Friday, June 24, 2011

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)

 

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..
( நீர் மனுஷன்)ஏன்னா எல்லாரும் படிக்கனும்கறதுகுத்தான் நாம் எழுதறோம்.. அதை யார் பேஸ்ட் பண்ணி போட்டா என்ன? மொத்தத்துல நம்ம படைப்பு யாருக்காவது யூஸ் ஆனா சரி.. (அப்போ என் படைப்பு யாருக்கும் யூஸ் இல்லைங்கறீங்களா? அவ்வ்வ்வ்)என் பிளாக்ல கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணி வெச்சுட்டேன்.. (ஏன்,அது என்ன குணச்சித்திர நடிகையா?மூடி மூடி வைக்க?)அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..




2. வலைச்சரம் சீனா -அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? அவரை தலைமை ஏற்று நடத்திக்கொடுக்கனும்னு உணவு உலகம் அண்ணன் பக்கத்துல உட்கார வெச்சுட்டோமில்ல.. “ நான் 2 வருடங்களாகத்தான் இந்த பொறுப்பேற்று இருக்கேன்.. வாரா வாரம் ஒரு பதிவரை எழுத வெச்சு மெயிண்டெயின் பண்றது சிரமமா இருக்கு.. ஆனா ஆத்ம திருப்திக்காக இதை பண்றேன்..புதிதாக எழுத வருபவர்களை,ஊக்குவிப்பதே என் நோக்கம்.. “





3.  பலா பட்டறை சங்கர்  - வந்த பதிவர்கள்லயே செம பர்சனாலிட்டி அண்ணன் தான்.. செம ஹேண்ட்ஸம்.. கந்த சாமி பட விக்ரம் மாதிரி இருந்தார்.. ஆர்ப்பாட்டமா ஆள் இருந்தாலும் அவரது பேச்சு ,குரல், த்வனி எல்லாம் அமைதியாவும், அவரது பக்குவத்தை ,அனுபவத்தை எடுத்து உரைப்பதாவும் இருந்தது.. 

”உண்மைத்தமிழன் உட்பட பலர் பத்திரிக்கைகளில் வந்த மேட்டர்களை பதிவா போடறாங்க.. சிலர் அதை காப்பி பேஸ்ட் என சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை அது தேவை தான். ஏன்னா புக் ஒரு வாரம் போனா அழிஞ்சுடும்,ஆனா பதிவு ரெக்கார்டா இருக்கும், நாளைக்கே அந்த டைட்டில் குடுத்து கூகுள்ல தேடுனா கிடைக்கும், நம்ம அவசரத்துக்கு உதவும்..

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது.. அதனால எழுதுவதை ஒரு பொழுது போக்கா வெச்சுக்கிட்டு  பொழப்பைப்பாருங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).. இப்போ எல்லாரும் கூகுள்  பஸ்ல கமெண்ட் போட ஆர்வமா இருக்காங்க ,பதிவு எழுதறதுல ஆர்வம் குறைஞ்சிண்டிருக்கு. இது மாறனும்.. . இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.




4. பெயர் சொல்ல விருப்பமில்லை - ஹா ஹா இவரோட காமெடி.. இவருக்கு சப்போஸ் ஒரு லவ்வர் இருந்தா .....

” டியர் .. நான் இப்போ 3 மாசம்.. முழுகாம இருக்கேன்.. இப்போவாவது உங்க பெயர் சொல்லுங்க..  

சாரி.. எனக்கு  என் பெயர் சொல்ல விருப்பமில்லை, உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வும் இஷ்டம் இல்லை.. அப்டின்னு அல்வா கொடுத்திருப்பாரோ..?

“ நான்  தளத்துல கணிதம் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டேன்.. எடுபடலை.. 

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..



5. இம்சை அரசன் பாபு.. - இவர் ஆள் பார்க்க தாதா மாதிரி இருந்தாலும் பச்ச மண்ணுய்யா.. இவரோட கிராமியம் கலந்த தமிழை கேட்பவர்கள் இவரை மறக்கவே முடியாது.. லோகோவை வைத்து இவர் முரடானவர்னு யாராவது நினைச்சா ஏமாந்தே போனீங்க.. செம சாஃப்ட் டைப்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. ஹி ஹி ) 

” நான் சீரியஸ் பதிவு எப்பவாவதுதான் எழுதறேன்... (பொதுவா நீங்க பதிவே எப்பாவாவதுதானே எழுதறீங்க? அவ்வ்வ்வ்வ்)என் பொண்ணுகிட்டே நான் வாங்குன பல்புகளை மையமா வெச்சுத்தான் நான் கதை எழுதறேன்.. (மய்யமா வெச்சு .. மய்யம்..... கமல் ரசிகரோ..?)

 பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க  பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......




6. தமிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்.. (அப்போ குஷ்பூக்கும் இவருக்கும் என்ன முறை?ன்னு கேட்கக்கூடாது)இவர் வர்ற வழில பஸ்ல மாட்டிக்கிட்டாராம். பஸ் பஞ்சராம்.. அதான் வர லேட்னார்.. ( பஸ்ல மாட்னாரா? பஸ்ல  வந்த மிஸ் பிக்கப் ஆகி அவரை விரட்னாரா ந்னு சரியா தெரில,, )




7. வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்னன் - விக்ரம் படத்துல சத்யராஜ்  தகடு எங்கேடா.. தகடு தகடு அப்டினு கேட்பாரே.. அந்த ஆள் மாதிரியே இவரு இருந்தாரு.. அவர் கன்னத்துல பெரிய தழும்பு.. இவர் உடம்பெல்லாம் கொழுப்பு..  (செம ஜாலி பார்ட்டி.. ) யோவ்.. ஏய்யா கூலிங்க் க்ளாஸ்ல வர்லை?  என கேட்டு கலாய்த்தோம்..  இவரு சரியா பேசலை.. கேட்டதுக்கு சாரி.. என் லவ்வர் கூடவே சரியா பேசமாட்டேன்னாரு.. (கூச்ச சுபாவமாம்)




8. வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது.இங்கே கலந்துக்கிட்ட பதிவர்களிலேயே  சீனியர் பதிவர்  இவர் தான்.. ( அப்போ ஜூனியர் பதிவர் ? வேற யாரு நான் தான் ஹி ஹி ) ராமலட்சுமி மேடம் யார்னா பஸ்ல இப்போ சமீப காலமா கலக்கறவங்க.. ஃபோட்டோ போட்டி நடத்தும் ஒரே பதிவர்.. செம கலக்கல் ஃபோட்டோஸ் இவர் தளத்துல இருக்கும்.. சுடறவங்க போய் சுட்டுக்குங்க.. ஹி ஹி .. 



9. ரசிகன் ஷர்புதின்.. _ இவர் சரியான லொள்ளூ பார்ட்டி.. எல்லார் தளத்துக்கும் போய் அவங்க பிளாக்கிற்கு மார்க் போடுவார்.. ஆனானப்பட்ட கேபிள் சங்கர்க்கே 50 மார்க் தானாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த பழக்கம் அவருக்கு எப்படி வந்ததுன்னா.. 

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா 






10. ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் - இவர் சம்சாரத்தோட வந்திருந்தார்

( அவரோட சம்சாரம் தான் ) ஆன்மீகப்பதிவர்... ரொம்ப அமைதியா இருந்தாரு.. அவர் மிசஸ் அவரை விட அமைதி.. ரொம்ப குடுத்து வெச்சவர் சார் நீங்கன்னேன்.. நைஸா , “தம்பி.. அண்ணி வீட்ல புலி வெளில எலி “ன்னார்.. சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 




11. லேப்டாப் மனோ..  - இவரை தெரியதவங்க யார் இருக்க முடியும்?லேட்டா தான் வந்தார்.. கூடவே ஒரு பாடிகார்டை கூட்டிட்டு வந்தார்.. பி ஏ அப்டின்னு பில்டப் குடுத்தார்.. விசாரிச்சா.. அவரோட மச்சினராம்... மச்சினியோட சுத்தற ஆள் எதுக்கு மச்சினரோட சுத்தனும்னு பார்த்தா மனோவோட சம்சாரம் சந்தேகப்பேர்வழியாம் (அவருமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மனோ என்ன பண்றார்னு கண்காணிக்க அனுப்பி இருக்காங்க.. ( என்ன பண்ணுவாரு.. தில்லு முல்லு தான் ) டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா  அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. 




12. வெறும்பய ஜெயந்த் -   சிங்கப்பூர் பதிவர்,ஆள் தளபதி தினேஷ் மாதிரி இருந்தாரு..இவருக்கு கை குடுத்து என் கையே போச்சு.. முறம் மாதிரி முரட்டு கை,.. ஆள் செம ஜாலி டைப்.. ஜோதி மேட்டர் என்னய்யா ஆச்சுன்னு கேட்டா யோவ்,, அவ என் காதலி,, மேட்டர்னா பல்லை தட்டிடுவேன்னு மிரட்னார்

13.மணிஜி , சென்னை - இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம்,நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். தண்டோரா எனும் பிளாக்கின் ஓனர். ஜாக்கிசேகரின் நெருங்கிய நண்பர்..இவர் சங்கருடன் வந்தார்.. விழாவுக்கு தாமதமாக வந்தததால் இவர் அதிகமாக  எதுவும் பேசவில்லை என நினைக்கிறேன்...ஆனால் அனைவரின் பேச்சையும் உற்று கவனித்தார்..  விழா முடிந்ததும் சங்கர் சாருடன் குற்றாலம் கிளம்பி விட்டார்.


14. ஜாக்கி சேகர் அவர்கள் வருவதாக இருந்தது,கடைசி நிமிடஅவசரப் பணியின் காரணமாக வர முடியாமல் போய் விட்டது

மீதி புது பதிவர்கள்  எனக்கு சரியா அடையாளம் தெரில,. மன்னிக்கவும்.. அடுத்து ஓ சி சாப்பாடு போஸ்ட்.. கடைசி பகுதி......நிறைவுப்பகுதி.. ( 2ம் ஒண்ணு தானே?)

தொடரும்..