Sunday, March 31, 2024

ART OF LOVE (2024 ) - ( ROMANTIK HIRSIZ)- துருக்கி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா + ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்   ஆன  மணி ஹெய்ஸ்ட்  வெப் சீரிசில்  நாயகி  போலீஸ்  ஆஃபீசர் , நாயகன்  திருடன்  அல்லது  கொள்ளைக்காரன் . இவரைப்பிடிக்க  அவர்  முயல்கையில்  இருவருக்கும்  காதல் . இந்த  ஃபார்முலா  பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆனதால்  அதே  ஃபார்முலாவில்  ரொமாண்டிக்  டிராமாவா? ஹெய்ஸ்ட் த்ரில்லரா?அல்லது இரண்டுமேவா?என  கணிக்க  இயலாத  ஒரு  கமர்ஷியல்  மசாலாப்படத்தை  எடுத்திருக்கிறார்கள் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு  இண்ட்டர்போல்  போலீஸ்  அஃபீசர். ஒரு  ஆர்ட்   கேலரி . அங்கே  வைக்கப்பட்டிருக்கும்  விலை  மதிப்பு  மிக்க  ஓவியம்  ஒன்றை ஒரு  கொள்ளைக்காரன்  திருட  இருக்கிறான் என்ற  தகவல்  கிடைத்ததும்  அவனைப்பிடிக்க  நாயகி  அங்கே   விரைகிறார். திருடன்  திருடி  தப்பிக்க  முயல்கையில்  நாயகி  கன்  பாயிண்ட்டில்  திருடனைப்பார்க்கும்போது  அதிர்ச்சி  அடைகிறார். திருடன்  நாயகியின்  முன்னாள்  காதலன். 



நாயகி  அதிர்ச்சி  ஆகி  நின்ற  ஒரு  கணத்தில்  திருடன்  தப்பி  விடுகிறான்.  நாயகி  கூட  வேலை  செய்யும்  சக  ஆஃபீசர்  இந்தக்கேசில்  நீ  ஜாக்கிரதையாக  இருக்க  வேண்டும்.  திருடனைப்பிடிக்கிறேன்  என்    அவன்  வலையில்  நீ  விழுந்து  விடக்கூடாது  என்கிறான்

  


 நாயகி  அதைக்காதில்  போட்டுக்கொள்ளவில்லை . திருடன்  கண்ணில் படுவது  போல  ஒரு  இடத்தில்  உலா  போகிறார். திருடன்  அவரை  அடையாளம்  கண்டு  கொண்டு  அழைக்கிறார். இருவரும்  சந்திக்கிறார்கள் , பேசுகிறார்கள் . 


திருடன்  தான்  நாயகன் .இப்போது  நாயகன்  நாயகியிடம்  லவ்  பிரபோஸ்  செய்கிறான். நாயகி  அதற்கு  எஸ் , அல்லது  நோ  எதுவும்  சொல்லவில்லை , அவரது நோக்கம்  நாயகன்  திருடும்போது  கையும்  , களவுமாகப்பிடிக்க  வெண்டும்  என்பதே


 நாயகி  நினைத்தபடி  நாயகனைப்பிடிக்க  முடிந்ததா? அவரையும்  மீறிக் காதலில் விழுந்தாரா? நாயகனுக்கு  நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  என்பது  தெரியாதா?   இதற்குப்பின்  என்ன  நட்ந்தது  ? என்பது  தான்  மீதி  திரைக்கதை


 நாயகி  ஆக எஸ்ரா பிரமாதமாக  நடித்துள்ளார் . இவருக்கு  இந்திய  முகம் ,குறிப்பாக  ஒரு  ஹிந்தி  நடிகை  போலவே  முகச்சாயல்  உள்ளது .   ரொமாண்டிக்  சீனில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகும்போதும்  சரி ,  ஆக்சன்  சீக்வன்சில் , சேசிங்  சீனில்  இறங்கி  அதிரடி  காட்டும்போதும்  சரி  அப்ளாஸ்  அள்ளுகிறார் 


 நாயகன்  ஆக  பெர்கின்  சோகுள்ளு  அதிக  ஆர்ப்பாட்டம்  செய்யாமல்  அமைதியாக  வந்து  அசத்தி  உள்ளார் .


நாயகியின்  கொலீக்  ஆக பத்துவான்  பர்லாக்  நடித்துள்ளார். லேசான  பொறாமை  கலந்த  ஈடுபாட்டு  உணர்வை  நன்கு  வெளிப்படுத்தி உள்ளார் 


இதன்  திரைக்கதை  ஆசிரியர்  பெலின் கரமேமேட்டேக்லு ஏற்கனவே   த  கிஃப்ட் (2020)  , லவ்  டேக்டிஸ் (2023)  ஆகிய  படங்களூக்கு  திரைக்கதை  எழுதியவர்  தான்.கமர்ஷியலாக  திரைக்கதை  அமைப்பதில் வல்லவர் 


மை  நேம்  ஈஸ் ஃபாரா  ( 2023)  , லவ்  டேக்டிஸ் 2  (2023)   ஆகிய  இரு  படங்களை  இயக்கிய ரெக்காய்  காரகோஸ்  சிறப்பாக  இப்படத்தை  இயக்கி  உள்ளார் 


100  நிமிடங்கள்  ஓடுமாறு  எடிட்டர்  படத்தை  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  எப்படி  அந்த  ஓவியத்தைத்திருடி  எடுத்துச்செல்லப்போகிறான்  என்ற  எதிர்பார்ப்பை  உருவாக்கி  அதை சரியாகக்காட்சிப்படுத்திய  விதம் 


2  இஸ்தான்ஃபுல்லில்  படமாக்கப்பட்ட  காட்சிகள் , கட்டிட  அமைப்புகள் , சேசிங்  காட்சிகள்  அனைத்தும்  அருமை 


3   வாய்ஸ்  கேட்டால்  மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  , முகத்தைக்காட்டினால் மட்டுமே  ஓப்பன்  ஆகக்கூடிய  லாக்கரை  நாயகன்  எப்படி  ஆர்ட்டிஃபிசியல்  இண்ட்டலிஜென்ஸ்  மூலமாக  அசால்ட்  ஆக  லாக்கரைத்திறக்கிறான்  என்பதைக்காட்சிப்படுத்திய  விதம் அசத்தல் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  நாயகி  எப்போதும்  நாயகன்  கூட  இருப்பதில்லை , அடிக்கடி  ஆஃபீஸ்  போகிறார். கொலீக்சை  சந்திக்கிறார். கோடீஸ்வரன்  ஆன  நாயகன்  இதை  எல்லாம்  மிகச்சுலபமாகக்கண்டு  பிடிப்பார்  என்பது  நாயகிக்குத்தெரியாதா? 


2  நாயகன் -  நாயகி  இருவரும்  கணவன்  மனைவி  போல  ஆகி  விடுகின்றனர் . ஆனால்  ஹோட்டலில்  தனித்தனி  ரூம் எடுத்துத்தங்குகிறார்கள் . நாயகியின்  ஐடி  தெரியாமல்  இருக்க  இந்த  ஏற்பாடு , சரி , ஆனால்  நாயகனுக்குத்தன்  மேல்  சந்தேகம்  வரும்  என்பது  நாயகியால்  யூகிக்க  முடியவில்லையே? 


3  ரகசிய  அறையின்  கதவைத்திறக்கும்போது  நாயகன் - நாயகி இருவரையும்  அந்தப்பக்கமாகத்திரும்பச்சொல்லி  கோட்  வோர்டு  போட்டு  கதவைத்திறக்கும்  வில்லன்  அவ்ளோ  சிரமப்பட்டு  எதற்காக  அவர்களுக்கு  அதைக்காட்ட  வேண்டும் ? அவன்  பாட்டுக்கு  சிவனேன்னு இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+  காட்சிகள்  உண்டு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  ஓடும்  டைம்  பாஸ்  கேட்டகிரி  படம்  . ரேட்டிங்  2.5 / 5 

0 comments: