ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு முஸ்லீம்.தன் அம்மா உடன் வசித்து வருகிறான்.
நாயகி ஒரு இந்து.இருவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள்.இருவரும் ஒரே தெருவில் தான் குடி இருக்கிறார்கள்.
நாயகி தன் அம்மா,அப்பா ,அக்காவுடன் வசிக்கிறாள்.அக்காவுக்குத்திருமணம் ஆகி விட்டது.ஆனால் குழந்தை இல்லை.அக்கா கணவர் ஒரு குடிகாரன்.
காதல் விஷயம் தெரிந்ததும் நாயகியின் அப்பா வுக்கும் ,நாயகனுக்கும் கை கலப்பு நிகழ நாயகன் நாயகியின் அப்பாவைப்பிடித்துத்தள்ளி விடும்போது அவர் கல்லில் தலை பட்டு ஸ்பாட் அவுட்.
கொலைக்கேசில் நாயகன் சிறைக்குப்போகிறார்.சிறையிலிருந்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் ஒரு போலீஸ் காரர் நாயகனுக்கு உதவி செய்கிறார்.
நாயகன்,நாயகி காதல் நிறைவேறியதா?நாயகன் ரிலீஸ் ஆனாரா?என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக எல் கே அக்சய் குமார் அப்பாவித்தனமான முகத்துடன் அருமையாக நடித்திருக்கிறார்.
நாயகி ஆக அனிஷமா அற்புதமாக நடித்திருக்கிறார்.அவரது பால் மணம் மாறாத முகம் படத்துக்குப்பிளஸ்
நாயகனுக்கு உதவும் போலீஸ் ஆக விக்ரம் பிரபு கச்சிதமாக நடித்திருக்கிறார்.நல்ல போலீசை சினிமாவிலும் சரி ,வாழ்க்கையிலும் சரி நாம் பார்த்ததில்லை என்பதால் அந்தக்கேரக்டர் உயர்ந்து நிற்கிறது.
விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா கெஸ்ட் ரோல் தான் என்றாலும் பெஸ்ட் ரோல்.ஜட்ஜ் ஆக வரும் தேனப்பன் நடிப்பு அருமை.நாயகியின் அக்கா கணவர் ஆக வரும் ரகு வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அருமை.ஆர்ட் டைரக்சன் செம.கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,கிராமம் எல்லாமே பர்பெக்ட்.
இசை ஜஸ்டின் பிரபாகரன்.நீலோத்தி செம ஹிட் மெலோடி.பின்னணி இசையில் பல இடஙகளில் மிரட்டி இருக்கிறார்.
பிலோமின் ராஜின் எடிட்டிஙகில் படம் 124 நிமிடஙகள் ஓடுகிறது.நல்ல விறுவிறுப்பு.
சபாஷ் டைரக்டர்
1 திருச்சியில் 1987ல் நடந்த உண்மை சம்பவம் தான் கதை என்பதால் உண்மைக்கு நெருக்கமான காட்சிகள் மனதைத்தொடுகின்றது.
2 மெயின் கதையை விட ஆயுதப்படை போலீஸ்,சிறைக்காவலர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கை தட்டல் பெறுகிறது
3 திரைக்கதை ஆசிரியர் ஆன செந்தில் முன்னாள் போலீஸ் என்பதால் அவர் எழுதிய போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நம் கண் முன் நடப்பது போல அப்படி ஒரு யதார்த்தம்
4 பிரமாதமான இண்ட்டர்வெல் பிளாக் சீன்
5 முஸ்லீம்களை உயர்த்திப்பிடிக்கும் அந்த போலீஸ் ஸ்டேசன் சீன்
செம ஹிட் சாங்க்
1. நீலோத்தி
2 மின்னும் வட்டப்பூச்சி
3 மன்னிச்சிரு
ரசித்த வசனங்கள்
1 ஒவ்வொரு காவலருக்கும் குறைந்த பட்ச அதிகாரம் இருக்கும்,அதை யாருக்காக அவர் பயன்படுத்தறார் என்பது ரொம்ப முக்கியம்
2 போலீஸ் குற்றவாளியைத்தப்பிக்க விட்டாலும் அவன் மேல என்கொயரி,என்கவுண்ட்டர் ல போட்டாலும் அவன் மேல் கேஸ்
3 போலீஸ் வேலை என்பது முட்டில கட்டிய தாலி மாதிரி,எப்போ வேணா அவிழும்
4 அப்பாவோட போட்டோ பிரேம் எப்படிம்மா உடைஞ்சுது?
அவரை என்னைப்பார்க்க ஆசைப்பட்டு போட்டோ பிரேமை விட்டு வெளில வந்தப்போ உடைஞ்சது
5 கல்யாணக்கேசட் கொடு
யாரோட கல்யாணக்கேசட்?
டேய்,கல்யாணத்துக்கு அப்புறம் நடக்கறதக்காட்டுவாங்க இல்ல?அந்தக்கேசட்
6 ஒரு கைதி போலீஸ்க்கு ஜாமீன் போடறான்
7 பசஙகளுக்குத்தான் பொண்ணுங்களைப்பிடிக்கக்காரணம் வேணும்,ஆனாப்பொண்ணுஙகளுக்குப்பசங்களைப்பிடிக்கக்காரணமேத்தேவை இல்லை.பிடிச்சிருந்தாலே போதும்
8 நீ பேசாம இருந்தா உன்னை யாரும் கண்டுக்க மாட்டாங்க,உன்னோட குரல் தான் உனக்கு பலம்
9 நீ சாமி கும்பிடல?
இந்த சாமி எனக்கு எந்தப்பிரச்சனையும் தந்ததில்லை,எதுக்கு அதை வீணாத்தொந்தரவு செய்யனும்,?
10 இங்கே இருக்கும் சட்டங்கள் எல்லாம் எளிய மக்களுக்கு எதிராத்தான் இருக்கு.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா(2010) மெகா ஹிட் படத்தின் உல்டா வெர்சன் தான் இது.தமிழின் திரைக்கதை தான் காப்பாற்றி இருக்கிறது
2 போலீஸ் அத்தனை சட்டம் பேசி விட்டு குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஏன்?
3 கிராமத்து இளைஞன் வாய்க்காலில் ,ஆத்தில் குதித்து நீந்தும்போது லுங்கி கட்டி இருக்க மாட்டான்.அது நீச்சலுக்கு இடைஞசல்.டிராயர் தான் போட்டிருப்பான்
4 நாயகனின் அம்மா செத்ததுக்குக்கூட ஜாமீன் கிடைக்காதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மைனா படம் பார்த்தவர்களும் மாறுபட்ட திரைக்கதைக்காகப்பார்க்கலாம்
விகடன் மார்க் யூகம் 44.குமுதம் ரேங்க்கிங்க் நன்று.ரேட்டிங்க். 3/5
| Sirai | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Suresh Rajakumari |
| Screenplay by |
|
| Story by | Tamizh |
| Produced by | SS Lalit Kumar |
| Starring |
|
| Cinematography | Madhesh Manickam |
| Edited by | Philomin Raj |
| Music by | Justin Prabhakaran |
Production company | |
Release date |
|
Running time | 124 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |

0 comments:
Post a Comment