Wednesday, February 25, 2015

சண்டமாருதம் - திரை விமர்சனம்


குற்றப் பின்னணி கொண்ட கொடூர வில்லன், குடும்பப் பின்னணி கொண்ட சாகச நாயகன். இவர்கள் இருவருக்கும் இடையே போராட்டம். இடை யிடையே வில்லன் கை ஓங்கினாலும் இறுதியில் வெல்வது நாயகனே. சரத்குமார் கதை எழுதி, க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி, ஏ.வெங்கடேஷ் இயக்கி யிருக்கும் இந்தப் படமும் அதே பழங்கஞ்சிதான்.
கல்வித் தந்தை என்ற போர்வையில் நிழல் உலகில் சர்வ வல்லமை படைத்தவராக கும்பகோணத்தில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறார் வில்லன் சர்வேஸ்வரன் (சரத் குமார்). தன்னை எதிர்ப்பவர்களை அதிநவீன திரவ வெடிபொருள் மூலம் உருத் தெரியாமல் எரித்துச் சாம்பலாக்குகிறார் (க்ரைம் கதை மன்னனின் ஐடியா?). அந்த திரவ வெடிபொருளைக் கொண்டு நாடு முழுக்க 101 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறார். சர்வேஸ்வரனின் இந்தத் திட்டத்தை முறியடிக்கக் கிளம்புகிறார் ரகசிய போலீஸாக இருக்கும் நாயகன் சூர்யா (சரத்குமார்).
வில்லன், நாயகன் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் ஏகப் பட்ட உயிரிழப்புகளைக் கடந்து இறுதியில் வில்லன் எப்படி வீழ்த்தப்பட்டார் என்பதுதான் சண்டமாருதம்.
ஹரி பாணியில் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இதற் காக ஐந்து நிமிடத்துக்கு ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக் கிறார்கள். படமும் வேகமாகத்தான் நகருகிறது. ஆனால் எந்த திருப்பத்திலும் புதுமையும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. காட்சிகள், திருப்பங்கள் எல் லாமே ஏற்கெனவே பலப்பல படங்களில் கையாளப்பட்ட சரக்குகள். குறிப்பாக, திரவ வெடிகுண்டால் மனிதர்கள் கொல்லப்படும் காட்சிகள் தமி ழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பல ஹாலிவுட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பழக்கப் பட்டவை.
வில்லன் சர்வேஸ்வரன் வீட் டுக்குத் தண்ணீர் கேன் போடுபவராகச் செல்கிறார் ரகசிய போலீஸ் சரத்குமார். தண்ணீர் கேன் விநியோகிக்கும் சூர்யாவும் சகாக்களும் முறுக்கேறிய உடலுடன் வாட்டசாட்டமாக இருப்பது வில்லனுக்கு துளிகூட சந்தேகத்தை எழுப்பவில்லை. எதிராளி பதுங்கியிருக்கும் இடத்தை ஜிபிஆர்எஸ் உதவி யுடன் வில்லனும் நாயகனும் அறிந்துகொள்கிறார்களாம். பல சினிமாக்களில் பார்த்துப் பார்த்து போரடித்துவிட்டது. நாயகனின் குடும்பத்தைப் பிடித்துவைத்துக்கொண்டு மிரட்டும் கிளைமாக்ஸ் அரை நூற்றாண்டுக் காலப் பழசு.
க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் புண்ணியத்தில் அறிவியல் பூர்வமான கொலை உத்தி திரைக்கதையில் பயன்படுத்தப் படுகிறது. அதைத் தவிர வேறு எதிலும் எழுத்தாளரின் கைவண்ணம் தெரியவில்லை.
நாயகன் - வில்லன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் சரத்குமார் ஏற்று நடித்திருக்கிறார். நாயகனைக் காட்டிலும் வில்லன் வேடத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, கத்தி யைத் தூக்குவதைக் குறைத்துக் கொண்டு குரலால் கத்திக் கத்தி ரசிகர்களை பயமுறுத்துகிறார். என்றாலும் வில்லன் சரத்குமாரை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மீரா நந்தன், ஓவியா என இரண்டு கதாநாயகிகள். மீராநந்தன் வெறும் கருவேப்பிலை. இளம் சரத்தின் ஜோடியாக வரும் ஓவியா, கரம் மசாலா சேர்த்த கருவேப்பிலை. வெங்கடேஷ் படங்களில் நாயகிக்கு என்ன வேலை உண்டோ, அதைச் செவ்வனே செய்திருக்கிறார்.
கதாநாயகியின் தந்தை தம்பி ராமய்யாவை நகைச்சுவை என்ற பெயரில் நாயகன் துன்புறுத் தும் விதம் ரசிக்கத்தக்கதாக இல்லை.
‘செய்தி'யே சொல்லாமல் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம் தரவேண்டும் என்று முயற்சிப்பது தவறல்ல. நல்ல சக்தி தீய சக்தி போராட் டம் என்னும் ஆதி காலத்துக் கதையை எடுப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் காட்சிகள் சற்றேனும் புதுமையாகவோ, புதிதாகவோ இருக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் ‘சண்டமாருதம்’ வேகம் இல்லை.


thanx - the hindu

எமிஜாக்சன் FUTURE PM?

1  பாரதிய ஜனதாவில் இணைகிறார் நடிகை ஜெயப்பிரதா! # என்னது? பிஜேபில ஏகப்பட்ட கொலுசொலி , சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கு ?



================



2 விரைவில் நான் கை வைத்தால் இறந்தவன் உயிருடன்எழுவான்-உமாசங்கர்#அப்போ உயிரோட  இருக்கறவன்  எல்லாம்  செத்துடுவானா? என்னய்யா  கலர் கலரா ரீல்?




====================




ஏசுவோடு இரண்டுமுறை பேசியுள்ளேன் - உமாசங்கர்# நீங்க  20 டைம் கூட  பேசி  இருக்கலாம். அவர் உங்க கிட்டே  ஒரு டைமாவது  பேசுனாரா?




=================





ஒரே மாதிரி பாவாடை - தாவணியில் ‘கிராமத்து பெண்ணாக நடித்து அலுத்து போய்விட்டது’- லட்சுமி மேனன# தாவணியை கட் பண்ணுங்க.ஹிட்ஸ் அள்ளுமுங்க்




=================




5 எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ தேவகவுடா.# எங்க தானைத்தலைவரை வம்புக்கு இழுக்கற மாதிரி இருக்கே?அட தேவுடா




=================




6 எனக்கும் அக்ஷய்குமாருக்கும் இருந்த காதல்... முறிந்தது –ரவீனாவின் வாக்குமூலம் #,ரவீனா பொய்க்காதலை நம்பிப்போகாதே வீணா!




================




7 நான் உங்களுக்கு அதிர்ஷ்டசாலி என்றால் நீங்கள் ஏன் துரதிஷ்டசாலிகளுக்கு வாக்களிக்க வேண்டும் மோடி கேள்வி..#,ஏன்னா நீங்க இங்கே தங்கறதே இல்ல




===============



8 பிரதமர் மோடி மே மாதம் சீன பயணம் மேற்கொள்வார்- சுஷ்மா சுவராஜ்..# சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் ரேஞ்ச்க்கு ரவுண்டிங்க்லயே இருக்காரே?



============

9 இந்தியாவில் 2226 புலிகள் உள்ளன - செய்தி #2227 வதா பிரம்மாண்டமான.100 கோடி புலி 1 உருவாகிட்டு இருக்கு


=============



10 செத்துபோனவர்களையும் நான் எழுப்புவேன்- உமாசங்கர் # தூங்குனவங்களை எழுப்புனாலே எந்திரிக்கறதில்லை




==============




11



=============



12 இசை படத்தில் 7 நிமிட காட்சிகள் குறைப்பு # அடடா.வில்லி ஹீரோவை ரேப் பண்ற சீன் கட்டா? நல்லவேளை நான் பாத்துட்டேன்




============

13 இந்தியில் இணைகிறார்கள் மணிரத்னம் - தனுஷ்#  டைட்டில்  “ நாட் ஓக்கே மணி ”? ஆடி  போய்   ஆவணி  வந்தா  டாப்பா வருவீங்க



=================




14   எனது பள்ளி தோழிகளுக்கு நான் ஒரு நடிகை என்பதே தெரியாது -லட்சுமி மேனன் #  வாட்சப் ல இருந்திருந்தா  தெரிஞ்சிருக்கும்




===============

15 சரக்கு வாங்குவதுபோல் நடித்ததால் நயன்தாரா உருவபொம்மை எரிப்பு # சரி விடுங்க.சரக்கு விக்கற கேரக்டர் ல நடிச்சு சமன் செய்யச்சொல்லிடுவோம்

==================


16 அரை ஆடை காந்தி எங்கே, டெய்லி 5 டிரஸ் போடும் மோடி எங்கே.. குஷ்பு # அரைகுறைடிரஸ் பண்ணாதான் தலைவர்னா எமிஜாக்சன் ,பூனம்பாண்டே தான் pm ஆகனும்


==================


17 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை! சட்டம் கொண்டுவருகிறது மத்திய அரசு # தமிழா! உஷாரா செக்/டிடி யா வாங்கிக்கோ


====================


18 கருணாநிதி தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்...இலங்கை அமைச்சர்// 2 தடவை 58 கிராஸ் ஆனாலும் ரிட்டையரே ஆக மாட்டாரு- ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்


=================


19 தமிழக காங்கிரசின் கோஷ்டி கலாட்டா …. ராஜினாமா முடிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் # வாழ்க்கைலயே முதல் முறையா.நல்ல முடிவு


===================

20 ரேஷன் கடையில் பொருள் வாங்குவோர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டம் # கடையை மத்தியானமே மூடிடுவாங்ளோ


====================

Tuesday, February 24, 2015

ஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ?ஏன்? எதற்கு? எப்படி?

1  நான்  நேற்று என் கனவில்  முருகப்பெருமானோடு  பேசிக்கொண்டிருந்தேன், வள்ளி  வந்து  கூட்டிட்டுப்போய்டுச்சு. ஓம் முருகா!


===============

கவுதம் பேட்டியை வெச்சுப்பார்த்தா 2008-ல் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படக்கதை போல் தெரியுது .பார்ப்போம் # எ அ


==============


3 வாழ்வின் கடைசி நாள்  வரை  மோதிரமே அணியாத   மோதிர விரல்கள்  ஏழைக்கு சொந்தமானவை


===================



4  கொஞ்சம்  ஏமாந்தா   உமாசங்கர் ஐ ஏ எஸ்  நம்ம  கிட்டயே  “ ஐ ஆம் ஏசுன்னு  சொல்லிடுவாரு  போல 


=================


5  சமுதாயத்தை  ஏமாற்ற “ என்னிடம் அபூர்வ சக்தி உண்டு”னு சொல்லக்கூடாது
அவரிடம்  அபூர்வ சக்தி இருக்காம்னு ஆளுங்களை விட்டு  சொல்லவைக்கனும்


===================

6  176   என்பது   ஓடும்  நிமிடங்களாகவும்  இருக்கலாம்,ஓடும்  நாட்களாகவும் இருக்கலாம் #  குறியீடு. எ அ


=====================


7  ரிசல்ட்  எப்படி   இருக்குமோ?ன்னு   இவங்க தானே  பதட்டமா  இருக்கனும்? இவங்க அசால்ட்டா இருக்காங்க. அவங்க தான் பதட்டமா  இருக்காங்க ;-)


===================


அடேங்கப்பா, ஒரு பொண்ணு  கூந்தலை  நாலாப்பிரிச்சு முன்னால 2 ஜடை  பின்னால 2 ஜடை விட்டிருக்கு, காங்க்  கோஷ்டியை விட   ஜாஸ்தியா  இருக்கும்போல



==================

9  கல்யாணம்  ஆகிட்டா  அரசனும்  ஆண்டி ஆவான், கல்யாணத்துக்குப்பின் மகாராணியும்  ஆண்ட்டி  ஆவார்


===============


10  கல்யாணமுகூர்த்தம் அதிகம்  உள்ள  வைகாசி , ஆவணி , மாசி  மாசத்தில்  நீ  ஆஃபீஸ்  கேம்ப்  அடிச்சா  ஏதோ ஒரு மண்டபத்தில்  ஓசி ல சாப்பிடலாம்


=================

11  விஜய்   டி வி  ல  மொக்கை போடறதுக்கு சம்பளம்  கொட்டிக்கொடுக்கறாங்க  போல, நாமெல்லாம்  அங்கே  போனா கோடீஸ்வரன் ஆகிடலாம்


======================


12  அதிகாலை யில் நீ எழுந்து விட்டால் ஏசுவை சந்திக்க முடியாவிட்டாலும் சூரியபகவானை நிச்சயம் சந்திப்பாய்!


===============\


13 கலைஞர் கனவில் அண்ணா வந்தார்.
ஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார். உமாசங்கர் கனவில் ஏசு வந்தார் அன்பே! என் கனவில் எப்போதும் நீ


====================


14 காமெடியில் கலக்குவதில் ரோபோசங்கரை மிஞ்சினார் உமாசங்கர்.கதாநாயகி சிலாகிப்பில் தபு சங்கரை விஞ்சினார் ஐ.ஷங்கர்


=================


15 ஆபீஸ் ல ஒரு விஜய் ரசிகை


"டூரிங் டாக்கீஸ்" எப்டி? பேமிலியோட பாக்கலாமா?


பேமானியோட வேணா போய் பார்க்கலாம்


=================

16 படம் தேவலை ,தப்பிச்சிடுச்சு ,சுமாரா இருக்கு ,அப்டி யாரும் விளம்பரப்படுத்தறதே இல்லை.பிரம்மாண்ட வெற்றி ! தெறி வெற்றி தான்


===============


17 மொபைலில் தமிழில் ட்வீட்ட /டைப்ப தமிழ்விசய் டவுன்லோடு பண்ணினாக்கூட நீங்க விஜய் ரசிகரா?அவங்க மட்டும்தான் பண்ணனும்பாங்ளோ?


==============


18 விமலா கலர்புல் டிபியிலிருந்து ஒயிட் &பிளாக் டி பி க்கு மாறியது அதிர்ச்சி அளிக்கிறது - ஜெர்க் ஜெகன் ,அடிக்கடி அதிர்ச்சி ஆவோர் சங்கம்


===============



19 உன் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டுக்கொண்டால் நீ செய்த எல்லா அயோக்கியத்தனமும் பூசி மெழுகப்படும்


==============

20 மாடர்ன் பிகருங்க ஏக்கராக்கணக்கில் நெற்றியில் இடம் இருந்தும் 1 செமீ குங்குமம் வைக்க இடம் ஒதுக்குவதில்லை


=====================

புகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உள் குத்து உரை

அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் துவக்க விழாவில் இளையராஜா | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் துவக்க விழாவில் இளையராஜா | படம்: எல்.ஸ்ரீனிவாசன்
புகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் என்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில், அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தின் தொடங்க விழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:
"'தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியார் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி என்று தோன்றும். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற கூறியிருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றும் சொல்லிவிட்டார். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு அங்கு சேர்ப்பீர்' என்று பாடியிருக்க வேண்டும். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போட வேண்டும் என்று தான் பாடியிருக்க வேண்டும். ஜகத்தினை எதற்கு அழிக்க வேண்டும். இயற்கைத் தான் விழைத்துக் கொட்டுகிறதே.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் உணவு அழிப்போம் என்ற திட்டம் பாராட்டப்படக்குடிய திட்டம். நான் செய்கின்ற விஷயங்களை சொல்வதற்காக இங்கு வரவில்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து செய்யும் விஷயம் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
எல்லோரும் பசியோடு தான் வந்தோம். பட்டினியோடு வரவில்லை கலைப்பசியோடு வந்தோம். என்னோடு இருந்த நண்பர்கள் எல்லாம் என்னை திட்டுவார்கள். என்னடா இவன் சிரிச்சுக்கிட்டே வர்றான் என்று எனது நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். பசி எங்களுக்கு துன்பமே இல்லை. சந்தோஷமாக இருந்தோம்.
அந்த சந்தோஷம் இப்போது பெயர் பெற்றவுடன் இருக்கிறதா என்றால் இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் எல்லாம் அதே குணங்களோடு இறந்துப் போய்விட்டார்கள். அவர்கள் இறந்து போவதற்கு காரணமாக இருந்தது இந்த பெயரும், புகழும், பணமும். மனித மனத்தைக் கொல்லக்கூடிய இவை அனைத்தும் நமக்கு தேவையா?
தயாரிப்பாளர்கள் படம் மட்டும் தயாரிக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கதைகள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் தயாரிக்கிறீர்கள். இத்தனையும் தயாரித்து ஒற்றுமையில்லாமல் இருந்த தயாரிப்பாளர் சங்கம், இப்போது இவ்வளாவு ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' என்று மட்டும் பாடவில்லை. 'அம்மான்னா சும்மா இல்லைடா' என்றும் பாடியிருக்கிறேன். அம்மாவின் இந்த உணவுத் திட்டத்தை என்னை தொடங்கி வைக்கச் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்னதானம் உலகமெங்கும் பரவட்டும். பசிக்கு உணவளிக்கும் உலகத்தை உருவாக்குவோம்" என்று இளையராஜா பேசினார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு பேசிய போது, "1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவுக்கு வடஇந்தியா, தென் இந்தியா மிரளும் வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்துவது என்று சபதம் ஏற்கிறேன்" என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், பெப்சி அமைப்பினர் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.


thanx - the hindu

ஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்

சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது பேர்டு மேன்
சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது பேர்டு மேன்
ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...
* சிறந்த படம் - பேர்டுமேன்
* சிறந்த நடிகை - ஜுலியான் மூர் (ஸ்டில் ஆலிஸ்)
* சிறந்த நடிகர் - எடி ரெட்மெய்ன் (தி தியரி ஆஃப் எவ்ரிதிங்)
* சிறந்த இயக்குநர் - அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ (பேர்டுமேன்)
* சிறந்த தழுவல் திரைக்கதை - தி இமிடேஷன் கேம் (கிராஹாம் மூர்)
* சிறந்த திரைக்கதை - பேர்டுமேன் ( அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ, நிகோலஸ் ஜியோபோன், அலெக்ஸாண்டர் டினேலாரிஸ், அர்மாண்டோ போ)
* சிறந்த இசை - அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் (தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த பாடல் - 'செல்மா' படத்தில் இடம்பெற்ற க்ளோரி பாடல் (ஜான் ஸ்டீபன்ஸ், லோன்னி லின்)
* சிறந்த ஆவணப்படம் - சிட்டிசன் ஃபோர் (லாரா போய்ட்ரஸ், மத்தில்டே பொனேஃபாய், டர்க் விலுட்ஸ்கி)
* சிறந்த எடிட்டிங் - டாம் க்ராஸ் (விப்லாஷ் | Whiplash)
சிறந்த ஒளிப்பதிவு - இம்மானுவெல் லூபெஸ்கி (பேர்டுமேன் | Birdman)
சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் - ஆடம் ஸ்டாக்ஹவுஸன், அன்னா பின்னாக் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - பிக் ஹீரோ 6 | Big Hero 6
சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஃபீஸ்ட் | Feast (பாட்ரிக் ஆஸ்பர்ன், கிறிஸ்டினா ரீட்)
சிறந்த விஷுவல் எஃபக்ட் - பால் ஜே ஃபிராங்க்ளின், ஆண்ட்ரியூ லாக்லே, இயன் ஹன்டர், ஸ்காட் ஃபிஷர் (இன்டர்ஸ்டெல்லர் | Interstellar)
* சிறந்த உறுதுணை நடிகை - பாட்ரிசியா (பாய்ஹுட் | Boyhood)
* சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஆலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் (அமெரிக்கன் ஸ்னைப்பர் - American Sniper)
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி (விப்லாஷ் | Whiplash)
சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் - கிரைஸிஸ் ஹாட்லைன்: விடேரன்ஸ் பிரஸ் 1 | Crisis Hotline: Veterans Press 1
(டானா ஹெயின்ஸ் பெர்ரி, ஹெலன் கூஸர்பெர்க் கென்ட்)
சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி போன் கால் | The Phone Call (மேட் கிரிக்பி, ஜேம்ஸ் லூகாஸ்)
* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - ஈடா | IDA (போலந்து)
* சிறந்த ஒப்பனை - மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் (தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
சிறந்த ஆடை வடிவமைப்பு - மெலினா கெனானிரோ (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
சிறந்த உறுதுணை நடிகர் - ஜே.கே.சிம்மன்ஸ் (விப்லாஷ் | Whiplash)


thanx = the hindu