Monday, November 08, 2010

ரோஜாவின் ராஜா (ஆர் கே செல்வமணி அல்ல)

      




சுதந்திர இந்தியாவை உருவாக்கிய சிற்பி

      பம்பாய் ஆஸாத் மைதானத்தில், 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேருஜி, மெளலானா ஆஸாத், புலாபாய் தேசாய் ஆகியோர் அதில் பேசவிருந்தார்கள்.

            நேருஜி பேசத் தொடங்கியபோது பெருமழை கொட்டத் தொடங்கியது. இருந்தாலும் கொட்டும் மழையிலும், இலட்சக்கணக்கான மக்கள் கொஞ்சங்கூட அசையாமல் அமர்ந்து, நேருஜியின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

            அப்பொழுது ஒருவர், குடை ஒன்றை விரித்து, நேருஜியின் தலைக்கு மேலே பிடித்தார். அதைக் கண்டு,”மக்கள் மழையில் நனையும்பொழுது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேரு. குடை பிடிப்பவரோ நேருஜி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டே இருந்தார்.

            நேருஜி பொது மக்களை நோக்கிப் புன்சிரிப்புடன்,”இவர் என் சொல்லையும் மீறிக் குடை பிடித்திருப்பதைப் பார்த்தால், இவர் ஒலிபெருக்கியின் சொந்தக்காரராக இருப்பார் என்றுநினைக்கிறேன். இவர் எனக்காகக் குடை பிடிக்கவில்லை. ஒலிபெருக்கியை மழையிலிருந்து
பாதுகாக்கவே குடையைப் பிடிக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

            அதைக் கேட்டதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.


லால் பகதூர் சாஸ்திரி


     ஒரு முறை, பம்பாயில் குழந்தைகளின் விழா ஒன்றுக்கு லால்பகதூர்
சாஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் பெரும்பாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதற்காக எழுந்தார், லால்பகதூர் சாஸ்திரி.

            ”குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய
அறிஞன் அல்ல. அப்படியிருக்க இந்தக் குழந்தைகள் விழாவிற்கு என்னை ஏன் அழைத்தார்கள் என்று யோசித்தேன். அப்புறந்தான் உண்மை தெரிந்தது. என் உடல் தோற்றம் ஒரு பத்து வயதுச் சிறுவனைப் போன்று அவ்வளவு
குள்ளமாக இருக்கிறது. ஒரு சிறுவனைப் போலவே நான் தோற்றமளித்த
காரணத்தால்தான் இங்கே என்னை அழைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.”

            இதைக் கேட்டதும், அங்கே கூடியிருந்த குழந்தைகளும் பெரியவர்களும் 'கொல்'லென்று சிரித்துவிட்டார்கள்.

Sunday, November 07, 2010

மைனா -தீபாவளி ரேஸில் நெம்பர் ஒன் நைனா - சினிமா விமர்சனம்



தலை தீபாவளி கொண்டாட வேண்டிய ஒரு புது மாப்பிள்ளை கம் போலீஸ் ஆஃபீசர் தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை.

இந்தப்படத்துக்கு 2 பெருமை இருக்கு.ஒண்ணு தீபாவளி ரேசில் எதிர்பாராத விதமாக நெம்பர் ஒன் பிளேசை பிடிச்சது.2வது பிரபு சாலமன் இயக்கிய படங்களிலேயே இது தான் டாப்.

அமரர் சுஜாதாவின் ஆலோசனைப்படி படத்தோட முத ஷாட்லயே கதையை ஆரம்பிச்சடறாரு இயக்குநர்.போலீஸ் ஆஃபீசரோட மனைவியின் சைக்கோ மனோபாவம்,மற்றவர்களை வருத்தி தான் இன்பம் காணும்  நிலை இதை இவ்வளவு சிம்ப்பிளா சொன்னதுக்கு அவருக்கு ஒரு ஷொட்டு.



டைட்டிலில் எ ஸ்டோரி ஆஃப் அ லவ் ஜர்னி என போடும்போது நான் கூட பயந்தேன்.படம் பூரா லவ்வர்ஸ் ஓடிட்டே இருக்கப்போறாங்க,நாம ஒழிஞ்சோம் என.ஆனா யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கையில் நாம் நிமிர்ந்து உட்காருகிறோம்.

http://www.njtamil.com/wp-content/uploads/2010/09/3d1fab27-baeb-4414-a755-181b1a7beba61.jpg
அதே போல் அழகி படத்தில் ,பூ படத்தில் வருவது போல் ஹீரோ,ஹீரோயினின் சிறு பிராய சம்பவங்களின் கோர்வையாய் வரும் பாட்டான கிச்சுகிச்சு தாம்பாளம் பாட்டு வரும்போது கூட இது வழக்கமான ஒரு காதல் கதையே எனும் சலிப்பை பார்வையாளனிடம் படம் ஏற்படுத்துகிறது.ஆனால் படம் போகப்போக காதல் என்ற பிரமை  (பிரேமை ஆல்சோ) யிலிருந்து விலகி சஸ்பென்ஸ் வகையறாவில் சேர்கிறது.

ஹீரோ தொட்டுப்பார் பட அறிமுகம் ஒரு பாடல் காட்சியில் பருத்தி வீரன் கார்த்தி மாதிரி தலையை ஆட்டி ஆட்டி கடுப்பேற்றுகிறார்.மற்றபடி சுமாரான் நடிப்புத்தான்.(இவர் எப்போதும் பரட்டைத்தலையுடன் வருவது மகா எரிச்சல்)

ஹீரோயின் சிந்து சமவெளி அனாகா (இப்போ இயற்பெயரான அமலாவாம்)
விழிகளை  வேல்களாக்கி காண்போர் மனதில் கவிதையாய் பாயும் திறன் மிக்கவர்.ஆற்றுச்சுழியில் சிக்காதவர் கூட இவரது உதட்டுச்சுழிப்பில் சிக்கும் அளவு இதழ் அழகிஉதட்டு அசைவில் தனது இசைவை காண்பிக்கும் காதல் சூத்திரதாரி.கண் அசைவில் காளையரை கவிழ்க்கும் கவுதாரி.(போதுண்டா நாதாரி ,நிறுத்து உன் வர்ணனையை,சகிக்கலை,)




பார்வையாலேயே பார்வையாளர் மனதை கொல்கிறார்.சிந்து சமவெளி மருமகள் கேரக்டர் நம் மனதை விட்டு அகலாமல் இருப்பது அவர் தவறல்ல.இந்தப்படத்தில் மேக்கப்பே இல்லை.ஆனாலும் அழகுதான்.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixq06ONnJg102LeDqFLcQDB8SPtZXOV29Tinn-9BCEtoluL8qx7VnrZHowGDmRv5PSsVfxmWauQWfHxPKDyDzA560mi_TMwdwsnMQHZwkfT-PEqS9-R9fmRh1iTdmPoTvXoAx33jOxl2M/s1600/Maina+_17_.jpg
ஹீரோ- ஹீரோயின் இருவருக்கும் ஏற்படும் காதல் படு தீவிரமாக காண்பிக்கப்படுவது தேவையான ஒன்றுதான்.மைனா மைனா நெஞ்சுக்குள்ளே பாட்டு  நல்ல மெலோடி.அந்தப்பாட்டின் சரணத்தில் தொட்டாற்சுருங்கி இலைகள் அனாகாவின் இமைகள் பட்டு சுருங்குவது போல் காண்பித்து பின் மலர்வது போல் காண்பித்தது ஃபோட்டோகிராஃபியின் அழகியல் ரசனை.அந்தப்பாட்டில் அனாகாவின் கன்ன பருக்களைக்கூட அழகாகக்காண்பித்து ஒளிப்பதிவாளர் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.
ஹீரோயின் ஏழை,வீட்டில் கரண்ட் கட்,விடிந்தால் பரீட்சை.அவள் படிப்பதற்காக ஹீரோ சைக்கிள் ஓட்டி அந்த டைனமோ  கனெக்‌ஷனில் பல்பை எரிய வைத்து படிக்க வைப்பதும்,பின் அதுவும் ஒர்க் அவுட் ஆகாததில் ஹீரோ மின் மினி பூச்சிகளை ஒரு பாட்டில் தண்ணீரில் பிடித்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பதும் மனதை கவரும் காட்சிகள்.அதற்கு நன்றிக்கடனாக ஹீரோயின் உதட்டுடன் உதடு பதிப்பதில் காதலின் உச்சம்,கிளாமரின் சொச்சம்.

காதலின் தீவிரத்தை பார்வையாளனுக்கு உணர்த்த ஹீரோ  தனது அப்பாவை டேய் எனக்கூப்பிடுவதும்,ஹீரோயின் தன் அம்மாவை கேவலமாக திட்டுவதும் ரொம்ப ஓவர் என்றாலும் கதையோடு சேர்ந்து பார்க்கையில் ஆடியன்சிடம் கை தட்டலை பெறுகிறது.

படத்துக்கு ஆதார நாதமாக இருக்கும் ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சீன் முடிந்ததும் அந்த ஜெயிலில் தோன்றும் பதட்டம் டாப்.வருஷம் 16 படத்தில் குஷ்பூவிடம் ரகளை செய்யும் கார்த்திக் அவர் குளிக்கும் பாத்ரூமில் மாட்டிக்கொண்டதும் அந்த குடும்பத்தில் ஏற்படும் பதட்டமான சூழ்நிலை போல்...இயக்குநர் இந்த காட்சியில் விளையாடி இருக்கிறார்.

தப்பித்த கைதியை 2 நாளில் பிடித்து வர வேண்டும் என திரைக்கதையில் டெம்ப்போ ஏற்றியதெல்லாம் சரிதான்,ஆனால் போலீஸ் ஏன் ஜீப்பிலோ,பைக்கிலோ போகாமல் பஸ்ஸில் போறாங்க?என்பதற்கு இயக்குநரிடம் பதில் இல்லை.(அப்போதான் கதை நகருமோ?)

பஸ் ஆக்சிடெண்ட்டில் 2 போலீஸ் ஆஃபீசரையும் ஹீரோ காப்பாற்றிய பிறகு அவர்கள் இடையே ஏற்படும் நல்லுறவை இன்னும் விஸ்தாரமாய் காண்பித்திருக்கலாம்.க்ளைமாக்சில் கடைசி 30 நிமிடங்கள் பதைபதைப்பு.எதிர்பார்க்க முடியத திருப்பம்.


காதலர்கள் சேருவார்களா,சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ்  மெயிண்ட்டன் பண்ணுவதில் டைரக்டர் ரொம்ப தெளிவாக
இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்,காடு ,மலை,மழை என இவரது கேமரா புகுந்து விளையாடுகிறது.இசை இமான் சுமார்தான்.இன்னும் கலக்குவதற்கு சான்ஸ் உள்ள சப்ஜெக்ட்.



வசனகர்த்தாவின் பேனா இன் மைனா

1. என் பையன் 3 மாசமா ஸ்கூலுக்கு வர்லை,அதை நீயும் கவனிக்கலை,என்னய்யா வாத்தி நீ?அதுக்கு ஃபைனா இந்த 30 ரூபா நான் எடுத்துக்கறேன்,சீட்டாட வசதி...

2.  ஸ்கூலுக்கு யாரோ ஒரு பொண்ணை புதுசா கூட்டிட்டு வந்து இருக்கியே?

சார்,இவ என் தோஸ்த்,இவளையும் ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க,

டேய்,இது என்ன சினிமா தியேட்டரா பாதில வந்து உட்கார...?

3.  டே,எதுக்குடா அவளை இந்த வழில கூட்டிட்டு போறே?

ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு,அதான் குறுக்கு வழில கூட்டிட்டு போறேன்.

குறுக்கு வழில அந்த சிறுக்கியை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு ஏதாவது குசும்பு பண்ணீடாதே,என்னால பஞ்சாயத்து வந்து சாட்சி சொல்ல முடியாது.

4. புது செருப்புடா,ஏன் அடிச்சு வேஸ்ட் பண்றே,விடுடா,நாங்க எல்லாம் அடிகளை அல்லக்கைல வெச்சுட்டு போய்ட்டே இருப்போம்ல?

5.  யோவ்,ஏட்டு இந்தாய்யா ஃபோனு,லைன்ல என் மனைவி,,ஏதாவது சொல்லி சமாளி.

உங்க ஆஃபீசரு அங்கே என்ன கழட்டீட்டு இருக்காரு..?

6.  நாட்ல இருக்கற எந்தப்பெரிய மனுஷனுக்கும் வீட்ல மரியாதையே இல்லைனு தெரியுது. ( செம கைதட்டல் இந்த சீனுக்கு,பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க போல..)

7.மாப்ளே,எனக்கு ஒரு டவுட்டு,உங்கப்பன் உழைச்சு சொந்தமா ஒரு சட்டை கூட வாங்கி போட மாட்டான் போல? எல்லாமே ஓ ஸி தானா?

8.ஏய்,நம்ம பணியாரக்காரி முச்சந்திக்கு வந்துட்டா,ஓடி வாங்க எல்லாரும் வேடிக்கை பார்ப்போம்,அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்ன ஒரு சுகம்..

9.மாமா,சினிமாக்கள்ல வர்ற மாதிரி எல்லாரும் 3 நிமிஷப்பாட்டில முன்னுக்கு வர முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்?

10. சிக்கன் குழம்பு ருசிக்குமாம்,கோழி ஆகாதாம்,ஆத்தாக்காரி ஆகாதாம்,பொண்ணை மட்டும் லவ் பண்ணூவாராம்.

11. எல்லாரும் தீபாவளிக்கு யானை வெடி போடுவாங்க,நம்மளை இந்த யானை வெடி போட்டு துரத்துதே,...

12.   ஏட்டு கைதியிடம் - டேய்,பீடியை எடுடா..

என்னமோ குடுத்து வெச்சிருந்த மாதிரி கேக்குறீங்க.?

13. நீ எதுக்கு அவங்களுக்கு ஹெல்ப் பண்றே?

 அடுத்தவங்க காதலுக்கு ஹெல்ப் பண்ணுனா தன் காதல் தானே வளரும்.

14. டேய் டேய் எஸ்கார்டு டெய்லி பேட்டாவே ரூ 100 தான்,மினரல் வாட்டர் எல்லாம் ஆர்டர் பண்ணாதே டா.

15. ஹலோ..என் செல்ல பொண்டாட்டியா..?என்னடா கண்ணு,, நான் ஊருக்கு போயிட்டா உன்னை 30 பேர் பாக்க வர்றாங்களாமே,, அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கடா..என்ன காலிங்க் பெல் சத்தம் ஃபோன் ல கேக்குது,,மணி என்ன>9  ஓக்கே அப்போ ஆனந்த்தா தான் இருக்கும்,நீ யார் கூட வேணாலும் சுத்து,என்னை மட்டும் மறந்துடாதே செல்லம்..

16.  என்ன பாக்குறே,என் மனைவி ஒரு அநாதை,யாராவது அக்கான்னு கூப்பிட்டாலே கண் கலங்கிடுவா,நீ அம்மான்னு கூப்பிட்டியா,அழுதுட்டா.

நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் ஏட்டாக வரும் சுப்பையா.குணச்சித்திர நடிப்பிலும் சரி ,காமெடி கமெண்ட்டிலும் சரி கலக்குகிறார்.போலீஸ் ஆஃபீசரின் மனைவி பின்னிட்டார்,ஹீரோயினின் அம்மா கேரக்டர் கச்சிதமான நடிப்பு,

ஹீரோயின் சமைஞ்சதும் (அது என்ன தமிழ் சினிமாவில் மட்டும் ஹீரோயின் 19 வயசு ஆனாத்தான் சமைகிறார்?) பக்கத்து வீட்டு லேடி “பார்க்க ராசாத்தி மாதிரி இருக்கே,எந்த மகாராசன் உன்னை தூக்கிட்டு போறானோ என அங்களாய்த்ததும் ஹீரோ கோபப்ப்ட்டு இந்த சுருளி மகராசந்தான் என பொறுமுவதும் காமெடிக்கு காமெடி,காதலின் ஆழத்தை உணர்த்துவதற்கும் யூஸ்.

மாமோய் நீங்க எங்கே இருக்கீங்க என்ற ஒரே ஒரு  ரிங்க் டோனை  வைத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாய் டைரக்டர் சொல்லி இருக்கும் காமெடி,சூப்ப்ர்.கை தட்டலை அள்ளிக்கொள்கிறது அந்தக்காட்சிகள்.

மணடை ஓடு மாணிக்கமாக வரும் பொடியனின் பாத்திரப்படைப்பும் ,நடிப்பும் அவனது தெனாவெட்டான வசன உச்சரிப்பும் டாப் கிளாஸ்,.

உயர் அதிகாரியின் உத்தரவுக்க்காக சொந்த பந்தங்களை பகைத்துகொண்டு வேண்டா வெறுப்புடன் பணி ஆற்றும் அதிகாரிகளின் மன ஓட்டங்களை இவ்வளவு கவி நயத்தோடு சொன்னதற்கு ஒரு சபாஷ்.

நீயும் நானும்,வானும் மண்ணும் பாடல் காட்சி கண்ணூக்கு குளுமை,

ஃபாரீன் ஜோடி காதலில் திளைப்பதை வேடிக்கை பார்க்கும் அனாகா அதை தன் கண்களாலேயே ஏக்கங்களாக வெளிப்படுத்து வது  மார்வலஸ்.

ஹோட்டலில் அனாகா தண்ணீர் குடித்ததும் லேசாக ஹீரோவின் கன்னத்தில் அந்த தண்ணீரின் துளி பட்டு தெறித்ததும் ,அதை ஹீரோ ரசிக்கிறார் என்பதை உணர்ந்து வெட்கப்படும் அனாகா நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

இறுக்கமாக படம் போய்க்கொண்டிருக்கும்போது சிங்கி சிங்கி ஜிமிக்கி போட்டு  பாட்டு  செம கலக்கல் நாட்டுப்புறப்பாட்டு.டப்பாங்குத்து+நாட்டுப்புற இசை மனசை மெஸ்மரிஸ் பண்ணுகிறது.

ஆனால் அந்தப்பாட்டு முடிந்த கொஞ்ச நேரத்திலேயே வரும் கையை பிடி நெஞ்சை தொடு பாட்டு தேவையே இல்லை,படம் க்ளைமாக்சை நெருங்கும்போது எதற்கு மெலோடிப்பாட்டு?

பஸ் பிரயாணங்களில் சரளமாக வந்து போகும் காமெடி வசனங்கள் சூப்பர்.


இன்ஸ்பெக்டர் ஏன் கோபமா இருக்காரு தெரியுமா.? அவர் உக்காந்து இருக்கறது அக்னி மூலை.கண்டக்டர் ஏன் சில்லறை நிறையா வெச்சிருக்கார் தெரியுமா அவர் இருக்கறது குபேர மூலை..

இயக்குநருக்கு சில யோசனைகள் -

1.படத்தின் விளம்பரங்களில் இது ஒரு காதல் படம் என காண்பிக்கப்படுவதை மாற்றி ஆக்‌ஷன் திரில்லர் போல் ட்ரைலரை மாற்றலாம்.

2.கடைசி பாட்டு,மற்றும் இடைவேளைக்கு பின் வரும் காட்சிகள் சிலவற்றில் கத்திரி போட்டு இன்னும் படத்தின் விறு விறுப்பை கூட்டலாம்.

3.க்ளைமாக்சில் போலீஸ் ஆஃபீசரின் மனைவியை அவரே கொலை செய்வது தேவை இல்லாதது.மனைவியின் கோணத்தில் பார்த்தால் அவர் அந்த அளவுக்கு தப்பு ஏதும் செய்யவில்லை.மாற்றலாம்




படத்தின் க்ளைமாக்சில் கருத்து வேற்றுமை உண்டு.சோக முடிவு வலிய திணிக்கப்பட்டது போல் இல்லை இருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.படம் பார்த்தவர்கள் மனதை 10 நாட்களாவது பாதிக்கும் படம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும்   குமுதம் ரேங்க் -  நன்று


ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள் (பொங்கல் வரை)

பி செண்ட்டர்களில் 50 நாட்கள்
சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.

Saturday, November 06, 2010

HISSSS - சினிமா விமர்சனம் 18 +

 http://www.bollywoodwallpaper.org/d/243263-4/Hisss-Wallpaper-005.jpgஅந்தக்காலத்தில் உள்ள ஒரு மூட நம்பிக்கை இச்சாதாரி நாகம்  (எந்த நாதாரி இதைக்கண்டு பிடித்தானோ) வகையறாவில் பெண் நாகம் உமிழும் நாகக்கல் யார் கையில் இருக்கிறதோ அவருக்கு மரணம் கிடையாது என்பதே.இச்சாதாரி நாகங்கள் உடல் உறவு கொள்ளும்போது  அது பலவீனமான நிலையில் இருக்கும்,அப்போது பெண் நாகத்தை மட்டும் கவர்ந்து மாணிக்கக்கல்லை பெற முயற்சி செய்யும் ஒரு கேன்சர் பார்ட்டிஅடையும் துன்பங்களும் ,எதிர்கொள்ளும் சவால்களும் தான் கதை.

பாலிவூட்டின் ஏஞ்சலினாஜூலி என பெயர் பெற்ற மல்லிகா ஷெராவத் 75% நிர்வாணமாக நடித்த படம்.எனவே சீன் பட ரசிகர்கள் டோண்ட் மிஸ் இட். இராமநாரயணன் பார்த்தால் இந்தப்படத்தை ரீமேக் பண்ணி விடுவார்.அந்த அளவுக்கு காதில் பூ சுற்றும் காட்சிகள் அதிகம்.வந்தமா,சீனை பார்த்தமா ,கிளம்புனமா அப்படினு போய்க்கிட்டே இருக்கனும்.

முதலில் கை குலுக்கி பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளரைத்தான்.அவர் கேமராவுடன் ஹீரோயின் பின்னாலேயே அலைந்து கொண்டு கேப் கிடைக்கற டைம்ல எல்லாம் அவரோட பாடியை எக்ஸ்போஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்.இதுவரை மல்லிகா ஷெராவத் நடித்த படங்களிலேயே மர்டர் படத்தில்தான் சீன் அதிகம்.அந்த சாதனையை  (!?) இந்தப்படம் முறியடித்து இருக்கிறது.



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSlbZw-4-hCavL_STsMMyKtubJJL_sCRUITCNZoHJ3PpY-hTUB3ld9q-3R6sdQNp-_2Y5GWb2QHaTf5AZxJYJ4OrheB1wtxuJ2tpTZkdA8pqQv22SpF59groRsNTo769VZ0QjsKECmkWwW/s1600/hisss5.jpg

 நாக தேவதையாக வரும் ஹீரோயின் கொலை வழக்கை புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியின் வீட்டிலேயே தங்குவது நம்ப முடியாது சீன்.
திரைக்கதையில் ஒரு எதிர்பார்ப்பும்,வேகமும் வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக புகுத்தியது மாதிரி தெரிகிறது. அதே மாதிரி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவின் நண்பராக வருபவருக்கும்,ஹீரோவின் மனைவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் ஏற்படப்போகிறது என்பது மாதிரி காட்சிகளை நகர்த்துவது இயக்குநரின் மலிவான உத்தி.(ஆனா அந்த மாதிரி காட்சி வராதா என ரசிகர்கள் பாவம் ஏங்கிப்போய் விட்டார்கள்)

2 விஷயத்தில் இயக்குநரை பாராட்டலாம்.இதுவரை நாம் பார்க்காத 2 கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதற்கு.ஹீரோவின் மாமியார் ஒரு மன நோயாளி.அவர் பார்வையில் தன் மாப்பிள்ளை ஒரு பெண்,அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்க பெண் தேடுவது மாதிரி செயல்களை செய்வதும் ஹீரோவை வாடி போடி என கூப்பிடுவதும் தமிழுக்கு புதுசு.அந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை நடிப்பில் பட்டாசை கிளப்பி இருக்கிறார்.பல நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆரவாரக்கூச்சல் இடுவது சீன் பார்க்கத்தடையா இருக்காரே என்பது தவிர வேறில்லை.

அதே போல் பாம்பாட்டி கேரக்டரில் வருபவர் நடிப்பு அற்புதம்.இயக்குநர் சொல்லி குடுத்து நடிப்பது போலவே தெரியவில்லை,ரகுவரன்,பிரகாஷ் ராஜ் போல் தனிப்பட்ட ஸ்பெஷல் நடிப்பு அவருடையது.





மேலே உள்ள ஸ்டில்லில் ஹீரோயின் அருகில் இருப்பவரே ஹீரோவின் ஜோடி.பார்ட்டி நல்ல ஃபிகர்.நடிப்பும் ஓக்கே.படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவருக்கு ஒரு சீன் உண்டு.சம்பந்தம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?சீன் இருந்தா சரி என ரசிகர்கள் அதை கண்டு களிக்கிறார்கள்.

http://f1.pepst.com/c/B95219/972149/ssc3/home/086/lally.nijjar/mallika_sherawat_wallpaper.jpg_480_480_0_64000_0_1_0.jpg

மல்லிகாவுக்கு 4 சீன்கள்.முதல் காட்சியில் அவர் முழு நிர்வாணமாக பீச் மணலில் படுத்திருப்பது காண்பவர்களை திக் பிரமை அடைய வைக்கிறது.இந்தக்காட்சியில் எப்படி நடிக்க துணிந்தீர்கள் என ஸ்டார் டஸ்ட் எனும் ஹிந்தி மாத இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.

முதல் பாவம் அபிலாஷா முதல் கடைசி புண்ணியம் கல்பனா வரை யார்தான் உண்மையை சொல்கிறார்கள்?ஏதோ சால்ஜாப்பு.இதனால் நமது மன நிலை தான் பாதிக்கப்படுகிறது.நாம் பார்த்தது ஒரிஜினலா,டூப்ளிகேட்டா? என.

ஒரு சீனில் மல்லிகா முழு நிர்வாணமாக தெரு விளக்கில் ஏறுகிறார்.அங்கேயே படுத்துக்கொள்கிறார்.அந்த சீன் எதற்கு என்றே தெரியவில்லை.எந்தப்பாம்பு தெரு விளக்கில் படுக்கிறது?அந்தக்காட்சியில் வேணா டூப் நடிகைதான்,எப்படின்னாஅவ்வளவு ஹைட்டில் அவர் எப்படி ஏற முடியும்?

முதன்முதலாக மல்லிகா சேலை கட்டும் காட்சியில் ஹீரோவின் மனைவி “ஏம்மா,நீ சேலை கட்டுனதே இல்லையா?”என கேட்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.ஆனால் சீன் வரும் காட்சிகளில் மட்டும் அதுவரை கமெண்ட் அடித்தவர்கள் நிசப்தமாக பார்ப்பது ஏனோ?


http://www.glamsham.com/movies/scoops/10/oct/mallika_sherawat_hissss.jpg

சில பளிச் வசனங்கள்

1. போலீஸ் ஆஃபீசர் தன் பி ஏ விடம்  - நீ என்னை விட புத்திசாலியா இருக்கே,அடிக்கடி நீ புத்திசாலின்னு நிரூபிச்சுட்டே இருக்கே,அதனால் நான் ரிசைன் பண்ணிடறேன்,நீ இந்த கொலை கேசை எடுத்து நடத்து.

2. நமக்கு ஒரு குழந்தை வேணும்னு எங்கம்மா கேட்டுட்டே இருக்காங்க.

உங்கம்மா பைத்தியம்கறே,ஆனா இந்த மேட்டர்ல மட்டும் ரொம்பத்தெளிவா இருக்காங்க.

3. இந்த கேஸ்ல ஏதோ சூப்பர் நேச்சுரல் பவர் சம்பந்தப்பட்டிருக்கு.

சாரி,சார்.நான் கண்ணுக்குத்தெரியறதை மட்டும்தான் நம்புவேன்.

4.சார்,என்னை அல்ப சொல்பமா நினைச்சுடாதீங்க.நான் ஜெகாவோட மச்சான்.

ஓ,நீ அந்த திருட்டுப்பயலோட மச்சானா?ஜாக்கிரதையா இருந்துக்கனும்.

5.உங்க ஃபேம்லி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.

உனக்கும் இதே மாதிரி ஃபேமிலி கிடைக்க வாழ்த்துக்கள்

அய்யய்யோ,லூஸ் மாமியா,டார்ச்சர் ஒயிஃப்  வேணாம் சார்,சும்ம ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

படத்தில் அடிக்கடி வந்து போகும் அபத்தமான வசனங்களில் ஒன்று

கேன்சர் வந்தவங்க யார் எது சொன்னாலும் நம்பிடுவாங்க.

இது எப்படின்னா சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேல் காமெடி டயலாக் மாதிரி.

ஒளிப்பதிவாளர் பல இடங்களில் உள்ளேன் ஐயா சொல்கிறார்.குறிப்பாக டாப் ஆங்கிளில் ஒரு பஸ் போகும்போது மழையில் நனைந்தபடி ஒரு ஆள் ஏறும் சீன் அட போட வைக்கிறது.

மிகவும் விறு விறுப்பாக வந்திருக்க வேண்டிய பாம்பாட்டி,நாகதேவதை,போலீஸ் ஆஃபீசர் சேசிங்க் சீன்டைரக்டரின் திறமைக்குறைவால் சப் என முடிந்து போகிறது.

அதே போல் மல்லிகா (நாக தேவதை) பாம்புடன் சல்லாபிக்கும் காட்சியில் லாஸ்ட் எம்ப்பயர் படம் போல் முயற்சி செய்திருக்கிறார்கள் .எடுபடவில்லை.அதற்குப்பதில் த ஸ்பீசஸ் படத்தில் வருவதுபோல் அந்தப்பாம்பு ஆண் வடிவம் கொண்டு மல்லிகாவுடன் ஜல்சா பண்ணுவது மாதிரி எடுத்திருந்தால் இன்னும் கிளு கிளுப்பாக இருந்திருக்கும்.

வில்லனாக வருபவரின் நடிப்பு அருமை.கிராஃபிக்ஸ் காட்சிகள் குழந்தைத்தனமாக இருப்பது பெரிய பலவீனம்.சீனுக்காக பார்த்து தொலைக்கலாம்.

 http://media1.santabanta.com/full/bollywood%20movies/hisss/hisss-1a.jpg



Friday, November 05, 2010

வ குவாட்டர் கட்டிங்க் - கடி,குடி,காமெடி- 3 டி சினிமா விமர்சனம்


கதை என்னன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன் படம் ஜாலியா இருந்தா சரிதான் என்பவரா நீங்கள்,அப்போ படம் உங்களுக்காகத்தான் ...
சவுதி அரேபியா செல்லப்போகும் சிவா அங்கே சரக்கு கிடைக்காது என்பதால் (சவுதி அரேபியாவில் சரக்குக்கு தடையாம் -தகவல் ராம்சாமி)
கடைசி கடைசியாக தமிழ்நாட்டில் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப்படுகிறார்.(ஆஹா,என்னே ஒரு நாட்டுப்பற்று).அதற்காக அவர் படும் கஷ்டங்கள்,பயண அனுபவங்கள்,(ஆமா,இவரு பெரிய இதயம் பேசுகிறது மணியன்..)இவற்றை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.தேர்தல் நடக்கும் நாள் என்பதால் சரக்குக்கு தடை போட்ட நாளில் கதை நடப்பதாக சொல்லி இருப்பது சுவராஷ்யம்.

சிவாவுக்கு பொருத்தமான வேடம்.தமிழ்ப்படம் போலவே இதிலும் கலய்க்கும் கேரக்டர்.விஜய் ரசிகர் என்ற போர்வையில்  தன் நெஞ்சில் சுறா என பச்சை குத்திக்கொண்டு இவர் பண்ணும் லூட்டிகள் கலக்கல் ரகம் தான்.ஆனால்.........

இயக்குநரை 3 விஷயங்களுக்காக தாராளமாக பாராட்டலாம்.

1.படம் முழுக்க ரெண்டே கால் மணி நேரம் ஒரே ஒரு இரவில் நடக்கும்படி திரைக்கதை அமைத்தது.

2.வழக்கமாக தமிழ்ப்படங்களில் வரும் க்ளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல்,எந்த வித செண்ட்டிமெண்ட்டும் இல்லாமல் காமெடி என்ற ஒரே ஒரு இலக்கை நோக்கி கதை பயணிக்க வைத்தது.

3.ஒளிப்பதிவில் ஜால வித்தை எல்லாம் செய்யாமல் நார்மலாக கதை எவ்வளவு அனுமதிக்குமோ அந்த அளவு மட்டும் லைட் ஷேடோவில் மொத்த படத்தையும் எடுத்த துணிச்சல்.





அட
எஸ் பி பி சரண் காமெடி நடிப்பில் ஷிவாவுக்கு இணையாக அதகளம் பண்ணுகிறார்.வசனங்களை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் .சட் சட் என கட்சி மாறும் அரசியல்வாதிகள் போல் ஷாட் டக் டக் என மாறுகிறது.

ஹீரோயின் தற்கொலைக்கு முயல்வதைக்கூட காமெடியாக சொல்லி இருப்பது படத்துக்கு பிளஸ்.அவருக்கு ஹீரோ உடன் காதல் ஏற்பட்டதா ,இல்லையா என்பதை கடைசி வரை சரியாக சொல்லாதது ஒரு வகைடில் தேவலை.டூயட் காட்சிகள் இல்லை,அப்பாடா...


படத்தை பார்த்து விமர்சகர்கள் படத்தில் கதை இல்லை என்று சொல்வார்கள் என டைரக்டருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.அதனால்தான் அவர்களுக்கு பதிலடி கொடு[பது மாதிரி ஒரு டயலாக் வைத்திருக்கிறார். ”இதுல மெசேஜ் என்ன?   ஏண்டா மெசேஜ் மெசேஜ்னு அலையறீங்க?”



அட
படத்தில் 4 பாடல் காட்சிகள் வந்தாலும் நான்கிலும் தனது ரசனையை காண்பித்து அனைத்து பாடல்களையும் அதே இரவு ஷேடில் எடுத்து இருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் 1/4 என்ற எண்ணை (குவாட்டர்) எப்படி எல்லாம் யூஸ் பண்ண முடியும் என காட்சிப்படுத்தி  பிரம்மிக்க வைக்கிறார்.அவர் அபாரமான க்ரியேட்டிவ் மைண்ட் உள்ளவர் என்பதற்கு அந்த ஒரு பாடல் காட்சியே போதும்.

தமிழ் சினிமாவில் பாம்பை வைத்து பயப்படும் காட்சியும்,நாய் துரத்தும் காமெடியும் எப்போதும் சிரஞ்சீவித்தனம் பெற்றவை.இயக்குனர் இந்தப்படத்தில் நாய் துரத்தும் காமெடியை நம்பி இருக்கிறார்.







படத்தில் மின்னல் போல் மின்னி மறையும் காமெடி டயலாக்ஸ்:

1. நாங்க போலீஸ் இல்லை சொன்னா நம்பு,நாங்க அக்யூஸ்ட்.(குற்றவாளி)

நீ தாடி வெச்சிருக்கே ,அக்யூஸ்ட்னு நம்பலாம் ,அவரு தொப்பை வெச்சிருக்காரே,போலீஸ்தானே அதை வெச்சிருப்பாங்க.?

2. டே,குள்ளா,எரிச்சலை கிளப்பாதே,அந்த மீன் கூட உன்னை விட உயரமா இருக்கும்.

3. என்னை எதிர்த்தா உனக்கு கட்டிங்க் கிடைக்காது.

டே,நாயே,நீயே பாக்க கட்டிங்க் மாதிரிதான் இருக்கே.

4. என்ன ,உங்க கைல சிகரெட்?நீங்க தம் அடிப்பீங்களா?

உங்களுக்கு பிடிக்கலைன்னா தூக்கிப்போட்டுடறேன்.

பேடு ஹேபிட்...கொண்டாங்க அதை,நான் அடிக்கறேன் கொஞ்சம்...

5. என்னது ,இந்தாளுக்கு இது மேலே போற வயசில்லையா?யோவ்,இந்தாளு க்கு 3 வருஷத்துக்கு முன்னாலயே 300 வயசு இருக்கும் போல இருக்கு...

6. எங்க கட்சி கூட்டத்துக்கு வந்தா குவாட்டர் சரக்கும் ,மட்டன் பிரியாணியும் இலவசம்.

சார்,கேக்கெறேனேன்னு தப்பா நினைக்காதீங்க,நான் சைவம் எனக்கு மட்டும் சைவ பிரியாணி கிடைக்குமா?

யோவ் நான் என்ன அய்யரா,அரசியல்வாதிய்யா...

நீங்க நல்லவரா?கெட்டவரா?

நல்லவனா இருந்தா எதுக்கு குவாட்டர் குடுத்து ஓட்டு கேக்கறேன்....

7. என்ன குவாட்டர் வாங்க இவ்வளவு கூட்டம்?இருங்க ஒரு ஐடியா பண்றேன்,யோவ் பாம் பாம்


சீக்கிரம் சரக்கு குடுங்கய்யா,பாம் வெடிக்கப்போகுதாம்

அடப்பாவிங்களா,பாமே வெடிச்சாலும் இவங்க கலைய மாட்டாங்க போல இருக்கே,...

8. உனக்கு ரொம்ப பேடு டேஸ்ட்டுப்பா

டேஸ்ட்டைப்பற்றி நீங்க பேசறீங்களா?இந்த பேண்ட்,பெல்ட்,சர்ட் 3ம்  3 வெவ்வேற மொட்டை மாடில இருந்து திருடுன மாதிரி இருக்கு....

9.ஒரு ஃபோன் போட்டா என்ன ஆகும்னு தெரியுமா?உன் வேலையே காலி ஆகிடும்.ஆனா நான் ஃபோன் போட மாட்டேன்,ஏன் தெரியுமா?நீ நல்லவனாட்டம் இருக்கே,அவ் அவ்  அ வ்


10. நீ இதை திருடிட்டு வந்தியா?
  ஏன்பா கேவலப்படுத்தறே?சுட்டதுனு கவுரமா சொல்லு.

11. சும்மா சமஞ்ச பொண்ணு மாதிரி வெக்கப்படாதே,...

12. அடே,4 பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை.

யார் அந்த நாலு பேரு?     நீ,நான்,மறுபடி நீ ,அப்புறம் நான்,நீ நாயகன் பாக்கல?

13.நீங்க பாக்க காலி சிலிண்டர் மாதிரி இருக்கீங்க,ஆனா தூக்கறப்ப 5 சிலிண்டர் வெயிட் இருக்கீங்க...

14.   ஹே ,கேர்ள்ஸ் என்ன 2 பேரும் பாக்க ஒரே மாதிரி இருக்கீங்க?

நாங்க ட்வின்ஸ் (இரட்டை சகோதரிகள்)

ஓஹோ,எது செஞ்சாலும் 2 பேரும் சேர்ந்தேதான் செய்வீங்களோ?(  ஏ ஜோக்)



15. சுடுகாட்ல ஏது இத்தனை பைக்?ஒருவேளை செத்துப்போனவங்களுதா இருக்குமோ?

16. நாங்க 2 பேரும் பிரதர்ஸ் இவன் பேரு வெட்டு,என் பேரு குத்து.இவன் 100 பேரை வெட்டி இருக்கான்....நான்....


சொல்லாதீங்க,நான் சொல்றேன் நீங்க 100 பேரை குத்தி இருக்கீங்க சரியா?

ம்ஹூம்,அவன் வெட்டுனதும் பாடி பக்கத்துல நின்னு குத்தாட்டம் போடுவேன்.

17. என்னைப்பற்றி உனக்குத்தெரியாது,பொள்ளாச்சி பக்கம் வந்து என்னைப்பற்றி கேட்டுப்பாருங்க.

யோவ்,க்ளைமாக்ஸ் நெருங்கிடுச்சு,இதுக்காக அவ்வளவு தூரம் நான் வர முடியுமா?

சரி,மறுபடி டைம் கிடைக்கறப்ப வாங்க.


18. உனக்கு சீட்டு ஆடத்தெரியுமா?

ஓஹோஹோ,எங்க ஊர் பசங்களுக்கு ஏ பி சி டி தெரியுதோ இல்லையோ ஏஸ்,ஜாக்கி ,கிங்க் இதெல்லாம் நல்லாவே தெரியும்.


19. வில்லன் சார்,நீங்க ஆள் தான் பாக்க காமெடி பீஸா இருக்கீங்க,ஆனா நீங்க சொல்றது ஒண்ணு கூட காமெடியாவே இல்லை.

20.அவன் கிட்டே இருந்து ஓடி தப்பிக்கறதை விட செல்ஃப் சூசயிடு பண்ணிக்கலாம்.     யோவ் தற்கொலைல என்ன செல்ஃப்?

21.ஏம்மா ஹீரோயின்,தற்கொலை பண்னிக்கப்போறப்ப எதுக்கும்மா உன் ஸ்கூல் யூனிஃபார்மோட இருக்கே?

ம்,என் ஸ்கூல் பேரைக்கெடுக்கத்தான்.

22.  அதென்னய்யா உம்மா கோல்டு?   அதாங்க கவரிங்க்.

23. எனக்கு அனிமல்ஸ்னா ரொம்ப பிடிக்கும்

நிஜமாவா,நீ புளூ கிராஸா?

அதெல்லமில்லை,மட்டன் சிக்கன் நல்ல சாப்பிடுவேன்.

24. இங்கே ஏன் படுத்திருக்கே?     சூசயிடு பண்ணிக்க

இது டிராஃபிக் இல்லாத ரோடு ,நோ யூஸ் ,எந்திரிச்சு வா மெயின் ரோட்ல டிராப் பண்றேன்

25. நான் ஒரு தத்துவம் சொல்றேன் எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.
தீஞ்சு போறதுக்கு முன்னே தோசையை திருப்பு.
ஓய்ஞ்சு போறதுக்கு முன்னே ஆசையை விருப்பு.

26.  ஏ பொண்ணு என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறே?


நீ10வது ஃபெயில்,உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா படிக்கவே தேவை இல்லையே?

27. உன்னை வெட்டனும்.

வேணாங்க ,விட்ருங்க,அப்படி வெட்டனும்னு ஆசையா இருந்தா என் நகத்தை வேணா வெட்டுங்க.

படத்தில் உள்ள மைனஸ் என்னன்னா லேடீஸ்,குழந்தைகள் பாக்கவே முடியாது.புதுமை விரும்பிகள்,குடி மகன்கள் பாக்கலாம்.அப்போ குடி மகன்கள் புதுமை விரும்பிகளானு கேக்கக்கூடாது,அடுத்த முறை படம் எடுக்கையில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மாதிரி படம் எடுப்பார் என நம்பலாம்.ஏன் எனில் அந்தளவுக்கு சரக்கு டைரக்டரிடம் நிறையவே இருக்கு. (மறுபடியும் சரக்கா?)


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்  44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க்  நன்று

ஏ சென்ட்டர்களில்  75 நாட்கள் ,பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ,சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்

உத்தம புத்திரன் -மொக்கை காமெடி - சினிமா விமர்சனம்


ஷாஜகான் பட விஜய் கேரக்டர் தான் இந்தப்பட ஹீரோ தனுஷ்க்கு,லவ் ஜோடியை சேர்த்து வைக்கறது தான் இவரது வேலை ,ஹாபி எல்லாம்.சொந்த மாமா பெண்ணையே அப்படி சேர்த்து வைக்கும் தியாகி.இவரது லவ் எப்படி சேர்த்து வைக்கப்படுகிறது என்பதுதான் கதை,அதை கில்லி,சந்தோஷ் சுப்ரமணியம் என பல பட வாசனைகளுடன் மொக்கை காமெடிகளுடன் கரை சேர்த்து இருக்கிறார் இயக்குநர்.

ரஜினியின் மாப்பிள்ளை என்பதற்காக தனுஷ் தனது பெயரை டைட்டிலில் அவர் போலவே பில்டப்புடன் வர வைப்பதெல்லாம் ஓவர்.மற்றபடி அவர் இந்தப்படத்தில் ரொம்பவே அடக்கி வாசித்து இருக்கிறார்.அவரது நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி.

ஜெனிலியா (ஹரிணி) தான் நாயகி.அருண் ஐஸ்கிரீம் மாதிரி ஜில்லென்று இருக்கிறார்.(தொட்டுப்பார்க்கவில்லை.ஒரு உத்தேசமா சொன்னது).இவரது நடிப்பில் பல இடங்களில் சந்தோஷ் சுப்ரமணியம்,சச்சின் என நினைவுபடுத்தும் காட்சிகள் அதிகம்.அவர் சிரிக்கும்போது மட்டும் கேமராவை லாங்க் ஷாட்டில் வைத்தது கேம்ராமேனின் புத்திசாலித்தனம்.

  
12 வருடங்களுக்கு முன்னால் பூவெல்லாம் கேட்டுப்பார்,மின்சாரக்கண்ணா என ஒரே மாதிரி கதை அமைப்பில் 17 படங்கள் 30 நாட்களில் ரிலீஸ் ஆனது.இது 18வது படம்.டூ லேட்.காதலர்கள் ஓடிப்போகாமல் தங்கள் குடும்பங்கள் தங்களை ஏற்றுக்கொள்ள அவர் வீட்டில் இவர் ஐக்கியமாவதும்,இவர் வீட்டில் அவர் ஐக்கியமாவதும்,செண்ட்டிமெண்ட்டாக அவர்கள் மனம் கவர்ந்து பின் கல்யாணம் செய்து கொள்வதும் தான் கதை.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே,ஹம் ஆப் கே ஹேங்க் கோன் போன்ற ஹிந்திப்படங்களையும் இயக்குநர் விட்டு வைக்கவில்லை.முடிந்தவரை சுட்டு இருக்கிறார்.படம் ஃபுல்லா ஏகப்பட்ட கேரக்டர்கள்,ஏகப்பட்ட வசனங்கள்.கே பாக்யராஜ் ஹீரோவுக்கு பெரியப்பா கேரக்டர்.நல்ல குணச்சித்திர நடிப்பு.அனுபவம் கை கொடுக்கிறது.மனைவியை ஃபோனில் கொஞ்சும் காட்சியில் தியேட்டரில் செம கை தட்டல்.

நான் கடவுள் பட வில்லன் மொட்டைபாஸ் தான் இதிலும் வில்லன்.ஆள் செம ஆகிருதி.சண்டைக்காட்சியில் அவர் காட்டும் சீற்றமும்,பாடி லேங்குவேஜும் அருமை.ஆனால் அந்தோ பரிதாபம் அவர் பட ஓப்பனிங்கிலும்,கிளைமாக்ஸ்சிலும் தான் வருகிறார்.

அட


ரசிக்கவைத்த மொக்கை காமெடிகள்-

1.சுவாமி சமாதி நிலைல இருக்காரு.     அய்யய்யோ,எப்போ செத்தாரு?

அட மூதேவி,தியான  நிலைல இருக்காரு.


2.நீ பரீட்சைல பாஸ் ஆகிடுவியா?         நீ எப்படி எழுதி இருக்கே?


செமயா,80 மார்க் வரும்.               அப்போ நானும் பாஸ்தான்,ஏன்னா உன் ஆன்சர் பேப்பர்ல என் எக்சாம் நெம்பரை எழுதிக்குடுத்துட்டு வந்துட்டேன்.

 3. நீங்க யாரு?நான் எங்கே இருக்கேன்?

அது எப்படி மயக்கத்துல இருந்து எந்திரிக்கிற எல்லா ஹீரோயினும் மறக்காம இந்த ஒரே டயலாக்கை ரிப்பீட் அடிக்கறீங்க?

4.  லேடீஸ் - எனக்காக லிஃப்ட் குடுப்பீங்களா?

உங்களுக்காக உயிரையே கொடுப்போம்.

அய்யய்யோ,அப்போ லிஃப்ட் எப்படி குடுப்பீங்க?

5. அவ உன்னை லவ் பண்ணுவாங்கறதுக்கு என்ன கேரண்டி?

கேரண்டி வாரண்டி பார்த்து வர்றதுக்கு லவ் என்ன கிரண்டரா?

6.எதுக்குடா மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்தே?

பக்கத்து வீட்டுக்குத்தான் முதல்ல போனேன்,அவங்கதான் உன் வீடு அதுனு அனுப்பி வெச்சாங்க.

7. அவன் அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை.    எப்படி?

டெயிலி அடி வாங்குனா எப்படி வலிக்கும்? மரத்துடுச்சு.

8. உன்னை அந்த்ப்பொடிப்பையன் அப்படி கொட்டிட்டு போறான் ,சும்மாவே இருக்கியே?

விடு ,அக்கவுண்ட்ஸ் எழுத்றப்ப 15 லட்சம் ஃபைன் போட்டுட்டேன்.

அடபாவி.


9. தனுஷ் - எப்படி இளைச்சுட்டேன் பார்த்தீங்களா?

டேய்,நீ எப்போ குண்டானே,இளைக்கறதுக்கு..?

10. இவனை சேத்துக்கலாமா?வீட்டை விட்டு துரத்தி விட்டுடலாமா?

வெளில துரத்தி விட்டா சம்பாதிக்க துப்பு இருக்கற மாதிரி தெரியல,அதனால சேர்த்துக்குவோம்.

11. ஒரே ஒரு ஃபோட்டோவை பார்த்துட்டு லைஃப் லாங்க் ஒரு பொண்ணை லைஃப் பார்ட்னரா சேர்த்துக்கறது எப்படி?

சரி,நான் வேணா பொண்ணு வீட்ல சொல்லி இன்னும் நாலஞ்சு ஃபோட்டோ தர சொல்லட்டா?

12. ஏன் தரைல உக்கார்றீங்க,மேலே உக்காருன்னு சொன்னது தப்பா போச்சு.

ஏன்?

சேர்ல உக்காராம டைனிங்க் டேபிள் மேல ஏறி உக்காந்துக்கறான்.

13.   மாப்ளை,என்ன படிச்சிருக்கீங்க?       நீதி,நேர்மை.

ஓஹோ,சத்தியம்,அஹிம்சை இதெல்லாம் அரியரா வெச்சிருக்கீங்களோ?

14. தனுஷ் - எங்க வீட்ல எல்லாரும் செம ஷார்ப்,அதனால ரொம்ப ஜாக்கிரதையா அவங்க கிட்டே நடந்துக்கோ.

ஜெனிலியா - பின்னே,எல்லோரும் உன்னை மாதிரி யா இருப்பாங்க?




ஏப்பா அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்,எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?பல இடங்களில் கண்ட்டிநியூட்டி மிஸ்ஸிங்க்.குறிப்பா தனுஷ் மொழு மொழு முகத்துடன் வரும் சீனுக்கு அடுத்த சீன் தாடியுடன் வருகிறார்.


அதே போல் மணக்கோலத்தில் இருக்கும் ஜெனிலியா 20 முழம் மல்லிகைபூவுடன் ஒரு ரூமில் இருக்கிறார்,அவர் ரூமை விட்டு வெளியே வரும் போது 5 முழம்தான் இருக்குது. (ரொம்ப முக்கியம்,படத்தை பாக்காம உன்னை யார் பூவை அளந்து பாக்க சொன்னது?)

சூட்கேசில் விவேக் 25 லட்சம் பணம் வைத்திருப்பதாக சொல்கிறார்,அதை திரந்து காட்டும்போது 1000 ரூபாக்கட்டு 17 தான் இருக்கு.


அப்புறம் டைரக்டருக்கு ஒரு அட்வைஸ். (ஆரம்பிச்சுட்டாண்டா)


படத்தோட ஓப்பனிங்க்ல இவ்வளவு நீளமான ,விறு விறுப்பான சேசிங்க் சீன்வைப்பது ரொம்ப ஆபத்து,ஏனெனில் ஆடியன்ஸ் அந்த டெம்போவில் ஸ்பீடு ஆகும்போது திடீர் என காட்சி மாறும்போது படம் ஸ்லோவாக போவது மாதிரி தெரியும்.


இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சாம்ப்பிள்

வில்லன் குரூப் காதலர்களை துரத்தி வரும்போது இருவரும் ஒரு சந்தில் நெருக்கமாக நிற்கையில் ஹீரோவின் சமீபம் ஹீரோயினுக்கு தர்மசங்கடமாக இருக்கு,அப்போ அவ சொல்றா,ஏய்,இதை அட்வாண்ட்டேஜ்ஜா எடுத்துக்காதே.பிறகு வேறொரு காட்சியில் வில்லன் ஹீரோயினை துரத்தி வரும்போது ஹீரோவை பயத்தில் கட்டிப்பிடிக்கும் போது ஹீரோ அதே டயலாக்கை ரிப்பீட் அடிக்கையில் செம அப்ளாஸ்.

ஃபோட்டோவை உடைத்தது வேறொருவர் என தெரிந்தும் ஹீரோயின் பழியை தான் ஏற்றுக்கொள்வது ,பின் உண்மை தெரிந்து அவரிடம் அனைவரும் நெகிழ்வது ரொம்ப பழைய செண்ட்டிமெண்ட்ஸ்.ஓல்டு  ஈஸ் கோல்டு  என டைரக்டர் நினைத்திருப்பாரோ?

எமோஷனல் ஏகாம்பரமாக வரும் விவேக் ரொம்ப நாளுக்குப்பிறகு ரசிக்க வைக்கிறார்.வழக்கமாக் ஓவராக அலட்டும் அவருக்கு இந்தப்படத்தில் அண்டர் பிளே ஆக்டிங்க்.தனுஷை வில்லன் குரூப்புக்கு அறிமுகப்படுத்துகையில் “இவன் எங்கக்கா மவன்,சின்ன வயசுல இவன் பாக்க என்னை மாதிரியே இருப்பான் என பீலா விட தனுஷ்,  அப்போ பெரிய வயசுல நான் உங்க சாயல்ல இருப்பேனா? என கேட்பது செம லந்து.


  கன்ஃபியூஷன் ஆஃப் கான்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் த லூஸ் மோஷன் - சப் கான்சியஸ் என இவர் கலாய்ப்பது கலக்கல் ரகம்.தனுஷ் இவரிடம் ,புத்திசாலி காக்கா மட்டும் தான் ஜாடில இருக்கற தண்ணிய குடிக்க ஜாடில கல்லை போடும். என சொல்ல அப்போ என்னை புத்திசாலிங்கறியா?காக்கைங்கறியா என கேட்பது தூள்.

ஒவ்வொரு முறை சியர்ஸ் சொல்லும்போது விவேக்கின் டம்ளர் உடைக்கப்டுவதும் சிரிப்பை வரவ்ழைக்கும் காமெடியே,நீ ஒருத்தன் போதும்டா,ஊர்ல ஒரு பையன் தண்ணி அடிக்க மாட்டான் என புலம்புவது செம மொக்கை.

பெண்களை கவர பல செண்ட்டிமெண்ட் வசனங்களாக போட்டு தாக்குகிறார் இயக்குநர்.

1. கூட்டிட்டுபோய் மேரேஜ் பண்ண நினைக்கலை,மேரேஜ் பண்ணி கூட்டிடு போகனும்னு நினைக்கிறேன்.

2.ஒரு பொண்ணுக்கு கணவன்,குழந்தை 2 மட்டும் தான் வீடு உலகம் எல்லாம் அப்படிப்பட்ட பொண்ணை கண்கலங்காம வெச்சு காப்பாத்த வேண்டியது ஒரு ஆணோட கடமை இல்லையா? (கே பாக்யராஜ்)

பாடல் வரிகள் சுத்தமா புரியலை.புரிஞ்சவரை மனதைக்கவர்ந்த வரி

ஆத்துக்குள்ளே அம்மிக்கல்லா போனேனே.

யாரடி நீ மோகினி படத்தில் பாலக்காட்டு பக்கத்துலே ஒரு அப்பாவி ராஜா ரீ மிக்ஸ் பாட்டு செம ஹிட்டு ஆனதால் இந்தப்படத்திலும் அப்படி ஒரு பாட்டு.

கட்டிப்பிடி கட்டிப்பிடி விட்டுப்பிடி விட்டுப்பிடி (ஆஹா,என்னே ஒரு இலக்கிய நயம்.)

இடைவேளை வரை படம் நல்லா போகுது,அதுக்கப்புறம் டப்பிங்க் படம் போல் இழுவை,நம்ப முடியாத காட்சிகள்,என்னதான் காமெடியா இருந்தாலும் லாஜிக் கொஞ்சமாவது வேண்டாமா?

கதையைப்பற்றி எல்லாம் கவலை இல்லை சும்மா ஜாலியா இருந்தா சரி என நினைப்பவர்கள் பார்க்கலாம்.வன்முறை காட்சீகள்,முகம் சுளீக்கவைக்கும் வசனங்கள் இல்லாதது படத்துக்கு பிளஸ்.

ஆனந்த் விகடன் மார்க் 43

குமுதம் ரேங்க்கிங்க்  - ஓகே

ஏ செண்ட்டர் - 75 நாட்கள் பி சி செண்ட்டர்கள்  35 டூ 50 நாட்கள்

டிஸ்கி - காலைக்காட்சி 10 மணிக்கு ஆரம்பித்து  1 மணிக்கு முடியும் (படம் 3 மணீ நேரம்)எப்படி 1 மணிக்கே விமர்சனம் எழுத முடிந்தது என சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை இந்த விமர்சனம் லேப் டாப்புடன் தியேட்டரில் இருந்தே சுடசுட எழுதப்பட்டது.ஒரு குத்து மதிப்பாக டைப் செய்ததால் எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இருந்தால் பொறுத்தருள்க.