Showing posts with label சந்தேகங்கள். Show all posts
Showing posts with label சந்தேகங்கள். Show all posts

Monday, July 02, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 13

1 . உங்கள் முதல் பதிவு எப்போ போட்டிங்கனு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கு எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க ? அதுல மறக்கமுடியாத கமெண்ட்ஸ் எது ?(உங்க ப்ளாக் ஓபன் பண்ணி பார்காமசொல்லணும் )


ஜூலை 17, 2010 .. ஏன்னா அதுதான் என் முத போஸ்ட்.. என்ன தர்ம சங்கடமான சூழ்நிலைன்னா முத போஸ்டே என் நண்பர் பாடல் எழுதிய படம்.. ஆனா படம் டப்பா.. டைட்டில்ல விருந்தாளி - அபாயம் போகாதே -ன்னு வெச்சாச்சு.. ராங்க் செண்ட்டிமெண்ட்.. நிறைய பேரு அவ்ளவ் தான் அட்ரா சக்க ஊத்திக்கும்னாங்க.. எனக்கும் ஒரு ஒரத்துல பயம் இருந்தது.. ஆனாலும் அப்படி ஏதும் நடக்கலை.. பாடல் ஆசிரியர் திரு முருகன் மந்திரம்.. அவருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். கமென்ட்ஸ் போட்டது நல்ல நேரம் சதீஷ்னு நினைக்கறேன்.. யாருமே கமெண்ட் போடாததால நான் தான் அவருக்கு ஃபோன் பண்ணி கமெண்ட் போடச்சொன்னேன் ஹி ஹி 


2 .உங்கள் தந்தையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் அந்த பதிவை படித்து உங்களை யாராவது பாராட்டிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க ?


எல்லாருக்கும்  அப்பா இருக்கு, அப்பா பற்றிய நினைவுகள் இருக்கு.. ஆனா நான் என் அப்பா பற்றி எழுதுனதும் ஏகப்பட்ட பாராட்டு,.,. காரணம் நான் சீரியஸா எதுவும் எழுதுனதே இல்லை.. பெரும்பாலும் காமெடி தான் மொக்கை தான்.. அதனால அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம்.. மும்பை பிரகாஷ், லண்டன், இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் அதற்கு பாராட்டு தெரிவிச்சாங்க.. மனசுக்கு மகிழ்ச்சி.. அப்பாவுக்கு மரியாதை.. எழுத்துக்கு ஒரு நிறைவு..


3 . உங்களிடம் கணினியும் ,இணய இணைப்பும் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் உங்கள் அலுவலக கணினியில்தான் பதிவுகள் ,டவிட்கள், போடுகிறீர்கள், இது உங்கள் மேலதிகாரிக்கு தெரியுமா ? உங்கள் சக ஊழியர்கள் உங்கள்பதிவை படிப்பார்களா? உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்கள் முதலாளிக்கு நன்றி சொல்லி இருகிறீர்களா ?



பழைய ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியும்.. புது ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு  தெரியாது.. அடிக்கடி நான் மொபைல்ல பிஸியா இருக்கறதை பார்த்து அவங்க ஏதோ லவ் மேட்டர்னு அவங்களுக்குள்ளேயே  சிரிச்சுக்குவாங்க .. நன்றி- மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன்..


4 .இந்த பதிவை போட்டு இருக்க கூடாதுன்னு நினைச்ச பதிவு எது ?


நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும்.. ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 4 ரெண்டில் சொன்ன கருத்துக்களில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசுல பட்டதை பகிர்ந்தேன்.. அது தேவை அற்ற மனக்கசப்புகளை கொண்டு வந்தது.. இனி ஜாக்கிரதையா இருப்பேன்./. சொல்வதெல்லாம் உண்மையா இருக்கனும் அதே சமயம் எதை சொல்லனுமோ அதை மட்டும் தான் சொல்லனும்



5 .மறைக்காமல் சொல்லுங்க உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தானே ??


என் தளம் பெண்களுக்கானதல்ல... பெரும்பாலான விஷயங்கள் ஆண்களை குறி வைத்தே எழுதப்படுகின்றது .. ஆனா  பெண்களும் படிக்கும் தரத்தில் தான் இருக்கும்.. பதிவு போட்டதும் ஏதாவது கண்டனம் வந்தா சர்ச்சைக்குரிய லைனை திருத்திடுவேன்


6 . சகபதிவர்கள் பதிவை படிப்பதுண்டா , அவைகளில் பிடித்த பதிவர் &பதிவு ஒன்றை சொல்லவும் 


தினமும் 5 பதிவாவது படிப்பேன்.. கும்மாச்சி, தமிழச்சி,டாக்டர் ராஜ் மோகன், மங்கை,மெட்ராஸ் பவன் சிவக்குமார்



7 . உங்களை கலாய்ப்பவ்ர்களை திட்டிதீர்ப்பிர்களா? இல்லை ரசிப்பீர்களா ?


ரசிப்பேன்.. வரம்பு மீறாதவரை 


8 .தயவு செய்து ஜிகிடி ,பிகிடிக்கு அர்த்தம் சொல்லவும் ?


ஜிகிடி பிகிடிக்கெல்லாம் அர்த்தம்   கிடையாதுன்னு ஆயிரம் தடவை சொல்லீட்டேனே?


9 .முகநூல் , ட்விட்டர்,ப்ளாக்  எது ரொம்ப பிடிக்கும் ?


பிளாக் தான் முதல்ல  எண்ட்டர் ஆனேன்.. மார்க்கெட்டிங்க்காக ட்விட்டர், ஃபேஸ் புக் வந்தேன்.. ஆனா ட்விட்டர் தான் செம ஜாலி



10 . உங்கள் முகநூல் ,ட்விட்டர் கமெண்ட்ஸ் களுக்கு நீங்கள் பதில் சொல்வது அரிது இது ஏன் ? வேலைபளுவா ? இல்லை நிராகரித்தலா ?


 எனக்கு கிடைக்கற டைம் ரொம்ப கம்மி.. பதிவு டைப் பண்ணனும், சினிமா பார்க்கனும், வசனத்தை மறக்காம நினைவு வெச்சுக்கனும். இந்த பிசில ரிப்ளை தர டைம் இல்லை சாரி


11 . இன்னும் நிறைய  கேள்விகள் இருக்கிறது கேட்க அனுமதி உண்டா ?


கேளுங்க , கேளூங்க  கேட்டுக்கிட்டே இருங்க.  அப்புறம் நான் எப்படித்தான் பதிவை தேத்துவது?--

மேலே கண்ட கேள்விகள் அனைத்தும் Sasimohan Kumar உடையது



12. சினி பிரியன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்கீங்களே.  நமிதா வந்து ரிப்பன் வெட்டுனதுக்கு அப்புறம்தான் அதுல எழுத ஆரம்பிப்பீங்களாமே? நெசமா? - மெட்ராஸ் பவன் சிவக்குமார்


சினிமா சம்பந்தப்பட்ட மேட்டர்களை மட்டும் ஒரு தளத்துல தனியா தொடங்கலாம்னு ஆசைப்பட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சேன்.. அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..  



13. காதலை  உங்களோட கண்ணோட்டத்துல நீங்க அதை எப்படி பார்க்குறீங்க?? (காதல் பற்றி உங்க கருத்து என்ன???)  - திரு எனும் சேலம் மேங்கோ சிட்டி பாய்


உண்மையான காதல் இன்னைக்கும் இருக்கு , ஆனா அளவில் குறைவா இருக்கு.. இன்னைக்கு கள்ளகாதல் தான் அதிகம் தென்படுது./.  உண்மைக்காதலுக்காக உயிரையே கொடுப்போம்னு எல்லாம் யாரும் வசனம் பேசரது இல்லை. பிராக்டிகல் லைஃப் வாழறாங்க.. கல்யாணம் ஆன பின்பு காதல் குறையக்கூடாது  .. உண்மைக்காதல்  என்பது உடலாலும், மனதாலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருத்தல்




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html

Tuesday, June 26, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 12


Photo: I love my Indian Tradition ♥

share it if u like it :)
1. அட்ரா சக்க என பேர் வைக்கறதுக்குப்பதிலா  கொங்கா மக்கா என ஏன் வைக்கலை? - குட்டி சாகசன் 




முதல்ல கொங்கா மக்கா-ன்னுதான் வெச்சிருந்தேன்,நிறைய பேரு ஏன் அட்ரா சக்க அப்டினு வைக்கலாமே?ன்னு கேட்டாங்க.. அதனால மாத்திட்டேன்.. கோக்கு மாக்கா கேள்வி கேட்டே குழப்புங்கய்யா.. 




2. தினமும் 3 பதிவுகள் போடறீங்களே, உங்களுக்கு சலிக்கவே இல்லையா? -குட்டி சாகசன் 




இந்த கேள்வில ஏதோ உள்குத்து இருக்கு.. படிக்கறவங்களுக்கு சலிப்புன்னு அர்த்தம் வருது.. நல்லா கவனிங்க.. நான் தினமும் காலைல 5 டூ 6  ஜோக்ஸ் & ட்வீட்ஸ் போஸ்ட் போடறேன். மாலையில் ஒரு சினிமா விமர்சனம் போஸ்ட். நடுவே ஏதாவது அரசியல் போஸ்ட்,.. அதனால 3 வெவ்வேற பிரிவில் போடுவதால் படிக்கறவங்களுக்கு போர் அடிக்காதுனு நினைக்கறேன். எனக்கு பதிவு போடுவதில் இதுவரை சலிப்பு வந்ததில்லை. வந்தால் ஏன் போடறேன்?




 3. நீங்ககேட்க வேண்டிய மன்னிப்பு, தெரிவிக்க வேண்டிய வருத்தங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி பாக்கி இருக்கா? - சே செந்தில்குமார்




வாரா வாரம் சண்டே அன்னைக்கு சர்ச் போய் பாவ மன்னிப்பு கேட்கறாங்க, கோயில்க்கு வெள்ளிக்கிழமை போய் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு சாமின்னு சொல்றாங்க.. சாமி இருக்கா? இல்லையா?ன்னு முழுசா தெரியாமயே அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கறப்போ தினமும் நாம பார்த்து பழகின மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு?


 ஜாலியா கலாய்க்கறப்போ சில சமயம் சிலர்  மனம் புண் படும்படி ஆகிடுது.. அவங்க மனசு ஆறுதலுக்கு நம்ம மன்னிப்பு பயன் பட்டால் எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்.




