Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Tuesday, November 29, 2011

நாளைய இயக்குநர் - லைட் காமெடி , சைட் ஃபிகர்ஸ் - விமர்சனம்

Art Wallpapers
தனது 28 வருட வாழ்க்கையில் முதல் முறையாக தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, படிய தலை சீவி  ஓரளவு டீசண்ட்டான டிரஸ்ஸுடன் ( மெரூன் கலர் நைட்டி கம் மிடி பட் லோ யூ நெக் ஹி ஹி ) வந்த தொகுப்பாளினி கீர்த்தி  சிரிச்ச முகத்தோட இருந்தார்.. இதை ஏன் பர்ட்டிகுலரா, பைனாகுலரா, டிராகுலரா சொல்றேன்னா டி வி ல வர்ற ஃபிகருங்க எல்லாம் பிசி (busy) போல யாருமே தலையே சீவறதில்லை.. அது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிப்போச்சு.. நான் ஒரு ஃபிகர்ட்ட காரணம் கேட்டேன் (ஃபோன்ல தான் நோ ட்ரீம்)அது ஆண்களுக்கு இணையா நாங்களும் வளர்றோம் இல்லையா? அதான் அவங்க மாதிரியே பரட்டையா.. ஹி ஹி ன்னாங்க அவ்வ்வ்வ்


1. குறும்படத்தின் பெயர் - கணக்குப்பண்ணுவது எப்படி? -இயக்குநர் -ஸ்ரீகணேஷ்

 காலேஜ் கலாட்டா கதை தான், ரொம்ப லைட்டா சொல்லி இருக்கார்.. அதாவது ஹீரோவுக்கு கணக்கு சப்ஜெட்னா ஆவாது.. கணக்கு , பிணக்கு , ஆமணுக்கு  , புண்னாக்கு  டைப்... லெக்சரர் செம காண்ட் ஆகறார்.. ஒரு சம்  (SUM)மை குடுத்து நாளை இதை போர்டுல எல்லார் முன்னாலயும் சால்வ் பண்ணிக்காட்டுனா நீ தப்பிச்சே, இல்லைனா அவ்ளவ் தான்னு மிரட்றார்.. ஏன்னா அவர் க்ளாஸ்ல சீரியஸா பாடம் நடத்தறப்ப ஹீரோ தூங்கிட்டு இருந்திருக்கான்.. 


இனி என்ன பண்றதுன்னு பையன் யோசிச்சுட்டே போறப்ப ஒரு ஃபிகர் அவன் ரூட்ல என்ட்ரி குடுக்குது.. தாமினி டீச்சரா மாறி ( ஐஸ்வர்யா ராய் நடிச்ச கில்மா படம் ஹி ஹி ) இலவச டியூஷன் சொல்லி தர்றாப்ல.. ஆம்பள வாத்தியார் சொல்லிதர்றப்ப தூங்கிட்டு இருந்த பையன் ஃபிகர் சொல்லித்தர்றப்ப நல்லா கவனமா கவனிக்கறான் பாடத்தை..

க்ளாஸ் ரூம்ல கரெக்டா அந்த கணக்கை போட்டுடறான், என்னா சோகமான ட்விஸ்ட்னா வாத்தியார் இப்போ தூங்கிடறார்.. அவ்வ்வ்வ்வ்

படத்தில் வந்த ரசனையான  வசனங்கள்

1. வெளில என்ன வெய்யில் அடிச்சாலும், ராமானுஜம் சார் க்ளாஸ்னா காத்து வாங்கும். ...

2. கணக்கு பாடமே எனக்கு கொடுமை தான், இந்த வாத்தியார் அதை விடக்கொடுமை..

3. இவன் ஏன் இங்கே வந்தான்?

அவனுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி,அதான் தெரியாம காலேஜ் வந்துட்டான்..

4.  பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுவாங்களே தவிர ஹெல்ப் பண்ண மாட்டாங்க..

5. அட்வைஸ் பண்றது ஈஸி, ஆனா அதை அப்டேட் பண்றது கஷ்டம்..


பாக்யராஜ் கமெண்ட் - வாத்தியார் சொல்லித்தர்றதை விட ஒரு பொண்ணூ சொல்லிக்குடுத்தா நல்லா மண்டைல ஏறும்..

சுந்தர் சி கமெண்ட் -  இளமைக்குறும்பு + திமிர் , நல்ல வந்தது படம்.. ஓவர் ஆல் எண்ட்டர்டெயிண்மெண்ட் காமெடி





2. குறும்படத்தின் பெயர் - தோற்ற மயக்கம் ஏனோ?  இயக்குநர் - முருகப்பிரகாஷ்

ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் உள்ள லவ் ஸ்டோரி.. பார்க்ல ஒரு லவ் ஜோடி உக்காந்திருக்கு.. 2 பேரும் ஒரே டைம்ல லவ்வை வெளிப்படுத்திக்கறாங்க அப்போத்தான்.. அடடே.. என்ன ஒரு ஒற்றுமைன்னு அவங்க சிலாகிக்கும்போது... ஒரு ஃபிளாஸ் பேக்...

அந்த ஃபிகர் தனியா வாக் வித் எ சாங்க்.. அந்த பையன் வாக் வித் எ சாங்க்.. 2 பேரும் பார்க் வர்றப்பதான் தெரியுது... அவன் லவ் பண்ற ஃபிகர் வேற ஒரு பையன் கூட, அந்த ஃபிகர் லவ் பண்ற பையன் வேற ஒரு பொண்ணோட .. நல்ல ட்விஸ்ட்.. இப்போ நிராகரிக்கப்பட்ட அதாவது காதலை வெளிப்படுத்த தயங்குன 2 பேரும் அவங்களுக்குள்ள காதலிச்சுக்கறாங்க , 2 பேருக்கும் புக்ஸ் ரீடிங்க் ஒரு ஒற்றுமை..

படிக்கும்போது கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் காட்சிப்படுத்துனது அழகு..  பார்க்ல லவ் ஜோடிங்க உக்காந்திருக்கும்போது அவங்க என்ன டிரஸ் போட்டிருந்தாங்களோ அதே கலர் டிரஸ்ல இந்த ஜோடியையும் பொட வெச்சது நல்ல உத்தி..

