Showing posts with label JEYALALITHA. Show all posts
Showing posts with label JEYALALITHA. Show all posts

Wednesday, May 09, 2012

ஜூவி சர்வே - ஜெவின் ஓர் ஆண்டு கால ஆட்சி எப்படி? - ஊஊஊஊ

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?

கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.


ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.


ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது.

கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445.


சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’


'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள்.


 மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.


ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.



புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.



ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.


இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)


ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...


சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''


செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''



சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''


வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''



நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''



லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''


சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''



முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''



ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''



கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''



காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''



சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''



வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
பாகம் 2 
மக்கள் போட்ட மார்க்!

ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்து ஒரு வருடம் முடிந்ததை அடுத்து, 'ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா ஃபெயிலா? அதிர வைக்கும் ரிசல்ட்!’ என்று, கடந்த ஜூ.வி. இதழில் மெகா சர்வே வெளியிட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து மக்களின் மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்காக, 18 கேள்விகளை உள்ளடக்கிய சர்வே நடத்தினோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் எனப் புகுந்து 3,659 நபர்களைச் சந்தித்தது ஜூ.வி. டீம். இதில் பெண்கள் மட்டும் 1,445 பேர்.   


அதில் 10 கேள்விகள் கடந்த இதழில் வெளியான நிலையில், அடுத்த 8 கேள்விகள் இந்த இதழில்... 'முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள்?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதா மாறவில்லை’ என்பதைத்தான் அதிகம் பேர் 'டிக்’ அடித்தனர். 'முந்தைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவின் செயல்பாடு...’ என்ற அடுத்த கேள்விக்கு, 'பெரிய வித்தியாசம் இல்லை’ என்றவர்கள் அதிகம்.


சசிகலாவுடன் ஏற்பட்ட பிரிவு, மீண்டும் உறவு காட்சிகளையும் சர்வேயில் கேள்விகளாகச் கேட்டு இருந்தோம். 'சசிகலாவுடனான உரசல்... பிறகு, மீண்டும் இணைந்தது?’ தொடர்பான கேள்விக்கு, 'அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று சொன்னவர்கள் 41.46 சதவிகிதம். 'சுயநலத்தால் அரங்கேறிய நாடகம்’ என்று சொன்னவர்கள் 40.67 சதவிகிதம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 0.79 சதவிகிதம்தான்.


'சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்​தியது...?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதாவுக்குத் தெரியும்’ என்று அதிகம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.


'சசிகலா நீக்கம், சேர்ப்பு விவகாரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் இமேஜ்?’ என்ற கேள்விக்கு 'பாதிப்பு எதுவும் இல்லை’ என்கிறார்கள்.  'சசிகலாவை விட்டு ஜெய லலிதா எப்போதும் பிரிய மாட்டார்’, 'சசிகலா விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதுமே நாடகமாகத்​தான் இருக்கும்’ -


  சர்வே எடுக்கச் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் மிகத் தெளிவாகக் இப்படிக் கருத்துச் சொன்னார்கள். ஓர் ஆண்டு ஆட்சியில் நடந்த முக்கிய விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு இதில் எது உங்களை அதிகம் பாதித்தது என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மின்வெட்டுப் பிரச்னையைக் குறிப்பிடுகிறார்கள்.


'ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற, மிக முக்கியமான கேள்விக்கு, 'ஜஸ்ட் பாஸ்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம்.  


ஜெயலலிதாவின் ஆட்சி, அவருடைய செயல்பாடு​கள், மின்வெட்டுப் பிரச்னை, பஸ், பால், மின் கட்டண உயர்வு, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கியது என்று அரசுக்கு எதிராக கடுமையான கருத்தை சர்வேயில் வெளிப்படுத்திய மக்கள், ஜெயலலி​தாவுக்கு ஜஸ்ட் பாஸ் என்று போட்டிருப்பது ஏன்? சர்வே ஃபாரங்களை நீட்டியதும் எல்லாவற்றுக்கும் தயங்காமல் நம் முன்பே டிக் அடித்தவர்கள், 'ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகே பலரும் மதிப்பெண் போட்டார்கள்.


ஒரு சிலரின் கருத்துக்கள் இங்கே....


கண்ணன், சேலம்: ''கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிர​மிப்புன்னு தி.மு.க. ஆட்சியில் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவே இல்லை. இப்போது சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு. கட்டப்பஞ்சாயத்தும் நில ஆக்கிரமிப்பும் இல்லை. மக்கள் பயம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. இதுவே நல்ல விஷயம்தானே!''


குமார், கரூர்: ''சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதா செய்த குளறுபடிகளை மறக்கவே முடியாது. மாணவர்கள் அனுபவிச்ச கொடுமை​யும் அதிகம். பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. இதே மாதிரி ஆட்சி செஞ்சா, ஜெயலலிதா அடுத்த எலெக்ஷன்ல டெபாசிட் வாங்க முடியாது.''



ஆறுமுகம், திருவண்ணாமலை: ''தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இந்த அரசு ஏதோ பரவாயில்லைன்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. நடுராத்திரியில கரன்ட் கட் ஆகி, தூங்க முடியாம வீதியில வந்து உட்காரும் நேரத்தில்தான், ஜெயலலிதா மீது கோபம் கோபமா வருது.''



ஜெயஸ்ரீ, திருச்சி:  ''தி.மு.க. ஆட்சியில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்​கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முதல்வருக்கு ஒரு வருஷம் போதாது. அதை எல்லாம் சரிசெய்த பிறகுதானே, மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும்? அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்குள் நிச்சயம் அனைத்தையும் முதல்வர் சரிசெய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்.''


தீபக், வேலூர்: ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராப் பக்கம் ஓடிவிட்டதாகச் சொன்னார். இப்போது நடக்கும் கொலைகளையும் கொள்ளைகளையும் பார்த்தால், வெளி மாநிலங்​களில் இருக்கும் ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஒண்ணும் சரியில்லீங்க...''



சொக்கலிங்கம், மதுரை: ''காவல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லை என்பது, நான் கண்கூடாகப் பார்த்த உண்மை. தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள் எல்லாம் செய்யாத விஷயங்களை, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாகச் செய்து முடித்திருக்​கிறார். மின் வெட்டுப் பிரச்னை உள்ளிட்ட கஷ்டங்களையும் சொல்லி ஆகணும். வேப்பம்பூ பச்சடி போல இனிப்பும் கசப்பும் கலந்த ஆட்சி இது.''


சரவணன், காரைக்குடி:  ''எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் அதிகம். நிலஅபகரிப்பு வழக்குகளில் அதிரடிக் கைதுகள் நடந்ததைப் பார்க்கும்போது, நியாயமான நடவடிக்கை என்று நினைத்தோம்.. ஆனால், உள்ளே போனவர்கள் எல்லாம் அதே வேகத்தில் திரும்பி வந்ததைப் பார்த்தால், அரசின் நடவடிக்கை மீதே சந்தேகம்தான் வருகிறது.''



