மெய்யியல், இசை, வேளாண்மை என்று எவ்வளவோ துறைகளில் தமிழனின் சாதனைகள் முதன்மையானவை.

தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு, கலைஞரின் ஒத்துழைப்பில்லாமல் மத்தியில் ஆட்சி நிறுவமுடியாது என்ற சூழலில் ஏற்றுக்கொண்டது. இந்த வாய்ப்பை இப்பொழுது முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்கறையோடும், ஆதங்கத்தோடும் பேச வேண்டியிருக்கிறது. செம்மொழி என்றால் சங்க இலக்கியம் பற்றிய இலக்கிய ஆய்வோடு நிறுத்திக்கொள்ள முடியாது.

சங்க இலக்கியத்தின் வழியே தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்குள் நாம் செல்லவேண்டும். ஹரப்பாவுக்கு முற்பட்டது ஆதிச்சநல்லூர். சமஸ்கிருதம் தமிழைப் பார்த்துத்தான் தன்னைத் திருத்தம் செய்தது. தமிழ் நாகரிகம் உலகில் எத்தனையோ மொழிகளில் தன்னைப் பதிவு செய்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள வேதம் முதலியவை மேலுலகச் சார்பு கொண்டவை. தமிழிலக்கியமும், தமிழ் நாகரிகமும் மண்ணுலக, மனித உலகச் சார்பு கொண்டவை.

சாதியில்லாமல், வருணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும். சங்க இலக்கியம் முதலியவற்றில் பதிந்துள்ள தமிழ் மெய்யியல், தமிழ் அறம் என்பவை தமிழர் மத்தியில் சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றைத் தாங்கி நிற்பவை. சித்தர் இலக்கியம்தான் தமிழிலக்கியத்தின் மையம். வள்ளுவர், இளங்கோ, சாத்தனார் முதலியவர்கள் அசலான தமிழ்ச் சான்றோர். சமணமும், பௌத்தமும் தமிழ்ப் பண்பாட்டை மேன்மைப்படுத்தியவை.

சைவமும், வைணவமும் அடிப்படையில் மனிதச் சார்புடையவை. செம்மொழித் தமிழ் ஆய்வு என்றால் இத்தனை விரிவு நமக்குத் தேவை. ஆய்வு நிறுவனமும் பேராசிரியப் பெருமக்களும் இந்த நோக்கத்தோடுதான் இயங்கவேண்டும். இந்திய வரலாற்றில் இன்று இந்திய / பொருளியல் சூழலில் தமிழன் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் செம்மொழித் தமிழ் ஆய்வு, வெற்று இலக்கிய ஆய்வுகள், தமிழனை மேன்மைப்படுத்த முடியாது.


16. நீங்கள் மார்க்சியவாதியாக இருந்து கொண்டே தமிழ்த் தேசியம் பற்றி எப்படிப் பேச முடியும்?

கோவை ஞானி : மார்க்சியமும் தமிழ்த் தேசியமும் எந்த வகையிலேனும் முரண்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவின் அரசியல் சட்டம் உருவாகிற தொடக்க காலத்தில் இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் தனித்தனியே அரசு அமைத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு என்று கம்யூனிசக்காரர்கள் மட்டுமல்லாமல் காங்கிரசுக்காரர்களும் கொண்டிருந்தார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் என்ற பகைமை எழுந்து கொலை வெறித் தாண்டவமாடிய காலத்தில் வலுவான மத்திய அரசு இருந்ததாக வேண்டும். மைய அரசின் அங்கங்கள்தான் மாநில அரசு என்ற கருத்து வலுப்பெற்றது. இந்தியா ஒரு ஒன்றியமாகத்தான் இருக்க வேண்டும். சில குடியாட்சிக் கூறுகளோடு சில கருத்தை நேரு முன்வைத்தார். அம்பேத்காரும் ஏற்றார். தேசிய இனம் என்ற முறையில் எந்த இனத்திற்கும் இறையாண்மை உண்டு. தேசிய இனங்கள் தன் இறையாண்மையை இழக்காமல் ஒரு உண்மையான கூட்டாட்சிக்குள் இணைந்து வாழமுடியும்.

இந்திய அரசு இத்தகையதாக இல்லை. தேசிய இனங்களை மைய அரசு ஒடுக்குகிறது. பிரிவினை என்று பேசினால் பயங்கரவாதம் என்று இராணுவத்தை வைத்து ஒடுக்குகிறது. இது நமக்கு உடன்பாடில்லை. தன் உரிமை சுயநிர்ணய உரிமை என்பதை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. சோவியத் ஒன்றியத்தில் தேசிய இனங்களின் தன் உரிமையை ஒப்புக் கொள்கிற கொள்கை இருந்ததன் காரணமாகத்தான், கோர்ப்பசேவ் காலத்தில் தேசிய இனங்கள் விடுதலை பெற்று தனி அரசு ஆயின. லெனினுக்கோ, மார்க்சியத்திற்கோ இது எதிரானதில்லை.

தமிழ்த் தேசியம் என்று நாம் பேசும்பொழுது இந்தியாவிலிருந்து நாம், வெட்டிக் கொள்ளும் நோக்கத்தோடு பேசவில்லை. மைய அரசோ, பெரும் முதலாளிகளோ அந்நிய நிறுவனங்களோ தமிழகத்திற்குள் நுழைந்து தமிழ் நிலத்தைத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஆதாரமான நிலங்களை, நீர் நிலைகளை, கனிவகைகளை, மக்கள் உரிமைகளைப் பறிக்க வேண்டாம். ஒடுக்க வேண்டாம்.

இப்படி அவர்கள் செய்வதன்மூலம் தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசத்தை, தமிழ் மக்களின் வாழ்வு உரிமையை பறித்து தமிழ் மக்களை வறியவர்களாக, ஏழைகளாக, கோழைகளாக, தன்மானம் அற்றவர்களாக எதிரிகளாக ஆக்க வேண்டாம் என்பது நம் கோரிக்கை.


தமிழ் என்ற பெயரால் தமிழ் மக்களை எல்லா வகையிலும் ஒடுக்கும் அரசியல்வாதிகள், முதலாளிகள் தமிழ் மக்களுக்கு எதிரிகள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இங்குள்ள இயற்கை வளங்களை மாசுபடுத்த வேண்டாம். தமிழ்த் தேசத்தின் எல்லைக்குள் வருகிற எவரானபோதிலும் அவர்களுக்குரிய குடியுரிமை முதலிய அனைத்தையும் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க முடியும். தமிழ்தான் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பிறதேசிய இனங்களோடு பகை இல்லை. கொண்டும் கொடுத்தும் உறவாட நமக்குத் தெரியும். தமிழனுக்கு நெடுங்கால வரலாறு உண்டு. மேன்மை உண்டு. இவற்றை நாம் இழந்து விடமுடியாது. தமிழறம் என்பது அடிப்படையில் சமதர்மம் / சமத்துவம். தமிழன் அசலான மனிதன். நாம் கேட்கும் உரிமைகள் அனைத்தும் எல்லா இன மக்களுக்கும் உண்டு. ஆகவே மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும் முரண்பட இயலாது.


நன்றி - குமுதம் தீராநதி