 4. உங்கள் திரைப்பட விமர்சனக்களில் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வாசிப்பவர்களை ஏன் நெளிய வைக்க வேண்டும்- J.P Josephine Baba,


நிறைய பேர் கேட்டாச்சு.. சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமா நாயகியின் வர்ணனை இருக்கும். அதை ரசிக்கறீங்க.. ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினை 4 லைன்ஸ் வர்ணிச்சா தப்பா?நெளிய வைக்காதே. பெண்களும் ரசிக்கும் வண்ணமே என் வர்ணிப்புகளும் ,கலாய்ப்புகளும் இருக்கும். லிமிட் தாண்ட மாட்டேனே? அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கள்.. வரிகள் அகற்றப்படும் 







5. பதிவு எழுத்து பற்றி உங்கள் திட்டங்கள் என்ன? - J.P Josephine Baba,

 1. சினிமா விமர்சனங்களில் பல முறை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் கணிப்பு தவறி விடுகிறது. இதுவரை 6 படங்களுக்கு மட்டுமே துல்லியமாக மார்க்கை முன் கூட்டியே கணிக்க முடிந்தது,... அதை மாற்ற வேண்டும்.. சமீபத்தைய என் சறுக்கல் சகுனி விமர்சனம்.. பல குறைகள் இருந்தாலும் படம் கம்ர்சியலாக சக்சஸ் தான் என எழுதி இருந்தேன், ஆனால் 90 % விமர்சகர்கள், பொதுமக்கள் பார்வையில் அது கடி ஆகி விட்டது.. இதை , இந்த ராங்க் ஜட்ஜ்மெண்ட்டை தவிர்க்க ஆசை


2.நகரங்களில் உள்ள டாப் டென் ஹோட்டல்கள் பற்றி ஒரு பதிவு போட்டேன். நல்ல வரவேற்பு பெற்றது, அது போல் மக்களுக்கு பயன் உள்ள வகையில் பதிவு போடனும்.. உதாரணமா ஒரு சினிமா விமர்சனம் அந்த கால கட்டத்தில் மட்டுமே படிக்கப்படும், ரசிக்கப்படும்.. ஆனா  எந்த காலத்தில் படிச்சாலும் யூஸ் ஆகற மாதிரி போஸ்ட்ஸ் போடனும்.. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன








6 . பதிவு எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியலாமா? பதிவு எழுதுவதால் தாங்ககள் அனுபவிக்கும் மன மகிழ்ச்சி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,


பத்திரிக்கைகளில் ரிஜக்‌ஷன் பண்றது இப்போ அதிகம் ஆகிடுச்சு.. அதனால நம்ம படைப்பை வெளிக்கொணர பிளாக் அதிகம் பயன் படுது.  ஒரு மேகஜின்க்கு படைப்பை அனுப்பிட்டு வருமா? வராதா?  பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என காத்திட்டு இருக்கறதுக்கு ஆன் த ஸ்பாட் நாமளே எடிட்டரா இருந்து போஸ்ட் போடறது  ஒரு கிக்... மன மகிழ்ச்சி என்னன்னு பார்த்தா வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல வாசகர்கள் ஃபோன் பண்ணி பாராட்டுவதுதான்.. பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வாசகர்கள் பாராட்டு அதிக சந்தோஷம் தருது










7. பதிவு எழுதுவதால் தாங்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,



1.பத்திரிக்கைகள் இல்லாத அல்லது போய்ச்சேராத இலங்கை போன்ற தேசங்களில் கூட வாசகர்கள்  நமக்கு கிடைக்கறாங்க


2. அலெக்சா ரேங்க் நல்ல நிலைல இருந்தா பிற்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வர வாய்ப்பு உண்டு


3. சினிமா விமர்சனம் போட்டதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஃபோன் பண்ணி தங்கள் கருத்துகளை தெரிவிக்கறாங்க.. நாம நேரில் பார்க்க முடியாத வி ஐ பி கள் அவங்களே தேடி வந்து பேசறது சந்தோஷம்,., சமீபத்தில் இயக்குநர்  மு களஞ்சியம், வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்கள், மகிழ்ச்சி!







8. 80 வயது தாத்தா சி.பி செந்தில் எழுத போகும் ஒரு பதிவை இப்போது எழுதி பதிவிட இயலுமா?-
J.P Josephine Baba,



அது எப்படி முடியும்?இனிமே கிடைக்கப்போகும் அனுபவங்கள் என்ன? என எப்படி இப்போவே தெரியும்? வேணா ஒண்ணு செய்யலாம்.. 80 வயதில் எப்படி இருப்பேன் என கற்பனையா ஒரு பதிவு வேணா எழுதலாம்.. 


9.பயண தொடர்கள் எழுத வாய்ப்பு உண்டா?-J.P Josephine Baba,


எழுத  எனக்கும் ஆசை தான்.. ஆனால் அதற்குத்தடையாக இருப்பது என் உடல் நிலை தான்.. எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே.. முன்னே மாதிரி இல்லை.. 40 நாட்கள் முன்னாலயே  ரிசர்வ் செஞ்சாதான் சீட் கிடைக்குது.. தட்கால் -ல கிடைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆனாலும் இதை எல்லாம் மீறி பயணம் செஞ்சு கட்டுரை எழுத ஆசை தான்.. 








10. அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? -J.P Josephine Baba,

 விமர்சனங்கள் என்னைப்பற்றி , என் எழுத்தைப்பற்றி இருந்தால் கவலையே படமாட்டேன்.. ஏன்னா நானே பலரை கலாய்ச்சு இருக்கேன்,.. நண்பர்கள் ஆனாலும் சரி எதிரிகள் ஆனாலும் சரி.. என்னை யார் கலாய்ச்சலும்  அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு அந்தப்பதிவில் கமெண்ட்டும் போடுவேன்..

 ஆனா என்னை விட்டுட்டு சம்பந்தம் இல்லாம என் குடும்பத்தை பற்றி யாராவது எழுதுனா அது என் மனதை புண் படுத்துவதாக இருக்கும்.. அந்த பதிவில் கமெண்ட் போடுவதில்லை./.. பதிலுக்கு பதில் லாவணி பாடுவதில் தேவையற்ற மனக்குழப்பங்கள், கோபம் வந்து நிம்மதியை குலைக்கும் என்பதால் எதிர் பதிவுகளை தவிர்த்து விடுவேன்  





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 




டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

Tuesday, June 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 11

  1. பெண்களை பிகர் என்று அழைப்பது இழிவான வார்த்தைகள் என்று சில புலவர்களால்  குற்றம் சாட்டப்படுவது பற்றி...

வாங்க டாக்டர் ரியாஸ்..  அதுக்கு பதில் சொல்லி எனக்கு சலிச்சுடுச்சு. அதாவது பெண் என்றால் ஒரு மதிப்பும், மரியாதையும் மனசுல எழுவது  எல்லாருக்கும் பொதுவானது. அதனால ஒரு கிளுகிளுப்பை ஏத்திக்க , சும்மா ஜாலிக்கு ஃபிகர், ஜிகிடி, சில்ஃபான்சி  அப்டி கூப்பிடறது வழக்கம் தான். இது ஆல்ரெடி சின்னி ஜெயந்த், சந்தானம்  எல்லாரும் காமெடி டிராக்ல யூஸ் செஞ்ச வார்த்தைகள் தான்.. அப்புறம் டாக்டர். ரியாஸ். கடைசி வரை உங்க ஹாஸ்பிடல் ஃபிகர்ங்களை கண்ல காட்டவே இல்லையே? . 







2. உங்கள் பதிவுகளில் கிரந்தம் தவிர்க்கலாமே? உதாரணமாக இடீசல் இரீமா சென் ரசினி அசித் ஆலிவுட் ஆசுகார் இது போன்ற தூய தமிழ் சொற்களை நீங்கள் எழுதாதது ஏன் ?


தூய தமிழ் எனக்கு செட் ஆகாது.. நான் பேச்சு வழக்குத்தமிழுக்கு ரசிகன். தமிழ்ப்பிரியன் என காட்டிக்கொள்ள தமிழை கொலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் பேசறது , எழுதறது எல்லாம் சாதாரண மக்களுக்கு போய்ச்சேர்ந்தா போதும்.  ட்விட்டர் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை கீச்சு. இது என்னமோ மாதிரி இருக்கு. அதே போல் சிலர் துவிட்டர் என அழைக்கனும்கறாங்க. ரவுடி என்பதை சிலர் இரவுடி என்கிறார்கள். என்னது இரவு டி யா? என கிண்டல் பண்ணிடுவாங்க. .. அதனால் கிரந்தம். ம்ஹூம்.

அதெல்லாம் சரி.. இந்த கேள்வியை நீங்களா கேட்டீங்களா? இல்லை டி பி கேடி அண்ணனுக்கு ஆப்போசிட்டா ஒரு கேள்வி வேணும்னு வேணும்னே கேட்டீங்களா?



‎"சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர தீயை பற்றவைப்பவர் என்றும் தீவிரவாதி தான்"

 3. இரண்டு வார்த்தையில் இரு நச் நடு நிசி கீச்சு சொல்லுங்களேன் 



1. மந்தரா -96 = 69...



2.  ஆர்யா ( 6 யா) + 9 தாரா = 69





4. இடுப்பை கிள்ளுவதால் இன்பம் என்ற சித்தாந்தம் பண்டை இலக்கியங்களில் உள்ளதா? 


உங்களுக்கு லொள்ஸ் ஜாஸ்தி.. இலக்கியம்னாலே எனக்கு அதிகம் தெரியாது.. இதுல பண்டைய இலக்கியம் வேறயா? அவங்கவங்க நிகழ்கால லவ்வர் அல்லது மனைவியை கிள்ளுனா இன்பம் தான். 



5. உண்மையா சொல்லுங்க இதுவரை எத்தனை லவ் லெட்டர்ஸ் எழுதி இருப்பீங்க..அதுல எத்தனை போஸ்ட் பண்ணீங்க எத்தனை அந்நியன் படத்தின் அம்பியை போல பொட்டிக்குள்ள பூட்டி வச்சு இருக்கீங்க ? ஒருவேளை அப்படி இருந்தால் அதை எப்போ உங்க ப்ளாகில் வெளியிடபோறீங்க  



நான் பிளஸ்டூ படிச்சப்போ  நிறைய பேருக்கு அவங்க காதலிக்காக லவ் லெட்டர்ஸ் எழுதி ஹெல்ப் பண்ணி இருக்கேன்.. அது ஆல்ரெடி கண்மணிக்கு ஒரு கடிதம்கற டைட்டில்ல இதயம் பேசுகிறது இதழில் தொடராக 7 வாரங்கள் வந்தது. விரைவில் பிளாக்கில் போடறேன் 






 6. சினிமா பற்றிய ஒரு கேள்வி..மம்முட்டி உதயநிதி  ஸ்டாலின் இருவரும் போட்டி நடனம் ஆடினால் யாருக்கு அதிகம் மார்க்ஸ் தருவீங்க 


மம்முட்டியை விட  உதய நிதி ஓரளவு சமாளிக்கிறார் . அதனால என் ஓட்டு உதய நிதிக்கே. . இதுல 2 சுய நலம் இருக்கு.. அவர் படத்துல காமெடி டிராக் எழுத வாய்ப்பு கேட்டிருக்கேன். இன்னொன்னு கலைஞர் அய்யா குடும்பத்தை எதிர்த்துக்கிட்டு சினி ஃபீல்டுல குப்பை கொட்ட முடியாது ரொம்ப சிரமம்.. 





 7. சிராக்கோ படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்களா? ஆவலுடன் ரசிகர்கள் 



இப்படி யாராவது உசுப்பேத்தி விட்டுடுங்க. நானும் மெனக்கெட்டு விமர்சனம் போடறேன். ஜாலியா படிச்சுட்டு நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ  சி பி மோசமான ஆளு. கில்மா படத்துக்கு விமர்சனம் எல்லாம்  எழுதறான். அவன் கூட ஆரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது.. எந்த பெண்ணும் டி எம் ல கடலை போடக்கூடாதுன்னு மறைமுக மிரட்டல் உத்தரவு போடுங்க.. போங்கய்யா யோவ்.. நானும் உங்களை மாதிரி கமுக்கமா இருக்க முடிவு பண்ணிட்டேன்.. நோ கில்மா பட விமர்சனம் .


மேலே உள்ள 7 கேள்விகளையும் கேட்டு எனக்கு ஏழரையை கூட்டியவர் மதுரை பல் டாக்டர் ரியாஸ்.. 






8. உங்களது  வேலை நாளும், விடுமுறை நாளும் எப்படி கழியும்? விவரிக்கவும்.-

 திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 டூ 7.30 ஆஃபீஸ் டைம்.. சனிக்கிழமை ஆஃப் டே.  இதுல வாரா வாரம் வெள்ளி, சனி மட்டும் 4 படம் பார்த்து டைப் பண்ணி வெச்சுக்குவேன்.. சனி ஞாயிறு புது போஸ்ட் எதுவும் பெரும்பாலும் போட மாட்டேன். திங்கள் டூ வியாழன் 4 விமர்சனங்களையும் டெயிலி ஒண்ணா போடுவேன்.

ஞாயிறு ஃபுல் ரெஸ்ட்.. பாப்பாவைக்கூட்டிட்டு பார்க் , ஸ்விம்மிங்க் பூல், ஆறு அப்டி ரவுண்டிங்க்.. டி வி பார்ப்பேன்... அப்புறம் ஜனநாயகக்கடமை ஆற்றுவேன்.. ஐ மீன் சாப்பாடு, தூக்கம்.


9.உங்களுக்கு பிடிச்ச ஹீரோ மற்றும்ஹீரோயின் யார்? ஓப்பன் பதில் தேவை

- -திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம்


வழக்கமா எல்லா சட்டை பட்டனையும் போட்டிருப்பேன். இந்தக்கேள்விக்காக ஒரு பட்டனை கழட்டி விட்டுட்டேன். பிடிச்ச ஹீரோ - ரஜினி , கமல். பிடிச்ச ஹீரோயின்ஸ் அந்த டைம்க்கு யார்க்கு மார்க்கட்டு  நல்லாருக்கோ அதாவது  அந்தந்த காலகட்டத்துல யார் ஃபேமசோ அவங்க ரசிகன். லேட்டஸ்ட்டா அஞ்சலி..




10.விளையாட்டுக்காக இல்லை, நிஜமாவே நீங்க சி எம் ஆனா என்ன செய்வீங்க.. சீரியஸ் பதில் தேவை.. --திரு என்னும் மேங்கோ சிட்டி பாய் சேலம் 


அரசியலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.. மக்கள் செல்வாக்கு உள்ள ரஜினி உட்பட பர் அதுல இறங்க யோசிக்கறாங்க.. அதனால அப்படி ஒரு கற்பனையே வேணாம்.. ஆனாலும் உங்க கேள்வியை நானே கொஞ்சம் மாத்தி போட்டு கேட்டு பதில் சொல்றேன்..



அதாவது அதி முக , திமுக போன்ற தீய சக்திகள் எதிர்காலத்தில் செல்வாக்கு இழந்து ஒரு புது ஆள் சி எம் ஆனா அவர் ஆக்கபூர்வமா என்ன செய்யனும்?


1. குஜராத் சி எம்மை நேர்ல சந்திச்சு மது விலக்கு கொண்டு வந்தும் எப்படி நிர்வாகம் பண்ண முடியுது?ன்னு கேட்டு அதன்படி தமிழ் நாட்டிலும் மதுவிலக்கு கொண்டு வந்து ஆக்க பூர்வமான பணிகள் செய்யனும்..

2. இலவச திட்டங்களை முற்றிலும் ஒழிக்கனும்....ஓ சி அப்டின்னாலே ஒரு இளக்காரம் வந்துடும்..

3. விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய கொண்டு வரனும்.. நாட்டிலேயே அதிக சம்பாத்தியம் விவசாயிக்கு என்ற நிலை வந்தால் விளை நிலங்கள் விலை போவது தடுக்கப்படும்.. விவசாயத்துக்கு ஆள் இல்லாம தடுமாறும் அவல நிலை வராது..

4. தனியார்  பள்ளி ஆசிரியை ரூ 1800 சம்பளம் வாங்கி செய்யும் அதே வேலையை அரசு பள்ளி ஆசிரியர் ரூ 30000 சம்பளம் வாங்கி செய்யறார்,... அஎஅசு பணீ, தனியார் பணி இவற்றுக்கான சம்பள விகிதம் பல மடங்கு வித்தியாசம் இருப்பதை மாற்றனும்..