கவுதம் வாசுதேவ் மேனன் பட பாடல் மாதிரி நல்லா விசுவல் டேஸ்ட்டோட பாட்டு இருந்துச்சு அது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ்..பெஸ்ட் மியூசிக் அவார்ட் வாங்கிச்சு




3. குறும்படத்தின் பெயர் - ஒரு தலை ராகம்  இயக்குநர் -ராகேஷ்

ஏதோ வித்தியசமான கருன்னு இயக்குநர் நினைச்சு பணி இருக்கார் சரியா எடுபடல..  ஒரு காலேஜ்ல கடைசி நாள்  ..ஸ்வாதி மாதிரி ஒரு ஃபிகர் நடக்குது, ஓடி வருது .. பேக் டிராப்ல ஒரு ஆணின் குரலில் காதல் பாடல் ஒலிக்குது.. வசனமே இல்லை.. 7 நிமிஷம் பூரா அந்த ஃபிகர் புகழ் பாடல் லைன்ஸ் மட்டும் தான்.. அப்புறம் பார்த்தா அந்த காலேஜ் சுவர் தான் அந்த பாட்டை பாடுனது மாதிரி.. காதல் என்பது உயிருள்ள மனிதருக்கு மட்டும் இல்ல..  உயிர் அற்ற கான்கிரிட் சுவருக்கும் உண்டுன்னு சொல்லி முடிக்கறாங்க.. எடுபடலை.. சாரி மிஸ்டர் டைரக்டர்..

இது காலேஜ் கதையா? காலேஜே கதையா?ன்னு  பாக்யராஜ் கிண்டல் அடிச்சார்.. சாங்க் நல்லாருந்தது..




4. குறும்படத்தின் பெயர் -அட்ரா அவளை ஒதைடா அவளை , இயக்குநர் -கே பாக்யராஜ் ( இவர் வேற ஆள்)


 டைட்டில்ல டைமிங்கா ஹிட் பாட்டு லைன் இருந்தப்பவே நினச்சேன் படம் செமயா இருக்கும்னு.. எதிர்பார்ப்பு சரிதான்.. ஒருத்தன் ஒரு ஃபிகரை காதலிக்கறான்..துரத்தறான் ஐ லவ் யூ சொல்றான்.. அது பளார்னு அறையுது.. இவன் சலிக்காம லவ்வறான்.. அப்புறம் போனாத்தொலையுதுன்னு  அதுவும்  லவ் பண்ணுதுதான்.. அப்புறம் ஒரு சின்ன ஊடல்.. காதலியோட பிறந்த நாளை அவன் மறந்துட்டு வாழ்த்து சொல்லாம விட்டுடறான்.. உடனே ஃபிகர் கழட்டி விட்டுடுது.. அதாவது அவன் லவ்வை கழட்டி விட்டுடுது..அவ அவனை திட்டறா.. லவ் டமால்.. இவன் செம காண்ட் ஆகறான்.. லவ் எல்லாம் சரி வராது, யாரும் லவ் பண்ணாதிங்கங்கறான்./. அப்புறம் அந்த ஃபிகரே வந்து சாரி சொல்லுது.. உடனே இவன் பல்டி அடிச்சுடறான்.. ஃபிகர் கூட சேர்ந்துடறான்..

ஜாலியான கதை .. மேக்கிங்க் ஸ்டைல் செம..

ரசித்த வசனங்கள்

1.  பசங்களுக்கு 13 வயசானாலே  பொண்ணுங்களை ரொம்ப பிடிச்சுடுது..

2.  அவ்வ்வ்வ்வ், செம ஃபிகர்டா... அப்டினு சொல்ல முடியாட்டாலும் சுமாரான ஃபிகர் தான்.

3. அஞ்சாவது தடவையா அறை வாங்குன பிறகுதான் அவ பேரு அஞ்சலைன்னு தெரிய வருது.. அவ்வ்வ்

4.  ஃபேஸ்புக்ல சர்ச் பண்ணுனா அஞ்சலைங்கர பேர்ல ஏகப்பட்ட ஆண்ட்டிங்க ஆன்சர் பண்றாங்க, இவளை காணோம்..

5. சூப்பர் ஃபிகரை கரெக்ட் பண்ண பிறந்தவன்னு உன்னை பார்த்ததுமே உங்கம்மா முடிவு பண்ணி இருப்பாங்களே?

6. லவ்வர் பர்த்டேவை எவனாவது மிஸ் பண்ணுவானா?

இதுல ஹீரோ ஹீரோயின் நடிப்பு ரெண்டும் செம..

இதுதான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு, அப்புறம் பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்டா ஹீரோவுக்கு ஒரு அவார்டு..

Wednesday, November 16, 2011

நாளைய இயக்குநர் - காலேஜ் ,காதல், பேய் கதைகள் - விமர்சனம்

Best Ever Quotes
viewer


என்னைக்கும் பொட்டு வைக்கற பழக்கம் இல்லாத கீர்த்தி  இன்னைக்கு ஒயிட் &ஒயிட்  கலர் நைட்டியா? கவுனா?னு கணிக்க முடியாத ஒரு டிரஸ் போட்டுட்டு வந்தாங்க.. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வர்றப்ப மட்டும்  டீசண்ட்டா வர்றாங்க.. இந்த நிகழ்ச்சில மட்டும் பேட்டா மிஸ்ஸிங்க் போல..


1.இயக்குநர் பெயர் -அருண் பிரசாத் - குறும்படத்தின் பெயர் - ஃபிளாஷ்பேக்


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு மரத்தடில ஒரு பெண் நிருபர் ஒரு வெற்றி பெற்ற சினிமா இயக்குநருடன் காணும் நேர் காணல் மாதிரி காட்சி.. அதுல உங்க காலேஜ் லைஃப்ல நடந்த மறக்க முடியாத அனுபவம் சொல்லுங்க சார்.. அப்டினு கேட்க கட் பண்ணி காலேஜ் கேம்பஸ்க்கு கதை நகருது..

ஒரு ஃபிரண்ட்ஸ் குரூப்...ஒரு குறும்படம் எடுக்கறதுக்கு ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாங்க.. யார் ஹீரோ ,யார் ஹீரோயின் அப்டினு முடிவாகுது,.. ஷூட் பண்றப்ப ஹீரோவா நடிக்கறவர் ஹீரோயினா நடிக்கறவர்ட்ட ஐ லவ் யூ சொல்லற சீன்ல அவர் சரியா  பர்ஃபார்ம் பண்ணாததால டைரக்டர் நடிச்சுக்காட்றேன்கற பேர்ல அந்த ஃபிகர்க்கு ரூட் போடறார்..

அந்த ஷாட் கட் பண்ணுனா அதுவும் , இப்போ பேட்டி எடுக்கற ஷாட்டும் எல்லாமே இன்னொரு ஷூட்டிங்க்னு தெரியுது.. க்ளைமாக்ஸ்ல “ என்ன தாண்டா சொல்ல வர்றீங்க?” அப்டினு அவங்களே அவங்களை எள்ளல் பண்ணிக்கற மாதிரி முடியுது..

