Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Saturday, April 16, 2011

வேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிடைக்குமா?ஆன்மீகத்தேடல்

ந்தப் பிறப்பில் மட்டுமல்ல, ஏழேழு பிறவிக்கும் நமக்குக் காப்பு, ஸ்ரீமந் நாராயணனின் பாதாரவிந்தங்களே! மனைவி-மக்கள், உற்றார்-உறவுகள், சொத்து-சுகங்கள் ஆயிரம் இருந்தாலும், இந்த ஜென்மம் முடிந்தபின், நம்மைப் பற்றித் தொடர்வது, எம்பெருமானின் திருவருள் ஒன்றுதான். 


கோதை ஆண்டாளும், 'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி...’ என்று நாச்சியார் திருமொழியில் குறிப்பிடுகிறாள். ஆமாம்...
இறைவனுக்கும் நமக்குமான உறவு ஒன்றே நிலையானது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBCeK0ZL9g6GGnIZb0CfI3Q0zQqEmZgL-vX6QqKDpLKKy0LHHX4YtzBkikGK7zjJ2JjwopucyonObF-1MAIK3-2iaAH7peNNH2WllEElq6TCr2NFTnel1bqgTTnMP-agKgu2fQ6ZiPYFf6/s400/ennappan.jpg
இந்த சூட்சுமத்தை அறிந்துகொண்டதால்தானே ரிஷிகளும், மகான்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும்... இவர்களுக்கெல்லாம் முன்னதாக கிருத யுகத்தில் பக்த பிரகலாதனும் பரந்தாமனின் பாத கமலங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்கள். அதற்கு, அவர்களுக்கு உறுதுணை புரிந்தது... 'ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம்!


மந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய ரிஷி, தேவதை, சந்தஸ் எனத் தனித்தனியே உண்டு. ஆனால், எல்லா உயிர்களிலும் உயிராகவும் உடலாகவும் திகழும் பரம்பொருளே அஷ்டாட்சர மந்திரத்தின் தேவதையாகவும் ரிஷியாகவும் சந்தஸாகவும் திகழ்கிறாராம்! எனில், இதை உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்லவும் வேண்டுமா?! 

'மலைகளின் அருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத அமைதியான சூழலில் தனித்திருந்து, இதயத்தில் என்னை இருத்தி, அஷ்டாட்சர மந்திரம் ஜபிக்க... சகல சௌபாக்கியங்களும் தருவேன்’ என்று பகவானே அருளியிருப்பதாகச் சொல்வார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1j_TqsxMY88GkhifL_w9ihJPMwsFyrN1JRJ7wYFzjDjXMCNQescwG9UcPCnhpNNR2qe5gY3w5n_4F9Vc6Gijyl_w_ZiO1X54BW5H_7kg2pxN6IsQzveGPkgxr-DTsZEj80vm6Lrjud3ie/s320/AndalKalyanam.JPG

நாமும் அனந்தனை மனதில் இருத்தி, அஷ்டாட்சர மந்திரத்தை உதட்டில் வைத்து, பரம்பொருள் சொன்னது போலவே மலைகளை நாடிச் செல்வோம்! எட்டெழுத்தால் தன்னைக் கட்டிப்போட்ட பாலகன் பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்மப் பரம்பொருளின் மலைக்கோயில்கள் சிலவற்றைத் தரிசித்து வருவோம்!


திருவருள் தரும் திருக்கடிகை
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது சுமார் அரை மணி நேரம் (ஒரு கடிகை - 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் தரும் அற்புதத் தலம் இது. 

எனவே, திருக்கடிகை என்று திருப்பெயர்! ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளின் பிரமாண்டத்தை உணர்த்துவது போல் ஓங்கியுயர்ந்து திகழ்கிறது சோளிங்கர் மலை. அடிவாரத்தில் இருந்து சுமார் 1305 படிகள் ஏறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.


இரண்யகசிபுவை அழித்தும் ஆக்ரோஷம் தணியாத நரசிம்மருக்கு, பிரகலாதனின் பால்வடியும் முகம் கண்டு கோபம் தணிந்தது. பிறகு, உலக மக்கள் யாவருக்கும் அருளும் விதம் கோயில் கொண்டு, யோகத்தில் ஆழ்ந்த தலமே இந்த சோளிங்கர். சோளிங்கரின் மேன்மை அறிந்த சப்த ரிஷிகள், பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மரின்


தரிசனத்தை காண விரும்பி இங்கே வந்து தவம் செய்தனராம். அப்போது, கும்போதரர், காலகேயர் ஆகிய அசுரர்களின் கொட்டம் இங்கு அதிகம். இவர்களால் முனிவர்களின் தவத்துக்கு பங்கம் நேரக்கூடாது என்று விரும்பிய இறைவன், அனுமனிடம் சங்கு- சக்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களை அடக்கும்படி பணித்தார். 

அதன்படியே இந்திரத்யும்னன் எனும் மன்னனின் சைனியத்துடன் சென்று அசுரர்களை அழித்தார் அனுமன். அதன் பிறகு, முனிவர்களுக்கும் அனுமனுக்கும் காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர். அதுமட்டுமா? ஸ்ரீநரசிம்மரின் ஆணைப்படி அனுமனும் சங்கு- சக்கரத்துடன் அருகில் உள்ள சின்ன மலையில் யோக நிலையில் கோயில் கொண்டாராம்!

மலையின்மீது அழகிய ராஜகோபுரத்துடன் திகழும் கோயிலில், ஸ்ரீயோக நரசிம்மருக்கும் அமிர்தபலவல்லித் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள். கருவறையில், ஹேம கோட்டி விமானத்தின் கீழ், சதுர்புஜநாயகராக கிழக்கு திருமுக மண்டலமாக அருள்கிறார் ஸ்ரீநரசிம்மர்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே 
- எனத் திருமங்கையாழ்வார் போற்றும் இந்தத் தலத்தின்
ஸ்ரீயோக நரசிம்மர், வருடத்தில் 11 மாதம் யோகத்தில் ஆழ்ந்திருப்பாராம். அவர் கண் விழித்திருக்கும்  கார்த்திகை மாதத்தில்... ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். தை மாதம் 3-ஆம் நாள் ஸ்வாமியே கிரிவலம் வருவது இந்தத் தலத்தின் சிறப்பு.

இங்கு வந்து அடிவாரத்தில் இருக்கும் தக்கான் குளத்தில் நீராடி, விரதமிருந்து, மலைக்கு மேல் ஏறி ஸ்வாமியைத் தரிசித்து வழிபட்டால், பில்லி-சூனியம் போன்ற சகல தீவினைகளும், பிணிகளும் நீங்குமாம்!

திருமார்பில் திருமகள்! 

நாமக்கல்- கம்பீரமாக அமைந்திருக் கும் கோட்டை- கொத்தளங்கள் வரலாற் றுச் சிறப்பையும், திருக்கோயில்கள் ஆன்மிக மகிமையையும் பறைசாற்றும் அற்புதத் திருத்தலம் இது.

லட்சுமணனுக்காக சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புதமான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் திரும்பி வரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். 

அது, லட்சுமிதேவியின் தபோவனமாக இருந்தது. சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு, எம்பெருமானை தியானித்து தவம் செய்யும் தாயாரை வழிபடச் சென்றார் அனுமன். அவர் திரும்பி வருவதற்குள், சாளக்கிராமம் பெரும் மலையாக வளர்ந்து விட்டதாம்!


அதேபோல்... களைப்பாறத் தரை இறங்கிய அனுமன், அங்கு திருமகள் தவமிருந்து வழிபடுவதைக் கண்டார். தேவியை வணங்கி தவத்துக்கான காரணம் கேட்க, திருமாலை ஸ்ரீநரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை. 

பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னார். 'குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடு வேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக்கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வரத் தாமதமாகவே, லட்சுமி தேவி சாளக்கிராமத்தை தரையில் வைத்த தாகவும், அது பெரும் மலையாக வளர, அந்த மலையின் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும்  ஒரு வரலாறு சொல்வர்.
 http://www.dinamani.com/Images/article/2009/7/17/17velli6.jpg

கோட்டையில் பிரமாண்ட திருவுருவத்துடனும், குளக்கரையில் சிறிய வடிவின ராகவும் அருள்புரிகிறார் அனுமன். அனுதினமும் தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு வரம் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர், தனக்கு அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, ஸ்ரீயோக நரசிம்மரின் திருக்கோயிலை!

அனுமனை எதிர்நோக்கியபடி அமைந்துள்ளது ஸ்ரீநரசிம்மர் சந்நிதி. மலை யைக் குடைந்து சந்நிதி அமைத்திருக் கின்றனர். திருமகள் இவர் திருமார்பில் உறைந்திருப்பது விசேஷ அம்சம்! குடைவரை மூர்த்தி என்பதால், ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது.


இவரது சந்நிதிக்கு வடக்கே ஸ்ரீவைகுண்ட நாராயண  மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஸ்வாமி நரசிம்ம அவதாரம் எடுப்பது குறித்து, மும்மூர்த்தியரும் கூடி ஆலோசித்தது இங்குதான் என்கிறார்கள்.  இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநாமகிரி தாயாரும் வரப்பிரசாதியே! கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்க இந்தத் தாயாரை வழிபடுவது சிறப்பு.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUIq8MkqYZ7yljR8zhw8kPeQF63n2YUrYA9emCyQ5BEvCt9b8va1X5Fxun8HU-Yfv7JmdZRF5Rki7glzJ1qVBfHfrMUdiCT2yf-jRPMjfbv3LxsYgTZ4iWeRumq-tu0xIWf_So-lGEdQh/s320/hanuman12.jpg
மலைக்கு இடப்புறம் பேட்டையில் ஸ்ரீரங்கநாதர் கோயில் கொண்டிருக்கிறார். தந்தை காசியப முனிவரிடமே சாபம் பெற்ற கார்க்கோடகன், விமோசனம் வேண்டி இங்கு தவம் செய்தான். அவனுக்குக் காட்சி தந்த பெருமாளிடம், தன் மீது சயனித்து அருளும்படி வேண்டிக்கொண்டான். அதன்படியே கார்க்கோடகன் மீது சயனித் திருக்கிறார் இந்த ரங்கநாதர்.

நினைத்தது நிறைவேறவும்; தொழில் சிறக்கவும், உயர்பதவி வாய்க்கவும், எதிர்காலம் வளமாகவும் சனிக்கிழமை களில் நாமக்கல் அனுமனையும் ஸ்ரீநரசிம்ம ரையும் ஸ்ரீநாமகிரி தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்!இந்த மேட்டர் பக்தி விகடனில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி டூ விகடன் குரூப்

Monday, March 21, 2011

பங்குனிதேர் உற்சவம் -சென்னிமலையில் ஒரு உற்சாக உலா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpO6dgaJc4OFurCXq9JC2YrzJiFKxksuLzLDlPYwcsjaDBVzdT9uBGrsG0HAj86folCq2rsWLZeOutsvd04l5FhDWyhWfu2XgdyQ_LTjLdcYvX6RHD_4pz1xGQKKAYU3idzlBdlthNv1t/s400/thaipusam6_creativespark.jpg 

நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு  7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.


தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..


மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே  கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.

எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..

மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
http://www.thedigitaltrekker.com/wp-content/uploads/2009/02/20090208-045908.jpg
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?


கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம்  வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..

கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.

நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZICUISpjB2rN7jRhZmg14nYiQjwfWFezMsF5VwlJVAKK7hdPE14jYYdUxNgn6D6sPiZ5L61QfXDwjQ51EB1ERNj7Cq4FCINUjHmWYbbWBPLdgjC0bta0wLScWFoDMKAhxAhcFU0qojU/s1600/SAM_1546.JPG
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....




இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)

பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..

ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
http://tconews.files.wordpress.com/2008/07/dsc00863.jpg
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை  இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.

நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..

சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.

கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
http://img.dinamalar.com/data/aanmeegam/large_160032500.jpg
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.

2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.

கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.

Thursday, January 20, 2011

தேரடி வீதியில் தேவதை வந்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAWIz8G8mj2kl2HF5TnAg7albf2dDaDo_6sHP5of4TJ3GEHGcsZXlgRRdZMWQxGn0k6g1dh_-h97NDfVR2zhhpE2xQkwxVcx7X-sxKCllyd-W0F1Om1Vozr6lf399mNWZEBAkJb6oEsWMi/s1600/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.jpg

தைப்பூசத்திருவிழா ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி ஒரு வாரத்துக்கு மஜாதான். எங்க ஊரோட மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம்தான் இருக்கும். ஆனா இந்த விழாவுக்கு 4 லட்சம் மக்கள் கூடிடுவாங்க. இந்ததேர்த்திருவிழா பற்றி சொல்றதுக்கு முன்னே எங்க ஊர்ப்பெருமையை பற்றி 4 லைன் தம்பட்டம் அடிச்சுக்கறேன்.


தமிழ்நாட்லயே அதிக அளவில் பெட்சீட்  தயார் ஆவது இங்கேதான்.சென்குமார்,சென்கோப்டெக்ஸ்,சென்டெக்ஸ் உட்பட இங்கே ஏகப்பட்ட தறிப்பட்டறை இருக்கு. நெசவாளிகள் குடும்பம் அதிகம் உள்ள ஊர். எங்கப்பாவும் ஒரு நெசவாளிதான்.ஜக்காடு பெட்ஷீட் நெசவு நெய்வாரு.. நின்னுக்கிட்டே ஒரே ஒரு மிதியை அழுத்திக்கிட்டே இருக்கனும்..

மாட்டு வண்டி மலை ஏறுன கதை 20 வருஷத்துக்கு முன்னே ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. சென்னிமலைல 1350 படிகள். சாதாரண வேகத்துல ஏறுனா 28 நிமிஷம் ஆகும், அதே இறங்க 7 நிமிஷம் தான் ஆகும்.நல்லா கொழு கொழுன்னு வளர்க்கப்பட்ட 2 காளைகள் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு மலை ஏறுச்சு. அதை 8 லட்சம் ஜனங்க பார்த்தாங்க.அதுக்கப்புறம்தான் எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சு.

மலை மேல ஒரு சுரங்கப்பாதை இருக்கு. அது மன்னர் காலத்துல கட்டப்பட்டது. பழநி வரை போகுமாம். எல்லாம் சொல்ல கேள்விதான்.யாருக்கு அதை டெஸ்ட் பண்ண தைரியம் இருக்கு.?

இந்த 7 நாள்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.தினமும் ஆர்க்கெஸ்ட்ரா,நாடகம்,கரகாட்டம்,தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், சினிமா ( திரை கட்டி படம் போடறது) னு  ஒரே கலக்கல்தான்.தெப்பத்தேர் அன்னைக்கு வாண வேடிக்கை நடக்கும் பாருங்க.. 5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள்..வெடிகள் ஒரு மைதானத்துல வெடிப்பாங்க.. ( எல்லாம் கோயில் காசுதான்) நாம எந்தக்காலத்துல காசு குடுத்து வெடி வெடிச்சிருக்கோம்?

இன்னைக்கு காலைல 6 மணிக்கு தேர் வடம் பிடிச்சாங்க.. மக்களோட ஆரவாரத்தோட தேர் இழுக்கறதைப்பார்க்க கண் கோடி வேணும்.மனிதன் தனியா இருக்கும்போது ஒரு மாதிரியும், கூட்டமா இருக்கும்போது வேற மாதிரியும் நடந்துக்குவான். நல்லா நோட் பண்ணி பாருங்க..அமைதியா இருக்கற பசங்க எல்லாம் இந்த விழாவுல ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.

ஈஸ்வரன் கோவிலை சுற்றி நால்ரோடு இருக்கு .அந்த நாலு வீதிலயும் தேர் சுற்றி வரும்.ஒவ்வொரு டர்ன்லயும் தேர் திரும்ப படாத பாடுபடும். தேர்சக்கரத்தை கண்ட்ரோல் பண்ண ஒரு மரக்கட்டை வெச்சிருப்பாங்க.. அதை முட்டுக்குடுத்துதான் திருப்புவாங்க..சில சமயம் தேர் வர்ற வேகம் பார்த்தா நம்ம மீது விழுந்துடுமோன்னு பயமா இருக்கும். ஆனா விழாது.

தேர் நிலை சேர்ந்ததும் மக்கள் வெண்ணெய், உப்பு,மிளகு, எலுமிச்சை இதை எல்லாம் வீசுவாங்க... எதுக்கு வீசறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாம் ஒரு ஐதீகம்தான்.

பக்தி, கடவுள் நம்பிக்கை இதை எல்லாம் தாண்டி இந்த விழாவுல நான் பாக்கறது மக்கள் உற்சாகமா, ஒற்றுமையா,சந்தோஷமா, சொந்தக்காரங்களோட சிரிச்சி பேசி மகிழ்வதைத்தான்.வெளி ஊர் ஆட்களும் ,உள்ளூர் ஆட்களும் கூடி மகிழ்வதை பார்க்கவே சந்தோஷமா இருக்கும்.

விழாவோட இறுதி நாள்ல சத்தாவரம் நடக்கும். அதாவது தெய்வ  தரிசனம்.இரவு 7 மணில இருந்து மறு நாள் காலை 8 மணி வரை கூட்டம் பின்னி எடுக்கும். 4 வீதிகள்லயும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடி தேர்க்கடையை சுத்தீட்டே இருப்பாங்க.எவனும் எதையும் வாங்க மாட்டான். சும்மா பாவ்லா காண்பிப்பாங்க.
http://staff.science.nus.edu.sg/~sivasothi/blog/images/20070206-jeff_ooi-thaipusam.jpg
கூட்டத்துல ஃபிகருங்களை இடிக்கறது,ஆண்ட்டிகளை உரசறதுன்னு நம்மாளுங்க பண்ற லோலாயம் இருக்கே.. அட அட.. இதுக்குன்னே 80 கி மீ நடைப்பயணமா வர்ற ஆளுங்களும் உண்டு.

அதனால உள்ளூர் பெண்கள் யாரும் அன்னைக்கு நைட் வெளில வர மாட்டாங்க..உள்ளூர் ஆண்கள் .. நைசா அவங்களை தூங்க வெச்சுட்டு மிட் நைட்ல கிளம்பிடுவாங்க.. ராத்திரி ரவுண்ட்ஸ் அப்பை ஜூனியர் விகடன் நிருபரை விட பிரமாதமா பண்ணுவாங்க..

தேர்க்கடைகள் ஏராளமா இருக்கும்.இதுல அவனவன் லவ்வர், கேர்ள் ஃபிரண்ட்ஸ் (கவனிக்க - பன்மை)க்கெல்லாம் ஜிமிக்கி,வளையல்,தோடு அது இதுன்னு ஏதாவது வாங்கிகுடுப்பாங்க.

பலூன் சுடறது..,ரிங்க் வீசி சோப்,பிஸ்கட் பாக்கெட் ஜெயிக்கறது,ராட்டன் தூரினு ஊரே களேபரமா இருக்கும்.முன்ன பின்ன பாக்காத ஃபிகரை கணக்கு பண்றவங்க இங்கே அதிகம்.ஸ்கூல்ல படிக்கறப்ப மேத்சே போட மாட்டான்.. ஆனா ஃபிகரை மேத்தமேட்டிக்ஸ் பண்றதில பி ஹெச் டி பண்ணி இருப்பான்.
http://www.noexpectations.com.au/images/thaipusam-0206-00234-display.jpg
கரும்பு ,பொரி கடலை,பட்டாணி சுண்டல் இந்த 7 நாள்ல செமயா சேல்ஸ் ஆகும்.வேல் குத்தறது, அலகு குத்தறது.. அரோகரா அரோகரா போடறதுன்னு ஒரே களேபர பூமியா காட்சி அளிக்கும். ( அலகு குத்தறதை  கண்ல பாக்க முடியாது).

அண்ணமார்,தேவகிரி, பாலமுருகன் அப்படின்னு 3 சினிமா தியேட்டர் இருக்கு.. (அதானே பார்த்தேன்,.. ஆன்மீகக்கட்டுரைல கூட சினிமா மேட்டரை நுழைச்சிடுவியே?)இந்த தரிசனம் அன்னைக்கு விடிய விடிய சினிமா நடக்கும். காட்சி நேரம் காலை 10, 1 , 4 , 7 , 10, 1, 4 , 7  அப்படின்னு 8 ஷோ போட்டுடுவாங்க.செம கலெக்‌ஷன்தான்

ஈரோட்ல இருந்து சென்னிமலை வர டவுன் பஸ் நெம்பர் 11 . டிக்கெட் விலை ரூ 6.   L S S  பஸ்னா ரூ 6.50. விழாக்கால பேருந்துன்னு போர்டு போட்டான்னா ரூ 10 ரவுண்டா வசூல் பண்ணிடுவாங்க..சர்வீஸ் பஸ்ல ரூ 10.  ஈரோடு டூ பழநி வர்ற சக்தி முருகன் பஸ் உட்பட 13 சர்வீஸ் பஸ் இருக்கு.சக்தி முருகன் பஸ்ல மிச்சமான ஃபிகருங்க எல்லாம் வரும். ( அதென்ன மிச்சமான?- நாம ரசித்த அழகு போக மிச்ச அழகே 100% இருக்கும்)

படிக்கறவங்க யார் வேணாலும் வாங்க. நல்ல விருந்தோம்பல் உண்டு.

டிஸ்கி 1 - ஆன்மீக கட்டுரைதான் டைப் அடிச்சேன்.. மறுபடி படிச்சு பாக்கறப்ப சராசரி ரசிகனுக்கு போர் அடிக்கக்கூடிய தகவல்களை..ஸ்தல புராணங்களை எடிட் பண்ணிட்டு பார்த்தா அப்புறம் கட்டுரை இப்படி  அமைஞ்சிடுச்சு.. சாரி...

டிஸ்கி 2 - நாளைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கமா பக்தர்கள் வெள்ளிக்கிழமைலதான் விரதம் இருப்பாங்க.ஆனா நான் சினிமா பதிவு போட்டு 4 நாள் ஆகுது. அந்த விரதத்தை முடிக்கப்போறேன்.. ஹி ஹி