Showing posts with label ஸ்டீபன்(2025)-தமிழ்-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஸ்டீபன்(2025)-தமிழ்-சினிமா விமர்சனம். Show all posts

Monday, December 08, 2025

ஸ்டீபன்(2025)-தமிழ்-சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் திரில்லர் )@நெட்பிளிக்ஸ்

               


       பெரிய பட்ஜெட் படங்களை இனித்திரையிட மாட்டோம்.அவற்றால் எங்களுக்கு நட்டமே!புதிய படங்களை நாங்களே தயாரித்து வெளியிடுவோம் என்ற ஆரோக்யமான அறிவிப்பை வெளியிட்ட நெட் பிளிக்ஸ் பிள்ளையார் சுழியாக ஆரம்பித்து வைத்த இந்தப்படம் திரைக்கதையில் அசத்துகிறது.


வன்முறை தூக்கலாக இருப்பதால் அனைவருக்குமான படம் இல்லை இது.  5/12/2025 முதல்  திரை அரங்குகளில் வெளிவராமல் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆக நெட்பிளிக்சில் வெளிவந்துள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.நாயகி ஒரு மனோவியல் மருத்துவர்.இருவரும் ஸ்கூல்மேட்ஸ்.இருவரும் இணைந்து ஒரு கேசை டீல் செய்ய வேண்டி வருகிறது.


வில்லன் ஒரு சைக்கோ சீரியல் கில்லர்.9 பெண்களைக்கொலை செய்தவன்.கொலை செய்து விட்டு அவனாகவே போலீசில் சரண்டர் ஆகிறான்.

எதனால் இத்தனை கொலைகள்? ஏன் அவனாகவே சரண்டர் ஆகிறான்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை திரைக்கதை சொல்கிறது.


இந்த ஒன் லைன் கதையைக்கேட்டால் அட போங்கப்பா.இது மாதிரி பல படஙகளைப்பார்த்தாகி விட்டது என சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.


வில்லனின் அப்பாவும் ஒரு சைக்கோ ,அவருக்கு முடியாமல் ஹாஸ்பிடலில் படுத்திருக்கும்போது கிடைச்சுதுடா சான்ஸ் என வில்லனின் அம்மாவும் சைக்கோ அவதாரம் எடுக்கும் காட்சிகள் எல்லாம் அபாரம்.


வில்லன் ஆக மெயின் ரோலில் கோமதி ஷங்கர் என்பவர் நடித்திருக்கிறார்.தாடி வைத்திருப்பதால் தனுஷ சாயல்.கொலை செய்யுன்போது காட்டும் வன்மமும் ,ரிலாக்சாக இருக்கும்போது அப்பாவித்தன புன்னகையும் ஓக்கே ரகம்.


வில்லனின் அம்மாவாக  விஜய ஸ்ரீ என்பவர் கலக்கி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் படையப்பா நீலாம்பரி ,மன்னன் விஜயசாந்தி ரோல் ,சந்திரமுகி ஜோதிகா ,பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா ரோல் ,தூள் சொர்ணாக்கா ,திமிரு வில்லி ,என வில்லிகள்  பட்டியலில் இவரும் இனி இடம் பிடிப்பார்.அபாரமான நடிப்பு. மாணிக்கம் ஆக பவ்யமாய் வருவதும் மாணிக் பாட்சாவாக வில்லியாக வருவதும் செம ட்ரான்ஸ்பர்மேஷன்


வில்லனின் அப்பாவாக  குபேரன் என்பவர் நடித்திருக்கிறார்.திண்டுக்கல் ஐ லியோனி சாயல்.இவரும் சைக்கோவாக ,குடிகாரனாக வில்லத்தனம் காட்டி பின் பவ்யமான தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.


வில்லனின் காதலி ஆக ஷிரிஸ்சா என்பவர் நடித்திருக்கிறார்.பரவாயில்லை ரகம் தான்.அழகிலும் ,முக வசீகரத்திலும்.நடிப்பிலும் பாஸ்மார்க்.


நாயகன் ஆக போலீஸ் ஆபீசர் ஆக மைக்கேல் தங்கதுரை ஓக்கே ரகம்.இவருக்கு வாய்ப்பு கள் அதிகம் இல்லை

நாயகி ஆக  ,மனோவியல் மருத்துவர் ஆக ஸ்ம்ருதி வெங்கட் கச்சிதமாக நடித்திருக்கிறார்.நாயகனை  விட நாயகிக்கு அதிகக்காட்சிகள்


இந்த மாதிரி  திரில்லர் கதைகளில்  டெக்னிக்கல் டீம் சப்போர்ட் வேண்டும்.அது பக்காவாகப்பொருந்தி இருக்கிறது.


ஒளிப்பதிவு கோகுல் கிருஷ்ணா.என்கொயரி நடக்கும் ரூமில் கேமரா கோணஙகள் ,லைட்டிங்க் பக்கா.குறியீடாக வரும்  ராட்சச சக்கரங்கள்  நியான் லைட்ஸ் செட்டிங்க் அருமை. பாடல் காட்சிகளில் கவித்துவம் மிஸ்சிங்க்


ஆர்ட் டைரக்சன் அமரகீர்த்தி  ராட்டினம் செட்டிங்க் அருமை.இசை ராகவ் ராயன்.பின்னணி இசை  அருமை.குறிப்பாக என்கொயரி சீன்கள் கலக்கல் பிஜி எம்.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர்  மிதுன்.வில்லன்   ஆக  நடித்தவர்  திரைக்கதையிலும்  பங்காற்றி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்

1 வில்லனின் அம்மா கேரக்டர் டிசைன் அபாரம்.அதே போல் அவர் நடிப்பும் பக்கா


2 வில்லனின் சைக்காலஜிக்கல் டெஸ்ட் எடுக்கும் டாக்டர் ரோர்சாக் டெஸ்ட் புதிர்கள் செம.

3  திரைக்கதை உத்தி.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்


  ரசித்த  வசனங்கள் 

1 எதுக்காக நல்லது பண்றோம்னே தெரியாமயே பல நல்லவர்கள் நல்லது பண்ணிட்டுதான் இருக்காங்க


2  எமோஷனல் டெசிசன் ஆல்வேஸ் டேஞ்சரஸ்

3  பொண்ணு எப்படி இருக்கும்?

பொண்ணு மாதிரி இருக்கும்

4  நம்ம வாழ்க்கையைக்காப்பாற்றும்  சக்தி காதலுக்கு இருக்குன்னு நம்பறேன்

5  வாழ்க்கைல நான் பண்ணின ரெண்டே தப்பு 1 அதீத குடி 2  உனக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்தது

6. கொலை செய்யக்காரணம் எதும் இல்லை,சும்மா கொன்னு பார்க்கலாம்னு தோணுச்ச

7 எந்த எமோஷனல்ல  யாரை ஏமாத்தலாம்னு தெரிஞ்சு வெச்சுக்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் ஆக வரும் போலீஸ் ஆபீசர் ஏன் எல்லா சீன்களிலும் தம் அடிக்கிறார்?

2  வில்லன் நிஜத்தில் செய்த முதல் நான்கு கொலைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் புரியுது.ஆனால் அவன் ஒத்துக்கொள்ளும் 9 பெண் கொலைகளுக்கு சொல்லும் காரணம் நம்ப முடியலை.

3. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சீனில் ஒரு நாடகத்தனம் தெரியுது.அதை வேறு மாதிரி படமாக்கி இருக்கலாம்.

4  இவ்ளோ புத்திசாலித்தனமாக யோசிக்கும் வில்லன் போலீசில் சரண்டர் ஆகி  ஏன் ஜெயில் வாழ்க்கைக்குப்போகனும்?

5 வில்லனின் காதலி கொலைகள் விஷயம் தெரிந்ததும் நைசாக எஸ்கேப் ஆகாமல் அவன் மீது காதல் தொடர்வது எப்படி?

6 வில்லன் டெட்பாடியை காட்டிலேயே போட்டுட்டு வந்துடுவேன் என க்ரைம் ஸ்பாட் காட்டுகையில் ஒரு சாதா தோட்டத்தைக்காடு என்று காட்டுவது காதில் பூ ரகம்

7 இவ்ளோ பெரிய சென்சேசனல் கேஸ் ஒரு சாதா எஸ் ஐ போதுமா?ஹையர் ஆபீசர்ஸ் விசிட் இல்லை

8  பிளாஸ்பேக் சீன்கள் ஒரே கோர்வையாக வராமல் அவ்வப்போது வருவதால் சரியாக எமோஷனல் கனெக்ட் தரவில்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்வ்-18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஹீரோ வேல்யூ இல்லை என்றாலும் நல்ல திரைக்கதை எனில் பார்ப்பேன் என்பவர்களுக்கான படம்.விகடன் மார்க் யூகம் 44 .குமுதம் ரேங்க்கிங்க். நன்று.ரேட்டிங்க் 3/5


Stephen
Promotional release poster
Directed byMithun Balaji
Written by
  • Mithun Balaji
  • Gomathi Shankar
Produced by
  • Jayakumar
  • Mohan
Starring
Production
company
JM Production House
Distributed byNetflix
Release date
  • 5 December 2025
CountryIndia
LanguageTamil