ஏதோ காமெடியா ட்ரை பண்ணி இருக்காங்கனு தெரியுது.. ஆனா கம்ப்ளீட் ஆகலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

கே பாக்யராஜ் அவரோட மலரும் நினைவுகள்ல ஒரு சம்பவம் எடுத்து விட்டாரு.. சுவர் இல்லாத சித்திரங்கள்ல இதே மாதிரி ஒரு சீன் வரும்.. அதாவது ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஹீரோவுக்கு நடிப்பு சொல்லித்தர்றேன் பேர்வழின்னு டைரக்டர் ஹீரோயினுக்கு ரூட் விடுவாரு.. அப்போ கவுண்டமணி பஞ்ச் குடுப்பாராம்.. ஹீரோயினை அடிக்கடி கட்டிப்பிடிக்கறதுக்காகவே ஷாட் ஓக்கே இல்லைனு ஹீரோவை குறை சொல்லி டெமோ காட்ற சாக்குல அண்ணன் உள்ளே புகுந்து விளையாடறாரு,..னு..

சுந்தர் சி கமெண்ட் செஞ்சப்போ ஃபேமஸ் டயலாக்ஸை குறும்படத்துல அடிக்கடி வைக்காதீங்க.. போர் அடிச்சிடும்.. உதாரணமா இந்த “ கண்ணா, லட்டு திங்க ஆசையா?” டயலாக்கை அடிக்கடி டோண்ட் யூஸ்...அப்டின்னாரு. அதே மாதிரி ஃபேமஸான பழைய ஹிட் சாங்கை லவ் சீனுக்கு யூஸ் பண்றப்ப ஒரே மியூசிக்கை டோண்ட் ரிப்பீட்னாரு.. எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா.. .

viewer6

2. இயக்குநர் பெயர் - அஸ்வின் -- குறும்படத்தின் பெயர் - உனக்காகவே வாழ்கிறேன்

ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தான் பாஸ் ஆவமா? ஃபெயில் ஆவமா?ன்னு தெரிஞ்சுக்க ஆவி அமுதா மாதிரி ஒரு ஆவிகளிடம் பேசுற மீடியா கிட்டே வர்றான்.. அவனுக்கு பதில் சொல்றதும் ஒரு ஆவிதான்..அப்போ ஒரு ஃபிகர் பேய் கிராஸ் பண்ணுது அந்த இடத்தை.. உடனே பதில் சொல்ற வேலையை பாதிலயே விட்டுட்டு அந்த ஃபிகர் பேய் பின்னால இந்த ஆண் பேய் போகுது.. ஆவிகளின் லீடருக்கு செம கடுப்பு.. உன் வேலையை ஒழுங்கா செய்யாம பேய் பின்னால சுத்தறியேன்னு.. திட்றார்..

உடனே மனசொடிஞ்சு போன அந்த ஆண் பேய் தன் நண்பன் பேய் கிட்டே புலம்பறான்.. அப்படியே அந்த ஃபிகர் பேய் பற்றி விசாரிக்கறான்.. அது ஒரு கொலை செய்யப்பட்ட ஆவிங்கறான்.. அடடான்னு இரக்கப்பட்ட ஆண் பேய் அந்த ஃபிகர் பேய் பின்னாலயே சுத்தறான்.. அந்த ஃபிகர் பேய் ஒரு ஸ்விம்மிங் பூல்ல  ஒரு லவ் ஜோடியை முறைச்சு பார்க்குது..

யாரும் நிமிர்ந்து உக்காராதீங்க.. இந்த சீன்ல நோ சீன்.. ( நான் டைரக்டரா இருந்தா அந்த லவ் ஜோடி ஸ்விம்மிங்க் டிரஸ்ல இருக்கற மாதிரி ஒரு கிளாமர் சீன் வெச்சிருப்பேன். ( டேய் நாயே, அதான் ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சிருக்காங்க.. )

அந்த லவ் ஜோடில ஆண் தான் இப்போ இருக்கற பெண் பேயோட முன்னாள் லவ்வர்.. அவன் அமைதிப்படை சத்யராஜ் மாதிரி அவளுக்கு அல்வா குடுத்து கொன்னுடறான்.. அதே நிலைமை தானே இப்போ அவன் லவ்வற பொண்ணுக்கும் வரப்போகுதுன்னு இந்த பெண் பேய்க்கு மனசு சரி இல்லை..

உடனே அந்த ஆண் பேய் ஆவிகளின் தலைவன் கிட்டே போய் இந்த மாதிரி இந்த மாதிரி . ஒரு பொண்ணோட லைஃப் கெடப்போகுது.. அதை காப்பாத்தனும்னு ஐடியா கேட்கறான்.. உடனே ஆவிகளின் தலைவர்க்கு கோபம் வந்துடுது.. இதெல்லாம் நம்ம சக்திக்கு மீறுன விஷயம்,.. பிரதமர் மன் மோகன் சிங்க் மாதிரி வேடிக்கை மட்டும் தான் பார்க்கனும், சுப்ரமண்யம் சாமி மாதிரி ஆடாதேன்னு அட்வைஸ்,, 



ஆனா அந்த ஆண் பேய்  கேட்கலை..அது போய் அந்த சீட்டிங்க் லவ்வர் ஆணின் உடம்புல புகுந்து கில்மாவா அந்த ஃபிகர்ட்ட பேசறான் - வா ரூமுக்கு போலாம்னு.. உடனே அந்த ஃபிகருக்கு கோபம் வந்துடுது,.. கோவிச்சுக்கிட்டு போயிடுது..  இந்தக்காலத்துல இப்படி ஒரு ஃபிகர் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு போகுமா?ன்னு லாஜிக் மிஸ்டேக் சொன்னா அப்புறம்  பெண் சங்கங்கள், மாதர் சங்கங்கள் ( 2ம் 1 தானே?) என்னை கும்மு கும்முனு கும்மி விடும் அபாயம் இருப்பதால் நோ கமெண்ட்ஸ்..

இதை பார்த்த அந்த பெண் பேய்க்கு சந்தோஷம் .. எனக்காகத்தானே இப்படி செஞ்சே.. தாங்கஸ்னு சொல்லி அவனை லவ்வுது.. இந்த மேட்டர் ஆவிகளின் தலைவனுக்கு தெரிஞ்சு செம காண்டாகறார்.. நம்ம ஆஃபீஸ் மேனேஜர் எதுக்கெடுத்தாலும் காச் மூச்னு கத்துவாரே அப்படி கத்தி இப்படி செஞ்சதுக்கு தண்டனையா நீ பூமில போய் இன்னொரு பிறப்பெடுக்கனும்கறார்..

