Saturday, January 03, 2026

EKO (2025) -மலையாளம்/ தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா )@நெட் பிளிக்ஸ்

                             

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி ரூபாய் வசூலித்த தரமான படம்.மாஸ் ஹீரோ இல்லை,பிரம்மாண்டம் இல்லை.திரைக்கதையை நம்பிக்களம் இறஙகிய படம்.


கிஷ்கிந்தா காண்டம்(2024) இயக்கிய  தினிஜித் அய்யத்தன் இயக்கிய படம் இது.பலராலும் பாராட்டப்பட்டாலும் கிஷ்கிந்தா காண்டம் பர்சனலாக எனக்குப்பிடிக்கவில்லை.ஏன் எனில் வில்லன் பலமானவன் இல்லை.பரிதாபமாய் இருந்தது.ரொம்ப ஸ்லொ.ஆனால் இந்தப்படம் ஒரு மிஸ்ட்ரி திரில்லர் படத்துக்கு உண்டான விறுவிறுப்பைக்கொண்டிருந்தது



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஒரு மலேசியாப்பெண்,வில்லன் நாயகியைக்கல்யாணம் பண்ணி இந்தியா கூட்டிட்டு வர்றான்.கிட்டத்தட்ட வீட்டு சிறையில் வைத்து அவளைக்காவல் காக்கிறான்.வீட்டை விட்டு வெளியே போனால் வில்லனின் வேட்டை நாய்கள் நாயகியைக்கடிக்கும்


நாயகன் நாயகியைக்காப்பாற்றுகிறான்.ஆனால் அவனும் வில்லன் மாதிரி தான் நாயகியை நடத்துகிறான்.


வில்லன் கொலை செய்யப்படுகிறான்,நாயகன் தலை மறைவு ஆகிறான்.நாயகனைத்தேடி போலீஸ் டீம் வருகிறது.அதற்குப்பின் நிகழும் எதிர்பாராத திருப்பஙகள் தான் மீதிக்கதை


நாயகி ஆக பியானா மொமின் பிரமாதமாக நடித்திருக்கிறார்.நாய்களால் கடிபடும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார் க்ளைமாக்சில் அவரது ட்ரான்ஸ்பர்மேசன் செம.

வில்லன் ஆக வினித்தின் நடிப்பும் ,கெட்டப்பும் அருமை.

நாயகன் ஆக சவுரப் சச்தேவா நடிப்பு கனகச்சிதம்.

நாயகிக்கு பாடிகார்டாக வரும் அந்தப்பையன் ஆக சந்தீப் அருமையான நடிப்பு.

நாயகியின் இள வயது கேரக்டரில் சிம்லீ அழகு தேவதை.

முஜீப் மஜீத்தின் இசை அருமை.பின்னணி இசை மிரட்டுகிறது.

பாகுல் ரமேசின் ஒளிப்பதிவு கானகத்தின் அழகைக்கண் முன் நிறுத்துகிறது.

சூரஜின் எடிட்டிஙகில்  படம் 125 நிமிடஙகள் ஓடுகிறது.


ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ  திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர்  தினிஜித் அய்யத்தன்




சபாஷ்  டைரக்டர்

1 வேட்டை நாய்களைக்க்ளோசப்பில் காட்டும்போது ஒரு நடுக்கம் வரவைப்பது போல பிஜி எம் அமைத்துப்படமாக்கிய விதம்

2 நாயகியின் க்ளைமாக்ஸ் நடிப்பு

3 நாயகனுக்கு என்ன ஆனது என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்



  ரசித்த  வசனங்கள் 


1 குடும்பத்தில் நம்பிக்கை தேவை

2 பாதுகாப்பாப்பார்த்துக்கறது ,தடை விதிப்பது இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு

3 தெரிஞ்சவஙக தான் ,ஆனா  நல்லாத்தெரிஞசவங்க இல்லை


4  வீட்டில் இருக்கும் பெண்ணும் ,நாயும் ஒண்ணு.இரண்டையும் கூண்டில் தான் வைக்கனும்

5 ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல ஒரு முறை இருக்கு.

6  இவ என் சம்சாரம்,என் மகளைப்போலப்பார்த்துக்கறேன்


ஏன்?சம்சாரத்தை சம்சாரம் மாதிரி பார்த்துக்க மாட்டீங்களா?


7 சாப்பாடு போடுவது கூட ஒரு வகைல உரிமை கொண்டாடத்தான்



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


பர்பெக்ட் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மிஸ்ட்ரி திரில்லர் ரசிகர்கள் ,பெண்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5



Eko
Theatrical release poster
Directed byDinjith Ayyathan
Written byBahul Ramesh
Produced byMRK Jhayaram
Vipin Agnihotri
StarringSandeep Pradeep
Vineeth
Narain
Saurabh Sachdeva
Binu Pappu
Biana Momin
CinematographyBahul Ramesh
Edited bySooraj E. S.
Music byMujeeb Majeed
Production
company
Aaradyaa Studio
Distributed byAnnapurna Studios
Dream Warrior Pictures
DreamZ Entertainment
Lighter Buddha Films
Prathangira Cinemas
Black Ticket Entertainments
DMY Creations
Singapore Coliseum
Wanderblust Films
Release dates
  • 21 November 2025
  • 31 December 2025 (Netflix)
Running time
125 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹5 crore[2]
Box office₹50 crore[3]

0 comments: