Wednesday, March 02, 2011

லேட்டஸ்ட் குமுதம் VS கிரேட்டஸ்ட் கேப்டன் பேட்டி - காமெடி கும்மி

http://www.amazingonly.com/wp-content/uploads/2010/09/Vijayakanth_Family_Photos_00.jpg 
9.3.2010 தேதி இட்டு இன்று வெளியான (2.3.2011)குமுதம் வார இதழில் கறுப்பு எம் ஜி ஆரும்,ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்த நாளைய முதல்வரும் ஆன கேப்டன் விஜய்காந்த் பேட்டி வெளியானது. பேட்டியின் நீளம் கருதி நானே எடிட்டர் ஆகி அவரது பதிலை சுருக்கி போட்டு ,அவரது மனசாட்சி என்ன பதில் சொல்லி இருக்கும் என கற்பனை கலாட்டா காமெடிகளையும் சேர்த்துள்ளேன். பதிவுலகில் உள்ள அந்த 14 விஜயகாந்த் ரசிகர்களும் மன்னிக்க.

1.குமுதம் -  அ.தி.மு.க +தே.மு.தி.க  கூட்டணி உருவாக ரொம்ப லேட் போல..?

கேப்டன் - பேச்சுவார்த்தையில் இழுபறி...எலக்‌ஷனுக்கு இன்னும் டைம் இருக்கே..இந்த காரணங்கள்தான்..

மனசாட்சி - அந்தம்மா கிட்டே அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு..போயஸ் தோட்டம் போனா 2 நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க.  சொல்லி 2 நாள் கேட் அருகிலேயே அமர்ந்திருந்தும் ,2 நாள் கழிச்சு போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்கன்னு விரட்டி விடறாங்க...ம் ம்.


2.குமுதம் -  ஆட்சியில் பங்கு வேணாம்னு சொல்லீட்டீங்களாமே.. ஏன்?

கேப்டன் - தி.மு.கவை ஆட்சியை விட்டு அகற்றனும்ங்கறதுதான் என் லட்சியம்.அதனால சீட் எண்ணிக்கை பிரச்சனை இல்லை.

மனசாட்சி - என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..கடைசிவரை என்னை அவமானப்படுத்தாம விட்டாலே போதும்.. ஹூம் பார்ப்போம்.. அவரோட சரித்திரத்துல அவர் அவமானப்படுத்தாத கூட்டணிக்கட்சித்தலைவரே கிடையாது.. ஆனானப்பட்ட கவர்னரையே அவமானப்படுத்தீட்டாரு...
http://www.manakkudiyan.com/wp-content/uploads/2009/09/vijayakanth-seril-brindo-1.jpg
3. குமுதம் - இப்போ உங்க கூட்டணில 14 கட்சிகள் இருக்கு..தொகுதிப்பங்கீடு,கொள்கை ரீதியா பிரச்சனை வராதா?

கேப்டன் -ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.

மனசாட்சி - எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?எப்படியாவது 15 சீட்டாவது ஜெயிச்சா போதும். ஓட்டு 12% ல இருந்து டபுள் ஆகி 24 % வாங்குனா இப்போதைக்கு போதும்.அப்புறம் கொள்கை ரீதியான பிரச்சனையா? ஹா ஹா உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.. இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா  என்ன?
4. குமுதம் - ஜெ- கேப்டன் சந்திப்பு எப்போது நடக்கும்?

கேப்டன் -விரைவில்...  அதற்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

மனசாட்சி - யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு.. 
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/02/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg
5.குமுதம் - காங்கிரஸ்ஸோடு கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்துனதா சொல்லப்படுகிறதே..

கேப்டன் -அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... நாங்க ஏர்போர்ட் பக்கம் போயே 6 மாசம் ஆகுது.. அப்புறம் எங்கேடெல்லி போறது?

மனசாட்சி - எல்லாம் நடத்துனோம்.ஆனா அவங்க எங்களை விட விளைஞ்ச ஆளா இருக்காங்க. காங்கிரஸ் தான் சி எம் வேட்பாளரை நிறுத்தும், நீங்க டெபுடி சி எம் அப்படின்னாங்க..அவங்க ஆதரவுல டெபுடி சி எம் ஆகறதுக்கு அம்மா கிட்டே எடுபுடியா இருக்கறதே  பெட்டர்...


6.குமுதம் - எந்தப்பிரச்ச்னையை முன் வைத்து உங்கள் கூட்டணிப்பிரச்சாரம் அமையும்?

கேப்டன் -தமிழ்நாட்ல பிரச்சனைக்கா பஞ்சம்? திரும்புன பக்கம் எல்லாம் பிரச்சனைதான்.உலகமாகா ஊழல் அலைக்கற்றை இருக்க பயம் ஏன்?

மனசாட்சி - ஹூம்.. பிரச்சனையே எங்க கூட்டணிதான். மேடைல அம்மா மட்டும் உக்காந்திருக்கும். நான் நின்னுட்டே இருக்கனும்.பேசறதுக்குக்கூட அவர் கிட்டே அனுமதி கேட்கனும்.லியாகத் அலிகான் இருந்த வரை (கேப்டனின் ஆஸ்தான வசனகர்த்தா)என் சவுகர்யத்துக்குப்பேசி மக்களை கொலையா கொன்னெடுத்தேன்.ஹூம். 20 பக்கம் மனப்பாடம் பண்ணீட்டுப்போறேன்.. அட்லீஸ்ட் 4 வரியாவது பேச விட்டா பரவால்லை.

http://mmimages.mmnews.in/Articles/2009/Dec/834f07f4-0c1e-46aa-be95-4d56789d8f0a_S_secvpf.gif
7. குமுதம் - ஜெயலலிதா - விஜயகாந்த் இணைந்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்டா?

கேப்டன் -இல்லை..இரு தலைவர்கள் தனித்தனியே பிரச்சாரம் பண்றது புதுசில்லை..ஏற்கனவே எம் ஜி ஆர் -கலைஞர் ஒண்ணா இருந்தப்ப 2 பேரும் தனித்தனியேதான் பிரச்சாரம் பண்ணுனாங்க...அதே போல்...நாங்களும்..

மனசாட்சி - எனக்கும் ஆசைதான். ஆனா அதுல ஒரு ஈகோ பிரச்சனை வரும். கூடுன கூட்டம் எனக்காகத்தான் கூடுச்சுன்னு நான் சொல்வேன்.ஆர்ப்பரிக்கும் அலைகடலென திரண்ட கூட்டம் எனக்காக வந்தவைன்னு அவங்க சொல்வாங்க... எதுக்கு வம்பு...?

8. குமுதம்  -கடைசி நேரத்தில் தி. மு.கவுடன்  கூட கூட்டணிக்கு முயற்சி செஞ்சீங்களாமே...?

கேப்டன் -சே.. சே கற்பனை.. அதெல்லாம் உண்மை இல்லை.

மனசாட்சி - அதென்ன தி மு க கூட... அவ்வளவு இளப்பமா போச்சா?தனியா நின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைப்பிரிங்க ரூ 500 கோடி வாங்கிக்குங்கன்னு பேரம் பேசுனாங்க.. நான் அப்படியே கண்ணெல்லாம் சிவக்க பொங்கி எழுந்துட்டேன்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை பேரம் தான். இவங்க மட்டும் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி அசால்ட்டா அடிப்பாங்களாம். நமக்கு மட்டும் பிச்சைக்காரத்தனமா ரூ 500 கோடி மட்டும் தருவாங்களாம்.யார் கிட்டே....? நான் ஃபைனலா ரூ 10,000 கோடி கேட்டேன்.. அரண்டுட்டாங்க... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT3-H__ZGJgTy2QnRPzISYXnO4p3-VcDFZqIgMhubeu9Bq2uiKDBs9wC7UYaGMGq6uvdp-bBCmLO2Css5Q5pvYim5ToQ5iPpxOsLHEO7cJAERni5LkArVZQAWBuV-SR_OvHo8KvNK7jMc/s400/Ayiraththil_Oruvan.jpg
9. குமுதம் - நடிகர் விஜய் உங்கள் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாரா?அதற்கான வாய்ப்பு உண்டா?

கேப்டன் -தெரியாது.

மனசாட்சி - தே.மு.தி.க விற்காக முதல்ல அம்மா பிரச்சாரம் பண்ணுவாங்களா? அப்படிங்கறதே டவுட்.. இதுல இது வேறயா?

அம்மாவின் ராசி எண்ணான 9 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது தற்செயலானதா? திட்டமிட்டே போடப்பட்டதா?ன்னு தெரியல.

.தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.