பொதுவா ஒரு காலேஜ் கிளாஸ்ல நம்ம லவ்வர் வெளில போனா அல்லது லெக்சரர் வெளீல அனுப்பிட்டா நாம என்ன செய்வோம்? ஏதாவது சாக்கு வெச்சு கலாட்டா பணி அதே மாதிரி நாமும் வெளீல வந்துடுவோம் தானே.. அதே போல் அந்த பெண் பேய் என்ன பண்ணுது.. தன்னோட முன்னாள் லவ்வர் உடம்புல புகுந்து அவன் தற்கொலை பண்ணிக்கற மாதிரி பண்ணுது.

ஒரே கல்லுல 2 மாங்காய்..பழிக்கு ப்பழி வாங்குன மாதிரியும் ஆச்சு.. இதான் சாக்குனு பூமில பிறப்பெடுன்னு ஆவிகள் தலைவன் தண்டனை குடுத்ததும் அந்த பெண் பேய் பேபியா மாறி அந்த ஆண் பேய் பக்கத்துல (இப்போ அந்த ஆண் பேயும் ஒரு குழந்தையா) இருந்து சிரிக்குது.. குஷி படத்துல வர்ற ஓப்பனிங்க் சீன் மாதிரி இந்தப்பட க்ளை மாக்ஸ்,.

நல்ல வித்தியாசமான ஃபேண்டஸி கதைதான்.. ஃபர்ஸ்ட் பிரைஸ் இதுக்குத்தான்.

ரசித்த வசனங்கள்

1. நான் செத்தாக்கூட உருப்படமாட்டேனு எங்கம்மா அப்பவே சொன்னாங்க..

2. தூக்கில் தொங்கும் ஆள் கடைசி கட்ட சாங்க் - நான் போகிறேன் மேலே மேலே ..

3. நான் உயிரோட இருந்தாக்கூட இவ்ளவ் சந்தொஷம் கிடைச்சிருக்காது..

4. ஹாய்.. செல்லம் , ரூமுக்குப்போலாமா?

ஸ்டுப்பிட்....


அப்போ இங்கேயேவா?

டாமிட்

போடி. நீ போனா இன்னொருத்தி..



viewer8
3 -இயக்குநர் பெயர் - ராமானுஜம் - குறும்படத்தின் பெயர் - கால் ஏஜ் ( காலேஜ்)

காலேஜ்னாலே ராகிங்க் பண்றது சகஜம் தானே.. ஒரு காலேஜ்ல 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ஒரு ஜூனியர் பையனை ராகிங்க் பண்றாங்க.. அவன் பார்க்க போங்கானாட்டம்  இருக்கான்.. இந்த 3 பசங்களும் என்ன தான் பார்க்க ரவுடிக மாதிரி இருந்தாலும் ஒரு ஃபிகர் கிட்டே எப்படி புரோப்பஸ் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க.. ( அது தெரிஞ்சா நாமளும் யாரையாவது லவ்வி இருப்போமே?)

3 பேரும் ஒரே ஃபிகரை ரூட் விடறாங்க, ஆனா யாருக்கும் அது செட் ஆகலை.. அது கூடப்பரவால்ல. அவங்களை மனுஷனாக்கூட மதிக்கலை.. ( இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா.. )

அப்புறம் பார்த்தா அந்த 3 பேரும் ராக் பண்ணுனாங்களே ஒரு தகர டப்பா தலையன் ( நன்றி - கவுண்டமணி) அவன் தான் லவ்வறான், பாப்பாவும் அவனை லவ்வுது.. இதைத்தான் சஸ்பென்ஸ்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா நாங்க தான் பல கதைல இதை பார்த்துட்டமே..

ஹீரோயினா நடிச்ச ஃபிகர் நல்ல கலர், முக வெட்டு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்?)

ரசித்த வசனங்கள்

1. என்ன பார்க்கறே? இவ்ளவ் அழகான பையன் லவ் பண்றானே?ன்னா?
ம்ஹூம்,நீயெல்லாம் லவ் பண்றியே.. அதான் பார்த்தேன்..

2. விட்றா விட்றா.. பொண்ணுங்க எல்லாம் மரத்துல இருந்து உதிர்ற இலை மாதிரி,, நாமெல்லாம் மரத்தோட ஆணி வேர் மாதிரி.. இந்தப்பொண்ணு போனா வேற பொண்ணு..  ( அதானே..  ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதையை தமிழன் என்னைக்கும் மறக்க மாட்டானே?)

viewer1

4. இயக்குநர் பெயர் - குகன்  - குறும்படத்தின் பெயர் - காற்றில் கலந்து வா

ஒரு ஊர்ல ஒரு ஆஃபீஸ்.. அந்த ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு.. ஏன் ஒரே ஒரு ஃபிகர்தான் அங்கே இருக்குன்னு என்னை கேட்காதீங்க? ஏன்னா நானும் யார்ட்டயும் அந்த கேள்வியை கேட்க முடியாது..அந்த 70 மார்க் ஃபிகர்க்கு அநாமதேய ஃபோன் கால்ஸ் வருது.. சாதாரண டொக்கு ஃபிகருக்கே நம்மாளுங்க ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுங்க.. நல்ல ஃபிகர் கிடைச்சா விடுவானுங்களா? அந்த ஃபிகருக்கு செம கோபம்.. யார்றா நீ? எதுக்கு சும்மா என்னை டார்ச்சர் பண்றே?ன்னு கேக்குது..

ஆனா அவன் டீட்டெயில்ஸ் எதுவும் சொல்லலை.. ( சொன்னா ஆள் வெச்சு அடிப்பாங்கன்னு தெரியுமே.. ) அவ காபி குடிக்கறதைக்கூட கரெக்ட்டா சொல்றான்.. உடனே ஃபிகர் கேக்குது.. நீ இந்த ஆஃபீஸ்லயா ஒர்க் பண்றே? உன்னை பார்க்கனுமே?அப்டிங்குது.. இல்ல.. என்னை உன்னால பார்க்க முடியாது அப்டினு சொல்றப்பதான் அந்த டார்ச்சர் பண்ற பார்ட்டி பேய்னு நமக்குத்தெரியுது.. அந்த ஃபிகரு டென்ஷன் ஆகி உன்னை இப்போ பார்க்க என்ன வழி?ன்னு கேட்கும்போது நீயும் என் உலகத்துக்கு வான்னு மேலே இருந்து தொப்னு அந்த ஃபிகர் மேல என்னமோ விழுது.. அவ்ளவ் தான் கதை..

