ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - மாநிலத்தில் இன்னும் 5 நாட்களில் தேர்தல் நடக்க இருக்கிறது . வாக்குக்குப்பணம் தர அரசியல்வாதி ஒரு தாதாவிடம் 10 கோடி ரூபாய் பணம் கொடுத்து விட அந்தப்பண த்தை ஒரு போலீஸ் ஆபீசர் ஆட்டையைப்போடப்பார்க்கிறார் . வில்லன் ஆன அந்த தாதா செய்யும் சம்பவங்கள் தான் பரபரப்பான திரைக்கதை . இது ஒரு டிராக்
சம்பவம் 2 - சென்னை திருமழிசை போலீஸ் ஸ் டேஷனில் நாயகன் ட்ரெயினிங்க் எஸ் ஐ ஆக பணி புரிகிறார் . அங்கே ஒரு துப்பாக்கி திருடு போகிறது .அதை எடுத்தது யார்? என்று விசாரணை நடக்கிறது இது இன்னொரு டிராக்
சம்பவம் 3 - அந்த போலீஸ் ஸ்டேஷனில் பல வருடங் களாகப்பணி புரிந்த ஏ ட்டுக்கும் , சப் இன்ஸ்பெக்ட்டர் மேடத்துக்கும் ஈகோ கிளாஸ் உருவாகிறது . அந்த ஏ ட்டு வில்லனின் தம்பியை ஒரு சூழலில் அடித்து விடுகிறார் . இதற்குப்பழி வாங்க வில்லன் அவரை என்ன என்ன சம்பவம் செய்தான் அதை நாயகன் எப்படி எதிர் கொண்டான் என்பது இன்னொரு டிராக்
மேலே சொன்ன 3 சம்பவங்களையும் படிக்கும்போது மேலோட்ட்மாக சாதாரணமான கதை போல தோன்றினாலும் , பரபரப்பான திரைக்கதை மூலம் அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்
நாயகன் ஆக தர்ஷன் கச்சிதம் . உடல் மொழி , ஜிம் பாடி , க்ளோஸ் கட் ஹேர் ஸ் டைல் எல்லாமே ஓக்கே , ஆனால் நடிப்பில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம்
வில்லன் ஆக சுஜித் சங்கர் கலக்கி இருக்கிறார் . கணகு என்ற கேரக்ட்டரில் வாழ்ந்திருக்கிறார் . மிரட்டலான நடிப்பு .இவர் வரும்போதேர்ல்லாம் ஒலிக்கும் பிஜிஎம் கலக்கல் ரகம்
ஏ ட் டாக லால் அருமையான குணச்சித்திர நடிப்பு . அவமானப்படும்போதும், பொறுமையாக இருக்கும்போதும் கண் கலங்க வைக்கும் நடிப்பு
போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் டி சங்கர் , ஈகோ கொண்ட போலீஸ் ஆபீசர் ஆக வரும் ரம்யா , க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் அவிழ்க்கும் செம்மலர் அன்னம் ஆகிய அனைவர் நடிப்பும் அருமை
ஒளிப்பதிவு மெய்யேந்திரன் . சண்டைக்காட் சிகளில் கவனிக்க வைக்கிறார் . ரேணுகோபாலின் எடிட்டிங்கில் க்ரிஸ்ப் ஆன கட்டிங்க் , ட்ரிம்மிங்க் . இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை
விகாஸ் படிசா தான் இசை . பின்னணி இசையில் கலக்கி விட் டார்
திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி இருப்பவர் கவுதமன் கணபதி
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் , போலீஸ் ஏட்டு இருவருக்கும் இடையிலான அப்பா மகன் பாண்டிங்க் அருமை
2 ரஸவாதி படத்தின் வில்லன் தான் இதில் வில்லன் ,செம்மயான நடிப்பு . வலிமை ஆக எழுதப்பட் ட கேரக்ட்டர்
3 போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் பாலிடிக்ஸை படம் ஆக்கிய விதம் அருமை
4 வில்லனின் தம்பியை நாயகன் பிளக்கும் சீன் அதகளம்
5 வில்லனை ஒரு போலீஸ் ஆபீசர் ஏமாற்றுவதும் அவரை வில்லன் டீல் செய்யும் விதமும் செம
6 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராத சென்ட்டிமென்ட் டச்
ரசித்த வசனங்கள்
1 டேய , பொண்ணு வீட்டுல உன்னைப்பற்றிக்கேட் டாங்க
அம்மா, நான் கொஞ்சம் வேலையா இருக்கே ன்னு சொல்லிடுங்க
அவங்க கூட வேலைல இருக்கற மாப்பிளை தான் வேணும்கறாங்க
2 டேய் , நான் 13 வயசுல இருந்து ஓட்டு போட்டுட்டு இருக்கறவண்டா
3 30 வருஷம் முன் எனக்கு நீ என்ன சொன்னியோ அதை உனக்கு நான் சொல்றேன் , நம்ம மேல பயம் இருக்கும்வரை தான் நமக்கு மதிப்பு , பயம் போயிட் டா நம்மை வாழவே விட மாட் டாங்க
4 போலிஸ் டிபார்ட்மெண்டடைப்பொறுத்தவரை நல்லவனா? வல்லவனா? என பார்த்தா வல்லவன் தான் வேணும்பாங்க
5 கேங்கே இன்னமும் ஆரம்பிக்கலை , அதுக்குள்ளே கேங்க் லீடரா?
6 அடுத்தவங்களைப்பார்த்து சிரிக்கும் ஈன புத்தி மனுசங்களுக்கு மட்டும் தான் இருக்கு
7 மனசுல இருந்த தைரியம் உடம்பில் இல்லை
8 இங்கே வாழணும்னா சூது தெரிஞ்சிருக்கணும் , நியாயம் தேவை இல்லை நாணயம் தேவை இல்லை
9 அப்பா என்பது வெறும் வார்த்தை இல்லை , நம்பிக்கை
10 எதோ ஒரு வேலை கிடைச்சாப்போதும்னு நான் போலீஸ் வேலைக்கு வரலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சீரியஸ் ஆன நல்ல கதையில் முனீஸ்காந்த்தின் மொக்கைக்காமெடி எடுபடவில்லை
2 கேட்கவே ஆள் இல்லாதது போல வில்லன் போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளுங்களை வரிசையாகப்போட்டுத்தள்ளுவது ஓவர்
3 போலீஸ் ஆபீசர்களை வில்லனின் அடியாட்கள் போல சித்திகரித்த விதம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நாயகி இல்லாத குறையே தெரியாத வண்ணம் எடுக்கப் பட் ட நல்ல த்ரில்லர் படம் . விகடன் மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 3/ 5
0 comments:
Post a Comment