Monday, March 13, 2023

டாடா (2023) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


  3  கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  எடுத்து  16  கோடி  ரூபாய்  வசூல்  பார்த்த  படம் . இது  போக  டிவி  ரைட்ஸ் , ஓடிடி  உரிமை  லாபம்  தனி. புதுமுகங்கள் , அல்லது  அதிகம்  அறியப்படாத  முகங்களை  வைத்து  திரைக்கதையை  நம்பி   எடுக்கப்படும்  படங்கள்  வெற்றி  பெறுவது  ஆரோக்யமான  சினிமா வுக்கு  வழி  வகுக்கும்

டாடா  என்றால் தெலுங்கில்  அப்பா  என  அர்த்தமாம், நான்  கூட  டாட்டா  என்பதன்  சுருக்  என  நினைத்தேன்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  காதலர்கள் , திருமணத்துக்கு  முன்பே  தம்பதியாக  வாழ்ந்ததால்  நாயகி  கர்ப்பம்  ஆகிறார். நிலையான  வேலை  இல்லை  என்பதாலும்  இரு  தரப்பு  பெற்றோர்  ஆதரவு  இல்லாததாலும்  இப்போதைக்கு  குழந்தை  வேண்டாம் ,  கலைத்து  விடு   என்று  நாயகன்  சொல்ல  நாயகி  மறுக்கிறாள்.   இருவரும்  மனஸ்தாபத்துடன்  அவரவர்  வீட்டை  விட்டு  வெளியேறி  நண்பனின்  வீட்டில்  வாடகை  தராமல்  தங்குகின்றனர்



நண்பனின்  வீட்டுக்கு  ஃபிரண்ட்ஸ்  வருவதால்  அவர்கள்  வருகை  நாயகிக்கு  இடைஞ்சலாக  இருக்கிறது. இதனால்  தனி  வீடு  பார்க்க  வற்புறுத்துகிறாள். தனி  வீட்டில்  இருக்கும்போது  அடிக்கடி  வாக்குவாதம்  வருகிறது. நாயகியின்  தோழி  திருமண  அழைப்பிதழ் கொடுக்க  வந்தபோது  நாயகி  நாயகனிடம்  தோழிக்கு  ஏதாவது  கிஃப்ட்  வாங்க  வேண்டும்  என  சொல்கிறாள்


 நம்ம  ஜீவனமே  சிரமமா  இருக்கு , இதுல  கிஃப்ட்  வேறயா  என  கோபத்தில் நாயகன்  ஆஃபிஸ்க்கு  கிளம்ப  நிறை  மாத  கர்ப்பிணியான  நாயகி   அன்று  மாலை  பிரசவ  வலி  வ்ந்து  துடிக்கும்போது  நாயகனுக்கு  ஃபோன்  செய்ய  நாயகன்  ஆல்ரெடி  செம  கடுப்பில்  இருந்ததால்   ஸ்விட்ச்  ஆஃப்  செய்கிறான்


 நாயகியின்  பெற்றோர்  நாயகியை  ஹாஸ்பிடலில்  அட்மிட்  செய்கிறார்கள் 

 பின்  தகவல்  நாயகனுக்குப்போக  நாயகன்  ஹாஸ்பிடல்  வருகிறான். அங்கே  குழந்தை  மட்டும்  இருக்கிறது . நாயகி  இல்லை , நாயகி  வீட்டையும்  காலி  செய்து  விட்டார். அவரது  பெற்றோரும்  வீட்டில்  இல்லை 


 இப்போது  நாயகன்  தன்  குழந்தையை  என்ன  செய்தார்? இவர்கள்  இருவரும்  ஒன்று  சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான்  மீதிக்கதை 


நாயகனாக  கவின் . முதல்  பாதி  முழுக்க புட்டபர்த்தி  சாய்பாபா  போல பிரேமனாந்தா  ஸ்வாமிகள்  போல சீவாத  தலையுடன்  வருபவர்  பின்  பாதியில்   ஐ டி  ஊழியராக  டீசண்ட்டாக  வருகிறார். யதார்த்தமான  அளவான  இயற்கையான  நடிப்பு .. ஆல்ரெடி  இவருக்கு ஏகப்பட்ட  ரசிகைகள்  உண்டு , இந்தப்படத்தின்  கேரக்டர்  டிசைன்  பெண்களுக்குப்பிடிக்கும்  விதத்தில்  வடிவமைக்கப்பட்டு  இருப்பதால்  இனி  ரசிகைகள் டபுள்  ஆகலாம் 


 நாயகியாக அபர்ணா  தாஸ். அதிகம்  சிரிக்காத  முகம் . பின்  பாதி  முழுக்க கடு கடு  என  இருக்கும்  முகம்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார்


நாயகனின்  அம்மா  அப்பாவாக  ஐஸ்வர்யா, கே பாக்யராஜ்  நடித்திருக்கிறார்கள். அதிக  வாய்ப்பில்லை 


 வி டி வி  கணெஷ்  குணச்சித்திர  வேடம் 


நாயகனின்  மகனாக  மாஸ்டர்  இளன்  குட் . 


இசை  ஜென்  மார்ட்டின். பாராட்டத்தக்க  அறிமுகம். 7  பாடல்களில்  2  சூப்பர்  ஹிட் .எழில்  அரசனின்  ஒளிபபதிவு  கண்ணுக்குக்குளுமை . கதிரேஷ்  அழகேசனின்  எடிட்டிங்  கனகச்சிதமாக   ரெண்டேகால்  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கிறது 


சபாஷ்  டைரக்டர் ( க்ணேஷ்  கே  பாபு )


1    பணி  புரியும்  இடத்தில்  தன்னை  எதிர்த்துப்பேசிய  பெண்  ஒரு  சிக்கலில்  மாட்டும்போது  பழைய  பகைமை  பாராட்டாமல்  அவருக்கு  உதவி  செய்து  அவளிடம்  நன்றி  பெறும்  காட்சி 


2    பாத்ரூமில்  தற்கொலை  மிரட்டல்  விடும்  ஒரு  லூஸ் தாடிவாலாவை  லெஃப்ட்  ஹேண்டில்  டீல்  செய்யும்  விதம் 


3   ஹோட்டலில்  தன்னிடம்  ப்ரபோஸ்  செய்ய  வந்த  ஆஃபீஸ்  லேடி  ஸ்டாஃப்  உணர  தன்    மனைவியுடனான  ஃபோட்டோ  உள்ள  பர்சை  நாசூக்காக டேபிளில்  வைத்து  விட்டு  நாயகன்  வெளியெ  செல்லும்  காட்சியும், அந்தப்பெண்  ஃபோட்டோ  பார்த்து  மனம்  நோகும்  காட்சியும்   


4 உணர்வுபூர்வமான  க்ளைமாக்ஸ்  காட்சி 


5  பின்  பாதி  திரைக்கதை  மவுன  கீதங்கள்  பாணியில்  இருப்பதால்  பின்னால்  பிரச்சனை  வந்து  விடக்கூடாது  என  கே  பக்யராஜை  ஒரு  கெஸ்ட்  ரோலில்  நடிக்க  வைத்து  சமாதானப்படுத்திய  லாவகம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  நேசக்காதலா.. 


2 கிரிட்  கிரிட் கிர்ட்டுனுதான்  இருக்குதடா  வாழ்க்கை 


3  வா  வா  என்  மகனே


4   ஆதித்யா மோனும்  அதிதி  மோளும்  திருச்சூர்  ட்ரெய்ன்ல  போயி


5  நம்ம  தமிழ்


6   வா  வா  என்  உயிரே 


7  போகாதே


  ரசித்த  வசனங்கள் 


1  அப்பா   பேச்சை  மீறி  எதுவும்  செய்ய  மாட்டா  சார், தங்கமான  பொண்ணு 


 நீங்களே  தான்  பேசிட்டு  இருக்கீங்க, பொண்ணை  ஒரு  வார்த்தை  பேசச்சொல்லுங்க 


 நான்  கர்ப்பமா  இருக்கேன்  சார் 


2  என்  கர்ப்ப  கால  ஆசை  என்ன  தெரியுமா? யாருமே  இல்லாத  ரோட்ல  மிட்  நைட்ல  நாம  ரெண்டு  பேரும்  பைக்  ரைடு  போகனும்


 உங்கப்பன்  தங்கராஜ்   இருக்கானில்லை , அவன்  ரோடு  போட்டாதான்  யாருமே அங்கே  வர  மாட்டாங்க 


3  உங்களுக்கெல்லாம்  உங்களால  நாங்க  நல்லாருக்கனும், ஆனா  உங்களை  விட  நாங்க  நல்லாருக்கக்கூடாது ‘?

4  எவ்வளவு  நாட்களுக்கு  இப்படி  ஓடிக்கிட்டே  இருப்பே? ஃபேஸ்  யுவர்  ஃபியர்ஸ்


5  வாழ்க்கை  தத்துவத்தை  எங்க  பாட்டி  எப்படி  சொல்வாங்க  தெரியுமா? விரலை  உள்ளங்கை  பக்கமா  மடக்கலாம், ஈசி , ஆனா  புறங்கை  பக்கமா  வளைக்க  முடியாது  , கஷ்டம், விரல்  ஒடிஞ்சிடும் 


6 உன்னோட  கடந்த  காலத்தைப்பற்றி  நினைச்சுட்டு  இருக்காம  உன்  மகனோட  எதிர்காலத்தை  மனதில்  வைத்து  வேலைக்கு  போ   


7  லைஃப்ல  எதைத்தொலைச்சாலும்  திருப்பிக்கிடைக்காது , ஆனா  உன்  லைஃபே  திரும்பக்கிடைச்சிருக்கு 


8  அந்த  ஆளு  இருக்கும்போது மட்டும்  என்னைப்பார்க்கிறாளே?னு  அப்பவே  எனக்கு  டவுட்,  அவ  அவனைத்தான்  பார்த்திருக்கா,  என்னை  அல்ல 


9   வழக்கமா  பொண்ணுங்கன்னா  பிரிச்சுத்தான்  விடுவாங்க ,  நீ  சேர்த்து  வைக்கறதா  சொல்றியே?


10   புதுசா  ஆரம்பிச்ச  வாட்சப்  க்ரூப்  ஈ  ஓடுது. ஒரு  பய  உள்ளே  வர  மாட்டேங்கறானுங்க 


 ஓசி  சோறுனு  சொல்லு , அடிச்சு  பிடிச்சு  வருவானுங்க 


11   உண்மையா  உனக்கு சமைக்கத்தெரியுமா?


 தனியா  இரு , வாழ்க்கையே  தெரியும்


12   வாழ்க்கைல  பெரிய  பெரிய  விஷயத்தை எல்லாம்  வாழ்க்கையே  தீர்மானிக்கும்,  ரிலாக்சா  இரு


13   திரும்பி  உன்  வாழ்க்கைல  இணைவேன்னு கனவுல கூட  நினைக்காதே


 அய்யோ  ஜி  என்  கனவுல  நீங்க  வந்தாலும்  உங்க்ளை  சேர்த்துக்கற  ஐடியாவே  இ;ல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கர்ப்பமா  இருக்கும்  நாயகியிடம்  லேடி  டாக்ட்ர்  ஹூமோ  க்ளோபின்  அணுக்கள்  சுத்தமா  இல்லை , வெயிட்  ரொம்பவும்  குறைஞ்சுட்டீங்கன நு  வசனமா  சொல்றார், ஆனா  விஷூவலா  நாயகி  ஆப்பிள்  மாதிரி  தளதளனுதான்  இருக்கார். வெயிட்டும்  அதிகமா  தான்  இருக்கார் 


2   நாயகன்  இண்டர்வ்யூவுக்காக  வந்த  இடத்தில்  எம்  டி  மேடம்  நாயகனை  தன்  கம்பெனி  ஸ்டாஃப்  என  நினைத்து  பேசிக்கொண்டிருக்கிறார். அந்த  ஷாட்ல  கூட  இருக்கும்  அனைவரும்  கம்பெனி  யூனிஃபார்ம் ல  டை  கட்டி  ஆஃபீஸ்  டேக்  கழுத்துல  மாட்டி  இருக்காங்க, நாயகன்  மட்டும்  அதெல்லாம்  இல்லாம  தனியா  தெரியறார் . அது  கூடவா  அந்த  எம்  டி  மேடம்  கண்ணுக்கு  தெரியல ?


3  நாயகன்  எம்  டி  மேடமிடம்  சொன்ன  ஐடியாவை  அட்டர்  நான்சென்ஸ்  என  திட்டி  சொல்லும் எம்  டி  மேடம்  அடுத்த  ஷாட்டில்  உங்க  கிட்டே  பாசிட்டிவ்  வைப்ரேசன்  தெரியுது என  பல்டி  அடிப்பது  எதனால் ?

4  நாயகனுக்கு  ரெக்கமெண்டேசன்லதான்  வேலை  கிடைக்குது , ஆனா  ரெகமண்ட்  பண்ணியவருக்கான  சம்பளத்தை  விட  அதிகமான  சம்பளம்  நாயகனுக்கு  என்பதால்  அந்த  நபர்  வேறு  ஒருவரை  இவருக்குப்பதில்  அவர்  பாலிசியில்  மாற்றுவது  எப்படி ? எம்  டி  வேறு  நபர்,  எம்  டி  தானே  அப்பாயிண்ட் மெண்ட்  செய்தது ? அவரை  எப்படி  கன்வின்ஸ்  செய்தார்  என்பதைக்காட்டவே  இல்லையே??


5  வேலை  இழந்த  நாயகன்  எம்  டி  யிடம்  போய்  முறையிடவே  இல்லையே? அவர்  நாலெட்ஜூக்கே  போகாம  இந்த  விஷயம்  நடக்குமா? அதைத்தெரியப்படுத்தவாவது  எம் டி  யை  மீட்  பண்ணி  இருக்கலாமே? 


6 படம்  போட்ட  36 ஆம்  நிமிடம்  நாயகி  காணாமல்  போனவர்  இடைவேளை  பிளாக்கில்  அதாவது 111  வது  நிமிடத்தில்  தான்  வருகிறார். இது  ஒரு பின்னடைவுத்கான், அட்லீஸ்ட்  அவரை  ரெண்டு  காட்சியிலாவது  அப்பப்ப  காட்டி  இருக்கலாம் 


7  குழந்தை  இறந்தே பிறந்தது  என  பொய்  சொல்லி நாயகியின்  பெற்றோர்  சமாளிப்பதை  நம்ப  முடியலை . இறந்த  குழந்தை  எங்கெ? என  கேட்க  மாட்டாரா? ஒரே  இரவில்  வீட்டைக்காலி  பண்ணும்போது  டவுட்  வராதா? 


8  நாயகியின்  தோழர்கள் , தோழிகள்  யாருமே  நாயகன்  குழந்தையுடன்  தனியாக  வசிப்பதை  தகவல்  தெரிவிக்கவில்லையா?


9 நீண்ட  இடைவெளிக்குப்பின்  நாயகியை  சந்திக்கும்  நாயகன்  ஏன்  குழந்தையை  விட்டுட்டுப்போனே? என  கேட்கவில்லை   ( ஆனா  அப்படிக்கேட்கப்போவதாக  நாயகன்  சொல்கிறார்  வெறும் வாய்  அளவில் ) 


10  நாயகனின்  அப்பா  கேரக்டர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை .நாயகன்  கைக்குழந்தையுடன்  தவிப்பதை  எந்த  அப்பாவும்  பார்த்துட்டு  சும்மா  இருக்க  மாட்டாங்க 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  ஒரு  ரொமாண்டிக்  மெலோ  டிராமா. டீன்  ஏஜ்  இளைஞர்கள் , யுவதிகள்  அவசியம்  காண  வேண்டிய  படம்.  ரேட்டிங் 3 / 5 






Dada
Dadareleaseposter.jpg
Theatrical Release Poster
Directed byGanesh K. Babu
Written byGanesh K. Babu
Produced byS. Ambeth Kumar
Starring
CinematographyEzhil Arasu K.
Edited byKathiresh Alagesan
Music byJen Martin
Production
company
Olympia Movies
Distributed byRed Giant Movies
Release date
  • 10 February 2023
Running time
135 minutes
CountryIndia
LanguageTamil
Budget₹ 3 crore
Box officeest. ₹16 crore[1]

Friday, March 10, 2023

கொன்றால் பாவம் (2023) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


திருடர்களில்  பல வகை உண்டு . விஜய்  மல்லய்யா  மாதிரி  லோன் வாங்கும்போதே  இதை ஆட்டையைப்போடப்போறோம்னு  திட்டம் போட்டு திருடறது  ஒரு வகை .  உழைக்க வக்கில்லாம அரசியலுக்கு  வந்து  ஊரான்  ஊட்டு  சொத்தைக்கொள்ளை  அடிக்கறது  ஒரு வகை ( எல்லா அரசியல்வாதிகளும் அல்ல, 98%   பேர் மட்டும் தான் திருடனுங்க) ஆடம்பர  வசதி  வாய்ப்புக்காக  தொழில் ரீதியாவே  திருடனா  இருப்பது .



 மேலே  சொன்ன  இந்த  3 வகையும்  சட்டத்தின் பிடியில்  அதிகம்  மாட்டிக்க மாட்டாங்க , ஏன்னா சாமார்த்தியமா , விஞ்ஞானப்பூர்வமா  திருடி  தப்பிச்சிடுவாங்க . ஆனா  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  முன் பின்  திருடி  அனுபவம்  இல்லாம   புதுசா  திருடும்போது   மாட்டிக்குவாங்க . அப்படிப்பட்ட  ஒரு மிடில்  கிளாஸ்  ஃபேமிலி ல நடந்த  ஒரு சம்பவம்  தான் இந்த  படம் 

spoiler alert

 இயற்கை எழில்  சூழ்ந்த  ஒரு கிராமம் . சுத்து வட்டாரம் 4 கிமீ  ரேடியஸ்ல   ஜன நடமாட்டமே  இல்லாத   இடத்துல  ஒரு வீடு , மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  , அம்மா, அப்பா , வயசுக்கு வந்த  மகள் . இவங்க  வீட்ல  பசு , ஆடு எல்லாம்  இருக்கு , கொஞ்சம்  நிலம்  இருக்கு , விவசாயக்குடும்பம்,  கொஞ்சம்  கடன்  இருக்கு 


 அந்த  ஊருக்கு  ஒரு ஆள்  கைல    2  சூட்கேசோட   வர்றாரு , ஒரே ஒரு நைட்  மட்டும்  இங்கே  தங்கிக்கறேன், காலைல  கிராமத்துல  போய்  தங்கிக்கறேன்கறாரு. அப்போ  ஆடியன்ஸ்  எண்ணம்  இவரு  இந்த  குடும்பத்தை  என்ன பண்ணப்போறாரோ?னு பதை பதைப்பா  இருக்கும்போது  திரைக்கதை  யு  டர்ன்  அடிச்சு திரும்புது. 


 அந்த  சூட்கேஸ்களில்  நகை , பணம்  இருப்பதைத்தெரிந்து  கொண்டு   அவனைப்போட்டுத்தள்ளிட்டு அதை சொந்தம்  கொண்டாடிடலாம்னு  நினைக்கறாங்க . அவங்க எண்ணம்  நிறைவேறுச்சா? இல்லையா? என்பதே  மீதி திரைகக்தை


 மொத்தமே ஒண்ணே  முக்கால் மணி நேரம்  தான்  பட,ம். அதுல  முதல்  20 நிமிசம்   தேவை  இல்லாத  காட்சிகள் ., இண்ட்ரோ சீன்கள் . கதை  21  வது   நிமிசத்துல தான்  ஆரம்பிக்குது . 45   வது  நிமிசத்துல  தான்  பரபரப்பு  ஸ்டார்ட்  ஆகுது.     ஒரு தேவை இல்லாத  நாயகி சோலோ சாங்க் இருக்கு , சகிச்சுக்கனும் , மோசம்  இல்லை 

நாயகியாக  வரலட்சுமி  சரத் குமார். கிராமத்துப்பெண்ணாக  கச்சிதமான  ஒப்பனை , உட்ல் மொழி ,  வ்ல்லி    ரோல்  இவருக்கு  கைவந்த  கலை  நாயகியின்  அப்பாவாக  சார்லி , அம்மாவாக  ஈஸ்வரி ராவ்  கொடுத்த  கேரக்டரை  கச்சிதமாக  திரை  மொழியில்  கொண்டு  வந்திருக்கிறார்கள் .,ஊருக்கு  வரும்  இளைஞனாக சந்தோஷ்  பிரதால்  கனகச்சிதம் . போஸ்டர் டிசைன்களில்  இவர்தான்  வில்லன்  என்பது  போல்  காட்டி  விட்டு  ஹீரோ  மாதிரி  கேரக்டரை  வடிவமைத்தது  அருமை . 

சார்லி  பொறுப்பில்லாத  குடிகார  ரோலில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார், விழி  ஒளி  இழந்தவராக  சென்றாயன்  அற்புதமான  நடிப்பு. சாராயக்கடை  பார்  ஒனராக  வரும் இயக்குநர்  சுப்ரமணியம்  சிவா  இரண்டே  காட்சிகளில்  வந்தாலும்  சிக்சர்  அடிக்கிறார்

1981  காலகட்டத்தில்  கதை  நடப்பதால்  ஆர்ட்  டைரக்சனுக்கு  ஓவர்  லோடு  ஒர்க் 


 இசை  ஒளிப்பதிவு , எடிட்டிங்   எல்லாம்  தரம். சாம் சி எஸ்  பின்னணி  இசையில்  பரபரப்பைக்கூட்டி  இருக்கிறார்.

தயாள்  பத்மனாநாபந்தான்  இயக்கம். பெரும்பாலான  காட்சிகள்  நைட்  எஃபக்டில்  எடுக்கப்பட்டிருப்பதால்  ஒளிப்பதிவாளருக்கு  சவாலான  வேலை  தான் 



சபாஷ்  டைரக்டர் ( தயாள்  பதமனாபன்)


1  யாராலும்   யூகிக்க முடியாத அபாரமான  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


2   பணம்  கிடைக்குது என்றதும்   சராசரி மனிதனின்  மனம்  பேராசைப்படும்  விதம் பற்றிய  காட்சி அமைப்புகள்



லாஜிக்  ,மிஸ்டேக்ஸ்


1  புது  ஊருக்கு  வரும்  ஹீரோ கைல  உள்ள  2 சூட்கேஸ்லயும்  நகை , பணம்  வெச்ட்டு  தைரியமா  ஆத்துல  குளிப்பது  எப்படி? கரைல  அசால்ட்டா  வெச்ட்டு  இவரு  பாட்டுக்கு   தண்ணிக்குள்ளே 10 நிமிசம்  யோகா  பண்ணிட்டு இருக்காரு , அப்டியாவது  நீச்சல்  அடிக்கற  மாதிரி  காட்டி இருந்தாக்கூட  ஒரு பார்வை   கரை  மீது  இருக்கும்


2   முன் பின் தெரியாத  ஆள்  திடீர்னு  வந்து    டீத்தூள்  வாங்க  காசு தர்றேன், போய் வாங்கிட்டு  வாங்கன்னா  யாராவது  வீட்ல  மனைவி , மகள்  இவங்களை  தனியா  விட்டுட்டுப்போவாங்களா? அக்கம்  பக்கம்  யாரும் இல்லா இடம்  வேற  


3   ஒரு  பொண்ணு ஒரு ஆளை  தன் வயப்படுத்தனும்னு நினைச்சா அதை  சாதிக்க  1008  வழி இருக்கு, பொதுவா  பொண்ணு  அதை  பூடகமாதான்   வெளிப்படுத்துவா , இப்டி பட்ட வர்த்தனமா  வெளிப்படுத்த  மாட்டா . அதுவும்  கிராமத்துப்பொண்ணு    வேற  


4  விருந்தாளியைக்கொலை  செய்ய  முடிவெடுத்த நாயகி  நைட்  அவன்  தூங்கும்போது   போட்டுத்தள்ளுவதுதானே  ஈசியானதாக இருக்கும்?


5  கிராமங்களில் இருக்கும் நாய்  பொதுவா   அரளி விதை  மாதிரி  விஷம்  கலந்த  உணவை  மோப்பம் பிடிச்சிடும், சாப்பிடாது 

6    வீட்டுக்கு வரும்  போலீஸ்  என்கொயரிக்கு முன் புது  பூட்ஸ்  வாசலில்  இருப்பதைப்பார்க்கலையே ஏன்/?
7   வீடு  செட்டிங்ல  போட்டது  நல்லா  தெரியுது 

நச்  டயலாக்ஸ் (  ஜான்  மகேந்திரன் ) 


1     கஷ்டப்பட்டு   உழைச்ச பணத்தை  இப்படி யாரும்  அநாவசியமா  செலவு பண்ண மாட்டாங்க , இது  திருட்டுப்பணமாதான்  இருக்கும் 


2   ஒரு உயிர்  வாழ  இன்னொரு உயிர் சாகனும் , இது  இயற்கையின் நியதி

3 ஒரு  உயிருக்கு  பசி  அசங்கனும்னா  இன்னொரு   உயிருக்கு  மூச்சு  அடங்கனும், கொன்றால்  பாவம்  தின்றால்  போச்சு  பழமொழி  நீ  கேட்டதில்லை ?

4  தான்  ஆசைப்பட்ட  ஆம்பளை  இவ்ளை  வேண்டாம்னு  தட்டிக்கழிப்பது  எவ்வளவு  பெரிய  அசிங்கம்  தெரியுமா?

5  பெரிய  மிருகம் சின்ன  மிருகத்தை  வேட்டை  ஆடுவதும், சின்ன  மிருகம் அதை விட  சின்ன  மிருகத்தை  வேட்டை  ஆடுவதும்  சகஜம்

6  கண்ணு  தெரியாதவன்  குருடன்  இல்லை , கண்  தெரிஞ்சும்  வழி  மாறி  தவறான  பாதையில்  போகிறவன்  தான்  குருடன் 




சி.பி    ஃபைனல்  கமெண்ட்  -  த்ரில்லர்  விரும்புகள்  அவசியம் பார்க்க  வேண்டிய  படம்  , டோண்ட்  மிஸ் இட் , . ரேட்டிங்   3.25 , ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க் 44


சில  சுவராஸ்ய தகவல்கள் 

1    இது  14  நாட்களில்  உருவான  மினிமம்  [பட்ஜெட்  படம் 

2  இது   / 2018ல்  கன்னடத்தில்  உருவான  ஆ  கராலா  ராத்ரி  படத்தின்  அஃபிசியல்  ரீமேக் 

3   கன்னடம் , தெலுங்கு  இரு  மொழிகளிலும்  மாபெரும்  வெற்றியைப்பெற்ற  படம் 

3 இயக்குநர்  தயாள்  பதமனாபன்  ஒரு  தமிழர் கன்னடத்தில்  இதுவரை  18  படங்களையும்    தெலுங்கு , தமிழ்  ஆகிய  மொழ்களில்  தலா  ஒரு  படமும்  இயக்கி  உள்ளார். தெலுங்கு , தமிழ்  இரு  படமுமே  கன்னட  ரீமேக்  தான் இவர்  விழுப்புரம்  மாவட்டத்தை  சேர்ந்தவர் . கதைக்களம்  த்ருமபுரி  மாவட்டம் பெண்ணாகரம்  கிராமத்தில்  நடைபெறுவதாக  இருக்கிறது , 

4 இந்தப்படத்தின்  ஒரிஜினல்  வெர்சன்  2018ஆம்  ஆண்டின் சிறந்த  படமாக  மாநில  அரசின்  விருது  பெற்ற  படம் 

5 ரூபர்ட்  ப்ரூக்  1918ல் ஆங்கிலத்தில் எழுதிய  ஒரு  சிறுகதையை  தழுவி  எடுக்கப்பட்ட  படம்  இது

6   இதன்  ஒரிஜினல்  வெர்சன்  கன்னடப்படம்  யூ  ட்யூப்ல, டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  பிளஸ்  ஓடிடி  தளத்தில்  காணக்கிடைக்கிறது 

Thursday, March 09, 2023

WALTAIR VEERAYYA (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்


ஆந்திர  சூப்பர்  ஸ்டார்  சிரஞ்சீவி , மாஸ்  மகாராஜா ரவிதேஜா  இருவரும் 23  ஆண்டுகளுக்குப்பின் இணைந்து  நடித்திருக்கும்  படம்  இது. 2000 ஆம் ஆண்டில் அன்னய்யா  எனும்  படத்தில்  நடித்தனர். வால்ட்டர் வீரய்யா எனும்  டைட்டில்  ரோலில்  சிரஞ்சீவி  நடிக்க 140 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்  முதல் நாள்  வசூலில்  உலகம்  முழுவதும் 49 கோடி  வசூலித்தது.  2023  ஜனவரி 13ல் தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இன்று  வரை 233  கோடி  வசூல்  செய்து  மெகா  ஹிட்  லிஸ்ட்டில்  சேர்ந்திருக்கிறது. நெட்  ஃபிளிக்சில் 27/2/2023 ல்  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது, அது  போக  ஜெமினி  டிவியில்   ரிலீஸ்  ஆகி  உள்ளது . நான்  சொன்ன  வசூல்  நிலவரம்  தியேட்டரிக்கல்  கலெக்சன்   ஒன்லி .  ஒடி டி   . டி வி  விற்பனை  லாபம்  தனி 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பாவுக்கு  இரு  தாரங்கள் . முதல்  தாரத்தின்  மகன்  நாயகன். இரண்டாவது  தாரத்தின்  மகன்  இப்போ  போலீஸ்  ஆஃபீசர் . நாயகன்  மீன்  பிடித்து பதப்படுத்தி  விற்பனை  செய்பவர் . நாயகனுடன் கூட்டாளியாக  , நண்பனாக  ஒரு  கறுப்பு  ஆடு  இருக்கு. நாயகனுக்கு  அவன்  வில்லன்  என  தெரியாது. போதைப்பொருட்கள்  தயாரித்து  அதை  ஐஸ்  கட்டிக்குள்  மறைத்து  வைத்துக்கடத்த  இந்த  மீன்  பிடித்து  பதப்படுத்தும்  தொழிற்சாலையை  பயன்படுத்தி  வருகிறான்  வில்லன்.


 ஒரு நாள்  ஐஸ் கட்டிகள்  தவறுதலாக  ஸ்கூல்  விழாவுக்கு  செல்ல  அந்த  ஐஸ்  போட்டு  ஜூஸ்  குடித்த  மாணவர்கள்  25  பேர்  ஸ்பாட்  அவுட். இந்தக்கொலைக்கேஸ்  நாயகன்  மீது  தவறுதலாக  விழுகிறது . நாயகனை  அவரது  அண்ணனே  கைது  செய்து  சிறையில்  அடைக்கிறார். கைப்பற்றப்பட்ட  சரக்கு  போலீஸ்  ஸ்டேஷனில்  இருக்கு 


  வில்லன்  அடியாட்களுடன்  அந்த  சரகைக்கைப்பற்ற  முயல  நாயகனின்  தம்பியான  போலீஸ்  ஆஃபீசர்  முந்திக்கொண்டு  அந்த  சரக்கை  இடம்  மாற்றுகிறார்.இதனால்  கடுப்பான  வில்லன்  நாயகனின்  தம்பியை  கொலை செய்து  விட்டு  மலேசியா  தப்பிச்செல்கிறான்

நாயகன்  வில்லனை  எப்படி  துரத்திப்பிடிக்கிறார்  என்பதே  மீதிக்கதை 


 இப்போ நான்   சொன்ன  சம்பவங்கள்  எல்லாம்  படத்தின்  பின்  பாதியில்  வருபவை . முன்  பாதியில்  காதல், காமெடி , டூயட்  என  மாமூல்  மசாலா  படங்கள்  ஃபார்முலாவில்   ஜனரஞ்சகமாக  போகிறது


நாயகனாக  சிரஞ்சீவி. காமெடி , ஆக்சன் , செண்ட்டிமெண்ட்  என  எல்லா  ஏரியாக்களிலும்  புகுந்து  விளையாடுகிறார். கமலை  விட  வயது  மூத்த  சிரஞ்சீவி  கமலின்  மகளுடன்  ஜோடியாக  நடிப்பதெல்லாம்  கொடுமை 


 நாயகனின்  தம்பியாக  ரவிதேஜா , என்னதான்  சிரஞ்சீவி  ஹீரோ  , டைட்டில்  ரோல்  என்றாலும்  இடைவேளைக்குப்பின்  வரும்  ரவிதேஜா  காம்போ  காட்சிகளில்  சிரஞ்சீவியை  அசால்டாக  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்  ரவிதேஜா 


வில்லனாக  பிரகாஷ்  ராஜ். முன்பாதியில்   கோட்  சூட்டில்  கம்பீரம் , பின்  பாதியில்  ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்  சாதா  லுங்கி  கெட்டப்பில்  துரோகி  வேடம்  கச்சிதமான  நடிப்பு 


பாபி  சிம்ஹா  உடல்  மொழியில்   கலக்குகிறார்.


 நாயகனுக்கு ஜோடியாக  ஸ்ருதி  கமல்  டூயட்  காட்சிகள் மட்டுமல்லாமல்  ஆக்சன்  காட்சிகளிலும்  அசத்துகிறார்


 ரவிதேஜாவுக்கு  ஜோடியாக  கேத்ரீன்  தெரசா. அதிக  வாய்ப்பில்லை , வந்தவ்ரை  அழகு


ஆர்தர்  ஏ  வில்சனின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  அனைத்தும்  கண்ணுக்குக்குளுமை .. விசாகப்ட்டினம் , மலேசியா ,   என  பலவித லொக்கேஷன்களில்  காட்சிகள்  அசத்துகிறது 


தேவி  ஸ்ரீ  பிரசாத்தின்  இசையில்  5  பாடல்கள். அதில்  3  செம  ஹிட் .,  பிஜிஎம்  கச்சிதம் 


நிரஞ்சன்  தேவரமனா வின்  எடிட்டிங்கில்  படம்  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  இழுத்தாலும்  காட்சிகள்  எங்கேயும்  போர்  அடிக்கவில்லை . பாபியின் இயக்கத்தில்  ஒரு  மாஸ்  மசாலா  கமர்ஷியல்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  ஸ்ருதி  கமலின் ஆக்சன்  சீக்வன்ஸ்  அடிபொலி..,ரஜினி  ஸ்டைலின்  சாயல்  இருந்தாலும்  பாபி சிம்ஹாவின்  உடல்  மொழி   செம


2   பாத்ரூமில் ரா  டிபார்ட்மெண்ட்  ஆட்கள்  இருக்கும்போது  பாபி  சிம்ஹா அங்கே  போக  முயல்வதும் அப்போது  ஸ்ருதி  கமல்  எண்ட்ரியும் செம  சீன்


3  சிரஞ்சீவி - பாபி  சிம்ஹா  காம்போ  சீன்களில்  தெறிக்கும்  பிஜிஎம் 


4  டோண்ட்  ஸ்டாப்  டான்சிங்  , ஹிஸ்டீரியா  லோடிங்  பாட்டுக்கு  கொரியோகிராஃப்  அருமை 


5   ஹீரோ  தன்  தம்பி  தன்னை  வீட்டில்  டிராப்  ப்ண்ணியதை  எண்ணி  சிலாகிக்கும்  காட்சி , காமெடியும், செண்ட்டிமெண்ட்டும்  ஒர்க்  அவுட்  ஆன  இடம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஆர்மி  ஃபோர்ஸ் , நேவி  ஃபோர்ஸ் , போலீஸ்  ஃபோர்ஸ்  எது  இப்போ  வருது ?


 மெகா  ஃபோர்ஸ்

2   இவன்  தான்  என்  ஜெயில்  மேட்


க்ளாஸ் மேட்  மாதிரி  சொல்றானே?


3   இந்த ஆளுக்கு பவர் ஃபுல்  கண்கள் ., இரண்டு  கண்களும்  ஒரே  டைம்ல    வெவ்வேற  திசையைப்பார்க்கும்


 புரியுது  , டோரி  கண்ணன்?


4  சாலமன்  சார், நீங்க யார்னே  எங்களுக்குத்தெரியாது 


 ஓஹோ, அப்போ  என்  பேர்  மட்டும்  எப்படி  தெரிஞ்சுது ?


5   உங்களுக்கு  ரெண்டு  ஆப்சன்  தர்றேன். 1 நீங்க  யார்னு  கண்டு பிடிச்சா  போட்டுத்தள்ளிடுவேன்  2  நீங்க  யார்?னு  நீங்களா  சொல்லிட்டா  கொன்னுடுவேன்


 சார், உங்க  ரெண்டு  ஆப்சனும் எங்களை  முடிக்கறதுலதான்  குறியா  இருக்கு 


 என்  ஆப்சன்ஸ்  எப்பவுமே  அப்படித்தான்  இருக்கும்


6  கிரிமினல்  ரெக்கார்ட்ஸ்ல  உன்  பேரு  இருக்கு ?


 ரெக்கார்ட்ஸ்ல  என்  பேரு  இருக்கோ  இல்லையோ, என்  பேரே  ஒரு  ரெக்கார்டுதான்

7  ஏன்? இந்தியா   வர  பயமா?


 எனக்கு  இந்தியாவைக்கண்டு  பயம் இல்லை , இந்தியாவுக்குதான்  என்னைக்கண்டு  பயம்


8  ஹே  பார்ட்னர் , டோண்ட்  ஃபியர்  ஐ  இண்ட்டர்ஃபியர்


9  ஐ  ஆம்  ரா  ஃபிபார்ட்மெண்ட்

 நானும்  ரா  தான் . ஐ மீன்  ராவா


10  ஓட்டல் ரிலேஷன்ஷிப்  மேனேஜர்  உன்  கூட  ரிலேஷன்ல  இருந்தவ?

11  நான்  வலை  வீசுவது  மீன்  பிடிக்க  அல்ல,திமிங்கிலம்  தான்  என்  டார்கெட்


12  அண்ணன்  , தம்பிக்குள்ளே  சண்டை  போட  காரணம்  ஏதும்  வேணுமா?


13   என்னடா, நீங்க  எல்லோரும்  மங்கலா  தெரியறீங்க ?


 அண்ணே, நீங்க அ ழறீங்க, அதான்  கண்ணீர்  வழியா  அப்டி  தெரியுது 


14    எனக்கு  எக்ஸ்பயரி   டேட்  நெருங்கிடுச்சு

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போலீஸ்  ஸ்டேஷனில்  இருந்த  அனைத்து  போலீசையும்  போட்டுத்தள்ளிய  வில்லன்  கேங்கை  ஒரு  போலீஸ்  துப்பாக்கி  முனையில்  மிரட்டிட்டு  இருக்கு  லூஸ்  மாதிரி , வில்லனை  காயப்படுத்தவாவது  முழங்காலில்  சுடலாமே?


2  எல்லா  போலீசையும்  சுட்ட  வில்லன் கேங்க்  ஒரு  ஆளை  மட்டும்  தூக்குக்கயிற்றில்  தொங்க  விடுவது  எதுக்கு ? இது  தற்கொலை என  திசை திருப்பவா? ஒருவேளை  ஸ்டேஷனில்  இருந்த  எல்லா  போலீசையும்  இந்த  போலீஸ்  ஷூட்  பண்ணீவிட்டு  தான்  தற்கொலை  பண்ணிக்கிட்டதா  கேசை  திசை திருப்பவா?மடத்தனமான  காட்சி 


3  ஒரு  கேங்க்ஸ்டரை , மான்ஸ்டரை  லாக்கப்பில்  போடும்போது  அவன்  தப்பிப்பான்  என்ற  பயமோ , சந்தேகமோ  வந்தால்  அவனுக்கு  தூக்க  மருந்தோ , மயக்க  மருந்தோ  உடலில்  செலுத்தி  விட்டால்  ஈசியா  பாதுகாக்கலாமே?


3   ஹீரோ  ஓப்பனிங்  சீன்  பில்டப்  அப்போ ஹீரோ   ஃபோன்  காலை  அட்ட்ட்ண்ட்  பண்ணும்  அந்த  ரவுடி  கால்  பட்டனை  மட்டுமே  ஸ்வீப்  செய்கிறார். ஸ்பீக்கர்   ஆன்  பண்ணவே  இல்லை , ஆனா  வாய்ஸ்  ஸ்பீக்கர்ல  கேட்குது 


4  கடல்ல  புயல்  காத்து  அடிக்குது , பயங்கரமா  மழை  பெய்யுது . ஆனா  அந்த  லூஸ்  ஹீரோ  பீடி  பத்த  வைக்கறார். கேவலமா  இருக்கு 


5 ஹீரோ  ஒரு  துக்ளியூண்டு  போட்ல  வந்து  அவ்ளோ  பெரிய  கப்பல்ல  ஜம்ப்  பண்ணி 45  பேர்  கூட  ஃபைட்  பண்ணி  அரை  மணி நேரமா  அடிச்சுக்கிட்டு  இருக்காரு . இந்த  கிறுக்கு  வில்லன்  கைல  துப்பாக்கி  வெச்சுக்கிட்டு  சுடாம  வேடிக்கை  பார்த்துட்டு  இருக்கான். ஹீரோ  கைல  துப்பாக்கி  இல்லை 

 

6   பொண்ணுங்க  போடும்  ரயான்  உள்  பாவாடையை  லுங்கி  மாதிரி  கட்டிக்கிட்டு  கேவலமா  ஹீரோ  ஓப்பனிங்  ஷாங்  குத்தாட்டம்  ஆடறாரு. கூச்சமா  இருக்காதா? அவருக்கு ?

7   கோர்ட்ல    ஜட்ஜ்  முன்  கால் மேல்  கால்  போட்டு ஸ்டைல்  காட்டிட்டு  இருக்கரு  ஹீரோ. கோர்  அவமதிப்பு  கேஸ்  இல்லையா? 


8  கஜினி  டூயல்  ரோலில்  கலக்கிய  வில்லன்  இதுல  ஹீரோவுக்கு  எடுபுடியா  வர்றாரு. கஷ்டம்


9   ஹீரோ  ஸ்ருதி கமலைப்பார்த்து  என்  கோல்டு  ஃபிஷ்  என  சிலாகிக்கும்  காட்சி  ஆல்ரெடி  வேலைக்காரன்  ரஜினி - அமலா  டயலாக்  ஆச்சே? ஆந்திராவிலுமா  அட்லி அலப்பறை ?

10  நான்  ராமன்  எனில்  நீ  சீதை  எனும்  பாடல்  வரி  வரும்போது  ஸ்ருதி  கமல்  லோகட்   லோ ஹிப்  டிரசில்  இருப்பது  கொடுமை , சென்சார்  எப்ப்டி  விட்டாங்க ? இந்துக்களின்  மனம்  புண்படாதா?

11   வில்லன்  ஒரு  உருப்படாதவன்  என  சிம்பாலிக்கா  சொன்னாப்போதாதா? ஒவ்வொரு  ஷாட்லயும்  அந்த  ஆள்  போதை  மருந்தை  எடுத்துக்குவதை  டீட்டெய்லா  காட்டனுமா?


12  வில்லன்  கேங்க்ல  8  பேரு  கன்  எடுத்து  குறி  வைக்கறாங்க  ஹீரோவை  ஹீரோ  அந்த  எட்டுபேரையும்  ஒன்  பை  ஒன்  சுட்டுட்டே  வர்றாரு.அதுவரை   எட்டு  பேரும்  வேடிக்கை  பார்த்துட்டே  இருக்கானுங்க 


13 ஒரு  அசிஸ்டெண்ட்  கமிஷனர்  கள்ளச்சாராய  பாட்டில்களைக்கைப்பற்றின  கான்ஸ்டபிளை  விட்டு  அதை அழிச்சாப்போதாதா? எதுக்கு  லூஸ்  மாதிரி அவரே  ரோடு  ரோலர்  ஏற்றி  எல்லா  பாட்டில்களையும்  உடைக்கறாரு? உடைஞ்ச  கண்ணாடி  சில்லுகளை  தண்டமா  க்ளீன்  பண்ற  வேலை வேற . தண்டம்  வேற  முட்டுக்கோல்  வேற 



14  ஃபிளாஸ்பேக்ல  அண்ணண்      தம்பி  பாசம்  காட்ட  ஒரு  சீன்.. தம்பி  மரம்  மேல  ஏறி  பட்டம்  விடுவிக்க  போறப்ப மரக்கிளைல  மாட்டி  புன்னகை  மன்னன்  கமல்  போல  தொங்கிட்டு  இருக்காப்டி. அப்போ அண்ணன்  மரம் மேல  ஏறி  அவன்  கிட்டே  பொகும்போது  தம்பி  கீழ   விழறாப்டி. கூட்  இருக்கற  அத்தனை  பசங்களை  யூஸ்  பண்ணி  அவனுக்கு  நேர்  கீழே  ஒரு  நெட்  விரிச்சு  வைக்கலாம். அது  கூட  யோசிக்க  மாட்டானா?


15   சித்தி  கோவிச்சுக்கிட்டு  வீட்டை  விட்டுப்போகும்போது  சித்தி , மகன்  இருவர்  டிரசும்  ஒரு  துக்ளியூண்டு  பொட்டில  எடுத்துட்டுப்போறாங்க. அதுல  அதிக  பட்சம் 2  செட்  சேலை தான்  வைக்க  முடியும்


16  ஹீரோ  ஒரு  சீன்ல  தனக்கு  வெர்ட்டிகோ  பிராப்ளம்  இருக்கு , உய்ரமான  இடம்  பார்த்தா  மயக்கம்  வரும் , ஏரோப்ளைன்ல  போக  ,முடியாது ,  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டல்ல  10 வது  மாடில  தங்க  முடியாது . உய்ரம்  அலர்ஜினு  சொல்றார், ஆனா  ஓப்பனிங்  ஷாட்ல  படகு ல  இருந்து  கப்பல்  ஜம்ப்  பண்ணி  உயரமான  இடத்துல  ஃபைட்  எல்லாம்  போடறாரு

17  ஹீரோவோட  தம்பி  பயங்கரமா  கத்திக்குத்து  பட்டு  சாகக்கிடக்கறாரு, மூச்சே  விட  முடியலை. லூஸ்  மாதிரி  ஒரு  தம்  அடிக்கனும்  பீடி  குடுனு  கேட்கறாரு. சுவாசிக்கவே  மூச்சு  விட  முடியாதப்ப  தம்   எப்படி    இழுக்க  முடியும்?  

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஏகப்ட்ட  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும் ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காத   டெம்ப்ளேட்  தெலுங்கு  மசாலா  மூவி . கமர்ஷியல்  படத்தை  விரும்பும் ஆடியன்ஸ்  பார்க்கலாம்  ரேட்டிங் 2.75 / 5 


Waltair Veerayya
Waltair Veerayya poster.jpg
Theatrical release poster
Directed byBobby Kolli
Written byBobby Kolli
Kona Venkat
K. Chakravarthy Reddy
Produced byNaveen Yerneni
Y. Ravi Shankar
Starring
CinematographyArthur A. Wilson
Edited byNiranjan Devaramane
Music byDevi Sri Prasad
Production
company
Release date
  • 13 January 2023
Running time
160 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹140 crore[1][2]
Box officeest. ₹233.05 crore[3]

Wednesday, March 08, 2023

IRATTA (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


  கேரளா - பாலக்காடு  - ஓட்டப்பாலம்  என்னும்  ஊரில் போஸ்ட்  ஆஃபீசில்  பணி புரிபவர் தான்  இந்தப்பட  இயக்குநரான ரோகித்  எம் ஜி  கிருஷ்ணன். இவர்  எந்த ஒரு  இயக்குநரிடமும்  அசிஸ்டெண்ட்  ஆகப்பணி  புரியாதவர், சினிமாப்பின்புலம்  எதும்  இல்லாதவர். படத்தின் நாயகனான  ஜோஜூ  ஜார்ஜ்ஜின்  சொந்தப்படம் .கமர்ஷியலாக  சுமாராகத்தான்  ஓடிய  படம்  என்றாலும்  விமர்சன  ரீதியாக  ஏகோபித்த  பாராட்டுக்களைப்பெற்ற  இந்த த்ரில்லர்  படத்தை பற்றி  பார்ப்போம் ,இது  நெட்  ஃபிளிக்சில்  இன்று  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வினோத் , பிரமோத்  இருவரும்  ட்வின்ஸ்.10  வயசு  வரை  அம்மா, அப்பாவுடன்  ஒற்றுமையாக  வாழ்ந்தவர்கள் தான். அப்பா  கேரக்டர்  சரி இல்லை . பல  பெண்களுடன்  தொடர்பு  உள்ளவர் . ஒரு  கட்டத்தில்  வீட்டுக்கே  ஒரு  பெண்ணைக்கூட்டி  வந்து  சொந்தமனைவியையும் , மகன்களையும்  வீட்டை  விட்டு  விரட்டி  விடுகிறார்.


 ஜீவனாம்சம்  கேட்ட போது , இரு  குழந்தைகளுக்கும்  ஆகும்  செலவை  ஏற்க  வேண்டும்  என  பஞ்சாயத்து  நடந்தபோது ஒரு  மகனை  நான்  வளர்த்திக்கொள்கிறேன், இன்னொரு  மகனை  அவ  வளர்த்தட்டும்  என்கிறார்



அதன்படி  வினோத்  அப்பாவுடனும், பிரமோத்  அம்மாவுடனும்  வளர்கிறார்கள் . அப்பா  ஒரு  போலீஸ்காரர்  என்பதாலோ  என்னவோ  மகன்கள்  இருவருமே  போலீஸ்  ஆகிறார்கள் , வினோத்  அசிஸ்டெண்ட்  சப் இன்ஸ்பெக்டர்  ஆகவும், ;பிரமோத்  டி எஸ் பி  ஆகவும்  இருக்கிறார்கள் 


அப்பாவின்  கேரக்டர்  சரி  இல்லாததால்  அப்பாவால்  வளர்க்கப்பட்ட  வினோத்  அப்பாவைப்போலவே  பெண்கள்  விஷயத்தில்  வீக்  உள்ளவராகவும், அம்மாவால்  வளர்க்கப்பட்ட  பிரமோத்  நல்லவராகவும்  இருக்கிறார்கள் 


நல்லவரான  பிரமோத்  தன்  மனைவியை  விட்டுப்பிரிந்து  16  வருடங்களாக  தனிமையில்  வாழ்கிறார். அவர்களுக்கு  ஒரு  மகளும்  உண்டு . மகள்  அவரது  மனைவியுடன்  வாழ்கிறார்


கெட்டவரான  வினோத்  ஒரு  நாள்  போலீஸ்  ஸ்டேஷனில்  இருக்கும்போது    வெளியே  இருப்பவர்களுக்கு  மூன்று  முறை  குண்டு  வெடிக்கும்  சப்தம்  கேட்கிறது. வினோத்  இறந்து  கிடக்கிறார்.


ஸ்டேஷனில்  இருக்கும்  மூன்று  போலீஸ்  மேல்  சந்தேகம்  எழுகிறது. வெவ்வேறு  சந்தர்ப்பங்களில்  வினோத்  உடன்  பகைமை  பாராட்டியவர்கள்  தான்  அவர்கள் . 


 பிரமோத்க்கு  தகவல்  தெரிவிக்கப்படுகிறது, அவர்  வந்து  இந்த  கேசை  இன்வெஸ்டிகேசன்  செய்கிறார்.   என்ன  சம்பவம்  நடந்தது ? என்பது  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்.


 நாயகனாக  ட்வின்சாக  ஜோஜூ  ஜார்ஜ்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். இவர்  போலீசாக  ஆல்ரெடி  நடித்த  ஜோசஃப் , நயாட்டு ஆக்சன்  ஹீரோ  பைஜூ ,ஆகிய  படங்களில்  காட்டிய  உடல்  மொழிக்கும்  இந்தப்படத்தில்  இரு  மாறுபட்ட  போலீசாக  காட்டும்  உடல்  மொழிக்கும்  ஏகப்பட்ட  வித்தியாசங்கள் . நுணுக்கமான  நடிப்பு . பின்னிப்பெடல்  எடுத்து  இருக்கிறார்


கணவனால்  அடிக்கப்பட்டு  போலீசில்  புகார்  கொடுக்க  வந்து    நாயகனால்  அடைக்கலம்  தரப்படும்  நாயகியாக  அங்காடித்தெரு  அஞ்சலி  படம்  முழுக்க  வசனம்  அதிகம்  பேசாமல்  கண்களாலேயே  நடித்திருக்கிறார். பிரமாதம் 


கமிஷனராக  வரும்  ஆர்யா  சலீம்  ஒரு  லேடி  ஆஃபீசரின்  மிடுக்கை  உடல்  மொழியில்  அருமையாக  வெளிப்படுத்தி  இருக்கிறார். 