இந்த கதைல ஹீரோயின் புல்லட் பைக் ஓட்டுது.. அவ்வ்வ்வ்வ்வ்
நல்ல டெரர் ஃபிலிமா வந்திருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் ஆகிடுத்து..

டிஸ்கி - நீ தான் டியூப்லைட் ஆச்சே, 2வது கதை உனக்கு புரிஞ்சிருக்காதே, காம்ப்ளீகேட்டடா இருக்கே. எப்படி கரெக்டா விமர்சனம் பண்ண முடிஞ்சுதுன்னு யாரும் கமெண்ட் போடாதீங்க.. ஏன்னா அந்தப்படத்தை 2 தடவை யூ டியூப்ல பார்த்து அப்பவும் சரியாப்புரியாம ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு ஃபோன் போட்டு கேட்டு ஏதோ கொஞ்சம் புரிஞ்ச பிறகுதான் டைப்பிங்க்..



Tuesday, November 08, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்டசி கதைகள் -விமர்சனம்

இன்னைக்கு (6.11.2011) கீர்த்தி  ரெட் கலரா?  ஆரஞ்சா?ன்னு சொல்ல முடியாத ரெட்டிஸ் ஆரஞ்ச் கலர் கவுனில் எண்ணெய் வைக்காத, தலை சீவாத  தலையுடன் , எப்போதும் போல் குங்குமம் வைக்காத நெற்றியுடன் மங்களகரமாக(!!!) வந்தார் .. 

”உங்க படங்கள்ல வர்றது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையா? சொந்த அனுபவம் கலந்திருக்கா?”


சுந்தர் சி  - எல்லா படைப்பாளிகளும் முழுக்க முழுக்க கற்பனை பண்றதில்லை, சொந்தக்கதைல கற்பனையை சேர்த்துக்குவாங்க.. 



கே பாக்யராஜ் -  அந்த 7 நாட்கள் படம் சந்திரபாபு கதை.. இன்று போய் நாளை வா முழுக்க முழுக்க என் வாழ்வில் நான் செய்த கலாட்டாக்களின் தொகுப்பு..




1. இயக்குநர் பெயர் - யாகேஷ் - குறும்படத்தின் பெயர் - 20 (இருபது)  வகை - ஃபேண்டசி


ஒரு மாற்றுத்திறனாளி .. அவனால் பேச முடியாது.. தாழ்வு மனப்பான்மை வேற.. நண்பர்களால் கிண்டல் அடிக்கப்படுகிறான்.. அவன் விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணுக்கு ரத்த தானம் பண்றான்.. அந்தப்பொண்ணு அவன் கிட்டே நட்பா இருக்கு.. அவனுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுது.. இதை பார்க்கும் அவன் நண்பர்களுக்குப்பொறாமை + ஆச்சரியம்.. எப்படி அந்த ஃபிகர் அவன் கிட்டே மாட்டுச்சுன்னு..

அப்புறம் பார்த்தா எல்லாம் அவன் கற்பனை.. அந்த பொண்ணு விபத்துல இறந்துடுச்சு..  குடைக்குள் மழை , மூடு பனி படத்துல வர்ற மாதிரி நடக்காத ஒண்ணை நடந்ததா நினைக்கற  மன நோய்.. க்ளை மாக்ஸ்ல அந்த பொண்ணோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்கறப்பத்தான் நமக்கு உண்மை தெரியுது.. 

இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. ஹீரோயினா நடிச்ச பொண்ணு வசனத்தை ஒப்பிக்கறாங்க.. அதுவும் எப்டி? மறந்துட்டா என்ன பண்றதுன்னு வேக வேகமா.. அதை கவனிக்கலையா நீங்க? 

2. ஹீரோவா நடிச்சவருக்கு செம பதட்டம் போல.. ரொம்ப அன் ஈஸியா இருந்தாரு.. 

3. வாய் பேச முடியாத கேரக்டர் ஹீரோ என்பதால் மாண்டேஜ் சீன்களை அவாய்டு பண்ணி இருக்கலாம்.. சில காட்சிகளில் ஹீரோ ஏதோ பேசறது போலவே இருக்கு..

4. டைட்டில்ல எதுக்கு 20? அநேகமா 20 வயசு பையனின் அனுபவம்னு நினைச்சீங்களா? ம்ஹூம், எடுபடலை.. வேற டைட்டில் வெச்சிருக்கலாம்



2. இயக்குநர் பெயர் - மித்ரன் - குறும்படத்தின் பெயர் - தருணம், வகை -உண்மைக்கதை @ ரியலிஸம்


இந்தப்படத்தோட ஸ்பெஷல்  இதனோட இயக்குநர் நியூ ஜெர்சில இருந்து படம் அனுப்பினதுதான். இயக்குநரோட அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு வந்தாங்க.. 

என் பையன் கிட்டே நாங்க எதிர் பார்க்காத திறமை இருப்பது மகிழ்ச்சின்னாங்க.. பார்க்க சந்தோஷம்.. 

மிகப்பெரிய மாற்றங்களுக்கு மிகச்சிறிய தருணங்கள் போதும்கற கேப்ஷனோட படம் ஆரம்பிச்சுது.. 

ஒரு சின்னப்பையன்.. அவன் இந்தியன்.. அவன் மற்ற அமெரிக்க இளைஞர்களால் ராக்கிங்க் செய்யப்படறான்.. அவன் கடுப்பாகி மூடு அவுட் ஆகிடறான்..  தாத்தா வந்து சமாதானப்படுத்தறார்.. அட்வைஸ் பண்றார்.. 

அடுத்த டைம் ராகிங்க் செய்யப்படும்போது அவன் சத்தியாக்கிரக வழியை பின்பற்றி அமைதியா இருக்கான்,, கலாட்டா செஞ்ச இளைஞர்கள்ல ஒருத்தன் நட்பாகறான்.. எதிர் காலத்துல மற்ற இளைஞர்களும் திருந்துவாங்க என்ற சுட்டிக்காட்டலுடன் படம் முடியுது.. 

இது நியூ ஜெர்சியில் உண்மையில் நடந்த சம்பவமாம்.. குட்.

ரசிக்க வைத்த வசனங்கள்

1. விழுவது தோல்வி அல்ல , விழுந்து கிடப்பதுதான் தோல்வி..

2. எத்தனை தடவை விழுந்தாலும் எந்திரிச்சு நிக்கற பார்த்தியா அதான் உண்மையான வெற்றி.. 

3.  காந்தி யார் தெரியுமா? அவர் ஒரு சூப்பர் மேன்.. நீயும் அஹிம்சை செய் ,சூப்பர் மேன் ஆகலாம்.. 

4. லைஃப்ல வெற்றி பெறனும்னு நினைக்கறவங்க ஒரு தடவையாவது விழனும்.. அப்புறம் எழனும்.. 

5.  பறக்கறவன், சுடறவன் மட்டுமே சூப்பர் மேன் கிடையாது, காந்தி வழியை பின்பற்ற ஆளும் சூப்பர் மேன் தான்

மேலே சொன்ன 5 பாயிண்ட்ஸ்ல 2 ஏற்கனவே நாம படிச்சதா இருந்தாலும் அதை கரெக்ட்டா பேக்கிங்க் செஞ்சதுல இயக்குநர் நிக்கறார்.. இது பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு

இயக்குநர்க்கு சில யோசனைகள்

1. ஹீரோவா  வந்த அந்தபையன் தமிழ் தெரியாதுன்னு சொல்றீங்க ஓகே, ஆனா அவன் எல்லாமே ஆங்கில வசனத்துல பேசறது எல்லாருக்கும் புரியாது. தமிழ் சப் டைட்டில் குடுத்திருக்கலாம்..

2. அந்த பையனுக்கு 10 வயசுதான் இருக்கும், ராகிங்க் பண்ற பசங்களுக்கு 21 வயசு ஆகுது.. அவன் வயசுப்பையன்களையே செலக்ட் செஞ்சிருக்கலாம்.. 

3. வசனத்துல அன்னா ஹசரே பேர் வர்றப்ப மியூட் பண்ணீட்டீங்களா? சென்சாரா? 




3. இயக்குநர் பெயர் -செந்தில் - குறும்படத்தின் பெயர் - சுவாமி வகை-காமெடி

உலகத்துல எத்தனையோ பிஸ்னெஸ் இருந்தாலும் சாமியார் பிஸ்னெஸ் தான் செம லாபம்.. அதை கிண்டல் செஞ்சு ஒரு கதை.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு பர தேசிப்பையனை பிடிச்சு அவனை சாமியார் வேஷம் போட வெச்சு அவனை உபதேசங்கள் சொல்ல வெச்சு வீடியோ எடுத்து அவனை ஆன் லைன் சாமியார் ஆக்கி  காசு பார்க்க ஐடியா போடறாங்க 2 பேரு.. அவங்க வீட்ல வீடியோ செசன்ஸ் நடக்கறப்ப டீக்கடைக்காரன் அதை பார்த்துடறான் .. உடனே அவனை அமுக்கி அவன அமுக்கி சின்ன சாமியார் ஆக்கி ஜோதில ஐக்கியம் ஆக்கிடறாங்க.. 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. இந்த உலகத்துல நடக்காத விஷயம்னு ஏதாவது இருக்கா? என்ன?

2. இந்த உலகத்துல எல்லா மனுஷங்களுக்கும் கவலை, கஷ்டம் எல்லாம் இருக்கும், ஆனா ஒவ்வொரு மனுஷனும் தனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கறதா நினைக்கறாங்க.. 

3. ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கேப்ஷன் இருக்கும், இந்த மூஞ்சிக்கு மேட்ச் ஆகற மாதிரி ஒரு பஞ்ச் லைன் பிடிங்க.. 

கவலைப்படாதீங்க.. அதை நான் பார்த்துக்கறேன்...

ஆஹா, சூப்பர்..  கவலைகள் வேண்டாம்,  கடவுளாய் நான் இருக்கிறேன்.. எல்லாம் எனக்குள் அடக்கம்.. எப்டி பஞ்ச் லைன்..?

4. அதிகாலையில் கூட்டி விட்டுக்கிளம்பும் பறவைக்கே இரை கிடைக்கும்- இதுல இருந்து என்ன தெரியுது?

நேரத்துலயே கண் முழிச்சு வெளீல வர்ற புழுக்களுக்கு அற்பாயுசுன்னு தெரியுது   ( ஜோக் இன் தின மணிக்கதிர் @  12. 6 2008 ரிட்டர்ன் பை சீர்காழி வி ரேவதி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சாமியாராக நடித்தவரின் நடிகர் தேர்வு.. அவரது நடிப்பு செம காமெடி.. 

2. ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆடியன்ஸ் சிரிக்க வேண்டும் என மெனக்கெட்டு அமைத்த திரைக்கதை.. வசனம் எல்லாம் டாப்.. 

3. மக்களுக்கு விழிப்புணர்வுக்கதை சொன்ன மாதிரியும் ஆச்சு..  சிரிக்க வெச்ச மாதிரியும் ஆச்சு.. 



4. இயக்குநர் பெயர் சந்திரகாந்த்- குறும்படத்தின் பெயர் - கத்திரி கரனம் வகை-ஆர்ட் ஃபிலிம்


வாழ்ந்து கெட்ட கோடீஸ்வரன் இப்போ ஏழையா தன் குழந்தையோட தனி வீட்ல இருக்கான்.. அவன் குழந்தைக்கு இதயத்துல ஓட்டை.. ஆபரேஷன் பண்ண பணம் இல்லை.. அவங்க வீட்டுக்கு திருட வர்ற ஒரு திருடன் இரக்கப்பட்டு வேற பக்கம் திருடிட்டு வந்து உதவி செய்யறான்.. அரதப்பழசான கதை.. 1970 களில் வந்த கு அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்புலயே இந்த கதை வந்துடுச்சு..

திருடன் திருந்த பர்ஃபக்ட்டான லாஜிக் காட்டலை.. சும்மா குழந்தையின் சிரிப்பை மட்டும் பார்த்து மயங்கிட்டதா  காட்டிட்டாங்க

ரசிக்க வைத்த வசனங்கள்

1. ஒரு தடவை தப்பு பண்ணுனா திரும்ப திரும்ப அதே தப்பு தான் பண்ணத்தோணும். ( ஏன் ஒவ்வொரு தடவையும் வெவ்வேற தப்பு பண்ணத்தோணாதா?)

.2. கெட்டவன் ஆகனும்னு வேலண்ட்ரியா  யாரும் ட்ரை பண்றதில்லை..

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. கதை ஓக்கே. காட்சி வடிவமைப்பில் ஆழம் இல்லை..