5. தமிழில் டைட்டில் இருந்தால் வரி விலக்கு என்ற கேனத்தனமான திட்டத்தை ரத்து செய்யனும்.. ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கறதை கட்டுப்படுத்தி அதில கடும் வரி விதிக்கப்படனும்


6. தீவிரவாதம் தலை தூக்காம பார்த்துக்கனும்.. எம் எல் ஏ , க்களுக்கான பவரை குறைக்கனும்.. அவங்களை கண்காணிக்கனும்


7. சி எம்மாக வருபவர் குடும்பஸ்தராக இருக்கக்கூடாது... வாஜ்பாய் போல் பிரம்மச்சாரியாக ,காமராஜர் போல் எளிமையானவராக ,நடு நிலைமை வகிப்பவராக இருக்கனும்..

தயவு செய்து .... டாலர் மட்டும் பிச்சை போடவும்.....
மன்னிக்கவும் ......இந்திய பணம் வாங்க இயலாது......

நமசிவாயம் தில்லை அருள்...


11. சில பதிவுகளில் ஓடி போவது, கள்ளகாதல் பதிவுகள் எழுதி வருகின்றீர்கள். இதன் தாக்கம் என்ன ? உலகில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ள போது தங்கள் ஆக்கபூர்வமான சிந்தனையை ஏன் இந்த மாதிரி செய்திகளில் செலுத்துகின்றீர்கள்?

அ) கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்? -
J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)


உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு.. கேள்வியின் முதல் வார்த்தை என்ன? சில பதிவுகளில்..... அவ்ளவ் தான் மேட்டர் ஓவர்... பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் சொல்லி வர்றேனே?பொதுவா மக்கள் மத்தியில் 1000 நல்ல விஷயம் சொன்னா அது அவங்க கண்ணுக்குத்தெரியாது.. ஒரு கெட்ட விஷயம் சொன்னா உடனே பளிச்னு தெரியும்.. நான் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டித்தரும் காக்டெயில் பிளாக்கரா ஆக ஆசை ..அவ்ளவ் தான்

கள்ள காதலர்கள் சங்கத்தில் இருந்து கொலை மிரட்டல் வந்தால் ஃபோனை கட் பண்ணிடுவேன் ஹி ஹி 


12. கில்மா என்ற சொல் வரலாறு தெரிந்த கொள்ள இயலுமா? கில்மா சொல்லும் உங்களுக்கும் ஏன் இந்த நட்பு? -J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)
செக்ஸ், பால் உறவு, உடல் உறவு போன்ற வார்த்தைகள் சில சமயம் யூஸ் பண்ண வேண்டி வருது.. அப்போ கூச்சமா இருக்கும்.. ஏன்னா  என் அக்கா பசங்க என் பிளாக்கை படிக்கறாங்க.. அதனால பூடகமா இருக்கட்டும்னு கில்மாவை யூஸ் பண்றேன். கூல் மா ..... டோண்ட் திங்க் தட் கில்மா .


13. உங்கள் பதிவுகளில் அச்சம் நாணம் மடம் அற்ற பெண்கள் படங்களாக போடுவதின் பின்னனி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?-J.P Josephine baba(ஜோசபின் கதைக்கிறேன்)

 போச்சுடா.. ஒரு முடிவோட தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.. நான் போடும் சினிமா விமர்சனங்களில் , சில சினிமா பேட்டிகளில் அபூர்வமான கிளாமர் ஃபோட்டோக்களை போடுவது ஒரு ரிலாக்ஸேஷனுக்கு... எழுத்தில் ஏதாவது குறை இருந்தாலோ, அல்லது போர் அடிக்கற மாதிரி இருந்தாலோ அந்த ஸ்டில்ஸ் சரி பண்ணிடும்னு ஒரு நப்பாசை.. இப்போ கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வர்றேன்.. 


சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா.
நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


http://www.bestactress.info/wp-content/uploads/2011/07/kajal-agarwal-hot-saree-singam-movie.jpg


Monday, June 11, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 10

1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?

என்னோட லட்சியமே டைரக்டர் ஆவதுதான்.. ஆனா அதுக்கான முறையான முயற்சிகளையோ, பயிற்சிகளையோ நான் எடுக்கலை.குடும்ப சூழலின் காரணமா என்னால ஈரோட்டை விட்டு சென்னை போக முடியாத சூழல்.. அப்படி இருக்கும்போது  நீங்க சொன்ன மாதிரி ஒரு சம்பவம் நடந்தா பிளாக்கை விட்டுடத்தயார்..


இந்தகேள்வில ஏதாவது உள்குத்து இருக்கா? என்னை துரத்தும் பிளானா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொன்னேன்..





2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?

சுற்றுப்புறத்தை, நாட்டு நடப்பை கவனிப்பதால் தான், அவற்றை உள் வாங்குவதால் தான் ஜோக்ஸ், கமென்ட்ஸ், ட்வீட்ஸ், பதிவுகள்  போட முடியுது.. திண்னைல உக்காந்து வெட்டி அரட்டை அடிக்கலை, டாஸ்மாக் போய் சரக்கு அடிச்சு ரோட்டோரம் கிடக்கலை.. இழந்தைவைகள் என ஏதும் இல்லை.. குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கிட்டு தான் இருக்கேன்.. இல்லைன்னா குடும்பம் நம்மை ஒதுக்கிடுமே?



3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.?


சினிமாங்கறது ஜஸ்ட் எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. உறவுகள் என்றென்றும் எண்ட்டயர்லி அட்டாச்மெண்ட்.. உறவுக்குத்தான் முக்கியத்துவம். ஆனாலும் என்னை நன்கு புரிந்த உறவுகள் என் சுபாவம் உணர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நெருக்கடி கொடுப்பதில்லை


4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆனோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?

