14/1/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி ரூ21 கோடி ரூபாய் வசூலைக்குவித்த இந்த லோ பட்ஜெட் படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் தமிழ் டப்பிங் உடன் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காமெடிப்படம் இது.
நாரி நாரி நடுமா முராரி என்ற டைட்டிலுக்கு
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் அப்பா பிரபல வக்கீல்.அவருக்கு வரும் பெரும்பாலான கேஸ்கள் டைவர்ஸ் கேஸ்கள் தான்.குறிப்பாக லவ் மேரேஜ் ஆன ஜோடிகளின் டைவர்ஸ் கேஸ். பிரிவுக்குக்காரணமாக காதல் செய்தது தான் என அவர்கள் சொல்ல காதல் மீதும் ,காதல் கல்யாணத்தின் மீதும் நம்பிக்கை அற்றவராக நாயகியின் அப்பா திகழ்கிறார்.
நாயகனின் அப்பா மகனுக்குத்திருமணம் செய்ய வேண்டிய சமயத்தில் 25 வயதுப்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து ஊரார் கேலி செய்யும் அளவுக்கு காமெடிப்பீஸ் ஆனவர்.
நாயகி,நாயகன் இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா ஆரம்பத்தில் சம்மதிக்கா விட்டாலும் மகளின் பிடிவாதத்தால் சம்மதிக்கிறார்.ஆனால் ஒரு கண்டிஷன் போடுகிறார்.
திருமண மண்டபத்தில் உற்றார் ,உறவினர் கூடி செய்யும் திருமணம் ஆக இருக்கக்கூடாது.ரெஜிஸ்டர் ஆபீசில் தான் திருமணம் என்கிறார்.வேறு வழி இல்லாமல் அதற்கு நாயகன் சம்மதிக்க இப்போது ஒரு புது சிக்கல் வருகிறது.
நாயகன் ஏற்கனவே ஒரு பெண்ணைக்காதலித்துத்திருமணம் செய்தவன்.பிரேக்கப் ஆகி விட்டது.இது நாயகிக்குத்தெரியாது.
நாயகன்,நாயகி இருவரும் பணி புரியும் கம்பெனியில் எம் டி ஆக இருப்பவர் தான் நாயகனின் முன்னாள் காதலி.
இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
எங்கேயும் எப்போதும் (2011) மெகா ஹிட் படத்தின் நாயகன் சர்வானந்த்தான் இந்தப்படத்தின் நாயகன்.அந்தப்படத்தில் சீரியஸ் ஆக வந்தவரை 15 வருடங்கள் கழித்து காமெடி கலந்த நாயகனாகப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி ஆக சாக்ஷி வைத்யா இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் கண்ணியம் கலையாத ஆடை வடிவமைப்புகள் அருமை.
நாயகனின் முதல் காதலி தியா ஆக சம்யுக்தா திறம்பட நடித்திருக்கிறார்.படத்தின் பின் பாதியில் இவரது குணச்சித்திர நடிப்பு கன கச்சிதம்
நாயகனின் அப்பாவாக நரேஷ் நடித்திருக்கிறார்.ஊரெல்லாம் கேவலமாகப்பேச அவர் டேக் இட் ஈசி பாலிசி ஆக உலா வருவது வெடிச்சிரிப்பு.
ரெஜிஸ்டர் ஆபீசில் பணி புரிபவர் ஆக காமெடி நடிகர் சுனில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு அவர் எழுப்பும் கேள்விகள் சிரிப்பு அலையை உருவாக்குகின்றன.
நாயகியின் அப்பாவாக சம்பத் ராஜ் கனகச்சிதம்.வழக்கமாக கேங்க்ஸ்டர் ரோலிலேயே பார்த்த இவரை காமெடிப்படத்தில் அப்பா ரோலில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.
நாயகன் சார்பாக வாதாடும் வக்கீல் ரோலில் வெண்ணிலா கிஷோர் செய்யும் காமெடிகள் கதையோடு ஒன்றி வருகின்றன.
ஆட்டோ டிரைவராக வரும் சத்யா வும் ஓப்பனிங சீனிலும் ,க்ளைமாக்ஸ் சீனிலும்
சிரிக்க வைக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் இசையில் நான்கு பாடல்கள்.அவற்றில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.பின்னணி இசையும் கச்சிதம்.
ஞானசேகர் +யுவராஜ் இருவரும் இணை ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.இரு நாயகிகள்,நாயகன் என அனைவரையும் அழகாகக்காட்டி இருக்கிறார்.
நக்கா வெங்கட் சாமியின் எடிட்டிஙகில் படம் 143 நிமிடஙகள் ஓடுகிறது.
பானு போக வரபு,நந்து சவுரிகனா ஆகிய இருவருடன் இணைந்து கதை ,திரைக்கதை எழுதிய ராம் அப்பாராஜூ தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
1 ரஜினி நடித்த வீரா, பாலுமகேந்திராவின் ரெட்டை வால் குருவி படங்களை ப்போல முழுக்க முழுக்க காமெடி தெறிக்கும் திரைக்கதை
2 கிரேசி மோகன் பாணி வார்த்தை ஜால வசனங்கள் நகைச்சுவை இழையோட முக்கியக்காரணம்
3 நாயகனும்,அப்பாவும் டாட்டு போடும் செண்ட்டரில் ஒரே டைமில் வெவ்வேறு காரணத்துக்காக வந்து மாட்டிக்கொள்ளும் சீன்
4 முதல் காதலியின் பெயரைப்பச்சை குத்திக்கொண்ட காதலன் அதை அழிக்க முயற்சி செய்து முடியாமல் நாயகியிடம் மாட்டாமல் இருக்க செய்யும் ஐடியா அபாரம்
5 நாயகன் டைவர்ஸ் கேஸ் பற்றி நாயகிக்குத்தெரிய வரும் போது அப்பாவின் டைவர்ஸ் என சமாளிக்க அதனால் அப்பா-சித்தி உறவில் பங்கம் வர ஏற்படும் ரகளையான காமெடி
6 டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடக்கும்போது உண்டாகும் கோர்ட் ரூம் காமெடி டிராக்
7 முதல் காதலியுடனான பிரேக்கப்க்கு நியாயமான காரணத்தை க்ளைமாக்சில் உணர்த்திய விதம்
8 இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரு காட்சி கூட போர் அடிக்காமல் கலகலப்பாகப்படத்தை நகர்த்திய சாமார்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 நாம ஒருத்தரை விரும்பினால் அவஙக குறையோடு சேர்த்து விரும்பனும்
2 பொய்யோடு எந்த உறவையும் ஆரம்பிக்கக்கூடாது.
3 காதல்னா சண்டை போடனும்,பிரியனும்,மீண்டும் சேரனும்,ஆனா அதே பழைய காரணத்துக்காக சண்டை போடக்கூடாது.
4 தப்பு அவனோடது இல்லைன்னாலும் தப்பை ஒத்துக்கறது அவனோட இயல்பு.
5 உனக்குத்தேவையானதைக்கொடுக்கக்கடவுள் கொஞ்சம் டைம் எடுத்துக்குவார்.அப்போதான் உனக்கு அதன் மதிப்புத்தெரியும்
6 என்னது?லவ் லெட்டரோட ஜெராக்ஸ் காபியை அவளுக்குத்தர்றியா?அவ Feel பண்ண மாட்டாளா?
அவ Feel ஆகட்டும்னுதானே லவ் லெட்டரே தர்றேன்?
7 குரு வுக்கும் ,குரு நானக் பிறந்த நாளுக்கும் என்னடா சம்பந்தம்?
8 உன்னைத்தவிர யார் நலனையும் நினைத்துப்பார்க்காத ஈகோயிஸ்ட் நீ
9 எல்லாமே கிராண்டா இருக்கனும்னு என் கிராண்ட் பாதர் அடிக்கடி சொல்வார்
10 அத்தை,சாப்பிட்டுட்டுப்போங்க
நீயே எனக்குத்தாய் மாமன் மாதிரி இருக்கே! நீ எனக்கு மாப்பிள்ளையா?நான் உனக்கு அத்தையா?காலக்கொடுமை
11 சுமாரா இருக்கறவங்க தான் நடிகர் நடிகை டி பி வைப்பாங்க.
உனக்கு எப்படித்தெரியும்?
நானே ரன்வீர் கபூர் டி பி தானே வெச்சிருக்கேன்?
12 பிட் காயின் பத்தித்தெரியுமா?
எனக்குத்தெரிஞ்சதெல்லாம் பிட்டுப்படம் தான்
13 ஸ்டூடண்ட்னா எக்சாம் பேப்பர்ல எழுதறதை விட பாத் ரூம் சுவரில் தான் அதிகம் கிறுக்குவாங்க
14 உங்க கல்யாணத்தை வீட்டில் பெரியவஙக எல்லாரும் ஒத்துக்கிட்டாஙகளா?
எங்க வீட்டில் நான் தான் இருக்கறதுலயே பெரியவன்
15 பயணம் எல்லாம் சிறப்பா இருந்ததா?
4 கிமீ தூரம் தானே?இதெல்லாம் ஒரு பயணமா?
16. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்குங்க
45 வயசு ஆகிடுச்சு.மறுபடி ஒரு தடவை மெச்சூர் ஆகனுமா?
17. லவ் பண்ண டிப் ஸ் குடுங்க
டிப் குடுக்க நான் என்ன டிப்பு சுல்தானா?
18 மாப்பிள்ளை,பொண்ணுக்கு அருந்ததி நட்சத்திரம் காட்டுங்க
எனக்கே தெரியலையே?
இதே தெரியலை.பொண்ணுக்கு வேற எதைக்காட்டப்போறீங்க?
19 ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளேண்ட் பண்ண வேண்டிய வயசுல ஹார்ட் ட்ரான்ஸ்பர் பண்ணி லவ் ?
20 என் பேரு லவ் குசா.லவ்வுக்காக எவ்ளோ தூரம் வேணாப்போவேன்
வேணாம்,ஆட்டோவை நிறுத்துங்க.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. பல மாதங்களாக க்காதலிக்கும் நாயகிக்கு நாயகன் நெஞ்சில் முன்னாள் காதலி பெயரைப்பச்சை குத்தி இருக்கும் விஷயம் தெரியாமல் இருப்பது எப்படி?
2 நாயகனுக்கு முதல் திருமணம் நடந்த அதே ரிஜிஸ்ட்டர் ஆபீசில் இரண்டாவது திருமணம் என்பது தெரிந்ததும் நாயகன் வேறு ஆபீசில் வைத்துக்கொள்ளலாம் என சமாளிக்காமல் தானாக வலியப்போய் மாட்டுவது நம்ப முடியவில்லை
3 அறுபது வயதாகும் நாயகனின் அப்பாவை காதல் திருமணம் செய்ய 25 வயதுப்பெண் பெற்றோரை மீறி மணக்க எதனால் சம்மதித்தார் என்பது விளக்கமாக சொல்லவில்லை.
4 க்ளைமாக்ஸ் பர பரப்புக்காக நாயகி நடத்தும் நாடகமும்,ரெஜிஸ்ட்டர் ஆபீஸ் வரை வந்து விட்டு திடீர் என நாயகன் நல்லவன் வேசம் போட்டு திருமணத்தை நிறுத்துவதும் நம்ப முடியாத காட்சி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ.குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இரண்டரை மணி நேரம் கலகலப்பான ,ஜாலியான ரொமாண்டிக் காமெடி டிராமா பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5

0 comments:
Post a Comment