2. ஹீரோவா நடிச்சவர் இயக்குநரான உங்க அப்பா என்பதாலும் அவர் , அனுபவம் உள்ள சினிமா நடிகர் என்பதாலும்தான் படம் ஓரளாவது தப்பிச்சிது



5. இயக்குநர் பெயர் -ஷபி  -  குறும்படத்தின் பெயர் - நிலா வகை- ஃபேண்டசிஃபிலிம்

இது கொஞ்சம் வித்தியசமான கதை.. ஒரு கல்யாணம் ஆன புது தம்பதி.. ( டேய்,, கல்யானம் ஆனாத்தாண்டா அவங்க தம்பதி.. ) ஒரு சின்ன ஊடல்.. யார் முதல்ல பேசறதுன்னு.. யார் முதல்ல இறங்கி வர்றதுன்னு.. நிலாவுல பாட்டி வடை சுட்டதா கதைல படிச்சமே.. அந்த பாட்டி நிலாவுல இருந்து வந்து ஹீரோயின் செல்ஃபோனை எடுத்து ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்புது... சாரின்னு.. உடனே ஹீரோ சமாதானம் ஆகிடறான்.. அவன் இறங்கி வந்துடறான்... லைஃப்ல பலருக்கு இந்த பிரச்சனை இருக்கும்.. 

புருஷன் , பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னா யார் முதல்ல இறங்கி வந்து மன்னிப்பு கேட்கறதுன்னு.. அதை அழகான திரைக்கதைல சொல்லி இருக்கார். அமரர் சுஜாதா உயிரோட இருந்திருந்தா இந்தக்கதையை விகடன்ல மென்ஷன் பண்ணி  இருப்பார்..

 ரசித்த வசனங்கள்

1. அவளுக்கு என்னை விட்டா யார் இருக்கா? கோபப்பட?

2. ஈகோ என்பது ஒவ்வொரு மனிதனின் வீக்னெஸ்

3. என் மேல கோபம் இருந்தும், என் கூட பேசக்கூடாதுன்னு வைராக்யம் இருந்தும் எனக்கு எஸ் எம் எஸ் மட்டும் நீ எப்படி அனுப்பினே?

நான் எதும் அனுப்பலையே..?


இந்தப்படத்தின் இயக்குநர் நல்ல சைக்காலஜிக்கல் பிரச்சனைகளூக்குத்தீர்வு சொல்லும் கதைக்கருக்களை பிற்காலத்தில் எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.. வாழ்த்துகள்

Monday, October 31, 2011

நாளைய இயக்குநர் - விமர்சனம்

Indian Peafowl 
 

Bird Photography


கலைஞர் டி வி ல ரொம்ப நாளைக்கப்புறமா கீர்த்தி கொஞ்சம் டீசண்ட்டான நைட் கவுனோட ,ஓரளவுக்கு சுமாரான  ஹேர் ஸ்டைலோட  வந்து ஜட்ஜூங்க கிட்டே ஒரு உருப்படியான கேள்வி கேட்டாங்க.. 


“சார்.. அந்தக்காலப்படங்களுக்கும், இந்தக்கால படங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“ டெக்னிக்கலா ரொம்ப முன்னேறி இருக்காங்க... கதை சொல்லும் விதத்துல ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க.. உலக சினிமா எல்லாம் பார்த்து பழக்கப்பட்டதால மக்கள் ரசனை உயர்ந்து இருக்கு..  க்ளிஷே காட்சிகள் எல்லாம் வேணாம்.. சீக்கிரம் மேட்டர்க்கு வா, இழுக்காதேங்கறாங்க..”

இப்போ கீழே வருவதில் ஹெட்டிங்க்ல முதல்ல இருப்பது இயக்குநர் பெயர், அடுத்து வருவது பட டைட்டில்


1. இளங்கோ - பேயாவது , பிசாசாவது

ஒரு பார்க்ல 2 ஃபிரண்ட்ஸ் உக்காந்து பேசிட்டு இருக்காங்க.. சப்ஜெக்ட் பேய் பற்றி.. ஒருத்தன் பேய் இருக்குங்கறான், இன்னொருத்தன் இல்லைங்கறான்.. அப்புறம் 2 பேரும் ரூமுக்கு போறாங்க.. நைட் தூங்கறப்ப  ஒருத்தன் பேய் பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்றான்.. இன்னொருத்தனுக்கு பயம் வந்துடுது... விழிப்பு தட்டிடுது.. பாத்ரூம் போறான்.. திரும்ப வரும்போது  இன்னொரு ஃபிரண்ட் பேய் மாதிரி மாஸ்க் போட்டு பே என பயமுறுத்துறான்.. ஹார்ட் அட்டாக்ல ஆள் அவுட்..

கொஞ்ச நாள் கழிச்சு  இறந்த நண்பன் ஃபோட்டோவை ரூம்ல மாட்டி படுத்திருக்கான்.. அந்த இன்னொரு ஃபிரண்ட்.. இந்த டைம் இவன் அதே மாதிரி பாத்ரூம் போறான்.. செத்துப்போன ஃபிரண்ட் மாஸ்க் மாட்டி அதே போல் இவனை பயமுறுத்த இவனும் மேல் லோகம் போறான்.. 

இப்போ 2 பேரும் பேயாக மாறி  பேய் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்னு ஜோக் அடிக்கறாங்க..


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. பேய் தன் செல்ஃபோன் ரிங்க் டோனாக  காக்க காக்க கனகவேல் காக்க என்ற சுப்ரபாத பாட்டை வெச்சிருக்கு.. அதெப்பிடி?வேற ரிங்க் டோன் சிக்கலை? சாமியும் பேயும் ஒண்ணாகிடுச்சா?

2. மாஸ்க் மாட்டிக்கிட்டு பயமுறுத்துவது முதல் டைம் ஓக்கே, செகண்ட் டைம் வேற ஆங்கிள்ல சொல்லி இருக்கலாம்.. 

3. திகில் எஃபக்ட் நல்லா ஒர்க் ஆகிட்டு வர்றப்ப அந்த க்ளைமாக்ஸ் கடி ஜோக் எதுக்கு? அது சீரியஸ் படத்தை காமெடி ஆக்கிடுச்சு..

Bird Photography

2. முருகப்பிரகாஷ் கணேசன் - இடைவெளி

ஒரு லவ் ஜோடி ரூம்ல .. யாரும் பயந்துடாதீங்க. சும்மா பேசிட்டு இருக்காங்க.. அவங்க ஃபிளாஸ்பேக்.. 

ஒரு கார் போய்ட்டிருக்கு.. ஹை டெக் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் அதுல ட்ராவலிங்க்..  காட் டிரைவர் தான் ஹீரோ.. அவருக்கு ஒரு ஃபோன் வருது.. அம்மா பேசறாங்க, டிரைவரோட அம்மாதான்.. கலைஞர் டி வி ல அம்மா பேசற சீன் எப்படி அலோ பண்ணாங்களோ? 1800 ரூபா அனுப்ப சொல்றாங்க.. அதுக்கு ஹீரோ முயற்சி பண்றேன் கறார்.. 


ஹீரோயின் உடனே அந்த அளவு பணம் கூட உங்க கிட்டே இல்லையா?ன்னு கேட்க ஹீரோ அவரோட சுய புலம்பலை நெஞ்சை டச் பண்ற மாதிரி சொல்றாரு.. ஹீரோயினுக்கு உடனே லவ் வந்துடுது...

பொருளாதார ரீதியா இடைவெளி இருந்தாலும் காதல்க்கு அது தடை அல்ல அப்டினு சொல்ல வர்றாரு இயக்குநர்.. ஆனா........!!!!!!


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1.   ஹீரோயின் நல்ல ஃபிரஷ் ஃபிகரா போடுங்க.. படத்துல வந்த பாப்பாவுக்கு 34 வயசு முற்றிய முகம்.. யூத் கதைக்கு செட் ஆகலை..

2. இருக்கற 8 நிமிஷத்துல டக்னு கதையை சொல்லுங்க. ஃபிளாஷ் பேக் உத்தி இந்த கதைக்கு தேவை இல்லை.. 

3. ஹைடெக் கேர்ள் அந்த டிரைவரை லவ் பண்றது நம்பற மாதிரி அழுத்தமா சொல்லலை

மனம் தொட்ட வசனம்


1. ஏய்.. நீ சொல்ற கதை எல்லாம் என் கனவுல 100 நாள் படமா ஓடிடுச்சு.. 



Bird Photography

3. சரவணா - அப்பா

ஃபாரின்ல 4 வருஷங்களா சம்பாதிக்க வேலைக்கு போற அப்பா.. ரிட்டர்ன் வர்றார்.. ஆனா மனைவி கிட்டே சொல்லலை.. திடீர்னு சர்ப்பரைஸ் விசிட்டா வர்றாரு.. ஃபோன் பண்ணி பேசறார்.. மனைவிக்கு செம சந்தோஷம்.. பையனை கூப்பிட்டு பேசச்சொல்றா.. ஆனா பையன் மெஷின் மாதிரி அம்மா சொல்லிக்குடுத்த மாதிரி விட்டேத்தியா பேசறான்.

அவனுக்குள்ள ஏக்கம்.. அப்பா தன் கூட இல்லையேன்னு.. ரோட்ல போற ஒரு அப்பா மகன் ஜோடி அந்நியோன்யமா கொஞ்சிட்டு போறதை ஏக்கமா பார்க்கறான்.. 

. இப்போ அந்தப்பையனோட அப்பா வீட்டு வாசல்ல வந்து நிக்கறாரு.. தன் மகனுக்காக வாங்கி வந்த பொம்மையை எல்லாம் அவன் கிட்டே எடுத்து காட்றாரு.. 

ஆனா அந்தப்பையன் உள்ளே திரும்பி “ அம்மா, பொம்மைக்காரர் வந்திருக்காரு, வாம்மா, பொம்மை வாங்கித்தாம்மா” ந்க்கரான்.. வேதம் புதிதுல  பளார் வாங்குவாரே சத்யராஜ் அந்த எஃபக்ட்.. அப்போத்தான் அவருக்கு புரியுது.. நம்ம பையன் நம்ம முகத்தையே மறந்துட்டான்னு.. இனி எப்பவும் குடும்பத்தை விட்டு பிரியக்கூடாதுன்னு  உணர்ந்து பையனை தோள்ல வெச்சு வாக் போறாரு.. முதல்ல ஏக்கமா பையன் பார்த்தானே ஒரு அப்பா பையன் ஜோடி அவங்களை இஅவ்ங்க கிராஸ் பண்றப்ப இந்தப்பையன் எங்கப்பாவும் வந்துட்டாருன்னு பெருமிதமா ஒரு பார்வை பார்க்கரானே அடடா.... டச்சிங்க்.. 

இந்தப்படம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல.. பணம் சம்பாதிக்க நாம் வெளிநாடு சென்றால் குடும்ப பாசம் காணாமல் போகும்.. 

2. மழலைக்கு மகிழ்ச்சி தந்தை தாயின் அருகாமை மட்டும் தான்.. 

3. குடும்பம் இருப்பதற்கும், குடும்பத்துடன் இருப்பதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன..

இந்தப்படம் சிறந்த படம் விருது வாங்கியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி..




Bird Photography
4. ஆண்டனி - GOD'S MISTAKE 

 ரோட்ல ஒருத்தன் செல் ஃபோன்ல பேசிட்டே நடந்து போறான்..  லாரி வந்து அடிச்சுடுது.. ஆள் ஸ்பாட் அவுட்.. இப்போ அதிசியப்பிறவி படத்துல வர்ற மாதிரி மேல் லோகத்துல கதை.. கடவுளும், கணக்குப்பிள்ளையும் பேசிக்கறா மாதிரி..

மனிதர்கள்க்கு நல்ல பூரண ஆயுளை நான் குடுத்தேன்.. அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலமா அவன் தான் தன் அழிவைத்தேடிக்கறான், ஆயுளை குறைச்சுக்கறான்..  அப்டின்னு ஒரே அட்வைஸ் மழை.. ஆனா எல்லாமே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.. பிரச்சார நெடி இல்லாம இன்னும் சாஃப்டா சொல்லி இருக்கலாம்.. 


அவனுக்கு இன்னொரு சான்ஸ் தர்றாங்க.. . இந்த டைம் லாரிக்காரன் அவனை அடிச்சானா? அவன் தப்பினா? என்பது சஸ்பென்ஸ்..

 மனம்  கவர்ந்த வசனங்கள்

1. அங்கே பாரு, செல் ஃபோன்ல குடும்பம் நடத்திட்டே வர்றான் பாரு.. 

விடுங்க, புதுசா மேரேஜ் ஆனவன்.. மனைவிட்ட பேசிட்டு வர்றான்

2. எல்லோரும் நல்லா வாழனும்னு நான் தலை விதியை எழுதறேன், அனா மனிதர்கள் விதியை மதியால் வெல்வதாக நினைத்து தங்கள் ஆயுளை சீக்கிரம் முடித்துக்கொள்கிறார்கள்.


3.  எல்லாத்துலயும் லிமிட் வெச்சு படைச்ச நான் மனிதனோட அறிவுல மட்டும் லிமிட் வைக்க மறந்துட்டேன்.. அதான் நான் செஞ்ச தப்பு..

ரொம்ப அமெச்சூர்த்தனமான டைரக்‌ஷனா இருந்தாலும் சொல்ல வந்த கருத்து செம. வெல்டன் டைரக்டர்..



Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?



3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL