Monday, December 20, 2010

ஆட்ட நாயகன்- ஆஃப்பாயில் - சினிமா விமர்சனம்

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/5257B_aat01.jpg

பம்மல் கே சம்பந்தம் படத்தோட ஒன் லைன் ஸ்டோரி + சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்ணுன ஆஹா படத்தோட பேசிக் நாட் (BASIC KNOT) = ஆட்ட நாயகன்.ரவுடின்னு அப்பா நினைக்கற  2வது பையன் நல்லவன்,நல்லவன்னு அப்பா நினைக்கற முத பையன் தாதா.அண்ணன் செய்யும் தப்பு தம்பி மேல  பழி விழுது.அதை ஏத்துக்கிட்டு அண்ணனை திருத்தப்பார்க்கும் தம்பியின்
கதைதான் படம்.

படத்தோட ஓப்பனிங்க்ல சந்தானம் நெற்றியில் திருநீறுப்பட்டை அடித்து அண்ணாமலை  ரஜினி ரேஞ்சுக்கு அறிமுகம் ஆவது செம அலப்பறை. ஆனா ஹீரோ அறிமுகம் ஆகறப்போ  எதுக்கு தேவை இல்லாம ஹே ஹே ஹே என பேக் கிரவுண்ட் மியூசிக்? 5 படம் வர்றக்குள்ள  50 படம் பண்ணுன விஜய் மாதிரி எதுக்கு பில்டப்?
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/8746_1.jpg
படத்தோட இடைவேளை வரை ஜாலியா கொண்டு போகும் தன் முயற்சியில் இயக்குநர் சர்வசாதாரணமாக பாஸ் ஆகிறார்.ஹீரோ ரன்னிங்க் ரேசில் கஷ்டப்பட்டு ஓடி ஜெயிச்ச  பரிசுப்பணத்தை அப்பா நாசர் மேடையிலேயே அபேஸ் பண்ணுவது செம காமெடி.

அதே போல் பெண் பார்க்கப்போகும் சந்தானம் செய்யும் லூட்டிகள் ஒவ்வொன்றும் கலகல.பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கும் காமெடிகள் எல்லாமே பிரமாதமாக ஒர்க் அவுட் ஆவதை கோலிவுட் இயக்குநர்கள் கவனிக்கவும்.ஹீரோவை டாமினேட் பண்ணி  காமெடியில் கலக்குவது சந்தானத்திற்கு புதுசில்லை.

பெண் பிடிக்கலைன்னு சொன்னதும்பெண்ணின்தங்கை(ஹீரோயின்)ஃபோனில் திட்டும்போது சந்தானம் காட்டும் முக எக்ஸ்பிரஸ்ஸென்ஸ் மார்வலஸ்,அதே போல் ஹீரோ அவரை  கலாய்க்கும் போது சந்தானத்தின் ரீ ஆக்‌ஷ்ன் சிம்ப்ளி சூப்பர்.

ஹீரோ சக்தி குருவி தலையில் பனங்காய் வைத்த கதைதான்.முடிந்த வரை சமாளிக்கிறார். பாடல் காட்சிகளில் சுறுசுறுப்பாக ஆடுவது,ஓக்கே ஆனால் விஜய் மாதிரி ட்ரை பண்ணி இருக்க தேவை இல்லை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_xow7Gw_PIHjPbdjgRUdckicvO2wFtkS6UfXKauo2Gki_TgX6a17sKsiUHp4kh8yWCqURUQdwPAvka-upDPgI2IGspXQaKfZwqdTUh40E93GkHAJgzlAn0DLhOkua0yh5ghIdDDn8Ytg/s400/aattanayagan-40000.jpg
ஹீரோயின் ரம்யா நம்பீசன். பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி ஓவர் ஆக்டிங்க் ஓமனா விருதை சர்வசாதரணமாக அள்ளிக்கொள்கிறார்.பாடல் காட்சிகளில் உடை வடிவமைப்பு  சொதப்பல் ரகம்.அவர் தொப்பையை கொஞ்சம் குறைத்தால் தேவலை.லோ ஹிப் சீனில்  எதையும் ரசிக்க முடியாமல் போகிறது.

முதன் முதலாக ஹீரோ தனது காதலை ஃபோனில் வெளிப்படுத்தும்போது ஹீரோயின் காட்டும் வெட்க உணர்வு,முக உணர்ச்சிகள் அனைத்தும் அற்புதம்.

தம்பியின் காதலுக்காக தம்பியின் காதலியின் அக்காவை மணக்க ஒத்துக்கொண்ட அண்ணனின் தியாகம் ஓக்கே ,ஆனால் 2 ஜோடிகளின் திருமணத்தையும் ஒரே மேடையில்  ஏன் வைக்கவில்லை?(அப்படி வெச்சா படத்தை இழுக்க முடியாதே?)

ஹீரோ ஹீரோயினை வாங்க போங்க என மரியாதையாக கூப்பிடுவதும்,ஹீரோயின் ஹீரோவை
வா போ என கூப்பிடுவதும் ஃபேஷன் போல.

காதல் முறிவு பற்றிப்பேச அழைக்கும் ஹீரோயின் ஹீரோவுடனான சந்திப்பு நடக்கும்  இடம் பட்டுப்போன மரத்தின் அடியில் நடப்பது போல் காண்பிப்பது இயக்குநரின் ஸ்பெஷல் டச்

கோர்ட் வளாகத்தில் கையில் விலங்குடன் அருகில் போலீஸ் ஆஃபீசர்ஸ் இருந்தும்  சாட்சியை அடித்து உதைப்பது நம்ப முடியாத சீன்.

ஐ ஜீ மகளை வில்லன் கடத்துவது ஓக்கே ,அதை யாராவது தன் வீட்டிலேயே வைத்திருப்பார்களா?

தாதாவான தன் கணவன் திருந்திய பிறகு முதன்முதலாக தன் பெயரை கூப்பிட்டதும்  அதற்கு மனைவியாக வரும் ஹீரோயினின் அக்கா காட்டும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் ஒண்டர்ஃபுல்.

ஐ ஜி யின் மகளாக வருபவர் 3 சீனில் வந்தாலும் முத்தான நடிப்பு.

காதல் காட்சிகளில் இயக்குநரின் பேனா விளையாடி இருக்கு.

உன் கையை என் உடம்புல எங்கேயாவது மறைச்சு வை,....

இப்போ உன் உடம்புல என கையை எங்காவது மறைச்சு வைக்கிறேன்.

செம கிளு கிளு..

செக்க செக்க செவ்வாழை சொக்க வைக்கும்   பாட்டு கும்மாளமான இசை
ஆட்டம் என கலக்கல் .ஆனால் அந்தபாட்டுக்கு ஹீரோயினின் நடிப்பு ரொம்ப ஓவர் டோஸ்.

கர்ப்பமாக இருக்கும் மனைவி தாதா கணவனிடம் தான் கர்ப்பமாக இருப்பதை
குறிப்பால் உணர்த்த கோயில்லில் குட்டிப்பாப்பா கார்ட்டூன் வரைவது கவிதை.

மிமிக்ரி வாய்சில் ஹீரோ அண்ணன் மாதிரி குரலை மாற்றிப்பேசுவதை அப்பா நம்புவதும் அம்மா கண்டுபிடிப்பதும் செண்ட்டிமெண்ட் காட்சிகள்.
http://ulavan.net/wp-content/uploads/2010/08/ramya_nambeesan.jpg
படத்தின் வசனகர்த்தா சிக்ஸர் அடித்த காட்சிகள்

1. ஒண்ணு ரெண்டு மூணு சொன்ன பிறகுதானே ஓடனும்?ஏன் ஒண்ணு
சொன்ன உடனே ரேஸ்ல ஓடறே?

ஜெயிக்கனும்கற ஒரு ஆதங்கம்தான் சார்


2. என்னப்பா,டிவியை ரிப்பேர் பண்ண 10 ரூபா அட்வான்ஸ் தர்றே?ரொம்ப கம்மி...

என்னது?அட்வான்சா?மொத்த பேமெண்ட்டே அவ்வளவுதான்.


3. கல்யாணத்துக்கு இப்போ என்னடா அவசரம்?

எங்கம்மாவுக்கு சண்டை போட துணைக்கு ஒரு ஆள் வேண்டுமாம்.

4. ஃபிரண்டுக்கு பொண்ணு பாக்கப்போனேன்னு சொல்றே,ஆனா பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்ட பில் உனக்கு ஏன் வருது?

5. என்னால சொந்தக்காரங்க வீட்ல கை கட்டி வேலை செய்ய முடியாது

6. அண்ணே,உன்னாலதான் எனக்கு கெட்ட பேரு.

எப்படி?

நீ நல்லா படிச்சு நல்ல வேலைல இருக்கறதுனாலதான் வெட்டாஃபீஸ் எனக்கு கெட்ட பேரு.

7. உங்கப்பன் ஓவரா பேசறான் ,சொல்லி வை ,உதை படுவான்.

தில் இருந்தா எங்கப்பாவை அடிச்சுப்பார்ரா,நான் உங்கப்பாவை அடிச்சேனே,
நீயும் எங்கப்பாவை அடிக்க வேண்டியதுதானே

டே டே என்ன நடக்குது இங்கே?

8. பொண்ணு பாக்கப்போறப்ப அவன் எதுக்கு?காரியத்தையேகெடுத்துடுவானே?

காரியமா?அப்போ பெண் பாக்கற வைபவம் இல்லையா?

9. காபி,ஸ்வீட்,வீடு எல்லாம் எங்களுக்கு பிடிச்சிருக்கு,பொண்ணு பிடிச்சிருக்கா இல்லையான்னு  இவன் கிட்டே சொல்லி அனுப்பறோம்

அடப்பாவி,பலி ஆடு நானா?

10. காதல் வந்தா பசங்களுக்கு பொறுப்பு வந்துடும்,பொண்ணுங்களுக்கு
பொறுப்பு போயிடும்..

11. ஹீரோ - நீங்க என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதுல இருந்து நான் ரொம்ப  நல்லவன் ஆகிட்டேங்க, வெளில எங்கேயும் நான் சுத்தறதே இல்லை.இப்போ நீங்க  எங்கே இருக்கீங்க?

ஹீரோயின்
- வெளில ஊர் சுத்தீட்டு இருக்கேன்.

12. நாம காதலிச்சதுதான் யாருக்குமே தெரியாதே...ஈசியா கழட்டிவிட்டுடலாம்.

13. தம்பி,உன் காதலுக்கு நான் ஹெல்ப் பண்றேன்,காதலிக்கக்கூடாது,அப்படி
காதலிச்சா கல்யாணம் பண்ணாம விடக்கூடாது.

14, என்னைப்பொறுத்தவரை கல்யாணம்கறது நம்ம முன்னேற்றத்துக்குப்போடற முட்டுக்கட்டை

15. மாப்ளே,,,என்னதான் சொல்லு வேலையே தெரியாத உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது.

16. மத்தவங்களை ஏமாத்தறது பெரிய விஷயமில்லை,அம்மா அப்பாவையே ஏமாத்தீட்டியேண்ணா?

17. என்னை மாதிரி ரவுடிங்க திருந்தனுமா?வேணாமா?ன்னு நாங்க முடிவு பண்ண முடியாது. எங்க எதிரிங்கதான் முடிவு பண்ணுவாங்க.

18. எல்லாத்தொழில்லயும் நமக்கு எதிரியாவோ ,போட்டியாவோ ஒருத்தன் இருப்பான். ஆனா ரவுடி வாழ்க்கைல மட்டும் எதிரி கூடவே இருப்பான்.

இடைவேளை வரை கலகலப்பாக போகும் படம் அண்ணன் தாதா என்று தெரிய வரும்  இண்ட்டர்வெல் ட்விஸ்ட்டில் படுத்து விடுகிறது.அதற்குப்பிறகு ஒரே அடி தடி,வெட்டு குத்து என கதை தடுமாறி திசை தெரியாமல் பயணிக்கிறது.
வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் காதல்,காமெடி கேரக்டரில் நடிப்பதே நல்லது.ஆக்‌ஷன் ஹீரோ ஆக ஆசைப்பட்டு தாதா கேரக்டர்,ரவுடி கேரக்டர் பண்ண கூடாது.இன்னும் வளரனும்.

படம் பொங்கல் வரை எல்லா செண்ட்டர்களிலும் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே


டிஸ்கி - 1 -தமிழ்மணம் டாப் 20 இல் தொடர்ந்து 2வது முறையாக நான் நெம்பர் ஒன் பிளேசில்  வந்ததற்கும், ஆட்ட நாயகன் விமர்சனம் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.எதேச்சையானது.

டிஸ்கி 2 - டிஸ்கி 1 போடவே தேவை இல்லையே,ஏன் என கேட்பவர்களுக்கு
நானும் எவ்வளவு நாளுக்குத்தான் தன்னடக்கமாவே இருக்கறது?கேப் கிடைக்கறப்ப கெடா வெட்டிக்க வேணாமா?(விளம்பரம் பண்ணிக்க வேணாமா?)

 டிஸ்கி 3 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு 

நில் கவனி செல்லாதே - குரூரம் - சினிமா விமர்சனம்