ஜேக்ஸ்  பிஜோய்  இசையில்  ஒரு  மெலோடி  சாங்  செம  ஹிட்  ஆகி  இருக்கிறது , பிஜிஎம்  குட் 


2  மணி  நேரத்துக்கு  எட்டு  நிமிடங்கள்  குறைவான  டியூரேஷன்  உள்ள தாக  கசிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


ஒளிப்பதிவாளர்  விஜய்  இடுக்கி  மாவட்டத்தின் அழகைக்கண்  முன்  கொண்டு  வ்ந்திருக்கிறார்


 இயக்குநருக்கு  இது  முதல்  படம்  என்பதை  நம்ப முடியவில்லை , த்ரில்லிங்காக  படம்  போகிறது , ஆனால்  ஸ்லோ  பர்ன்  த்ரில்லர் 



சபாஷ்  டைரக்டர்


1  கமிஷன்ர்  ரூமில்  நாயகன்  ., நாயகனின்  ட்வின்  பிரதரின்  மனைவி ,  இன்னொரு  போலீஸ்  ஆஃபீசர்  , கமிசனர்  என  நால்வர்  மட்டுமே  இருக்கும்போது  கமிஷனர் இறந்தவரின்  மனைவியிடம்  உங்க்ளுக்கு  யார்  மீதாவது  டவுட்  இருக்கா? எனகேட்கும்போது   வசனமே  இல்லாமல் மனைவி  குறிப்பால்  உணர்த்தும்  காட்சி 


2 டபுள்  ஆக்சன்  படம்  என்றதும்  ஆள்  மாறாட்டம்  நடந்திருக்கும்.. டிஎஸ்பி  ஆக  இருக்கும்  நபரை  அசிஸ்டெண்ட்  சப்  இன்ஸ்பெக்டர்  கொன்று  விட்டு  ஆள்  மாறாட்டம்  செய்துக்கலாம்  என     நாம்  நினைத்தால்  நமக்கு  ஏமாற்றமே,  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வேற  லெவல் 


  ரசித்த  வசனங்கள் 


1 கணவன் , மனைவி  இருவருமே  ஈகோ  பிடித்தவர்கள்  எனில்  யார் தான்  சமாதானமாக  இறங்கிப்போவது?


2  புருசன் , பொண்டாட்டி  சண்டைன்னா  அக்கம்  பக்கம்  இருக்கறவங்களுக்கு  அது  ஒரு  டைம்  பாஸ் , அதுக்கு  நாம  இடம்  கொடுக்கக்கூடாது 


3  பிரச்ச்னை  இல்லாத  வாழ்க்கை  யாருக்குத்தான்  இருக்கு ?


4  தண்ணி  அடிச்சாலே  என்  புருசன்  இன்னொரு  முகத்தைக்காட்டுவான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மனைவியைப்பிரிந்த  நாயகன்  தன்  மக்ளை  16  வருடங்களாக  நேரில்  போய்  பார்க்கவே  இல்லை  என்பது  நம்ப  முடியவில்லை 


2  அதே  போல    பெண்கள்  விஷயத்தில்  வீக்  ஆக  இருக்கும்  வினோத்  தன்  அண்ணனின்  மனைவி  16  வருடங்களாக  தனிமையில்  வசிக்கிறார்  என்பது  தெரிந்தும்  அவரை  தவறான  கண்ணோட்டத்தில் பார்க  வில்லை  என்பதும்  ஆச்சரியமாக  இருக்கிறது 


3  சந்தேக  லிஸ்ட்டில்  பிரமோத்தும்  இருந்தும்  கமிஷனர்  எப்படி  அந்தக்கெசை  இன்வெஸ்டிகேட்  செய்ய  அவரையே  நியமிக்கிறார்? 


4  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனில்  சாதா  போலீஸ்  இறந்த  சம்பவத்துக்கு  சி  எம்  மே  ஓவர்  பிரஷர்  தருகிறார்  என்பது  காதில்  பூச்சுற்றல்,  அவர்  அரசியல்  செல்வாக்கு  மிக்கவர்  இல்லையே? 


5  மெயின்  கதைக்கோ ,   நாயகனின்  இறப்புக்கோ  எந்த வித  சம்பந்தமும்  இல்லாத  அஞ்சலி - நாயகன்  போர்சன்  முக்கால்  மணி  நேரம்  இருப்பது  அயற்சி . ஆனா  அதையும்  கட்  பண்ணிட்டா  படம்  ஒரு  மணி  நேரம்  தான்  ஓடும்


6  அப்பாவின்  மோசமான  நடத்தையால்  பெண்  சபலம்  உள்ள  கெட்டவரான  வினோத்க்கு  குற்ற  உணர்ச்சி  வருவதாகக்காட்டும்  இடம்  நம்ப  முடியவில்லை 


7  துப்பாக்கியில்  இருக்கும்  ஃபிங்கர்  பிரிண்ட்ஸ்  ரிப்போர்ட்  வருவதற்குள்  கேசை  முடி  கேசை  முடி என  பறக்கும்  மினிஸ்டர்  கேரக்டர்  எரிச்சல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  எதுவும்  இல்லை , க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு  ஸ்பானிஸ்  படத்தின்  தழுவல்  என  சிலரும் , ஒரு  கொரியன்  படத்தின்  ஒன்  லைன்  எடுத்து  டெவலப் பண்ணி  இருக்கிரார்கள்   என  சிலரும்  சொல்கிறார்கள். ஆனால்  படமாக்கப்பட்ட  விதத்தில்  பார்க்கத்தகுந்த  ஒரு  நல்ல  ஸ்லோ  பர்ன்  த்ரில்லர் தான்  இது . ரேட்டிங்  2.75 / 5 


Iratta
Iratta.jpg
Film poster
Malayalamഇരട്ട
Directed byRohit M. G. Krishnan
Written byRohit M. G. Krishnan
Produced byPrassanth Kumar Chandran
Joju George
Martin Prakkat
Sijo Vadakkan
StarringJoju George
Anjali
Arya Salim
Srikant Murali
CinematographyVijay
Edited byManu Antony
Music byJakes Bejoy
Production
companies
Appu Pathu Pappu Production House
Martin Prakkat Films
Release date
  • 3 February 2023
CountryIndia
LanguageMalayalam

Tuesday, March 07, 2023

WE HAVE A GHOST (2023)-ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் காமெடி டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்


2017ஆம்  ஆண்டு  ஜியோஃப்  மானா  எழுதிய  ஏர்னெஸ்ட்  என்னும்  சிறுகதையை  வைத்து  திரைக்கதை  எழுதி  எடுக்கப்பட்ட  படம் தான்  இது . காமெடி யாக  ஆரம்பித்து கோஸ்ட்  த்ரில்லராக  மாறி  க்ரைம்  த்ரில்லராக  க்ளைமாக்ஸில்  ஒரு  ட்விஸ்ட்டோடு  முடியும் இதில்  அப்பா-மகள்  செண்ட்டிமெண்ட்  சீன் கூட  உண்டு 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  16  வயது  டீன்  ஏஜ்  பையன், இவனுக்கு  18  வயதில்  ஒரு  அண்ணனும், அம்மா, அப்பாவும்  இருக்கிறார்கள், நாயகனின்  அப்பா  புதுசாக  ஒரு  செகண்ட்  ஹேண்ட்  வீடு  பார்க்க  ஓப்பனிங்  ஷாட்டில்  வருகிறார். அந்த  வீட்டை  விலைக்கும்  வாங்கி  விடுகிறார்


 அந்த  வீட்டில்  ஒரு  பேய்  இருப்பதை  நாயகன்    கண்டு  பிடிக்கிறான். அந்தப்பேய்  அவனை  பயமுறுத்துகிறது , ஆனால்  நாயகன்  பயப்படாமல்  அந்தப்பேயை  செல்  ஃபோனில்  வீடியோ  எடுத்து  யூ  ட்யூப்பில்  அப்டேட்டி  விடுகிறான். அந்த  வீடியோ  வைரல்  ஆகி  செம  ஹிட்  ஆகி டாக்  ஆஃப்  த ட் டவுன்  ஆகி விடுகிறது


 அடுத்து  ஒரு  சம்பவம் , நாயகனின்  அப்பா  இந்த  விஷயம்  அம்மாவுக்குத்தெரிய  வேண்டாம், தெரிந்தால்  பயப்படுவாள்  எனக்கூறிக்கொண்டு  இருக்கும்போதே  நாயகனின்  அம்மா  அந்தப்பேயை  நேரில்  பார்த்து  அலறி  அடித்து  ஓடுகிறாள் , அந்த  சம்பவத்தை லைவாக  வீடியோ  எடுத்து  அதை  யூ  ட்யூப்பில்  நாயகனின்  அண்ணன்  அப்ட்டேட்ட்  அது  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆகி  நாயகனும், நாயகனின்  குடும்பமும்  சோஷியல்  மீடியாவில்  செம  ஹிட்  ஆகிறார்கள்


 நாயகன்  அந்தப்பேயிடம்  நண்பனாகப்பழகுகிறான், அந்தப்பேயால்  பேச  முடியாது , ஏதோ  ஒரு  காரணத்தால்தான்  அந்தப்பேய்  இங்கேயே  சுற்றுகிறது , அந்தக்காரணத்தைக்கண்டு  பிடிக்க  வேண்டும் என  நாயகன்  நினைக்கிறான்


 இப்போது  போலீஸ்  நாயகனை  , பேயை  தேடி  வருகிறார்கள் . இருவரும்  எஸ்கேப்  ஆகி  போகும்போது  துரத்திப்பிடித்து  பேயை  கைது  செய்து  விடுகிறார்கள் 


அந்தப்பேய்  தப்பித்ததா? தன்னைக்கொலை  செய்த  ஆளை  கண்டு  பிடித்ததா? நாயகனும், பேயும்  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


எர்னெஸ்ட் எனும்  பேயாக  டேவிட்  ஹார்பர்  படம்  முழுக்க  வசனம்  எதுவும்  பேசாமல்  அருமையாக  நடித்து  இருக்கிறார். நாயகனுடன்  அவருக்கு  உண்டாகும்  நட்பு  மிகச்சிறப்பு . நீண்ட  இடைவெளிக்குப்பின்  மகளை  சந்திக்கும்  காட்சியில்  உணர்ச்சி  பொங்கும்  நடிப்பு 


நாயகன்  ஆக  ஜாஹி  வின்சன் டீன்  ஏஜ்  பையனுக்கே  உரிய  துறுதுறுப்புடன்  நடித்திருக்கிறார். தன்   கேர்ள்  ஃபிரண்ட்  உடன்  சேர்ந்து  துப்பறியும்  காட்சிகள்  அருமை .ஒரே  ஹோட்டலில்  ஒரே  ரூமில்  ஒரே  படுக்கையில்  படுத்ஹ்டுத்தூங்க  நேரிடும்போதும்  கண்ணியம்  காக்கும்  விதம்  ரசிக்க  வைத்தது.  நாயகனை   கேர்ள்  ஃபிரண்டுடன்  தங்க  பெஸ்ட்  ஆஃப்  லக்  என  சொல்லாமல்  சொல்லும் பேயின்  குறும்புத்தனம்  செம  காமெடி 


நாயகனின்  அம்மா, அப்பா, அண்ணனாக  வந்தவர்கள்  போலீஸ்  ஆஃபீசராக  வரும் லேடி  அனைவரும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


வில்லனின்    நடிப்பும்  மிரட்டல் ., ஆனால்  கொலைக்கான  காரணம்  நம்பும்படி  இல்லை 


திரைக்கதை , இயக்கம்  கிறிஸ்டோபர்  லண்டன். 127  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடி டி  தளத்தில்  கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1   அலாவுதீனும்  அற்புத விளக்கும்  (1957),பட்டிணத்தில்  பூதம் (1967)  THE BRASS BOTTLE (1964) மை டியர் குட்டிச்சாத்தான் ( !984)  ஆகிய  படங்களின்  கான்செப்ட்  தான், அதன்  அப்டேட்டட்  வெர்சன், ஆனால்  கு்ழந்தைகள்  ரசிக்கும்படி  படமாக்கிய  விதம் 


2 உலக  திரைப்பட  வரலாற்றிலேயே  முதல்  முறையாக  ஒரு  ஆவியை  போலீஸ்  கைது  செய்யும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1   கமான், யா.  நாம  புது  வாழ்க்கையை  ஆரம்பிபோம்


  டாடி , இது வரை  நாம  எத்தனை தடவை  புது  வாழ்க்கையை  ஆரம்பிச்சு  இருப்போம்? கணக்கே இல்லை 


2 மனிதர்களால்  பேயைத்தொட  முடியாது  , ஆனா  பேய்  நினைச்சா மனுசனைத்தொடலாம், இது  புதுசா  இருக்கே? அப்போ  நீங்க வெச்சதுதான்  சட்டம் ? 


3   நான  ஆர்டர்  பண்ற  மாதிரி  பேசுனாதான்  ஆவிங்க  நம்ம  சொல்  பேச்சு  கேட்கும்னு  விக்கிபீடியால  போட்டிருக்கு 


ஓ  அப்படியா?  ஏ  ஆவியே?  ஒழுங்கா  என்  கண்  முன்னால  வா


4  பேய்  இருக்கும் வீட்டை  எங்க தலைல  கட்டீட்டீங்க, இதுக்காக  எங்க  லாயருக்கு  நீங்க  பதில்  சொல்லியே  ஆகனும்

‘ அம்மா, நமக்கு  லாயர்  எல்லாம் இருக்காங்க்ளா?


 சும்மா , மிரட்றதுக்காக  சொல்றதுதான்


5   நீ  ரொம்ப  வித்தியாசமானவன்,


எப்டி  சொல்றே?

 சட்டத்தை  மீறி  நிறைய  விஷயம்  பண்றியே? 


6   என்  வாழ்க்கையின்  ஒவ்வொரு  விஷயத்தையும்  எங்கப்பா  பிளான்  பண்ணி  வெச்சிருக்காரு , இதுவே  எனக்குப்பிடிக்கலை 


7  நான்  எப்பவும், எதுலயும்  ஜெயிச்சுட்டே  இருக்கனும்னு தான்  எதிர்பார்க்கிறார், இதுவே  தப்பில்லையா?


8  வாழ்க்கைல  எப்பவும்  நாம  நினைப்பது  எல்லாமே  நடக்காது 


9  நீ  என்னை  விட  நல்லவனா  இருக்கே , 45  வயசுல  என்  கிட்டே  இல்லாத  மெச்சூரிட்டு  16  வயசுல  உன்  கிட்டெ  இருக்கு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அம்மா  போலீஸ்  விசாரணையில்  இருக்கும்போது  கண்ட்ரோல்  ரூம்ல  இருந்து  பாத்ரூம்  போறேன்னு  சொல்லி  அங்கே  போகாம  ஒரு போலீஸ்  ஆஃபீசர்  கஃபியை  தட்டி விட்டு  கவனத்தை  திசை  திருப்பி  அவரோட  ஃபோனை  எடுத்து  மறைவிடம்  வந்து  மகனுக்கு  ஃபோன்  பண்றார். இது  எப்படி  சாத்தியம் ? போலீஸ்  கண்ட்ரோல்  ரூம்ல  சிசிடி வி கேமரா  இருக்கும், அவரோட  ஃபோன்   ஜிபிஎஸ்  மூலமா  யாருக்கு  ஃபோன்  பண்றார், எந்த  ஏரியாவில் மகன்  இருக்கான்னு  தெரிஞ்சுக்க  வாய்ப்பு  இருக்கே? 


2  நாயகியின்  அம்மா  ஃபோனில்  பேசுவதை  பார்த்து  விட்ட  அந்த  லேடி  ஆஃபீசர்  அவரது  ஃபோனை  பிட்ங்கி  ரிசீவ்டு  கால்  செக்  செய்தாலே  லொகேஷன்  கண்டு பிடித்து  நாயகனை  மடக்கி  விடலாம், அதை  விட்டு  விட்டு  நாயகியின்  அம்மாவை  விசாரணை  பண்ணி  டைம்  வேஸ்ட்   பண்ணிட்டு  இருக்கார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  ஒரே  ஒரு  லிப்  கிஸ்  சீன்  மட்டும்  உள்ளது, மற்றபடி  குடும்பத்துடன், குழந்தைகளுடன்  காண வேண்டிய  குதூகலமான   படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்காமல்  காமெடி , ஆக்சன் , த்ரில்லிங்  என  பரபரப்பாக  நகரும்  திரைக்கதை  குழந்தைகளுக்கு  மிகவும்  பிடிக்கும் ., ரேட்டிங்  3 / 5 



We Have a Ghost
We have a ghost poster.png
Official release poster
Directed byChristopher Landon
Screenplay byChristopher Landon
Based on"Ernest"[1]
by Geoff Manaugh
Produced by
  • Marty Bowen
  • Dan Halsted
Starring
CinematographyMarc Spicer
Edited byBen Baudhuin
Music byBear McCreary[2]
Production
companies
Distributed byNetflix
Release date
  • February 24, 2023
Running time
127 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$75.3 million[3]