கண்பத் மோகன், சென்னை: ''சட்டம் ஒழுங்கு பிரமாதமா இருக்கிறதுன்னு முதல்வர் சொல்றாங்க. ஆனால், பட்டப் பகலில் கோடம்பாக்கம் ஏரியாவுல பொண்ணுங்க கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்துட்டுப் போறாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது? முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்னதான் செய்யுதுன்னே புரியலை?''


 மக்கள் கருத்து  இன் ஜூ வி ஆன் லைன்


1.Sulaiman - Saudia2 Hours ago

 
சும்மா சொல்லக்கூடாது, கடைசியில் பிட் அடிக்க வைத்து பாஸ் மார்க் போட்டு தப்பித்துக்கொண்டீர். சந்தோஷமான விசியமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கூட்டம் 5% அளவுக்கு குறைந்து இருப்பது தான். உங்க சர்வே எதிர்கட்சிக்கு வேணுமாலும் சந்தோஷத்தை கொடுக்கலாம், ஆனால் அந்த அம்மாவுக்கு ஒரு இம்மி அளவுக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தாது.
 வேணுமானல் ஒரு எதிர்மறையான விளவை ஏற்படுத்தி உம்முடைய அலுவலகத்தில் ரைடு நடக்கலாம். ஆட்சியாளர்கள் விமர்சனங்களை எதிர்க்கொண்டு தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என்ற லாஜிக் இந்த அம்மாவிடம் எதிர்பார்க முடியாது. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்டாச்சு மக்களே இன்னும் ஒரு நாலுவருசத்திற்க்கு இப்படி புலம்பி தீர்கவேண்டியதுதான்.ஒரே ஒரு சின்ன நப்பாசை, அந்த பெங்களூரு தீர்ப்பு சீக்கிரம் வராதா தலைவா!!
2. Appan.
 
திமுக ஆட்சியிள் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இப்படி நாடு இருந்தால் முன்னேற்றம் இருக்கும். ஆனால் என்ன திமுக அதிகாரத்தை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்து விட்டார்கள். இதனால் முன்னெற்றம் இல்லாமல் பகல் கொள்ளையை திமுக செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஜெஜெ ஆட்சியில் அதிகாரம் ஜெஜெவிடமே உள்ளது. இதனால் எந்த முன்னேற்றமும், புதிய புராஜுட்டுகளும்வராது. இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டால் முடிவு துய்ரமே. சரிதிரத்தில் இப்படி அதிகாரம் குவிக்கப்பட்டு ஆட்சிசெய்தவர்கள் சமூகத்தில் மறக்க முடியாத வடுவை ஏர்படுத்தி உள்ளார்கள். இந்திரா காந்தி இப்படித்தான் செயள் பட்டார். இந்திய சரித்திரத்தில் ஒரு இருண்ட காலம் எமெர்ஜென்சி. அதோடு இந்திரா காலத்தில் இந்தியா மிகவும் பின் தங்கிய நாடாகிவிட்டது. தமிழகம் முன்னேற ஆயிரம் ஆயிரம் ஜெஜெக்கள் தேவை. ஒரு ஜெஜெவால் ஒன்னும் செய்ய முடியாடு. செங்கோடையன், பன்னீர்செல்வம் .. போன்றவர்கலால் காலிள்தான் விழமுடியும். நாட்டிர்க்கு என்ன வேண்டும் என்று சுயமாக சிந்தித்து செயல் பட முடியாது. 
சென்னை மேயர் சைதை துறை சென்னையஒ ஒரு உலகத்தரமான நகரம் ஆக்குவார் என எதிர்பார்த்தார்கள். கடைசியில் என்ன அயிற்று. திமுக சுபிரமணியெனே பரவாக இல்லை என்றாகிவிட்டது. ஐ.ஏ.எஸை உருவாக்கும் சைதை துறை ஏன் திறம்பட செயள்படமுடியவில்லை ?. ஏனென்றால் ஜேஜெ முதலிள் அந்தா ஆள் காலில் விழுவாரா என்று பார்ப்பார். காலிள்விழவிலை என்றால் ஒதுக்கப்படுவார். கலிள் விழும் அடிமை என்ன செய்ய முடியும் ? அவனையே காப்பாற்ற முடியவில்லை பின் நாட்டை பற்றி அவன் எப்படி நினைப்பான்.

3.Sulaiman - Saudia

 
சசிகலா சேர்ப்பு- அவர்கள் தனிபட்ட விசியம்?? - அடப்பாவிங்களா, நாங்க என்ன சர்வேயில் பெட்ரூம் மேட்டரா கேட்டோம்? 

நூற்றுக்கு நூறு போட்ட அந்த 195 பேரின் விலாசம் கொடுங்க பாஸ்.. காலில் விழுந்து கும்பிடனும்...!! 
4.Sriram
போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் மக்கள் எந்த அளவுக்கு மனம் மாறி நல்லவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பிரசுரித்தால் நல்லது! மக்கள் கொஞ்சமாவது மாறினால்தானே அரசு மாறும்!
5.dsad
பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. ... உங்களுக்கு சம்பளம் மட்டும் வருடா வருடம் கூட்டணும் ஆனா சேவைகளுக்கு அதிகமா விலை குடுக்க மாட்டிங்க.


DIsKI -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

Wednesday, April 11, 2012

ஓ பக்கங்கள் ஞானி கொதிப்பு, மக்களை மடையர்களாக்கும் ஜெ ,சசி, ராணுவ அமைச்சர்

பளிச் 1 :


சசிகலாவை ஜெயலலிதா திரும்ப சேர்த்துகிட்டது பத்தி அரசியல்ல இருக்கற பெரிய தலைங்க யாரும் வாயைத் திறக்கல. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் எல்லாரும் நினைக்கறப்பல தெரியுது. ஆனா எனக்கு இந்த மேட்டர், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் இந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் சரியான கேணப் பசங்கன்னு நிஜமாவே நம்பறாங்களோன்னு தோணுது. இல்லாட்டி கட்சியிலயும் ஆட்சியிலயும் ஜெயலலிதா பேரைக் கெடுக்கற வேலைங்களைத் தன் சொந்தக்காரங்க செஞ்சது 24 வருஷமா தனக்குத் தெரியாதுன்னு சசி சொல்றதை யாராவது நம்புவாங்களா? போயஸ் வூட்டை விட்டு வெளியில வந்ததும்தான் தனக்கு எல்லாம் தெரியவந்துச்சுன்னு சசி சொல்றதை ஏத்துக்கறேன்னு ஜெ சொல்றதை நாம ஏத்துக்கிட்டா, நாம எல்லாரும் கேணைங்கன்னுதானே அர்த்தம்?


சி.பி - பெங்களூர் கோர்ட்டில் கேஸ் நடப்பதால் அந்த தீர்ப்பு வருவதற்குள் தன் மேல் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க ஜெ நடத்திய நாடகம் தான் அது.. கதை வசனம் , டைரக்‌ஷன் ஜெ.. நடிப்பு சசிகலா.. ஏமாளி ஆடியன்ஸ் மக்கள்




இதெல்லாம் ஜெ, சசி சொந்த சமாச்சாரம்னு வுடமுடியாது. 24 வருஷமா ஏன் சசியைக் கூட வெச்சிகிட்டு அவங்க சொந்தக்காரங்கள்லாம் கட்சியிலயும் ஆட்சியிலயும் ஆடவுட்டாங்கன்னு ஜெ சொல்லணும். அவங்க கட்சியிலயும் ஆட்சியிலயும் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னும் சொல்லணும். அதுக்கு என்ன நடவடிக்கைன்னும் சொல்லணும். சசியை இப்ப திரும்ப சேத்துகிட்டது ஏன்னும் சொல்லணும். இனிமே என் சொந்தக்காரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாரையும் கட் பண்ணிட்டேன்னு சசி சொல்றாங்க இல்ல, முதல்ல நடராஜனுக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களான்னு சொல்லணும்.


சி.பி - நடராஜனை டைவர்ஸ் பண்ணினதா நாடகம் போட்டுட்டு  நாங்க சட்டப்படி பிரிஞ்சுட்டோம், ஆனா எங்கள் தார்மீக (!!!??? ) உறவு நீடிக்கிறதுன்னு நாடகம் போட எவ்வளவு நேரம் ஆகும்.. ?



ரெண்டு பேரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ராவணன், நடராஜன், திவாகரன், சுதாகரன்னு ஒவ்வொருத்தரா அடுத்து பழையபடி கட்சிவேலை, ஆட்சி வேலையிலல்லாம் மூக்கை நுழைக்கத்தான் போறாங்க. நாமும் பாத்துகிட்டு ஞேன்னு நிக்கப்போறோம். ஏன்னா நம்மதான் கேணைங்களாச்சே.


சி.பி - பழைய திருடி கதவைத்திறடி, நாட்டை நாசமாக்கி நாட்டு மக்களின் நம்பிக்கையை நாறடி



பளிச் 2:


ஒண்ணு ரெண்டு டி.வில ஒரு தரம் ரெண்டு தரம் காட்டினதோட சரி. பாதி பேப்பர்லஇந்த நியூசே வரல. பட்டப்பகல்ல நட்ட நடு ரோட்டுல ஒரு போலீஸ் அதிகாரி பொதுமக்களை அடிக்கறான். அவனை என்னான்னு கேக்க ஆளே இல்ல. தர்மபுரில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்துல குளறுபடி செஞ்சதுனால, வாத்யாருங்க சாலை மறியல் செஞ்சிருக்காங்க. தன் கிட்ட வந்து முறையிட்டு பேசற ஒரு ஆசிரியரை டி.எஸ்.பி சந்தனப் பாண்டியன் அடிக்கறாரு. வேணாங்க அடிக்காதீங்கன்னு கெஞ்சறாங்க அந்த ஆசிரியரோட மனைவி. அவங்களை அப்பிடியே புடிச்சுத் தள்ளறாரு பாண்டியன். அந்தம்மா அப்பிடியே பின்னால் மண்டை தரையில படறாமாதிரி ரோடுல விழறாங்க. 


இப்பிடி செஞ்ச அதிகாரி மேல என்ன நடவடிக்கைன்னு கேட்டா மாவட்ட எஸ்.பி அவர்கிட்ட விளக்கம் கேட்டிருக்குங்கறாரு. இதுல விளக்கம் கேக்க என்னா இருக்குது. டி.வில போட்டதைப் பார்த்தலே அந்த எஸ்.பிக்கு புரிஞ்சுடுமே. கொறைஞ்சபட்சம் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் பண்ணிட்டுதானே விளக்கம் கேக்கணும்…இதுக்கு நடுவுல, அடிவாங்கின ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டுப் போய் மிரட்டிக் கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு ஒரு செய்தி சொல்லுது. இது என்ன நாடா, இல்ல காடா ? ராஜபக்‌ஷே பண்ணின அக்கிரமத்துக்கு சட்டசபையில தீர்மானம் போடறாங்க. ஐ.நால தீர்மானம் போடறாங்க. உள்ளூர் ராஜபக்‌ஷேங்களைக் கேப்பாரே இல்லியா? சம்பளம் பஞ்சப்படின்னா சத்தம் போடற ஆசிரியர் சங்கமெல்லாம் இதுக்கு குரல் குடுக்க வரமாட்டாங்களா?


சி.பி - தப்பு பண்ற போலீஸ் ஆஃபீசரை டிரான்ச்ஃபர் பண்றது  தண்டனை அல்ல.. அதே தப்பை  வேற ஏரியாவில் இன்னும் ஜாக்கிரதையா செய்ய தரும் வாய்ப்பு..



பளிச் 3:


அண்ணா பல்கலைக்கழகத்துல படிச்சுகிட்டிருந்த மாணவன் மணிவண்னன் தற்கொலை பண்ணிகிட்டது அவனைத் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியா இருக்கு. தர்மபுரி மாவட்டத்துல செஙகல் சூளையில சிறுவனா இருந்தப்பவே கொத்தடிமையா இருந்த மணிவண்ணனை அதிகாரிங்க மீட்டு படிக்க உதவி செஞ்சதுல மாநிலத்துலயே 13 வது எடத்துல ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வந்திருக்கான். 


அவ்வளவு கஷ்டத்தை அவன் தாண்டி வந்து சாதிச்சதோட மட்டும் இல்ல, இப்ப கார்ப்பரேஷன் பள்ளியில படிக்கற ஏழை பசங்ககிட்ட போய் பேசி அவங்களை ஊக்கப்படுத்தற வேலையெல்லாம் செஞ்சுருக்கான்னு கிழக்கு பத்ரி சொல்றாரு. காசு திரட்டி ஏழை மாணவர்களுக்கெலாம் உதவி செஞ்சு வந்திருக்கான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகணும், ஊர்ல குடிசைல இருக்கற அம்மாவுக்கும் பிரதருக்கும் நல்ல வீடு கட்டித்தரணும், அடுத்த மாசம் தன்னோட கவிதைத் தொகுப்பை வெளியிடனும்னெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன், ஏன் திடீர்னு தற்கொலை பண்ணிக்கணும் ?


அஞ்சு செம்ஸ்டர்ல மொத்தமா 26 பேப்பர்ல பாஸாகாம இருந்த்து ஒரு காரணம்கறாங்க. ஏதோ காதல் தோல்வி இன்னொரு காரணம்கறாங்க. மாநிலத்துலயே .13வது எடத்துல வந்த பையன், காலேஜ்ல பேப்பர் அரியர்ஸ் வெக்கறான்னா, ஏன்னு ரெண்டாவது செமஸ்டர்லயே வாத்யாருங்க கவனிக்கமாட்டாங்களா? அவனைக் கூப்பிட்டு என்னாப்பா ப்ராப்ளம்னு பேசிக் கண்டுபிடிக்கமாட்டங்களா? லவ்வுதான் பிரச்சினை, அதுனாலதான் படிப்பை கவனிக்கலேன்னா அத்த எப்பிடி ஹேண்டில் பண்ணணும்னு சொல்லறதுக்கு டாக்டருங்க மாதிரி யாரும் ஆளு காலேஜ்ல இல்லியா? 


மணிவண்ணன் மீதி பசங்களுக்கு உற்சாகம் குடுத்து பண உதவி பண்ணி அவங்களும் தன்னைப் போல நல்லா படிச்சு மேல வரணும்னு சொல்ற அறிவிருக்கற பையன். அவனுக்கு ஒரு பிரசினைன்னா இப்பிடி தீர்த்துக்கலாம்னு சொன்னா அவனால புரிஞ்சுக்கமுடியும். அத்த செய்யவே காலேஜுல ஆள் கெடையாதா? அப்ப, மணிவண்ணன் மாதிரி கூட இல்லாத சாதாரண பசங்க கதி என்னாகும் ? எல்லாரும் சினிமால தனுஷ் திரியறா மாதிரிதானே ஆவாங்க? தனுஷ் படத்தைப் பாத்து பசங்க உருப்பட முடியுமா ? காலேஜுல பாடம் சொல்லித் தந்தா மட்டும் போதாது. மனசை எப்பிடி வெச்சுக்கணும்னு சொல்லித் தர்ற வாத்யாருங்களையும் கூடவே போடணும்


சி.பி - மர்மமான மரணங்கள் பெரும்பாலும் கடைசி வரை மர்மமாகவே முடிஞ்சுடுது.. என்ன நடந்தது?ன்னு மக்களுக்குத்தெரியாமயே போயிடுது

.
பளிச் 4:


எவ்வளவு நல்ல மனுஷன்.. இப்பிடி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு நான் பேசின ஒருத்தர் கூட சொல்லல… திருச்சி தி.மு.க பிரமுகர் ராமஜெயம் கொலையைப் பத்தித்தான் சொல்றேன். எல்லாரும் இப்பிடி கொடூரமா கொன்னிருக்கவேணாமேன்னு சொல்றாங்களே தவிர, நல்ல மனுஷன்னு சொல்லமாட்டேங்கறாங்க. இறந்தவரு யாரோ கொஞ்சம் பேருக்காவது நல்லவரா இருந்திருப்பார்ங்கறதுல எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா பெரும்பாலானவங்க அப்பிடி நினைக்கல. இதுதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான அரசியல் பிரமுகர்களோட நிலைமை. ஜனங்க யாரும் அவங்களல ஒருத்தரையும் நல்லவங்கன்னு சொல்லக் கூடிய மன நிலையிலயே இல்லை. கொலை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்ட விதமும் பரிதாபத்தை ஏற்படுத்துதே தவிர, இருந்தப்ப இவங்கள்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னுதான் சாதாரண மக்களே பேசறாங்க.


அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதைக் கொஞ்சம் தீவிரமா சிந்திக்கணும். மேலயிருந்து கீழ வரைக்கும் ஒவ்வொரு கட்சியிலயும் அதிகாரத்துல இருக்கறவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு மக்கள் கிட்ட நல்ல பேரே இல்லை. தங்களுக்கு வேற வழியில்லாமதான் மக்கள் இவங்களை சகிச்சுகிட்டு இருக்காங்க. இப்பிடியே போனா இன்னும் பத்து வருஷத்துல ரெண்டுல ஒண்னுதான் நடக்கும். ஓட்டு போடவே ஜனங்க வரமாட்டாங்க


. இல்லாட்டி, எவன் வந்தாலும் ரவுடித்தனம் பண்ணி காசை சுருட்டப்போறான். எனக்கு இப்பவே எவன் நிறைய குடுக்கறானோ அவனுக்கு ஓட்டு போட்டுத் தொலைக்கறேன்கற நிலைக்கு மக்கள் வந்துடுவாங்க. ரெண்டும் நாட்டுக்கு நல்லது இல்ல. மக்களுக்கும் நல்லது இல்ல, அரசியலுக்கும் நல்லது இல்ல.


சி.பி - இப்பவே கிட்டத்தட்ட அந்த நிலைமை வந்துடுச்சே? எவன் யோக்கியன்? அப்டினு மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? எரியற கொள்ளில எது நல்ல கொள்ளி? அல்லது இந்த தடவை அதிமுக அடுத்த டைம்  திமுக அப்டிங்கற மன நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்களே.. 


பளிச் 5 


இந்த பட்ஜெட்ல ராணுவ செலவு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்துடுச்சு. (1,93,407 ! ). ஆனா ராணுவ தளபதி நம்ம கிட்ட இருக்கற ஆயுதம் வெடி மருந்தெல்லாம் போதாது. இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும், எல்லா ஆயுதமும் பழசாப் போச்சு, அது இதுன்னு குண்டு போட்டுகிட்டே இருக்காரு. இவ்வளவு பணம் குடுக்கறாங்களே புச்சா வாங்கவேண்டியதுதானேன்னா, ஓட்டை உடைசல்லாம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறாங்கன்னு வேற சொல்றாரு. இதுக்கு முன்ன எந்த ராணுவ தளபதியும் இவ்வளோ ஒப்பனா எல்லாத்தையும் போட்டு உடச்சதே கெடையாது. 


பொதுவா அரசாங்க அதிகாரிங்க, ராணுவ அதிகாரிங்களுக்கெல்லாம் ரிட்டையராயி ரெண்டு மூணு வருஷம் வேற போஸ்ட்டிங் எதுவும் வராதுன்னு தெரிஞ்சப்பறம்தான் மனசாட்சின்னு ஒண்ணு புச்சா வந்து உறுத்த ஆரம்பிக்கும். இவுருக்கு ரிட்டையர் ஆவறதுக்கு முன்னாடியே மனசாட்சி கொஞ்சம் ஒர்க் ஆவுது போல..


மிலிட்டிரிக்கு ஆயுதம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறது ரொம்பப் பழைய விஷயம்.. போபர்ஸ் கேசே அதானே…அது வெளியில வந்து ராஜீவ் ஆட்சி அவுட்டானப்பறம் வந்தவரு தேவ கவுடா, அவுரு கிட்ட கூட லஞ்சம் குடுக்க வந்தாங்கன்னு அவரு மகன் குமாரசாமி சொல்லியிருக்காரு. கவுடா என்கிட்ட வரல,அவன்கிட்ட வந்திருப்பாங்கன்னு சமாளிக்கறாரு.

 ஒவ்வொரு ஆட்சியிலயும் வராங்க, குடுக்கராங்க, வாங்கிக்கறாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன..மொதல்ல இந்த ராணுவ பட்ஜெட்டை கொறைக்கணும். வெட்டியா அங்கே கொட்டற பணத்தை விவசாயத்துலயும் ஆஸ்பத்திரிலையும் படிப்புலயும் செலவு பண்ணா நாடு நெஜமா ஆரோக்கியமா இருக்கும். 


ஆனா, அப்பிடி செய்ய அதிகாரிங்க வுடமாட்டாங்க. பொய்யாவாச்சும் எல்லையில ஆபத்து. இங்கே ஊடுருவல்னு கதை விட்டுகிட்டு இன்னும் ராணுவ செலவை ஏத்திவிட்டுகிட்டேதான் இருப்பாங்க. அப்பதான் கொள்ளையடிக்க முடியும். அதுல அவங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்க முடியும்.அதுக்காக பொய்யா தேசபக்தியைக் கெளப்பி விட்டுடுவாங்க.


ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, செலவு எல்லாத்தையும் தனியா கணக்குத் தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு சுயேச்சையான அமைப்பை வெச்சு நடத்தினாதான் இதையெல்லாம் சரி பண்ண முடியும்.


சி.பி - நாட்ல எந்த ஊழலையும் தாங்கலாம், பாதுகாப்புக்கே பங்கம் விளைவிக்கும் ராணுவத்தில்  ஊழல் வந்தால்?


பளிச் 6


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தின அரசாங்கம் கேட்டுகிட்டபடி அவங்க சாகும்,வரை உண்ணாவிரதத்தை நிறுத்திகிட்டாங்க. ஆனா, அரசாங்கம் பதிலுக்கு தான் சொன்னபடி எதையும் ஒழுங்கா செய்யல. கைதான் 150 பேரை விடுதலை செய்யாம, வெறுமே ஜாமீன்ல மட்டும்தான் விட்டிருக்காங்க. இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்கு ஜாமீனும் கொடுக்காம தொடர்ந்து காவலை நீட்டிச்சுகிட்டே இருக்காங்க. வேணும்னே பல தொண்டு நிறுவனங்கள்ல ரெய்டு நடத்திகிட்டிருக்காங்க.ஒரு எடத்துலயும் ஒண்ணும் உருப்படியா குற்றம் சாட்டறமாதிரி கிடைக்கல.


அடுத்து உதயகுமார் மேல கிரிமினல் கேஸ் இருக்கறதுனால, அவரோட பாஸ்போர்ட்டை சரண்டர் பண்ண சொல்றாங்க. அப்பிடிப் பாத்தா நம்ம பார்லிமென்ட்ல 160 எம்.பிகளோட பாஸ்போர்ட்டை பறிமுதல் பண்ணியிருக்கணும். அவங்க பேர்லயும் கிரிமினல் கேசெல்லாம் இருக்குது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில கோர் ட் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்கற மாறன் பிரதர்சுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வெச்சுகிட்ட மாதிரி தெரியல.


போபால் விபத்து நடந்த உடனே அதுக்குப் பொறுப்பான கம்பெனி தலைவர் ஆண்டர்சனுக்கு தனி விமானம் ஏற்பாடு செஞ்சு அமெரிக்காவுக்கு தப்பிச்சுகிட்டு போறதுக்கு வேலை பாத்தவனெல்லாம் அதை எதிர்க்கறவங்க பாஸ்போர்ட்டை பிடுங்கப் பார்க்கறாங்க. நாளைக்கு கூடங்குளத்துல விபத்து நடந்தா முத வேலையா தனி விமானத்துல ரஷ்யன்களையெல்லாம் அனுப்பிடுவாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.


சி.பி - கூடன் குளம் இயங்கட்டும் , சோனியா குடும்பம் அங்கே குடி பெயரட்டும் பார்க்கலாம்.. 


பளிச் 7 


இந்த சினிமா முதலாளிங்க அழும்பு தாங்கவேமுடியல… அவங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சம்பள விஷயமா பிரச்சினைன்னா, சட்டப்படி அதைப் பேசி முடிக்க உதவி செய்யறதுக்குத்தான் தொழிலாளர் நல ஆணையர் இருக்காரு. இத்தனை நாள் அவர் கிட்ட போய் பேசிகிட்டிருந்தவங்க இப்ப பேச முடியாதுங்கறாங்க. அவுரு தொழிலாளருக்கு ஆதரவா இருக்கறாராம். ஆமா, அதுக்குத்தான் அந்த டிபார்ட்மெண்ட்டே வெச்சிருக்கு.


 ரெண்டு தரப்புக்கும் பாதிப்பு இல்லாம சமரசம் செய்ய முயற்சிக்கறதுதான் அவர் வேலை. தொழில் தகராறுல அரசாங்கத்துகிட்டயே போய் பேச முடியாதுன்னு சொல்ற முதல் ஆளு இந்த சினிமா முதலாளிங்கதான். அவர்கிட்ட பேசி தீர்வு வராட்டி அடுத்த கட்டம் லேபர் கோர்ட்,லேபர் டிரிப்யூனல்தான். நல்ல முதலாளிங்க பொதுவா லேபர் கமிஷனர் மட்டத்துலயே பேசி தீர்வுக்கு வந்துடுவாங்க. பிரச்சினை முடியற சமயத்துல க்ளைமாக்ஸ்ல வந்து சொதப்பாதீங்கப்பா…


சி.பி - இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவங்க வேற வருஷா வருஷம் கொடியை பிடிக்கறாங்க..  ஹீரோவுக்கு கோடிக்கணக்குல சம்பளம் தர யோசிக்காதவங்க அடி மட்ட ஊழியர்களுக்கு 100 ரூபா தர யோசிக்கறாங்க  ஹூம்


பளிச் 8:


படிச்சதுல பிடிச்சதுன்னு இந்த வாரம் ஒண்ணை சொல்லணும்னா, அது ஒரு பழைய விஷயத்தைப் பத்தி புதுசா படிச்சதுதான். மார்ச் கடைசியிலதான் ஷேக்ஸ் பியர் பொறந்த நாளை உலக நாடக தினமா உலகம் முழுக்க கொண்டாடறாங்க. தமிழ்நாட்டுல கொண்டாடற நிலைமை இல்லை. இங்கே நாடகம்னா என்னன்னே குழம்பிப் போச்சு இல்லையா.. 


டி.,வி சீரியலை நாடகம்னு சொல்லிகிட்டிருக்காங்க. தமிழ் நாடகக்காரங்க மறக்கவே கூடாத கலைஞர்கள்ல ஒருத்தரான எம்.ஆர்.ராதா 1954ல திருச்சில ராமாயணம்னு ஒரு நாடகம் போட்டப்ப அடிச்ச் போஸ்டரை ஃபேஸ்புக்ல சந்திரன் வீராசாமி எடுத்துப் போட்டிருக்காரு. படிச்சேன். என் ராமாயணம் நாடகத்தைப் பாத்துட்டு மனசு புண்படறங்க யாரும் என் நாடகத்துக்கு வரவேணாம். அவங்க காசும் எனக்கு வேணாம். மீறி வந்து மனசு புண்பட்டா நான் அதுக்கு ஜவாப்தாரியில்லைன்னு போஸ்டர்லயே அடிச்சிருக்காரு. இன்னிக்கும் எதுக்காவது மனசு புண்படறேன்னு சொல்றவங்களுக்கு இதுல ஒரு அட்வைஸ் ஒளிஞ்சிருக்கு, இல்லியா?


ராதாவுடைய நாடகங்களை ஒடுக்கறதுக்குன்னே அந்த வருஷம் காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலத்து நாடகத் தணிக்கை சட்டத்தை திரும்பக் கொண்டு வந்தாங்க. சட்டத்துலருந்து தப்பிக்க, ராதா தன் நாடகத்தோட பேரை மட்டும் மாத்திகிட்டே இருந்தாரு. பெரிய அவமானம் என்னன்னா, அந்த சட்டம் இன்னும் தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு…! எந்த திராவிடக் கட்சியும் அதை நீக்கலே..


சி.பி - நாடகம் போடறதுல மன்னர் நம்ம கலைஞர் தான்.. என்னமா நடிக்கறாரு எல்லா விஷயத்துலயும்.. அதுவும் ஒத்திகையே இல்லாம?



பளிச் 9


இந்த வாரம் எனக்குப் பார்த்ததுல பிடிச்சது ஒரு சினிமா. விண்மீண்கள். பழைய டைரக்டர் சங்கரோட பேரன் விக்னேஷ் எடுத்திருக்காரு. புது கேமராமேன் ஆனந்த். அவங்க சித்தப்பா பிரபலமான கேமெராமேன் மணிகண்டன். அப்பா சினிமா பற்றின புத்தகத்துக்கு ஜனாதிபதி விருது வாங்கின ஓவியர் ஜீவானந்தன். பொறக்கறப்பவே மூளை வளர்ச்சி குன்றின நிலையில பொறக்கற குழந்தை வாலிபனாகி காதலை சந்திச்சா என்ன ஆகும்னு சொல்ற கதை. சின்னச் சின்ன ஓட்டைங்க இருந்தாலும், மசாலா பண்ணாம, நல்லா சொல்லியிருக்காங்க.


 கேரக்டர் ரோல்ல காமெடியன் பாண்டியராஜனுக்கு வித்யாசமான வாய்ப்பு. கூட நடிச்சவங்க எல்லாரும் பெரும்பாலும் புதுசு. ஆனா நல்லா நடிச்சிருக்காங்க. நல்ல ஒளிப்பதிவு. ஆனா இந்தப் படத்தை படிச்ச, எலைட், ஐ.டி க்ரூப்ஸ் உட்பட இண்ட்டெக்சுவலுங்க யாரும் சரியாவே ஆதரிக்கல. எல்லாரும் கொலை வெறிலதான் அலையறாங்களே தவிர கலைவெறியைக் காணோம். அப்பறம் எப்பிடி நல்ல படம் வரும் ?


பளிச் 10


அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யற நேரம் வந்துடுச்சு.போன தடவை நான் எழுத்தாளர் மகாஸ்வேத தேவி பேரை ரெகமெண்ட் பண்னேன். யார் கேக்கறாங்க. பிரதிபா வைப் போட்டுட்டாங்க. சரி மொத பெண்மணின்னு ஓகே சொன்னோம். அது தேறல.. சொந்தபந்தங்களோட ஊர் சுத்தறதுக்கே 200 கோடியை அழிச்சுடுச்சாமே. இந்த தடவை பாத்து போடணும். தமிழ்நாட்டுல மாபெரும் ஊழல் அரசியலுக்குப் பிதாமகரா இல்லாம இருந்திருந்தார்ன்னா நிச்சயம் கலைஞர் கருணாநிதியை ஜனாதிபதி ஆக்கணும்னு சொல்லியிருப்பேன். இப்ப ம்ஹூம். என்னோடசாய்ஸ் காந்தியோட பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. உங்க சாய்ஸ் வேற இருந்தா எழுதி அனுப்புங்க..


 சி.பி - நல்லதோ , கெட்டதோ  வாரிசுகளை ஒழிக்கனும். வேற ஆளே சிக்கலையா?


——————

நன்றி 
கல்கி 7.4.2012

Wednesday, March 14, 2012

ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Monday, February 20, 2012

கோர்ட்டில் சசிகலா - மெஸ்சில் ஜெ - இட்லி, ஜெட்லீ, நெட்லீ - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/01/jayalalitha-sasikala-tamil-cartoon.jpg 

64 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கணவன் - மனைவி அன்பு குறித்து இட்லி கதை ஒன்றைக்கூறினார்.


 சி.பி - இன்னொரு ஜோடியை சேர்த்திருந்தா கூட்டுத்தொகை 9 வந்திருக்கும், ராசியன நெம்பர்,.. அடடா ஜஸ்ட் மிஸ்..

"
வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சி.பி - அதெப்பிடி? இப்போவெல்லாம் மினிமம் 2 டம்ளர் அரிசி ஊறவெச்சாக்கூட  2 எடசு ( 24 இட்லி) வருமே?

சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே

 சி.பி - அது ரொம்ப ஈஸி ஆச்சே, கிச்சன் ரூம்ல போய் நங்க்னு  டம்ளரை வைக்கலாம், 3 குண்டாவை உருட்டலாம், புருஷன் புரிஞ்சுக்குவான் ( ஹி ஹி எங்க வீட்டுல அப்படித்தான்)

 இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க,

சி.பி - கணவனின் நண்பன் பேரு அண்ணாத்துரையா? சுருக்கமா அண்ணான்னு  கூப்பிடறாரா? 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


 

கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

சி.பி - இந்தக்கதை நடந்து 50 வருஷங்கள் இருக்கும்னு நினைக்கறேன், ஏன்னா இந்தக்காலத்துல சம்சாரங்க எல்லாம் அடுப்புல 2 தோசைக்கல் வெச்சு தோசை சுட்டுட்டே டக டகன்னு கிச்சன் ரூம்லயே சாப்பிட்டு முடிச்சுடறாங்க... அவங்க எப்ப சாப்பிடராங்க அப்டிங்கறதை  கண்டு பிடிக்கவே முடியறதில்லை

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

சி.பி - போயஸ் தோட்டத்துல ஏதோ ஸ்டோரியோ போபியா பீதியா அப்டினு ஒரு பழக்கம் இருக்கு போல, சூப்பர் ஸ்டார் ஆகட்டும், புரட்சித்தலைவி ஆகட்டும் மேடை ஏறும்போதே கதை சொல்ல ரெடி ஆகிடறாங்க.. 


சொத்து குவிப்புக்கும், ஜெ.,வுக்கும் சம்பந்தமில்லை: தானே பொறுப்பு என சசிகலா கண்ணீர்


பெங்களூரு: ""ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தாலும், நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டவில்லை. நானே முழுமையாக பொறுப்பை கவனித்தேன். சொத்து குவிப்பு குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு,'' என, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலா தெரிவித்தார்; அத்துடன் கண்ணீர் விட்டு அழுதார்.


சி.பி - எனக்கு என்ன டவுட்னா புரட்சித்தலைவி முன்னாள் நடிகை அதனால அவங்க அழுதாக்கூட ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு அசால்ட்டா விட்டுடலாம், ஆனா நடிகையர் திலகம் சாவித்திரி ரேஞ்ச்க்கு அக்கா அழுது இருக்காங்கன்னா உண்மையிலேயே அவங்க நடிப்பை பாராட்டனும்.. 



http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-1.jpg
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது

 சி.பி - ஆமா, அந்த கேஸ் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.நடந்து வருகிறது.நடந்து வரும்.. முப்பொழுதும் உன் கேஸ்கள்


 இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, தனக்கு ஆங்கிலம் தெரியாது. தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, தமிழில் கேட்டு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியதை, பெங்களூரு சிறப்பு கோர்ட், கர்நாடக ஐகோர்ட் நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


சி.பி - சசிகலா அக்கா ஒரு தப்பு பண்ணிட்டாங்க, எனக்கு தமிழும் தெரியாது, பேச மட்டும் தான் தெரியும், படிக்கத்தெரியாது, அதனால கேஸ் விபரங்களை யாராவது டெயிலி ஒரு பக்கம் மட்டும் படிச்சு காட்டுங்க  அப்டின்னு சொல்லி இருந்தா 18,780 பக்கம் உள்ள அந்த கேஸ் டீட்டெய்லை படிக்கவே  47 வருஷங்கள் ஆகி விடும் எஸ் ஆகி இருக்கலாம் ஜஸ்ட் மிஸ்..

இந்நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர், சுதாகரன் வழக்கறிஞர் சரவணகுமார், இளவரசி வழக்கறிஞர் அசோக் ஆகியோர் ஆஜராகினர். சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, மார்ச் 2ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, அவரிடம் மார்ச் 3, 4ம் தேதிகளில் விசாரணை வைத்துக் கொள்ள வேண்டும் என, அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
ஆச்சார்யா கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. சிறப்பு கோர்ட் விசாரணை செய்ய தடை எதுவும் கூறவில்லை. எனவே, இன்றே விசாரணை துவங்க வேண்டும்' என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சசிகலா கோரிக்கையை நிராகரித்தார். இன்றே விசாரணை துவக்கப்படுகிறது' என்றார். இதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் மூலம் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் பெயர், அப்பா பெயர், முகவரி, என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.


சி.பி - என்ன தொழில்? கேள்விக்கு ஊரை அடிச்சு உலையில் போடறது, நிலங்களை அபகரிச்சு ஆட்டமா ஆடறதுன்னு உண்மையை சொல்லி இருப்பாங்களா?  
நீதிபதி: இவ்வழக்கில் சாட்சிகள் கூறிய வாக்கு மூலங்களின் விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?

சி.பி - சாரி யுவர் ஆனர் எனக்கு ஆதி மூலம், நதி மூலம், ரிஷி மூலம் மட்டும் தான் தெரியும் ஹி ஹி 
சசிகலா: என் வக்கீல்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.

சி.பி - அக்காவுக்கு ஒரு வக்கீல் வெச்சா பத்தாது போல, பல கேஸ்ல மாட்டுன கேஸ்ங்க எல்லாம் பல வக்கீல் வெச்சுத்தானே ஆகனும்? ஹி ஹி 


கேள்வி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக உள்ளீர்களா? ஜெயலலிதாவும் பங்குதாரராக உள்ளாரா?


சி.பி - எஸ் யுவர் ஆனர், நாங்க 2 பேரும் எல்லாத்துலயும் 50 -50 பார்ட்னர்ஸ்.. ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி சீன் போடுவோம், பிரச்சனை சரி ஆனதும் பழைய படி சேர்ந்துக்குவோம் ஹி ஹி 
பதில்: நான் பங்குதாரராக உள்ளேன். ஜெயலலிதாவும் பங்குதாரராக இருக்கிறார். நிர்வாகத்தை முழுமையாக நானே கவனித்து வருகிறேன். அவர்கள் (ஜெயலலிதா) இந்த நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்.


சி.பி - ஜெ எந்த முடிவும் எடுக்க மாட்டார், எல்லாமே இவங்க தான் எடுப்பாங்கன்னா இப்போ பொம்மை யாரு? ரிமோட் கண்ட்ரோல் யாரு?  


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/IN19_JAYA_SASI_OPS_868555g.jpg
இதைத் தொடர்ந்து, சசிகலாவிடம் சென்னை தி.நகர், ஆலந்தூர், செய்யூர், தி.வி.., தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டடங்கள், நிலங்கள், வீடுகள் வாங்கப்பட்டது குறித்தும், எந்த பணத்தில் வாங்கப்பட்டது, பல இடங்களில் சொத்துகள் வாங்கியபோது, அவற்றின் மதிப்பை குறைவாகப் போட்டு, முத்திரைத் தாள் கட்டணம் குறைவாகச் செலுத்தப்பட்டது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சசிகலா பதிலளிக்கையில், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் நிறுவன வருமானத்திலும் சில சொத்துகள், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை சந்தா, விளம்பரப் பணத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன் ஒன்றரை கோடி ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் 75 லட்சம் ரூபாயும், வங்கிகளில் 20 லட்சம் ரூபாயும் அதிக பற்று பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தில் தான் இந்த சொத்துகள் வாங்கப்பட்டன என்றார்.
தி.நகர், முருகேஷ் தெருவில் கோபால்சாமி என்பவரின் வீட்டை, சுதாகரன் நேரில் சென்று விலை பேசினார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 29 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, இரண்டு லட்சம் ரூபாயை கோபால்சாமியிடம் அட்வான்சாக கொடுத்தார். அப்போது இந்த வீடு, சசிகலாவுக்கு என, சுதாகரன் மிரட்டி வாங்கினார் என கேட்டதற்கு, எனக்கு ஒன்றும் தெரியாது என, சசிகலா கூறினார். செய்யூரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கியது குறித்து கேட்டதற்கு, சிக்னோரா எண்டர்பிரைசஸ், ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவன வருமானத்தில் தான் வாங்கப்பட்டது என்றார்.

 சி.பி - ஆச்சரியமா இருக்கே? என்ன விலை நிலவரமோ அதுல பாதிக்கு பாதி ரேட் குடுத்திருக்காங்க, ஆனா தெலுங்கு டப்பிங்க் படத்துல  எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கறாங்களே.. ?



விசாரணையின் போது, இரண்டு, மூன்று முறை அனைத்து நிர்வாகத்தையும் நானே கவனித்து வருகிறேன். இதில், ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. சொத்துகள் வாங்கிய குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவும் தன்னிடம் விசாரணை நடத்திய போது தான், "சைலன்ட் பார்ட்னர்' என கூறியுள்ளார் என்பதையும் விளக்கினார். இவ்வாறு கூறிய போது, சசிகலா கண் கலங்கினார்.


சி.பி - சைலண்ட் பார்னர்னா சத்தம் இல்லாம கூட்டாளி கழுத்தை கடக்குனு வெட்டறதா?
* சசிகலாவிடம் காலை 11.35 மணிக்கு, கேள்விகள் கேட்கும் பணி ஆரம்பமானது.
* சசிகலா பதில் கூற ஆரம்பிக்கும் முன், தன் இரு கைகளையும் கூப்பி வணங்கி கொண்டார்.

சி.பி - என்னது? அக்கா வணக்கம் எல்லாம் போட்டாங்களா? அடேங்கப்பா, பணிவுதான்
* அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். குரல் வலிமை மிகவும் குறைந்து இருந்தது. அவரது சத்தம் குறைவாக இருந்ததால், கூறும் பதில், மொழி பெயர்ப்பாளருக்கு சரியாக கேட்காமல், பல முறை திரும்பிக் கேட்டார்.
* கண்களில் இருந்து கண்ணீர் வந்ததால், அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தபடி இருந்தார். சில நேரங்களில் கண்களில் இருந்து தண்ணீர் வடிந்தது.


சி.பி - அது என்ன பிரச்சனைன்னா கிளிசரின் போடறப்ப இங்க் பில்லர்ல 2 சொட்டு மட்டும் போடனும், அக்கா அவசரத்துல ஸ்பூன்ல நிறைய போட்டுட்டாங்களாம்.. 
* காலை 11.35 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை 25 கேள்விகளும், மூன்று மணியிலிருந்து 3.45 வரை 15 கேள்விகளும் என, மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.
* மாலை 6 மணிக்கு சென்னை விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்ததால், அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
* இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்.
* சசிகலா வழக்கறிஞர் கூறுகையில், "ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது' என்றனர்.

சி.பி - ஜட்ஜய்யா வீட்ல இருந்து புளி சாதம் கழறி எடுத்துட்டு வந்து தந்து வழக்கை விசாரிக்கனும் அடங்கொய்யால
* கடந்த முறை போன்றே இம்முறையும் சசிகலா அமைதியாக வந்து, அமைதியாகச் சென்றார்.
* .தி.மு.., வினர் யாரும் வரவில்லை. இரண்டு போலீசார் மட்டும் அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.


http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg

 மக்கள் கருத்து 

1. மதுரை விருமாண்டி -ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது" என்றனர். - ஜெயில் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்று கொடநாட்டிலே தங்குறதுக்கும் பெர்மிஷன் வாங்கியிருங்க.. இவ்வளவு செஞ்ச நீதிபதி, இதைக் கூட செய்ய மாட்டாரா என்ன ?

2. காவேரிப்பட்டனம் முனியண்டி -ஆஹா.. சசி இப்படி சொன்னதற்கான பரிசு.. இன்று அவர் கணவர் நடராஜன் கைது நாடகம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாடகமே நாட்டை ஆள்வதைப் பார்த்ததில்லை. இது தமிழனுக்கு கொடுமையிலும் கொடுமை. பெங்களூர் நீதிபதி மல்லிகார்ஜூனே மற்றும் வழக்கறிஞர் ஆச்சார்யா இருவரும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்டுக்கொண்டிருக்கும் கேனயர்களா என்ன.? இறைவன் ஒருவன் இருக்கின்றான்.. இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் பதுங்கியே இருக்கின்றான் என்பதை மட்டும் இந்த நாட்டையாளும் நாடகக் கோமளவல்லிகள் புரிந்துகொண்டால் சரி.. நீண்ட நாட்களுக்கு கிளிசரின் வேலைசெய்யாது. பாட்டியம்மா எனக்கு ஒன்றும் தெரியாதென்பாராம்.. அவரது தோழியை தன்னைவிட்டு விலக்கிவைத்து அவரையே கைகாட்டிவிட்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவாராம்.. அவரது தோழியும் அதையே ஒப்புக்கொள்வாராம்.. ஆனால் தோழியின் சுற்றங்கள் சுற்றிவளைக்கப்படுவார்களாம்.. இந்தக் கதையையும் இளிச்சவாயத் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்று நம்பி நாடகம் ஆடுகிறார்களே.. என்னத்தைச் சொல்ல.. தமிழா விழித்துக்கொள்

3. திண்டுக்கல் சாரதி -தன் கூட இருந்த உயிர் தோழி நல்லவளா கெட்டவளா என தெரிந்து கொள்ளவே இருபது வருடம் ஆகி இருக்கிறது ஒருவருக்கு. அவரை மிக சிறந்த நிர்வாகி ,administravite பவர் அதிகம் என்று சிலர் சொல்லுகிறார்கள்

4, அமெரிக்கா ஆல்பர்ட் - இந்த செய்தியை விட தமிழர்கள் இச்செய்தியை எடுத்துக்கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கறது. ஒன்று மட்டும் நிச்சயம், தமிழர்கள் அறிவாளிகள், புத்திசாலிகள் என்ற வர்ணனை எல்லாம் ஹம்பக். ஐ.எஸ்.ஐ குத்தப்பட்ட அக்மார்க ஏமாளிகள். எதற்க்கு இவர்களுக்காக நம் முன்னோர்கள் விடுதலையும், ஜனநாயகத்தையும் வாங்கி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு கொஞ்சம் நடிப்பு திறன் உடைய கொடூர சர்வாதிகாரியே போதும். They deserve that much. உலகத்தின் மிக பிந்தங்கிய நாடுகள், கலாசரங்கள் இன்னும் 100 அல்லது 300 வருடங்களில் வளம் பெற்றுவிடும், ஆனால் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவம் வராது. வாழ்க தமிழ் மக்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ2su8tlN9MGOw7wkONgUuwUc5uXDozY04L0cENJAbz1KRqEOf8qXyDvfHpcBhXAjvJJTbrWNdM8bZgTkxzEJuW2_N-eZLy7biy2F3VcwpAXacAsfbwCwUUUgR9xJI7X7LO2JcI2JsnX4F/s1600/WR_202612.jpeg