ஆனானப்பட்ட காந்தியே எதிர்மறை விமர்சனங்களை சந்திச்சவர் தான்.. அதனால என்னைப்பற்றிய தாக்குதல்களை நான் பெரிதா எடுப்பதில்லை.. பதிவுலகில் ஜாக்கி சேகருக்கு அடுத்த படியா தாக்கப்பட்ட தனி மனிதன் நான் தான்.. அவரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் இதுவரை 34.. என்னை தாக்கி எழுதப்பட்டவைகள் 28.. என்னை அதிகம் புரிந்து கொள்ளாத, என்னுடன் பழகாத நண்பர்கள் தாக்கும்போது எனக்கு பாதிப்பு இருக்காது


ஆனா  என் கூடவே பழகி, என்னைப்பற்றி நன்கு புரிந்த நண்பர்கள் தாக்கும்போது வருத்தம் இருக்கும்.. ஆனாலும் நண்பர்களை எதிர் தாக்குதல் செய்வதில்லை.. இது என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்


5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா? - ராஜி, வேலூர் ( மேலே உள்ள 5 கேள்விகளும்)

நல்ல கேள்வி. கில்மாப்படம் பார்க்காத ஆண்கள் யாருமே கிடையாது.. பெண்களும் சிலர் பார்க்கறாங்க.. ஆனாலும் அந்தப்பட விமர்சனங்கள் போட்டா எல்லாரும் கிண்டலாவும், கேலியாவும் தான் பார்க்கறாங்க. கில்மாப்பட விமர்சகர்னு நக்கல் பண்றாங்க.. நான் இதுவரை செய்த சினிமா விமர்சனங்கள்  147, அதுல கில்மாப்பட விமர்சனங்கள் 13 தான். ஆனா என்னமோ என் தொழிலே கில்மாப்பட விமர்சனம் தான் அப்டிங்கற மாதிரி பேசிக்கறாங்க.


 நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் உணவு உலகம் ஆஃபீசர்  வேண்டுகோளின் படி 2012 ஜனவரி 1 இல் இருந்து நான் கில்மாப்படம் விமர்சனம் பண்றது இல்லை, ஆனால் படம் பார்த்துடுவேன்.. சில பெண் வாசகிகளும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாங்க. உங்க தளத்தில் கமெண்ட் போட தயக்கமா, சங்கடமா இருக்கு. அதனால அந்த மாதிரி படங்களுக்கு விமர்சனம் பண்ண வேணாம் .. உங்க இமேஜை உடங்க  அப்டின்னாங்க..


-----------------------------




மயிலன்
அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டா?.. ஹ்ம்ம்ம்...

சரி என்னோட கேள்விகள்...

1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?

தம்பி, இப்போ  நான் தமிழ் மணத்துலயே இல்லை.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடவேணாம்னு அவங்க எச்சரிக்கைகள் கொடுத்தும் என்னால சில சமயங்கள்ல போட வேண்டிய சூழல் வந்தது.. அதனால அவங்க என் தளத்தை நீக்கிட்டாங்க.. தமிழ் மண ரேங்க்ல முதல் இடம் வந்தப்போ நான் லஞ்சம் ஏதும் தர்லை.. லஞ்சம் கொடுத்தா முதல் இடம் வரலாம்னா பலர் அதைத்தர தயாராவே இருந்தாங்க. ஆனா தமிழ் மணம் ஹிட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கறாங்க, துட்ஸை அல்ல



2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?

யா யா.. ஏராளம்.. சேட்டைக்காரன், கும்மாச்சி, குசும்பன் என நகைச்சுவை கலந்து எழுதுபவர்கள் பல பதிவுகள் அப்படி நினைக்க வெச்சிருக்கு. ராவடி ராம்சாமி எழுதுன பூமியை நோக்கி என்ற வித்தியாசமான தொடர் வந்தப்போ அப்படி நினைச்சேன். அதே போல் ட்விட்டர்ல வேதாளம் எழுதுன ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படிச்சும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஐ ஆம் கார்க்கியின் லேட்டஸ்ட் யூ டியூப் மிக்சிங்க் காமெடி ரிலீட்டட் சென்னை மெகா ட்வீட்டப் நையாண்டி பார்த்தப்பவும் நினைச்சேன்



3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் அப்டினு ஒரு பதிவு போட்டேன்.. சும்மா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்க. நான் சொன்ன அதே கருத்தை அண்னன் உண்மைத்தமிழன்  அடுத்த நாள் ஆமோதிச்சு பதிவுல சொன்னப்போ எல்லாரும் கமுக்கமா இருந்தாங்க. இதில் இருந்து கிடைக்கும் நீதி பின்புலம் இல்லாம பலம் இல்லாம நாம எந்த காண்ட்ரவர்சியான கருத்தையும் சொல்லக்கூடாது.


4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?

எனக்கு பிளாக் இருக்கறதே  வீட்டுக்குத்தெரியாது..  எங்க வீட்டுல நெட் கனெக்‌ஷனே இல்லை. ஆல் ஒர்க் இன் ஆஃபீஸ் ஒன்லி.. ஹி ஹி இந்த கேல்வில பொத்தாம்பொதுவா அண்ணி  அடிக்கறது இல்லையா?ன்னு கேட்டிருக்கலாம். அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?இந்த அளவு வன்முறை தேவையா? :)



5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...


எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...

நாட்டுல எல்லாருக்கும் 1000 பிரச்சனை.. உங்க பிரச்சனை இதுதானா? அனுப்பித்தொலைக்கிறேன் ; -)



 ராஜபேட்டை ராஜா


பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாம் ஜஸ்ட் பொழுது போக்குத்தான்.


நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?


 ஜாலியா கலாய்ச்சுப்போட்ட சில பதிவுகள் பலர் மனதை காயப்படுத்தி இருக்கு. அவற்றை எல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கறேன். இனி வரும் காலங்களில் கவனமா இருந்துக்க வேண்டியதுதான்



கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

ட்விட்டர்ல ஒரு நல்ல ட்வீட் யாராவது போட்டா அதை மற்றவங்க  RETWEET பண்றாங்க . சுருக்கமா அதை RT னு சொல்வோம். அந்த மாதிரி எனக்குப்பிடிச்ச சில படைப்புகளை என் பிளாக்ல  RT பண்றேன்.. ஆனா பலர் நான் ஆனந்த விகடன்ல இருந்து மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்றதா தப்பா நினைச்சு எதிர் பதிவு போடறாங்க. அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது நான் சண்டே இந்தியன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ர்ட்டர், நக்கீரன்,கல்கி என எல்லா இதழ்களில் இருந்தும் பதிவுகள் போடறேன்.


 துக்ளக் இதழ் மட்டும் தான் இன்னும் என் கைக்கு சிக்கலை.. ஆன் லைன் சந்தாதாரர்கள் யாராவது உதவி செஞ்சா குருமூர்த்தியின் பொருளாதாரக்கட்டுரைகள், துக்ளக் சத்யாவின்  காமெடி கட்டுரைகள் போட ஆசை.



கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?


சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா பலர் “ ஏண்டா இவன் பதிவுலகிற்கு வந்தான் என எரிச்சலோட மெயில் சேட்டிங்க்ல நண்பர்களுடன் அளவளாவுவதை கவனிச்சிருக்கேன்


கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ? 

 என் பொண்ணு அபிராமி ஸ்ரீதான்





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




Monday, May 07, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் -9 - மூன்றாம் கோணம் - ( நெல்லை ஃபோட்டோக்கள் உடன்)

பதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்-மூன்றாம் கோணம் - 2010 அக்டோபர் -29




பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த "பதிவர்கள் பேட்டி " பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்....."அட்ரா சக்க" என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்... சி.பியின் ஸ்பெஷாலிடி... ஜனரஞ்சக ஸ்டைல்... டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்.... பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்...இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்...





1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?
சி.பி - எல்லாம் தெரிஞ்ச மாதிரியேன்னா அப்போ எனக்கு எதுவுமே தெரியாதுங்கறதை கண்டு பிடிச்சுட்டீங்களா? 

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.


சி.பி மனசாட்சி - தக்காளி.. விருந்து, இந்து நேசன் எல்லாம் படிச்சுட்டா அவன் படிப்பாளியா?


2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?
சி.பி - ம் படித்துறை.. குற்றப்பத்திரிக்கை.. ங்கொய்யால 

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.

சி.பி .வலைச்சரம் சீனா அய்யா, உலக சாதனை மாணவி ஐ க்யூ ஸ்பெஷலிஸ்ட் விசாலினி,மதுரை சரவணன்


3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.
ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.
பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்). 

4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்


 விசாலினியின் குடும்பம்



5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.


6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்


7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி

கவிதை வீதி போலீஸ்கார் சவுந்தர்,சின்ன வீடு சுரேஷ்,சி.பி,வேடந்தாங்கல் கருண், தமிழ்வாசி பிரகாஷ்


8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே... அதப்பத்தி..

பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.


9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க...
டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




Wednesday, May 02, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 8 ( நெல்லை ஃபோட்டோக்கள் உடன்)

3
 கூடல் பாலா, சி.பி -கவிதை வீதி ரவுடி சவுந்தர்

. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


 இல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..



37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?                    
                     

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ் வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது
வேலைக்கு போறதுதான்  நல்லது



கோவை சம்பத், நாய் நக்ஸ் நக்கீரன், ஆல்வேஸ் பிஸி(!!) சி.பி ,சின்ன வீடு பல வைத்திருக்கும் சுரேஷ்


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால் பகிருங்களேன் ?    by @iyyanars                                        

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனது தான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..

 இந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பி விட்டார்.. 

 அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது

1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது

2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது



39. .உங்கள் இளமையின் ரகசியம் ?           


 எனக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... ( கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க) 

தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் )

வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன்

 சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் 

 பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை.. 

இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10 ,மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்


ரத்னவேல் அய்யா,நக்கீரன்,சம்பத், பிரகாஷ், கருண், சவுந்தர், லேப் டாப் மனோ

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by  @arivukkarasu 


ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹி ஹி 

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano    

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி,,புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்.. 

கூடல் பாலாவுடன்
42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?  

 நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு ப்[அண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக வ்மர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்.. 

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl 

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து  லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks  

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த  ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி  ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்.. 

 ராஜபேட்டை ராஜா, கூடல் பாலா, சி.பி , லேப் டாப் மனோ
\
45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?       by @NattAnu   


ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான் 


diski -http://www.hotlinksin.com
தமிழ் திரட்டியில் தொடர்ந்து பதிவுகளை இணைத்து வருகிறீர்களா...? உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் பதிவர் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது. பதிவர்களே உடனே இணைந்து பதிவுகளை தொடர்ந்து இணைத்து பரிசினை வெல்லத் தயாராகுங்கள்.

லேப் டாப் மனோ வித் வாரிசுகள், உலக சாதனை படைத்த நெல்லை பெண் ( ரோஸ் கலர்) ஃபேஸ்புக் ஸ்பெஷலிஸ்ட் கே ஆர் விஜயன், அவர் மனைவி



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html