Friday, January 02, 2026

சாயாவனம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா )

                             



 தமிழ்  நாட்டில் அதிக மழை பொழியும்  இடம் சிரபுஞ்சி ,  என்பது நமக்குத்தெரியும் , அங்கே தினசரி   மழை  பெய்யுமாம் , இப்படத்தின் பட ப்பிடிப்பு  சிரபுஞ்சி யில்  நடந்ததாம் , மலையாளத்தில் 40  படங்கள்  இயக்கிய   இயக்குனர் முதன் முதலாக தமிழில் இயக்கி இருக்கிறார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு பெரிய பணக்காரரிடம் இருந்து நகை,பணம் கொள்ளை அடிக்கிறான்.கொள்ளை அடித்த பணத்துடன் எஸ்கேப் ஆகும்போது நாயகனிடம் அதை  ஏமாந்து பறிகொடுத்து விடுகிறான்


நாயகன் வீட்டுக்கு அந்தப்பணப்பையைக்கொண்டு வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கிறான்.


நாயகனுக்கு அப்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது.குடி இருப்பது வளர்ப்புத்தாய் வீட்டில்.

இரண்டு நாட்கள் மட்டுமே மனைவியுடன் இருந்த நாயகன் வெளியே போக வேண்டி இருக்கிறது.சில தினஙகளில் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டுச்செல்கிறான்

போனவன் போலீசில்மாட்டி ஜெயிலுக்குப்போகிறான்.


இந்த விபரஙகள் எதுவும் நாயகனின் மனைவி ஆகிய நாயகிக்குத்தெரியாது

விடியல் வரும் விடியல் வரும்  என்று மக்கள் காத்திருப்பது போல நாயகியும் 3 வருடங்களாகக்காத்திருக்கிறாள்.


நாயகனிடம் பணப்பையைத்தொலைத்த வில்லன் இப்போதுதான் நாயகன் இருப்பிடம் அறிந்து அங்கே வருகிறான்.நாயகனின் வளர்ப்புத்தாய் ஒரு மருத்துவச்சி.

அதனால் வேண்டும் என்றே பாம்புக்கடி பெற்று ஆபத்து என்று அந்த வீட்டில் தங்குகிறான்.


நாயகி தனிமையில் இருப்பதால் அந்த ஏரியா காட்டிலாகா அதிகாரி நாயகி மேல் கண் வைக்கிறான்.

இரண்டு வில்லன்கள் ,நாயகன் ஆகியோரிடமிருந்து நாயகி  தப்பித்தாளா?என்பது மீதித்திரைக்கதை.



நாயகன் ஆக சவுந்தர் ராஜன் நடித்திருக்கிறார்.கெஸ்ட் ரோல் மாதிரிதான்.ஓப்பனிஙகில் 10 நிமிடஙகள் ,க்ளைமாக்சில் 5 நிமிடஙகள் அவ்வளவுதான்.


நாயகி ஆக தேவானந்தா நடித்திருக்கிறார்.இவரது அழகையும் ,இளமையையும் நம்பித்தான் இயக்குநர் படத்தையே எடுத்திருக்கிறார்.


வில்லன் ஆக சந்தோஷ தாமோதரன்  கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவருக்கு படம் முழுக்க நடிக்க நல்ல வாய்ப்பு.


அழகர் சாமியின் குதிரை புகழ் அப்புக்குட்டி ஒரு ரோலில் வருகிறார்.நல்ல நடிப்பு.

படத்தில்  நாயகன் ,நாயகி,வில்லன் ,ஆபீசர்,அப்புக்குட்டி ,அவர் மனைவி  என மொத்தம் ஆறே கேரக்டர்கள்.


வர்கீஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

பின்னணி இசை பரவாயில்லை.ஒளிப்பதிவு ராமச்சந்திரன்.படத்தின்  ஒரே பிளஸ் ஒகிப்பதிவுதான்.அருவி ,கானகம் எல்லாம் ரம்மியம்.

கதை,திரைக்கதை இயக்கம்  அனில் குமார்.


சபாஷ்  டைரக்டர்

1 இந்த டப்பாப்படத்தின் கதையை சொல்லி தயாரிப்பாளரை நம்ப வைத்தது.

2 சர்வதேசப்பட விழாக்களில் இந்தக்குப்பைப்படத்தைத்திரையிட வாய்ப்புப்பெற்றது


 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் பணம் ,நகையை வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே போகக்காரணம் சொல்லப்படவில்லை.

2 போலீசில் மாட்டிய நாயகனை போலீஸ் நகை எங்கே?என விசாரிக்கவில்லையா? வீட்டுக்கு வந்து செக் பண்ண மாட்டார்களா?

3  வில்லன் ஒரு மாங்கா மடையனாக இருக்கிறான்.ஒரு விஷப்பாம்பை வலிய வந்து கடிக்க வைப்பது ரிஸ்க் இல்லையா?

4 அந்த மருத்துவச்சி தான் பார்க்கும் வைத்தியத்துக்கு யாரிடமும் கட்டணம் வாங்குவதில்லை.பின் வாழ்க்கை நடத்தப்பணம் ஏது?

5 மருத்துவச்சி கொலையான பின் நாயகி சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாள்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சர்வதேசப்பட விழாக்களில் திரையிடப்படும் படஙகள் பெரும்பாலும் டப்பாப்படமாக இருப்பது ஏனோ? ரேட்டிங்க் 2/5

0 comments: