Sunday, February 27, 2011

DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

http://www.traileraddict.com/content/summit-entertainment/drive_angry.jpg
தமிழனின் காதில் பூ சுற்றும் உரிமையும், திறமையும் நமது தன்மானத்தமிழர் டாக்டர் கலைஞருக்கும், புரட்டுத்தலைவி ஜெவுக்கும் மட்டும் தான் உண்டு என நாம் நம்பி வந்த இந்த கால கட்டத்தில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் காதில் பூவை மட்டும் அல்ல ,பூக்கூடையையே வைக்கும் கதை ,திரைக்கதையுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்  அதுவும் ரசிக்கும் விதத்தில்.

பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...

சரி .. படத்தோட கதை என்ன? தன்னோட பெண்ணை கொலை செய்த வில்லன் குரூப்பை பழி வாங்குற அப்பாவோட கதை தான்.. இதுல காதுல பூ மேட்டர் என்ன>ன்னு கேக்கறீங்களா? பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு.(ராம்தாஸ் திடீர்னு கலைஞர் கூட்டணிக்கே வந்த மாதிரி).பழி வாங்கும் படலத்தினை முடிச்சுட்டு பேத்தியை (மழலை) ஹீரோயின் கைல ஒப்படைச்சுட்டு  மறுபடி கார்ல (புஷ்பக விமானம்!!!) பேக் ட்டூ பெவிலியன் கணக்கா போயிடறாரு.


http://www.onlinemovieshut.com/wp-content/uploads/2010/08/Untitled-1.jpg
ஆனா இந்த சாதாரண கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளில்,ஒளிப்பதிவில் காட்டி இருக்கும் பிரம்மாண்டம் இதை ஒரு வெற்றிப்படமாக்கி இருக்கு.ஓப்பனிங்க் சீன்ல பார்ல வேலை செய்யற  2 ஃபிகர்கள்ட்ட பேசி தகவல் கறக்கற இடம் செம ஜாலி. அப்போ ஒரு லிப் டூ லிப் சீனும் உண்டு.

அஜால் குஜால் ரசிகர்களை திருப்திப்படுத்தற மாதிரி ஒரு கலக்கலான டாப்லெஸ் சீனும் உண்டு.. எஞ்ஜாய்.

அர்னால்டு ஸ்வார்ஜெனேகர் நடிச்ச த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தோட பாதிப்புகள் பல இடத்துல வர்றதை டைரக்டர் தவிர்த்திருக்கலாம்.ஹீரோ நிக்கோலஜ் கேஜ் நல்லா பண்ணி இருக்காரு.. ஜீன் கிளாடு வாண்டம் பண்ண வேண்டிய கேரக்டர்.

http://static.igossip.com/photos_2/january_2011/Drive_Angry_3D_amber_heard.jpg
ஹீரோயின் நல்ல ஃபிகர் தான். அவர் ஓனரிடம் சண்டை போட்டுட்டு உடனே ரிசைன் பண்ணுவது, காதலன், காதலி வரமாட்டாங்கற நம்பிக்கைல வேற ஒரு ஃபிகர் கூட அவ வீட்லயே ஜல்சா பண்ணிட்டு இருக்கறது, அவளைப்பார்த்ததும் சண்டை  போடறது எல்லாமே டிராமா மாதிரி இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கு. ( ஆமா.. சீன் இருக்குல்ல.. ரசிக்காம..?)

அதுக்குப்பிறகு ஹீரோயின் காதலனை கழட்டி விட்டுட்டு ஹீரோ கூட சேர்ந்து பயணப்படறது முதல் ஆக்‌ஷன் அதகளம்.படம் செம ஸ்பீடு... படம் லாஜிக் ஓட்டைகளையும் , திரைக்கதை சொதப்பல்களையும் மீறி விறுவிறுப்பா போகுதுன்னா டைரக்டரின் சாமார்த்தியமான டைரக்‌ஷன் தான்.

ஹீரோவின் பேத்தி ( 2 மாச அட்டுக்குழந்தை)யை நர பலி கொடுக்க வில்லன் குரூப் முயல்வது.. அதை ஹீரோ தடுப்பது எல்லாம் ராமநாராயனன் படம் மாதிரி இருக்கு.

கடைசில ஹீரோ வில்லனை கொன்னு பழி வாங்குன பிறகு வில்லனோட மண்டை ஓட்டுல ரத்தம் குடிக்கற சீன் ரொம்ப கொடூரம். எப்படி சென்சார்ல விட்டாங்களோ?

நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI  ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


http://collider.com/wp-content/uploads/Amber-Heard.jpg

வேகமாக போகும் படத்தில்  வந்த விவேகமான வசனங்கள்

1. ஹீரோ - இது என் பர்ஸ்.. உன் கைக்கு எப்படி வந்தது?


ஹீரோயின் - இது என்ன கேள்வி? திருடுனேன்.

2.   ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?

 ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....

ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?

3.  வண்டியை நிறுத்து.......

ஸாரி.. எனக்கு வேலை இருக்கு... 

டேய்.. இது போலீஸ் உத்தரவு...... துப்பாக்கிக்காவது மரியாதை குடுங்கடா...

4. அடக்கடவுளே......

ஆமா.. நிஜமாவே நான் கடவுள் தான். இன்றைய ட்ரெண்டுக்குத்தக்கபடி கெட்டப் மாத்திக்கிட்டேன்.

5.  அய்யய்யோ.. நான் பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கே...

கவலைப்படாதே.. உனக்கு 72 வயசு வரை ஆயுள் கெட்டி... உனக்குப்பக்கத்துல கவலை இல்லாம தெனாவெட்டா நிக்கறானே.. அவனுக்கு இன்னும் 4 நாள் தான் ஆயுள்....

6. மனைவிக்கு நல்ல கணவனா நடந்துக்காதவன் கூட தன்னோட மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா நடந்துக்கற அதிசயத்தை நாம தினம் பார்த்துட்டுதான் இருக்கோம்.

7. நமக்குப்பிரியமானவங்களுக்கு நடக்கர கொடுமையை நாம நேர்ல பார்த்துடா அந்த காட்சி காலாகாலத்துக்கும் நம்ம மனக்கண்ல வந்துட்டு வந்துட்டு போறதை தடுக்க முடியாது...

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல 3டி எஃப்ஃபக்ட் இல்லாம பார்த்தேன். ஆனா போஸ்டர்ல 3 டி அப்படின்னு போட்டிருக்கு. ஒரு வேளை சென்னைல அப்படி இருக்கலாம்.ஆக்‌ஷன் பட பிரியர்கள், ஒரு சீன் இருந்தாலும் அந்தப்படத்தை மிஸ் பண்ணிடக்கூடாது என்ற லட்சியம் (!!!??) உள்ளவர்கள் பார்க்கலாம்.







ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்